11 ஆம் வகுப்பு
இலக்கணம்
மொழி முதல், இறுதி எழுத்துக்கள்
மொழி முதல் எழுத்துக்கள்:
- மொழி முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை – 22.
- உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும்.
- மெய்யெழுத்துக்கள் தனிமெய் வடிவில் சொல்லுக்கு முதலில் வருவதில்லை. அவை உயிரெழுத்துக்களோடு சேர்ந்து உயிர்மெய் வடிவில் மொழிக்கு முதலில் வருகின்றன.
- மெய்களில் க, ங, ச, ஞ, த, ந, ப, ம, ய, வ என்னும் பத்து வரிசைகள் உயிர்மெய் வடிவங்களாகச் சொல்லின் முதலில் வரும்.
- "ஙனம்" என்னும் சொல்லில் மட்டுமே "ங" வரும்.
- ட, ண, ர, ல, ழ, ள, ற, ன என்னும் எட்டு வரிசைகள் சொல்லின் முதலில் வருவதில்லை.
- ஆய்த எழுத்து சொல்லின் முதலில் வராது.
- "குறள்" என்னும் சொல்லை க்+உ+ற்+அ+ள் எனப் பிரிக்கலாம்.
- சொல்லின் முதலில் உள்ள "கு" என்னும் உயிர்மெய்யெழுத்தை க்+உ எனப் பிரிக்கும் பொழுது "க்" என்ற மெய்யெழுத்தே சொல்லின் முதலில் வருவதை அறியலாம்.
- "ங்" என்னும் மெல்லின மெய் "விதம்" எனப் பொருள்படும் "ஙனம்" என்னும் சொல்லில் மட்டும் முதலில் வரும். இந்தச் சொல்லும் தனியாக வராது.
- "அ, இ, உ"என்ற சுட்டெழுத்துக்களுடனும் "எ, யா" என்னும் வினா எழுத்துக்களுடனும் இணைந்து "அங்கநம்", "இங்கனம்", "உங்கனம்", "எங்கனம்", "யாங்கனம்" என்று வரும்.
- தற்காலத் தமிழில் இவற்றின் பயன்பாடு அரிதாகவே உள்ளது.
- "உங்கனம்" என்பது தற்பொழுது தமிழகத்தில் வழக்கில் இல்லை. ஆனால் தமிழிலக்கியங்களில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்றும் இலங்கைத் தமிழர் "உங்கு", "உங்கனம்", போன்ற சொற்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
- உயிரெழுத்துக்களில் மொழிமுதல் எழுத்துக்களின் எண்ணிக்கை – 12
- மெய்யெழுத்துக்களில் மொழிமுதல் எழுத்துக்களின் எண்ணிக்கை – 10
- மொழிமுதல் எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை – 22
- இந்த 22 எழுத்துக்கள் தவிர பிற எழுத்துக்கள் முதலில் வந்தால் அவை தமிழ் சொற்கள் அல்ல. அவை பிறமொழிச் சொற்களாகவோ அல்லது ஒலிபெயர்ப்புச் சொற்களாகவோ இருக்கின்றன.
மொழி இறுதி எழுத்துக்கள்:
- மொழி இறுதி எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை – 24
- உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் சொல்லின் இறுதியில் வரும்.
- மெய்களில் ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் பதினொரு எழுத்துக்களும் சொல்லின் இறுதியில் வரும்.
- க், ச், ட், த், ப், ற் என்னும் வல்லின மெய் ஆறும் "ங்" எனும் மெல்லின மெய் ஒன்றும் சொல்லின் இறுதியில் வருவதில்லை.
- பழைய இலக்கன நூலார் மொழி இறுதிக் குற்றியலுகர எழுத்தையும் சேர்த்துக் கொள்வர்.
- ஞ், ந், வ் மூன்றும் பழைய இலக்கிய வழக்கில் சொல்லின் இறுதி எழுத்தாக வந்துள்ளன. ஆயினும் இன்றைய வழக்கில் இவை சொல்லுக்கு இறுதி எழுத்தாக வருவதில்லை.
- உயிரெழுத்துக்களில் மொழி இறுதி எழுத்துக்களின் எண்ணிக்கை – 12
- மெய்யெழுத்துக்களில் மொழி இறுதி எழுத்துக்களின் எண்ணிக்கை – 11
- குற்றியலுகரத்தில் மொழி இறுதி எழுத்துக்களின் எண்ணிக்கை – 1
- மொழி இறுதி எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை – 24
புணர்ச்சி
11 ஆம் வகுப்பு
இலக்கணம்
மொழி முதல், இறுதி எழுத்துக்கள்
புணர்ச்சி
உயிரீறு, மெய்யீறு:
- நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர்மெய்யாக இருந்தாலும் அதன் இறுதியில் நிற்கும் வடிவம் உயிர் என்பதால் "உயிரீறு" எனப்படும்.
- நிலை மொழியின் இறுதி எழுத்து மெய்யாக இருந்தால் அது மெய்யீறு எனப்படும்.
மணி (ண்+இ) + மாலை = மணிமாலை – உயிரீறு
பொன் + வண்டு = பொன்வண்டு – மெய்யீறு
உயிர்முதல், மெய்ம்முதல்:
- வருமொழியின் முதலெழுத்து உயிரெழுத்தாக இருந்தால் அது "உயிர்முதல்" எனப்படும்.
- வருமொழியின் முதலெழுத்து உயிர்மெய்யாக இருந்தாலும் அதன் முதலில் நிற்கும் வடிவம் என்பதால் அது "மெய்ம்முதல்" எனப்படும்.
வாழை + இலை = வாழையிலை – உயிர்முதல்
தமிழ் + நிலம் (ந் +இ) = தமிழ்நிலம் – மெய்ம்முதல்
எழுத்துக்களின் அடிப்படையில் புணர்ச்சி:
1. உயிர் + உயிர்
(எ.கா)
மலை + அருவி = மலையருவி (ஐ+ அ)
2. மெய் + உயிர்
(எ.கா)
தமிழ் + அன்னை = தமிழன்னை (ழ் + அ)
3. உயிர் + மெய்
(எ.கா)
தென்னை + மரம் = தென்னைமரம் (ஐ + ம்)
4. மெய் + மெய்
(எ.கா)
தேன் + மழை = தேன்மழை (ன் +ம்)
சொற்களின் அடிப்படையில் புணர்ச்சி:
1.பெயர் + பெயர்
(எ.கா)
கனி + சாறு
2.பெயர் + வினை
(எ.கா)
தமிழ் + படி
3.வினை + வினை
(எ.கா)
நடந்து + செல்
4.வினை + பெயர்
(எ.கா)
படித்த + நூல்
குற்றியலுகர ஈறு:
- சார்பெழுத்துக்களுல் "ஆய்தம்" சொல்லின் முதலிலோ இறுதியிலோ வராது.
- குற்றியலுகரமும் (நுந்தை தவிர) குற்றியலிகரமும் இக்காலத்தில் சொல்லின் முதலில் வராது.
- ஆயினும் குற்றியலுகரத்தின் ஆறு வகைகளும் சொல்லின் இறுதியில் வருகின்றன.
- குற்றியலுகர ஈற்றுடன் வரும் நிலைமொழி, "குற்றியலுகர ஈறு", அல்லது "குற்றியலுகர நிலைமொழி" எனப்படும்.
- வீடு + இல்லை = வீடில்லை – நெடில்தொடர்க் குற்றியலுகரம்
- முரடு + காளை = முரட்டுக்காளை – உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
- அச்சு + பலகை = அச்சுப்பலகை – வன்தொடர்க் குற்றியலுகரம்
- பஞ்சு + பொதி = பஞ்சுப்பொதி – மென்தொடர்க் குற்றியலுகரம்
- மார்பு + கூடு = மார்புக்கூடு – இடைத்தொடர்க் குற்றியலுகரம்
- எஃகு + கம்பி = எஃகுக்கம்பி – ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
(எ.கா)
சொல்லும் பொருளும்:
- வட ஆரிநாடு – திருமலை
- தென் ஆரிநாடு – குற்றாலம்
- ஆரளி – மொய்க்கின்ற வண்டு
- இந்துளம் – இந்தளம் எனும் ஒரு வகைப் பண்
- இடங்கணி – சங்கிலி
- உளம் – உள்ளான் என்ற பறவை
- சலச வாவி – தாமரைத் தடாகம்
- தரளம் – முத்து
- கா – சோலை
- முகில்தொகை – மேகக்கூட்டம்
- மஞ்ஞை – மயில்
- கொண்டல் – கார்கால மேகம்
- மண்டலம் – உலகம்
- வாவித் தரங்கம் – குளத்தில் எழும் அலை
- அளி உலாம் – வண்டு மொய்க்கின்ற.
- காயா, கொன்றை, நெய்தல், முல்லை, தளவம், பிடவம் – மழைக்கால மலர்கள்
- போது – மொட்டு
- அலர்ந்து – மலர்ந்து
- கவினி – அழகுற
இலக்கணக்குறிப்பு:
- செங்கயல், வெண்சங்கு – பண்புத் தொகைகள்
- அகிற்புகை – ஆறாம் வேற்றுமைத்தொகை
- மஞ்ஞையும் கொண்டலும் – எண்ணும்மை
- கொன்றைசூடு – இரண்டாம் வேற்றுமைத் தொகை
- ஆல் – அசைநிலை
- கண்ணி – அண்மை விளிச்சொல்
- ஆடுகம் – தன்மைப் பன்மை வினைமுற்று.
புணர்ச்சி விதி:
- செங்கயல் = செம்மை + கயல்
- ஈறு போதல் – செம் + கயல்
- முன்னின்ற மெய் திரிதல் – செங்கயல்
நிகண்டுகளில் யானையைக் குறிக்கும் வேறு சொற்கள்:
- கயம்
- வேழம்
- களிறு
- பிளிறு
- களபம்
- மாதங்கம்
- கைம்மா
- வாரணம்
- அஞ்சனாவதி
- அத்தி
- அத்தினி
- அரசுவா
- அல்லியன்
- அனுபமை
- ஆனை
- இபம்
- இரதி
- குஞ்சரம்
- வல்விலங்கு
- கரி
- அஞ்சனம்
மெய்ம்மயக்கம்
- சொல்லின் இடையில் அடுத்தடுத்து மெய்யெழுத்துக்கள் வருவது "மெய்ம்மயக்கம்" எனப்படும்.
- இது "உடநிலை மெய்ம்மயக்கம்", "வேற்றுநிலை மெய்ம்மயக்கம்" என இருவகைப்படும்.
உடனிலை மெய்ம்மயக்கம்:
- சொற்களின் இடையில் ஒரே மெய்யெழுத்து அடுத்தடுத்து வருவது "உடனிலை மெய்ம்மயக்கம்" எனப்படும்.
- தமிழில் க், ச், த், ப் ஆகிய மெய்யெழுத்துக்கள் தம் எழுத்துக்களுடன் மட்டுமே சேரும் உடனிலை மெம்மயக்க எழுத்துக்களாகும்.
- இந்த எழுத்துக்களின் அருகில் அவற்றுக்குரிய எழுத்து வரிசை மட்டுமே வரும். பிற எழுத்துக்கள் வராது.
- அவ்வாறு வந்தால் அது தமிழ்ச்சொல்லாக இருக்க முடியாது.
- எடுத்துக்காட்டாக "பக்கம்" என்ற சொல்லில் (ப+க்+க்+அ+ம்) "க்" என்னும் மெய்யெழுத்து தொடர்ந்து இருமுறை வந்துள்ளது.
- இதைப் போலவே ச், த், ப் ஆகிய எழுத்துக்களும் வரும்.
(எ.கா)
அச்சம்
எச்சம்
மொத்தம்
சாத்தன்
அப்பம்
கப்பம்
வேற்றுநிலை மெய்ம்மயக்கம்:
- சொல்லின் இடையில் வெவ்வேறு மெய் எழுத்துக்கள் தொடர்ந்து வருவது "வேற்றுநிலை மெய்ம்மயக்கம்" எனப்படும்.
- தமிழில் ர், ழ் ஆகிய இரண்டு மெய்யெழுத்துக்கள் தம் வரிசை எழுத்துக்களுடன் சேராது பிற மெய்யெழுத்துக்களுடன் மட்டுமே சேர்ந்து வரும்.
- எனவே இவ்விரு எழுத்துக்களும் வேற்றுநிலை மெய்ம்மயக்கத்துக்கு உரியன ஆகும்.
- க், ச், த், ப், ர், ழ் ஆகிய ஆறனையும் தவிர்த்த பன்னிரண்டு மெய்களும் உடனிலை மெய்ம்மயக்கமாகவும், வேற்றுநிலை மெய்ம்மயக்கமாகவும் உள்ளன.
- இவற்றையும் மெய்ம்மயக்கம் என்றே கொள்ள வேண்டும்.
- ட் – பட்டம், காட்சி
- ற் – வெற்றி, பயிற்சி
- ங் – அங்ஙணம், தங்கம்
- ஞ் – விஞ்ஞாணம், மஞ்சள்
- ண் – தண்ணீர், நண்பகல்
- ந் – செந்நெறி, தந்த
- ம் – அம்மா, அம்பு
- ன் – மன்னன், இன்பம்
- ய் – செய்யலாம், வாய்மை
- ல் – நல்லவன், செல்வம்
- வ் – இவ்வினம், தெவ்யாது
- ள் – உள்ளம், கொள்கை
(எ.கா)
ர் – தேர்தல், உயர்வு
ழ் – வாழ்பவன், சூழ்க
(எ.கா)
ஈரொற்று மெய்ம்மயக்கம்:
- தனிச்சொற்களிலோ, கூட்டுச்சொற்களிலோ சொற்களின் இடையில் ய், ர், ழ் ஆகிய மெய்கள் ஈரொற்றாய் வரும்.(மூன்று மெய்களாக மயங்கி வரும்). இதனை ஈரொற்று மெய்ம்மயக்கம் என்பர்.
(எ.கா)
ய் – காய்ச்சல், நாய்க்கால்
ர் – உயர்ச்சி, தேர்க்கால்
ழ் – காழ்ப்புணர்ச்சி, வீழ்ச்சி
இனவெழுத்து (நட்பெழுத்து):
- மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூவகைப்படும்.
- சொற்களின் இடையில் மெல்லின எழுத்துகளுக்குப் பின் வல்லின மெய்கள் மட்டுமே வருவதை "இனவெழுத்துக்கள்" அல்லது "நட்பெழுத்துக்கள்" என்பர்.
- ணகர, நகர, னகர வேறுபாட்டினை அறியாமல் எழுதுவதால் ஏற்படும் பிழையை "மயங்கொலிப் பிழை" என்கிறோம்.
- வாய்க்கால் – உடனிலை மெய்ம்மயக்கம்
- வாழ்க – வேற்றுநிலை மெய்ம்மயக்கம்
- வாழ்ந்த – ஈரொற்று மெய்ம்மயக்கம்
- பாக்கம் – உடனிலை மெய்ம்மயக்கம்
- சேர்தல் – வேற்றுநிலை மெய்ம்மயக்கம்
- நார்ச்சத்து – ஈரொற்று மெய்ம்மயக்கம்
- எச்சம் – உடனிலை மெய்ம்மயக்கம்
- மார்கழி – வேற்றுநிலை மெய்ம்மயக்கம்
- ஆழ்தல் – வேற்றுநிலை மெய்ம்மயக்கம்
- மொத்தம் – உடனிலை மெய்ம்மயக்கம்
- கப்பல் – உடனிலை மெய்ம்மயக்கம்
- தாழ்ச்சி – ஈரொற்று மெய்ம்மயக்கம்
(எ.கா)
ங் – க் (அங்கம்)
ஞ் – ச் (பஞ்சம்)
ண் – ட் (பண்டம்)
ந் – த் (சந்தம்)
ம் – ப் (கம்பம்)
ன் – ற் (தென்றல்)
சொல்லும் பொருளும்:
- ஜகம் – உலகம்
- புயம் – தோள்
- வரை – மலை
- வன்னம் – அழகு
- கழுகாசலம் – கழுகுமலை
- த்வஜஸ்தம்பம் – கொடி மரம்
- சலராசி – கடலில் வாழும் மீன் முதலிய உயிர்கள்
- விலாசம் – அழகு
- நூபுரம் – சிலம்பு
- மாசுணம் – பாம்பு
- இஞ்சி – மதில்
- புயல் – மேகம்
- கறங்கும் – சுழலும்
- சிதவல் – தலைப்பாகை
- தண்டு – ஊன்றுகோல்
- தமியர் – தனித்தவர்
- முனிதல் – வெறுத்தல்
- துஞ்சல் – சோம்பல்
- அயர்வு – சோர்வு
- மாட்சி – பெருமை
- நோன்மை – வலிமை
- தாள் – முயற்சி
இலக்கணக்குறிப்பு:
- தாவி – வினையெச்சம்
- மாதே – விளி
- பிரிந்தோர் – வினையாலணையும் பெயர்
- நன்றுநன்று – அடுக்குத்தொடர்
- அம்ம – அசைநிலை
- உண்டல், துஞ்சல் – தொழிற்பெயர்
- முயலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்துஞ்சல் – சோம்பல்
- "வான் பொய்த்தது" என்னும் சொற்றொடர் உணர்த்தும் மறைமுகப்பொருள் – "மழை பெய்யவில்லை" துஞ்சல் – சோம்பல்
பகுபத உறுப்புகள்
- பெயர்ச்சொல்
- வினைச்சொல்
- இடைச்சொல்
- உரிச்சொல்
பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும்.
- பகுதி
- விகுதி
- இடைநிலை
- சந்தி
- சாரியை
- விகாரம்
பகுதி:
- ஒரு சொல்லின் அடிசொல்லே பகுதியாகும்.
- இதை"முதனிலை" என்றும் கூறுவர்.
- விகுதி பெறாத ஏவல் வினையாக வரும்.
- மேலும் பகுதி, விகுதி எனப் பிரிக்க இயலாததாய் வரும்.
- "பாடினான்" என்னும் வினைமுற்றை, "பாடு + இன் + ஆன்" எனப் பிரிக்கலாம்.
- இதில் "பாடு" என்பது பகுதியாகவும் விகுதி பெறாத ஏவல் வினையாகவும் வரும்.
- இது போலவே படி, ஆடு, செய், நட, எழுது, ஓடு போன்றவை பகுதியாகவும் விகுதி பெறாத ஏவல் வினையாகவும் வரும்.
- "அறிஞர்" என்னும் பெயர்ச்சொல்லை "அறி + ஞ் + அர்" எனப் பிரிக்கலாம். இதில் "அறி" என்பது பகுதியாகவும் விகுதி பெறாத ஏவல் வினையாகவும் வருகிறது.
- பகுதி சில சொற்களில் ஒற்று இரட்டித்து காலம் காட்டும்.
விகுதி:
- ஒரு வினைமுற்றுச் சொல்லின் இறுதியில் நின்று திணை, பால், எண், இடம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் உறுப்பு"விகுதி" எனப்படும்.
- "ஆன்" என்னும் விகுதி உயர்திணை, ஆண்பால், ஒருமை, படர்க்கை இடம் என்பனவற்றையும் "ஆள்" என்னும் விகுதி உயர்திணை, பெண்பால், ஒருமை படர்க்கை இடம் என்பனவற்றையும்"து" என்னும் விகுதி அஃறிணை, ஒன்றன் பால், படர்க்கை இடம் என்பனவற்றையும் வெளிப்படுத்துகின்றன.
- "வியங்கோள்", "தொழிற்பெயர்", "பெயரெச்சம்", "வினையெச்சம்" போன்ற பல்வேறு இலக்கணப் பொருண்மைகளை உணர்த்தவும் பயன்படுகிறது.
- தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகள் – என், ஏன், அல், அன், கு, டு, து, று
- தன்மைப் பன்மை வினைமுற்று விகுதிகள் – எம், ஏம், அம், ஆம், ஓம், கும், டும், தும், றும்
- முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதிகள் – ஐ, அய், இ
- முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதிகள் – இர், ஈர், மின்
- படர்கை ஆண்பால் வினைமுற்று விகுதிகள் – அன், ஆன்
- படர்க்கை பெண்பால் வினைமுற்று விகுதிகள் – அள், ஆள்
- படர்க்கை பலர்பால் வினைமுற்று விகுதிகள் – அர், ஆர், ப, மார், கள்
- படர்க்கை ஒன்றன்பால் வினைமுற்று விகுதிகள் – து, று, டு
- படர்க்கை பலவின்பால் வினைமுற்று விகுதிகள் – அ, ஆ
- வியங்கோள் வினைமுற்று விகுதிகள் – க, இய, இயர்
- தெரிநிலைப் பெயரெச்ச விகுதிகள் – அ, உம்
- தெரிநிலை வினையெச்ச விகுதிகள் – உ, இ,
(எ.கா)
கொடுத்தான் = கொடு + த் +த்+ஆன்
படித்தாள் = படி + த் + த் + ஆள்
நடந்தது = நட + த்(ந்) + த் + அ + து
இவற்றுள் ஆன், ஆள், து ஆகியவை விகுதிகளாகும்.
(எ.கா)
எழுதுக = எழுது + க
உரைத்த = உரை + த் + த் + அ
செய்தல் = செய் + தல்
படித்து = படி + த் + த் + உ
இடைநிலை:
- பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் தோன்றும் உறுப்புக்கு "இடைநிலை" என்று பெயர்.
- வினைப் பகுபதத்தில் வரும் இடைநிலையைக் "கால இடைநிலை", "எதிர்மறை இடைநிலை" என இருவகைப்படுத்துவர்.
- பெயர்ப்பகுபதத்தில் வரும் இடைநிலையைப் "பெயர் இடைநிலை" என்பர்.
கால இடைநிலை:
(எ.கா)
செய்தான் = செய் + த் + ஆன்
செய்கிறான் = செய் + கிறு + ஆன்
செய்வான் = செய் + வ் + ஆன்
(எ.கா)
எதிர்மறை இடைநிலை:
உயிரெழுத்து வரின் தன் பொருளை நிறுவிக் கெட்டு வரும்.
ஓடா(எ.கா)
து – ஓடு + ஆ+ து
காணலன் – காண் + அல்+ அன்
பேசான் – பேச் + ஆ+ அன்
எழுதிலன் – எழுது + இல் + அன்
பெயர் இடைநிலை:
(எ.கா)
தமிழச்சி – தமிழ் + அ + ச் + ச் + இ
இளைஞர் – இளை + ஞ் + அர்
ஓட்டுநர் – ஓட்டு + ந் + அர்
ஒருத்தி – ஒரு + த் + த் + இ
மூவர் – மூன்று + வ் + அர்
சந்தி:
- சந்தி என்பதற்கு "புணர்ச்சி" என்பது பொருள்.
- பகுதி, விகுதி, இடைநிலை ஆகிய பகுபத உறுப்புகள் புணரும் போது இடையில் தோன்றும் உறுப்பு"சந்தி" எனப்படும்.
- சந்தி பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வருவது பெருவழக்கமாகும்.
- புணர்ச்சியின் போது ஏற்படும் விகாரங்களான தோன்றல், திரிதல், கெடுதலைச் சந்தி என்றும் சொல்வர்.
- ஓர் எழுத்துத் தோன்றலை சந்தி என்றும், மற்றைய திரிதலையும், கெடுதலையும் விகாரம் என்பர்.
- பெரும்பாலும் த், க், ப் என்னும் மூன்று எழுத்துக்களுல் ஒன்று சந்தியாக வரும்.
- உடம்படுமெய்கள் (ய், வ்) சந்தியாக வருவதுண்டு.
- பகுபத உறுப்புகளில் அடங்காமல் ஏழாவது உறுப்பாக வரும் புறத்துறுப்பு "எழுத்துப்பேறு" எனப்படும்.
- சாரியை வர வேண்டிய இடத்தில் புள்ளி பெற்ற எழுத்து உயிர் ஏற இடமளித்து வந்தால் அதனை எழுத்துப்பேறு எனக் குறிப்பிடல் வேண்டும்.
- விகுதி தனியே வராமல் துணையாகப் பெற்று வரும் எழுத்தே எழுத்துப்பேறு ஆகும்.
- எழுத்துப்பேறு காலம் காட்டாது.
- இச்சொற்களில்"இ" என்னும் முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதிக்கு முன்னும் "ஆ" என்னும் எதிர்மறை இடைநிலைக்குப் பின்னும் வரும்"த்" எனபது எழுத்துப்பேறாகும்.
(எ.கா)
அசைத்தான் – அசை + த் + த் + ஆன்
காப்பார் – கா + ப் + ப் + ஆர்
படிக்கிறார் – படி + க் + கிறு + ஆர்
வணங்கிய – வணங்கு + இ(ண்) + ய் + அ
பாடுதி – பாடு + த் + இ
மொழியாதான் – மொழி + ய் + த் + ஆன்
சாரியை:
- பகுதியோடு இடைநிலையும் இடைநிலையோடு விகுதியும் பொருத்தமாகச் சார்ந்து இயைய வரும் உறுப்பு "சாரியை" ஆகும்.
- பெரும்பாலும் சாரியை இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும்.
- பார்த்தனன் – பார் + த் + த் + அன் + அன்
- இச்சொல்லில் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும்"அன்" என்பதே சாரியையாகும்.
- சந்தி வரவேண்டிய இடத்தில் உயிர்மெய் எழுத்து வந்தால் அதனைச் சாரியை என்று குறிப்பிடல் வேண்டும்.
- தருகுவென் – தா(தரு) + கு + வ் + என் இச்சொல்லில் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும்"கு" என்பதே சாரியை ஆகும்.
- சாரியைக்குப் பொருள் இல்லை.
- "அன்" என்பது விகுதியாக வரும்போது"அன்" என்பதே சாரியையாக வரும்.
- "ஆன்","ஆள்". "ஆர்" ஆகிய விகுதிகள் வரும்போது "அன்" சாரியையாக வராது.
விகாரம்:
- பகுதி விகுதி இடைநிலை ஆகியவை புணரும் போது அவற்றின் வடிவத்தில் ஏற்படும் மாற்றம் விகாராம் எனப்படும்.
- இஃது ஓர் எழுத்து மற்றோர் எழுத்தாகத் திரிந்தும் கெட்டும் நெடில் குறிலாகவும் மாற்றம் பெறும். இத்தகைய மாற்றமே விகாரம் எனப்படும்.
- நின்றான் – நில் (ண்) + ற் + ஆன். இதில் "நில்" என்னும் பகுதியில், "ல்" "ன்" ஆகத் திரிந்தது.
- வணங்கிய – வணங்கு + இ(ண்) +ய் + அ இதில் "இ(ண்)" என்னும் இடைநிலையில் னகரம் கெட்டது.
- கண்டான் – காண் (கண்) + ட் + ஆன் இதில் "காண்" என்னும் பகுதி கண் எனக் குறுகியது.
- எழுதினோர் – எழுது + இன் + ஓர்(ஆர்) இதில் "ஆர்" என்னும் விகுதி "ஓர்" என நின்றது.
- தமிழ் ஓர் "ஒட்டு நிலை மொழி" ஆகும்.
- திணை, பால், எண், இடம் உணர்த்தும் சிறப்புள்ள மொழி தமிழ் மொழி ஆகும். இச்சிறப்புக்குக் காரணம் சொல்லின் விகுதி ஆகும்.
- பகுபதத் தன்மை உள்ள மொழியைக் கற்றுக் கொள்வது எளிது.பிற மொழியினர் தமிழை எளிமையாகக் கற்றுக் கொள்வதற்கு இது ஒரு காரணம் ஆகும்.
- "காவடிச் சிந்துக்குத் தந்தை" என்று அழைக்கப்படுபவர் – அண்ணாமலையார்.
- "இனிதென" என்னும் சொல்லில் அமைந்துள்ள புணர்ச்சி விதி – "உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே"
- பகுபத உறுப்புகளில் இடம்பெறும் அடிப்படை உறுப்புகள் – "பகுதி, விகுதி"
சொல்லும் பொருளும்:
- மாழ்குதல் – மயங்குதல்
- சேதனை – அறிவு
- அரும்புதல் – பருத்தல்
- இயைபுஇல் – பொருத்தமற்றது
- ஆக்கம் – உயிருடைத்து
- கற்றிலை – அறியவில்லை
- பெருந்தவத்தாய் – பெரிய தவமுடையவர்
- வாய்த்துரை – பொருத்தமான உரை
- வாமன் – அருகன்
- தேறு – தெளிவாக
- செலவு – வழி
- பரிப்பு – இயக்கம்
- துப்பு – வலிமை
- கூம்பு – பாய்மரம்
- புகாஅர் – ஆற்றுமுகம்
- தகாஅர் – தகுதியில்லாதவர்
- பல்தாரத்த – பலவகைப்பட்ட பண்டம்
இலக்கணக்குறிப்பு:
- செஞ்ஞாயிறு,பெருங்கலம், பெருவழி – பண்புத்தொகைகள்
- சூழ்ந்த, புகுந்த – பெயரெச்சங்கள்
- நிலைஇய – சொல்லிசை அளபடை
- தகாஅர், புகாஅர் – இசைநிறை அளபடைகள்
- எறிகல் – வினைத்தொகை
- அரும்பும் மலரும் – எண்ணும்மை
- அரும்பிணி – பண்புத்தொகை
- வெப்பம் குளிர் – உம்மைத் தொகை
- கொளல் – தொழிற்பெயர்
புணர்ச்சி விதிகள்
உயிரீற்றுப் புணர்ச்சி:
உடம்படுமெய்ப் புணர்ச்சி:
(எ.கா)
உயிர்வழி வவ்வும் ஏ முன் இவ் விருமையும்
உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும்"
என்று கூறும் நூல் – நன்னூல்
இ, ஈ, ஐ – ய்
பிற உயிர்கள் – வ்
ஏ – ய், வ்
குற்றியலுகரப் புணர்ச்சி:
(எ.கா)
மாசற்றார் – மாசு + அற்றார்
மாச் + அற்றார் – "உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே" என்னும் விதிப்படி"மாசற்றார்" எனப் புணர்ந்தது.
"உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்" – என்று கூறும் நூல் – நன்னூல்
"ட்"," ற்" என்னும் இரு மெய்களோடு ஊர்ந்து வரும் நெடில்தொடர், உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்கள் வருமொழியோடு சேரும்போது ஒற்று இரட்டித்துப் புணரும்.
(எ.கா)
டறஒற்று இரட்டும் வேற்றுமை மிகவே" என்று கூறும் நூல் – நன்னூல்
முற்றியலுகரப் புணர்ச்சி:
"முற்றும் அற்று ஒரோவழி" – என்று கூறும் நூல் – நன்னூல்
இயல்பீறு, விதியீறு – புணர்ச்சி:
திரை + ப் + படம் -"இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் க ச த ப மிகும்" என்னும் விதிப்படி"திரைப்படம்" எனப் புணர்ந்தது.
க ச த ப மிகும் ; விதவாதன மன்னே"
பூப்பெயர்ப் புணர்ச்சி:
"பூ" என்னும் சொல் நிலைமொழியாய் நிற்க வருமொழியின் முதலில் வல்லின மெய்யெழுத்துக்கள் வரும் போது வல்லின மெய் மிகுந்து புணர்வது மட்டுமின்றி, அவற்றிற்கு இனமான மெல்லின மெய் மிகுதலும் உண்டு. எனினும் மெல்லின மெய் மிகுதலே பெருவழக்காக உள்ளது.(எ.கா)
மெய்யீற்றுப் புணர்ச்சி:
- நிலைமொழியீற்றின் இறுதி எழுத்து மெய்யெழுத்தாக நிற்க வருமொழியின் முதலாக வரும் உயிரெழுத்துடனும் மெய்யெழுத்துடனும் சேரும் புணர்ச்சியை"மெய்யீற்றுப் புணர்ச்சி" எனப்படும்.
- வாயொலி – வாய் + ஒலி -"உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே" என்னும் விதிப்ப்படி"வாயொலி" எனப் புணர்ந்தது.
- "உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே"
– என்று கூறும் நூல் – நன்னூல். - மண் + மகள் – மண்மகள் இதில் நிலைமொழி இறுதியும் வருமொழி முதலும் மெய்யெழுத்தாக நிற்க இயல்பாகப் புணர்ந்தது.
தனிக்குறில்முன் ஒற்று – புணர்ச்சி:
- நிலைமொழி தனிக்குறில் சார்ந்த மெய்யெழுத்தாக நின்று, வருமொழியின் முதல் உயிரெழுத்தாக இருப்பின் நிலைமொழி ஒற்று இரட்டிக்கும்.
- கல் + அதர் – கல்லதர் – தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் கல்ல் + அதர் -"உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே" என்னும் விதிப்படி கல்லதர் எனப் புணர்ந்தது.
மகர ஈற்றுப் புணர்ச்சி:
மகரமெய் கெட்டு வல்லினம் மிக்குப் புணரும்.
(எ.கா)
"மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்
வன்மைக்கு இனமாகத் திரிபவும் ஆகும்" – என்று கூறும் நூல் – நன்னூல்
பண்புப்பெயர் புணர்ச்சி:
பெருவழி – பெருமை + வழி – ஈறுபோதல் விதிப்படி"மை" விகுதி கெட்டுப் பெருவழி எனப் புணர்ந்தது.
பெரியன் – பெருமை + அன் – ஈறுபோதல்
பெரு + அன் – இடை உகரம் இய்யாதல்
பெரி + அன் – உடம்படுமெய் "ய்" இடையில் தோன்றும்.
பெரி + ய் + அன் – உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதியின்படி"பெரியன்" என்ப் புணர்ந்தது.
மூதூர் – முதுமை + ஊர் – ஈறுபோதல்
முது + ஊர் – ஆதிநீடல்
மூது + ஊர் – உயிர்வரின் உக்குறள் மெய்வொட்டோடும்
மூத் + ஊர் – உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி "மூதூர்" எனப் புனர்ந்தது.
பைந்தமிழ் – பசுமை + தமிழ் – ஈறுபோதல்
பசு + தமிழ் – அடி அகரம்"ஐ" ஆதல்
பைசு + தமிழ் – இனையவும்"சு" கெட்டது.
பை + தமிழ் -"இனமிகல்" என்னும் விதிப்படி"பைந்தமிழ்" என்று புணர்ந்தது.
நெட்டிலை – நெடுமை + இலை – ஈறுபோதல்
நெடு + இலை – தன்னொற்றிரட்டல்
நெட்டு + இலை – உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்
நெட்ட் + இலை – உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதியின்படி"நெட்டிலை" எனப் புணர்ந்தது.
(எ.கா)
வெற்றிலை – வெறுமை + இலை – வெற்று + இலை – வெற்றிலை என புணர்ந்தது
செந்தமிழ் – செம்மை + தமிழ் – ஈறுபோதல்
செம் + தமிழ் – முன் நின்ற மெய் திரிதல் – செந்தமிழ் எனப் புணர்ந்தது.
கருங்கடல் – கருமை + கடல் – ஈறுபோதல்
கரு + கடல் -"இனமிகல்" என்னும் விதிப்படி கருங்கடல் எனப் புணர்ந்தது.
பசுந்தளிர் – பசுமை + தளிர்
பசு + தளிர் – அடி அகரம்"ஐ" ஆதல்
பைசு + தளிர் – இனையவும்
பை + தளிர் -"இனமிகல்" என்னும் விதியின்படி "பைந்தளிர்" எனப் புணர்ந்தது.
"ஈறு போதல் இடைஉகரம் இய்யாதல்
ஆதி நீடல் அடிஅகரம் ஐ ஆதல்
தன்னொற்று இரட்டல் முன்நின்ற மெய்திரிதல்
இனம் மிகல் இனையவும் பண்பிற்கு இயல்பே"
– என்று கூறும் நூல் – நன்னூல்
சொல்லும் பொருளும்:
- பிரசம் – தேன்
- புடைத்தல் – கோல்கொண்டு ஓச்சுதல்
- கொழுநன் குடி – கணவனுடைய வீடு
- வறன் – வறுமை
- கொழுஞ்சோறு – பெருஞ்செல்வம்
- உள்ளாள் -நினையாள்
- மதுகை – பெருமிதம்
இலக்கணக்குறிப்பு:
- வென்சுவை, தீம்பால் – பண்புத்தொகைகள்
- விரிகதிர், ஒழுகுநீர் – வினைத்தொகைகள்
- பொற்காலம், பொற்சிலம்பு – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைகள்
- கொண்ட – பெயரெச்சம்
- அறிவும் ஒழுக்கமும் – எண்ணும்மை
- பந்தர் – பந்தல் என்பதன் ஈற்றுப்போலி
படைப்பாக்க உத்திகள்
உவமை:
"வினை பயன் மெய் உரு என்ற நான்கே
வகைபெற வந்த உவமத் தோற்றம்"
– என்று கூறும் நூல் – தொல்காப்பியம்
(எ.கா)
புலி போலப் பாய்ந்தான் – வினை (தொழில்)
மழை போலக் கொடுக்கும் கை – பயன்
துடி போலும் இடை – வடிவம் (மெய்)
தளிர் போலும் மேனி – உரு (நிறம்)
இந்த நான்கு உறுப்புகள் உவமையை அமைக்கின்றன.
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை பெரும எமக்கே மற்றதன்
துன்னரும் கடாஅம் போல
இன்னாய் பெரும! நின் ஒன்னா தோர்க்கே"
என்ற புறநானூற்றுப் பாடலை இயற்றியவர் – ஔவையார்.
பாடலின் பொருள்:
வினை உவமைக்கு எடுத்துக்காட்டு:
பயன் உவமைக்கு எடுத்துக்காட்டு:
மெய் (வடிவம்) உவமைக்கு எடுத்துக்காட்டு:
உரு (நிறம்) உவமைக்கு எடுத்துக்காட்டு:
ஆகிய கவிதைகளில் உவமை தோன்றும் இடங்கள் வெளிப்பட்டுள்ளன.
உருவகம்:
- ஒப்பீட்டுச் செறிவும் பொருள் அழுத்தமும் சிறக்க அமையும் பொழுது அது"உருவகம்" எனப்படுகிறது.
- உவமையையும் உவமிக்கப்படும் பொருளையும் வேறுபடுத்தாமல் இரண்டும் ஒன்றே எனக் கூறுவது"உருவகம்" ஆகும்.
- உருவகத்தொடரில் உவமேயம் (உவமிக்கப்படும் பொருள்) முன்னும், உவமை (ஒப்பாகக் காட்டப்படும் பொருள்) பின்னுமாக அமையும்.
- உவமையின் செறிவார்ந்த வடிவமே "உருவகம்" ஆகும்.
- "தாமரை போன்ற முகம்" என்ற உவமை செறிவூட்டப்பட்டு"முகத்தாமரை" என உருவகத்தை உருவாக்குகிறது.
- உவமையை விட உருவகம் ஆழமானது.
- "தீ போல் சினம்" என்பதை"சினத்தீ" என்பார் பாரதியார்.
- "சுட்டும் விழிச்சுடர்தான் – கண்ணம்மா
- உருவகத்திலும் வினை உருவகம், பயன் உருவகம், வடிவ (மெய்) உருவகம், உரு (நிற)உருவகம் என்ற பகுப்பு உண்டு.
- எண்ணவலை பின்னும் மூளைச் சிலந்தி.(சிந்தனை) – வினை
- ஆவேசப் புயல்களாலும் அசைக்க முடியாத ஆகாசப்பூ.(சூரியன்) – பயன்
- நீலவயலின் நட்சத்திர மணிகள்.(வானமும் விண்மீண்களும்) – மெய்
- மலைக்கிழவியின் நரைத்த கூந்தல். (அருவி) – நிறம்
சூரிய சந்திரரோ?
வட்டக் கரியவிழி – கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் – தெரியும்
நட்சத்திரங்களடி."
என்ற பாடலை இயற்றியவர் – பாரதியார்
உள்ளுறை உவமம்:
குறும்பி வல்சிப் பெருங்கை ஏற்றை
தூங்குதோல் துதிய வள்ளுகிர் கதுவலின்
பாம்புமதன் அழியும் பானாட் கங்குல்"
– என்ற அகநானூற்றுப் பாடலை இயற்றியவர் -"பெருங்குன்றூர் கிழார்".
பாடலின் பொருள்:
உள்ளுறை:
இறைச்சி:
"இறைச்சியில் பிறக்கும் பொருளுமா ருளவே
திறந்தியல் மருங்கின் தெரியு மோர்க்கே"
– என்று கூறும் நூல் – தொல்காப்பியம்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழிஅவர் சென்ற ஆறே"
என்ற பாடல் இடம்பெற்ற நூல் –"குறுந்தொகை"
மேற்கண்ட குறுந்தொகை பாடலில், தலைவன் விரைவில் வருவான் எனத் தோழி தலைவியை ஆற்றுவிக்கிறாள்.
பாடலின் பொருள்:
- தலைவன் செல்லும் வழியில் யானை தன் பெண்யானையின் பசியைப் போக்குவதற்காக யா மரத்தின் பட்டையை உரித்து அதிலுள்ள ஈரச்சுவையை பருகச் செய்யும். இது தான் பாடலின் கருத்து.ஆனால் இதில் சொல்லப்படாத கருத்து ஒன்று உள்ளது.
- தலைவன் இந்த அன்புக்காட்சியைப் பார்ப்பான்; உடனே திரும்பி வந்து தலைவியின் துன்பத்தைத் தீர்ப்பான் என்பது இதிலுள்ள குறிப்புப் பொருளாகும்.இக்குறிப்புப் பொருளே"இறைச்சி" ஆகும்.
- உரிப்பொருளின் புறத்தே நின்று அதன் கருத்தை மேலும் சிறப்பிக்கப் பயன்படுகிறது "இறைச்சி".
- சொல்லாமல் சொல்வதில் தான் கவிதை இன்பம் சிறக்கிறது. தலைவனின் செயலைக் கண்டிப்பதற்கும் எள்ளி நகையாடுவதற்கும் வருத்தத்தை வெளிப்படுத்தவும் திருமணத்தை வலியுறுத்தவும்"இறைச்சி" எனும் உத்தி பயன்படுகிறது.
"நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே"
– என்ற பாடல் இடம்பெற்ற நூல் – நற்றிணை
பாடலின் பொருள்:
"ஒட்டுப் போடாத
ஆகாயம் போல – இந்த
உலகமும் ஒன்றேதான்"
இக்கவிதையில் பயின்று வருவது -"உவமை"
சொல்லும் பொருளும்:
- வரை – மலை
- கம்பலை – பேரொலி
- புடவி – உலகம்
- எய்துதல் – பெறுதல்
- வாரணம் – யானை
- பூரணம் – நிறைவு
- நல்கல் – அளித்தல்
- வதுவை – திருமணம்
- கோன் – அரசன்
- மறுவிலா – குற்றம் இல்லாத
- துன்ன – நெருங்கிய
- பொறிகள் – ஐம்புலன்
- தெண்டிரை – தெள்ளிய நீரலை
- விண்டு – திறந்து
- மண்டிய – நிறைந்த
- காய்ந்த – சிறந்த
- தீன் – மார்க்கம்
- கொண்மூ – மேகம்
- சமம் – போர்
- விசும்பு – வானம்
- அரவம் – ஆரவாரம்
- ஆயம் – சுற்றம்
- தழலை, தட்டை – பறவைகளை ஓட்டும் கருவிகள்
இலக்கணக்குறிப்பு:
- மலிந்த, மண்டிய, பூத்த, பொலிந்த – பெயரெச்சங்கள்
- இடன் – ஈற்றுப்போலி
- தரும் – செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்
- பெரும்புகழ், தெண்டிரை – பண்புத்தொகைகள்
- பொன்நகர் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- மாநகர், உறுபகை – உரிச்சொல் தொடர்கள்.
- ஐந்தும் – முற்றும்மை
- தனமும் ஒழுக்கமும், தவமும் ஈகையும் – எண்ணும்மைகள்.
- அருஞ்சமம் – பண்புத்தொகை
- வளைஇ, அசைஇ – சொல்லிசை அளபடைகள்
- எறிவாள் – வினைத்தொகைகள்
- அறன், திறன் – ஈற்றுப்போலி
- பிழையா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
புணர்ச்சி விதி:
- அரும்பொருள் – அருமை + பொருள்
- ஈறு போதல் – அரு + பொருள்
- இனமிகல் – அரும்பொருள்
- மனையென – மனை + என
- இ ஈ ஐ வழி யவ்வும் – மனை + ய் + என
- உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே – மனையென
முதற்பொருளும் உரிப்பொருளும்
திணை – முல்லை
திணை – மருதம்
திணை – நெய்தல்
திணை – பாலை
கருப்பொருள்கள்:
குறிஞ்சித் திணைக்குரியக் கருப்பொருள்கள்:
- தெய்வம் – சேயோன்
- மக்கள் – பொருப்பன், வெற்பன், சிலம்பன், கொடிச்சி, குறவர், குறத்தியர், கானவர்
- புள் (அ) பறவை – கிளி, மயில்
- விலங்கு – சிங்கம், புலி, கரடி, யானை
- ஊர் – சிறுகுடி
- நீர் – அருவி நீர், சுனை நீர்
- பூ – வங்கை, காந்தள், குறிஞ்சி
- மரம் – சந்தனம், தேக்கு, அகில், மூங்கில்
- உணவு – மலைநெல், தினை, மூங்கிலரிசி
- பறை – தொண்டகப் பறை
- யாழ் – குறிஞ்சி யாழ்
- பண் – குறிஞ்சிப் பண்
- தொழில் – வெறியாடல், மலை நெல் விதைத்தல், தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல்
முல்லைத் திணைக்குரியக் கருப்பொருள்கள்:
- தெய்வம் – மாயோன்
- மக்கள் – குறும்பொறை, நாடன், தோன்றல், கிழத்தி, இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்
- புள் (அ) பறவை – காட்டுக்கோழி
- விலங்கு – மான், முயல்
- ஊர் – பாடி
- நீர் – குறுஞ்சுனை, கானறு
- பூ – முல்லை, பிடவம், தோன்றி
- மரம் – கொன்றை, கயா, குருந்தம்
- உணவு – வரகு, சாமை, முதிரை
- பறை – ஏறுகோட்பறை
- யாழ் – முல்லை யாழ்
- பண் – சாதாரிப் பண்
- தொழில் – சாமை, வரகு விதைத்தல், களைகட்டல், அரிதல்.
மருதத் திணைக்குரியக் கருப்பொருள்கள்:
- தெய்வம் – வேந்தன் (இந்திரன்)
- மக்கள் – ஊரன், மகிழ்நன், மனைவி, உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்
- புள் (அ) பறவை – நாரை, மகன்றில், அன்னம்
- விலங்கு – எருமை, நீர்நாய்
- ஊர் – பேரூர், மூதூர்
- நீர் – ஆற்று நீர், கிணற்று நீர், குளத்து நீர்
- பூ – தாமரை, குவளை
- மரம் – மருதம், வஞ்சி, காஞ்சி
- உணவு – செந்நெல், வெண்ணெல்
- பறை – நெல்லரிகிணை, மணமுழவு
- யாழ் – மருத யாழ்
- பண் – மருதப் பண்
- தொழில் – வயலில் களைகட்டல், நெல்லரிதல்
நெய்தல் திணைக்குரியக் கருப்பொருள்கள்:
- தெய்வம் – வருணன்
- மக்கள் – சேர்ப்பன், புலம்பன், நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர்
- புள் (அ) பறவை – கடற்காகம்
- விலங்கு – சுறாமீன்
- ஊர் – பாக்கம், பட்டினம்
- நீர் – உவர் நீர்க் கேணி, சுவர் நீர்க் கேணி
- பூ – நெய்தல், தாழை
- மரம் – புன்னை, ஞாழல்
- உணவு – உப்பும் மீனும் விற்றுப் பெற்ற பொருள்
- பறை – மீன்கோட்பறை, நாவாய்ப் பம்பை
- யாழ் – விளரியாழ்
- பண் – செவ்வழிப் பண்
- தொழில் – உப்பு உண்டாக்கல்,விற்றல், மீன் பிடித்தல், உணக்கல்
பாலைத் திணைக்குரியக் கருப்பொருள்கள்:
- தெய்வம் – கொற்றவை
- மக்கள் – விடலை, மீளி, எயிற்றி, எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர்
- புள் (அ) பறவை – புறா, பருந்து, கழுகு
- விலங்கு – செந்நாய்
- ஊர் – குறும்பு
- நீர் – நீரில்லாக் குழி, கிணறு
- பூ – குராஅம்பூ, மராம்பூ
- மரம் – பாலை, உழிஞை, ஓமை
- உணவு – வழியிற் பறித்த பொருள்
- பறை – துடி
- யாழ் – பாலையாழ்
- பண் – பஞ்சுரப் பண்
- தொழில் – போர் செய்தல், சூறையாடல்.
பா இயற்றப் பழகலாம்!
செய்யுள் உறுப்புகள் ஆறு வகைப்படும்.
- எழுத்து
- அசை
- சீர்
- தளை
- அடி
- தொடை
நேரசை:
- குறில் தனித்து வருதல் (எ.கா) – க
- குறில் ஒற்றுடன் வருதல் (எ.கா) – கண்
- நெடில் தனித்து வருதல் (எ.கா) – பா
- நெடில் ஒற்றுடன் வருதல் (எ.கா) – பார்
நிரையசை :
- இருகுறில் இணைந்து வருதல் (எ.கா) – அக
- இருகுறில் இனைந்து ஒற்றுடன் வருதல் (எ.கா) – அகம்
- குறில்நெடில் இணைந்து வருதல் (எ.கா) – கலா
- குறில் நெடில் இணைந்து ஒற்றுடன் வருதல் (எ.கா) – கலாம்
ஆசிரிய உரிச்சீர் நான்கு வகைப்படும்.
இயற்சீர்:
மாச்சீர்:
விளச்சீர்:
நேர் + நிரை – கூவிளம்
காய்ச்சீர்:
(எ.கா)
(எ.கா)
ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்
- ஆசிரியப்பா அகவலோசை கொண்டது.
- எல்லா அடிகளும் நான்கு சீர்களைப் (அளவடி) பெற்றுவரும்.
- இயற்சீர் மிகுந்தும் பிறசீர் கலந்தும் வரும்.
- ஆசிரியத்தளை மிகுந்தும் பிற தளை கலந்தும் வரும்.
- நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் (கூவிளங்கனி, கருவிளங்கனி) வராமல் அமையும்.
- இறுதி அடியின் இறுதி எழுத்து பிற எழுத்துக்களால் முடியும் என்றாலும்,"ஏ" என்னும் எழுத்தால் முடிவது சிறப்பு.
- ஏகாரத்துடன் ஓ, ஈ, ஆய், என், ஐ ஆகிய ஈறுகளாலும் முடியும்.
- மூன்றடிச் சிற்றெல்லையாகவும் பாடுவோன் எண்ணத்திற்கேற்ப (கற்பனைக்கேற்ப) பாடலடிகள் நீண்டும் செல்லும்.
ஆசிரியப்பாவின் வகைகள்:
ஆசிரியப்பாவின் இனங்கள்:
- ஆசிரியத் தாழிசை
- ஆசிரியத் துறை
- ஆசிரிய விருத்தம்
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் அமையும் முறை:
(எ.கா)
யார்தரும் கவிதை யேனும்
மாப்பலாப் போல எண்ணி
மடியிலே வாங்கிக் கொண்டு
காப்பிலாத் தமிழர் நெஞ்சில்
காலமெல் லாமும் வாழும்
மூப்பிலாத் தமிழே ! உன்னை
முதன்முதல் வணங்கு கின்றேன் !"
இப்பாடலில் அடிதோறும் ஆறு சீர்கள் பெற்று, முதற் சீரிலும் நான்காம் சீரிலும் மோனை அமைந்துள்ளது.
ஆசிரியப்பாவின் வகைகள்:
ஆசிரியப்பா நான்கு வகைப்படும்.
- நேரிசை ஆசிரியப்பா
- இணைக்குறள் ஆசிரியப்பா
- நிலைமண்டில ஆசிரியப்பா
- அடிமறிமண்டில ஆசிரியப்பா
சொல்லும் பொருளும்:
- கொத்து – பூமாலை
- குழல் – கூந்தல்
- நாங்கூழ் – மண்புழு
- கோலத்து நாட்டார் – கலிங்க நாட்டார்
- வரிசை – சன்மானம்
- காயில் – வெகுண்டால்
- அந்தம் – முடிவு
- அயன் – பிரம்மன்
- மால் – விஷ்ணு
- ஆலாலம் – நஞ்சு
- ஓதுக – சொல்க
- முழக்கம் – ஓங்கி உரைத்தல்
- கனிகள் – உலோகங்கள்
- மணி – மாணிக்கம்
- படிகம் – பளபளப்பான கல்
- மீட்சி – விடுதலை
- நவை – குற்றம்
- படி – உலகம்
- பதி – நாடு
- பிழைப்பு – வாழ்தல்
- நிரையம் – நகரம்
- ஒரீஇய – நோய் நீங்கிய
- புரையோர் – சான்றோர்
- யாணர் – புதுவருவாய்
- மருண்டெனன் – வியப்படைந்தேன்
- மன்னுயிர் – நிலை பெற்றுள்ள உயிர்.
- தண்டா – ஓயாத
- கடுந்துப்பு – மிகுவலிமை
- ஏமம் – பாதுகாப்பு
- ஒடியா – குறையா
- நயந்து – விரும்பிய
கலைச்சொல்லாக்கம்:
- Blog என்பதன் தமிழ்ச் சொல் – வலைப்பூ
- கலைச் சொற்கள் பெரும்பாலும் காரணப் பெயர்களாகவே இருக்கும்
- மருத்துவமனை – Clinic
- குருதிப்பிரிவு blood group
- மருந்தாளுநர் – pharmacist
- ஊடுகதிர் – x-ray
- குடற்காய்ச்சல் – Typhoid
- களிம்பு – Ointment
- எழுதுசுவடி – Notebook
- விடைச்சுவடி – answer book
- பொதுக் குறிப்புச் சுவடி – Rough note book
- விளக்கச்சுவடி – prospectus
- திறன்பேசி – smartphone
- தொடுதிரை – Touch screen
- பிழை – Bug
- அரசிதழ் – Gazette
- அனுப்புகை – Despatch
- மானியம் – subsidy
- உச்சவரம்பு – ceiling
- சுற்றறிக்கை – circular
- மிக இளையோர் – subjunior
- மேல் மூத்தோர் – super senior
- நாலாங்குழி ஆட்டம் – carrom
- விர்பனை வரி sales tax
- வாடிக்கையாளர் – customer
- நுகர்வோர் – consumer
- பற்று வரவுக் கணக்கு – account
- நடுவர் – referee
இலக்கணக்குறிப்பு:
- ஓதுக, பேசிடுக, ஆழ்க, வாழிய – வியங்கோள் வினைமுற்றுகள்
- அலைகடல் – வினைத்தொகை
- தமிழ்க்கவிஞர் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
- பேரன்பு, நெடுங்குன்று – பண்புத்தொகைகள்
- ஒழிதல் – தொழிற்பெயர்
- உழுதுழுது – அடுக்குத் தொடர்
- கெடுக – வியங்கோள் வினைமுற்று
- குறிப்புணர்வார் – வினையாலணையும் பெயர்
- மாண்ட தவளை – பெயரெச்சம்
- பெற்றார் – வினையாலணையும் பெயர்.
- சுடுகாடு, கொல்புலி, குரைகடல் – வினைத்தொகைகள்
- நல்லாடை – பண்புத்தொகை
- துய்த்தல் – தொழிற்பெயர்
- ஒரீஇய – சொல்லிசை அளபடை
- புகழ்பண்பு – வினைத்தொகை
- நன்னாடு – பண்புத்தொகை
- மருண்டனென் – தன்மை ஒருமை வினைமுற்று
- ஒடியா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
பகுபத உறுப்பிலக்கணம்:
அழைத்தான் – அழை + த் + த் + ஆன்அழை – பகுதி
த் – சந்தி
த் – இறந்த கால இடைநிலை
ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி.
வேண்டுகின்றேன் – வேண்டு + கின்று + ஏன்
வேண்டு – பகுதி
கின்று – நிகழ்கால இடைநிலை
ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி
ஆழ்க – ஆழ் + க
ஆழ் – பகுதி
க – வியங்கோள் வினைமுற்று விகுதி
பறித்தார் – பறி + த் + த் + ஆர்
பறி – பகுதி
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி
மருண்டனென் – மருள் (ண்) + ட் + அன் + என்
மருள் – பகுதி
"ள்", "ண்" ஆனது விகாரம்
ட் – இறந்தகால இடைநிலை
அன் – சாரியை
என் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி
துய்த்தல் – துய் + த் + தல்
துய் – பகுதி
த் – சந்தி
தல் – தொழிற்பெயர் விகுதி
புணர்ச்சி விதி:
நீரோடை – நீர் + ஓடைஉடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி"நீரோடை" என்று புணர்ந்தது.
சிற்றூர் – சிறுமை + ஊர்
ஈறு போதல் எனும் விதிப்படி – சிறு + ஊர்
தன்னொற்றிரட்டல் எனும்விதிப்படி – சிற்று + ஊர்
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் என்ற விதிப்படி – சிற்ற் + ஊர்
உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி சிற்றூர் எனப் புனர்ந்தது.
மண்ணுடை – மண் + உடை
தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் எனும் விதிப்படி – மண்ண் + உடை
உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி"மண்ணுடை" என்று புணர்ந்தது.
ஆக்கப் பெயர்கள்
- காலச் சூழலுக்கேற்றவாறு நம் பயன்பாட்டிற்கெனப் பல்வேறு பெயர்களைப் புதியதாக ஆக்கிக்கொள்கிறோம். அவை இடுகுறியாகவும் இருக்கலாம்; காரணமாகவும் இருக்கலாம். இவ்வாறு புதியதாக ஆக்கப்படும் சொல்"ஆக்கப்பெயர்" என அழைக்கப்படுகிறது.
- பெயர் அல்லது வினைச்சொற்களுடன் விகுதிகளைச் சேர்த்து ஆக்கப்படும் பெயர்கள்"ஆக்கப்பெயர்கள்" எனப்படும். இவ்வாறு பெயர்ச்சொற்களை ஆக்கப் பயன்படும் விகுதிகளை"ஆக்கப் பெயர் விகுதிகள்" என்பர்.
தமிழில் ஆக்கப்பெயர் விகுதிகள்:
- காரன்
- காரர்
- காரி
- ஆள்
- ஆளர்
- ஆளி
- தாரர்
- மானம்
மலர்ந்த மலரைக்
கண்டு வாடினாள்
பூக்காரி
வண்டிக்காரன்
சினிமாக்காரன்
மாட்டுக்காரன்
வீட்டுக்காரன்
ஆக்கப்பெயர்ச் சொற்களை ஈற்றில் நிற்கும் விகுதிகளைக் கொண்டு மூவகையாகப் பிரிக்கலாம்.
அவை,
1. பெயருடன் சேரும் விகுதிகள்
2. வினையுடனும் எச்சத்துடனும் சேரும் விகுதிகள்
3. பெயருடனும் வினையுடனும் சேரும் விகுதிகள்
பெயருடன் சேரும் விகுதிகள்:
(காரன், காரர், காரி, ஆள்,ஆளர், ஆளி, தாரர்)பெயர் + விகுதி = ஆக்கப்பெயர்
(எ.கா)
காரன், காரி, காரர் ஆகிய ஆக்கப்பெயர் விகுதிகள் உடைமை, உரிமை, உறவு அல்லது தொடர்பு, தொழில் அல்லது ஆளுதல் என்னும் நன்கு பொருள்களில் வரும்.
(எ.கா)
(எ.கா)
"ஆளர்","ஆளி" முதலான விகுதிகள் இருபாற்பொதுப்பெயர்களை உருவாக்கத் துனை புரிகின்றன.
(எ.கா)
வினையுடனும் எச்சத்துடனும் சேரும் விகுதிகள்: வினையடியுடன் ‘மானம்’ என்னும் விகுதி சேர்ந்து புதிய சொற்கள் உருவாகின்றன.
வியனி + விகுதி = ஆக்கப்பெயர்
(எ.கா)
பெயருடனும் வினையுடனும் சேரும் விகுதிகள்:
பெரருடனும் சேர்ந்து வரும் விகுதிகள்பெயர் + வுகுதி = ஆக்கப்பெயர்
(எ.கா)
அச்சு + அகம் = அச்சகம்
வினையுடனும் சேர்ந்து வரும் விகுதிகள்
வினை + விகுதி = ஆக்கப்பெயர்
(எ.கா)
பயில் + அகம் = பயிலகம்
இலக்கணக்குறிப்பு:
- கற்றேன் – தன்மை ஒருமை வினைமுற்று
- உடை அணிந்தேன் – இரண்டாம் வேற்றுமைத் தொகை
- உரைத்தாய் – முன்னிலை ஒருமை வினைமுற்று.
- கருங்கடல், பெருந்துயர், வெங்கணை, செங்கை, வெவ்வினை – பண்புத்தொகைகள்
- தடந்தேர், மாமதலை – உரிச்சொல்தொடர்
- கண்மலர் – உருவகம்
- ஈகையும் செல்வமும் – எண்ணும்மை
- முக்தியும் பெறுதி – உயர்வுச்சிறப்பும்மை
- நவில்க, உதவுக, கொள்க, தருக, சொல்லுக – வியங்கோள் வினைமுற்றுகள்
- வென்றி – மெலித்தல் விகாரம்
- பொருள் எலாம், நிகர் அலன் – இடைக்குறை விகாரங்கள்
- வாழ்அயன், செய்புண்ணியம் – வினைத்தொகைகள்
புணர்ச்சி விதி:
கருங்கடல் – கருமை + கடல்ஈறுபோதல் எனும் விதிப்படி – கரு + கடல் என்றானது.
இனமிகல் விதிப்படி" கருங்கடல்" என்றானது.
தடந்தேர் – தடம் + தேர்
மவ்வீறுஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் வன்மைக்கு இனமாகத் திரிபவும் ஆகும் என்னும் விதிப்படி"தடந்தேர்" என்றானது.
உழுதுழுது – உழுது + உழுது
உயிர் வரின் உக்குறள் மெய் விட்டோடும் எனும் விதிப்படி – உழுத் + உழுது என்றானது.
உடம்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி உழுதுழுது என்றானது.
பேரழகு – பெருமை + அழகு
ஈறு போதல் எனும் விதிப்படி – பெரு + அழகு என்றானது
ஆதி நீடல் எனும் விதிப்படி பேரு + அழகு என்றானது
இனையவும் எனும் விதிப்படி பேர் + அழகு (உகரம் கெட்டது) என்றானது
உடம்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பர் எனும் விதிப்படி" பேரழகு" என்றானது.
சொல்லும் பொருளும்:
- தரங்கம் – கடல்
- கவனம் – வேகம்
- துரகதம் – குதிரை
- வென்றி – வெற்றி
- விசயன் – அருச்சுனன்
- நான்மறை – நான்கு வேதங்கள்
- யாக்கை – உடல்
- ஓவு இலாது – ஒன்றும் மிச்சமின்றி
- அயன் – பிரமன்
- எழிலிஏறு – பேரிடி
- அங்கை – உள்ளங்கை
- அவுணன் – அரக்கன்
- மல்லல் – வளமை
- தொடையல் – மாலை
- சூரன்மாமதலை – கதிரவன்மகன்
- உற்பவம் – பிறவி
- கடிநகர் – காவல் உடைய நகரம்
- காண்டி – காண்க
- பூம்பராகம் – பூவில் உள்ள மகரந்தம்
- ஆசு இலா – குற்றம் இலாத
- தோட்டி – துறட்டி
- அயம் – ஆடு, குதிரை
- புக்க விட்டு – போகவிட்டு
- சீரியதூளி – நுண்ணிய மணல்
- சிறுகால் – வாய்க்கால்
- பரல் – கல்
- முந்நீர் மடு – கடலாகிய நீர் நிலை
- அண்டயோனி – ஞாயிறு
- சாடு – பாய்
- ஈட்டியது – சேகரித்தது
- எழிலி – மேகம்
- நாங்கூழ்ப்புழு – மண் புழு
- பாடு – உழைப்பு
- ஓவா – ஓயாத
- வேதித்து – மாற்றி
இலக்கணக்குறிப்பு:
- கடிநகர், சாலத் தகும் – உரிச்சொற்றொடர்கள்
- உருட்டி – வினையெச்சம்
- பின்னிய, முளைத்த – பெயரெச்சங்கள்
- இளமுகம், நல்லூண், சிறுபுல், பேரழகு, முந்நீர், நன்மண் – பண்புத்தொகைகள்
- பூக்குலை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
- தேன்துளி – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
- ஆசிலா, ஓவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- ஏகுமின் – ஏவல் பன்மை வினைமுற்று
- பார்த்துப் பார்த்து, நில் நில், உழுதுழுது – அடுக்குத் தொடர்கள்
- வாய்க்கால் – இலக்கணப் போலி
- செய்தொழில், அலைகடல், வீழருவி – வினைத்தொகைகள்
- மலையலை, குகைமுகம் – உவமைத்தொகைகள்
- நெறுநெறு – இரட்டைக்கிளவி
- புல்புழு, இராப்பகல் – உம்மைத்தொகைகள்
- காலத்தச்சன் – உருவகம்
- ஏகுதி – ஏவல் ஒருமை வினைமுற்று
- புழுக்களும் பூச்சியும் – எண்ணும்மை
- தங்குதல் – தொழிற்பெயர்
- மாநகர் – உரிச்சொற்றொடர்
- காட்டல், கோடல் – தொழிற்பெயர்கள்
- கேட்போர் – வினையாலணையும் பெயர்
- ஐந்தும் – முற்றும்மை
- அறிதல், போற்றல், நினைத்தல், கேட்டல், பயிறல் – தொழிற்பெயர்கள்
- நனிஇகக்கும் – உரிச்சொற்றொடர்.
சொல்லும் பொருளும்:
- இகக்கும் – நீக்கும்
- இழுக்கு – குற்றம்
- வினாயவை – கேட்டவை
இலக்கியம்
புதுக்கவிதை விளக்கம்:
மரபு சார்ந்த செய்யுள்களின் கட்டுப்பாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட கவிதைகளைப் "புதுக்கவிதைகள்" என்பர். படிப்போரின் ஆழ்மனதில் புதுக்கவிதை ஏற்படுத்தும் தாக்கமே முதன்மையானது. இது படிப்போரின் சிந்தனைக்கு ஏற்ப விரிவடையும் பன்முகத்தன்மை கொண்டது.நன்னூல் – பாயிரம்:
நான்னூலில் இடம் பெற்றுள்ள பாயிரம் குறித்த அடிகள்:
புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்"
"பாயிரம் பொது, சிறப்பு எனஇரு பாற்றே"
"நூலே நுவல்வோன் நுவலும் திறனே
கொள்வோன் கோடல் கூற்றாம் ஐந்தும்
எல்லா நூற்கும் இவைபொதுப் பாயிரம்"
"ஆக்கியோன் பெயரே வழியே எல்லை
நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே
கேட்போர் பயனொடு ஆயஎண் பொருளும்
வாய்ப்பக் காட்டல் பாயிரத்து இயல்பே"
"காலம் களனே காரணம் என்றுஇம்
மூவகை ஏற்றி மொழிநரும் உளரே"
"ஆயிரம் முகத்தான் அகன்றது ஆயினும்
பாயிரம் இல்லது பனுவல் அன்றே"
"மாடர்க்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும்
ஆடமைத்தோள் நாலார்க்கு அணியும்போல் – நாடிமுன்
ஐதுரையா நின்ற அணிந்துரையை எந்நூற்கும்
பெய்துரையா வைத்தார் பெரிது"
பாயிரம் – அறிமுகம்:
பாயிரத்திற்கு உரிய ஏழு பெயர்கள்:
- முகவுரை – நூலுக்கும் முன் சொல்லப்படுவது
- பதிகம் – ஐந்து பொதுவும் பதினொரு சிறப்புமாகிய பலவகைப் பொருள்களையும் தொகுத்துச் சொல்வது
- அணிந்துரை – நூலின் பெருமை கூறும்
- புனைந்துரை – நூலின் பெருமை முதலியவை விளங்க அலங்கரித்துச் சொல்வது
- நூன்முகம் – நூலுக்கு முகம் போல முற்பட்டிருப்பது.
- புறவுரை – நூலில் சொல்லிய பொருள் அல்லாதவற்றை நூலின் புறத்திலே சொல்வது.
- தந்துரை – நூலில் சொல்லிய பொருள் அல்லாதவற்றைத் தந்து செல்வது.
சிறப்புப்பாயிரத்தின் இலக்கணம்:
நன்னூல் பற்றியக் குறிப்புகள்
- நன்னூல் தொல்காப்பியத்தை முதல்நூலாகக் கொண்ட வழிநூல் ஆகும்.
- இந்நூல் கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும்.
- பவணந்தி முனிவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர்.
- இது வழிநூல் ஆகும். இதன் முதல் நூல் அகத்தியம் ஆகும்.
- சிறப்புப் பாயிரம் எழுதியவர் பெயர் தெரியவில்லை.
- இதில் உள்ள நூற்பாக்கள் 462.
- இந்நூல் "எழுத்ததிகாரம்", "சொல்லதிகாரம்" என இரண்டு அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.
எழுத்ததிகாரம் 5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
- எழுத்தியல்
- பதவியல்
- உயிரீற்றுப் புணரியல்
- மெய்யீற்றுப் புணரியல்
- உருப்புணரியல்
சொல்லதிகாரம் 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
- பெயரியல்
- வினையியல்
- பொதுவியல்
- இடையியல்
- உரியியல்
திருமலை முருகன் பள்ளு
வடகரை நாடு
"மலரில் ஆரளி இந்துளம் பாடும்மடைஇ டங்கணி வந்துளம் ஆடும்
சசை வாவியில் செங்கயல் பாயும்
தரளம் ஈன்றவெண் சங்கயல் மேயும்
குலமின் னார்மழை பெய்யெனப் பெய்யும்
குடங்கை ஏற்பவர் செய்யெனச் செய்யும்
புலவர் போற்றும் திருமலைச் சேவகன்
புகழ்வட ஆரி நாடெங்கள் நாடே"
இந்தப் பாடலில் வடகரை நாட்டின் சிறப்பை "பெரியவன் கவிராயர்" விவரிக்கிறார்.
பாடலின் பொருள்:
தென்கரை நாடு
வளருங் காவில் முகில்தொகை ஏறும் – பொன்மாடம் எங்கும் அகிற்புகை நாறும்
குளிரும் மஞ்ஞையும் கொண்டலும் காக்கும்
கோல்முறை மன்னர் மண்டலங் காக்கும்
இளமின் னார்பொன் னரங்கில் நடிக்கும் – முத்(து)
ஏந்தி வாவித் தரங்கம் வெடிக்கும்
அளியுலாம் கொன்றை சூடுங் குற்றாலத் – தென்
ஐயன்தென் ஆரி நாடெங்கள் நாடே"
இந்தப் பாடலில் தென்கரை நாட்டின் சிறப்பை விவரிக்கிறார் – "பெரியவன் கவிராயர்".
பாடலின் பொருள்:
திருமலை முருகன் பள்ளு கூறும் நெல்வகைகள்:
- பைங்குழலாள்
- சீதாபோகம்
- ரங்கஞ்சம்பா
- மணல்வாரி
- அதிக்கிராதி
- அரிக்ராவி
- முத்துவெள்ளை
- புழுகுசம்பா
- சொரிகுரம்பை
- புத்தன் வாரி
- சிறைமீட்டான்
- கருங்சூரை
- பூம்பாலை
- குற்றாலன்
- பாற்கடுக்கன்
- கற்பூரப்பாளை
- காடை கழுத்தன்
- மிளகு சம்பா
- பனைமுகத்தன்
திருமலைமுருகன் பள்ளு கூறும் மாடு வகைகள்:
- காரி
- தொந்திக்காளை
- மால்காளை
- மறைகாளை
- மயிலைக்காளை
- மேழைக்காளை
- செம்மறையான்
- கருமறையான்
திருமலை முருகன் பள்ளு கூறும் உழவுக் கருவிகள்:
- கலப்பை
- நுகம்
- பூட்டு
- வள்ளைக்கை
- உழக்கோல்
- கொழு கயமரம்
- மண்வெட்டி
- வடம்
கண்காணி
- பேச்சு வழக்கில் கங்காணி என்று பயன்படுத்தப்படுகிறது.
- கண்காணம் என்பது பயிர்த்தொழிலில் கையாளப்படும் ஒரு சொல். கங்காணம் என்றும் வழங்கப்படுகிறது.இதன் பொருள் நாள்தோறும் நெல்வயலில் நெல் அறுவடை செய்து கலத்தில் ஒப்பாடி செய்யப்படும் நெல் அளவு என்பதாகும்.
- கண்காணி என்பது இந்த ஒப்படியை மேற்பார்வை செய்பவரைக் குறிக்கும்.
- திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியர் – "பெரியவன் கவிராயர்"
திருமலை முருகன் பள்ளு பற்றியக் குறிப்புகள்:
- திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்திற்கு அருகில் உள்லது பண்புளிப்பட்டணம்.
- இவ்வூர் "பண்பை" என்றும் "பண்பொழில்" என்றும் அழைக்கப்படும். இங்குள்ள சிறு குன்றின் பெயர் திருமலை.
- குன்றின் மேலுள்ள முருகக்கடவுளைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டுள்ளது.
- இந்நூலில் கலித்துறை, கலிப்பா, சிந்து ஆகிய பாவகைகள் விரவி வந்துள்ளன.
- இந்நூல் "பள்ளிசை" என்றும் "திருமலை அதிபர் பள்ளு" என்றும் வழங்கப்படுகிறது.
- இந்நூலின் ஆசிரியர் "பெரியவன் கவிராயர்". இவரது காலம் 18 ஆம் நூற்றாண்டு.
ஐங்குறுநூறு
போவிதழ் தளவொடு பிடவலர்ந்து கவினிப்
பூவணி கொண்டன்றால் புறவே
பேரமர்க் கண்ணி ஆடுகம் விரைந்தே"
என்ற இப்பாடல் ஐங்குநூற்றுப் பாடலை இயற்றியவர் – பேயனார்.
துறை:
பாடலின் பொருள்:
ஐங்குறுநூறு பற்றியக் குறிப்புகள்:
- ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு
- மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல்.
- இது 500 படல்களைக் கொண்டது.
- இதனை பாடிய புலவர்கள் 5 பேர்
- குறிஞ்சித் திணைப் பாடல்களைப் பாடியவர் – கபிலர்
- முல்லைத் திணைப் பாடல்களைப் பாடியவர் – பேயனார்
- மருதத் திணைப் பாடல்களைப் பாடியவர் – ஓரம்போகியார்
- நெய்தல் திணைப் பாடல்களைப் பாடியவர் – அம்மூவனார்
- பாலைத் திணைப் பாடல்களைப் பாடியவர் – ஓதாலாந்தையார்
- திணை ஒன்றிற்கு நூறு பாடல்களாக ஐந்து திணைகளுக்கு ஐந்நூறு பாடல்கள் கொண்டது.
- ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்.
- ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துச் சிவனைப் பற்றியது.
- ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் – புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
- ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் – யானைக்கட்சேய் மாந்தரஞ்ச் சேரலிரும்பொறை
- இதனை முதன் முதலாக பதிப்பித்தவர் – உ.வே.சாமிநாதர்
- "பேயனார்" சங்கப் புலவர்களில் ஒருவர். இதுவே இயற்றிய 105 பாடல்கள் கிடைத்துள்ளன.
- தமிழ்நாட்டில் பண்டைக் காலம் முதலே நாட்டர் வழக்கிலுள்ள இசை மரபு – காவடிச் சிந்து
குறுந்தொகை
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ
தண்டுடைக் கையர்வெண்டலைச் சிதவவலர்
நன்றுநன் றென்னும் மாக்களோடு
இன்றுபெரிது என்னும் ஆங்கண தவையே"
என்ற பாடலை இயற்றியவர் – "வெள்ளி வீதியார்"
மேற்கண்ட பாடல் குறிஞ்சித் திணையைச் சேர்ந்தது.
இப்பாடல் "நேரிசை ஆசிரியப்பா" வகையைச் சேர்ந்தது.
பாடலின் பொருள்:
குறுந்தொகை பற்றியக் குறிப்புகள்:
- குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களுல் ஒன்று.
- அகத்திணை சார்ந்த 401 பாடல்களை உடையது.
- இதிலுள்ள பாடல்களை 203 புலவர்கள் பாடியுள்ளனர்.
- சிற்றெல்லை நான்கடி. பேரெல்லை எட்டு அடி. 307, 399 ஆம் பாடல்கள் மட்டும் 9 அடி.
- "நல்ல குறுந்தொகை" என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது.
- உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் ஆகும்.
- இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகைநூலாகாக் கருதப்படுகிறது.
- குறுந்தொகையைத் தொகுத்தவர் "பூரிக்கோ" ஆவார்.
- இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலை "பாரதம் பாடிய பெருந்தேவனார்" பாடியுள்ளார்.
- குறுந்தொகையின் கடவுள்வாழ்த்து முருகனைப் பற்றியது.
- குறுந்தொகையை முதன்முதலில் பதிப்பித்தவர் – சி.வை.தாமோதரம் பிள்ளை
- ஆராய்ச்சிப் பதிப்பு – உ.வே.சாமிநாதர்
- வெள்ளிவீதியார் சங்ககாலப் பெண் புலவர்களில் ஒருவர்.
- சங்கத்தொகை நூல்களில் 13 பாடல்கள் இவரால் பாடப்பட்டவை.
புறநானூறு
அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்!
துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ் எனின் உரிருங் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனையர் ஆகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே."
என்ற புறநானூற்றுப் பாடலை இயற்றியவர் – 'கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி'.
பாடலின் பொருள்:
திணை:
பொதுவியல் திணைவிளக்கம்:
துறை:
பொருண்மொழிக்காஞ்சித் துறைவிளக்கம்:
புறநானூறு பற்றியக் குறிப்புகள்:
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி:
- பாண்டிய மன்னருள் 'பெருவழுதி' என்னும் பெயரில் பலர் இருந்தனர். அரிய குணங்கள் அனைத்தையும் தம் இளமைக்காலத்திலேயே பெற்றிருந்த காரணத்தால் அக்கால மக்கள், இவரை 'இளம்பெருவழுதி' என்று அழைத்தனர்.
- கடற்பயணம் ஒன்றில் இறந்து போனதால் இவர், கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்டார்.
- இவர் புறநானூற்றில் ஒரு பாடலும், பரிபாடலில் ஒரு பாடலும் இயற்றியுள்ளார்.
சித்திரக்கவி:
- தமிழ்க் கவிதைகளுல் சித்திரக்கவி அமைப்பும் ஒன்றாகும்.
- சித்திரக் கவியில் பல வகைகள் உள்ளன.
- சித்திர கவி என்பது ஏதேனும் ஒரு பொருளைக் காட்சிப்படுத்திக் கவிதையினையும் அதற்குள்ளாக அமைத்து எழுதுவதாகும்.
மாலைமாற்று:
திருக்குறள்
நாவினால் சுட்ட வடு'
என்ற குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி – 'வேற்றுமை அணி'
'மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்'
என்ற குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி – 'உவமை அணி'
'சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு'
என்ற குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி – 'உவமை அணி'
'பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு'
என்ற குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி – 'சொல் பின்வரும் நிலையணி'
'பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்'
என்ற குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி – 'பிறிது மொழிதல் அணி'
திருக்குறள் பற்றியக் குறிப்புகள்:
- திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பிரிவுகளை கொண்டது.
- அறத்துப்பால் 38 அதிகாரங்களையும் 4 இயல்களையும் உடையது.
அறத்துப்பாலில் அமைந்துள்ள இயல்கள்:
- பாயிரவியல் – 04
- இல்லறவியல் – 20
- துறவறவியல் – 13
- ஊழியியல் – 01
பொருட்பாலில் அமைந்துள்ள இயல்கள்:
- அரசு இயல் – 25
- அமைச்சு இயல் – 32
- ஒழிபியல் – 13
இன்பத்துப்பாலில் அமைந்துள்ள இயல்கள்:
- களவியல் – 07
- கற்பியல் – 18
திருக்குறள் பெயர்க்காரணம்:
- உலகப் பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.
- இப்பாடல்கள் அனைத்தும் 'குறள் வெண்பா' எ
- பாவின் வகையைத் தன் பெயராகக் கொண்டு உயர்வு விகுதியாகத் 'திரு' என்னும் அடைமொழியுடன் 'திருக்குறள்' என்று அழைக்கப்படுகிறது.
- ஏழு சீர்களில் வாழ்வியல் நெறிகளைப் பேசும் இந்நூல் உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ன்னும் பா வகையால் ஆனது.
- பரிமேலழகர்
- மணக்குடவர்
- காலிங்கர்
- பரிதி
- பரிப்பெருமாள்
- தருமர்
- தாமத்தர்
- நச்சர்
- திருமலையர்
- மல்லர்
திருவள்ளுவருக்கு வழங்கும் வேறுபெயர்கள்:
- தேவர்
- நாயனார்
- தெய்வப்புலவர்
- செந்நாப்போதர்
- பெருநாவலர்
- பொய்யில் புலவர்
- பொய்யாமொழிப் புலவர்
- மாதானுபங்கி
- முதற்பாவலர்
புழங்குகிறது யோசனை
பாசத்துக்கும் நியாயத்துக்கும் நடுவில்
நசுங்குகிறது அறம்
இன்பத்துக்கும் பேராசைக்கும் நடக்கும்
போராட்டத்தில் வெடிக்கின்றன
வெளியில் குண்டுகளும்
வீட்டில் சண்டைகளும்
ஆசை அறுத்தல் எளிதல்ல
முயன்று பார்க்கலாம் வா! '
என்ற புதுக்கவிதைக்கு பொருத்தமான திருக்குறள்
'இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்'
நீலகேசி
நீதின்னும் தோலை நெருப்பொடு கூட்டத்தின்
ஓதினை தேறுற நீர்க்குரைத் தாய்மற்றும்
சேதனை இல்லாய் திரிவு என்னை வண்ணம்'
என்ற பாடலில் தொட்டால் சுருங்கி தாவரத்தைச் சுட்டிக்காட்டி தாவரங்களுக்கு உயிர் உண்டு எனக் கூறும் நூல் – 'நீலகேசி'
ஒருங்குதம் காரணத்து ஆக்கம் உணர்த்தும்
மரங்களும் மன்னுயிர் எய்தின என்ன
இரும்பொடு காந்தம் இயைவுஇல் திரிவே'
என்ற பாடலில் இளவேனிலில் மரங்கள் வளர்கின்றன; மலர்கின்றன; நோய்வாய்ப்பட்டு பிறகு மீள்கின்றன; இவ்வாறு தாவரங்கள் உயிரியப் பண்புகளைப் பெற்றுள்ளன என்றும் காந்தத்திற்கு இரும்பைக் கவரும் தன்மை உண்டு என்றும் கூறும் சங்க நூல் – 'நீலகேசி'
இப்படித் தோன்றும் இருதுக்கள் சார்ந்தெனச்
செப்பிய வேதுத் திரிவு எனக் காட்டிய
வெப்பம் குளிர்அவை தம்அவை யேயோல்'
என்ற பாடலில் தவரங்கள் பருவ காலத்திற்கு ஏற்ப மாறுகின்றன என்று கூறும் நூல் – 'நீலகேசி'
கற்றிலை மெய்ம்மைநீ கட்புலம் தன்னோடொஓர் காலத்தினால்
பெற்றில நாம்அதன் பிங்கொளல் தானும் பெருந்தவத்தாய்
மற்றிது தான்தன் பொறியுறு காறும் வரலின் அன்றே'
என்ற பாடலில் ஒரே நேரத்தில் தோன்றுகின்ற ஒளி மற்றும் ஒலியை ஒருசேரப் பெற இயலாது.
"ஒளியை முதலில் காண முடியும் பின்னரே ஒலியைக் கேட்க முடியும்" என்ற அறிவியலைக் கூறும் சங்க நூல் – 'நீலகேசி'
நீலகேசி பற்றியக் குறிப்புகள்:
- நீலகேசி என்பது ஐஞ்சிறுங் காப்பியங்களுல் ஒன்று.
- இந்நூல் விருத்தப்பாவால் ஆனது.
- இந்நூலுக்கு 'நீலகேசித் தெருட்டு' என்ற பெயரும் உண்டு.
- இந்நூல் 'குண்டலகேசி' என்னும் நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்டது.
- 'நீலகேசி' என்னும் சமண சமயப் பெண், சமயத் தலைவர் பலரிடம் வாதம் செய்து, சமண நெறியை நிலைநாட்டுவதாக நூல் அமைந்துள்ளது.
- தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் நீலகேசி ஆகும்.
- இந்நூலில் கடவுள் வாழ்த்து உட்பட பதினொரு பகுதிகளிலும் மொத்தமாக 894 பாடல்கள் உள்ளன.
- நீலகேசியை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை.
- நீலகேசியின் உரையாசிரியர் – சமய திவாகர வாமன முனிவர்.
புறநானூறு
அஞ்ஞா யிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்றிவை
சென்றுஅளந்து அறிந்தோர் போல என்றும்
இனைத்து என்போரும் உளரே அனைத்தும்
அறிவுஅறிவு ஆகாச் செறிவினை ஆகிக்
களிறுகவுள் அடுத்த எறிகல் போல
ஒளித்த துப்பினை ஆதலின் வெளிப்பட
யாங்ஙனம் பாடுவர் புலவர் கூம்பொடு
மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது
புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர்
இடைப்புலப் பெருவழிச் சொரியும்
கடல்பல் தாரத்த நாடுகிழ வோயே!'
– என்ற புறநானூற்றுப் பாடலை இயற்றியவர் – 'உறையூர் முதுகண்ணன் சாத்தனார்'
இயன்மொழி துறை விளக்கம்:
பாடலின் பொருள்:
நற்றிணை
விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்திப்
புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
உண்என்று ஒக்குபு புடைப்பத் தெண்ணீர்
முத்தரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று
அரிநரைக் கூந்தற் செம்முது செவிலியர்
பரீஇ மெலிந்துஒழியப் பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந்தனள் கொல்
கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
ஒழுகுநீர் நுணங்கறல் போலப்
பொழுது மறுத்து உண்ணும் சிறுமது கையளே'
என்ற நற்றிணைப் பாடலை இயற்றியவர் – 'போதனார் '
பாடலின் கூற்று:
கூற்றின் விளக்கம்:
திருமணம் முடிந்து கணவன் வீட்டில் வசிக்கும் தலைவியைக் காணச் சென்றுவந்த செவிலி, நற்றாயிடம் மகள் வறுமையிலும் செம்மையாக வாழ்வதைச் சொல்லி இத்தகைய இல்லற அறிவை எப்படிப் பெற்றாள் என வியந்து கூறுதல்.பாடலின் துறை:
மகள் நிலை உரைத்தல்
துறை விளக்கம்:
பாடலின் பொருள்:
- நம் வீட்டில் தன் கலந்த இனிய பால் உணவை ஒளிமிக்க பொற்கலத்தில் இட்டுச் செவிலியர் ஒரு கையில் ஏந்தி வருவர். நம் மகளை உண்ண வைப்பதற்காக இன்னொரு கையில் பூச்சுற்றிய மென்மையான சிறுகோலை வைத்திருப்பர்.
- வீட்டின் முற்றத்தில் பந்தரின் கீழ் இதை உண்பாயாக எனச் செல்லமாக அக்கோலால் அடித்து வேண்டுவர். மகளோ, நான் உண்ணேன் என மறுத்து முத்துப்பரல்கள் இட்ட பொற்சிலம்பு ஒலிக்க அங்குமிங்கும் ஓடுவாள்.
- செவிலியர் அவளைப் பிந்தொடர முடியாமல் நடை தளர்ந்து நிற்பர். இப்படிப்பட்ட விளையாட்டுப் பெண், நம் மகள். இவள் எப்படி இப்போது இத்தகைய அறிவையும் இல்லற நடைமுறையும் கற்றாள்? தான் மணந்துகொண்ட கணவன் வீட்டில் வறுமையுற்ற நிலையிலும் தன் தந்தையின் வீட்டில் பெற்ற வளமான உணவினைப் பற்றி நினைத்துப் பாராள்.
- ஓடுகின்ற நீரிலே கிடக்கும் நுண்மணலில் இடைவெளி இருப்பதுபோல ஒருபொழுது இடைவெளி விட்டு ஒருபொழுது உண்ணும் வன்மை பெற்றிருக்கிறாள். இது என்ன வியப்பு?
- வளமான மனையில் பிறந்த பெண்ணொருத்தி, குறைந்த வளமுடைய தலைவன் வீடிலும் தன்னிலை மாறாது வறுமையிற் செம்மையாய் வாழ்கின்ற காட்சியைப் பற்றிய பாடல் இடம் பெற்ற நூல் – நற்றிணை
நற்றிணை பற்றியக் குறிப்புகள்:
- நற்றிணை எட்டுத்தொகை நூல்களுல் முதலாவதாக வைத்துப் பாடப்படுவதாகும்.
- 'நல்ல திணை' என்ற அடைமொழியால் போற்றப்படும் சிறப்பினை உடையது.
- இந்நூல் 400 பாடல்களைக் கொண்டது.
- 9 அடிகளைச் சிற்றெல்லையாகவும் 12 அடிகளைப் பேரெல்லையாகவும் கொண்டது.
- நற்றிணைக்கு கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் 'பாரதம் பாடிய பெருந்தேவனார்'.
- நற்றிணையில் உள்ள கடவுள் வாழ்த்துப் பாடல் திருமாலைப் பற்றியது
- நற்றிணையைத் தொகுப்பித்தவன் ' பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி'
- இதிலுள்ள பாடல்களை பாடிய புலவர்களின் எண்ணிக்கை – 175 (187)
- போதனார் சங்கப் புலவர்களில் ஒருவர். நற்றிணையில் 110 ஆம் பாடலை மட்டும் பாடியுள்ளார். நற்றிணையின் பேரெல்லை 12 அடி. இருப்பினும் விதிவிலக்காக 13 அடிகளைக் கொண்டதாக இவரது பாடல் அமைந்துள்ளது.
தொல்காப்பியம்
பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்
ஆசாற் சார்ந்துஅவை அமைவரக் கேட்டல்
அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல்
வினாதல் வினாயவை விடுத்தல் என்றின்னவை
கடனாக் கொளினே மடம்நனி இகக்கும்
ஒருகுறி கேட்போன் இருகாற் கேட்பிற்
பெருக நூலிற் பிழைபா டிலனே
முக்காற் கேட்பின் முறையறிந்து உரைக்கும்'
– என்ற சிறப்புப்பாயிர உரைவிளக்கப் பாடலில் மாணவர் எவ்வாறு கற்க வேண்டும் என தொல்காப்பியம் கூறுகிறது.
பாடலின் பொருள்:
தொல்காப்பியம் பற்றியக் குறிப்புகள்:
- தொல்காப்பியத்தை இயற்றியவர் – தொல்காப்பியர்.
- தொல்காப்பியம் என்ற நூலை இயற்றியதால் தொல்காப்பியர் என்ற காரணப்பெயர் வந்திற்று.
- ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர் என்றும் ஒல்காப் புலமை தொல்காப்பியன் எனவும் சிறப்பிக்கப்படுவார்.
- அகத்தியரின் பன்னிரண்டு மாணவர்களில் ஒருவர் தொல்காப்பியர்.
- இன்று தமிழில் உள்ள நூல்களிலேயே மிகப் பழமையானதும் சிறப்புடையதும் முழுமையாகக் கிடைத்ததுமான இலக்கண நூல் – தொல்காப்பியம்.
- தொல்காப்பியத்திற்குச் சிறப்புப்பாயிரம் பாடியவர் – பனம்பாரனார்.
- உள்ளத்து உணர்ச்சிகளை அவ்வாறே உடலில் வெளிப்படுத்துவது மெய்ப்பாடு, இதன் இலக்கணம் கூறும் பகுதி – மெய்ப்பாட்டியல்
- தொல்காப்பியத்தின் முதல் பதிப்பு வெளியிடப்பட்ட ஆண்டு – 1874
- தமிழ் நூல்களில் காலத்தால் பழமையான இலக்கண நூல் – தொல்காப்பியம்
- தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒன்பது இயல்களாக மொத்தம் 27 இயல்கள் உள்ளன.
தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பழமையான உரையாசிரியர்கள்:
- இளம்பூரணர்
- நச்சினார்க்கினியர்
- கல்லாடனார்
- சேனாவரையர்
- தெய்வச்சிலையார்
- பேராசிரியர்
நூல்களும் வகைகளும்:
- தொல்காப்பியம் – இலக்கண நூல்
- திருக்குறள் – அறநூல்
- புறநானூறு – சங்க நூல்
- திருவாசகம் – பக்தி நூல்
சீறாப்புரணம்
சீறாப்புராணம் பற்றியக் குறிப்புகள்:
சீறாப்புராணம் மூன்று காண்டங்களை உடையது.
- விலாதத்துக் காண்டம்
- நுபுவ்வத்துக் காண்டம்
- ஹிஜிரத்துக் காண்டம்
அகநானூறு
இருண்டுஉயர் விசும்பின் வலனேர்பு வளைஇப்
போர்ப்புஉறு முரசின் இரங்கி, முறைபுரிந்து
அறன் நெறி பிழையாத் திறன்அறி மன்னர்
அருஞ்சமத்து எதிர்ந்த பெருஞ்செய் ஆடவர்
கழித்துஎறி வாளின், நளிப்பன விளங்கும்
மின்னுடைக் கருவியை ஆகி, நாளும்
கொன்னே செய்தியோ, அரவம்? பொன்னென
மலர்ந்த வேங்கை மலிதொடர் அடைச்சிப்
பொலிந்த ஆயமொடு காண்தக இயலித்
தழலை வாங்கியும் தட்டை ஓப்பியும்,
அழலேர் செயலை அம்தழை அசைஇயும்,
குறமகள் காக்கும் ஏனல்
புறமும் தருதியோ? வாழிய, மழையே!'
என்ற அகநானூற்றுப் பாடலை இயற்றியவர் – 'வீரை வெளியன் தித்தனார் '.
இந்தப் பாடல் குறிஞ்சித் திணையைச் சார்ந்தது.
பாடலின் பொருள்:
அகநானூறு பற்றியக் குறிப்புகள்:
அகநானூறு மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
- 1-120 பாடல் – களிற்றியானை நிரை (120 பாடல்கள்)
- 121 – 300 பாடல் – மணிமிடைப்பவளம் ( 180 பாடல்கள்)
- 301 – 400 பாடல் – நித்திலக்கோவை (100 பாடல்கள்)
அகநானூற்றில் ஒவ்வொரு திணையிலும் உள்ள பாடல்களும் பாடல் வரிசைகளும்:
திணை – குறிஞ்சி
திணை – முல்லை
திணை – மருதம்
திணை – நெய்தல்
திணை – பாலை
அகநானூற்றில் உள்ள செய்திகள்:
"தா துண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்"
– என்று பாடியவர் – குறுங்குடி மருதனார்.
" யாமே பிரிவின்றி இயைந்த துவரா நட்பின்
இருதலைப்புள்ளின் ஓருயிர் அம்மே"
– என்று பாடியவர் – கபிலர்
" தமக்கெழு மூவர் காக்கும் நிலம்" – என்று பாடியவர் – மாமூலர்
திருக்குறள்
கைகொல்லும் காழ்த்த இடத்து'
பொருள்:
'நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்'
பொருள்:
'இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்'
பொருள்:
குற்றாலக் குறவஞ்சி
- சங்க இலக்கியங்கள் வீரர்களை, அரசர்களை, வள்ளல்களை, தனிமனிதர்களைப் பாடின.
- சமய நூல்கள் கடவுளரைப் பாடின.
- சிற்றிலக்கியங்கள் கடவுளரோடு மனிதர்களையும் பாடின.
- இயற்றமிழின் செழுமையையும், இசைத்தமிழின் இனிமையையும், நாடகத் தமிழின் எழிலினையும் ஒருங்கேகொண்டு முத்தமிழ்க் காவியமாகத் திகழ்வது – குற்றாலக் குறவஞ்சி.
- 'குறவஞ்சி' என்பது ஒருவகை நாடக இலக்கிய வடிவம் ஆகும்.
- 'குறவஞ்சி' சிற்றிலக்கிய வகைகளுல் ஒன்று.
- பாட்டுடைத் தலைவன் உலாவரக் கண்ட தலைவி, அத்தலைவன் மீது காதல்கொள்ள குறவர் குலத்தைச் சார்ந்த பெண்ணொருத்தி தலைவிக்குக் குறிகூறிப் பரிசைல் பெறும் செய்திகளைக் கூறுவதால் 'குறவஞ்சி' என்னும் பெயர் பெற்றது. இது 'குறத்திப்பாட்டு' என்றும் வழங்கப்படுகிறது.
திருக்குற்றாலக் குறவஞ்சி பற்றியக் குறிப்புகள்:
- குற்றாலக் குறவஞ்சியை இயற்றியவர் – திரிகூடராசப்பக் கவிராயர்
- தமிழ்நாட்டின் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் 'குற்றாலம்' என்னும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து, அங்குள்ள குற்றாலநாதரைப் போற்றிப் பாடப்பட்ட நூல் – குற்றாலக் குறவஞ்சி
- குற்றாலக் குறவஞ்சி திரிகூட ராசப்பக் கவிராயரின் ' கவிதைக் கிரீடம் ' என்று போற்றப்பட்டது.
- இந்நூல் 'மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார் ' விருப்பத்திற்கு இணங்க பாடி அரங்கேற்றப்பட்டது.
- திரிகூட ராசப்பக் கவிராயர் திருநெல்வேலியில் தோன்றியவர்.
- குற்றாலநாதர் கோவிலில் பணிபுரியும் காலத்தில் சைவசமயக் கல்வியிலும் இலக்கிய இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றார்.
- ' திருக்குற்றாலநாதர் கோவில் வித்துவான்' என்ற சிறப்புப் பட்டப்பெயர் பெற்றவர் – திரிகூடராசப்பக் கவிராயர்
- குற்றாலத்தின் மீது தலபுராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமக அந்தாதி முதலிய நூல்களை இயற்றியவர் – திரிகூடராசப்பக் கவிராயர்
திருவாசகம் பற்றியக் குறிப்புகள்
- திருவாசகம் என்பது சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.
- திருவாசகத்தை இயற்றியவர் – மாணிக்கவாசகர்
- சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ளது – திருவாசகம்
- திருவாசகத்தில் 51 திருப்பதிகங்கள் உள்ளன.
- திருவாசகத்தில் 658 பாடல்கள் உள்லன.
- திருவாசகத்தில் 38 சிவத்தலங்கள் பாடப் பெற்றுள்ளன.
- பக்திச் சுவையும் மனத்தை உருக்கும் தன்மையும் கொண்டவை திருவாசகப் பாடல்கள்
- 'திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்பது முதுமொழி ஆகும்
- திருச்சாழல் தில்லைக் கோவிலில் பாடப்பெற்றது.
- திருவாசகம் முழுமையையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் – ஜி.யு.போப்
- மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவர்.
- மாணிக்கவாசகர் திருவாதவூரைச் சேர்ந்தவர்
- மாணிக்கவாசகர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமையமைச்சராகப் பணியாற்றினார்.
- மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் – திருவாசகம், திருக்கோவையார்
புரட்சிக்கவி
தேக்கியநல் வாய்க்காலும் வகைப் படுத்தி
நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும்
நிறைஉழைப்புத் தோள்களெலாம் எவரின்தோள்கள்?
கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக்
கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை?
பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப்
போய்எடுக்க அடக்கியமூச் செவரின் மூச்சு? '
– என்ற பாடலின் ஆசிரியர் – பாரதிதாசன்.
இப்பாடல் பாரதிதாசனின் 'புரட்சிக்கவி' என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.
பதிற்றுப்பத்து
சேரா தியல்வது நாடு'
என்ற குறட்பாவில் பசியும் நோயும் இல்லாதிருப்பதே சிறந்த நாடு என்று திருவள்ளுவர் கூறுகிறார்.
நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர்
மேயினர் உறையும் பலர்புகழ் பண்பின்
நீபுறம் தருதலின் நோய்இகந்து ஒரீஇய
யாணர்நன் னாடும் கண்டுமதி மருண்டனென்
மண்ணுடை ஞாலத்து மன்னுயிர்க்கு எஞ்சாது
ஈத்துக்கை தண்டாக் கைகடும் துப்பின்
புரைவயின் புரைவயின் பெரிய நல்கி
ஏமம் ஆகிய சீர்கெழு விழவின்
நெடியோன் அன்ன நல்லிசை
ஒடியா மைந்தநின் பண்புபல நயந்தே'
என்ற பாடல் இடம்பெற்ற நூல் – பதிற்றுப்பத்து.
துறை: செந்துறை பாடாண் பாட்டு
பாடலின் பொருள்:
பதிற்றுப்பத்து பற்றியக் குறிப்புகள்:
- எட்டுத்தொகையில் அமைந்த புறத்திணை நூல்களுல் ஒன்று பதிற்றுப்பத்து.
- சேர மன்னர்கள் பத்துப்பேரின் சிறப்புகளை எடுத்தியம்பும் இது 'பாடாண் திணை'யில் உள்ளது.
- சேர அரசர்கள் பத்துப் பேரை 10 புலவர்கள் தலா பத்துப்பாடல்கள் வீதம் பாடிய 100 பாடல்களின் தொகையே பதிற்றுப்பத்து ஆகும்.
- முதல் பத்தும் இறுதி பத்தும் கிடைக்கவில்லை.
- இதில் மொத்தமுள்ள 100 பாடல்களில் 80 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
- பதிற்றுப்பத்தை முதலில் பதிப்பித்தவர் – உ.வே.சாமிநாதர்
- இந்நூலுக்கு உரை எழுதியவர் – சு.துரைசாமிப்பிள்ளை
- ஒவ்வொரு பாடலின் பின்னும் துறை, வண்ணம், தூக்கு, பாடலின் பெயர் என்பவை இடம்பெற்றிருக்கின்றன.
- பாடலில் வரும் சிறந்த சொற்றொடர் பாடலுக்குத் தலைப்பாக தரப்பட்டிருக்கிறது.
- பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் 'இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்'
- இதனைப் பாடிய 'குமட்டூர்க் கண்ணனார் ', உம்பற்காட்டில் 500 ஊர்களையும் தென்னாட்டு வருவாயுள் பாதியையும் பரிசாகப் பெற்றார்.
- எட்டுத்தொகை நூல்களுல் ஒன்றான பதிற்றுப்பத்து புறம் சார்ந்த நூல் ஆகும். இது சேர மன்னர்கள் பதின்மரின் சிறப்புகளைக் கூறுகிறது.
- 'பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின் ' என்று பட்டிமன்றத்தைப் பற்றிக் கூறிய நூல் – 'மணிமேகலை'
வில்லிபாரதம் பற்றியக் குறிப்புகள்
மனோன்மணீயம்
இயக்குதற்கு இம்பம் பயக்கும் ஓர் இலக்கு
வேண்டும்; உய்ர்க்கு அது தூண்டுகோல் போலாம்
ஈண்டு எப்பொருள்தான் இலக்கற்று இருப்பது?
தோற்றுபே ரழகும் ஆற்றல்சால் அன்பும்
போற்றுதம் குறிப்பிற்கு ஏற்றதோர் முயற்சியும்
பார்த்து பார்த்துத் தம்கண் பனிப்ப,
ஆர்த்தெழும் அன்பினால் அனைத்தையுங் கலந்துதம்
என்பெலாம் கரைக்கும்நல் இன்பம் திளைப்பர்.'
என்ற பாடலடிகள் இடம் பெற்ற நூல் – மனோன்மணீயம்
மனோன்மணீயம் பற்றியக் குறிப்புகள்:
- மனோன்மணீயம் தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் ஆகும்.
- ' லிட்டன் பிரபு ' எழுதிய ' இரகசிய வழி (Thae Secret Way)' என்ற நூலைத் தழுவி 1891 ல் பேராசிரியர் சுந்தரனார் இதைத் தமிழில் எழுதியுள்ளார்.
- இஃது எளிய நடையில் ஆசிரியப்பாவால் அமைந்தது.
- மனோன்மணீயம் 5 அங்கங்களையும் 20 களங்களையும் கொண்டது.
- இந்நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துடன் தமிழ்த்தாய் வாழ்த்தும் இடம் பெற்றுள்ளது.
- மனோன்மணீயத்தில் உள்ள கிளைக்கதை – ' சிவகாமியின் சரிதம்'
- "நீராரும் கடலுடுத்த" எனத் தொடங்கும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் இடம்பெற்ற நூல் – மனோன்மணீயம்
- தமிழ்த்தாய் வாழ்த்து பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா என்ற பாவில் இயற்றப்பட்டுள்ளது.
- தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசை அமைத்தவர் – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.சுவாமிநாதன்
- பேராசிரியர் சுந்தரனார் திருவிதாங்கூரில் உள்ள ஆலப்புழையில் 1855 ல் பிறந்தார்.
- திருவனந்தபுரம் அரசுக் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
- சென்னை மாகாண அரசு இவருக்கு ' ராவ்பகதூர் ' என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.
- பேராசிரியர் சுந்தரனாருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தமிழக அரசு, இவர் பெயரால் திருநெல்வேலியில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவியுள்ளது.
தமிழ் நாடக இலக்கண நூல்கள் சில:
- அகத்தியம்
- குணநூல்
- கூத்தநூல்
- சந்தம்
- சயந்தம்
- செயன்முறை
- செயிற்றியம்
- முறுவல்
- மதிவாணனார் நாடக இலக்கண நூல்
- நாடகவியல்
தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்
மொழிகள் தொடர்பான செய்திகள்
- கலைகளின் உச்சம் கவிதை என்று கூறுவர்.
- இயன்றவரை பேசுவது போல் எழுதுவதுதான் உத்தமம் என்றும் அதுவே மானுடத்துக்கு செய்யும் கடமை என்றும் கூறியவர் – பாரதியார்.
- "மொழியென்ற ஒன்று பிறந்தவுடன் 'உலகம்' என்பதும் 'நான்' என்பதும் தனித்தனியாகப் பிரிந்து தங்களைத் தனித்துவமாக நிலைநிறுத்திக்கொள்கின்றன." என்று கூறியவர் – எர்னஸ்ட் காசிரர்.
- "ஒரு திரவ நிலையில் நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்ப்படிந்து நடந்து கொள்ளும் எனது மொழி, எழுத்து மொழியாகப் பதிவு செய்யப்படுகிற பொழுது உறைந்து போன பணிக்கட்டியைப் போன்ற திட நிலையை அடைந்து விடுகிறது. " என்று கூறியவர் – இந்திரன்.
- எழுத்து மொழியைக் காட்டிலும் பேச்சு மொழிக்கு உணர்ச்சிகள் அதிகம்.
- கவிஞர்கள் தங்களுடைய கவிதையை எதிரில் இருக்கும் வாசகனுடன் பேசுவது போல் அமைக்கின்றனர். இதனை அவர்கள் நேரடி மொழி என்று கூறுகின்றனர்.
- நேரடி மொழி எனப்படுவது – பேச்சுமொழி
- "நேரடி மொழி (அ) பேச்சு மொழிதான் ஒரு கவஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்த காலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது" என்று கூறியவர் – மலையாளக் கவி ஆற்றூர் ரவிவர்மா
- பேச்சு மொழியை கவிதைகளில் பயன்படுத்துபவர்களில் மூன்று வகையினர் உள்ளனர். அவற்றில் முதல் வகையினர் "வால்ட் விட்மனைப்" போன்றவர்கள்.
- வால்ட் விட்மன் அமெரிக்காவைச் சேர்ந்தவர்.
- கவிஞர்; இதழாளர் கட்டுரையாளர் எனப் பன்முகத்தன்மைக் கொண்டவர்.
- "புதுக்கவிதை இயக்கத்தை தோற்றுவித்தவர் – வால்ட் விட்மன்
- "புல்லின் இதழ்கள்" என்ற நூலை இயற்றியவர் – வால்ட் விட்மன்
- பேச்சு மொழியை கவிதைகளில் பயன்படுத்துபவர்களில் இரண்டாம் வகையினர் "கவிஞர் மல்லார்மே" போன்றவர்கள்.
- "ஸ்டெஃபான் மல்லார்மே" பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர். ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர்.
- "குறியீட்டியலின் தந்தை" என்று அழைக்கப்படுபவர் – "ஸ்டெஃபான் மல்லார்மே" இவரைப் புரிந்து கொள்வதன் மூலமே குறியீட்டியத்தையும் புரிந்து கொள்ள முடியும்.
- பேச்சு மொழியை கவிதைகளில் பயன்படுத்துபவர்களில் மூன்றாம் வகையினர் "பாப்லோ நெரூடா" போன்றவர்கள்.
- "பாப்லோ நெரூடா" தென் அமெரிக்காவிலுள்ள சிலி நாட்டில் பிறந்தவர். இலத்தீன் அமெரிக்காவின் மிகச் சிறந்த கவிஞர்.
- தன்னுடைய கவிதைகளுக்காக 1971 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் – "பாப்லோ நெரூடா"
- "தமிழின் கவிதையியல்" என்னும் நூலை இயற்றியவர் – "கா.சிவத்தம்பி"
கவிஞர் இந்திரன் பற்றியக் குறிப்புகள்
- இந்திரனின் இயற்பெயர் – இராசேந்திரன்
- இந்திரன் சிறந்த கலைவிமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர்.
- ஒரிய மொழிக் கவிஞர் "மனோரமா பிஸ்வாஸ்"ன் "பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்" என்னும் இவரின் மொழிபெயர்ப்பு நூலுக்காக 2011 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமியின் விருது பெற்றுள்ளார்.
- "முப்படை நகரம்", "சாம்பல் வார்த்தைகள்" உள்ளிட்ட கவிதை தொகுப்புகளை இயற்றியுள்ளார்.
- "தமிழ் அழகியல்", "நவீன ஓவியம்" உள்ளிட்ட கட்டுரை நூல்களைப் படைத்துள்ளார்.
- "வெளிச்சம்", "நுண்கலை" ஆகிய இதழ்களை நடத்தியுள்ளார்.
கவிஞர் சு.வில்வரத்தினம்
நெற்றி மண் அழகே!
வழி வழி நினதடி தொழுதவர்,
உழுதவர், விதைத்தவர்,
வியர்த்தவர்க்கெல்லாம்
நிறைமணி தந்தவளே!
உனக்குப்
பல்லாண்டு
பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு
பாடத்தான் வேண்டும்!
காற்றிலேறிக்
கனைகடலை, நெருப்பாற்றை,
மலைமுகடுகளைக் கடந்து
செல் எனச் செல்லுமோர் பாடலை
கபாடபுரங்களைக் காவுகொண்ட பின்னும்
காலத்தால் சாகாத தொல் கனிமங்களின்
உரமெலாம் சேரப்
பாடத்தான் வேண்டும்!
ஏடு தொடக்கி வைத்து என்னம்மை
மண்ணிலே தீட்டித்தீட்டி எழுதுவித்த
விரல்முனையைத் தீயிலே தோய்த்து
திசைகளின் சுவரெலாம்
எழுதத்தான் வேண்டும்
எழுகின்ற யுகத்தினோர் பாடலை"
என்று பாடி தமிழ் மொழியை வாழ்த்தியவர் – "சு.வில்வரத்தினம்"
- யாழ்ப்பானத்தில் உள்ள புங்குடுத் தீவில் பிறந்தவர்.
- சு.வில்வரத்தினத்தின் கவிதைகள் மொத்தமாக "உயிர்த்தெழும் காலத்துக்காக" என்ற தலைப்பில் 2001-ல் தொகுக்கப்பட்டது.
- "தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாதா மரம்; கூடில்லாத பறவை" என்று கூறியவர் – "இரசூல் கம்சதோவ்"
எழுத்தாளர் அ.முத்துலிங்கம் பற்றியக் குறிப்புகள்
அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைத் தொகுப்புகள்:
- அக்கா
- மகாராஜாவின் இரயில் வண்டி
- திகட சக்கரம்
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் பற்றியக் குறிப்புகள்
- தமிழ் இலக்கிய வரலாற்றில் "புலமைக் கதிரவன்" என்று அழைக்கப்படுபவர் – மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் ஆவார்.
- திருச்சிராப்பாள்ளி அருகில் உள்ள "அதவத்தூர்" என்னும் ஊரில் பிறந்தார்.
- திருவாடுதுறை மடத்தின் தலைமைப் புலவராக விளங்கினார்.
- திருவாடுதுறை மடத்தின் தலைவர் சுப்பிரமணிய தேசிகர், சென்னைத் தாண்டவராயர், திருத்தணிகை விசாகப் பெருமாள் ஆகியோரிடம் பாடம் கற்றார்.
- "சேக்கிழார் பிள்ளைத்தமிழ்" என்னும் நூலை இயற்றியுள்ளார். தல புராணங்கள் பாடுவதில் சிறந்தவர்.
- "யமக அந்தாதி", "திரிபந்தாதி", "வெண்பா அந்தாதிகள்" ஆகியவற்றை உருவாக்கி புகழ் பெற்றார்.
- மாலை, கோவை, கலம்பகம், பிள்ளைத்தமிழ் ஆகியவற்றைப் பாடி பெருமை அடைந்தார்.
- "உ.வே.சாமிநாதர்", "தியாகராசர்", "குலாம்காதிறு நாவலர்" போன்றோர் இவரின் மாணவர்கள்.
- " நோய்க்கு மருந்து இலக்கியம்" என்று கூறியவர் – மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்.
தமிழின் சிறப்புகள்
- "இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்" என்று கூறும் நூல் – "பிங்கல நிகண்டு"
- "தமிழ்" என்னும் சொல்லை "இனிமை", "பண்பாடு", "அகப்பொருள்" என்னும் பொருள்களிலும் வழங்கியுள்ளனர்.
- "தமிழ் தழீஇய சாயலவர்" என்று கூறியவர் – கம்பர். இந்த இடத்தில் "தமிழ்" என்பதற்கு அழகும் மென்மையும் பொருளாகின்றன.
- "அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்" என்ற புறநானூற்றுப் பாடலில் "தமிழ்' என்னும் சொல் மொழி, கவிதை என்பவற்றைத் தாண்டிப் "பல்கலைப் புலமை" என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது.
- தேவாரம் போன்ற பக்தி இலக்கியங்களில் "தமிழ்", "பாட்டு" என்னும் பொருளில் ஆளப்படுகிறது.
- "தமிழ் இவை பத்துமே" என்று கூறியவர் – திருஞானசம்பந்தர்
- "மூவாயிரம் தமிழ்" எனப்படுகின்ற திருமந்திரத்தை இயற்றியவர் – "திருமூலர்"
- "தமிழ்மாலை" என்று அழைக்கப்படுவது – திருப்ப்பாவை.
- திருப்பாவையை இயற்றியவர் – "ஆண்டாள்".
- திருப்பாவை 30 பாட்டுக்களால் ஆனது.
- "பண்பாட்டு அசைவுகள்" என்னும் நூலை எழுதியவர் – "தொ.பரமசிவன்"
நூல்களும் ஆசிரியர்களும்:
- நாடற்றவன் – அ.முத்துலிங்கம்
- நல்ல தமிழ் எழுத வேண்டுமா? – அ.கி.பரந்தாமனார்
- உயிர்த்தெழும் காலத்துக்காக – சு.வில்வரத்தினம்
- ஆறாம் திணை – அ.முத்துலிங்கம்
- யுகத்தின் பாடல் – சு.வில்வரத்தினம்
- நன்னூல் – பவணந்தி முனிவர்
- பேச்சு மொழியும் எழுத்து மொழியும் – இந்திரன்
அழகிய பெரியவன் பற்றியக் குறிப்புகள்
- அழகிய பெரியவனின் இயற்பெயர் – அரவிந்தன்
- இவர் வேலூர் மாவட்டம் பேரணாம்பேட்டையைச் சேர்ந்தவர்.
- "தகப்பன் கொடி" என்னும் புதினத்திற்காக 2003 ஆம் ஆண்டில் தமிழக அரசின் விருது பெற்றவர்.
- அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.
- "குறடு", "நெரிக்கட்டு" போன்ற சிறுகதைத்தொகுப்புகளை இயற்றியுள்ளார்.
- "உனக்கும் எனக்குமான சொல்", "அரூப நெஞ்சு" ஆகிய கவிதைத் தொகுப்புகளை இயற்றியுள்ளார்.
- "மீள் கோணம்", "பெருகும் வேட்கை" உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகலையும் இயற்றியுள்ளார்.
ஜெயமோகன்
ஆபிரகாம் பண்டிதர் பற்றியக் குறிப்புகள்
வெள்ளியோடம்போல வரும் வெண்ணிலாவே
வளர்ந்துவளர்ந்து வந்த வெண்ணிலாவே! மீண்டும்
வாடிவாடிப் போவதேனோ? வெண்ணிலாவே!
கூகை ஆந்தைபோல நீயும் வெண்ணிலாவே! பகல்
கூட்டினில் உறங்குவாயோ? வெண்ணிலாவே!
பந்தடிப்போம் உன்னையென்று வெண்ணிலாவே! நீயும்
பாரில் வர அஞ்சினையோ? வெண்ணிலாவே!"
என்று பாடியவர் – "கவிமணி தேசிக விநாயகம்"
நூல்களும் ஆசிரியர்களும்:
- இயற்கை வேளாண்மை – நம்மாழ்வார்
- பனைமரமே பனைமரமே – ஆ.சிவசுப்பிரமணியன்
- பறவைகள் உலகம் – சலீம் அலி
சென்னிகுளம் அண்ணாமலையார் பற்றியக் குறிப்புகள்
அண்ணாமலையார் இயற்றிய வேறு சில நூல்கள்:
- வீரைத் தலபுராணம்
- வீரை நவநீத கிருஷ்ணசாமி பதிகம்
- சங்கரன்கோவில் திரிபந்தாதி
- கருவை மும்மணிக்கோவை
- கோமதி அந்தாதி
எழுத்தாளர் சி.சு.செல்லப்பா பற்றியக் குறிப்புகள்
சி.சு.செல்லப்பாவின் படைப்புகள்:
- வாடிவாசல்
- சுதந்திர தாகம்
- ஜீவனாம்சம்
- பி.எஸ்.ராமையாவின் சிறுகதைப் பாணி
- தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது
சி.வை.தாமோதரனார் பற்றியக் குறிப்புகள்
நூல்களும் ஆசிரியர்களும்:
- சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் – ஆர்.பாலகிருஷ்ணன்
- காவடிச் சிந்து – அண்ணாமலையார்
- வாடிவாசல் – சி.சு.செல்லப்பா
- எழுத்து இதழ்த் தொகுப்பு – தொகுப்பசிரியர் – கி.அ. சச்சிதானந்தன்.
எழுத்தாளர் சுஜாதா பற்றியக் குறிப்புகள்
- சுஜாதாவின் இயற்பெயர் – ரங்கராஜன்
- அறிவியல், புனைகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், திரைப்படம் என்று இவருடைய படைப்புகளின் பரப்பு விரிவானது.
- "கணிப்பொறியின் கதை", "சிலிக்கன் சில்லுப்புரட்சி", "அடுத்த நூற்றாண்டு" ஆகியவை இவருடைய புகழ்பெற்ற அறிவியல் நூல்கள் ஆகும்.
- அறிவியலை எளிய தமிழில் ஊடகங்களில் பரப்பியதற்காக, மத்திய அரசின் விருது பெற்றவர்.
இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவுக் கருவியைக் கொண்டு வந்ததில் சுஜாதாவின் பங்களிப்பு மிகுதி.
மீரா பற்றியக் குறிப்புகள்
- இவரது இயற்பெயர் மீ.ராசேந்திரன்
- இவர் மரபுக்கவிதை, புதுக்கவிதை ஆகிய இரு தளங்களிலும் பரவலாக அறியப்பட்டவர்.
- மீரா சிவகங்கை அரசுக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்
- இவரின் "ஊசிகள்", "கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் " போன்ற கவிதை நூல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றவை.
- மீரா "அன்னம் விடு தூது", "கவி" ஆகிய இதழ்களை நடத்தியுள்ளார்.
- தில்லி வானொலி நிலையம் உருது மொழியில் "முஷைரா" என்னும் கவியரங்கத்தை முதன் முறையாக ஒலிபரப்பியது.
- தமிழிலும் கவிதைகளை ஒலிபரப்ப வேண்டும் என்ற நோக்கில் 'சிட்டி'யும் (சுந்தரராஜன்) சோமுவும் (மீ.ப.சோமசுந்தரம்) "கவியரங்கம்" என்று பெயரிட்டு ஒரு நிகழ்ச்சியை நடத்தினர்.
- "எழில்" என்னும் தலைப்பில் நடந்த இக்கவியரங்கமே தமிழ்நாட்டில் நடந்த முதல் கவியரங்கம் ஆகும்.
பெ.நா.அப்புசாமி பற்றியக் குறிப்புகள்
- இவர் தமிழ்நாட்டில் நெல்லை எனப்படும் திருநெல்வேலி மாவட்டத்தில் பெருங்குளத்தில் பிறந்தார்.
- "அறிவியல் தமிழர்" என்று போற்றப்படுகிறார்.
- "அறிவியல் தமிழின் முன்னோடி" எனப் போற்றப்பட்டார்.
- தமிழில் வந்த முதல் அறிவியல் இதழ் – "தமிழர் நேசன்" . இதில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.
- "பொங்கியெழு கேணி (Artesian well)", "நுண்துகள் கொள்கை (corpuscullur Theory)", "அறிவுக்குறி எண் (intellegent quotient)" நல்ல தமிழ்த் தொடர்கள் இவர் உருவாக்கியவை.
- "பேனா" என்ற புனைப்பெயரில் பல நூல்களை எழுதியுள்ளார்.
- 25 அறிவியல் நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
- பாரதியார் கவிதைகள், சங்கப்பாடல்கள் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
- இவருடைய பணிகளைப் பாராட்டி மதுரைப் பல்கலைக்கழகம் இவருக்கு "தமிழ்ப் பேரவைச் செம்மல்" என்ற பட்டத்தை வழங்கியது.
அடிவான முகில்கள் ஓடிப்
பாய்கதிர் ஓளிம றைக்கும்!
பலமலை குன்றைச் சுற்றிப்
போய்விழும் ஓடைபோலத்
தோன்றிடும்; புதுவெள் ளத்தில்
மாய்கதிர் செக்கர் வானம்
எழிலோவி யம்பார் தம்பி!
களிமயில் அகவும்; புள்ளிக்
கருங்குயில் பாட்டி சைக்கும்
விளித்திடும் துணைபி ரிந்த
புள்ளினம்; விளாம ரத்தில்
ஒளித்துண்ணும் அணிலோ, கிள்ளை
ஒளிமூக்கை மிளகா யென்று
களித்துண்ணப் பாயும்; காட்டில்
கான்எழில் ஓவி யத்தை!"
என்ற பாடலை இயற்றியவர் – "வாணிதாசன்"
நூல்களும் ஆசிரியர்களும்:
- அக்னிச்சிறகுகள் – அப்துல் கலாம்
- அறிவியல் தமிழ் – வா.செ.குழந்தைசாமி
- கணினியை விஞ்சும் மனித மூளை – கா.விசயரத்தினம்
இந்தப் பள்ளிக்கூடம்
மிகவும் பிடித்துப் போய்விட்டது
தாய்மொழியிலே பயின்று
யாதும் ஊரென
உலகின் உறவாகவே
விரும்புகிறேன் நான்"
என்ற கவிதையை இயற்றியவர் – "இரா.மீனாட்சி"
இரா.மீனாட்சி அவர்களின் கவிதைத் தொகுப்புகள்:
- நெருஞ்சி
- சுடுபூக்கள்
- தீபாவளிப்பகல்
- மறு பயணம்
- வாசனைப்புல்
- உதயநகரிலிருந்து
- கொடிவிளக்கு
பாரதியார்
- தமிழ் இதழ்களில் தமிழ் ஆண்டு, திங்கள், நாள் ஆகியவற்றை முதன் முதலாகக் குறித்தவர் – பாரதியார்
- பெண் விடுதலைக்காக பாடுபட்ட பாரதி பெண்களுக்காகத் தமது "சக்ரவர்த்தினி" இதழில் குறள் வெண்பா எழுதியுள்ளார்.
- பெண் விடுதலைக்காக பாரதி எழுதிய குறள் வெண்பா: "பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மை யுறஓங்கும் உலகு"
- பாரதி சிவப்பு வண்ணத்தாளில் வெளியிட்ட இதழ் – இந்தியா
- சிவப்பு வண்ணம் புரட்சியையும் விடுதலையையும் குறிப்பது என்பதால் அடிமைத்தளையில் இருந்து இந்தியாவை விடுவிக்க வேண்டும் என்ற எண்ணம் பாரதியின் "இந்தியா" இதழின் வண்ணத்திலும் வெளிப்பட்டது.
- "கூடியவரை பேசுவதுபோலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்னுடைய கட்சி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம், எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்துவிட்டால் நல்லது." என்று கூறியவர் – பாரதியார்.
- பாரதி தம் மனைவி செல்லம்மாவை "கண்ணம்மா", "வள்ளி" என்ற புனைப்பெயர்களில் குறிப்பிட்டிருப்பார்.
- தமிழ் இதழ்களில் தமிழில் தலைப்பிடுவதற்கு முன்னோடியாக இருந்தவர் – பாரதியார்.
- தமிழ் இதழ்களில் ஆங்கிலத் தலைப்பு வைப்பதை சுதேசமித்திரனில் சாடி எழுதினார்.
- இதழ்களில் தலைப்பிடலை "மகுடமிடல்" என்று பாரதியார் கூறுகிறார்.
- "பாரதியைப் பற்றி நண்பர்கள்" என்ற நூலை எழுதியவர் – ரா.அ.பத்மநாபன்
- பாரதி அடிக்கடி குறிப்பிடும் பெண் தெய்வம் – ஓம் சக்தி
பாரதியின் இதழ்ப்பணி:
பாரதியார் ஆசிரியராகவும், துணையாசிரியராகவும் பணியாற்றிய இதழ்கள்:
- சுதேசமித்திரன்
- சக்ரவர்த்தினி
- இந்தியா
- பால பாரதி அல்லது யங் இந்தியா
- விஜயா
- சூர்யோதயம்
- கர்மயோகி
பாரதி தம் படைப்புகளை வெளியிட்டுள்ள இதழ்கள்:
- சர்வஜன மித்திரன்
- ஞானபானு
- காமன் வீல்
- கலைமகள்
- தேசபக்தன்
- கதாரத்னாகரம்
பாரதியார் தம் படைப்புகளை வெளியிட்ட புனைப்பெயர்கள்:
- இளசை சுப்ரமணியன்
- சாவித்திரி
- சி.சு.பாரதி
- வேதாந்தி
- நித்திய தீரர்
- உத்தமத் தேசாபிமானி
- ஷெல்லிதாசன்
- காளிதாசன்
- சக்திதாசன்
- ரிஷிகுமாரன்
- காசி
- சரஸ்வதி
- பிஞ்சுக்காளிதாசன்
- செல்லம்மா
- கிருஷ்ணன்
பாரதியாரிடம் துணையாசிரியராகப் பணியாற்றியவர்கள்:
- பி.பி.சுப்பையா
- ஹரிஹரர்
- என்.நாகசாமி
- வ.ராமசாமி
- பரலி.சு.நெல்லையப்பர்
- கனகலிங்கம்
ஜி.யு.போப் பற்றியக் குறிப்புகள்
- ஜி.யு.போப் பிறந்த ஆண்டு – 1820
- "செந்தமிழ் செம்மல்" என்று அழைக்கப்பட்டார்.
- இவர் 1839 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவுக்கு வந்தார்.
- சென்னையில், "சாந்தோம்" என்ற இடத்தில் முதன்முதலாகத் தமிழ் உரையைப் படித்துச் சொற்பொழிவாற்றினார்.
- "திருக்குறள்", "திருவாசகம்" ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
- ஜி.யு.போப் அவர்கள் தஞ்சாவூரில் வாழ்ந்த போது, தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் தெளிவுற அறிந்தார். அப்போதுதான் தொல்காப்பியம், நன்னூல் முதலிய பேரிலக்கண நூல்களைப் பாடசாலை மாணவர் படிப்பது எளிதன்று என்பதைக் கண்டு, சிறிய தமிழ் இலக்கண நூல்கள் சிலவற்றை எழுதி வெளியிட்டார்.
- ஆங்கில மொழியில் எழுதப் பெற்றிருந்த தமிழ்நாட்டு வரலாற்றை, தமிழில் எழுதிப் பதிப்பித்தார்.
- ஜி.யு.போப் மறைந்த ஆண்டு – 1908
- சீனர்களது பிரதான சிகிச்சை முறை – "தீய்த்தல்"
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக்குள்ளே சிலமூடர் – நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்.
கண்கள் இரண்டினில் ஒன்றைக் – குத்தி
காட்சி கொடுத்திட லாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் – வையம்
பேதமை யற்றிடும் காணீர்"
– என்ற பெண்விடுதலைப் பாடலைப் பாடியவர் – "பாரதியார் ".
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
- 18 ஆம் நூற்றாண்டின் புதுவை வரலாற்றினை அறிந்து கொள்ள உதவும் நூல் – ஆனந்தரங்கம் நாட்குறிப்பு.
- நாட்குறிப்பு என்பது தனிமனிதர் ஒருவரின் அன்றாட நிகழ்வுகளை அல்லது பணிகளைப் பதிவு செய்யும் ஏடாகும்.
- நாட்குறிப்பு என்பதனை ஆங்கிலத்தில் "டைரி" என்று அழைப்பர். "டைரியம்" என்னும் இலத்தீன் சொல்லின் மூலமான 'டைஸ்' என்ற சொல்லில் இருந்து இச்சொல் உருவாயிற்று.
- நாட்குறிப்புகளின் முன்னோடியாகத் திகழ்வது EPHEMERIDES என்று அழைக்கப்படும் கிரேக்கக் குறியீடு ஆகும். இச்சொல் ஒரு நாளுக்கான முடிவு என்னும் பொருளைத் தரும்.
- முகலாய மன்னர்களில் பாபர் காலம் முதல் நாட்குறிப்பு எழுதும் வழக்கம் இருந்து வந்துள்ளது. ஔரங்கசீப் ஆட்சிக் காலத்தில் நாட்குறிப்பு எழுதுவது தடை செய்யப்பட்டிருந்தது.
- 1498-ல் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்குக் கடல்வழியைக் கண்டுபிடித்த போர்ச்சுக்கீசிய மாலுமி "வாஸ்கோடகாமா" நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உள்ளவர். அவருடைய நாட்குறிப்புகள் "ஆல்வாரோ வெல்லோ" என்பவரால் பதிவு செய்யப்பட்டன.
- ஆனந்தரங்கர் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
- பிரெஞ்சுக் கிழக்கிந்திய உரைபெயர்ப்பாளராகவும் "துய்ப்ளே" என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கினார்.
- ஆனந்தரங்கரின் நாட்குறிப்புகள் 25 ஆண்டு காலத் தென்னிந்திய வரலாற்றை வெளிப்படுத்துவதோடு, அக்காலத்திய பிரஞ்சு அரசு பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்று ஆவணமாகவும் இலக்கியமாகவும் திகழ்கின்றன.
- ஆனந்தரங்கர் 1709 மார்ச் 30ல் சென்னையிலுள்ள பெரம்பூரில் பிறந்தார்.
- ஆனந்தரங்கர் பிரெஞ்சு ஆளுநர் துய்ப்ளே காலத்தில் தலைமைத் துவிபாஷி யாகப் பணியாற்றினார்.
- அனந்தரங்கர் தம்முடைய நாட்குறிப்பில் ஒவ்வொரு நாள் நிகழ்வுக்கும் ஆண்டு, திங்கள், நாள், கிழமை, அந்த நாளின் நேரம், நிகழ்விடம் ஆகியவற்றைக் குறிப்பிட்டே செய்திகளை எழுதியுள்ளார்.
- ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் 12 தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
- இவருடைய நாட்குறிப்பில் பிரெஞ்சு ஆளுநர் "டூமாஸ்" நாணய அச்சடிப்பு உரிமையைப் பெற்றதை விளக்குகிறது. இந்த உரிமையைப் பெறுவதற்காக ஆளுநர் செலவளித்த பெருந்தொகையையும் ஆனந்தரங்கர் குறிப்பிட்டுள்ளார்.
- பிரெஞ்சுக் கப்பல் தளபதி "லெபூர்தொனே" ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்த சென்னையை, 1746-ல் கைப்பற்றியதையும் அதனால் சினமுற்ற ஆற்காடு நவாப் அன்வர்தீன்கானின் மூத்த மகன் மகபூஸ்கான் பிரெஞ்சு அரசை எதிர்த்துப் போரிட்டதையும் நேரில் கண்டு உரைப்பது போல் நாட்குறிப்பில் ஆனந்தரங்கர் கூறியுள்ளார்.
- ஆம்பூர் போர் பற்றிய செய்திகள்,தஞ்சைக் கோட்டை மீது நடத்திய முற்றுகை, இராபர்ட் கிளைவின் படையெடுப்பு, ஆங்கிலேயர் புதுச்சேரியை முற்றுகை இட்டது முதலியவற்றை எல்லாம் வரலாற்று ஆசிரியர் போன்று ஆனந்தரங்கர் தம் நாட்குறிப்பில் விலக்கிக் கூறியுள்ளார்.
- 1758 ஆம் ஆண்டு சென்னை கோட்டை முற்றுக்கையை லல்லி என்பார் தொடங்கியுள்ளார்.
- "உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை " என அழைக்கப்படுபவர் – "சாமுவேல் பெப்பிசு".
- ஆங்கிலேயக் கடற்படையில் பணியாற்றிய இவர் இரண்டாம் சார்லஸ் மன்னர் காலத்து நிகழ்வுகளை (1660 – 1669) நாட்குறிப்பாக பதிவு செய்துள்ளார். இவரை போன்றே ஆனந்தரங்கரும் 06.09.1736 முதல் 11.01.1761 வரை நாட்குறிப்பு எழுதியுள்ளார். இந்நாட்குறிப்பு இந்தியாவின் முதன்மையான நாட்குறிப்பு ஆகும்.
- இதனால் ஆனந்தரங்கர் "இந்தியாவின் பெப்பிசு" என்று அழைக்கப்படுகிறார்.
- ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் பெரும்பகுதி வணிகச் செய்திகளையே விவரித்துள்ளது.
- புதுச்சேரியிலிருந்து மணிலாவுக்குச் சென்ற கப்பலில் அழகப்பன் என்ற தமிழ் மாலுமி பணியாற்றியதை ஆனந்தரங்கர் தம் நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார்.
- ஐரோப்பாவிலிருந்து இந்தியாவை அடையக் கப்பல்களுக்கு ஆறு திங்கள் தேவைப்பட்டன என்று ஆனந்தரங்கர் தம் நாட்குறிப்பில் கூறியுள்ளார்.
ஆனந்தரங்கர் காலத்தில் வழக்கில் இருந்த நாணயங்கள்:
- 480 காசு – ஒரு ரூபாய்
- 60 காசு – 1 பணம்
- 8 பணம் – 1 ரூபாய்
- 24 பணம் – ஒரு வராகன்
- 1 பொன் – 1/2 வராகன்
- 1 வராகன் – 3 அல்லது 2 ரூபாய்
- 1 மோகரி – 14 ரூபாய் மதிப்புள்ள தங்க நாணயம்
- 1 சக்கரம் – 1/2 வராகனுக்கும் கூடுதல் மதிப்புள்ள தங்க நாணயம்
ஆனந்தரங்கர் நாட்குறிப்புக் குறித்து உ.வே.சா:
ஆனந்தரங்கர் நாட்குறிப்புக் குறித்து வ.வே.சுப்ரமணியர்:
ஆனந்தரங்கர் பற்றிய நூல்கள் சில:
- ஆனந்தரங்கன் கோவை – தியாகராய தேசிகர்
- ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ் – புலவரேறு அரிமதி தென்னகன்
- வானம் வசப்படும் – பிரபஞ்சன்
பிரபஞ்சன் பற்றியக் குறிப்புகள்
- எழுத்தாளர் பிரபஞ்சனின் இயற்பெயர் – வைத்தியலிங்கம்.
- இவர் புதுச்சேரியை சேர்ந்தவர்.
- இவர் சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை என்று இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர்.
- 1995-ல் இவருடைய வரலாற்றுப் புதினமான "வானம் வசப்படும்" சாகித்திய அகாதமி விருது பெற்றது.
- இவருடைய படைப்புகள் தெலுங்கு, கன்னடம், இந்தி, பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
- "இந்த உலகமே நாடக மேடை;அதில் அனைத்து ஆண்களும் பெண்களும் வெறும் நடிகர்களே, ஒவ்வொருவருக்கும் அறிமுகமும் முடிவும் உண்டு.
- "ஒருவருக்கே பல வேடங்களும் உண்டு." என்ற கருத்தைக் கூறியவர் – "ஷேக்ஸ்பியர் "
நூல்களும் ஆசிரியர்களும்:
- மறைக்கப்பட்ட இந்தியா – எஸ்.இராமகிருஷ்ணன்
- "பிம்பம்" என்னும் சிறுகதையின் ஆசிரியர் – "பிரபஞ்சன்"
கவிஞர் வாணிதாசன் பற்றியக் குறிப்புகள்
- வாணிதாசன் பிறந்த ஆண்டு – 1910
- இவரது இயற்பெயர் – எத்திராஜ் அரங்கசாமி
- இவர் பாரதிதாசன் பரம்பரையினர்
- "கவிஞரேறு" என்ற பட்டம் பெற்றவர்
- தமிழ்நாட்டின் "வோர்ட்ஸ்வொர்த்" எனப் பாராட்டப்பட்டவர்
- பிரெஞ்சு அரசின் "செவாலியே" விருதுப் பெற்றவர்
- வாணிதாசன் எழுதியது – தமிழச்சி
- பாரதிதாசன் எழுதியது – தமிழச்சியின் கத்தி
வாணிதாசன் இயற்றிய நூல்கள்:
- தமிழச்சி
- கொடிமுல்லை
- எழிலோவியம்
- தீர்த்தயாத்திரை
- இன்ப இலக்கியம்
- பொங்கல் பரிசு
- இரவு வரவில்லை
- சிரித்த நுணா
- இனிக்கும் பாட்டு
- எழில் விருத்தம்
- குழந்தை இலக்கியம்
- தொடுவானம்
கவிஞர் தமிழ்ஒளி இயற்றிய நூல்கள்:
- நிலைபெற்ற சிலை
- வீராயி
- கவிஞனின் காதல்
- சோலைக் குமரி
- கண்ணப்பன் கிளிகள்
- பாப்பாப் பாட்டு
தமிழரின் கட்டுமானக் கலைகள்
- தஞ்சை பெரிய கோவிலின் கோபுரங்களில் உயரமானது "கேரளந்தகன் கோபுரம்". இராசராசன் 988 ஆம் ஆண்டு சேரநாட்டை வெற்றிகொண்டதைப் போற்றும் வகையில் இக்கோபுரத்திற்குக் "கேரளாந்தகன் வாயில் கோபுரம்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
- கோயிலின் வாயில்களின் மீது அமைக்கப்படுவது – கோபுரம்
- கோயில்களில்" கருவறை அன்றழைக்கப்படும் அகநாழிகை" மீது அமைக்கப்படுவது – விமானம்
- "அகநாழிகை" என்று அழைக்கப்படுவது – கோபுரம்
- நம் நாட்டில் உள்ள கற்றளிக் கோவில்களிலேயே பெரியதும் உயரமானதுமான கோவில் – " தஞ்சைப் பெரிய கோவில்"
- தஞ்சைப் பெரிய கோவில் இராசராச சோழனால் " ஆறு ஆண்டுகள்" முயன்று இது கட்டி முடிக்கப்பட்டது.
- இராஜராஜ சோழனால் "தட்சிண மேரு " என்று அழைக்கப்பட்டது – தஞ்சைப் பெரிய கோவில்
- தஞ்சைப் பெரிய கோவிலின் விமானம் 216 அடி உயரம் உடையது.
- தஞ்சைப் பெரிய கோவிலின் கருவறை விமானம் 13 தளங்களை உடையது.
- செங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டுவது போல, கருங்கற்களை அடுக்கிக் கட்டுவதற்குக் "கற்றளி" என்று பெயர். அவ்வாறு கருங்கற்களை அடுக்கிக் கட்டப்படும் கோவில்கள் "கற்றளிக் கோவில்கள்" எனப்படும்.
- "கற்றளி கோவில்கள்" என்னும் வடிவத்தை உருவாக்கியவர் – இரண்டாம் நரசிம்ம வர்மன் என்னும் பல்லவ மன்னன் (ஏழம் நூற்றாண்டு)
- "கற்றளி கோவில்கள்" என்னும் வடிவம் உருவாக்கப்பட்ட காலம் – 7 ஆம் நூற்றாண்டு
- "மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்", " காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் ", "பனைமலைக் கோவில்" ஆகியவை கற்றளிக் கோவில்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
- 11 ஆம் நூற்றாண்டில்ல் ஆட்சிப் புரிந்த முதலாம் இராசராச சோழன் தஞ்சைப் பெரிய கோவிலை 1003 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு வரை கட்டினான்
- 2010 ஆம் ஆண்டு தஞ்சைப் பெரிய கோவிலின் 1000வது ஆண்டு நிறைவடைந்தது.
- தொடக்கத்தில் கோவில்கள் மண்னால் கட்டி, மேலே மரத்தால் சட்டகமிட்டார்கள். தில்லைக் கோவில், குற்றாலநாதர் கோவில் ஆகியவை அவ்வாறு கட்டப்பட்டவை. அதன் மேல் செப்பு, பொன் தகடுகளால் கூரை வேய்ந்தார்கள்.
- அடுத்த நிலையில் செங்கற்களை அடுக்கிக் கோவில் கட்டினார்கள். அந்த வகையில் "சோழன் செங்கணான்" 78 கோவில்களைக் கட்டியிருப்பதாகத் திருநாவுக்கரசர் தம் பதிகமொன்றில் கூறியுள்ளார்.
- கோவில்கள் மக்கள் ஒன்று கூடும் இடமாகவும், பஞ்ச காலத்தில் மக்களுக்கான தானியக் கிடங்காகவும், கருவூலமாகவும், மருத்துவமனையாகவும், படை வீரர்கள் தங்கும் இடமாகவும் திகழ்ந்தது.
- செங்கல், சுண்ணம், மரம், உலோகம் முதலியவை இல்லாமலே பிரம்மா, சிவன், விஷ்ணுவுக்கு "விசித்திர சித்தன்" என்று அழைக்கப்பட்ட "முதலாம் மகேந்திரவர்மப் பல்லவன்" குடைவரைக் கோவில்கள் அமைத்ததாக " மண்டகப்பட்டுக் கல்வெட்டு " கூறுகின்றது.
- காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர் – "இராசசிம்மன்"
- "இராசசிம்மேச்சுரம்" என்றழைக்கப்பட்ட கோவில் – காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில். இக்கோவிலே இராஜராஜனுக்கு அதுபோன்றதொரு பெரிய கோவிலைக் கட்ட வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டியது.
- இந்தியக் கட்டடக் கலைப்பாணியை "நாகரம்", " வேசரம்", " திராவிடம் " என்று மூன்றாகக் கூறுவர்.
- தஞ்சைப் பெரிய கோவில் "எண்பட்டை வடிவில் கட்டப்பட்ட திராவிடக் கலைப்பாணி"யைச் சார்ந்தது.
- "கட்டடக்கலை என்பது உறைந்து போன இசை" என்று கூறியவர் – "பிரடிரிகா வொன்ஸ்லீவிங்"
- 1886 ஆம் ஆண்டு ஜெர்மனி அறிஞர் " ஷூல்ஸ்" ஆறு ஆண்டுகள் தீவிரமாக கல்வெட்டுகளைப் படியெடுத்து வாசித்து தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவர் "இராஜராஜ சோழன்" என்று உறுதி செய்தார்.
- தஞ்சைப் பெரிய கோவிலில் ஓவியங்கள் காணப்பட்டதை 1930 ஆம் ஆண்டில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிந்த " எஸ்.கே.கோவிந்தசாமி" என்பவர் கண்டறிந்தார்.
- சோழர் கால ஓவியங்கள் மீதே நாயக்கர் ஆட்சியில் ஓவியங்கள் வரைந்திருந்ததை அறிந்து அதனை வெளியுலகத்துக்குத் தெரியப்படுத்தியவர் – "ஃபிரெஸ்கோ"
ஃபிரஸ்கோ ஓவியங்கள்:
- 12 ஆம் நூற்றாண்டிலிருந்து கோபுரங்கள் தனிச்சிறப்புப் பெற்றன.
- வெளிக்கோபுரத்தை உயரமாகவும் உட்கோபுரத்தை உயரம் குறைவாகவும் இரண்டு கோபுரங்கலைக் கட்டும் புதிய மரபைத் தோற்றுவித்தவன் – இராஜராஜ சோழன். அதனைத் "திருவாயில்" என்று கூறுவார்கள். கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், திரிபுவனம் ஆகிய இடங்களில் இரண்டு வாயில்கள் உள்ளன.
- நான்கு புறங்களிலும் நான்கு கோபுரங்கள் எழுப்பப் பெறும் மரபு, "இரண்டாம் குலோத்துங்கச் சோழன் " காலத்திலிருந்து தொடங்கியது.
- புகழ்பெற்ற கோவில்கள் பலவற்றிலும் மிகவுயர்ந்த கோபுரத்தை எழுப்பியது – விஜயநகர அரசு.
- காஞ்சி, தில்லை, திருவண்ணாமலை, திருவரங்கம், மதுரை ஆகிய இடங்களில் உள்ள கோவில்களில் உள்ள கோபுரங்கள் எல்லாமே 150 அடிக்கு மேல் உயரம் கொண்டவை.
- இராஜராஜனின் பட்டத்தரசி "ஒலோகமாதேவி" திருவையாற்றில் கட்டிய கோவில் "ஒலோகமாதேவீச்சுரம்" என்று வழங்கப்படும்.
கீழ்பாகுதியை கல்லாலும், மேற்பகுதியை செங்கற்களாலும் கட்டியிருப்பர்.
கோவலூர் உடையான் காடன்
நூற்றென்மரையும் அதிகாரிச்சி
எருதந் குஞ்சர மல்லியையும்"
என்ற வரிகளில் "எருதந் குஞ்சர மல்லி" என்ற பெண் அதிகாரியைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய தச்சர்களின் பெயர்கள்:
- வீரசோழன் குஞ்சரமல்லன் இராசராசப் பெருந்தச்சன்
- மதுராந்தகனான நித்தவினோதப் பெருந்தச்சன்
- இலத்திசடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன்
"நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்தக் கல்லிலே வெட்டி அருள்க" என்று கோவில் கட்ட உதவியவர்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.
ஆத்மாநாம் பற்றியக் குறிப்புகள்
- கவிதை என்ற கலை வடிவத்தின் அழகியல் ஊடாக மானுடத்தின் விழுமியங்களை உரத்த குரலில் பேசியவர் – ஆத்மாநாம்
- கவிதை பாடுதலை சமூக அக்கறையாக மாற்றிக் கொண்டவர் – ஆத்மாநாம்
- அணிலையும் புளியமரத்தையும் காட்சிப்படுத்தி கவிதை வடிவில் உரையாடியவர் – ஆத்மாநாம்
- ஆத்மாநாம் அவர்களின் இயற்பெயர் – "மதுசூதனன்"
- ஆத்மாநாம் அவர்களின் முக்கியமான கவிதைத் தொகுப்பு – "காகிதத்தில் ஒரு கோடு"
- "ழ" என்ற சிற்றிதழை நடத்தியவர் – ஆத்மாநாம்
- ஆத்மாநாம் அவர்களின் கவிதைகள் " ஆத்மாநாம் கவிதைகள்" என்னும் பெயரில் ஒரே தொகுப்பாக வெளிவந்துள்ளன.
சங்கரதாசு சுவாமிகள் பற்றியக் குறிப்புகள்
- சங்கரதாசு சுவாமிகள் பிறந்த ஆண்டு – 1867
- நாடகங்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கெல்லாம் முன்னோடியாகவும் முதல்க்வராகவும் விளங்கியவர் – சங்கரதாசு சுவாமிகள்
- இளமையில் புலவரேறு பழனி தண்டபாணி சுவாமிகளைத் தேடிச் சென்று தமிழறிவைப் பெற்ற இவர் தம்முடைய 16 ஆவது வயதிலேயே கல்வியாற்றல் பெற்று, வெண்பா, கலித்துறை இசைப்பாடல்களை இயற்றத் தொடங்கிவிட்டார்.
- இரணியன், இராவணன், எமதருமன் ஆகிய வேடங்களில் நடித்துப் புகழடைந்த போது இவருடைய வயது 24
- வண்ணம், சந்தம் பாடுவதில் வல்லவராயிருந்த சுவாமிகளின் "சந்தக்குழிப்புகளின்" சொற்சிலம்பங்கலைக் கண்டு அக்காலத்தில் மக்கள் வியப்புற்றனர்.
- சங்கரதாசு சுவாமிகள் "சமரச சன்மார்க்க சபை" என்ற நாடகக் குழுவை உருவாக்கினார். இந்தக் குழுவில் பயிற்சி பெற்ற எஸ்.ஜி. கிட்டப்பா நாடகக் கலைத்துறையில் பெரும்புகழ் ஈட்டினார்.
- நாடக மேடை, நாகரிகம் குன்றிய நிலையில், மதுரை வந்த சுவாமிகள் 1918-ல் "தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை " என்னும் நாடக அமைப்பை உருவாக்கி ஆசிரியர் பொறுப்பேற்றார். இங்கு உருவானவர்களே டி.கே.எஸ் சகோதரர்கள்
- சங்கரதாசு சுவாமிகள் "தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் " என்று அழைக்கப்படுகிறார்.
கொண்டல்கள் முழவின் ஏங்க குவளைகண் விழித்து நோக்க
தெண் திரை எழினி காட்ட தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட, மருதம் வீற்றிருக்கும் மாதோ"
என்ற பாடலை இயற்றியவர் – "கம்பர் "
நூல்களும் ஆசிரியர்களும்:
பசுவய்யா பற்றியக் குறிப்புகள்
- "காற்றில் கலந்த பேரோசை " என்ற கட்டுரையின் ஆசிரியர் – சுந்தர ராமசாமி
- சுந்தர ராமசாமி நாகர்கோவிலைச் சேர்ந்தவர்.
- "பசுவய்யா" என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியவர் – சுந்தர ராமசாமி
- இவருடைய "காற்றில் கலந்த பேரோசை" என்னும் கட்டுரை 1963-ல் தாமரை இதழின் ஜீவா பற்றிய சிறப்பு மலரில் வெளியானது.
- "செம்மீன்", "தோட்டியின் மகன்" ஆகிய புதினங்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.
நவீனத் தமிழ் எழுத்தாளர்களுல் ஒருவர்.
சுந்தர ராமசாமியின் சிறுகதைகள்:
- ரத்னாபாயின் ஆங்கிலம்
- காகங்கள்
சுந்தர ராமசாமியின் புதினங்கள்:
- ஒரு புளிய மரத்தின் கதை
- ஜே.ஜே. சில குறிப்புகள்
- குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
பாரதிதாசன் பற்றியக் குறிப்புகள்
- பாரதிதாசனின் இயற்பெயர் – கனக சுப்புரத்தினம்
- பெற்றோர்: கனகசபை – லட்சுமி
- 16 வயதில் புதுவை அரசினர் கல்லூரியில் பேராசிரியர் பணியில் சேர்ந்தார்.
- 1938-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.
புதுவையில் பாரதியின் கட்டளைக்கினங்க பாடியது:
- வடமொழியில் எழுதப்பட்ட " பில்கணீயம்" என்னும் காவியத்தைத் தழுவி தமிழில் பாரதிதாசனால் 1937-ல் எழுதப்பட்டது "புரட்சிக்கவி"
- பாரதியின் மீது கொண்ட பற்றினால் "கனக சுப்புரத்தினம்" என்னும் தம் பெயரை "பாரதிதாசன்" என்று மாற்றிக் கொண்டார்.
- மொழி, இனம், குடியாட்சி உரிமைகள் ஆகியவை பற்றித் தம் பாடல்களில் உரக்க வெளிப்படுத்தியமையால் "புரட்சிக்கவி" என்றும் "பாவேந்தர்" என்றும் அழைக்கப்பட்டார்.
- பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் சட்டத்தைத் தமிழ் வடிவில் தந்தவர் – பாரதிதாசன்
- "குடும்ப விளக்கு", " பாண்டியன் பரிசு", " இருண்ட வீடு", "சேர தாண்டவம்" ஆகிய காப்பியங்களையும் எண்ணற்ற பாடல்களையும் இயற்றியவர். – பாரதிதாசன்
- "குயில்" என்னும் இலக்கிய இதழை நடத்தியவர் – பாரதிதாசன்
- பாரதிதாசனின் "பிசிராந்தையார் " நாடகத்துக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
- "வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே" என்ற இவரின் தமிழ் வாழ்த்துப் பாடலை புதுவை அரசு தனது தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ளது.
- தமிழக அரசு இவருடைய பெயரால் திருச்சியில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது.
பாரதிதாசன் இயற்றிய நூல்கள்:
- பாரதிதாசன் கவிதை தொகுப்பு 1,2,3
- இசைஅமுது தொகுதி 1,2
- பாண்டியன் பரிசு
- எதிர்பாராத முத்தம்
- சேரதாண்டவம்
- அழகின் சிரிப்பு
- குடும்ப விளக்கு
- இருண்ட வீடு
- குறிஞ்சித்திட்டு
- கண்ணகி
- புரட்சிக் காப்பியம்
- மணிமேகலை வெண்பா
- காதல் நினைவுகள்
- கழைக்கூத்தியின் காதல்
- தமிழச்சியின் கத்தி
- அமைதி
- இளைஞர் இலக்கியம்
- சௌமியன்
- நல்ல தீர்ப்பு
- தமிழ் இயக்கம்
- இரண்யன் அல்லது இனையற்ற வீரன்
- காதலா காடமையா?
- சஞ்சீவி பார்வதத்தின் சாரல்
- பொதுவுடமையை வலியுறுத்துவது – சஞ்சீவி பார்வதத்தின் சாரல்
- இயற்கையை வருணிப்பது – அழகின் சிரிப்பு
- கற்ற பெண்களின் சிறப்பைக் கூறுவது – குடும்ப விளக்கு
- கல்லாத பெண்களின் இழிவைக் கூறுவது – இருண்ட வீடு
- பில்கணியத்தின் தழுவல் – புரட்சிக் காப்பியம்
- பாரதிதாசன் உரை எழுதிய நூல் – திருக்குறள்
- பாரதிதாசன் நடத்திய இதழ் – குயில்
வீதிக்கு விளக்குத்தூண்!
நாட்டுக்குக் கோட்டை மதில்!
நடமாடும் கொடிமரம் நீ "
என்று இளைஞர்களைப் பார்த்து எழுச்சியுடன் பாடியவர் – தாராபாரதி.
இன்னொரு சிகரம் உனது தலை!
எத்தனை ஞானியர் பிறந்த தரை – நீ
இவர்களை விஞ்சிட என்ன தடை ? "
என்று முழங்கியவர் – "தாராபாரதி"
எங்கள் இறைவா "
என்று பாடியவர் – பாரதியார்
இன்றியமையாமையை சினத்துடன் எடுத்துக்காட்டியவர் – பாரதியார்
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ!
சொல்லடி சிவசக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?"
என்று பாடியவர் – பாரதியார்
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே"என்று முழங்கியவர் – பாரதிதாசன்
மானுட சமுத்திரம் நானென்று கூவு
புவியை நடத்து; பொதுவில் நடத்து!"
என்று பாடியவர் – பாவேந்தர் பாரதிதாசன்
தேன்வந்து பாயுது காதினிலே – எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒருவ்
சக்தி பிறக்குது மூச்சினிலே!"
என்று பாடியவர் – பாரதியார்
மயிலை.சீனி.வேங்கடசாமி பற்றியக் குறிப்புகள்
- தமிழ் மொழியில் மறந்ததும், மறைந்ததுமான சிறந்த செய்திகள், அளவுகடந்து உள்ளன. அவற்றை வெளிக்கொணர்ந்து, வீரிய உணர்வுடன் வெளியிட்டவர் – "அறிஞர் மயிலை.சீனி.வேங்கடசாமி"
- மயிலை.சீனி.வேங்கடசாமி நகராட்சிப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
- ஆங்கிலம்,மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகலைக் கற்றுத் தேர்ந்தவர்.
- சிறந்த வரலாற்று ஆசிரியர், நடிநிலை பிறழாத ஆய்வாளர், மொழியியல் அறிஞர், இலக்கியத் திறனாய்வாளர் என்றெல்லாம் போற்றப்பட்ட பன்முகச் சிறப்புக் கொண்டவர்.
- மயிலை.சீனி.வேங்கடசாமி அவர்களுக்கு மதுரைப் பல்கலைக்கழகம் 1980 ஆம் ஆண்டு "தமிழ்ப் பேரவைச் செம்மல்" என்னும் பட்டமளித்துப் பாராட்டியது.
- இவருடைய "களப்பிரர் காலத் தமிழகம்" என்னும் ஆய்வு நூல், இருண்ட காலம் என்று ஆய்வாளர்களால் வருணிக்கப்பட்ட களப்பிரர் காலத்திற்கு ஒளியூட்டி, வரலாற்றுத் தடைச் செப்பனிட்டது.
மயிலை.சீனி.வேங்கடசாமி அவர்களின் கட்டுரைகள்:
- இராமேசுவரத் தீவு
- உறையூர் அழிந்த வரலாறு
- மறைந்துபோன மருங்காப்பட்டினம்
மயிலை.சீனி.வேங்கடசாமியின் நூல்கள்:
- கொங்கு நாட்டு வரலாறு
- துளுவநாட்டு வரலாறு
- சேரன் செங்குட்டுவன்
- மகேந்திரவர்மன்
- நரசிம்மவர்மன்
- மூன்றாம் நந்திவர்மன்
- கிறித்துவமும் தமிழும்
- சமணமும் தமிழும்
- பௌத்தமும் தமிழும்
- மறைந்து போன தமிழ்நூல்கள்
சுகம்தரும் உனர்ச்சியும் வேருண்டோ?
பதம்தரும் பெருமையும் பணம்தரும் போகமும்
பார்த்தால் அதைவிடக் கீழன்றோ?
இதம்தரும் அறங்களும் இசையுடன் வாழ்தலும்
எல்லாம் சுதந்திரம் இருந்தால்தான்
நிதம்தரும் துயர்களை நிமிர்ந்துநின் றெதிர்த்திட
நிச்சயம் சுதந்திரம் அது வேண்டும்."
என்ற பாடலைப் பாடியவர் – "நாமக்கல் கவிஞர்"
விழுந்தவனுக்கு
முத்தமிட்டுச் சொன்னது பூமி
ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ!'
என்ற கவிதையை எழுதியவர் – 'ஈரோடு தமிழன்பன்'
கொளுத்தி விலையாடுகிறது
மலையருவி"
என்ற கவிதையை எழுதியவர் – 'கழனியூரன்'
நூல்களும் ஆசிரியர்களும்:
நாமக்கல் கவிஞர் பற்றியக் குறிப்புகள்
- இயற்பெயர் – இராமலிங்கம் பிள்ளை
- காலம் – 1888 – 1972
- பெற்றோர் – வேங்கடராம பிள்ளை – அம்மணி அம்மாள்
- பிறந்த ஊர் – மோகனூர், நாமக்கல்
- இவர் சிறந்த ஓவியர் ஆவார்
- இவர் முதன்முதலாக வரைந்த ஓவியம் – இராமகிருஷ்ண பரமஹம்சர்
- இவருடைய தன் வரலாற்று நூல் – என் கதை
- இவர் கோவிந்தராச ஐயங்காருடன் இணைந்து நடத்திய இதழ் – லோகமித்திரன்
இவர் இயற்றிய நூல்கள்:
- தமிழன் இதயம்
- சங்கொலி
- தமிழ்த் தேர்
- கவிதாஞ்சலி
- பிரார்த்தனை
- தாயார் கொடுத்த தனம்
- தேமதுரத் தமிழோசை
தலைநிமிர்ந்து நில்லடா"
கல்யாண்ஜி பற்றியக் குறிப்புகள்
- இவரது இயற்பெயர் – எஸ்.கல்யாணசுந்தரம்
- பிறந்த இடம் – திருநெல்வேலி
- இவரது – புணைப்பெயர் – கல்யாண்ஜி, வண்ணதாசன்
- இவர் சிறுகதை எழுதுவதில் சிறந்தவர்
- வங்கியில் பணிபுரிந்தவர்
கல்யாண்ஜி எழுதிய கவிதை நூல்கள்:
- புலரி
- இன்று ஒன்று நன்று
- கல்யாண்ஜி கவிதைகள்
- சுன்னுமுதல் சின்னுவரை
- மணலுள்ள ஆறு
- மூன்றாவது
கல்யாண்ஜி எழுதிய கவிதைகள்:
- கனியான பின்னும் நுனியில் பூ
- பற்பசைக் குழாய்களும் நாவல் பழங்களும்
- சிநேகிதங்கள்
- ஒளியிலே தெரிவது
- அணில்நிறம்
- கிருஷ்ணன் வைத்த வீடு
கல்யாண்ஜி எழுதிய சிறுகதைகள்:
- கலைக்க முடியாத ஒப்பனைகள்
- வெளியிலும் சில பூக்கள்
- சமவெளி
- பெயர் தெரியாமல் ஒரு பறவை
- கனிவு
தருமு சிவராமு பற்றியக் குறிப்புகள்
- பிரமிள் என்ற பெயரில் கவிதை எழுதியவர் – சிவராமலிங்கம், இவர் இலங்கையில் பிறந்தவர்.
- சிவராமலிங்கம் அவர்கள் பானுசந்திரன், அரூப் சிவராமு, தருமு சிவராமு போன்ற பல புனைப்பெயர்களில் எழுதியவர்.
- புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம், மொழியாக்கம் என விரிந்த தளத்தில் இயங்கியவர்.
- ஓவியம், சிற்பம் ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.
- சிவராமலிங்கம் அவர்களின் கவிதைகள் முழுமையாகப் "பிரமிள் கவிதைகள் " என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது.
- "லங்காபுரி ராஜா" என்ற சிறுகதை தொகுப்பினை எழுதியுள்ளார்.
- "நக்ஷத்திரவாசி" என்னும் நாடகத்தை இயற்றியுள்ளார்.
- "வெயிலும் நிழலும்" என்ற கட்டுரைத் தொகுப்பினையும் எழுதியுள்ளார்.
அப்துல் ரகுமான் பற்றியக் குறிப்புகள்
- அப்துல் ரகுமான் புதுக்கவிதை, மரபுக்கவிதை, வசன கவிதை என்று கவிதைகளின் பல வடிவங்களிலும் எழுதியுள்ளார்.
- அப்துல் ரகுமான் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
- இவர் வாநம்பாடிக் கவிஞர்களுல் ஒருவர்.
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை – இங்கு
முடிதல் என்பது எதற்குமில்லை.
கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை
பெற்றேன் என்பாய் எதைப் பெற்றாய்? – வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல.
குளித்தேன் என்பாய் யுகயுகமாய் – நீ
கொண்ட அழுக்கோ போகவில்லை
அளித்தேன் என்பாய் உண்மையிலே – நீ
அளித்த தெதுவும் உனதல்ல.
உடைஅணிந்தேன் எனச் சொல்லுகிறாய் – வெறும்
உடலுக் கணிவது உடையல்ல
விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் – ஒரு
வினாவாய் நீயே நிற்கின்றாய்.
தின்றேன் என்பாய் அணுஅணுவாய் – உனைத்
தின்னும் பசிகளுக் கிரையாவாய்
வென்றேன் என்பர் மனிதரெல்லாம் – பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றார்.
நான் என்பாய் அது நீயில்லை – வெறும்
நாடக வசனம் பேசுகிறாய்
ஏன் ? என்பாய் இது கேள்வியில்லை – அந்த
ஏன் என்னும் ஒளியில் உன்னைத் தேடு."
என்ற கவிதையை எழுதியவர் – அப்துல் ரகுமான்
அப்துல் ரகுமான் பெற்ற விருதுகள்:
- பாரதிதாசன் விருது
- தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் "தமிழன்னை விருது"
- "ஆலாபனை" என்னும் கவிதைத் தொகுப்பிற்குச் சாகித்திய அகாதெமி விருது
அப்துல் ரகுமானின் நூல்கள்:
- பால்வீதி
- நேயர்விருப்பம்
- பித்தன்
- ஆலாபனை
- சுட்டுவிரல்
புதுமைப்பித்தன் பற்றியக் குறிப்புகள்
- புதுமைப்பித்தனின் இயற்பெயர் – சொ.விருத்தாச்சலம்
- சிறுகதை, கட்டுரை, கவிதை, நாடகம், புத்தக விமர்சனம் என விரிந்த தளத்தில் இயங்கியவர்.
- தமிழ்ச் சிறுகதைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியக் காரணத்தால் "சிறுகதை மன்னர்" என்று போற்றப்படுகிறார்.
- இவருடைய மொத்தக் கதைகளும் "புதுமைப்பித்தன் சிறுகதைகள் "என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.
புதுமைப்பித்தனின் சிறுகதைகளுல் சில:
- காஞ்சனை
- சாப விமோசனம்
- கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்.
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) பற்றியக் குறிப்புகள்
- இராமலிங்க அடிகள் பிறந்த ஆண்டு – 1823
- "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்றவர் – இராமலிங்க அடிகள்
- "திருவருட்பா " இயற்றியவர் – இராமலிங்க அடிகள்
- அமைதி, அன்பு வழியிலான சமூகத்தை உருவாக்க விரும்பினார்.
- சாதி, மத, இன, பால் வேறுபாடுகள் கடந்த அருட்பெருஞ்சோதி ஒன்றே இறைவன் என வலியுறுத்தினார்.
- 7 வயதிலேயே கவிபாடும் வல்லமை பெற்றுத் "தெய்வமணிமாலை" "கந்தர் சரவணப்பத்து" ஆகிய நூல்களை உருவாக்கியவர்.
- "மநு முறை கண்ட வாசகம் " என்னும் உரைநடை நூலை எழுதியவர்.
- " ஒழிவில் ஒடுக்கம் ", "தொண்டை மண்டல சதகம் ", "சின்மய தீபிகை " ஆகிய நூல்களைப் பதிப்பித்தவர் வள்ளலார்.
- வள்ளலார் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு பாராட்டச் " சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை" தோற்றுவித்தார்.
- மக்களின் பசித்துயர் நீக்க " சத்திய தருமச் சாலை" அமைத்தார்.
- தெய்வங்கள் பல எனச் சொல்லும் உருவ வழிபாட்டை மறுத்தார்.
- வள்ளலார் மறைந்த ஆண்டு – 1874
வள்ளலாரின் (இராமலிங்க அடிகள்) கொள்கைகள்:
- கடவுள் ஒருவரே.
- அவரைச் சோதி வடிவில் உண்மை அன்பால் வழிபட வேண்டும்.
- சிறு தெய்வ வழிபாடு கூடாது.
- அத்தெய்வங்களின் பெயரால் உயிர்ப்பலி கூடாது.
- புலால் உண்ணலாகாது.
- சாதி, சமயம் முதலிய வேறுபாடுகள் கூடாது.
- எவ்வுயிரையும் தம்முயிர் போல எண்ணி ஒழுகும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உணர்வைக் கடைப்பிடிக்க வேண்டும்.
- எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
- புராணங்களும் சாத்திரங்களும் முடிவான உண்மயைத் தெருவிக்க மாட்டா.
- மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்க வேண்டும்.
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே" – என்று தமிழ் மொழியை வாழ்த்தியவர் – "பேராசிரியர் சுந்தரனார்"
உணவுகளின் பிண்டந்தான் உடலென்ப தறிந்தேன்
குன்றுகளும் நிலை மாறிக் குன்றுமென அறிந்தேன்
கொள்கைகளே கட்சிகளின் முகமென்ப தறிந்தேன்
வென்றவரும் சிலசமயம் தோற்பவரென்ற றிந்தேன்
வெறும்பேச்சில் யாதொன்றும் விளையாதென் றறிந்தேன்
பொன்னெல்லாம் மண்வயிற்றின் கருவென்ப தறிந்தேன்
புகழெல்லாம் அறிவினலங் காரமென்ப தறிந்தேன்"
என்ற பாடலை எழுதியவர் – "சுரதா"
நூல்களும் ஆசிரியர்களும்:
இரவீந்திரநாத் தாகூர் பற்றியக் குறிப்புகள்
- 'பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர்' என்று அழைக்கப்படுபவர் – இரவீந்திரநாத் தாகூர்
- 'கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கத்தரிசி' என்று அழைக்கப்பட்டவர் – இரவீந்திரநாத் தாகூர்
- இரவீந்திரநாத் தாகூர் தமது 16 ஆம் வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார்.
- 1913 ஆம் ஆண்டு "கீதாஞ்சலி" என்ற கவிதை நூலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்காக இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
- 1919 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலையால் மனம் வருதிய தாகூர், ஆங்கிலேய அரசைக் கண்டித்து அவர்கள் வழங்கிய "சர் " என்ற பட்டத்தைத் துறந்தார்.
- இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இசைப்பாடல்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், ஏறக்குறைய இருபது பெரும் நாடகங்கள், குறு நாடகங்கள், எட்டு நாவல்கள், எட்டுக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள் என இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களிலும் நூல்களை எழுதியுள்ளார்.
- குழந்தைகள் இயற்கையின் மடியில் எளிமையாக வளர்க்கப்பட வேண்டும்.தங்கள் வேலையைத் தாங்களே கவனித்துக்கொண்டு, மற்றவர்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டு 1921-ல் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவினார்.
- "குருதேவ்" என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் – இரவீந்திரநாத் தாகூர்
- இவரது "ஜனகணமன" என்னும் பாடல் இந்திய நாட்டின் நாட்டுப் பண்ணாக உள்ளது.
- இரவீந்திரநாத் தாகூரின் "அமர் சோனார் பங்களா" என்னும் பாடல் வங்காள தேசத்தின் நாட்டுப்பாண்ணாக இன்றும் பாடப்பட்டு வருகின்றன.
- சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள " தாகூரின் கடிதங்கள் " என்னும் நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்தவர் – த.நா.குமாரசுவாமி. இவர் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, வங்கம், பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்.
- "த.நா.குமாரசுவாமி " அவர்களுக்கு வங்க அரசு, தமிழ் – வங்க மொழிகளுக்கு அவர் ஆற்றிய தொண்டைப் பாராட்டி " தேதாஜி இலக்கிய விருது " அளித்துச் சிறப்பித்துள்ளது.
கவிஞர் இன்குலாப் பற்றிய சில தகவல்கள்
- இன்குலாப் அவர்களின் இயற்பெயர் – சாகுல் அமீது.
- இவர் இன்குலாப் கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தில் விரிவான தலங்களில் இயங்கியவர்.
- இவருடைய கவிதைகள் " ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் " என்ற பெயரில் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
- இவரது மரணத்துக்குப் பிறகு இவருடைய உடல் அவர் விரும்பியபடி செங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்குக் கொடையளிக்கப்பட்டது.
பறவைகளோடு எல்லை கடப்பேன்
பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும்
எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்
நீளும் கைகளில் தோழமை தொடரும்
நீளாத கையிலும் நெஞ்சம் படரும்
எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்
உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்
கூவும் குயிலும் கரையும் காகமும்
விரியும் எனது கிளைகளில் அடையும்
போதியின் நிழலும் சிலுவையும் பிறையும்
பொங்கும் சமத்துவப்புனலில் கரையும்
எந்த மூலையில் விசும்பல் என்றாலும்
என் செவிகளிலே எதிரொலி கேட்கும்
கூண்டில் மோதும் சிறகுகளோடு
எனது சிறகிலும் குருதியின் கோடு
சமயம் கடந்து மானுடம் கூடும்
சுவர் இல்லாத சமவெளி தோறும்
குறிகள் இல்லாத முகங்களில் விழிப்பேன்
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன் "
என்ற கவிதையை இயற்றியவர் – "இன்குலாப்"
கவிதை நாடகங்களும் ஆசிரியர்களும்:
- மனோன்மணீயம் – பெ.சுந்தரம்பிள்ளை
- மானவிஜயம் – பரிதிமாற்கலைஞர்
- சத்திமுத்துப் புலவர் – பாரதிதாசன்
- காமஞ்சரி – புலவர் குழந்தை
- அனிச்ச அடி – புலவர் பழனி
- பொன்னி – குமாரவேல்
- மூன்றாம்பிறை – புவியரசு
- நீர்மாங்கனி – மலையமான்
திரு.வி.கலியாணசுந்தரனார் பற்றியக் குறிப்புகள்
- திரு.வி.கலியாணசுந்தரனார் பிறந்த ஆண்டு – 1883
- திரு.வி.க தம் தந்தையிடம் தொடக்கக் கல்வி பயின்றார்.
- வெஸ்லி பள்ளியில் படித்த போது, " நா. கதிரைவேல் " என்பவரிடம் தமிழ்ப் படித்தார்.
- " மயிலை தணிகாசலம் " என்பவரிடம் தமிழோடு சைவ நூல்களையும் பயின்றார்.
- சிறந்த மேடைப்பேச்சாலராகவும், எழுத்தாளராகவும் விலங்கிய இவர் " தேசபக்தன் ", " நவசக்தி" இதழ்களுக்கு ஆசிரியராக விளங்கினார்.
- தமிழ்க் கவிஞர்களில் அரசியல் இயக்கங்களில் அதிகமான ஈடுபாடு கொண்டவர்.
- தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார்.
- சென்னை ராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராக இருந்தார்.
- இலக்கியப் பயிற்சியும், இசைப்பயிற்சியும் பெற்றவர்.
- திரு.வி.க மறைந்த ஆண்டு – 1953
திரு.வி.க எழுதிய நூல்கள்:
- பெண்ணின் பெருமை
- முருகன் அல்லது அழகு
- மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
- என் கடன் பணி செய்து கிடப்பதே
- சைவத்திறவு
- இந்தியாவும் விடுதலையும்
- பொதுமைவேட்டல்
- திருக்குறள் விரிவுரை
இளைஞர்களிடம் திரு.வி.க ஆற்றிய உரை:
நூல்களும் ஆசிரியர்களும்:
பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே!
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்!
அரங்கமா நகரு ளானே!"
என்ற பாடலைப் பாடியவர் – "தொண்டரடிப்பொடி ஆழ்வார்"
சிவந்தநல் இதழ்கள் எங்கே?
கூரிய விழிகள் எங்கே?
குறுநகை போன தெங்கே?
நேரிய பர்வை எங்கே?
நிமிர்ந்தநன் னடைதான் எங்கே?
நிலமெலாம் வணங்கும் தோற்றம்
நெருப்பினில் வீழ்ந்த திங்கே!"
என்ற பாடலை இயற்றியவர் – "கண்ணதாசன்"
கொழும்பில் என் பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே
தமிழ்நாட்டில் என் அம்மா
சுற்றம் பிராங்க்பர்ட்டில்
ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்
நானோ
வழிதவறி அலாஸ்கா
வந்துவிட்ட ஒட்டகம் போல்
ஓஸ்லோவில்"
என்று எழுதியவர் – "ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன்"
இயற்கை வேளாண்மை
- "உழவு உலகிற்கு அச்சாணி" என்று கூறியவர் – திருவள்ளுவர்
- "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" என்று கூறியவர் – பாரதியார்
- தமிழ்நாட்டின் மாநில மரம் – பனைமரம்
- "ஏழைகளின் கற்பக விருட்சம்" என்று அழைக்கப்படுவது – "பனைமரம்"
- பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீரிலிருந்து பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்றவற்றைத் தயாரித்து விற்பதன் மூலம் அதிக வருவாய் கிடைக்கும். இவ்வாறு ஒரு பொருளை மேம்படுத்தப்பட்ட மாற்றுப் பொருளாக மாற்றுவதை "மதிப்புக் கூட்டுப் பொருள்கள்" என அழைக்கிறோம்.
- "இயற்கை அனைத்தையும் வாரி வழங்கும் தாய். அதேநேரம் எளிதில் சிதைந்துவிடும் வகையில் மென்மையானதும் கூட நிலத்தின் வளத்தை அக்கறையுடன் நன்முறையில் பராமரித்தால், பதிலுக்கு அதுவும் மனிதத் தேவைகளை நல்ல முறையில் நிறைவு செய்யும். விவசாயத்தின் வசந்த காலமாக இயற்கை வேளாண்மை எல்லாக் காலத்திலும் திகழும்." என்று கூறியவர் – ஜப்பான் அறிஞர் "மசானபு ஃபுகோகா".
- வைக்கோல் பற்றிய மிகச் சிறந்த ஆராய்ச்சியை செய்தவர் – ஜப்பான் அறிஞர் "மசானபு ஃபுகோகா".
- 1978 ஆம் ஆண்டு "ஒற்றை வைக்கோல் புரட்சி" என்னும் நூலை எழுதியவர் – ஜப்பான் அறிஞர் "மசானபு ஃபுகோகா".
- "உழப்படாத நிலம்", "இரசாயன உரம் இல்லாத உற்பத்தி", "பூச்சிக்கொல்லி தெளிக்கப்படாத பயிர்ப் பாதுகாப்பு", "தண்ணீர் நிறுத்தாத நெல் சாகுபடி", "ஒட்டுவிதை இல்லாமல் உயர் விளைச்சல்" ஆகிய ஐந்து விவசாய மந்திரங்களை உலகிற்குச் சொன்னவர் – ஜப்பான் அறிஞர் "மசானபு ஃபுகோகா".
ஏதிலிக் குருவிகள்
கூடுகளையும்
பார்க்கக் கூடவில்லை
முன்பென்றால் ஊரில்
அடைமழைக்காலம்
ஆற்றில் நீர் புரளும்
கரையெல்லாம் நெடுமரங்கள்
கரைகின்ற பறவைக் குரல்கள்
போகும் வழியெல்லாம்
தூக்கணாங்குருவிக் கூடுகள்
காற்றிலாடும் புல் வீடுகள்
மூங்கில் கிளையமர்ந்து
சுழித்தோடும் நீருடன்
பாடிக்கொண்டிருக்கும் சிட்டுகள்
மண்ணின் மார்பு
சுரந்த காலமது
வெட்டுண்டன மரங்கள்
வான் பொய்த்தது
மறுகியது மண்
ஏதிலியாய்க் குருவிகள்
எங்கோ போயின"
என்ற பாடலில் சூழலியல் மாற்றத்தால் அழிந்து வரும் குருவியினத்தைப் பற்றிக் கூறியவர் – "அழகிய பெரியவன்"
யானை டாக்டர்
- "காட்டின் மூலவர்" என்று அழைக்கப்படுவது – யானைகள்
- "களிறு" என்பதன் பொருள் – ஆண் யானை
- "பிடி" என்பதன் பொருள் – பெண் யானை
- யானைகளில் மூன்று சிற்றினங்கள் உலகில் எஞ்சியுள்ளன.
- ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்க காட்டு யானைகள், ஆசிய யானைகள்.
- பொதுவாகா எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன.
- "காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல் யாழ்வரைத் தங்கி யாங்கு" என்று கூறும் நூல் – "கலித்தொகை"
- "யானை டாக்டர்" என்று அழைக்கப்பட்டவர் – "டாக்டர்.வி.கிருஷ்ணமூர்த்தி"
- வனப்பேணுநர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான "வேணுமேனன் ஏலீஸ்" விருதினை 2000 ஆம் ஆண்டு பெற்றவர் – "டாக்டர்.வி.கிருஷ்ணமூர்த்தி"
- தமிழகக் கோவில் யானைகளுக்கு வனப் புத்துணர்ச்சி திட்டத்தை அறிமுகப்படுத்தி அரசின் மூலம் செயல்படுத்தியவர் – – "டாக்டர்.வி.கிருஷ்ணமூர்த்தி"
- வனப்பேணுநர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது – "வேணுமேனன் ஏலீஸ் விருது"
மலை இடப்பெயர்வுகள்: ஓர் ஆய்வு
- மலை, குன்றுகளின் பெயர்கள் குறித்த ஆய்வை "OROLOGY" என்ற கலைச்சொல்லால் அழைப்பர்.
- திராவிடர்களை "மலைநில மனிதர்கள்" என்று அழைப்பவர் – "கமில் சுவலபில்"
- "சேயோன் மேய மைவரை உலகம்" என்று கூறும் நூல் – தொல்காப்பியம்
- "விண்பொரு நெடுவரை குறிஞ்சிக் கிழவ" என்று கூறும் நூல் – "திருமுருகாற்றுப்படை"
இந்தியாவில் சில இனக்குழுக்களின் பெயர்கள் மலை என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளன.
- மால் பஹாடியா – ஜார்கண்ட்
- மல அரயன் – மேற்குத் தொடர்ச்சி மலைகள் – கேரளம்
- மல குறவன் – நெடுமங்காடு – கேரளம்
- மல மூத்தன் – எர்நாட் – கேரளம்
- மல பணிக்கர் – வட கேரளம்
- மலயன் – பாலக்காடு கேரளம்
- மல வேடா – இடுக்கி, கேரளம்
- மலேரு – தட்சிண கன்னடா – கர்நாடகம்
- கோட்டா – நீலகிரி, தமிழ்நாடு
- கொண்டா தோரா – ஆந்திரப்பிரதேசம்
- கோண்டு, கொய்ட்டெர் – ஒடிசா
மலை என்னும் திராவிடச் சொல் பயன்படுத்தப்படும் மாநிலங்கள்:
- உத்திராஞ்சல்
- ஜார்கண்ட்
- உத்திரப் பிரதேசம்
வரை என்னும் திராவிடச் சொல் பயன்படுத்தப்படும் மாநிலங்கள்:
- குஜராத்
- மஹாராஷ்டிரா
- ஹிமாச்சலப் பிரதேசம்
மலா என்னும் திராவிடச் சொல் பயன்படுத்தப்படும் மாநிலங்கள்:
- பஞ்சாப்
- இராஜஸ்தான்
- கர்நாடகம்
- தமிழ் – கோட்டை, கோடு
- கன்னடம் – கோட்டே, கோண்டே
- தெலுங்கு – கோட்ட
- துளு – கோட்டே
- தோடா – க்வாட்
வாடிவாசல்
புல்லாளே, ஆயமகள்
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை
நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர்துறந்து
நைவாரா ஆய மகள் தோள்'
என்று 'ஏறுதழுவுதல்' பற்றிக் கூறும் நூல் – 'கலித்தொகை'
இதனைக் 'குறுநாவல்' என்றும் சொல்வர்.
தலைமைச் செயலகம்
- சராசரி மனித மூளையின் எடை – 1349 கிராம்
- மிக அதிக எடையுள்ள மனித மூளை – 2049 கிராம்
- மூளைக்கு ஒரு நிமிடத்துக்கு 800 மில்லி குருதி தேவைப்படுகிறது.
- மனித மூளை சுமார் 10 வாட் சக்தியை உற்பத்தி செய்கின்றது. இது ஒரு சிறிய அளவிலான மின்விளக்கை எரிய வைக்கப் போதுமானது.
- மனித மூளையில் 80% தண்ணீரே உள்ளது.
- 'உங்கள் உடலின் முக்கியப் பணி, உங்கள் மூளையைத் தாங்கிச் செல்வது' என்று கூறியவர் – ' தாமஸ் ஆல்வா எடிசன்'
- மொழி நம் மூளையில் எங்கே புரிந்துகொள்ளப்படுகிறது என்பதை 1861 ஆம் ஆண்டில் ' பியர் பால் ப்ரோக்கா' என்னும் பிரெஞ்சு அறிஞர் கண்டுபிடித்தார்.
- 'நாம் பிறக்கும் போதே சில ஆழ்ந்த அமைப்புகளுடன் பிறக்கிறோம். இந்த ஆழ்ந்த அமைப்புகளில் இலக்கண விதிகளும் அதனை அர்த்தம் பண்ணிக்கொள்ளும் திறமையும் பொதிந்திருக்கிறது' என்ற கருத்தைக் கூறியவர் – 'நோம் சோம்ஸ்கி'
- கி.மு.ஆறாம் நூற்றாண்டில் 'மனம் என்பது மூளையி இருக்கிறது' என்று கூறியவர் – 'பித்தகோரஸ்'
- 'மனமும் மூளையும் வேறு' என்றவர் -டெஸ்கார்ட்டெஸ் என்னும் தத்துவ ஞானி
- நியூரானின் முதல் உண்மையான சித்திரத்தைப் பிரசுரித்தவர் – 'ஆட்டோ டியட்டஸ்' என்னும் ஜெர்மானியர்
- மூளையில் வார்த்தைகள் அறியப்படும் இடத்தைக் கண்டறிந்தவர் – வெர்னிக்
- மொழி அறிவு மூளைக்குள் பதிந்திருக்கிறது' என்று கண்டறிந்தவர் – 'நோம் சோம்ஸ்கி'
- 'உலகின் அதிவிரைவுக் கணினி ஒரு நொடிக்கு மேற்கொள்ளும் கணக்குகளை விட அதிகமாகவே மனித மூளையால் கணக்கிடம் முடியும்' என்று கூறியவே – 'க்வாபெனா போஹென்'
விஞ்ஞானி
'இன்று பொழுதெல்லாம்இலக்கியத்துக் கடல் மூழ்கிக்
களைத்தும் உடல் மெலிந்தும்
கற்பனைக்கு உளங்கொடுத்தும்
இளைத்தும் இருக்குமெனை
விஞ்ஞானியாய் மாறி
வாகைதனைச் சூட
வாவென்று இழுத்துவந்தீர்
ஈகைக் குணமுடையீர்
என் செய்வேன்.
முயல்கிறன்!'
கடல் நீரில் பயிர்விளைச்சல்
கண்டு பெருக்கிடவும்
படகேறிச் சுடுகின்ற
பாலையிலே சென்றிடவும்
மாண்டவனை எழுப்பிடவும்
மனிதன் தனையுயர்த்தி
ஆண்டவனைப் போலெங்கும்
ஆட்சி செலுத்திடவும்
விஞ்ஞானம் வழிவகுக்கும்
வெற்றிக் கையெழுத்திட்டு
மெய்ஞ்ஞானப் பத்திரத்தை
மேதினிக்கு இயற்றி வைக்கும்'
என்ற விஞ்ஞானி என்னும் புதுக்கவிதையை இயற்றியவர் – 'மீரா'
இனிக்கும் இன்சுலின் – நீரிழிவின் வகைகள்:
- முதல் வகை: இன்சுலின்சார் நீரிழிவு நோய்
- இரண்டாம் வகை: இன்சுலின் எதிர்ப்பு நீரிழிவு நோய்
- மூன்றாம் வகை: நீரிழிவு நோயின் அறிகுறிகளுடன் காணப்படுவர்.
தமிழகக் கல்வி வரலாறு
- பண்டைத் தமிழ் இலக்கண நூலான 'தொல்காப்பியம்', கல்வி கற்பதற்காகப் பிரிந்து செல்வதை 'ஓதற்பிரிவு' எனக் குறிப்பதோடு எண்வகை மெய்ப்பாடு பற்றிக் கூறும் போது கல்வியின் பொருட்டு ஒருவருக்கு 'பெருமிதம்' தோன்றும் அனக் கூறுகிறது.
- 'தொல்காப்பியமும்', 'நன்னூலும்' ஆசிரியர்கள், மாணவர்களுக்கான இலக்கணங்களை வகுத்துள்ளன.
- பொருள் கொடுத்தும் தொண்டு செய்தும் ஆசிரியரிடம் மாணவர்கள் கல்வி கற்றதனை 'ஆரியப்படைக் கடந்த நெடிஞ்செழியன்' 'உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே' என்ற புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடுகின்றார்.
- 'சங்க காலத் தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக, பயிற்று மொழியாக, இலக்கிய மொழியாக விளங்கியுள்ளது.
- தமிழகம் அப்போது பெற்றிருந்த அரசியல் சுதந்திரத்தினால் தமிழ்நாடெங்கும் தமிழே ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவும் மற்றும் சமயம், வாணிகம் போன்ற எல்லாத் துறைகளிலும் பொதுமொழியாகவும் விளங்கி வந்தது' என்று கூறுபவர் – ' மா.இராசமாணிக்கனார் '
- 'துணையாய் வருவது தூய நற்கல்வி' என்று கூறும் நூல் – திருமந்திரம்
- 'கல்வி அழகே அழகு' என்று கூறும் நூல் – நாலடியார்
- 'இளமையில் கல்' என்றவர் – ஔவையார்
- கணக்காயர் – எழுத்தும் இலக்கியமும் உரிச்சொல்லும் (zகண்டு) கணக்கும் கற்பிப்போர்
- ஆசிரியர் – பிற்காலத்தில் ஐந்தாக விரிக்கப்பட்ட மூவகை இலக்கணத்தையும் அவற்றுக்கு எடுத்துக்காட்டான பேரிலக்கியங்களையும் கற்பிப்போர்
- குரவர் – சமய நூலும் தத்துவ நூலும் கற்பிப்போர்
- பள்ளிகள் – கலகள், கல்வி கற்பிக்கும் இடங்களாக விளங்கின
- மன்றம் – கற்ற வித்தைகளை அரங்கேற்றும் இடமாக விளங்கியது
- சான்றோர் அவை – செயல்களைச் சீர்தூக்கிப் பார்க்கும் அவையாக இருந்தது.
- கல்வி கற்பிக்கப்படும் இடங்களைப் ' பள்ளி ' என்று கூறும் நூல் – 'பெரிய திருமொழி'
- கல்வி கற்பிக்கப்படும் இடங்களை 'ஓதும் பள்ளி ' என்று கூறும் நூல் – 'திவாகர நிகண்டு'
- கல்வி கற்பிக்கப்படும் இடங்களைக் ' கல்லூரி' என்று கூறும் நூல் – 'சீவக சிந்தாமணி'
- கல்வி கற்றலுக்கு உதவும் ஏட்டுக் கற்றைகளை ஏடு, சுவடி, பொத்தகம், பனுவல், நூல் எனப் பல பெயரிட்டு அழைத்தனர்.
- 'பள்ளி' என்ற சொல்லுக்கு 'படுக்கை' என்பது பொருள் ஆகும். பள்ளி என்னும் சொல் சமண, பௌத்த சமயங்களின் கொடையாகும்.
- 'மன்றம்', 'சான்றோர் அவை', 'அறங்கூர் அவையம்', 'சமணப்பள்ளி', 'பௌத்தப் பள்ளி' போன்ற அமைப்புகள் சங்க காலத்திலும் சங்கம் மருவியக் காலத்திலும் கற்பித்தல் பணியை தமிழகத்தில் செய்து வந்துள்ளன.
- சமணப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு எடுத்த படுக்கைகள் பற்றித் திருச்சி மலைக்கோட்டையிலும் தமிழகத்திம் புகழ்பெற்ற சமணக் குன்றான கழுகுமலையிலும் உள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
- விலாப்பாக்கத்தில் சமணப் பள்ளியை நிறுவியவ சமணப் பெண் ஆசிரியர் – ' பட்டினிக் குரத்தி'
- தமிழர்கள் இன்று பரவலாக ஏற்றுக் கொண்டிருக்கும் 'பட்டிமண்டபம்' என்ற கலைவடிவம்சமயத் துறையிலிருந்து தோன்றியது.
- 'பட்டிமண்டபம்' என்பது சமயக் கருத்துக்கள் விவாதிக்கும் இடமென்று மணிமேகலையில் சுட்டப்படுகிறது.
- 'ஒட்டிய சமயத்து உறுபொருள்வாதிகள் பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்' என்று கூறும் நூல் – 'மணிமேகலை'
- தமிழகத்தில் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்த சீனப் பயணி – 'யுவான் சுவாங்'
- திண்ணைப் பள்ளிகள் 'தெற்றிப் பள்ளிகள்' என்று அழைக்கப்பட்டன.
- திண்ணைப் பள்ளிக்கொட ஆசிரியர்கள் 'கணக்காயர்கள்' என்று அழைக்கப்பட்டனர். அக்காலக் கல்விமுறை திண்ணைப் பள்ளிமுறை என்றே அழைக்கப்பட்டன.
- ஆங்கிலேயர்கள், திண்ணைப் பள்ளிகள், பாடசாலைகள், மக்தாபுகள், மதரசாக்கள் போன்ற கல்வி அமைப்புகளை 'நாட்டுக்கல்வி' என்றே அழைத்தனர்.
- 'ரெவரெண்ட் பெல்' என்ற ஸ்காட்லாந்து பாதிரியார் தமிழகத் திண்ணைப் பள்ளிக் கல்வியைக் கண்டு வியந்தார்.
- இம்முறையில் அமைந்த ஒரு பள்ளியை ஸ்காட்லாந்தில் 'மெட்ராஸ் காலேஜ்' என்னும் பெயரில் நிறுவினார். அங்கு இக்கல்வி முறை 'மெட்ராஸ் சிஸ்டம்', 'பெல் சிஸ்டம்', மற்றும் 'மானிடரி சிஸ்டம்' என்றும் அழைக்கப்பட்டது.
- 'தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதர் ' அவர்கள் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனாரிடம் கல்விகற்றார்.
- 'கனக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்
மூத்தோரை இல்லா அவைக்களனும் – பாத்துண்ணும்
தன்மை யிலளார் அயலிருப்பும் இம்மூன்றும்
நன்மை பயத்தல் இல ' என்று கூறும் நூல் – 'திரிகடுகம்' - 1453 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜெர்மனி நாட்டவரான 'ஜான் கூட்டன்பர்க்' வடிவமைத்த அச்சு இயந்திரம் கல்வி பெருகக் காரணமாயிற்று.
- கி.பி 1706 ஆம் ஆண்டு முதல் டச்சுக்காரர்களின் சமயப் பரப்புச் சங்கம் தமிழ்கத்தில் முதன்முதலாகக் கல்விப்பணியில் ஈடுபட்டது.
- இந்தியாவில் முதன்முதலில் அச்சேறிய மொழி தமிழ் ஆகும்.
- 1813 ஆம் ஆண்டு சாசனச் சட்டத்தின்படி லண்டன் பாராளுமன்றம், இந்தியாவின் கல்விக்காக 1 லட்சம் ரூபாய் ஒதுக்கியது.
- மெக்காலே கல்விக் குழு உருவாக்கப்பட்ட ஆண்டு – 1835
- 'ஆசிரியரால் சர்வ வல்லமையிலும் பாதிப்பினை ஏற்படுத்த இயலும். அவரால் ஏற்படப் போகும் நல்ல விளைவுகள் அவர்களாலேயே மதிப்பிட இயலாது.' என்று கூறியவர் – 'ஹென்றி ஆடம்ஸ்'
- 1854 ஆம் ஆண்டு 'சார்லஸ் வுட்' தலைமையிலான குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தற்காலக் கல்வி முறையும் தேர்வு முறையும் உருவெடுத்தன.
- 'இந்தியக் கல்வி வளர்ச்சியின் மகாசாசணம்' என்று அழைக்கப்படுவது – சார்லஸ் வுட்டின் அறிக்கை
- 1882 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஹண்டர் கல்விக்குழு சீருடை முறை, தாய்மொழிக் கல்வி போன்றவற்றைக் கட்டாயமாக்கியது.
- மேலும் புதிய பள்ளிகளைத் தொடங்கி நடத்தும் பொறுப்பைத் தனியாருக்கும் வழங்கப் பரிந்துரை செய்தது.
- நாடு விடுதலை பெற்றவுடன் இந்திய அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு 45ன் கீழ் நாட்டிலுள்ள 14 வயதிக்குற்பட்ட அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்கப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தியது.
தமிழகத்தில் விடுதலைக்குப்பின் கல்வி வளர்ச்சி:
- 1826 ஆம் ஆண்டில் சென்னை ஆளுநர் சர்.தாமஸ் மன்றோ ஆனைக்கிணங்கப் பொதுக்கல்வி வாரியம் தொடங்கப்பட்டது.
- 1835 ஆம் ஆண்டில் சென்னை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இது இந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட இரண்டு மருத்துவக் கல்லூரிகளுல் ஒன்று.
- 1854 ஆம் ஆண்டில், பொதுக்கல்வித் துறை நிறுவப்பட்டு முதல் பொதுக்கல்வி இயக்குநர் நியமிக்கப்பட்டார்.
- 1857 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
- 1794 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஸ்கூல் ஆஃப் சர்வே நிறுவனம், 1859 ஆம் ஆண்டில் கிண்டி பொறியியல் கல்லூரியாக வளர்ச்சி அடைந்தது.
- 1910 ஆம் ஆண்டில் தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம் தொடங்கப்பட்டது.
- 1911 ஆம் ஆண்டில் பள்ளியிறுதி வகுப்பு – மாநில அளவிலான பொதுத்தேர்வில் நடைமுறைக்கு வந்தது.
இரசிகமணி டி.கே.சிதம்பரநாதர் பற்றியக் குறிப்புகள்
- 'டி.கே.சி' என்றழைக்கப்படும் இரசிகமணி டி.கே.சிதம்பரநாதர் பிறந்த ஆண்டு – 1882
- 'தமிழில் எல்லாம் உண்டு; தமிழின் கவிச்சுவைக்கு ஈடுமில்லை இணையுமில்லை; தமிழால் அறிவியல் மட்டுமன்று; அனைத்து இயல்களையும் கற்க முடியும்' என்று கூறியவர் – இரசிகமணி டி.கே.சிதம்பரநாதர்
- இவரது வீட்டில் ஞாயிறு தோறும் இலக்கியக் கூட்டம் நடைபெறும். அதற்கு 'வட்டத் தொட்டி' என்று பெயர்.
- இவர் வழக்கறிஞராக பணிபுரிந்தார். அதைவிட தமிழின்பத்தில் திளைப்பதையே டி.கே.சி விரும்பினார்.
- இவரது கடிதங்கள் இலக்கியத் தரம் கொண்டு புதிய இலக்கிய வகையாகவே கருதப்பட்டன.
- 'இதய ஒலி', 'கம்பர் யார்?' முதலான நூல்களை எழுதியுள்ளார்.
- 'முத்தொள்ளாயிரம்', 'கம்பராமாயணம் ' ஆகியவற்றுக்கு உரை எழுதியுள்ளார்.
- சென்னை மாநில மேலவையின் உறுப்பினராகத் திகழ்ந்துள்ளார்.
- அறநிலையத் துறையின் ஆணையராகப் பணியாற்றியுள்ளார்.
தேன்பொழி மலர்களும் விரிந்தனவே
இன்னலும் பசியும் போயொழிக – தேசம்
எழிலுடன் கூடியே நலமுறுக
பிரிவுகள் பேசியே பூசலிட்ட – பழம்
பேதமை தனைத்தள்ளி அனைவருமே
ஒருதனிக் குடும்பமாய் வாழ்ந்திடுவோம் – நம்முள்
ஒற்றுமை ஓங்கிடச் செய்திடுவோம்
தமிழன் திருநாள் பொங்கலென்றால் – அதில்
தமிழன் பண்புகள் பொங்குமன்றோ?
புவியெலாம் சேர்ந்ததொரு வீடதிலே – யாரும்
புறம்பிலை என்றசொல் தமிழன்றோ?
யாதும் ஊரெனச் சாற்றியதும் – மக்கள்
யாவரும் கேளிர் என்றதுவும்
மேதினிக் குரைத்தவர் நம்முன்னோர் – இன்று
வேற்றுமை நாமெண்ணல் சரியாகுமோ?'
என்ற பாடலை எழுதியவர் – 'பெ.தூரன்'
திருச்சாழல்
- மொழி விளையாட்டின் மூலம் இறைவனின் பெருமை பேசும் செய்யுள் வகை – திருச்சாழல்
- ஒரு பென் இறைவனைப் பழிப்பது போலவும் மற்றொரு பெண் இறைவனது செயலை நியாயப்படுத்துவது போலவும் பாடப்படுவது 'திருச்சாழல்' ஆகும்.
- இவ்வகையில் மாணிக்கவாசகர் இறைவனின் பெருமையைத் தெரிவிக்கும் 20 பாடல்களை பாடியுள்ளார்.
தாயுமிலி தந்தையிலி தான்தணியன் காணேடீ
தாயுமிலி தந்தையிலி தான்தணியன் ஆயிடினுங்
காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ
கோலால மாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த
ஆலாலம் உண்டான் அவன்சதுர்தான் என்னேடீ
ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட
மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ
தானந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் காணேடீ
ஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள்
வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ'
என்று சிவபெருமானைப் போற்றி திருச்சாழல் பாடியவர் – 'மாணிக்கவாசகர்'
பாடலின் பொருள்:
இப்பாடல் ஒரு பெண் இறைவனை பற்றி வினவுதலும் மற்றொரு பெண் இறைவனின் பெருமைகளைக் கூறுவதுமாக அமைந்துள்ளது.பெண் 1: சுடுகாட்டைக் கோயிலாகவும் புலித்தோலை ஆடையாகவும் கொண்ட உங்கள் தலைவனுக்கு தாயும் தந்தையும் இல்லை. இத்தன்மையனோ உங்கள் கடவுள்?
பெண் 2: எங்கள் கடவுளுக்குத் தாய் தந்தை இல்லாவிடினும் அவன் சினந்தால் உலகம் அனைத்தும் கற்பொடியாகி விடும்
பெண் 1: அக்காலத்தில் பாற்கடலைக் கடைந்த போது உண்டாகிய நஞ்சை சிவன் உண்டான். அதற்குக் காரணம் யாதோ?
பெண் 2: அந்த நஞ்சை இறைவன் உண்டிருக்காவிட்டால் பிரமன், விஷ்னு உள்ளிட்ட தேவர்கள் அன்றே அழிந்து இருப்பார்கள்.
பெண் 1 : தான் முடிவு இல்லாதாவனாக இருந்தும் அவனை அடைந்த என்னை ஆனந்த வெள்ளத்தில் அழுந்தச் செய்தானே, இது என்ன புதுமை?
பெண் 2: உன்னை ஆனந்த வெள்ளத்தில் அழுந்தச் செய்த திருவடிகள் தேவர்களுக்கும் மேன்மையான பொருளாகும்.
சாழல்:
- சாழல் என்பது பெண்கள் விலையாடும் ஒரு வகையான விளையாட்டு ஆகும். ஒருத்தி வினா கேட்க, மற்றொருத்தி விடை கூறுவதாக அமைந்திருக்கும்.
- இறைவன் செயல்களையும் அவற்றால் விளங்கும் உண்மைகளையும் விளக்குவது 'திருச்சாழல்' வடிவமாகும்.
- திருமங்கையாழ்வாரும் தமது பெரிய திருமொழியில் இதே வடிவத்தைப் பயன்படுத்தியுள்ளார்.
- மக்கள் வழக்கில் ஒருவர் விடுகதை சொல்லியும் அதற்கு மற்றொருவர் விடை கூறியும் விளையாடுவது இன்றைக்கும் வழக்கில் உள்ளது.
இசைத்தமிழர் இருவர்
தேவாரத்தில் இல்லாது திவ்ய பிரபந்தத்தில் மட்டும் காணப்படும் பண்கள்:
- நைவளம்
- அந்தாளி
- தோடி
- கல்வாணம்
- பியந்தை
- குறண்டி
- முதிர்ந்த இந்தளம்
இளையராஜா எழுதிய நூல்கள்:
- பால்நிலாப் பாதை
- வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது
இளையராஜா பெற்ற விருதுகள் சில:
- இந்திய அரசு – பத்ம விபூஷண் விருது
- சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது
- சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது
- தமிழ்நாடு – கலைமாமணி விருது
- மத்தியப்பிரதேசம் – லதா மங்கேஷ்கர் விருது
- கேரளம் – நிஷாகந்தி சங்கீத விருது
ஏ.ஆர்.ரஹ்மான் பெற்ற விருதுகள் சில:
- இந்திய அரசு – பத்ம பூஷண் விருது
- தமிழ்நாடு – கலைமாமணி விருது
- கேரளம் – தங்கப்பதக்கம்
- உத்திரப்பிரதேசம் – 'ஆவாத் சம்மான் ' விருது
- மத்தியப் பிரதேசம் – 'லதா மங்கேஷ்கர் ' விருது
- மொரீஷியஸ் – தேசிய இசை விருது
- மலேசியா – தேசிய இசை விருது
- ஸ்டான்ஃபோர்ட் பல்கலைல்கழகம் – சர்வதேச இசை விருது.
காற்றில் கலந்த பேரோசை:
- 'மனிதச் சிந்தனையே, கற்பனைக்கும் எட்டாத பேராற்றலே, நீ சிந்தித்தவற்றில் சிறந்தவற்றை என்னிடம் ஒரே ஒரு முறை கூறு. அதனை நான் எட்டுத் திசையிலும் பரப்பி மனித ஜாதியை நீ சொன்ன இடத்திற்கு அழைத்து வருகிறேன். சந்தேகப்படாதே. செய்து காட்டுகிறேன். என்னைப் பயன்படுத்திக் கொள். முடிந்தமட்டும் என்னைப் பயன்படுத்திக்கொள். கைம்மாறு வேண்டாம். என்னை நீ பயன்படுத்திக் கொள்வதே நீ எனக்குத் தரும் கைம்மாறு' என்று கூறியவர் – ஜீவா
- 'என் வாழ்வு என் கைகளில்' என்று கூறியவர் – ஜீவா
- ஜீவா என்றழைக்கப்படும் ப.ஜீவானந்தம் தொடக்கத்தில் காந்தியவாதியாகவும் பிறகு சுயமரியாதை இயக்கப் பேரொளியாகவும் பொதுவுடமை இயக்கத் தலைவராகவும் செயல்பட்டார். சிறந்த தமிழ்ப் பற்றாளர். எளிமையின் அடையாளமாத் திகழ்ந்தவர்.
சித்தர் உலகம்
- சித்தர்கள் சமயங்களில் இருக்கும் தேவையற்ற சடங்குகளை விரும்பாதவர்களாக அறியப்படுகின்றனர்.
- தமிழ் இலக்கிய வரலாற்றில் சித்தர்களுக்கென்று சிறப்பிடம் உண்டு. அவர்கள் வாழும் கலையை அறிந்தவர்கள். விழிப்பு நிலையை உணர்ந்தவர்கள். சித்தத்தை வென்று 'சித்து ' என்னும் பேரறிவினை பெற்றவர்கள்.
- தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் காணப்படும் 'நிறைமொழி மாந்தர் ' என்னும் சொல்லுக்கும் சிலப்பதிகாரத்தில் நடுகாண் காதையில் இடம்பெறும் 'சித்தன் ' என்னும் சொல்லுக்கும் உருயவர்கள் – சித்தர்கள்.
- அறிவு வேறு, ஞானம் வேறு என்று உலகிற்கு விளக்கியவர்கள் – சித்தர்கள்
- யோக மார்க்கத்தையும் ஞான மார்க்கத்தையும் தங்களின் உயர்நெறிகளாகக் கொண்டவர்கள் – சித்தர்கள். அதனால்தான் சித்தர்கள் 'பிறப்பறுத்தவர்கள்' என்று அழைக்கப்பட்டனர்.
- 'மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் ' என்று கூறுவது – அகத்திய ஞானம் (அகத்தியர்)
- 'சித்தர்கள்' என்றால் நிறைவடைந்தவர் என்பது பொருள்.
- தமிழில் 'சித்து' என்னும் சொல் மனம், கருத்து, ஆன்மா என்ற பொருள்களைக் கொண்டது.
- தமிழ்ப் பேரகராதியின்படி சித்தி என்ற சொல் மெய்யறிதல், வெற்றி, காரியம் கைகூடல் என்று பல பொருள்படும். அவர்களை ' எண்வகை சித்திகளைக் கைவரப் பெற்றவர்கள்' என்றும் வரையறுக்கலாம்.
- 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதே சித்தர் நோக்கம்.
- சித்தர்களில் ஆதி சித்தராகக் கருதப்படுபவர் 'திருமூலர்'. இவரது காலம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு அல்லது கி.பி. 6 ஆம் நூற்றாண்டு என்பர்.
- சித்தர்களில் கலகக்காரர் என்று கருதப்படுபவர் 'சிவவாக்கியர்' இவரது காலம் 9 ஆம் நூற்றாண்டு.
- மற்ற சித்தர்கள் கி.பி 14 ஆம் நூற்றாண்டு முதல் வாழ்ந்தவர்கள் என்று கூறுவர்.
- சித்தர் காலத்தைப் போலவே சித்தர்கள் எண்ணிக்கையும் ஆய்வுக்குரியதாகவே உள்ளது.
- பதினென் சித்தர்கள் என்ற வழக்கில் 18 என்பது எண்ணிக்கையைக் குறிக்கவில்லை. மாறாக அவர்கள் பெற்ற 18 பேறுகளைக் குறிக்கிறது என்னும் கருத்தும் உண்டு.
- 'எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தார் அப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில் ' என்ற பாடலில் தன்னை ஒரு சித்தன் என்று கூறியவர் – பாரதியார்
- 'ஓன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்றவர் – திருமூலர்
- 'ஒன்றென்றிரு, தெய்வம் உண்டென்றிரு' என்று பாடியவர் – பட்டினத்தார்
- மனிதர்கள் கடவுளின் பெயரால் கருத்து வேறுபாடு கொண்டு தமக்குள் கலகம் விளைவித்துக் கொள்வதில் சித்தர்களுக்கு உடன்பாடு இல்லை. 'மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்', 'நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்' என்பன போன்ற பாடலடிகள் இதை மெய்ப்பிக்கின்றன.
- ஞானத்தினால் மட்டுமே முக்தியை அடைய முடியும் ஞானம் அல்லாத வேறுவழிகள் முக்தியை அளிக்காது என்று 'திருமந்திரம்' கூறுகிறது.
- 'ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை' என்ற பாடல் இடம்பெற்ற நூல் – திருமந்திரம்
- சித்தர்கலைப் பொறுத்த அளவில் வீடுபேறு என்பதேகூடத் 'தன்னை அறிதல்' தான். தன்னை அறிந்த நிலையில் ஆன்மா தானே தனக்குத் தலைவனாய் நிற்கும் என்பது திருமூலர் வாக்கு.
- 'தன்னை அறிதல்' என்பது தன் உண்மை நிலையை அறிதல். தன்னை அறிவதற்கு 'நான்' என்னும் அகங்காரம் ஒழிய வேண்டும். 'நாடொணாத அமிர்தமுண்டு நான் அழிந்து நின்ற நாள்' என்று கூறியவர் – சிவவாக்கியர்
- சித்தர்களைக் 'கிளர்ச்சியாளர்கள்' என்று கூறுபவர் – அறிஞர் க.கைலாசபதி.
- இன்றைய சமூகத்தை மிகவும் அல்லல்படுத்தும் சாதிக்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று சித்தர்கள் பாடியுள்ளனர்.
- "சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ?' என்று பாடியவர் – சிவவாக்கியர்
- 'சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்' என்று பாடியவர் – பாம்பாட்டிச் சித்தர்
- 'ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே
- சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்' என்று பாடியவர் – ' பத்திரகிரியார் '
- 'உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே' என்று பாடியவர் – திருமூலர் (திருமந்திரம்)
- 'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் ' என்று பாடியவர் – திருமூலர் (திருமந்திரம்)
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தானொரு தோண்டி – அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி'
என்ற பாடலை பாடியவர் – கடுவெளிச்சித்தர்
தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே!
நாதர்முடி மேலிருக்கும் வெண்ணிலாவே! – அங்கே
நானும்வர வேண்டுகின்றேன் வெண்ணியாவே!'
இந்தப் பாடலைப் பாடியவர் – வள்ளலார்.
அட்டமா சித்திகள்:
ஜப்பானிய ஹைக்கூ
'விழுந்த மலர்கிளைக்குத் திரும்புகிறது
அடடா.வண்னத்துப்பூச்சி' என்ற ஹைக்கூ கவிதையை எழுதியவர் – 'மோரிடாகே'
பொருள்:
அமர்ந்து ஓய்வெடுக்கும் காகம்;
இலையுதிர் கால மாலை' என்ற ஹைக்கூ கவிதையை எழுதியவர் – 'பாஷோ'
பொருள்:
'பெட்டிக்கு வந்த பின்
எல்லாக் காய்களும் சமம்தான்
சதுரங்கக் காய்கள்' என்ற ஹைக்கூ கவிதையை எழுதியவர் – 'இஸ்சா'
பொருள்:
இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது'
என்ற கவிதையை எழுதியவர் – 'பிரமிள் – சிவராமலிங்கம்'
தொலைந்து போனவர்கள்:
(எ.கா) அறம், பொருள், இன்பம், வீடு என வாழ்க்கைப்பேறு நான்கு
நாம் எழுதும்போது, பிழையற எழுத வேண்டும்
ஐயா, அம்மையீர்
சிறியவன் ஓரியவன், செல்வன் ஏழை.
சிறுதலைப்பு, நூற்பகுதி எண், பெருங்கூட்டுத்தொடர் முதலிய இடங்களில் முக்காற்புள்ளி: வருதல் வேண்டும்.
(எ.கா) மரபியல்.
உருவுகண்டு எள்ளாமை வேண்டும்.
தலைமையாசிரியர், அரசு மேநிலைப்பள்ளி, காஞ்சிபுரம்.
நீ வருகிறாயா ? என்று கேட்டான். (நேர்கூற்றுத் தொடர்)
என்னே தமிழின் பெருமை! என்றார் கவிஞர்.
அவைத்தலைவீர்!
'ஏ' என்று ஏளனம் செய்தான்
'செவிச்செல்வம் சிறந்த செல்வம் ' என்பர்.
' ஒழுக்கமுடைமை குடிமை ' என்றார்.
நர்த்தகி நடராஜ் பற்றிய குறிப்புகள்
- 'திருநங்கை' என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் – ' நர்த்தகி நடராஜ் '
- முத்தமிழ் வளர்த்த மதுரையில் பிறந்து தம் நாட்டியத் திறமையால் உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்களைப் பெற்றவர் – நர்த்தகி நடராஜ்
- இவருக்கு நர்த்தகி என்னும் பெயரை சூட்டியவர் – கிட்டப்பா
- திருநங்கைகளுல் முதன்முதலில் கடவுச்சீட்டு, தேசிய விருது, மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றவர் – நர்த்தகி நடராஜ்
- சிலப்பதிகாரத்தில் 11 வகையான ஆடற்கலைகள் பற்றியக் குறிப்புகள் உள்ளன.
நர்த்தகி நடராஜ் பெற்ற விருதுகள்:
- தமிழக அரசின் கலைமாமணி விருது
- இந்திய அரசின் சங்கீத நாடக அகாதெமி விருது
- இந்திய அரசுத் தொலைக்காட்சியின் ஏ கிரேடு கலைஞர்
- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சிறந்த கலைஞர்
- பெரியார் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம்
மூதாயியை தேடியலைந்த களைப்பில் பறவை
ஒருகாலத்தில் தன் தாகம் தணித்த
மண்பானையைத்தேடி அல்லலுற்றது.
பாடப்புத்தகத்தில் படம்பார்த்துச் சொன்ன
கதைக்குள்ளிருந்து நீரூற்று எதுவும் பீறிடவில்லை
ஐவகை நிலங்களையும் அலகில் கொத்தி
அடைகாக்க இன்னொரு இடமற்றுப் போக.
நீலவண்ண கடற்பரப்பில்
அந்தப் பறவை ஒரு முட்டை இட்டது
அதன் குஞ்சு பொரிப்பில்
ஆயுதமும் புல்லாங்குழல் மறுகையுமாய்
அணங்கொருத்தி உதித்தெழுந்தாள்
வயல்வெளியெங்கும் சலசலத்து திரிந்த
மருதயாழின் ஓசை வழிந்தோட
கால்கள் சுழன்றாடிய விறலி கூத்தின்முன்
பிரபஞ்சமே தன்னை புனைந்து கொண்டது.
பாணனின் கோப்பை
இப்போது காலியாயிருந்தது
தன் உடலிலிருந்து கிள்ளிப்பறித்த பூவை
குழந்தைக்குத் தந்து வலியில் மூழ்கிய
பச்சைத்தாவரத்தின் கண்களில்
ஒருதுளி ரத்தம் தேங்கியிருந்தது
சங்கக் கவிதையின்எழுத்தொன்றைத்திறந்து
காக்கைப்பாடினி வெளியே வந்தாள்
ஆறாம் நிலத்தில் துளிர்த்த அறிவியல்தமிழி நீயென
அருகே வந்தவள் முத்தம் தருகையில்
பறவைகள் தொலைந்துபோன பூமியில்
குளிரூட்டப்பட்ட அறைக்குள் உட்கார்ந்து
கணிப்பொறித்துறையில் என் சின்னமகள்
ஒரு காக்கையை வரைந்து கொண்டிருந்தாள்'
என்ற கவிதையை எழுதியவர் – ஹெச்.ஜி.ரசூல்