12th Tamil Book Read online mode

12 ஆம் வகுப்பு

பாடம் 1 – உயிரினும் ஓம்பப்படும்

இளந்தமிழே

எம்மருமைச் செந்தமிழே! உன்னை யல்லால்
ஏற்றதுணை வேறுண்டோ? இயம்பி டாயே!
கூண்டதனை உடைத்தெழுந்த சிங்கம் போலக்
குளிர்பொதிகைத் தென்தமிழே! சீறி வா, வா!


என்று தமிழ் மொழியை போற்றியவர் – சிற்பி பாலசுப்ரமணியம்

'பாண்டியரின் சங்கத்தில் கொலுவி ருந்தாய்!
பாரிமுதல் வள்ளல்களைஈன்று தந்தாய்!'

என்ற அடிகள் தமிழ்த்தாயை குறிக்கிறது.

இலக்கணக்குறிப்பு:

  • செம்பரிதி, செந்தமிழ், செந்நிறம் – பண்புத்தொகைகள்

  • முத்துமுத்தாய் – அடுக்குத்தொடர்

  • சிவந்து – வினையச்சம்

  • வியர்வை வெள்ளம் – உருவகம்
  • புணர்ச்சி விதி:

  • செம்பரிதி = செம்மை + பரிதி

  • விதி : ஈறு போதல் – செம் + பரிதி – செம்பரிதி

  • வானமெல்லாம் = வானம் + எல்லாம்

  • விதி : உ்டல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – வானமெல்லாம்

  • செந்தமிழே = செம்மை + தமிழே

  • விதி : ஈறு போதல் – செம் + தமிழே

    விதி : முன்னின்ற மெய் திரி்தல் – செந்தமிழே

    சிற்பி பாலசுப்ரமணியம் பற்றிய குறிப்புகள்:

  • கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர் சிற்பி பாலசுப்பிரமணியம்.

  • பாரதியார் பல்கலைக்கழத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியற்றியவர்.

  • பொழிபெயர்ப்புக்காகவும் 'ஒரு கிராமத்து நதி' என்ற கவிதை நூலிற்காகவும் இரண்டு முறை சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

  • இவருடைய கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், மலையாளம், மராத்தி, இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

  • மலையாளத்திலிருநது கவிதைகளையும் புதினங்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

  • சாகித்திய அகாதமியின் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.
  • சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களின் உரைநடை நூல்கள்:

  • இலக்கியச் சிந்தனைகள்

  • மலையாளக் கவிதை

  • அலையும் சுவடும்
  • சிற்பி பாலசுப்ரமணியம் இயற்றிய நூல்கள்:

  • ஒளிப்பறவை

  • சர்ப்பயாகம்

  • சூரிய நிழல்

  • ஒரு கிராமத்து நதி

  • பூஜ்யங்களின் சங்கிலி

  • தமிழ்மொழியின் நடை அழகியல்

  • தொல்காப்பியம், இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கணம் ஆகும்.

  • 'அந்நில மருங்கின் அறமுதலாகிய
    மும்முதற் பொருட்கும்உரியஎன்ப'

  • என்று பா வகைகளோடு அறிவியல் கருத்துக்களை இணைத்துக் கூறும் நூல் தொல்காப்பியம்

  • சங்க இலக்கியம் அகத்திணை சார்ந்த செய்திகளையும் புறத்திணை சார்ந்த செய்திகளையும் பாடற்பொருள்களாக வடிவமைத்துள்ளது.

  • அகன் ஐந்திணைகளைப் பேசும் நூல் – தொல்காப்பியம்

  • "நடைபெற்றியலும்" என்றும் "நடைநவின்றொழுகும்" என்றும் சில சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டிருக்கிறது.

  • 'ஆசிரிய நடைத்தே வஞ்சி; ஏனை
    வெண்பா நடைத்தே கலி'
    என்று கூறும் நூல் – தொல்காப்பியம்
    'கடந்தடு தானை மூவிருங்கூடி
    உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கரிதே;
    முந்நூறு ஊர்த்தேதண்பறம்பு நன்னாடு;
    முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்;
    யாமும்பாரியும்உளமே;
    குன்றும்உண்டுநீர் பாடினிர் செலினே'

    என்ற பாடல் இடம் பெற்ற நூல் – புறநானூறு

    'படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
    கடாஅ யானைக்கலிமான் பேக'
    என்ற அடிகள் இடம் பெற்ற நூல் – புறநானூறு

    'புணரின் புணராது பொருளே; பொருள்வயின்
    பிரியின் புணராது புணர்வே'
    என்ற அடிகள் இடம் பெற்ற நூல் – நற்றிணை

  • 'நுந்தைதந்தைக்கு இவன்தந்தைதந்தை' என்ற அடிகள் இடம் பெற்ற நூல் – புறநானூறு.

  • கலித்தொகையில் முல்லைக்கலியில், காளைகளில் பல இனங்களைக் காட்டுகிற சொற்கள் நிரம்பிக் கிடக்கின்றன.

  • 'கிடை' என்னும் குறுநாவலின் ஆசிரியர் – கி.ராஜநாராயணன்

  • 'நீர்படு பசுங்கலம்' என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ள நூல் – நற்றிணை

  • 'இடுக வொன்றோ, சுடுகவொன்றோ;
    படுவழிப் படுக, இப்புகழ் வெய்யோன்தலையே'

    என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல் – புறநானூறு

  • தமிழ் அழகியல் என்ற நூலின் ஆசிரியர் – தி.சு.நடராசன்
  • தி.சு.நடராசன் பற்றிய குறிப்புகள்:

    திறனாய்வாளராகக் அறியப்படும் இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்த்தார்.

    தி.சு.நடராசன் இயற்றிய நூல்கள்:

    • கவிதையெனும்மொழி

    • திறனாய்வுக்கலை

    • தமிழ் அழகியல்

    • தமிழின் பண்பட்டு வெளிகள்

    தன்னேர் இலாத தமிழ்

    'ஓங்கலிடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
    ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும்- ஆங்கவற்றுள்
    மின்னேர் தனியாழி வெங்கதிரொன் (று) ஏனையது
    தன்னேர் இலாத தமிழ்!'
    தண்டியலங்காரச் செய்யுள்

    பாடலின் பொருள்:

  • மக்களால் போற்றப்பட்டு, உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றி, கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளை அகற்றுவது ஒன்று. பொதிகை மலையில் தோன்றி, சான்றோரால் தொழப்பட்டு, மக்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்குவதோடு ஒப்புவமை இல்லாததுமாக இருப்பது இன்னொன்று. இருளைப் போக்கும் இவ்விரண்டில் ஒன்று ஒளிர்கின்ற கதிரவன்; இன்னொன்று க்கு நிகரில்லாத தமிழ்.

  • மேற்கண்ட தண்டியலங்கார பாடலில் பயின்று வந்துள்ள அணி – பொருள் வேற்றுமை அணி
  • பொருள் வேற்றுமை அணி – விளக்கம்:

    தமிழுக்கும் கதிரவனுக்கும் இடையே உள்ள பயன் சார்ந்த ஒற்றுமையை முதலில் கூறி அவற்றுள் தமிழ் தன்னேரிலாதது என்ற தன்மையைப் பி ன்னர் வேறுபடுத்திக் காட்டுவதால் இது பொருள் றுமை அணி ஆயிற்று. இது வேற்றுமை அணியின் ஒரு பிரிவாகும்.

    இலக்கணக்குறிப்பு:

    • வெங்கதிர்- பண்புத்தொகை

    • உயர்ந்தோர் – வினையாலனையும் பெயர்

    • இலாத – இடைக்குறை

    அணியிலக்கணத்தை மட்டும் கூறும் இலக்கண நூல்கள்:

    • தணடியலங்காரம்

    • மாறனலங்கொரம்

    • குவலயானநதம்

    அணியிலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல்கள்:

    • தொல்காப்பியம்

    • வீரசோழியம்

    • இலக்கண விளக்கம்

    • தொன்னூல் விளக்கம்

    முத்து வீரியம்:

  • காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட நூலின் பெயர் – தண்டியலங்காரம்.

  • தண்டியலங்காரம் என்னும் நூலின் ஆசிரியர் – தண்டி. இவர் கி.பி. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

  • தண்டியலங்காரம் பொதுவியல்,பொருளணியியல்,சொல்லணியியல்என மூன்று பெரும் பிரிவுகளை உடையது.

  • தம்பி நெல்லையப்பருக்கு

    'தமிழ், தமிழ், தமிழ் – என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க! ஆனால் புதிய செய்தி, புதிய புதிய யோசனை, புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் – தமிழில் ஏறிக்கொண்டே போக வேண்டும்' என்று கூறியவர் – பாரதியார்

    தம்பி நெல்லையப்பருக்கு பாரதி எழுதிய கடிதம்:

    'தம்பி, – நான் ஏது செய்வேனடா!
    தம்பி – உள்ளமே உலகம்!
    ஏறு ! ஏறு! ஏறு ! மேலே! மேலே ! மேலே!
    நிற்கும் நிலையிலிருந்து கீழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக் கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களைக் கண்டு குடல் குலுங்கச் சிரி.
    உனக்குச் சிறகுகள் தோன்றுக. பறந்து போ!
    பற! பற! மேலே! மேலே! மேலே !

    தம்பி – தமிழ்நாடு வாழ்க என்றெழுது.
    தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க என்றெழுது.
    தமி ழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது.
    அந்தத் தமிழ் ப்ள்ளிக்கூடங்களிலே நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க என்றெழுது.
    ஆணும் பெண்ணும் ஓருயிரின் இரண்டு தலைகள் என்றெழுது.
    அவை ஒன்றிலொன்று தழ்வில்லை என்றெழுது.
    பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது.
    பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது.
    தொழில்கள், தொழில்கள் என்று கூவு.
    வியாபாரம் வளர்க, யந்திரங்கள் பெருகுக.
    முயற்சிகள் ஓங்குக. ஸங்கீதம், சிற்பம், யந்திர நூல், பூமிநூல், வான நூல், இயற்கை நூலின் ஆயிரம் கிளைகள் இவை தமிழ் நாட்டிலே மலிந்திடுக என்று முழங்கு.
    சக்தி! சக்தி! சக்தி! என்று பாடு.'

  • எட்டையபுர மன்னர்களின் பரம்பரை வரலாறு பற்றிக் கவிகேசரி சாமி தீட்சிதர் என்பவர் வம்சமனி தீபிகை என்னும் நூலை 1879 இல் வெளியிட்டார். இப்பதிப்பை திருத்தி வெளியிட ஆசை கொண்ட பாரதி ஆட்சி செய்த வெங்கடேசுர எட்டப்பருக்கு 06.08.1919 ல் கடிதம் எழுதினார்.

  • பலவிதமான குற்றங்களுடைய அந்நூலை நல்ல இனிய தமிழ்நடையில் அமைத்துத் தருவேன் என்று குறிப்பிட்டார்.ஆனால் அவர் ஆசை நிறைவேறவில்லை. வம்சமனி தீபிகை மூல வடிவம் மறுபதிப்பாக இளசை மணி என்பவரால் 2008 இல் வெளியிடப்பட்டது.
  • பரலி சு.நெல்லையப்பர் பற்றிய குறிப்புகள்:

  • இவர்சுதந்திரவிடுதலைப்போராட்டவீரர்,கவிஞர்,எழுத்தாளர்,இதழாளர், பதிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர்.

  • பாரதியின் கண்ணன் பாட்டு, நட்டுப் பாட்டு, பாப்பாப் பாட்டு, முரசுப் பட்டு ஆகியவற்றைப் பதிப்பித்தவர்.

  • பாரதி நடத்திய சூர்யோதயம், கர்மயோகி,ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் லோகோபகாரி, தேசபக்தன் ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் பிறகு ஆசிரியராகவும் பணியற்றினார்.

  • இவர் நெல்லைத் தென்றல்,பாரதி வாழ்த்து, உய்யும் வழி ஆகிய கவிதை நூல்களையும் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதினார்.

  • மகாகவி பாரதி நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் ரா.அ.பத்மநாபன் பதிப்பித்த 'பாரதி கடிதங்கள்' என்ற நூலில் இடம் பெற்றிருக்கிறது.

  • பாரதி தம் மறைவிற்கு முன்னர் குத்திகேசவர் என்பவருக்கு கடிதம் எழுதினார்.

  • இலக்கணம்

    தமிழாய் எழுதுவோம்

  • உயிரெழுத்துகள் 12. குறில், நெடில் என்று இரண்டு வகைப்படும்.

  • மெய்யெழுத்துகள் 18. அவை மூன்று வகைப்படும்.

  • வல்லின மெய்கள் – க், ச், , த், ப், ற்

  • மெல்லின மெய்கள் – ங்,ஞ்,ண்,ந்,ம்,ந்,ன்

  • இடையின மெய்கள் – ய், ர், ல், வ், ழ், ள்

  • உயிர்மெய் எழுத்துகள் 216. (உயிர்மெய்க் குறில் 90, உயிர்மெய் நெடில் 126)
  • ஆய்தம்:

  • தமிழில் சொல்லின் தொடக்கமாக மெய்யெழுத்துகள் வருவதில்லை. வரின் தமிழில்லை.

  • (எ.கா) க்ரீடம், ப்ரியா – வட மொழி;

  • வல்லின மெய்யோடு சொல் முடியாது. அப்படி முடிந்தால் அது தமிழ்ச் சொல்லன்று.

  • (எ.கா) பார்க் (Park), பன்ச் (Punch), பட்(But), போத்(Both), டப் (Tub)

  • வல்லின மெய்கள் ஈரொற்றாய் வாராது.. ட், ன் என்னும் மெய்களை அடுத்து மெய்கள் வருவதில்லை. காட்ச்சி, முயற்ச்சி என்றெழுதுவது பிழை.

  • க், ச், த், ப் ஆகியவற்றின் பின் அவற்றின் அவ்வெழுத்து வரிசைகளே வரும். பிற மெய்கள் வராது. (எ.கா). காக்கை, பச்சை, சத்து, உப்பு.

  • ட், ன் என்னு ம் மெய்களுக்குப் பிறகு அவ்வெழுத்து வரிசைக ளும் க ,ச , ப என்னும் வரிசைகளுமே வரும்.(எ.கா) பாட்டு, வெட்கம், காட்சி, திட்பம், காற்று, கற்க, கற்சிலை, கற்பவை

  • ட, ற என்னும் எழுத்துகள் சொல்லின் முதலில் வராது.(எ.கா) டமாரம், றப்பர் என்பது தமிழ் இல்லை.

  • ஆய்த எ ழு த் து சொல்லின் இடையில் மட்டுமே வரும் . தனிச்சொல்லாயி ன் மூவெழுத்தாகவும், தனிக்குறிலை அடுத்தும் வரும் (அஃது, எஃகு, கஃசு).

  • மெல்லின எழுத்துகளில் ண,ன என்பன சொல்லின் தொடக்கமாக வராது.

  • தனிச்சொல்லின் இடையில் வல்லினத்துக்கு முன் அவ்வல்லின மெய்யயோ அவற்றின் இன மெல்லினமெய்யோ வரும். பிற மெய்கள் வருவதில்லை (தக்கை, தங்கை, பச்சை, இஞ்சி, பட்டம், பத்து, பந்து, தப்பு, பாம்பு, கற்று, கன்று).

  • ணகர ஒற்றினை அடுத்து றகரமும் னகர ஒற்றினை அடுத்து டகரமும் வருவதில்லை (எ.கா) கண்டு என்று வரும் , கன்டு என்று வருவதில்லை.

  • தனிக்குறிலை அடுத்து ரகர, ழகர ஒற்றுகள் வாரா.

  • ரகரத்தை அடுத்து ரகர வரிசை எழுத்துகளும், ழகரத்தை அடுத்து ழகர வரிசை எழுத்துகளும் வராது.

  • உயிர் வரின் ஒரு, இரு முறையே ஓர், ஈர் என்று மாறும்.

  • உயிர் வரின் அது, இது, எது முறையே அஃது, இஃது, எஃது என்பதாக மாறும்.
  • லகர, ளகர விதிகள்:

  • வேற்றுமைப்புணர்ச்சியில் லகரத்தைத் தொடர்ந்து வல்லினம் வரின் லகரம் றகரமாய்த் திரிவதுண்டு. (எ.கா) கல் + சிலை = கற்சிலை, கடல் + கரை = கடற்கரை

  • லகரத்தைத் தொடர்ந்து மெல்லினம் வரின் லகரம் னகரமாய்த் திரிவதுண்டு . (எ.கா) பல் + முகம் = பன்முகம்

  • ளகரத்தைத் தொடர்ந்துது வல்லினம் வரின் ளகரம் டகரமாய்த் திரிவதுண்டு. (எ.கா) மக்கள் + பேறு = மக்கட்பேறு

  • ளகரத்தைத் தொடர்ந்து மெல்லினம் வரின் ளகரம் ணகரமாய்த் திரிவதுண்டு. (எ.கா) நாள் + மீன் = நாண்மீன்

  • வருமொழி தகரமாயின் லகரம் றகரமாக மாறுவதோடு தகரமும் றகரமாக மாறும். (எ.கா) சொல் + துணை = சொற்றுணை

  • வருமொழி நகரமாயின் லகரம் னகரமாக மாறுவதோடு நகரமும் னகரமாக மாறும். (எ.கா) பல் + நூல் = பன்னூல்

  • அவ்வழியில், தனிக்குறிலடுத்த லகரம் தகரம் வரும்போது ஆய்தமாக மாறும். தகரமும் றகரமாகும்.(எ.கா) அல் + திணை = அஃறிணை; பல் + துளி = பஃறுளி.

  • 'பழையன கழிதலும் புதியன புகுதலும்
    வழுவல கால வகையி னானே'
    என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல் – நன்னூல்

  • இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல் – தொல்காப்பியம்

  • தமிழ் அழகியல் என்னும் நூலின் ஆசிரியர் – தி.சு.நடராசன்

  • உய்யும் வழி என்னும் நூலின் ஆசிரியர் – பரலி சு.நெல்லையப்பர்

  • நிலவுப்பூ என்னும் நூலின் ஆசிரியர் – சிற்பி பாலசுப்ரமணியம்

  • கிடை என்னும் புதினத்தின் ஆசிரியர் – கி.ராஜநாராயணன்

  • ' மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு
    மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே! கூவி வா, வா! '
    என்று கூறியவர் – சிற்பி பாலசுப்ரமணியன்

    ஆறுமுக நாவலர் பற்றிய குறிப்புகள்

  • 'வசனநடை கைவந்த வல்லாளர்' எனப் புகழப்படுபவர் – ஆறுமுக நாவலர்

  • இவர் யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர்.

  • நிறுத்தக் குறியீடுகளை முதல் முதலாகத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் – ஆறுமுக நாவலர்

  • தமிழ் உரைநடையின் வேந்தராகப் போற்றப்பட்டார்.

  • பெர்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளை ஏற்றுப் பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்தார்.

  • தமிழ், வடமொழி, ஆங்கிலம் எனும் மும்மொழிப் புலமை பெற்றவர்.

  • தமிழ்நூல் பதிப்பு, உரைநடை ஆக்கம், பாடசாலை நிறுவுதல், அச்சுக்கூடம் நிறுவுதல், கண்டன நூல்கள் படைத்தல், சைவ சமயச் சொற்பொழிவு எனப் பன்முக ஆளுமை பெற்றவர்.

  • திருக்குறள் பரிமேலழகர் உரை, சூடாமணி நிகண்டு, நன்னூல் – சங்கர நமச்சிவாயர் விருத்தியுரை என்று பல நூல்களைப் பதிப்பித்தார்.

  • இலக்கண நூல்கள், பூமி சாஸ்திரம் முதலான பாட நூல்கள் அவரால் ஆக்கப்பட்டன. புராண நூல்களை வசனமாக எழுதி அதனை அனைவரும் படிக்கும் படிஎளிய வடிவாக மாற்றினார்.

  • தமது இல்லத்தில் அச்சுக்கூடம் நிறுவிப் பல நூல்களை அச்சிட்டார்.

  • திருவாடுதுறை ஆதீனம் இவருக்கு "நாவலர்" பட்டம் வழங்கியது.

  • பெர்சிவல் பாதிரியார் விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்க்கவும் இவர் உதவினார்.

  • ஆறுமுக நாவலரின் காலம் 1822-1879.

  • 'முச்சங்கங் கூட்டி
    முதுபுலவர் தமைக்கூட்டி
    அச்சங்கத் துள்ளே
    அளப்பரியப பொருள்கூட்டி
    சொற்சங்க மாகச்
    சுவைமிகுந்த கவிகூட்டி
    அற்புதங்க ளெல்லாம்
    அமைத்த பெருமாட்டி!'

    என்ற பாடலை பாடியவர் – கன்ணதாசன்

    மொழி வரலாறு என்ற நூலின் ஆசிரியார்- மு.வரதராசனார்.

    நூல்களும் ஆசிரியர்களும்:

  • காட்டு வாத்து என்ற நூலின் ஆசிரியர்- ந.பிச்சமூர்த்தி

  • நெல்லூர் அரிசி என்ற நூலின் ஆசிரியர் – அகிலன்

  • சுவரொட்டிகள் என்ற கதையின் ஆசிரியர் – ந.முத்துசாமி

  • பாடம் 2 – பெய்யெனப் பெய்யும் மழை

    பெருமழைக்காலம்

  • 'மாமழை போற்றதும்' என்றவர் – இளங்கோவடிகள்

  • 'நீரின்றி அமையாது உலகு' என்றவர் – திருவள்ளுவர்.

  • இந்திய அரசு 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 23 இல் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது.
  • பிறகொரு நாள் கோடை:

  • 'இன்று' என்ற கவிதை குறும்படத்தை வெளியிட்டவர் – அய்யப்ப மாதவன்.

  • அய்யப்ப மாதவன். சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்தவர்.
  • அய்யப்ப மாதவன் இயற்றிய நூல்கள்:

    • மழைக்குப் பிறகும் மழை

    • நானென்பது வேறொருவன்

    • நீர்வளி

    நெடுநல்வாடை

  • பழந்தமிழர் ஐப்பசி, கார்த்திகை மாதங்களை கூதிர்ப்பருவம் என்று குறிப்பிட்டார்கள்.

  • ' வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
    பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தன
    ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்
    ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்
    புலம்பெயர் புலம்பொடு கலங்கி கோடல்
    நீடுஇதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ
    மெய்க்கொள் பெரும்பனி கவுள்புடையுஉ நடுங்க
    மாமேயல் மறப்ப மந்தி கூரப்
    பறவை படிவன வீழ கறவை
    கன்றுகோள் ஒழியக் கடிய வீசி
    குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள் '


    என்ற நெடுநல்வாடைப் பாடலை இயற்றியவர் – நக்கீரர்

    பாடலின் பொருள்:

  • தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுந்த மேகமானது உலகம் குளிருமாறு புதிய மழையைப் பொழிந்தது.

  • தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தை வெறுத்த, வளைந்த கோலையுடைய ஆயர் எருமௌ, ஆடு, பசு ஆகிய நிரைகளை வேறு மேடான நிலங்களில் மேய விட்டனர்.

  • தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர்.அவர்கள் தலையில் சூடியிருந்த நீண்ட இதழ்களையுடைய காந்தாள் மாலை கசங்கியது. பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றிய போதிலும் அவர்களது பற்கள் நடுங்கின. விலங்குகள் குளிர்மிகுதியால் மேய்ச்சலை மறந்தன.குரங்குகள் நடுங்கின.

  • மரங்களில் தங்கியிருந்த பறவைகள் நிலத்தில் வீழ்ந்தன.பசுக்கள் பாலுண்ண வந்த கன்றுகளைத் தவிர்த்தன. மலையையே குளிரச்செய்வது போன்றிலிருந்தது அக்குளிர்கால இரவு.
  • சொல்லும் பொருளும்:

  • புதுப்பெயல் – புதுமழை

  • ஆர்கலி – வெள்ளம்

  • கொடுங்கோல் – வளைந்த கோல்

  • புலம்பு – தனிமை

  • கண்ணி – தலையில் சூடும் மாலை

  • கவுள் – கன்னம்

  • மா – விலங்கு
  • கூதிர்ப்பாசறை – துறை விளக்கம்:

    போர்மேற்சென்ற அரசன் குளிர் காலத்தில் தங்கும் படைவீடு.

    வாகை – திணை விளக்கம்:

    வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமாக வாகைப்பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவது வாகைத்திணை.

    இலக்கணக்குறிப்பு:

  • வளைஇ – சொல்லிசை அளபெடை

  • பொய்யா – ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்

  • புதுப்பெயல், கடுங்கோல் – பண்புத்தொகைகள்
  • நெடுநல்வாடை நூற்குறிப்பு:

  • ஆசிரியர் – மதிரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர். இவர் திருமுருகாற்றுப்படையையும் இயற்றியுள்ளார்.

  • பாட்டுடைத்தலைவன் – பாண்டிய நெடுஞ்செழியன்

  • இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.

  • இந்நூல் 188 அடிகளைக் கொண்டது.

  • ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது.

  • முதல் கல்

    'முதல் கல்' என்ற கதையை எழுதியவர் – உத்தம சோழன் (செல்வராஜ்)

  • 'கிழக்கு வாசல் உதயம்' என்ற மாத இதழை நடத்தி வருபவர் – உத்தம சோழன் (செல்வரஜ்)
  • உத்தம சோழன் (செல்வராஜ்) அவர்களின் சிறுகதைத் தொகுப்புகள்:

  • மனிதத் தீவுகள்

  • குருவி மறந்த வீடு
  • உத்தம சோழன் (செல்வராஜ்) அவர்களின் புதினங்கள்:

  • தொலைதூர வெளிச்சம்

  • கசக்கும் இனிமை

  • கனல்பூக்கள்

  • இலக்கணம்

    நால்வகைப் பொருத்தங்கள்:

    'உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
    அஃ றிணை என்ம்னார் அவரல பிறவே'


    என்று கூறும் தொல்காப்பியம், மக்கள் என்று சுட்டப்படுவோர் உயர்திணை; அவரல்லாத பிற அஃறிணை என்று கூறுகிறது.

  • இடம் தன்மை, முன்னிலை, படர்க்கை என மூன்று வகைப்படும்.

  • தன்மைப் பன்மையில் உளப்பாட்டுத் தன்மைப் பன்மை, உளப்படுத்தாத் தன்மை பன்மை என இருவகை உண்டு.

  • பேசுபவர் (தன்மை) முன்னிலையாரையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு பேசுவது உளப்பாட்டுத் தன்மைப் பன்மைஆகும். (எ.கா) நாம் முயற்சி செய்வோம்(உளப்பாட்டுத் தன்மைப் பன்மை) இத்தொடரில் நாம் என்பது தன்மை முன்னிலையி ல் உள்ள அனைவரையும் குறிக்கிறது.

  • பேசுபவர் முன்னிலையாரை த் தவிர்த்துத் தன்மைப் பன்மையில் பேசுவது உளப்படுத்தாத தன்மைப் பன்மைஆகும். (எ.கா) நாங்கள் முயற்சி செய்வோம்(உளப்படுத்தாத் தன்மைப்பன்மை)

  • தமிழில் திணைப்பாகுபாடு பொருட்குறிப்பு அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.

  • 'உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
    அஃ றிணை என்ம்னார் அவரல பிறவே'
  • இந்நூற்பா இடம்பெற்ற இலக்கண நூல் – தொல்காப்பியம்

  • யார்? எது? ஆகிய வினைச்சொற்கள் பயனிலையாய் அமைந்து, உணர்த்தும் திணைகள் முறையே – உயர்திணை, அஃறிணை
  • மாயூரம் வேதநாயகம் பற்றியக் குறிப்புகள்:

  • பிறந்த ஆண்டு – 1826

  • தமிழின் முதல் நாவலான 'பிரதாப முதலியார் சரித்திரத்தை' இயற்றியவர் – மாயூரம் வேதநாயகம்.

  • 1805 முதல் 1861 வரை ஆங்கிலத்தில் இருந்த நீதிமன்றத் தீர்ப்புகளை முதன் முதலில் தமிழில் மொழிபெயர்த்து 'சித்தாந்த சங்கிரகம்' என்ற நூலாக வெளியிட்டவர் – மாயூரம் வேதநாயகம்.
  • மாயூரம் வேதநாயகம் இயற்றிய நூல்கள்:

  • பெண்மதி மாலை

  • திருவருள் அந்தாதி

  • சர்வ சமய சமரசக் கீர்த்தனை

  • சுகுன சுந்தரி

  • கென்யாவில் பசுமை வளாக இயக்கத்தை தோற்றுவித்தவர் – வங்காரி மத்தாய்.

  • இவருக்கு 2004 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
  • வெட்டியடிக்குது மின்னல் – கடல்
    வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;
    கொட்டி யிடிக்குது மேகம் – கூ
    கூவென்று விண்ணைக் குடையுது காற்று
    சட்டச்சட சட்டச்சட டட்டா – என்று
    தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
    எட்டுத்திசையும் இடிய – மழை
    எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா!

    இப்பாடலை இயற்றியவர் – பாரதியார்

    நூல்களும் ஆசிரியார்களும்:

  • பத்துப்பட்டு ஆராய்ச்சி – மா.இராசமாணிக்கனார்

  • இயற்கைக்குத் திரும்பும் பாதை – மசானாஃபுகோகா

  • கருப்பு மலர்கள் – நா,காமராசன்

  • வானம் வசப்படும் – பிரபஞ்சன்

  • உரிமைத்தாகம் – பூமணி

  • பாடம் 3 – சுற்றத்தார் கண்ணே உள

    தமிழர் குடும்ப முறை

  • இன்று நாம் வழங்கும் "திருமணம்" , "குடும்பம்" ஆகிய இரண்டு சொற்களுமே தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் இடம்பெறவில்லை.

  • குடும்பம் எனும் சொல் முதன்முதலில் திருக்குறளில்தான் (1029) பயின்று வருகிறது.

  • சங்க இலக்கியத்தில் "குடம்பை" , "குடும்பு", "கடும்பு" ஆகிய சொற்கள் குடும்ப அமைப்போடு தொடர்புடையவை. "குடம்பை" என்ற சொல், இருபது இடங்களில் பயின்று வருகிறது. "குடும்பு" எனும் சொல் கூடி வாழுதல் என்று பொருள்படுகின்றது.

  • குடும்பு எனும் சொல்லுடன் "அம்" விகுதி சேர்த்துப் பொருண்மை விரிவாக்கமாக "குடும்பம்" எனும் சொல் அமைந்தது.

  • இரவுக் குறியே இல்லகத் துள்ளும்
    மனையோர் கிளவி கேட்கும் வழியதுவே
    மனையகம் புகாஅக் காலையான'

    என்று கூறும் தொல்காப்பிய நூற்பா இல், மனை ஆகிய இரண்டு வாழிடங்களைக் குறிப்பிடுகின்றது.

  • சங்க இலக்கியத்தில் குடும்பத்தைக் குறிக்கும் மேலும் பல சொற்கள் உள்ளன. இல்,மனை , குரம்பை, புலப்பில், முன்றில், குடில், கூரை, வரைப்பு, முற்றம், நகர், தலிய சொற்கள் குடும்பங்களின் வாழ்விடங்களில் உள்ள வேறுபாடுகளைச் சுட்டுகின்றன.

  • அகநானூற்றில் மருத்த்தினையில் "தம்மனை", "நும்மனை" என்று மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினைக் காண முடிகிறது. புறநானூற்றில் தற்காலிகத் தங்குமிடம் "புக்கில்" எனவும், திருமணத்திற்குப் பின்னர் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் "தன்மனை" எனவும் வழங்கப்பெற்றுள்ளன.

  • இளந்தம்பதியினருக்கு ஏற்ற அறிவுரை கூறி நெறிப்படுத்தும் பணி செவிலிக்குரியது என்று கூறும் நூல் – தொல்காப்பியம்.

  • சங்க காலத்தில் தாய் வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது. பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

  • 'சிறுவர் தாயே பேரிற் பெண்டே' என்ற அடிகள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது.

  • 'செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்' என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல் – புறநானூறு.

  • 'வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்' என்ற அடிகள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது.

  • 'முளரிமருங்கின் முதியோள் சிறுவன்' என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல் – புறநானூறு.

  • 'என்மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும்' என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல் – கலித்தொகை.

  • சங்க காலத்தில் தாய்வழிச் சொத்துக்கள் பெண்களுக்கேச் சேர்ந்தன என்பதை குறுந்தொகை பாடல் தெளிவாக விளக்குகிறது.

  • திருமணத்துக்குப் பின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்த போது அவனுடைய தாய் அவளுக்குச் சிலம்புகழி செய்திருக்கிறாள் என்பதனை,

  • 'நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்
    எம்மனை வதுவை நல்மணம் கழிக'
    என்ற ஐங்குறுநூறு பாடல் அடிகள் மூலம் அறியலாம்.

    பெண் தன் கணவனையே முழுவதும் சார்ந்திருந்த நிலையை
    'மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே'
    என்ற குறுந்தொகை பாடல் மூலம் அறியலாம்.

  • மகனை நடுவணாக்க் கொண்டு தலைவனும் தலைவியும் வாழும் தனிக்குடும்பங்கள் பற்றி 'மறியிடைப் படுத்த மான்பிணை போல்' என்று ஐங்குறுநூறு கூறுகிறது.

  • கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்ந்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.
  • பக்தவச்சல பாரதி எழுதிய நூல்கள்:

    • இலக்கிய மானிடவியல்

    • பண்பாட்டு மானிடவியல்

    • தமிழர் மானிடவியல்

    • தமிழகப் பழங்குடிகள்

    • பாணர் இனவரைவியல்

    • தமிழர் உணவு

    • விருந்தினர் இல்லம்
  • ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகளில் சிலவற்றை ஆங்கிலத்தில் பொழிபெயர்த்தவர் கோல்மன் பார்க்ஸ்.

  • அதனை தமிழில் 'தாகங்கொண்ட மீனொன்று' என்ற தலைப்பில் என்.சத்தியமூர்த்தி மொழிபெயர்த்துள்ளார்.

  • ஜலாலுத்தீன் ரூமி ஆப்கானிஸ்தானில் பிறந்தவர்.

  • பாரசீக்க் கவிஞர்களில் ஒருவர்.

  • இவரது சூஃபி தத்துவப் படைப்பான 'மஸ்னவி' 25,600 பாடல்களைக் கொண்டது.
  • சொல்லும் பொருளும்:

    • இளவல் – தம்பி

    • நளிர்கடல் – குளிர்ந்த கடல்

    • துன்பு – துன்பம்

    • உன்னேல் – எண்ணாதே

    • அனகன் – இராமன்

    • உவா – அமாவாசை

    • உடுபதி – சந்திரன்

    • செற்றார் – பகைவர்

    • கிளை – உறவினர்

    இலக்கணக்குறிப்பு:

    • உளது – இடைக்குறை

    • மாதவம் – உறிச்சொற்றொடர்

    • தாழ்கடல் – வினைத்தொகை

    • செற்றவர் – வினையாலனையும் பெயர்

    • நுந்தை – நும் தந்தை என்பதன் மரூஉ

    கம்பராமாயணம்

  • கம்பர் தாம் இயற்றிய இராமாயணத்திற்கு இராமாவதாரம் என்று பெயரிட்டார்.

  • கம்பரின் காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு.

  • 'அன்னவன் உரை கேளா
    அமலனும் உரை நேர்வான்
    என் உயிர் அனையாய் நீ
    இளவல் உன் இளையான்; இந்
    நன்னுதலவள் நின் கேள்;
    நளிர் கடல் நிலம் எல்லாம்
    உன்னுடையது; நான் உன் தொழில்
    உரிமையின் உள்ளேன்.'

    என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல் – கம்பராமாயணம்

    பாடலின் பொருள்:

    குகன் கூறியவற்றைக் கேட்ட இராமன், 'என் உயிர் போன்றவனே! நீ என் தம்பி; இலக்குவன் உன் தம்பி; அழகிய நெற்றியைக் கொண்ட சீதை உன் அண்ணி; குளிர் கடலும் இந்நிலமும் எல்லாம் உனதேயாகும். நான் உன்னுடைய ஏவலுக்கேற்பப் பணிபுரிபவன்' என்று இராமன் கூறினான்.

    ' மற்று இனி உரைப்பது என்னே?
    வானிடை மண்ணில், நின்னைச்
    செற்றவர் என்னைச் செற்றார்;
    தீயரே எனினும் உன்னோடு
    உற்றவர் எனக்கும் உற்றார்; உன்
    கிளை எனது; என் காதல்
    சுற்றம் உன் சுற்றம் ; நீ என்
    இன் உயிர்த் துணைவன் என்றான்'

    பாடலின் பொருள்:

    இராமன் சுக்ரீவனிடம், ' இனி நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? விண்ணிலும் மண்ணிலும் உள்ள உன் பகைவர் என் பகைவர்;தீயவராக இருப்பினும் கூட உன் நண்பர்கள் என் நண்பர்கள்; உன் உறவினர் என் உறவினர்; அன்பு மிகுந்த என் சுற்றத்தினர் உன் சுற்றத்தினர்; நீ, என் இனிய உயிர் நண்பன்!' என்றான்.

    ' குகனோடு ஐவர் ஆனோம்
    முன்பு; பின் குன்று சூழ்வான்
    மக னொடும் அறுவர் ஆனோம்;
    எம்முழை அன்பின் வந்த
    அகன் அமர் காதல் ஐய!
    நின்னொடும் எழுவர் ஆனோம்;
    புகல் அருங் கானம் தந்து,
    புதல்வரால் பொலிந்தான் நுந்தை'

    பாடலின் பொருள்:

  • (நாங்கள் நால்வர் உடன்பிறந்தவர்களாக இருந்தோம்). குகனுடன் சேர்த்து நாங்கள் ஐவர் ஆனோம்.பின்னர் மேருமலையைச் சுற்றி வரும் கதிரவனின் மகனான சுக்ரீவனுடன் அறுவர் ஆனோம்.

  • உள்ளத்தில் அன்பு கொண்டு எங்களிடம் வந்த அன்பனே, உன்னுடன் சேர்த்து எழுவர் ஆனோம். புகுதற்குரிய கானக வாழ்வை மேற்கொள்ளும்படி என்னை அனுப்பிய உன் தந்தையாகிய தயரதன், இதனால் புதல்வர்களைக் கூடுதலாக அடைந்து பெருமை பெருமை பெறுகிறான்.
  • சொல்லும் பொருளும்:

    • அமலன் – குற்றமற்றவன், இராமன்

    • இளவல் – தம்பி

    • நளிர்கடல் – குளிர்ந்தகடல்

    • துன்பு – துன்பம்

    • உன்னேல் – எண்னாதே

    • அனகன் -இராமன்

    • உவா – அமாவாசை

    • உடுபதி – சந்திரன்

    • செற்றார் – பகைவர்

    • கிளை – உறவினர்

    இலக்கணக்குறிப்பு:

    • உளது – இடைக்குறை

    • மாதவம் – உரிச்சொற்றொடர்

    • தாழ்கடல் – வினைத்தொகை

    • செற்றவர் – வினையாலனையும் பெயர்

    • நுந்தை – நும் தந்தை என்பதன் மரூஉ

    புணர்ச்சி விதி:

  • அருங்கானம் = அருமை + கானம்

  • விதி : ஈறு போதல் – அரு + கானம்

    விதி : இனமிகல் – அருங்கானம்

    கம்பராமாயணம் பற்றியக் குறிப்புகள்:

  • கம்பராமாயணத்தை இயற்றியவர் – கம்பர்.

  • கம்பராமாயணம் ஒரு வழிநூல் ஆகும்.

  • கம்பர் பிறந்த ஊர் – சோழநாட்டுத் திருவழுந்தூர் (தேரெழுந்தூர்)

  • கம்பர் இறந்த ஊர் – பாண்டி நாட்டிலுள்ள நாட்டரசன் கோட்டை

  • கம்பரை ஆதரித்தவர் – சடையப்ப வள்ளல்

  • கம்பர் 1000 பாடலுக்கு ஒருமுறை சடையப்ப வள்ளலைப் பாடியுள்ளார்.

  • கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் -இராமாவதாரம்.
  • கம்பராமாயணம் 6 காண்டங்களை உடையது:

    1. பால காண்டம்

    2. அயோத்தியா காண்டம்

    3. ஆரண்ய காண்டம்

    4. கிட்கிந்தா காண்டம்

    5. சுந்தர காண்டம்

    6. யுத்த காண்டம்
  • கம்பராமாயணத்தில் உள்ல படலங்கள் – 113

  • கம்பராமாயணத்திலுள்ள பாடல்கள் – 10569
  • கம்பர் எழுதிய பிற நூல்கள்:

    • ஏரெழுபது

    • திருக்கை வழக்கம்

    • சரசுவதி அந்தாதி

    • சிலையெழுபது

    • சடகோபர் அந்தாதி
  • கம்பரின் காலம் 12 ஆம் நூற்றாண்டு

  • உரிமைத் தாகம்

    'எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே' என்று கூறியவர் – ஔவையார்

    எழுத்தாளர் பூமணி பற்றிய குறிப்புகள்:

  • இவரது இயற்பெயர் பூ.மாணிக்கவாசகர்.

  • தமிழக அரசின் கூட்டுறவுத்துறையில் துணைப்பதிவாளராகப் பணியற்றியவர்.

  • 'கருவேலம்பூக்கள்' என்ற திரைப்பட்த்தை இயக்கியுள்ளார். அஞ்ஞகாடி என்னும் புதினத்திற்காக 2014 இல் சாகித்திய அகாதமி விருதுப் பெற்றுள்ளார்.
  • இவரது சிறுகதை தொகுப்புகள்:

  • அறுப்பு

  • வயிறுகள்

  • ரீதி

  • நொறுங்கல்கள்

  • பூமணி சிறுகதைகள்
  • இவரது புதினங்கள்:

  • வெக்கை

  • பிறகு

  • அஞ்ஞகாடி

  • கொம்மை

  • இலக்கணம்

    பொருள் மயக்கம்

    பண்புத்தொகை, வினைத்தொகையாக வரும் சொற்கள் ஒரு சொல்என்னும்தன்மை கொண்டவை. எனவே அவற்றைப் பிரித்து எழுதக்கூடாது.

    (எ.கா)

  • செங்கடல்(சரி) – செங் கடல்(தவறு)

  • கத்துகடல்(சரி) – கத்து கடல்(தவறு)

  • பெயர்ச்சொல் வினைச்சொல் ஆகியவற்றிற்கு இடையில்நின்று பொருளைத் தெளிவாக உணர்த்தி நிற்கும் இடைச்சொற்களைச் சேர்த்து எழுத வேண்டும்.

    (எ.கா)

  • அணங்குகொல் (சரி)

  • அணங்கு கொல்(தவறு)

  • இடைச்சொல்லுடன் சொற்களைச் சேர்த்தே எழுதவேண்டும்.

    (எ.கா)

  • பேசியபடி பணம் கொடுத்தான்(பேசியவாறு)

  • பேசிய படி பணம் கொடுத்தான்(படியளவு)

  • உடம்படுமெய்கள்அமைந்த சொற்களில் உடம்படுமெய்களைச் சேர்த்துத்தான் எழுதல் வேண்டும்.

    (எ.கா)

  • மணியடித்துச் சென்றான் (ஒலி எழுப்புதல்)

  • மணி அடித்துச் சென்றான் (மணி என்பவன் யாரையோ அறைதல்)

  • பன்மையை உணர்த்தும்"கள்" விகுதி சேர்ந்த சொற்களைப் பிரிக்காமல்எழுதவேண்டும்.

    (எ.கா)

  • ஈக்கள் மொய்த்தன – ஈக் கள் மொய்த்தன

  • குரங்குகள் உண்டன – குரங்கு கள் உண்டன.

  • இரட்டைக்கிளவிச் சொற்களைச் சேர்த்து எழுத வேண்டும்.

    (எ.கா)

  • படபடவெனச் சிறகை அடித்தது (சரி)

  • பட பட எனச் சிறகை அடித்தது (தவறு)

  • சொற்புணர்ச்சியில்நிலை மொழியின்ஈற்றெழுத்து மெய்யெழுத்தாகவும் வருமொழி முதலெழுத்து உயிரெழுத்தாகவும் இருந்தால் அவற்றைச் சேர்த்தே எழுதவேண்டும்.

    (எ.கா)

  • சுடராழி – சுடர் + ஆழி

  • உரிச்சொற்களைப் பெயருடனும் வினையுடனும் பயன்படுத்தும்போது சேர்த்தே எழுதவேண்டும்.

  • (எ.கா)

  • கடிமணம் – கடி மணம்

  • உம்மைத்தொகைச் சொற்களையும் நேரிணைச் சொற்களையும் எதிரிணைச் சொற்களையும் சேர்த்தே எழுதுதல் வேண்டும்.

  • உற்றாருறவினர் (சரி) – உம்மைத்தொகை

  • உற்றார் உறவினர் (தவறு)

  • சீரும்சிறப்பும்(சரி) – நேரிணைச்சொற்கள்

  • சீரும் சிறப்பும்(தவறு)

  • மேடுபள்ளம்(சரி) – எதிரிணைச்சொற்கள்

  • மேடு பள்ளம்(தவறு)

  • அது என்னும் வேற்றுமை உருபு அஃறிணைக்கு உரியது. வரும் சொல் உயர்திணையாயின் அது என்னும் உருபினைப் பயன்படுத்துதல் கூடாது. எனது வீடு, அரசரது மாளிகை என்று எழுதலாம். ஆனால், எனது மனைவி, அரசரது மகன் என்றெழுதுதல் பிழை (மனைவி, மகன் – உயர்திணை).

  • சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள் , சங்க காலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன, அவை – திருமணமும் குடும்பமும்

  • உரிமைத்தாகம் என்னும் புதினத்தின் ஆசிரியர் – பூமணி

  • தமிழர் குடும்ப முறை என்னும் நூலின் ஆசிரியர் – பக்தவச்சல பாரதி

  • ' எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
    சக்தி பிறக்குது மூச்சினிலே '
    என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது – தந்தை வழிச் சமூக முறை

    பரிதிமாற் கலைஞர் பற்றிய குறிப்புகள்:

  • பரிதிமாற் கலைஞர் 1870-ல் பிறந்தார்.

  • அவர் தந்தையாரிடம் வடமொழியையும் மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழும் பயின்றார்.

  • எப்.ஏ (F.A – First Examination in Arts) தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று பாஸ்கர சேதுபதி மன்னரிடம் உதவித்தொகை பெற்றார்.

  • சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ பயின்று, தமிழிலும் வேதாந்த தத்துவ சாத்திரத்திலும் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுத் தங்கப் பதக்கத்தைப் பரிசாகப் பெற்றார்.

  • 1893-ஆம் ஆண்டு ன்னைக் கிறித்துவக் கல்லூரியில் உதவித் மிழாசிரியராகப் ணியாற்றத் தொடங்கி, பின்பு தலைமைத் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.

  • ரூபாவதி, கலாவதி ஆகிய நாடக நூல்களையும் களவழி நாற்பது நூலைத் ழுவி மான விஜயம் என்னும் நூலையும் இயற்றியுள்ளார்.

  • ஆங்கில நாடக இலக்கணத்தை அடிப்படையாகக்கொண்டு நாடகவியல் என்னும் நாடக இலக்கண நூலையும் இயற்றினார்.

  • இவரது தனிப்பாசுரத் தொகை என்னும் நூல் ஜி.யு.போப் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

  • மு.சி.பூர்ணலிங்கனாருடன் இணைந்து இவர் நடத்திய ஞானபோதினி அக்காலத்தில் குறிப்பிடத்தகுந்த அறிவியல் இதழாகத் திகழ்ந்தது.

  • தமிழை உயர்தனிச் செம்மொழி என்று தன் பேச்சின்மூலம் முதன்முதலில் மெய்ப்பித்தவர் இவரே.

  • பின்னாளில் 2004ஆம் ஆண்டு நடுவண் அரசு தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்தது.

  • பெற்றோர் தனக்கு இட்ட பெயரான சூரியநாராயணர் என்ற வடமொழிப் பெயரைத் தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று பெயர்மாற்றம் செய்து கொண்டார்.

  • தமிழ், தமிழர் முன்னேற்றம் பற்றிச் சிந்தித்துச் செயலாற்றுவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்த இவர் 33 (1903)ஆவது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

  • பரிதிமாற் கலைஞரை 'திராவிட சாஸ்திரி' என்று போற்றியவர் – சி.வை.தாமோதரனார்

  • 'பல மொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடைய மொழி, உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்தது தனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி செம்மொழி ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்.' என்று பரிதிமாற் கலைஞர் தனது உயர்தனிச் செம்மொழி என்னும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

  • 'பெற்றெடுத்த தமிழ்த்தயைப் பின்னால் தள்ளி
    பிறமொழிக்கு சிறப்பளித்த பிழையை நீக்க
    ஊற்றெடுத்தே அன்புரையால் உலுங்க வைத்திவ்
    உலகத்தில் தமிழ்மொழிக்கு நிகரும் உண்டோ?
    கற்றுணர்ந்தே அதன்இனிமை காண்பாய் என்று
    கம்பனொடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித்
    தெற்றெனநம் அகக்கண்ணைத் திறந்து விட்ட
    தெய்வக்கவி பாரதிஓர் ஆசான் திண்ணம்'

    மேற்கண்ட பாடலில் பாரதியாரை புகழ்ந்து பாடியவர் – நாமக்கல் கவிஞர்.

    நூல்களும் ஆசிரியர்களும்:

    • சக்கரவர்த்தி திருமகன் – இராஜாஜி

    • கம்பர் யார்? – வ.சுப.மாணிக்கம்

    • வயிறுகள் – பூமணி (சிறுகதைத்த் தொகுப்பு)

    • சிறை – அனுராதா ரமணன்

    • புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி

    திருக்குறள்

    'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது.'

    மேற்கண்ட குறளில் பயின்று வந்துள்ள அணி – நிரல்நிறை அணி

    'சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
    ஏமப் புணையைச் சுடும்'

    மேற்கண்ட குறளில் பயின்று வந்துள்ள அணி – ஏகதேச உருவக அணி

  • திருக்குறள் குறள் வெண்பாக்களால் அமைந்த நூலாகும்.

  • ஏட்டுச் சுவடியிலிருநது திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812.

  • 'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
    வான்புகழ் கொண்ட தமிழ்நாடு'
    என்று பாரதியார் திருக்குறளைப் பாராட்டியுள்ளார்.

    'வள்ளுவனைப் பெற்றதால்
    பெற்றதே புகழ் வையகமே'
    என்று பாரதிதாசன் திருவள்ளுவரைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

  • திருக்குறளில் அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள் உள்ளன.

  • பொருட்பாலில் 70 அதிகாரங்கள் உள்ளன.

  • இன்பத்துப் பாலில் 25 அதிகாரங்கள் உள்ளன.
  • திருக்குறளில் அறத்துப்பாலில் உள்ள இயல்கள்:

  • பாயிரவியல் – 04

  • இல்லறவியல் – 20

  • துறவறவியல் – 13

  • ஊழியல் – 01
  • திருக்குறளில் பொருட்பாலில் உள்ள இயல்கள்:

  • அரசு இயல் – 25

  • அமைச்சு இயல் – 32

  • ஒழிபியல் – 13
  • திருக்குறளில் இன்பத்துப்பாலில் உள்ள இயல்கள்:

  • களவியல் – 07

  • கற்பியல் – 18

  • திருக்குறள் 9 இயல்களையும், 133 அதிகாரங்களையும், 1330 குறள்களையும் கொண்டது.

  • தமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையினை, கன்னியாகுமரியில் நிறுவியுள்ளது.

  • திருவள்ளுவரின் நினைவைப் போற்றும் வகையில் வேலூரில் திருவள்ளுவர்ப் பல்கலைகழகம் அமைக்கப்பட்டுள்ளது.
  • பாடம் 4 – செல்வத்துள் எல்லாம் தலை

    பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

    அக்கால பாடசாலைகளில் பயன்படுத்தப்பட்ட சொற்கள்:

  • வித்தியாரம்பம் – கல்வி தொடக்கம்

  • வித்தியாப்பியாசம் – கல்விப் பயிற்சி

  • உபத்தியாயர் – ஆசிரியர்

  • அக்ஷராப்பியாசம் – எழுத்துப் பயிற்சி

  • கீழ் வாயிலக்கம் – பின்ன எண்ணின் கீழ்த்தொகை

  • மேல் வாயிலக்கம் – பின்ன எண்ணின் மேல்தொகை

  • குழிமற்று – பெருக்கல் வாய்பாடு

  • சீதாள பத்திரம் – தழை மடல்

  • நவத்வீபம் – வங்காளத்தில் உள்ள ஓர் ஊர்

  • இரட்டை அர்த்தங்கள் மாண்டு போவதில்லை என்ற நூலின் ஆசிரியர் – பேராசிரியர் அ.கா.பெருமாள்

  • 'மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்
    மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய்'

    என்று கூறும் நூல் 'தமிழ் விடு தூது'

    'வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை
    கடனாக் கொளினே மடநனி இகக்கும்'

    என்று கூறும் நூல் – நன்னூல்

  • இல்லறம் நடத்தும் காலத்தில் வாதம் புரியவும், கல்வி கற்கவும்,கற்பிக்கவும் வேறு இடத்திற்கு பிரிந்து செல்வதனை தொல்கப்பியத்திலும் பிறவற்றிலும் 'ஓதற் பிரிவு' என்று குறிப்பிடுகின்றனர்.

  • தஞ்சாவூரில் இருந்த ஆகம சாஸ்திர பண்டிதராகிய சர்வசிவ பண்டிதரென்பவரிடத்தில் பல அன்னிய தேசத்து மாணாக்கார்கள் வந்து கற்றுச் சென்றார்களென்னும் செய்தி முதலாம் இராஜராஜன் காலத்தில் தஞ்சையிற் பொறிக்கப்பட்ட சாசனம் ஒன்றால் தெரிகிறது.
  • உ.வே.சா பற்றிய குறிப்புகள்:

  • தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படுவவர்.

  • இவரது இலக்கியக் கட்டுரைகள் 'உயிர்மீட்சி ' என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.

  • 'மகாமகோபாத்தியாய', 'திராவிட வித்தியா பூஷனம்', "தாக்ஷிணாத்திய கலாநிதி', உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றுள்ளார்.

  • கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழ் ஆசிரியராகப் பணியற்றியவர்.

  • 1932-ல் சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு 'டாக்டர்' பட்டம் வழங்கியது.

  • இவரது திருவுருவச்சிலை, சென்னை மாநிலக்கல்லூரியில் வங்கக்கடலை நோக்கி நிற்கும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது.

  • சென்னையில் திருவான்மியூரில் இவர் பெயரால் உ.வே.சா. நூலகம் அமைந்துள்ளது.

  • இதில் வெற்றி பெற உரைநடைஎன்பது மக்கள் பேசும் எளிய சொற்கள் தொடர்களாக அமைவது.

  • கவிதை என்பது அச்சொற்கள் எதுகை, மோனை, இயைபு, முரண், சந்தம் முதலிய யாப்பிலக்கண நெறிகளுக்கு உட்பட்டு அமைவது.

  • ' விண்வேறு; விண் வெளியில் இயங்கு கின்ற
    வெண்மதியும் செங்கதிரும் முகுலும் வேறு;
    மண்வேறு; மண்ணோடு கலந்தி ருக்கும்
    மணல்வேறு;பனித்துளியும் மழையும் வேறு;
    புண்வேறு;வீரர்களின் விழுப்புண் வேறு;
    புகழ்வேறு; செல்வாக்கு வேறு; காணும்
    கண்வேறு;கல்விக்கண் வேறு; கற்றார்
    கவிநடையும் உரைநடையும் வேறு வேறு'

    ஆக்கும்வரை நாமதனை அரிசி என்றும்;
    ஆக்கியபின் சோறென்றும் சொல்லு கின்றோம்;
    பூக்கும்வரை அரும்பென்றும் பூத்த பின்பே
    பூவென்றும் சொல்லிகின்றோம் அதுபோலச் சொல்லைச்
    சேர்க்கின்ற நேரத்தில் , எதுகை மோனை
    சேர்க்காமல்,அடியளவை, அறிந்தி டாமல்
    வார்க்கின்ற வடிவந்தான் வசனம்; யாப்பில்
    வந்தடங்கும் வார்த்தைகளே கவிதை யாகும்

    ' எருவினிலே பயிர்விளையும்; சிறந்த கேள்வி
    எழுப்புவதால் ஆராய்ச்சி விளையும்; அந்தி
    இரவினிலே குளிர்விளையும்; நுணுக்கத் தோட
    எழுத்தெண்ணி முன்னோர்போல் கற்று வந்தால்,
    அறம்பொருள்கள் உள்ளத்தில் விளையும்; மிஞ்சும்
    அறிவினிலே புகழ்விளையும் ; இவற்றை யெல்லாம்
    பெரும்பாலும் அறியாமல் எழுது வோர்க்குப்
    புகழெங்கே சிறப்பெங்கே விலையக் கூடும்?'

    என்ற கவிதையை எழுதியவர் – சுரதா

    கவிஞர் சுரதா பற்றிய குறிப்புகள்:

  • இவரது இயற்பெயர் இராசகோபாலன்

  • பிறந்த ஆண்டு 23.11.1921.

  • துறைமுகம் என்னும் கவிதைத் தொகுப்பை எழுதியுள்ளார்.

  • பாரதிதாசனின் மீது கொண்ட பற்றுதல் காரணமாக தமது பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார்.

  • அதன் சுருக்கமே சுரதா என்பதாகும்.

  • தாசன் என்றால் அடிமை என்று பொருள்.

  • 'காவியம்' என்ற இதழை நடத்தியதோடு 'இலக்கியம்', 'விண்மீன்', 'ஊர்வலம்' போன்ற இலக்கிய ஏடுகளையும் நடத்தியுள்ளார்.
  • சுரதா இயற்றிய நூல்கள்:

    • 'தேன்மழை' என்னும் கவிதைத்தொகுதி

    • சாவின் முத்தம்

    • உதட்டில் உதடு

    • பட்டத்தரசி

    • சுவரும் சுண்ணாம்பும்

    • துறைமுகம்

    • வார்த்தை வாசல்

    • எச்சில் இரவு

    • கட்டுரை – முன்னும் பின்னும்

    நடத்திய இதழ்கள்:

    • காவியம் (முதல் கவிதை இதழ்)

    • இலக்கியம்

    • ஊர்வலம்

    • சுரதா
    இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

    இடையீடு

    எழுத்தாளர் சி.மணி பற்றிய குறிப்புகள்:

  • 'இதுவரை' என்ற கவிதை தொகுப்பினை இயற்றியுள்ளார்.

  • 1959 முதல் 'எழுத்து' இதழில் இவரது கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன.

  • 'நடை' என்ற சிற்றிதழை நடத்தியவர்.

  • இவர் படைத்த இலக்கணம் பற்றிய 'யாப்பும் கவிதையும்' என்னும் நூலும், 'வரும் போகும்', 'ஒளிச்சேர்க்கை' ஆகிய கவிதை தொகுப்புகளும் குறிப்பிடத்தக்கவை.

  • ஆங்கிலப் பேராசிரியான இவர் 'தாவோ தே ஜிங்' என்ற சீன மெய்யியல் நூலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

  • இவர் புதுக்கவிதையில் அங்கதத்தை மிகுதியாக பயன்படுத்தியவர்.

  • இருத்தலின் வெறுமையை சிரிப்பும் கசப்புமாகச் சொன்னவர்.

  • 'விளக்கு இலக்கிய விருது', 'தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக விருது', 'ஆசான் கவிதை விருது', 'கவிஞர் சிற்பி விருது' ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

  • 'வே.மாலி', 'செல்வம்' போன்ற புனைப்பெயர்களிலும் எழுதியுள்ளார்.

  • புறநானூறு

    'அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென,
    வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்
    காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;
    மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
    மழுவுடைக் காட்டகத்து அற்றே
    எத்திசைச் செலினும் , அத்திசைச் சோறே '

    என்ற புறநானூற்றுப் பாடலை எழுதியவர் – ஔவையார்

    திணை: பாடாண் திணை

    விளக்கம்: ஒருவருடைய புகழ், வலிமை, கொடை , அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண் திணையாகும்.

    துறை: பரிசில் துறை

    விளக்கம்: பரிசு வேண்டி வாயில் நிற்பது.

    சொல்லும் பொருளும்:

    • வள்ளியோர் – வள்ளல்கள்

    • வயங்குமொழி – விளங்கும் சொற்கள்

    • வித்தி – விதைத்து

    • உள்ளியது – நினைத்தது

    • உரன் – வலிமை

    • வறுந்தலை – வெறுமையான இடம்

    • காவினெம் – காட்டிக் கொள்ளுதல்

    • கலன் – யாழ்

    • மழு – கோடரி

    • கலப்பை – கருவிகளை வைக்கும் பை

    இலக்கணக்குறிப்பு:

    • வயங்கு மொழி – வினைத்தொகை

    • அடையா – ஈறுகெட்ட எதிற்மறை பெயரெச்சம்

    • அறிவும் புகழும் – எண்ணும்மை

    • சிறா அர் – இசை நிறை அளபடை

    புறநானூறு பற்றியக் குறிப்புகள்:

  • புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.புறம்,புறப்பாட்டு எனவும் வழங்கப்படும்.

  • தமிழரின் போர்,வீரம்,நாகரிகம்,பண்பாடு,நெறிப்பட்ட வழ்க்கைமுதலியவற்றை விளக்கமாக எடுத்துரைக்கிறது.

  • புறநானூறு 400 படல்களால் ஆனது.

  • இது அகவற்பாக்களால் ஆனது.

  • இதிலுள்ள பாடல்களை 158 புலவர்கள் பாடியுள்ளனர்.

  • இந்நூலை தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.

  • புறநானூற்றுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்

  • புறநானூற்றின் கடவுள் வாழ்த்துச் சிவனைப் பற்றியது.

  • அறம், பொருள், வீடு என்ற மூன்றையும் பாடும் நூல் – புறநானூறு

  • பெண்களின் வீரத்தைக் கூறும் துறை 'மூதின் முல்லை'

  • அதியமானிடம் நட்பு பாராட்டிய ஔவை அவருக்காக தூது சென்றவர். அரசவை புலவராக இருந்து அரும்பணியற்றியவர்;இவர் பாடியதாக அகநானூற்றில் 4, குறுந்தொகையில் 15, நற்றிணையில் 7, புறநானூற்றில் 33 என மொத்தம் 59 பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.
  • பாதுகாப்பாய் ஒரு பயணம்:

  • 'முதல் பன்னாட்டுச் சாலை அமைப்பு மாநாடு' பாரிஸ் நகரத்தில் 1909-ல் நடைபெற்றது.

  • இலக்கணம்

    பா இயற்றப் பழகலாம்

  • சொல்லுதலை (செப்பல்) அடிப்படையாகக் கொண்டு தோன்றியது வெண்பாவாகும். ஆகவே இது செப்பலோசை உடையது.மற்ற பாக்களைக் காட்டிலும் சில இலக்கண கட்டுக்கோப்புகளை உடையது. இதனாலேயேம் வெண்பாவை வன்பா என்று அழைப்பார்கள்.

  • வெண்பாவை இலக்கணக் கட்டுப்பாடு குலையாமல் இயற்றவேண்டும். வெண்பா வெண்டளையால் அமையவேண்டும் என்பது இன்றியமையாத விதி. வெண்பாவிற்கான தளையே வெண்டளை. இத்தளை இயற்சீர்வெண்டளை, வெண்சீர் வெண்டளைஎன இரண்டு வகைப்படும்.

  • தளைத்தல் என்பதற்குக்கட்டுதல், பிணித்தல் என்று பொருள். நண்பர்கள் கைகோத்தபடி நடப்பதைப் போல, சீர்கள் வெண்டளையால் கட்டுக்குலையாதபடி யாக்கப்படுவது வெண்பா. மா முன்நிரை- விளம் முன்நேர்- காய் முன்நேர் என்பதே வெண்பாவிற்கான எளிய தளை இலக்கணம்.

  • மா முன் நிரை ———– இயற்சீர் வெண்டளை

  • காய் முன் நேர் ———- வெண்சீர் வெண்டளை

  • மா,விளம் இரண்டும் ஈரசைச் சீர்கள்

  • காய் என்பது மூவசைச் சீர் ஆகும்

  • மா – தேமா, புளிமா

  • விளம் – கூவிளம், கருவிளம்

  • காய் – தேமாங்காய்,புளிமாங்காய்,கூவிளங்காய், கருவிளங்காய்

  • முதற்சீர் மாச்சீர் என்றால் வரும் சீரின்முதல் அசை நிரையாக இருக்க வேண்டும்.

  • முதற்சீர் விளச்சீர் அல்லது காய்ச்சீர் என்றால் வரும் சீரின் முதல் அசைநேர் என்பதாக இருக்கவேண்டும்.வரும்சீரின்முதல் அசையைமட்டுமேகவனத்தில் கொள்ளவேண்டும்.

  • ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாடு ஒன்றில் முடியவேண்டும். நாள், மலர் என்பவை ஓரசைச் சீர்கள்.

  • காசு, பிறப்பு என்பவை குற்றியலுகர ஓசையோடு முடியும் சீர்கள். ஈற்று அயற்சீர், மாச்சீர், என்றால் மலர் (அ) பிறப்பு வரும். விளச்சீர், காய்ச்சீர்எனில் நாள் (அ) காசு என்னும் வாய்பாடு வரும்.

  • நேர்+ நேர் = தேமா

  • நிரை + நேர் = புளிமா

  • நிரை + நிரை = கருவிளம்

  • நேர் + நிரை = கூவிளம்
  • வெண்பாவிற்கான இலக்கணம்:

  • இயற்சீர் வெண்டளை வெண்சீர்வெண்டளை பிறழாது பா அமையவேண்டும்.

  • ஈற்றடி முச்சீராகவும் ஏனையவை நாற்சீராகவும் இருக்கும்.

  • ஈரசைச்சீர்கள் மாச்சீரும் விளச்சீரும் (தேமா, புளிமா, கூவிளம், கருவிளம்) மூவசைச்சீரில் காய்ச்சீரும் (தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்) வரும்.

  • ஈற்றுச்சீர்நாள், மலர், காசு, பிறப்பு ஆகிய வாய்பாடுகளுள் ஒன்றைக் கொண்டு முடியும்.
  • வெண்பாவின் வகைகள்:

    • குறள் வெண்பா

    • நேரிசை வெண்பா

    • இன்னிசை வெண்பா

    • நேரிசைச் சிந்தியல் வெண்பா

    • இன்னிசைச் சிந்தியல் வெண்பா

    • பஃறொடை வெண்பா

    • கலிவெண்பா என ஏழு வகைப்படும்.

    நேரிசை வெண்பா – இன்னிசை வெண்பா:

  • நாற்சீர் – முச்சீர் – இடையிலே தனிச்சீர் என்று இதன் இலக்கணத்தைச் சுருக்கமாகச் சொல்லலாம்.

  • இரண்டு நாற்சீர் முச்சீருக்கு இடையில்,இரண்டாவது அடியின் ஈற்றுச்சீராகத் தனியே ஒரு சீர் ஒரு சிறு கோடிட்டு எழுதப்படும்.

  • இதனையே தனிச்செர் என்பர். பாட்டின் முதற்சீருக்குரிய எதுகை இந்தத் தனிச்செருக்கும் இருக்கும்.
  • (எ.கா)

    எட்டெடை செம்பில் இரண்டெடை ஈயமிடில்
    திட்டமாய் வெண்கலமாம் சேர்ந்துருக்கில் – இட்டமுடன்
    ஓரேழு செம்பில் ஒருமூன்று துத்தமிடில்
    பாரறியப் பித்தளையாம் பார்.

    இன்னிசை வெண்பா:

    நேரிசை வெண்பாவில் இரண்டாமடியில் தனிச்சீர் வரும். தனிச்சீரில்லாமல் நான்கு சீரோடு அமைக்கப்படுபவை இன்னிசை வெண்பா.

    (எ.கா)

    இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
    தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
    எம்மைஉலகத்தும் யாம்காணேம் கல்விபோல்
    மம்மர்அறுக்கும் மருந்து

  • சுரதா நடத்திய கவிதை இதழ் – காவியம்
  • 'விண்வேறு;விண்வெளியில் இயங்கு கின்ற
    வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு'

  • இத்தொடர் தரும் முழுமையான பொருள் – விண், விண்வெளியில் உள்ள வெண்மதி, செங்கதிர், முகில் அனைத்தும் வேறு வேறு

  • 'குழிமாற்று' என்பது தொடர்புடைய துறை – கணிதம்

  • மறைமலையடிகள் பற்றியக் குறிப்புகள்

    • இவர் பிறந்த ஆண்டு – 1876

    • இவரது இயற்பெயர் – சுவாமி வேதாசலம்

    • இவரது புனை பெயர் – முருகவேல்

    • இவரது ஆசிரியர் – நாராயணசாமிப் பிள்ளை

    • இவர் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

    • இவர் 'The Ocean of Wisdom' என்ற ஆங்கில இதழின் ஆசிரியர் ஆவார்.

    • இவர் ஏற்படுத்திய சங்கம் – சைவ சித்தாந்த மகா சமாஜம், சமரச சன்மார்க்க சங்கம் (பொது நிலைக் கழகம்)

    • 1918-ல் தனித்தமிழ் இயக்கம் கண்டார்.

    • 'தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை' என்று அழைக்கப்படுகிறார்.

    • தமிழ், ஆங்கிலம், வடமொழி மூன்றிலும் சிறந்த புலமை பெற்றவர்

    • தமிழில் கால ஆராய்ச்சியைத் தொடங்கியவர்.

    • இவர் 'கால ஆராய்ச்சியின் முன்னோடி' என்று அழைக்கப்படுகிறார்.

    • சாகுந்தல நாடகத்தை வடமொழியில் இருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

    • 'சிறுவர்கான செந்தமிழ்' என்ற சிறுவர் பாட நூல்கள் இயற்றியுள்ளார்.

    • இவர் மகள் நீலாம்பிகை அம்மையார்.

    • 'ஞானசாகரம்' என்ற இதழை நடத்தி வந்தார்.

    • 'முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை', 'பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை', 'சாகுந்தல நாடகம்', 'மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்' முதலான பல நூல்களை எழுதியுள்ளார்.

    • இவர் மறைந்த ஆண்டு – 1950

    நூல்களும் ஆசிரியர்களும்:

    • நீங்களும் கவிபாடலாம் – கி.வா.ஜகந்நாதன்

    • துறைமுகம் – சுரதா

    • இதுவரை – சி.மணி

    • படைப்புக்கலை – மு.சுதந்திரமுத்து

    • கவிஞராக – அ.கி. பரந்தாமனார்

    ஐஞ்சிறு காப்பியங்கள் பற்றியக் குறிப்புகள்:

    • ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்களே.

    • அறம்,பொருள்,இன்பம், வீடு என்ற நான்கில் ஒன்றோ பலவோ குறைந்து வருவது சிறுகாப்பியம் என்று இதன் இலக்கணத்தை தண்டியலங்காரம் கூறுகிறது.

    • ஐஞ்சிறு காப்பியம் என்ற வழக்கினை ஏற்படுத்தியவர் – சி.வை.தாமோதரம் பிள்ளை ஆவார்.

    • சமண சமயத்துப் பெண் துறவியின் பொதுப்பெயர் – கந்தியார்

    • கந்தியைக் கவுந்தி என்றும் கூறுவர்.

    • அவ்வை, பைம்மை, ஐயை, குரத்தி, ஆர்யாங்கனை எனவும் சமணப்பெண் துறவிகள் அழைக்கப்பட்டனர்.

    ஐஞ்சிறு காப்பியங்களும் அதன் ஆசிரியர்களும்:

    • நாக குமார காவியம் – ஆசிரியர் தெரியவில்லை (கந்தியார்)

    • உதயண குமார காவியம் – ஆசிரியர் தெரியவில்லை (கந்தியார்)

    • யசோதர காவியம் – வெண்ணாவலூர் உடையார் வேள்

    • நீலகேசி – ஆசிரியர் தெரியவில்லை

    • சூளாமணி – தோலாமொழித்தேவர்

    ஐம்பெருங்காப்பியங்கள் பற்றியக் குறிப்புகள்:

    • ஐம்பெருங்காப்பியங்கள் என்ற தொடரை முதன் முதலில் கூறியவர் – மயிலைநாதர்

    • காப்பியம் என்பது காப்பை இயம்புவது என்ற பொருள் தரும் தமிழ்ச் சொல் என்பர். "காவ்யம்" என்ற வடசொல்லின் திரிபே காப்பியம் ஆகும் என்று கூறுபவரும் உளர்.

    • அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பொருளையும் கூறுவது பெருங்காப்பியம் எனப்படும்.

    • ஐம்பெருங்காப்பியங்களின் நூற்பெயர்களை முதன்முதலில் குறிப்பிட்டவர் – 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கந்தப்பதேசிகர் (திருத்தணிகை உலா)

    • சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக்காப்பியங்கள் எனப்படும்.

    • சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி என்ற மூன்றும் சமணக் காப்பியங்கள்

    • மணிமேகலை, குண்டலகேசி என்ற இரண்டும் பௌத்த காப்பியங்கள்

    ஐம்பெருங்காப்பியங்களும் அதன் ஆசிரியர்களும்:

    • சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்

    • மணிமேகலை – சீத்தலைச் சாத்தனார்

    • சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர்

    • வளையாபதி – பெயர் தெரியவில்லை

    • குண்டலகேசி – நாதகுத்தனார்

    • சிலப்பதிகாரம் இயற்றப்பட்ட காலம் – 2 ஆம் நூற்றாண்டு

    • மணிமேகலை இயற்றப்பட்ட ஆண்டு – 2 ஆம் நூற்றாண்டு

    • சீவக சிந்தாமணி இயற்றப்பட்ட காலம் – 9 ஆம் நூற்றாண்டு

    • குண்டலகேசி இயற்றப்பட்ட ஆண்டு – 7 ஆம் நூற்றாண்டு

    பாடம் 5 – நாடென்ப நாட்டின் நிலை

    மதராசப்பட்டினம்

  • இன்று சென்னையின் ஒரு பகுதியாக விளங்கும் மயிலாப்பூர், கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் தாலமி என்பவரால் "மல்லியர்பா" எனும் துறைமுகமாகச் சுட்டப்பட்டுள்ளது.

  • 1646 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி சென்னையின் மக்கள்தொகை – 19000

  • பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை, முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டது. இங்குள்ள கல்வெட்டைச் சென்னையில் கிடைத்தவற்றுள் பழமையான கல்வெட்டு எனலாம்.

  • திருவல்லிக்கேணியில் கிடைக்கும் நந்திவர்மன் கல்வெட்டும் பல்லவ ஆட்சியின் சிறப்பைக் காட்டுகிறது.

  • 1688 ல் சென்னை நகராட்சி உருவாக்கப்பட்டது.

  • செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி 'வெள்ளையர் நகரம்' என்று அழைக்கப்பட்டது.

  • கோட்டைக்குள் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியாளர்கள், வணிகர்கள் போன்றோருக்காக வெளியே அமைத்த குடியிருப்புகள் உள்ள பகுதி 'கருப்பர் நகரம்' எனப்பட்டது.

  • சென்னை மகாணத்தின் தலைவராக 'தாமஸ் பிட்' இருந்த காலத்தை சென்னையின் பொற்காலம் எனலாம்.

  • பாரதிதாசன், பக்கிங்காம் கால்வாயில் மயிலைசீனி. வேங்கடசாமி, ப. ஜீவானந்தம், உள்ளிட்ட நண்பர்களுடன் படகுப் பயணம் செய்திருக்கிறார். அதனை அவர்

  • சென்னையிலே ஒருவாய்க்கால் புதுச்
    சேரி நகர் வரை நீளும்.
    அன்னதில் தோணிகள் ஓடும் – எழில்
    அன்னம் மிதப்பது போல.
    என்னருந் தோழரும் நானும் – ஒன்றில்
    ஏறி யமர்ந்திட்ட பின்பு
    சென்னையை விட்டது தோணி – பின்பு
    தீவிரப்பட்டது வேகம்

    என்று, 'மாவலிபுரச் செலவு' என்னும் தலைப்பில் கவிதையாக்கியிருக்கின்றார்.

  • சென்னை மாகாணத்தின் முதல் தலைவர் – எலி யேல்

  • சென்னை மாகாணத்தின் தலைவராக "தாமஸ் பிட்" இருந்த காலத்தை சென்னையின் பொற்காலம் என்பர்.

  • 1715 ல் உருவான ' புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி ' ஆசியாவில் உருவான முதல் ஐரோப்பியக் கல்வி முறையிலான பள்ளியாகும்.

  • சென்னை கோட்டை கல்லூரி உருவாக்கப்பட்ட ஆண்டு – 1812

  • சென்னைக் கிறித்தவக் கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு – 1837

  • 1840 ல் பிரெசிடென்சி பள்ளி (பின்னாளில் மாநிலக் கல்லூரி) உருவாக்கப்பட்டது.

  • ஆங்கிலேயரின் நிதி உதவியின்றி இந்தியர் ஒருவரால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம் – பச்சையப்பன் கல்லூரி

  • 'இந்தோ – சாரசனிக் கட்டடக் கலை ' என்பது முகலாயக் கட்டடக் கலை, பிரித்தானியக் கட்டடக் கலை, இந்தியப் பாரம்பரியப் பணி ஆகியவற்றைக் கலந்து உருவாக்கப்பட்டது.

  • இந்தோ – சாரசனிக் கட்டடக் கலை பாணியில் 1768-ல் கட்டிமுடிக்கப்பட்ட முதல் கட்டிடம் – சேப்பாக்கம் அரண்மனை

  • சென்னை உயர் நீதி மன்றம் இந்தோ – சாரசனிக் கட்டடக் கலைப்பாணியில் அமைந்துள்ளது.
  • இந்தோ – சாரசனிக் கட்டடக் கலைப்பாணியில் அமைந்துள்ள கட்டிடங்கள்:

    • சென்னையில் உள்ள மத்தியத் தொடர் வண்டி நிலையம்

    • தென்னகத் தொடர் வண்டித் தலைமையகம்

    • எழும்பூர் தொடர்வண்டி நிலையம்

    • பொது அஞ்சல் அலுவலகம்

    • சென்னை உயர் நீதி மன்றம்

    • சென்னைப் பல்கலைக்கழகம்

    • ரிப்பன் கட்டடம்

    • விக்டோரியா அரங்கு
  • ஆவணங்களை முறையாகக் கையாளும் பழக்கம் கொண்ட ஆங்கிலேயர் உருவாக்கிய 'மெட்ராஸ் ரெக்கார்ட் ஆபிஸ்' சாரசனிக் கட்டட முறையில் அமைந்தது.

  • இது, இன்று 'தமிழ்நாடு ஆவணக் காப்பகம்' என்று வழங்கப்படுகிறது.தமிழ் சமூகத்தின் வரலாற்றை அறிவதற்கான முதன்மைத் தரவுகள் பல இங்கேக் கொடுக்கப்பட்டுள்ளன.

  • சென்னை பல்கலைக்கழகம் 1857 ல் உருவாக்கப்பட்டது.

  • பெண்களுக்கென இராணி மேரி கல்லூரி 1914 ல் உருவாக்கப்பட்டது.

  • சென்னை உயர்நீதிமன்றம், சென்னைப் பல்கலைக்கழகம், ரிப்பன் கட்டிடம் போன்றவை இந்தோ-சாரசனிக் கட்டடக் கலை பாணியில் உருவாக்கப்பட்டது.

  • இந்தியாவின் முதல் பொது நூலகம் – கன்னிமாரா நூலகம்

  • தெனிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் 1856 ல் ராயபுரத்தில் உருவாக்கப்பட்டது.

  • சென்னை இலக்கியச் சங்கம் – 1812 ல் லோட்டைக் கல்லூரியின் இணைவாக உருவான இந்நூலகம் அரிய பல நூல்களைக் கொண்ட இந்தியாவின் பழைய நூலகங்களில் ஒன்று.
  • கன்னிமாரா நூலகம்:

  • 1860 ல் அருங்காட்சியகத்தின் அங்கமாகத் தொடங்கப்பட்ட இந்நூலகம், இந்தியாவின் முதல் பொது நூலகமாகும்.

  • கீழ்திசைச் சுவடிகள் நூலகம்: காலின் மெக்கன்சியின் தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு 1869 ல் உருவாக்கப்பட்ட இந்நூலகம் அரிய ஓலைச்சுவடிகள், தாள் சுவடிகள், புத்தகங்கள் என பெரும் தொகுப்புகளை கொண்டது.

  • அண்ணா நூற்றாண்டு நூலகம் – 2010 ல் தொடங்கப்பட்ட இந்நூலகம் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகமாகும்.

  • தெய்வமணிமாலை

    'ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
    உத்தமர்தம் உறவு வேண்டும்
    உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
    உறவுகல வாமைவேண்டும்
    பெருமைபெறும் நினதுபுகழ் பேசவேண்டும் பொய்மை
    பேசா திருக்க வேண்டும்
    பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
    பிடியா திருக்க வேண்டும்
    மருவுபெண் ணாசையை மறக்கவே வேண்டும்உனை
    மறவா திருக்க வேண்டும்
    மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
    வாழ்வில்நான் வாழ வேண்டும்
    தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
    தலமோங்கு கந்தவேளே!
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வமனியே!'

    என்ற பாடல் இராமலிங்க அடிகளார் இயற்றிய தெய்வமணிமாலையில் இடம் பெற்றுள்ளது.

    இலக்கணக்குறிப்பு:

    • மலரடி – உவமைத் தொகை

    • மறவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

    • வளர்தலம் – வினைத்தொகை

    தெய்வமணிமாலை பற்றிய குறிப்புகள்:

  • தெய்வமணிமாலை இராமலிங்க அடிகள் இயற்றிய திருவருட்பாவில் ஐந்தாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

  • இப்பாடல் சென்னை, கந்தகோட்டத்து முருகப்பெருமானின் அருளை வேண்டும் தெய்வமணிமாலையின் 8 ஆம் பாடல் ஆகும்.
  • இராமலிங்க அடிகளார் பற்றிய குறிப்புகள்:

    • காலம் – 1823 -1874

    • பெற்றோர் – இராமையா – சின்னம்மையார்

    • இவர் இறையருள் பெற்ற திருக்குழந்தை எனப்பட்டார்

    • இவரின் வழிபடு கடவுள் – முருகன்

    • இவரின் வழிபடு குரு – திருஞான சம்பந்தர்

    • இவரின் வழிபடு நூல் – திருவாசகம்

    • சிதம்பரத்தை அடுத்த மருதூரில் பிறந்தார்.

    • வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது.

    • பசிப்பிணியை போக்கினார்

    • இராமலிங்க அடிகளார் இயற்றிய திருவருட்பா ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டுள்ளது.

    இவர் எழுதிய உரைநடை நூல்கள்:

    • மனுமுறை கண்ட வாசகம்

    • ஜீவகாருண்ய ஒழுக்கம்

    இராமலிங்க அடிகள் பதிப்பித்த நூல்கள்:

    • ஒழிவில் ஒடுக்கம்

    • தொண்ட மண்டல சதகம்

    • சின்மய தீபிகை
  • இவரது ஆன்மீக நெறி 'ஆன்மநேய ஒருமைப்பாடு' என்று அழைக்கப்படுகிறது.

  • இவருக்குத் திருவருட்பிரகாச வள்ளலார் என்று பெயரிட்டவர் – தொழுவூர் வேலாயுத முதலியார்

  • இராமலிங்க அடிகளின் பாடல்களைத் தொகுத்தவர் – தொழுவூர் வேலாயுத முதலியார்

  • இவரது படல்களுக்கு ' திருவருட்பா ' என்று பெயரிட்டவர் – தொழுவூர் வேலாயுத முதலியார்

  • இவர் பாடல்களை ஆறு திருமுறைகளாக வகுத்தவர் – தொழுவூர் வேலாயுத முதலியார்

  • இவரின் பாடல்களை முதன் முதலாகப் பதிப்பித்தவர் – தொழுவூர் வேலாயுத முதலியார்

  • இராமலிங்க அடிகளின் பாட்டை 'மருட்பா' என்றவர் – ஆறுமுக நாவலர். 'மருட்பா' என்றால் " பொருள் மயக்கத்தைத் தரும் பாடல்" என்பது பொருள்.

  • முருக நாயனார் என்று போற்றப்படுபவர் – இராமலிங்க அடிகள்

  • 'அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை' என்றவர் – இராமலிங்க அடிகள்

  • 'அம்பலப் பாட்டே அருட்பாட்டு
    அல்லாதார் பாட்டெல்லாம் மருட்பாட்டு'
    என்றவர் – இராமலிங்க அடிகள்


    'மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே' என்றவர் – இராமலிங்க அடிகள்

    'கல்லாருக்கும் கற்றவருக்கும் களிப்பருளும் களிப்பே' என்றவர் – இராமலிங்க அடிகள்

    'ஏறுமயில் ஏறிவிளையாடும் முகம் ஒன்றே
    ஈசருடன் ஞானமொழி பேசும்முகம் ஒன்றே
    கூறும் அடியார்கள் வினைதீர்க்கும் முகம் ஒன்றே
    குன்று உருவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்றே
    மாறுபட சூரரை வதைத்த முகம் ஒன்றே
    வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே
    ஆறுமுக மான பெருமாள் நீ அருள வேண்டும்
    ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே'

    என்ற பாடலை இயற்றி முருகப் பெருமானை போற்றியவர் – இராமலிங்க அடிகள்.

    தேவாரம்

    'மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
    கலிவிழாக் கண்டான் கபாலீச் சரம்அமர்ந்தான்
    பலிவிழாப் பாடல்செய் பங்குனி உத்திரநாள்
    ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்'


    என்ற தேவாரப் பாடலை இயற்றியவர் – திருஞானசம்பந்தர்.

    இப்பாடலில் திருமயிலாப்பூரில் நடைபெறும் விழாக்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பாடலின் பொருள்:

  • பூம்பாவாய்! இளம்பெண்கள் ஆரவாரத்தோடு கொண்டாடும் திருவிழாக்கள் நிறைந்த வீதிகளையுடைய பெரிய ஊர் திருமயிலை. அங்கு எழுச்சிமிக்க விழாக்கள் நிகழும். மயிலை கபாலீச்சுரம் என்னும் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனுக்குப் பூசையிடும் பங்குனி உத்திர ஆரவார விழாவினைக் காணாமல் செல்வது முறை ஆகுமா?

  • திருமயிலை என்று அழைக்கப்படுவது – மயிலாப்பூர்
  • சொல்லும் பொருளும்:

    • மலிவிழா – விழாக்கள் நிறைந்த

    • மடநல்லார் – இளமை பொருந்திய பெண்கள்

    • கலிவிழா – எழுச்சி தரும் விழா

    • பலிவிழா – திசைதோறும் பூசையிடும் உத்திர விழா

    • ஒலிவிழா – ஆரவார விழா

    இலக்கணக்குறிப்பு:

    மாமயிலை – உரிச்சொற்றொடர்

    பகுபத உறுப்பிலக்கணம்:

    கண்டான் – காண் (கண்) + ட் + ஆன்

    காண் – பகுதி (கண் எனக் குறுகியது விகாரம்)

    ட் – இறந்தகால இடைநிலை

    ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

    அமர்ந்தான் – அமர் + த் (ந்) + த் + ஆன்

    அமர் – பகுதி

    த் – சந்தி (ந் ஆனது விகாரம்)

    த் – இறந்தகால இடைநிலை

    ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

    மயிலாப்பூர் சிறப்புகள்:

    • மடலார்ந்த தெங்கின் மயிலை

    • இருளகற்றும் சோதித் தென்மயிலை

    • கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சுரம்

    • கண்ணார் மயிலைக் கபாலீச்சுரம்

    • கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சுரம்

    • மங்குல் மதிதவழும் மாடவீதி மயிலாப்பூர்

    • ஊர்திரை வேலை உலாவும் உயர்மயிலை

    மயிலைப் பகுதியில் காணப்பெறும் விழாக்கள்:

  • ஐப்பசி – ஓண விழா

  • கார்த்திகை – விளக்குத் திருவிழா

  • மார்கழி – திருவாதிரை விழா

  • தை – தைப்பூச விழா

  • மாசி – கடலாட்டு விழா

  • பங்குனி – பங்குனி உத்திர விழா
  • தேவாரம் பற்றியக் குறிப்புகள்:

  • சைவப் பெரியோர்கள் பாடிய பாக்கள் திருமுறைகள் எனப்படும்.

  • இவை 12 திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

  • சைவத் திருமுறைகள் பன்னிரெண்டில் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம்.இவர் பாடல்கள் இசை பாடல்களாகவே திகழ்கின்றன.

  • 1,2,3 ஆம் திருமுறைகள் – திருஞான சம்பந்தர் – தேவாரம்

  • 4,5,6 ஆம் திருமுறைகள் – திருநாவுக்கரசர் தேவாரம்

  • 7 ஆம் திருமுறை – சுந்தரர் – தேவாரம்

  • 8 ஆம் திருமுறை – மாணிக்கவாசகர் – திருவாசகம், திருக்கோவையார்

  • 9 ஆம் திருமுறை – திருமாளிகைத் தேவர் முதலிய 9 பேர்

  • 10 ஆம் திருமுறை – திருமூலர் – திருமந்திரம்

  • 11 ஆம் திருமுறை – திரு ஆலவாய் உடையார் முதலிய 12 பேர்

  • 12 ஆம் திருமுறை – சேக்கிழார் – பெரியபுராணம்

  • இப்பாடல்கள் நம்பியாண்டார் நம்பி என்பவரால் தொகுக்கப்பட்டது.

  • நம்பியாண்டார் நம்பி தொகுத்தவை 11 திருமுறைகள் மட்டுமே.

  • நம்பியாண்டார் நம்பிக்குப் பின் சேர்ந்தது – பெரியபுராணம்

  • 'திருமுறை கண்ட சோழன்' என்று அழைக்கப்படுபவர் – முதலாம் இராஜராஜ சோழன்

  • முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படும்.

  • முதல் ஏழு திருமுறைகளுக்கு 'மூவர் தமிழ்' என்ற பெயரும் உண்டு. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் மூவர் முதலிகள் எனப்படுவர். மூவர் முதலிகளில் முதல் இருவரும் பாடியவற்றுள் இசைப்பாக்களே மிகுதி.

  • திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரையும் சமயக் குரவர்கள் என்று அழைப்பர்.

  • திருமுறைகளைப் பாடியவர்கள் மொத்தம் 27 பேர்.

  • சைவர்களின் தமிழ் வேதம் 12 திருமுறைகள்.
  • திருஞான சம்பந்தர் பற்றியக் குறிப்புகள்:

    • திருஞான சம்பந்தரின் இயற்பெயர் – ஆளுடைப்பிள்ளை

    • பெற்றோர் – சிவபாத இருதயர் – பகவதி அம்மையார்

    • இவர் பிறந்த ஊர் – சீர்காழி. இதற்குத் தோணிபுரம், பிரமபுரம் ஆகிய பெயர்களும் உண்டு.

    • இவரின் வேறுபெயர் – ' பரசமயக்கோளரி'

    • சமயக் குரவர்கள் நால்வருள் முதலாவதாகக் குறிக்கப்படுபவர்

    • தேவாரத்தின் முதல் நூலைப் பாடியுள்ளார்.

    • இவரது பாடல்கள் 1,2,3 ஆம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

    • இவர் 23 பண்களில் (இசைகளில்) பாடியுள்ளார்.

    இவரது சிறப்புகள்:

    • சீர்காழியில் 3 வயதில் உமையாள் கொடுத்த ஞானப்பாலை உண்டவர்

    • தருமபுரத்தில் (நீலகண்டர் பிறந்த ஊர்) யாழ்முறி பதிகம் பாடினார்

    • பாம்புதீண்டிய வணிகனின் விடம் தீர்த்த இடம் – திருமகல்

    • ஆண் பனையைப் பெண் பனையாக்கிய இடம் – திருவோத்தூர்

    • திருமறைக்காடு (வேதாரணியம்) கோயில் கதவு திறக்க பதிகம் பாடினார்.

    • மக்களின் குளிர்சுரத்தை நீக்கப் பதிகம் பாடிய இடம் – செங்குன்றூர்

    • இவர் வைகையாற்றில் இட்ட ஏடு கரையேறிய இடம் – திருஏடகம்

    அகநானூறு

    'வெய்ய உயிர்க்கும் நோயா கின்றே' என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல் – அகநானூறு. இந்த அடியை இயற்றியவர் – அம்மூவனார்

    அகநானூற்றில் 'பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்' என்ற பாடலை இயற்றியவர் – அம்மூவனார்

    'பெருங்கடல் வேட்டத்துச் சிற்குடிப் பரதவர்
    இருங்கழிச் செறுவின் உழாஅது செய்த
    வெண்கல் உப்பின் கொள்கை சாற்றி
    என்றூழ் விடர குன்றம் போகும்
    கதழ்கோல் உமணர் காதல் மடமகள்
    சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி
    நெல்லின் நேரே வெண்கல் உப்பு எனச்
    சேரி விலைமாறு கூறலின் மனைய
    விளியறி ஞமலி குரைப்ப, வெரீஇய
    மதர்கயல் மலைப்பின் அன்னகண் எனக்கு,
    இதைமுயல் புனவன் புகைநிழல் கடுக்கும்
    மமூது அள்ளல் அழுந்திய சாகாட்டு
    எவ்வந் தீர வாங்குந் தந்தை
    கைபூண் பகட்டின் வருந்தி
    வெய்ய உயிர்க்கும் நோயா கின்றே'

    என்ற அகநானூற்றுப் பாடலை இயற்றியவர் – அம்மூவனார்

    பாடலின் பொருள்:

  • பரதவர், பெரிய கடல்பரப்பில் மீன் வேட்டையாடுவர். நிலப்பரப்பில் உப்பளங்களில் உழவு செய்யாமலே உப்பு விளைவிப்பர். அந்த வெண்ணிறக் கல் உப்பை, உப்பு வணிகர் தங்களது வண்டியில் ஏற்றிச் செல்வர். வண்டியில் பூட்டிய எருதுகளை விரட்டக் கையில் தாழ்கோல் வைத்திருப்பர்.

  • கோடை காலத்தின் வெப்பத்தால் பிளவுபட்ட குன்றைக் கடந்து தொலைவில் உள்ள ஊர்களில் விற்பனை செய்வர்.

  • அத்தகைய உமணர் ஒருவரின் மகள் அழகும் இளமையும் வாய்ந்தவள். அவள் தன் கைகளில் அணிந்திருந்த அழகிய வளையல்களை ஒலிக்கத் தெருவில் கைகளை வீசி தெருவில் நடந்து சென்றாள்.

  • அங்கு உப்புக்கு மாற்றாக நெல்லைத் தந்து உப்பினைப் பெற்றுக்கொள்ள வாரீரோ! என்று கூவினாள். அவள் கூவுதலை கேட்டு வீட்டில் உள்ள நாய் இது வேறு குரலென்று குரைத்தது.

  • அதனை எதிர்பாராத அப்பெண்ணின் கண்கள் இரண்டும் அச்சத்தால் மீன்கள் தம்முள் போர் செய்வது போல் மருண்டன.

  • மருண்ட அப்பெண்ணின் கண்களை நான் அங்குக் கண்டேன். புதிதாகத் தினைப்புனம் அமைக்கும் கானவர் பழையபுனத்தைத் தீயிட்டு எரிப்பர். அப்பொழுது உண்டாகும் கரும்புகை போன்ற கருஞ்சேற்றில் அப்பெண்ணுடைய தந்தையின், உப்பு ஏற்றிச்செல்லும் வண்டி சிக்கிக்கொண்டது.

  • அவ்வண்டியைச் சேற்றிலிருந்து துன்பத்துடன் மீட்க முயன்ற எருதிற்கு அவள் தந்தை உதவி செய்தார். அந்த எருது அடைந்த துன்பம் போல, அவள் கண்களால் நான் துன்புற்றேன்.
  • உள்ளுறை:

  • "வண்டியை இழுக்கும் எருதுகளின் துன்பத்தைத் தந்தை போக்கியது போல, தலைவியைக் கண்டதால் எனக்கேற்பட்ட துன்பத்தை நீ போக்குதற்கு உரியவன். என்று தலைவன் பாங்கனிடம் உள்ளுறுத்துக் கூறினான்.

  • எருதைத் தலைவனுக்கும் தந்தையை பாங்கனுக்கும் உப்பின் எடையால் எருது வருந்தும் நிலையைக் காதல் வருத்தத்திற்கும் உள்ளுறையாக வைத்துப் பாடல் புனையப்பட்டுள்ளது.
  • சொல்லும் பொருளும்:

    • வேட்டம் – மீன் பிடித்தல்

    • கழி – உப்பங்கழி

    • செறு – வயல்

    • கொள்ளை – விலை

    • என்றூழ் – சூரியனின் வெப்பம்

    • விடர் – மலை வெடிப்பு

    • கதழ் – விரைவு

    • உமணர் – உப்பு வணிகர்

    • எல்வளை – ஒளிரும் வலையல்

    • தெளிர்ப்ப – ஒலிப்ப

    • விளி அறி – குரல் கேட்ட

    • ஞமலி – நாய்

    • வெரீ இய – அஞ்சிய

    • மதர்கயல் – அழகிய மீன்

    • புனவன் – கானவன்

    • அள்ளல் – சேறு

    • பகடு – எருது

    இலக்கணக்குறிப்பு:

    • பெருங்கடல் – பண்புத்தொகை

    • உழாஅது – செய்யுளிசை அளபடை

    • வெரீஇய – சொல்லிசை அளபடை

  • பழங்காலத்தில் தமிழ்நாட்டில் சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக உப்பு விளங்கியது. உப்பு விளையும் களத்திற்கு 'அளம்' என்று பெயர். பிற நிலங்களில் கிடைக்கும் பொருள்களை உமணர்கள் உப்பிற்குப் பண்டமாற்றாகப் பெற்றனர்.

  • கடலுக்கு அருகில் மணல் திட்டுக்களில் கடல்நீர் தேங்கியிருக்கும் பகுதிக்கு உப்பங்கழி எனப் பெயர். கடல்நீரைப் பாத்திகளில் தேக்கி வெயிலில் ஆவியாக்கி உப்புப் படிவதற்கு ஏற்றவகையில் அமைக்கப்பட்ட இடத்தை உப்பளம் என்கிறோம்.
  • அகநானூறு பற்றிய குறிப்புகள்:

    • இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.

    • அகநானூறு 400 பாடல்களை உடையது.

    • இது நெடுந்தொகை என்றும் அழைக்கப்படும்

    • இது ஆசிரியப்பாவால் ஆனது.

    • இதிலுள்ள பாடல்களை 145 பேர் பாடியுள்ளனர்.

    • அகநானூற்றைத் தொகுத்தவர் – உருத்திர சன்மனார்

    • அகநானூற்றைத் தொகுப்பித்தவர் – பாண்டியன் உக்கிரப்பெருவழுதி

    • இதன் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்

    • அகநானூற்றின் கடவுள் வாழ்த்து சிவனைப் பற்றியது.

    • சிற்றடி 13 அடி.பேரெல்லை 31 அடி

    • அகநானூற்றினை முதன்முதலில் பதிப்பித்தவர் – வே.ராசகோபால் ஐயங்கார்

    இதில் ஒவ்வொரு திணையிலும் உள்ள பாடல்கள்:

    • குறிஞ்சி – 80

    • முல்லை – 40

    • மருதம் – 40

    • நெய்தல் – 40

    • பாலை – 200
  • சங்க இலக்கியத்துள் வரலாற்றுச் செய்திகளை மிக அதிகமாகக் கூறும் நூல் – அகநானூறு.
  • இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது:

    • களிற்றியானைநிரை – 120 பாடல்கள்

    • மணிமிடைபவளம் – 180 பாடல்கள்

    • நித்திலக்கோவை – 100 பாடல்கள்
  • அகப்பாடல்கள் மட்டுமே பாடியவர்களுள் ஒருவர் அம்மூவனார். இவர் நெய்தல் திணை பாடல்கள் பாடுவதில் வல்லவர்.

  • தலைக்குளம்

    வட்டார வழக்கு:

  • தமிழ்மொழி ஒன்றேயாயினும் வட்டாரங்களுக்கென்று சிறப்பான தனி மொழிவழக்குகள் இருக்கின்றன.

  • சென்னைத்தமிழ், கோவைத்தமிழ், நெல்லைத்தமிழ், மதுரைத்தமிழ், குமரித்தமிழ் என்றெல்லாம் வேறுபட்டுத் தமிழ் வழங்குகின்றது.

  • அந்தந்தப் பகுதிகளுக்கென்று தனித் தொகுதிகளும், வாஞ்சைகளும், விளிப்புகளும் இருக்கின்றன. அவ்வவ் வட்டாரங்களின் பழக்கவழக்கங்கள்,தொழில்கள், பழமொழிகள், சடங்குகள் சார்ந்தும் சொல் மாறுபாடுகள் இருக்கின்றன.

  • இவை பேச்சு வழக்கில் இருப்பது வட்டார அடையாளமாகவும் இருக்கிறது. இவ்வட்டார வழக்குகள் படைப்பிலக்கியங்களில் இடம்பெறுகிறபோது தமிழின் அழகு கூடுகிறது.

  • தமிழ்ச் சிறுகதைகளிலும் புதினங்களிலும் வட்டார மொழி இடம்பெற்று வட்டாரச் சிறுகதை, வட்டாரப் புதினம் என்று பகுத்துப் பேசக்கூடிய நிலை ஏற்பட்டது. வட்டார இலக்கியம் என்ற பகுப்பு இடம்பெற்றது.

  • புதுமைப்பித்தன் நெல்லைத் தமிழிலும், சண்முகசுந்தரம் கோவைத்தமிழிலும் ஜெயகாந்தன் சென்னை வட்டாரத் தமிழிலும், தி.ஜானகிராமன் தஞ்சைத் தமிழிலும் தோப்பில் முகமது மீரான் குமரித் தமிழிலும் எழுதிப் புகழ்பெற்றனர்.

  • கி.ராஜநாராயணன் கோவில்பட்டி வட்டாரத் தமிழைப் பயன்படுத்திப் படைத்தார். தம்முடைய வட்டார இலக்கியத்திற்கு 'கரிசல் இலக்கியம்' என்று பெயரிட்டார்.

  • இவர்களைத் தொடர்ந்து பலர் இவ்வகையில் வட்டார் இலக்கியங்களைப் படைத்து வருகிறார்கள். சிறுகதைகள் வட்டாரம் சார்ந்து தொகுக்கப்பட்டுத் 'தஞ்சைக் கதைகள்' என்பது போன்று வெளியீடு பெறுகின்றன.

  • 'ஒரு குட்டித் தீவின் வரைபடம்' என்ற சிறுகதை தொகுப்பினை இயற்றியவர் – தோப்பில் முகமது மீரான்.

  • இவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

  • தமிழிலும், மலையாளத்திலும் நூல்களை படைப்பார்.

  • இவர் எழுதிய 'சாய்வு நாற்காலி' என்னும் புதினம் 1997-ல் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளது.

  • இவரது 'துறைமுகம்', 'கூனன் தோப்பு' ஆகிய படைப்புகள் தமிழக அரசின் விருதுகளைப் பெற்றுள்ளன.

  • இலக்கணம்

    படிமம்

  • 'படிமம்' என்றால் காட்சி என்பது பொருள். வளக்க வந்த காட்சியையோ, கருத்தையோ கட்சிப்படுத்திக் காட்டுகிற உத்தி, படிமம்.

  • வினையைக் காட்சிப்படுத்தும் படிமம் வினை படிமம் எனப்படும்.

  • 'கட்டில் நினைக்கும் இழிசினன் கையது……..' என்ற புறநானூற்றுப் பாடல் வினைப்படிமத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும்.

  • 'காலைஇளம் வெயில் நன்றாக மேய, தும்பறுத்துத் துள்ளிவரும் புதுவெயில்' இக்கவிதையில் வினைப்படிமம் பயின்று வந்துள்ளது.

  • பயன்களை படிமங்களாக காட்சிப்படுத்தினால் அது பயன் படிமம் எனப்படும்.

  • 'நெருஞ்சிக் கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்கு…' என்ற குறுந்தொகை பாடல் பயன்படிமத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும்.

  • வடிவத்தைக் காட்சிப்படுத்தினால் அவை மெய்படிமம் எனப்படும்.

  • 'பாசிமணிக் கண்ணும் சிவப்புக் கோட்டுக் கழுத்தும்…' என்ற பாடல் மெய்ப்படிவத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும்.

  • உருவம் அல்லது நிறத்தை காட்சிப்படுத்துவது – உரு(நிறம்)ப் படிமம்

  • 'வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப…' என்ற அகநானூற்றுப் பாடல் உரு(நிறம்) படிவத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும்.

  • 'மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்தியிருக்கிறது' என்று கூறியவர் – ந.பிச்சமூர்த்தி

  • 'காலை இளம் வெயில்
    நன்றாக மேய
    தும்பறுத்துத்
    துள்ளிவரும்
    புதுவெயில்'

    என்ற அடிகளை இயற்றியவர் – கல்யாண்ஜி
    'கோவைப்பழ மூக்கும்
    பாசிமணிக் கண்ணும்
    சிவப்புக்கோட்டுக் கழுத்தும்
    வேப்பிலை வாலும்'

    என்ற அடிகளை இயற்றியவர் – ந.பிச்சமூர்த்தி

  • ஒய்மா நாட்டை ஆட்சி செய்தவன் – நல்லியக்கோடன்

  • தொல்காப்பியர் உவமை ஒன்றையே அணியாகக் கூறினார்.
  • உவமை இரு வகைப்படும்:

    • காட்சி தருகிற உவமைகள்

    • காட்சி தரா வெறும் உவமைகள்
  • சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் காட்சி தரும் உவமைகளையே கொண்டுள்ளன.

  • படிமம் காட்சி தரும் உத்தி என்பதால் காட்சி தரும் உவமைகளை மட்டும் பயன்படுத்திக் கொள்கிறது.

  • நாம் விரும்பிய (அ) சிந்தித்த ஏதாவது ஒரு கருத்து வடிவத்திற்கு விளக்கம் தருவதற்காகவும் புலன்களின் உணர்வுகளை வெளிக்கொண்டு வருவதற்காகவும் செய்யப்படும் மனத்தின் மொழிபெயர்ப்பே படிமமாகும்.

  • படிமம் என்பதன் பொருள் – காட்சி

  • 'காலை இளம்வெயில் நன்றாக மேய, தும்பறுத்துத் துள்ளிவரும் புதுவெயில்' இக்கவிதையில் வினைப்படிமம் பயின்று வந்துள்ளது.

  • உவமை, உருவகம் போலப் படிமமும் வினை, பயன், மெய் (வடிவம்), உரு (நிறம்) ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும் என்பர்.

  • எவ்வகையான படிமமாக இருந்தாலும் அது காட்சி வழியே கருத்தினை விளக்கும் ஓர் உத்தியாகவே பயன்படுத்தப்படுகிறது. 'மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்தியிருக்கிறது' இது வெளிப்படுத்தும் படிமம் – மெய் (வடிவம்)

  • 'விளியறி ஞமலி' என்ற தொடரில் குறிப்பிடப்படும் விலங்கு – நாய்
  • சோமசுந்தர பாரதியார் பற்றிய குறிப்புகள்:

    • இவர் பிறந்த ஆண்டு – 1879

    • பேச்சாளர், சமூக சீர்திருத்தவாதி, விடுதலைப்ப போராட்ட வீரர், இலக்கிய ஆய்வாளர் எனப் பன்முக ஆளுமை கொண்ட நாவலர் சோமசுந்தர பாரதியார் சிறந்த வழக்கறிஞராகவும் திகழ்ந்தார்.

    • "என்னிடம் இரண்டு சரக்குக் கப்பல்களோடு மூன்றாவதாக ஒரு தமிழ்க் கப்பலும் உள்ளது" என்று வ. உ. சி. பெருமிதத்துடன் இவரைக் குறிப்பிடுவார்.

    • இவர் தமிழ் இலக்கண, இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டவர்; அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.

    • இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்று செயலாற்றியவர்.

    • 'தசரதன் குறையும் கைகேயி நிறையும்', 'திருவள்ளுவர்', 'சேரர் தாயமுறை', 'தமிழும் தமிழரும்' முதலிய பல நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

    • தொல்காப்பியப் பொருளதிகார அகத்திணையியல், புறத்திணையியல், மெய்ப்பாட்டியல் ஆகியவற்றுக்கு உரை எழுதியுள்ளார்.

    'பிறப்பினால் எவர்க்கும் – உலகில்
    பெருமை வாராதப்பா!
    சிறப்பு வேண்டுமெனில் – நல்ல
    செய்கை வேண்டுமப்பா!
    நன்மைசெய்பவரே- உலகம்
    நாடும் மேற்குலத்தார் !
    தின்மைசெய்பவரே- அண்டித்
    தீண்ட ஒண்ணாதார் !'


    என்ற பாடலை இயற்றியவர் – 'கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை'

    எட்டுத்தொகை நூல்கள்

    அகம் சார்ந்த நூல்கள்:

    • நற்றிணை

    • குறுந்தொகை

    • ஐங்குறுநூறு

    • அகநானூறு

    • கலித்தொகை

    புறம் சார்ந்த நூல்கள்:

    • புறநானூறு

    • பதிற்றுப்பத்து

    அகமும் புறமும் சார்ந்த நூல்கள்:

    • பரிபாடல்

    பத்துப்பாட்டு நூல்கள்

    அகம் சார்ந்த நூல்கள்

    • குறிஞ்சிப்பாட்டு

    • முல்லைப்பாட்டு

    • நெடுநல்வாடை

    • பட்டினப்பாலை

    புறம் சார்ந்த நூல்கள்:

    • மதுரைக்காஞ்சி

    • திருமுருகாற்றுப்படை

    • பொருநராற்றுப்படை

    • பெரும்பாணாற்றுப்படை

    • சிறுபாணாற்றுப்படை

    • கூத்தராற்றுப்படை

    நூல்களும் ஆசிரியர்களும்:

    • இராமலிங்க அடிகள் வரலாறு – ஊரன் அடிகள்

    • ஒரு பார்வையில் சென்னை நகரம் – அசோகமித்திரன்

    • ஒரு குட்டித்தீவின் வரைபடம் (சிறுகதைத் தொகுப்பு) – தோப்பிம் முகமது மீரான்

    • சென்னைப் பட்டணம் – ராமச்சந்திர வைத்தியநாத்

    ஆலந்தூர் கோ.மோகனரங்கன் பற்றியக் குறிப்புகள்:

    • பிறந்த ஆண்டு – 1.6.1942

    • பாட்டரங்கப் பாவலராய்ப் புகழ்பெற்றவர்.

    இவர் இயற்றிய நூல்கள்:

    கவிதை நூல்கள்:

    • மோகனரங்கன் கவிதைகள்

    • சித்திரப்பந்தல்

    • காலக்கிளி

    • இமயம் எங்கள் காலடியில்

    • பள்ளிப்பறவைகள்

    கவிதை நாடகங்கள்:

    • வைர மூக்குத்தி

    • புது மனிதன்

    • யாருக்குப் பொங்கல்

    • கயமையைக் களைவோம்

    • மனிதனே புனிதனாவாய்

    காப்பியம்:

    • கனவுப்பூக்கள்

    வாழ்க்கை வரலாறு:

    • வணக்கத்துக்குரிய வரதராசனார்

    நாவல்:

    • நினைத்தால் இனிப்பவளே

    உரைநடை நாடகம்:

    • சவால் சம்பந்தம்

    பாடம் 6 – சிறுகை அளாவிய கூழ்

    திரைமொழி

  • திரைப்படத்திற்கு முன்னோடியான அசையும் உருவங்களைப் படம் பிடிக்கும் கருவியை கண்டுபிடித்தவர் – தாமஸ் ஆல்வா எடிசன்

  • திரைப்படம் என்னும் விந்தையை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் – லூமியர் சகோதரர்கள்

  • திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் என கண்டுப்பிடித்தவர் – ஜார்ஜ் மிலி

  • நாடகத்தை ஒற்றைக் கோனக்கலை என்று கூறுவர்.

  • சார்லி சாப்ளின் வறுமைமிக்க தன் இளமை வாழ்வை 'தி கிட்' என்ற படமாக்கினார். இவர் தொடங்கிய பட நிறுவனம் 'யுனைடெட் ஆர்டிஸ்ட்ட்ஸ்' என்பதாகும்.

  • ஹிட்லரை உருவகப்படுத்தி சார்லிசாப்ளின் உருவாக்கிய கதாப்பாத்திரம் – ஹென்கோல்

  • 'ஒற்றைக் கோணக்கலை' என்று கூறப்படுவது – நாடகம்

  • கவிதைகள்

    கவிஞர் நகுலன் பற்றிய குறிப்புகள்:

  • இவரது இயற்பெயர் – டி.கே.துரைசாமி

  • கும்பகோணத்தில் பிறந்தவர்.

  • கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வழ்ந்தவர்.

  • அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலும், ஆங்கிலத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றார்.

  • இவருடைய கவிதைகள் மூன்று,ஐந்து,காண்ணாடியாகும் கண்கள், நாய்கள்,வாக்குமூலம்,சுருதி உள்ளிட்ட சிறுதொகுதிகளாக வந்துள்ளன.

  • இவர் 7 புதினங்களை எழுதியுள்ளார்.

  • பாரதியாரின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

  • சிலப்பதிகாரம்

    புகார்க் காண்டம்

    'குழல்வழி நின்றது யாழே, யாழ்வழித்
    தண்ணுமை நின்றது தகவே, தண்ணுமைப்
    பின்வழி நின்றது முழவே, முழவொடு
    கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை'


    என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல் – சிலப்பதிகாரம் – புகார்க்காண்டத்தில் அரங்கேற்றுக் காதையில் இடம் பெற்றுள்ளது.

    பாடலின் பொருள்:

  • பொன்னால் செய்யப்பட்ட ஒரு பூங்கொடி நடனமாடியது போல மாதவி அரங்கில் தோன்றி நாட்டிய நூலில் சொல்லப்பட்ட முறைமை தவறாது பாவம்,அபிநயம் இவற்றைச் சரியாகக் கடைப்பிடித்து அனைவரும் கண்டுகளிக்கும்படி அழகுற ஆடினாள்.

  • நட்டிய அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆடல்மகளுக்குத் 'தலைக்கோல்'அளித்துச் சிறப்புச் செய்வர்.

  • மாதவிக்கு தலைக்கோல் பட்டம் அளிக்கப்பட்டதை சிலப்பதிகாரம் கூறுகிறது.
  • சொல்லும் பொருளும்:

    • புரிகுழல் – சுருண்ட கூந்தல்

    • கழை – மூங்கில்

    • கண் – கணு

    • பூதர் – ஐம்பூதங்கள்

    • ஓவிய விதானம் – ஓவியம் தீட்டப்பட்ட பந்தல்

    • நித்திலம் – முத்து

    • விருந்து – புதுமை

    • மண்ணிய – கழுவிய

    • தலைக்கோல் – நாடகக் கணிகையர் என்னும் பட்டம்

    • ஓடை – முக பாடம்

    • அரசு உவா – பட்டத்து யானை

    • பரசினர் – வாழ்த்தினர்

    • பல் இயம் – இன்னிசைக் கருவி

    • குயிலுவ மாக்கள் – இசைக் கருவிகள் வாசிப்போர்

    • தோரிய மகளிர் – ஆடலில் சிறந்த பெண்கள்

    • வாரம் – தெய்வப்பாடல்

    • ஆமந்திரிகை – இடக்கை வாத்தியம்

    • கழஞ்சு – ஒரு வகை எடை அளவு

    இலக்கணக்குறிப்பு:

    • தொல்நெறி – பண்புத்தொகை

    • ஆடலும் பாடலும் – எண்ணும்மை

    யாழின் வகைகள்:

    21 நரம்புகளைக் கொண்டது பேரியாழ்
    17 நரம்புகளைக் கொண்டது மகரயாழ்
    16 நரம்புகளைக் கொண்டது சகோடயாழ்
    7 நரம்புகளைக் கொண்டது செங்கோட்டியாழ்

    சிலப்பதிகாரத்தில் மாதவியின் ஆடல் அறங்கேற்றுக் காதை புகார்க்காண்டத்தில் இடம் பெற்றுள்ளது.

    சிலப்பதிகாரம் பற்றியக் குறிப்புகள்:

  • இயற்றியவர் – இளங்கோவடிகள். இவர் சேரன் செங்குட்டுவனின் தம்பி ஆவார்.

  • 'குடிமக்கள் காப்பியம்' என்று அழைக்கப்படுகிறது.

  • பூகார்க் காண்டம் சோழ மன்னர்களைப் பற்றிய காண்டம் ஆகும்.

  • மதுரைக் காண்டம் பாண்டிய மன்னர்களைப் பற்றிய காண்டம் ஆகும்.

  • வஞ்சிக் காண்டம் சேர மன்னர்களைப் பற்றிய காண்டம் ஆகும்.

  • இதனால் இது 'மூவேந்தர் காப்பியம்' என்று அழைக்கப்படுகிறது.

  • முதன் முதலாகப் பெண்ணை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு, அவள் அரசனை எதிர்த்து வழக்காடியதைப் பாடியதால்'புரட்சிக்காப்பியம்' எனப்படுகிறது.

  • செய்யுளாகவும்,பாடலாகவும்,உரைநடையாகவும் பாடப்பட்டுள்ளதால் இது 'உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்' எனப்படுகிறது.

  • மேலும் இந்நூல், 'பொதுமைக்காபியம்', 'ஒற்றுமைக்க்காப்பியம்', 'வராலாற்றுக் காப்பியம்' எனவும் அழைக்கப்படுகிறது.

  • சிலப்பதிகாரமும், மணிமேகலையும் 'இரட்டைக் காப்பியங்கள்' என அழைக்கப்படுகிறது.

  • 'சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்' என்று பாரதியார் குறிப்பிடுகிறார்.

  • வரந்தரு காதையில் இளங்கோவடிகள் தன்னைப் பற்றிய குறிப்பைத் தருகையில் தான் செங்குட்டுவனின் தம்பி என்பதையும் குறிப்பிடுகிறார்.


  • மெய்ப்பாட்டியல்

  • இலக்கியத்தில் வரும் செய்தி கண்ணெதிரே தோன்றுமாறு காட்டப்படுவதே மெய்ப்பாடு ஆகும்.

  • சிரிப்பு, அழுகை, சிறுமை, வியப்பு, அச்சம், பெருமை, சினம், மகிழ்ச்சி என்று மெய்ப்பாடு எண்வகைப்படும் என்று தொல்காப்பியம் கூறுகிறது.

  • 'நகையே அழுகை இளிவரல் மருட்கை
    அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
    அப்பால் எட்டே பெய்ப்பாடு என்ப'

    என்ற பாடலில் சிரிப்பு, அழுகை, சிறுமை, வியப்பு, அச்சம், பெருமை, சினம், மகிழ்ச்சி என்று மெய்ப்பாடு எண்வகைப்படும் என்று தொல்காப்பியம் கூறுகிறது.

    சொல்லும் பொருளும்:

    • நகை – சிரிப்பு

    • இளிவரல் – சிறுமை

    • மருட்கை – வியப்பு

    • பெருமிதம் – பெருமை

    • வெகுளி – சினம்

    • உவகை – மகிழ்ச்சி

    இலக்கணக்குறிப்பு:

    நகை, இளிவரல்,மருட்கை,பெருமிதம்,வெகுளி,உவகை – பண்புப்பெயர்கள்

    பகுபத உறுப்பிலக்கணம்:

    நகை – நகு + ஐ

    நகு – பகுதி (நகை ஆனது விகாரம்)

    ஐ – தொழிற்பெயர் விகுதி

    மருட்கை = மருள் + கை

    மருள் – பகுதி ("ள்" " ட் " ஆனது விகாரம்)

    கை – தொழிற்பெயர் விகுதி

    வெகுளி = வெகுள் + இ

    வெகுள் – பகுதி

    வெகுள் – பகுதி

    இ – தொழிற்பெயர் விகுதி

  • பாடிய பாணனின் குரலை எள்ளி நகையாடிய தலைவியின் கூற்று 'நந்திக் கலம்பகத்தில்' இடம் பெற்றுள்ளது.

  • தலைவன் காட்டில் புலியுடன் போராடி இறந்துபட, தலைவி துயரில் கூறுவது 'புறநானூற்றில்' இடம் பெற்றுள்ளது.

  • சேரன் கணைக்காலிரும்பொறை சிறையில் தண்ணீர் கேட்டு, காலம் தாழ்த்தித் கொடுத்ததால் அதை அருந்தாமல் தவிர்த்துத் தனக்கேற்பட்ட சிறுமையைஎண்ணிப்பாடியது 'புறநானூற்றில்'இடம் பெற்றுள்ளது.

  • கண்ணகி வானூர்தியில் வானுலகு சென்ற காட்சியைக் கண்ட குன்றவர்கள் அடைந்த வியப்பு பற்றி 'சிலப்பதிகாரத்தில்' கூறப்பட்டுள்ளது.

  • யானை சினந்து வர மகளிர் நடுங்கி அஞ்சியதை 'குறிஞ்சிப்பாட்டு' கூறுகிறது.

  • பெருவீரன் ஒருவன் தனியாகப் பெரும்படையை எதிர்க்கும் பெருமிதத்தை 'புறப்பொருள் வெண்பாமாலை' கூறுகிறது.

  • தன்னை இளையவன் என்று எள்ளிய பகைவேந்தர் மீது பாண்டியன் நெடுஞ்செழியன் சினம் கொண்டு வஞ்சினம் கூறுதலை 'புறநானூறு' கூறுகிறது.

  • 'உய்ப்போன் செய்தது காண்போர்க்கு எய்துதல்
    மெய்ப்பா டென்ப மெய்யுனர்ந் தோரே'


    என்று கூறும் நூல் – செயிற்றியம்

    தொல்காப்பியம் பற்றிய குறிப்புகள்:

  • தமிழில் கிடைக்கப் பெற்ற முதல் இலக்கண நூல் – தொல்காப்பியம்

  • இயற்றியவர் – தொல்காப்பியர்

  • இவர் ' ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர் ' என்றும் ' ஒல்காப் புலைமை தொல்காப்பியன் ' எனவும் சிறப்பிக்கப்படுகிறார்.

  • தொல்காப்பிரர் அகத்தியரின் பன்னிரு மாணவர்களில் ஒருவர்.

  • தொல்காப்பியத்திற்குச் சிறப்புப் பாயிரம் பாடியவர் – பனம்பாரனார்

  • எழுத்து, சொல், பொருள் என 3 அதிகாரங்களை உடையது.

  • இது 27 இயல்களை உடையது.

  • குற்றியலுகரப் புணர்ச்சிக்குத் தனி இயல் கண்டவர் – தொல்காப்பியர்

  • தொல்க்காப்பியப் பொருளதிகாரம் கவிதைகளுக்கானப் பொருண்மை, உறுப்புகள், உத்திகள்,அழகு ஆகியவற்றைச் சிறப்புற எடுத்தியம்புகிறது.தொல்காப்பியத்தின் ஆசிரியரான தொல்காப்பியரைத் தமிழ்ச் சான்றோர், 'ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியன்'என்று போற்றுகின்றனர்.

  • இந்நூல் முழுமைக்கும் 'இளம்பூரணர் ' உரை எழுதியுள்ளார்.

  • நடிகர் திலகம்

  • 'தென்னிந்திய நடிப்புலகின் சக்கரவர்த்தி' என்று போற்றப்படுபவர் – சிவாஜி கணேசன்

  • 'என்னைப் போல் சிவாஜி நடிப்பார் ,ஆனால் என்னால்தான் சிவாஜி போல் நடிக்கமுடியாது' என்றவர் – மார்லன் பிராண்டோ(ஹாலிவுட் நடிகர்)

  • நடிகர் சிவாஜி கணேசன் பிற்ந்த ஊர் – விழுப்புரம்

  • சிவாஜி கணேசனின் இயர்பெயர் – சின்னையா கணேசன்

  • இவருக்கு சிவாஜி கணேசன் என்று பெயரிட்டவர் – தந்தை பெரியார்.
  • சிவாஜி கணேசன் பெற்ற விருதுகள்:

    • ஆப்பிரிக்க – ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ) சிறந்த நடுகருக்கான விருது

    • கலைமாமணி விருது

    • பத்மஸ்ரீ விருது (தாமரைத் திரு)

    • பத்ம பூஷன் விருது (தாமரை அணி)

    • செவாலியர் விருது

    • தாதாசாகெப் பால்கே விருது.
  • 'பல நாடகங்களில் அதிக வேலையுள்ள பெரும் பாத்திரங்களை ஏற்று நான் நடித்திருக்கிறேன்.ஆனாலும், இந்தக் கட்டப்பொம்மனில் எனக்கு இயற்கையாக எழும் உணர்ச்சி நாடக வடிவில் எத்தகைய களைப்பை, சிரமத்தை உண்டாக்குகின்றது என்பதை நினைக்க எனக்குப் பயமாகவே இருக்கிறது என்றாலும் எனது குழுவினர்களோடு நாடக நாள்களில் ஒன்றுபட்டுச் செயல்படுவதில் காணும் இன்பமும்,மக்களின் பாராட்டுதலைநேருக்கு நேர் பெறும் வாய்ப்பும், எனக்கு எதிலும் பெற முடியாத ஒரு தனி மகிழ்ச்சியைத் தருகிறதென்ற உண்மை ஒன்றே எனக்குக் கிடைக்கும் பெரும் ஆறுதலாகும் ' என்று கூறியவர் – நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

  • இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட 'சாகேதம்', 'கஞ்சன சீதா', 'லங்கா லக்ஷ்மி' என்ற மூன்று நாடகங்களை இயற்றியவர் – 'சி.என். ஸ்ரீகண்டன்'

  • 'சிதம்பர ஸ்மரண' என்ற மலையாள நூலை இயற்றியவர் – 'பாலச்சந்திரன் சுள்ளிக்காடு' இந்நூலை 'சிதம்பர நினைவுகள்' என்னும் தலைப்பில் 'கே.வி.சைலஜா' என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

  • இலக்கணம்

    காப்பிய இலக்கணம்

  • காப்பியத்தை ஆங்கிலத்தில் EPIC என்பர். இது EPOS என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து தோன்றியது. EPOS என்பதற்குச் சொல் அல்லது பாடல் என்பது பொருள். இது வடமொழியில் காவியம் என வழங்கப்படுகிறது.

  • காப்பியம் என்னும் சொல்லை, காப்பு + இயம் எனப் பிரித்து மரபைக் காப்பது, இயம்புவது, வெளிப்படுத்துவது என்றும் மொழியைச் சிதையாது காப்பது என்றும் காரணம் கூறுவர்.

  • நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதர், தம் உரையில் ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரையும் தமிழ்விடுதூது பாடிய புலவர் அந்நூலில் பஞ்சகாப்பியம் என்னும் சொற்றொடரையு ம் குறிப்பிடுகின்றனர்.

  • "பொருள்தொகைநிகண்டு", "திருத்தணிகைஉலா" ஆகிய நூல்கள், பெருங்காப்பியம் ஐந்து எனக் குறிப்பிட்டு அவற்றின் பெயர்களையும் வழங்கியுள்ளன.

  • சிறுகாப்பியங்கள் ஐந்து என்று வழங்கும் வழக்கம் சி. வை. தாமோதரனார் காலத்திற்கு முன்பே இருந்துள்ளது என்பது அவர் பதிப்பித்த சூளாமணி (1895) பதிப்புரையிலிருந்து அறிய முடிந்தது.
  • காப்பியத்தை குறிக்கும் வேறு பெயர்கள்:

    • பொருட்டொடர் நிலைச் செய்யுள்

    • கதைச் செய்யுள்

    • அகலக் கவி

    • தொடர்நடைச் செய்யுள்

    • விருத்தச் செய்யுள்

    • உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்

    • மகாகாவியம்
    காதை, சருக்கம்,இலம்பகம்,படலம் முதலானவை காப்பியத்தின் சிற்றுறுப்புகளாக அமைந்திருக்கின்றன. காண்டம் என்பது பலசிற்றுறுப்புகளின் தொகுதியாக உள்ள பேருறுப்பைக் குறிக்கும்.

    காதை – சிலப்பதிகாரம், மணிமேகலை
    சருக்கம் – சூளாமணி, பாரதம்
    இலம்பகம் – சீவக சிந்தாமணி
    படலம் – கந்தபுராணம், கம்பராமாயணம்
    காண்டம் – சிலப்பதிகாரம், கம்பராமாயணம்

  • வடமொழியில் 'காவ்யதரிசம்' என்ற நூலைத் தழுவித் தமிழில் எழுதப்பட்ட அணியிலக்கன நூல் – 'தண்டியலங்காரம்'.

  • இந்நூலில் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என்று இருவகையாகப் பிரிக்கப்பட்டுகாப்பிய இலக்கணம் கூறப்பட்டுள்ளது.

  • 'பாவிகம் என்பது காப்பியப் பண்பே' என்று கூறும் நூல் – தண்டியலங்காரம்

  • சிலப்பதிகாரம் முதலான ஐம்பெருங்காப்பியங்களும் சிறப்பு வாய்ந்தவையே. . எனினும், பெருங்காப்பியத்திற்குரிய நான்குவகைஉறுதிப்பொருள்களும் பிற உறுப்புகளும் முழுமையாக அமையப் பெற்று விளங்கும் காப்பியம் சீவகசிந்தாமணியே என்பர்.

  • அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கனுள் ஒன்றோ இரண்டோ குறைந்து வருவது சிறுகாப்பியம் ஆகும்.

  • காப்பியத்தின் பண்பாகப்"பாவிகம் " என்பதைத் தண்டியலங்காரம் குறிக்கின்றது.

  • காப்பியத்தில் கவிஞன் வலியுறுத்த விரும்பும் அடிப்படைக் கருத்தினையே 'பாவிகம்' என்பர்.

  • 'பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப' என்பது கம்ப ராமாயணத்தின் பாவிகம்.

  • 'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினியைஉயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினைஉறுத்து வந்து ஊட்டும்' என்பது சிலப்பதிகாரத்தின் பாவிகம்.

  • அணிகளின் இலக்கணத்தைக் கூறும்நூல்களுள் முதன்மையானது தண்டியலங்காரம்.

  • இந்நூல் முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலைஆகிய செய்யுள் வகைகளைக் கூறுகிறது. இந்நான்கனுள் தொடர்நிலை என்னும் வகை, காப்பியத்தைக் குறிப்பதாகும்.

  • தொடர்நிலை ஒரு பாடலையும் மற்றொரு பாடலையும் சொல்லாலும் பொருளாலும் தொடர்பு ஏற்படுத்தும் செய்யுள் வகையைக் குறிக்கும்.

  • இது பொருள்தொடர்நிலை, சொல்தொடர்நிலை என்று இருவகைப்படும்.

  • (எ.கா). பொருள் தொடர்நிலை – சிலப்பதிகாரம், கம்பராமாயணம்

  • சொல் தொடர்நிலை – அந்தாதி இலக்கியங்கள்

  • விருத்தம் என்னும் ஒரேவகைச் செய்யுளில் அமைந்தவை சீவக சிந்தாமணி, கம்பராமாயணம்

  • பாட்டும் உரைநடையும் கலந்து பல்வகைச் செய்யுள்களில் அமைந்தது சிலப்பதிகாரம்.

  • குறுங்காப்பியங்களும் ஆசிரியர்களும்

    பாரதியார் இயற்றிய குறுங்காப்பியங்கள்:

    • பாஞ்சாலி சபதம்

    • குயில் பாட்டு

    பாரதிதாசன் இயற்றிய குறுங்காப்பியங்கள்:

    • பாண்டியன் பரிசு

    • தமிழச்சியின் கத்தி

    • இருண்ட வீடு

    • எதிர்பாராத முத்தம்

    • சஞ்சீவி பார்வதத்தின் சாரல்

    • வீரத்தாய்

    • புரட்சிக்கவி

    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இயற்றிய குறுங்காப்பியங்கள்:

    • மருமக்கள் வழி மான்மியம்

    கண்ணதாசன் இயற்றிய குறுங்காப்பியங்கள்:

    • ஆட்டனத்தி ஆதிமந்தி

    • மாங்கனி

    • ஏசு காவியம்

    கவியோகி சுத்தானந்த பாரதியார் இயற்றிய குறுங்காப்பியங்கள்:

    • பராசக்தி மகா காவியம்

    புலவர் குழந்தை இயற்றிய குறுங்காப்பியங்கள்:

    • இராவண காவியம்
    'ஐம்பெருங்காப்பியம்' என்ற சொற்றொடரைத் தம் உரையில் குறிப்பிட்டவர் – மயிலைநாதர்

    வை.மு.கோதைநாயகி பற்றிய குறிப்புகள்:

  • இவர் பிறந்த ஆண்டு 1901

  • இவரது முழுப்பெயர் 'வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகிஅம்மாள்'.

  • 'இந்திர மோகனா' என்ற நாடக நூலே இவரது முதல் நூலாகும்.

  • 'நாவல் ராணி', 'கதா மோகினி', 'ஏக அரசி' என்றெல்லாம் அழைக்கப்பட்டார்.

  • 'ஜகன் மோகினி' என்ற இதழை தொடர்ந்து 35 ஆண்டுகள் நடத்தினார்.

  • இவர் 115 நாவல்கள் எழுதியுள்ளார்.

  • இவர் 'தபால் வினோதம்' என்ற குறுநாவலை எழுதியுள்ளார்.

  • 'அந்தியிருளாற் கருகும் உலகு கண்டேன்
    அவ்வாறே வான் கண்டேன், திசைகள் கண்டேன்
    பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்ததுண்டோ?
    பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்
    சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம்
    சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி
    இந்தாவென் றேஇயற்கை அன்னை வானில்
    எழில்வாழ்வைச் சித்தரித்தவண்ணந் தானோ?'

    என்ற பாடலை இயற்றியவர் – பாரதிதாசன்

    நூல்களும் ஆசிரியர்களும்:

  • எனது சுயசரிதை – சிவாஜி கணேசன்

  • பெய்ப்பாடு – தமிழன்னல்

  • காப்பியத்தமிழ் – இரா.காசிராசன்

  • கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் – புதுமைப்பித்தன்

  • திருக்குறள்

    'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு'

    என்ற குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி – சொற்பொருள் பின்வரும் நிலையணி

    'எண்ணிய எண்ணியாங் கு எய்துப எண்ணியார்
    திண்ணியர் ஆகப் பெறின்'

    என்ற குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி – சொற்பொருள் பின்வரும் நிலையணி

    இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார்'

    என்ற குறட்பாவில் பயின்று வந்துள்ள அனி – தொழில் உவமை அணி

    'உடம்பொடு இலாதவர் வாழ்க்கை குடங்ருள்
    பாம்போடு உடன்உறைந் தற்று.'

    என்ற குறட்பாவில் பயின்று வந்துள்ள அனி – உவமை அணி

    ' திண்ணியர் ' என்பதன் பொருள் – மன உறுதியுடையவர்

    பாடம் 7 : அருமை உடைய செயல்

    இலக்கியத்தில் மேலாண்மை:

    'பலர் துஞ்சவும் தான் துஞ்சான்
    உலகு காக்கும் உயர் கொள்கை
    கேட்டோன்,எந்தை என் தெண்கிணைக் குரலே'

    என்ற புறநானூற்றுப் பாடலில் கோவூர்கிழார், சோழன் நலங்கிள்ளியைப் பற்றி பாடும் போது இரவின் கடையாமத்தில் உறங்காமல் விழித்திருந்த மன்னைப் பற்றிப் பேசி வியக்கிறார்.
    தசரதன் தன் நாட்டை மிகவும் செப்பமாகவும் நுணுக்கமாகவும் ஆட்சி செய்தான் என்பதைக் கம்பர் பாலகாண்டத்தில்,

    'வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்
    செய் எனக் காத்து இனிது அர்சு செய்கின்றான்.'
    என்று குறிப்பிடுகிறார்.


    'இன்சொல் விளைநிலனா ஈதலேவித்தாக
    வன்சொல் களைக்கட்டு வாய்மை எருவட்டி
    அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர்
    பைங்கூழ் சிறுகாலைச் செய்'

    என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் – அறநெறிச்சாரம்

    கடலைக் குறிக்கும் வேறுபெயர்கள்:

    • அரலை

    • அழுவம்

    • ஆர்கலி

    • உவரி

    • பெருநீர்

    • புனர்ப்பு

    • முந்நீர்

    • வலயம்

    • அரி

    • அளம்

    • ஆழி

    • திரை

    • சுழி

    • தென்நீர்

    • வரி

    • ஓதம்

    • பௌவம்

    • நீராழி

    • அலை

    • அளக்கர்

    • ஈண்டுநீர்

    • பானல்
  • உரோமாபுரிச் சிப்பாய்கள் பாண்டியப் போர்ப்படையில் இடம் பெற்றிருந்தார்கள் என்ற குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளது.

  • பட்டினப்பாலையில் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டது பற்றி 'நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  • 'வான் முகந்தநீர் மலைப் பொழியவும்
    மலைப் பொழிந்தநீர் கடல் பரப்பவும்
    மாரி பெய்யும் பருவம் போல
    நீரினின்றும் நிலத்து ஏற்றவும்
    நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்
    அளந்து அறியாப் பல பண்டம்
    வரம்பு அறியாமைவந்து ஈண்டி'

  • என்று பழந்தமிழகத்தில் ஏற்றுமதி இறக்குமதி குறித்தும் பல நடுகளிலிருந்து வந்த பொருள்கள் பற்றி 'பட்டினப்பாலை' கூறுகிறது.

  • புறநானூற்றில் 56 ஆம் பாடலில் யவனரது கப்பல்கள்பற்றிய குறிப்பு இடம் பெறுகிறது.

  • இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் யவனரை அரண்மனைத் தொழிலாளர்களாக்கிக் கட்டுப்படுத்தினான் , பகைநாட்டுச் செல்வங்களைக் கொண்டுவந்து தன் நாட்டு மக்களுக்கு வழங்கினான் என்ற செய்திகள் பதிற்றுப்பத்து இரண்டாம் பத்தில் இடம்பெற்றுள்ளன.

  • கல்லாரேயாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
    நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – தொல்சிறப்பின்
    ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்ந்தலாற் புத்தோடு
    தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு'

    என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல் – நாலடியார்

    'ஆன முதலில் அதிகம் செல்வானால்
    மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை
    எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
    நல்லார்க்கும் பொல்லனாம் நாடு'

    என்ற பாடலைப் பாடியவர் – ஔவையார்

  • 126 ஒற்றை வரி்களில் எழுதிய "துளிகள்" என்னும் நூலின் மூலம் உலகப்புகழ் பெற்றவர ஹிரோக்ளிடஸ். அவர கிரேக்க நாட்டவர்.

  • "இரண்டு முறை ஒருவன் ஒரே நதியில் இயங்க முடியாது" என்று அவர் சொன்ன கோட்பாடு வாழ்வுக்கும் பொருந்தும், வர்த்தகத்திற்கும் பொருந்தும்.
  • வெ.இறையன்பு பற்றிய குறிப்புகள்:

  • 'இலக்கியத்தில் மேலாண்மை' என்ற நூலை எழுதியுள்ளார்.

  • 1990 முதல் பல்வேறு துறைகளில் பதவிகளை வகித்து வருபவர்.

  • 'வாய்க்கால் மீன்கள்', 'ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்', ஏழாவது அறிவு', 'உள்ளொளிப் பயனம்', 'மூளைக்குள் சுற்றுலா' உள்ளிட்ட பல நூல்களை இயற்றியுள்ளார்.

  • இவர் எழுதிய 'வாய்க்கால் மீன்கள்' என்னும் கவிதை நூல்1995 ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றது.

  • அதிசய மலர்

    எழுத்தாளர் தமிழ்நதி அவர்களின் படைப்புகள்:

  • 'அதன் பிறகும் எஞ்சும்' என்னும் கவிதைத் தொகுப்பு

  • 'நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது'(சிறுகதைகள்)

  • 'சூரியன்தனித்தலையும் பகல், இரவுகளில் பொழியும் துயரப்பனி'(கவிதைகள்)

  • 'கானல் வரி' (குறுநாவல்)

  • 'ஈழம்:கைவிட்ட தேசம், பார்த்தீனியம்' (நாவல்)

  • புறநானூறு

    'காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே;
    மாநிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும்;
    நூறுசெறு ஆயினும் , தமித்துப்புக்கு உணினே,
    வாய்புகுவதினினும் கால்பெரிது கொடுக்கும்;
    அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே,
    கோடி யாத்து,நாடுபெரிது நந்தும்;
    மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
    வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
    பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,
    யானை புக்க புலம் போலத்
    தானும் உண்ணான், உலகமும் கெடுமே.

    'என்ற புறநானூற்றுப் பாடலை இயற்றியவர் – பிசிராந்தையார்.

    திணை: பாடண்

    விளக்கம்: ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள், போன்ற நல்லியல்புகளைச் சிறப்ப்பித்துக் கூறுவது பாடாண் திணையாகும்.

    துறை: செவியறிவுறூஉ

    விளக்கம்: அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறை தவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்,செவியறிவுறூஉ என்னும் துறை ஆகும்.

    பாடலின் பொருள்:

  • ஒரு மாவிற்கும் குறைந்த நிலமாயினும் அதன்கண் விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கிக் கவளமாகக் கொடுத்தால் யானைக்குப் பல நாட்களுக்கு உணவாகும்.

  • நூறு மடங்கு பெரிய வயலாக இருந்தாலும் யானை தனித்துச் சென்று வயலில் புகுந்து உண்ணுமாயின் அதன் வாயில் புகுந்த நெல்லைவிட அதன் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும்.

  • அதுபோல அறிவுடைய அரசன், வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு, கோடிக் கணக்கில் செல்வத்தைப் பெற்றுச் செழிப்படையும். அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத சுற்றாத்தாரோடு ஆரவாரமாக, குடிமக்களின் அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்புவது, யானை தான் புகுந்த நிலத்தில் தானும் உண்ணாமல் பிறருக்கும் பயன்படாமல் வீணாக்குவது போன்றது. அரசன் தானும் பயனடையமாட்டான்;நாட்டு மக்களும் தும்புறுவர்.
  • சொல்லும் பொருளும்:

    • காய் நெல் – விளைந்த நெல்

    • மா – ஒருநில அளவு (ஓர் ஏக்கரில் மூன்றில் ஒரு பங்கு)

    • செறு – வயல்

    • தமித்து – தனித்து

    • புக்கு – புகுந்து

    • யாத்து – சேர்த்து

    • நந்தும் – தழைக்கும்

    • வரிசை – முறைமை

    • கல் – ஒலிக்குறிப்பு

    • பரிவு – அன்பு

    • தப – கெட

    • பிண்டம் – வரி

    • நச்சின் – விரும்பினால்

    இலக்கணக்குறிப்பு:

    • காய்நெல் – வினைத்தொகை

    • புக்க – பெயரெச்சம்

    • அறியா – ஈறிகெட்ட எதிர்மறைபெயரெச்சம்

    புறநானூறு பற்றியக் குறிப்புகள்:

  • இது புறப்பொருள் சார்ந்த நூல் ஆகும்.

  • இது 400 பாடல்களைக் கொண்டது.

  • இது ' புறம்' 'புறப்பாட்டு' எனவும் வழங்கப்படும்.

  • இதனைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.

  • புறநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்.

  • புறநானூற்றின் கடவுள் வாழ்த்துச் சிவனைப் பற்றியது.

  • புறநானூறு சங்ககால மக்களின் தமிழ் உணர்வு, அறவுணர்வு, கொடை, வீரம் புதலியனவற்றைப் பற்றி அறிய உதவுகிறது.

  • இதிலுள்ள பாடல்களை 158 புலவர்கள் பாடியுள்ளனர்.

  • ' தமிழ்க் கருவூலம்'என்று அழைக்கப்படுவது – புறநானூறு.

  • அறம் , பொருள், வீடு என்று மூன்றையும் பாடும் நூல் – புறநானூறு ஆகும்.

  • புறநானூற்றில் பெண்களின் வீரத்தைக் கூறும் துறை – மூதின் முல்லை.

  • 'காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே….' என்ற பாடல் புறநானூற்றின் 184 வது பாடல்.

  • புறநானூற்றை 1894 ஆம் ஆண்டு உ.வே.சா அச்சில் பதிப்பித்தார்.

  • ஜார்ஜ்.எல்.ஹார்ட் என்பவர் புறநானூற்றை 1999 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

  • பிசிராந்தையார் சங்ககாலப் புலவர். பிசிர் என்பது பாண்டிய நாட்டில் இருந்த ஓர் ஊர். ஆந்தையார் என்பது புலவரின் இயற்பெயர்.

  • இவர் காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன், அறிவுடை நம்பி. பிசிராந்தையார் அரசனுக்கு அறிவுரை சொல்லக் கூடிய உயர்நிலையில் இருந்தார்.

  • சங்கக்கால கல்வெட்டுகளும் என் நினைவுகளும்

    'எர்லி தமிழ் எபிகிராபி' என்ற கல்வெட்டுகள் பற்றிய ஆய்வு நூலை எழுதியவர் – ஐராவதம் மகாதேவன்

  • இந்திய அரசின் தொல்பொருள் துறையினர் ஆண்டுதோறும் வெளியிட்டு வந்த தென்னிந்தியக் கல்வெட்டுகளைப் பற்றிய அறிக்கைகளில் 1927 – 28 ஆம் ஆண்டுகளின் தொகுதியில் புகளூர்க் கல்வெட்டுகளைப் பற்றிய செய்திகள் முதன் முதலாகக் கிடைக்கின்றன.

  • இவ்வறிக்கையில் ஆறுநாட்டான் குன்றின் மீதுள்ள குகைகளுள் ஒன்றில் நான்கு வரிகளில் எழுதப்பட்டுள்ள ஒரு பிராம்மிக் கல்வெட்டு இருப்பதாகவும், அது மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதால் அதைச் சரிவரப் படிக்க முடியவில்லை என்றும் அதில் ஆதன் என்ற சொல் காணப்படுவதால் அக்கல்வெட்டு சேர மன்னர்களைப் பற்றியதாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

  • தமிழ் பிராம்மிக் கல்வெட்டுகள் பெரும்பாலும் மிகச் சுருக்கமாக ஒரே வரியில் மூன்று அல்லது நான்கு சொற்களக் கொண்டு மட்டுமே பொறிக்கப்பட்டவை.

  • தென் தமிழ் நாட்டில் உள்ள குகைகளில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் ' பிராம்மி ' வடிவத்துடன் தமிழி, தரமிழி, திராவிடி என்று அழைக்கப்படுகிற வேறுபட்ட வரிவடிவங்களும் இருப்பதை ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது.

  • தமிழ் மொழியை எழுதப் பயன்படுத்தப்பட்ட பழந்தமிழ் வரிவடிவத்தைத் தமிழ்ப் பிராம்மி என்றழைக்காமல் 'தமிழி ' என்றோ அல்லது 'பழந்தமிழ் ' என்றோ அழைக்கவேண்டும் என்றவர் – ஐராவதம் மகாதேவன்.

  • நூற்றாண்டு மாணிக்கம் என்னும் நூலின் ஆசிரியர் – ஐராவதம் மகாதேவன்

  • ' 1965 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதியன்று மதுரைக்கு அருகில் உள்ள மாங்குளம் குகைக் கல்வெட்டுகள் சங்க காலப் பாண்டிய மன்னனாகிய நெடுஞ்செழியனுடையவை என்றும் அவை கி.மு. 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும் கண்டுபிடித்தேன் ' என்றவர் – ஐராவதம் மகாதேவன் (நூற்றாண்டு மாணிக்கம் என்னும் நூலில்)

  • பிராம்மிக் கல்வெட்டுகளில் தமிழுக்கே உரிய எழுத்துக்களான ழ,ள,ற, ன ஆகியவை வருவதை முதன் முதலில் சுட்டிக்காட்டி இக்கல்வெட்டுகள் பிராகிருத மொழியில் ஆனவை என்ற தவறான கருத்தை மறுத்து, இவை தமிழில்தான் எழுதப்பட்டவை என்று நிறுவிய ஆராய்ச்சியாளர் – கே.வி.சுப்ரமணியனார்.

  • ' கல்வெட்டு ' என்னும் இதழின் ஆசிரியர் – ஐராவதம் மகாதேவன்

  • பதிற்றுப்பத்தில் இடம்பெற்ற சேர அரசர்களின் பெயர்கள் புகளூர் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளதை கண்டுபிடித்து, இலக்கியத்தையும் கல்வெட்டய்வையும் ஒருங்கிணைத்தவர் – ஐராவதம் மகாதேவன்

  • பாறைகளிலிருந்த பழங்கல்வெட்டுகளைப் படியெடுத்து ஆய்வு நூலாக்கி தந்தவர் – ஐராவதம் மகாதேவன்

  • கல்வெட்டு தொடர்பான ஆய்வுய்க்காக ஐராவதம் மாகாதேவனுக்கு ஜவஹர்லால் நேரு ஆய்வறிஞர் விருது (1970), இந்திய வரலாற்று ஆராய்ச்சி மைய விருது(1992), தாமரைத்திரு விருது (2009) ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.


  • இலக்கணம்

    தொன்மம்

  • தொன்மம் என்றால் பழங்கதை, புராணம் என்றெல்லாம் பொருள் உள்ளது. தொல்காப்பியர் குறிப்பிடும் வனப்புகளுள் "தொன்மை" என்பதுவும் ஒன்றாகும்.

  • கவிதையில் அது பழங்கதையைத் (புராணத்தை) துணையாகக் கொண்டு ஒரு கருத்தை விளக்குவதையே குறிக்கிறது.

  • 'அகலிகை', 'சாபவிமோசனம்' ஆகிய கதைகளை எழுதியவர் – புதுமைப்பித்தன்.

  • திருவிளையாடற்புராணத்துச் சிவன், நக்கீரனைக் கொண்டு அழகிரிசாமி ' விட்டகுறை', 'வெந்தழலால் வேகாது' என்னும் சிறுகதைகளைப் படைத்துள்ளார்.

  • 'விட்ட குறை', 'வெந்தழலால் வேகாது' என்ற சிறுகதைகளைப் படைத்தவர் – அழகிரிசாமி

  • 'முருகு உறழ் முன்பொடு
    கடுஞ்சினம் செருக்கிப் பொருத யானை'

    என்ற பாடலடிகள் இடம் பெற்ற நூல் – நற்றிணை

  • 'சாபவிமோசனம் ', ' அகலிகை' கதைகளில் தொன்மங்களைப் பயன்படுத்தியவர் – புதுமைப்பித்தன்

  • 'தொன்மை தானே சொல்லுங் காலை உரையோடு புணர்ந்த பழமை மேற்றே '

    என்று தொன்மையைப் பற்றிக் கூறியவர் – தொல்காப்பியர்.

    தொன்மையைப் பற்றி இளம்பூரனார்:

    தொன்மையாவது உரையொடு பொருந்திப் போந்த பழமைத்தாகிய பொருள் மேல் வருவன. அவை இராம சரிதமும் பாண்டவசரிதமும் முதலாகியவற்றின் மேல்வருஞ் செய்யுள்.

    தொன்மையை பற்றி பேராசிரியர்:

  • தொன்மை என்பது உரைவிராஅய்ப் பழமையனவாகிய கதைபொருளாகச் செய்யப்படுவது.அவை பெருந்தேவனார் பாரதம், தகடூர் யாத்திரை போல்வன.

  • 'முருகு உறழ் முன்பொடு கடுஞ்சினம் செருக்கிப் பொருத யானை ' என்ற பாடலடிகள் இடம்பெற்ற நூல் – நற்றிணை

  • 'உன்மனம் ஒரு பாற்கடல்
    அதைக் கடைந்தால்
    அமுதம் மட்டுமல்ல
    ஆலகாலமும் வெளிப்படும் என்பதை
    நீ அறிவாய் அல்லவா?'

    என்ற அடிகளை இயற்றியவர் – அப்துல் ரகுமான்

    மா.இராசமாணிக்கனார் பற்றியக் குறிப்புகள்

  • இவர் பிறந்த ஆண்டு – 1907

  • தமிழில் முதன்முதலில் "மொஹெஞ்சொ-தாரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்" என்ற நூலை இயற்றியவர். – மா.இராசமாணிக்கனார்.
  • மா.இராசமாணிக்கனார் இயற்றிய நூல்கள்:

  • சோழர் வரலாறு

  • பல்லவர் வரலாறு

  • பெரியபுராண ஆராய்ச்சி

  • தமிழ்நாட்டு வட எல்லை

  • பத்துப்பாட்டு ஆராய்ச்சி

  • மா.இராசமாணிக்கனாரின் பாடல்கள் 2006-2007 ஆம் ஆண்டு தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டன.

  • 'புதிய தமிழகம்' என்ற நூலை எழுதியவர் – மா.இராசமாணிக்கனார்.

  • 'பூமிச்சருகாம் பாலையை
    முத்துபூத்த கடல்களாக்குவேன்
    புயலைக் கூறுபடுத்தியே – கோடிப்
    புதிய தென்றலாக்குவேன்
    இரவில் விண்மீன் காசினை- செலுத்தி
    இரவலரோடு பேசுவேன்!
    இரவெரிக்கும் பரிதியை- ஏழை
    விறகெரிக்க வீசுவேன்'

    என்ற பாடலை இயற்றியவர் – நா.காமராசன்

    நூல்களும் ஆசிரியர்களும்:

  • தொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம் – செந்தீ நடராசன்

  • முச்சந்தி இலக்கியம் – ஆ.இரா.வெங்கடாசலபதி

  • கல்வெட்டுகல் சொல்லும் கோயில் கதைகள் – குடவாயில் பாலசுப்ரமணியன்

  • நீர்க்குமிழி – கே.பாலச்சந்தர்

  • வெள்ளை இருட்டு – இன்குலாப்

  • முள்ளும் மலரும் – உமா சந்திரன்

  • பாடம் 8 : எல்லா உயிரும் தொழும்

    நமது அடையாளங்களை மீட்டவர்

  • தமிழ்ப்பற்று முன்னோர் வழியாக எனக்குக் கிடைத்த சீதனம்.

  • எங்கள் வீட்டில் இராமாயணம், மகாபாரதம் போன்றவையும் ஏட்டுச்சுவடிகளும் நிறைய இருந்தன.

  • ஏட்டுச்சுவடிகளை எடுத்துப் புரட்டிப்பார்த்தேன்; எதுவும் புரியாது. பின்னால் இவற்றையெல்லாம் படித்து ஆராய வேண்டும் என்னும் எண்ணம் எழும்.

  • பின்னால் நான் செய்யப்புகுந்த இலக்கிய வரலாற்றுக் கல்வெட்டு ஆராய்ச்சிகளுக்கு அன்றே என் மனத்தில் வித்தூன்றிவிட்டேன்' என்று கூறியவர் – மயிலை சீனி.வேங்கடசாமி
  • மயிலை சீனி.வேங்கடசாமியின் ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகிய இதழ்கள்:

    • குடியரசு

    • ஊழியன்

    • செந்தமிழ்ச்செல்வி

    • ஆரம்பாசிரியன்

    • லக்ஷ்மி

  • 'கிறித்துவமும் தமிழும்' என்ற நூலை எழுதியவர் – மயிலை சீனி.வேங்கடசாமி. இதுவே இவரது முதல் நூலாகும். மேலும் 'பௌத்தமும் தமிழும்','சமணமும் தமிழும்' என்ற நூல்களையும் எழுதினார்.

  • மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய முதல் நூல் – 'கிறித்துவமும் தமிழும்'

  • மகேந்திரவர்மன்,நரசிம்மவர்மன் ஆகியோர் குறித்த நூல்களைத் தொடர்ந்து மூன்றாம் நந்திவர்மன் என்ற பல்லவ மன்னன் பற்றியும் எழுதியுள்ளார்.

  • 'களப்பிரர் ஆட்சியில் தமிழகம்' என்ற நூலை எழுதியவர் – மயிலை சீனி.வேங்கடசாமி.

  • இவர் இயற்றிய 'தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்' என்னும் நூல் கவின் கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான நூல் ஆகும். இந்நூல் தமிழக அரசின் முதற்பரிசை பெற்றது குறிப்பிடத்தக்கது.

  • 'ஐந்தடிக்கு உட்பட்ட குறள் வடிவம்; அகன்ற நெற்றி; வட்டமுகம்; எடுப்பான மூக்கு; பேசத்துடிக்கும் மெல்லுதடுகள்; நான்கு முழ வெள்ளைவேட்டி ; காலர் இல்லாத முழுக்கைச் சட்டை; சட்டைப்பையில் மூக்குக் கண்ணாடி ; பவுண்டன் பேனா; கழுத்தைச் சுற்றி மார்பின் இருபுறமும் தொங்கும் மேல் துண்டு ; இடது கரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் புத்தகப்பை. இப்படியான தோற்றத்துடன் கன்னிமாரா நூலகத்தைவிட்டு வேகமாக நடந்து வெளியே வருகிறாரே, அவர் தான் மயிலைசீனி. வேங்கடசாமி.' என்று மயிலை சீனி.வேங்கடசாமி பற்றி கூறியுள்ளவர் – நாரன.துரைக்கண்ணன்

  • 'சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்'

  • 'பழங்காலத் தமிழர் வணிகம் '

  • 'களப்பிரர் ஆட்சியில் தமிழகம்'

  • 'கொங்கு நாட்டு வரலாறு'

  • 'தமிழ்நாட்டு வரலாறு – சங்ககாலம் (அரசியல்)' ஆகிய நூல்களை எழுதியவர் – மயிலை சீனி.வேங்கடசாமி. மேலும் இவர் 'தமிழ்நாட்டு வரலாறு' என்ற நூலையும் எழுதியுள்ளார்.
  • மேலும் இவர் இயற்றிய சில நூல்கள்:

  • 'சாசனச் செய்யுள் மஞ்சரி'.

  • மறைந்து போன தமிழ் நூல்கள்

  • பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்

  • மறைந்து போன தமிழ் நூல்கள்

  • 'செந்தமிழ்ச் செல்வி' என்னும் இதழில் மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகள் 'அஞ்சிறைத் தும்பி' என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது.

  • மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள், மகேந்திரவர்மன் எழுதிய மத்த விலாசம் என்ற நாடக நூலை ஆங்கிலம் வழியாக தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.

  • ' நான் கதைகளையும் நவீனங்களையும் எழுதுகிறவன் அல்லன். வரலற்று ஆராய்ச்சி நூல்களையும் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி நூல்களையும் எழுதுகிறவன். ஆராய்ச்சி நூல்களை பெரும்பாண்மையோர் படிப்பதில்லை. இதை மிகச் சிலரே படிக்கின்றனர் என்பதை நன்றாக தெரிந்தே ஆராய்ச்சி நூல்களை எழுதுகின்றேன்' என்று வருந்திக் கூறியவர் – மயிலை சீனி.வேங்கடசாமி

  • 'மயிலை சீனி. வேங்கடசாமி ஆண்ண்டில் இளைஞராக இருந்தாலும் ஆராய்ச்சித் துறையில் முதியவர் ; நல்லொழுக்கம் வாய்ந்தவர். நல்லோருடைய கூட்டுறவை பொன்னைபோல் போற்றுபவர்' என்று புகழாரம் சூட்டியவர் – சுவாமி விபுலானந்தர்.

  • மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 'தமிழ்ப் பேரவைச் செம்மல்' என்ற விருதினை அளித்தது.

  • அறிஞர்கள் இவருக்கு சென்னை கோகலே மண்டபத்தில் கூடி மணிவிழா எடுத்து 'ஆராய்ச்சிப் பேரறிஞர்' என்ற பட்டத்தை வழங்கினார்.

  • சங்ககாலப் பசும்பூண் பாண்டியன் தன் கொடியில் யானைச் சின்னத்தைக் கொண்டிருந்தான் என்ற செய்தி அகநானூற்றில் இருப்பதை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் – மயிலை சீனி.வேங்கடசாமி

  • 'தாங்கெட நேர்ந்த போதும்
    தமிழ்கெட லாற்றா அண்ணல்
    வேங்கட சாமி என்பேன்
    விரிபெரு தமிழர் மேன்மை
    ஓங்கிடச் செய்வ தொன்றே
    உயிர்ப்பணியாகக் கொண்டோன்
    வீங்கிட மாட்டான் கல்வி
    விளம்பரம் விழைதல் இல்லான்'

    என்று மயிலை சீனி.வேங்கடசாமி குறித்து பாடியவர் – பாவேந்தர் பாரதிதாசன்

    முகம்:

    'புதையுண்ட வாழ்க்கை', 'மீண்டெழுதலின் இரகசியம்' என்ற கவிதைத் தொகுப்புகளை எழுதியவர் – சுகந்தி சுப்ரமணியன்

    இரட்சணிய யாத்திரிகம்

    'பாசம்என உன்னலிர் பிணித்தன்மை பகைத்த
    நீசமனு மக்களை நினைந்து உருகும் அன்பின்
    நேசம் எனும் வல்லியதை நீக்க வசம் இன்றி
    ஈசன்மகன் நின்றனர் ஓர் ஏழையன ஓர்மின்'

    பாடலின் பொருள்:

  • இறைமகன் தன்னைப் பிறர் கயிற்றால் கட்டும்போது அதற்கு உடன்பட்டு நின்றார். அச்செயலானது, இயல்பாக மனிதர்களிடம் காணப்படுகிறச் சாதாரண அன்புச் செயல் என்று கருத வேண்டியதில்லை.

  • தம் மீது பகைகொண்டு தனக்கு இழிவான செயல்களைச் செய்த இம்மனிதர்கள் தாங்கள் வாழும் காலம் முழுவதும் துன்பத்தில் இருப்பார்களோ என்று எண்ணி அவர்களுக்காக இரக்கப்படுகிற தன்மையே காரணம்.

  • அந்த அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமல் தான், எந்த உதவியும் பெற இயலாத ஓர் ஏழையைப் போல அமைதியுடன் நின்றார். இதை நீங்கள் எண்ணிப் பாருங்கள்.

  • 'பாதகர் குழுமிச் சொற்ற பழிப்புரை என்னும் கொள்ளி
    ஏதமில் கருணைப் பெம்மான் இருதயத்து ஊன்ற ஊன்ற
    வேதனை உழந்து சிந்தை வெந்து புண்பட்டார் அல்லால்
    நோதகச் சினந்தோர் மாற்ற நுவன்றிலர் கரும நோக்கி'

    பாடலின் பொருள்:

  • கொடியோர் ஒன்றுகூடிக் கூறிய இகழ்ச்சி மொழி எனும் கொடிய தீக்கொள்ளியானது மாசில்லாத அருள்நிறைந்த இறைமகன் இதயத்தில் அழுந்தியது.

  • அவர் மிக வேதனையடைந்து மனம் வெந்து புண்பட்டாரே அல்லாமல், தம்மைத் துன்புறுத்துகிறவர்கள் மீது சினந்து வருந்தத்தக்க ஒரு மறுசொல்லும் கூறாமல் நின்றார். தாம் கருதி வந்த வேலை நிறைவேறுவதற்காக அவர் காத்திருந்தார்.

  • 'எண்ண மிட்டவர் பொந்தியு பிலாத்தேனும் இறைமுன்
    அண்ணலைத் தனி நிறுவவும், ஆக்கினைத் தீர்ப்புப்
    பண்ணவும் என நிண்ணயம் பண்ணினர் பகைகொண்டு
    ஒண்ணுமோ வறுங் கூலுவுக்கு உததியை ஒடுக்க!'

    பாடலின் பொருள்:

  • பெருந்தகையரான இறைமகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டு போந்தியு பிலாத்து என்னும் ஆளுநரின் முன் தனியாகக் கொண்டு போய் நிறுத்தினர்.

  • அவருக்குத் தண்டனைப் பெற்றுத் தரவும் உறுதியாக இருந்தனர். வற்றிய சிறிய கினறு தனக்குள் கடலை அடக்கிக் கொள்ள முடியுமா? முடியாது.
  • சொல்லும் பொருளும்:

    • உன்னலிர் – எண்ணாதீர்கள்

    • நேசம் – அன்பு

    • வல்லியதை – உறுதியை

    • ஓர்மின் – ஆரய்ந்து பாருங்கள்

    • பாதகர் – கொடியவர்

    • குழுமி – ஒன்று கூடி

    • ஏதமில் – குற்றமில்லாத

    • ஊன்ற – அழுந்த

    • நுவன்றிலர் – கூறவில்லை

    • ஆக்கினை – தண்டனை

    • நிண்ணயம் – உறுதி

    • கூவல் – கிணறு

    • ஒண்ணுமோ – முடியுமோ

    • உததி – கடல்

    • ஒடுக்க – அடக்க

    • களைந்து – கழற்றி

    • திகழ – விளங்க

    • சேர்த்தினர் – உடுத்தினர்

    • சிரத்து – தலையில்

    • கண்டகர் – கொடியவர்கள்

    • வெய்துற – வலிமை மிக

    • வைதனர் – திட்டினர்

    • மேதினி – உலகம்

    • கீண்டு – பிளந்து

    • வாரிதி – கடல்

    • சுவறாதது – வற்றாதது

    • வல்லானை – வலைமை வாய்ந்தவரை

    • நிந்தை – பழி

    • பொல்லாங்கு – கெடுதல், தீமை

    இலக்கணக்குறிப்பு:

    • கருந்தடம், வெங்குருதி – பண்புத்தொகைகள்

    • வெந்து, சினந்து, போந்து – வினையெச்சங்கள்

    • உன்னலிர் – முன்னிலைப் பன்மை வினைமுற்று

    • ஓர்மின் – ஏவல் பன்மை வினைமுற்று

    • சொற்ற, திருந்திய – பெயரெச்சங்கள்

    • பாதகர் – வினையாலணையும் பெயர்

    • ஊன்ற ஊன்ற – அடுக்குத் தொடர்.

    இரட்சணிய யாத்திரிகம் நூல் பற்றியக் குறிப்புகள்:

  • இந்நூலின் ஆசிரியர் – ஹெச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

  • 'கிறித்துவக் கம்பர்' என்று அழைக்கப்படுபவர் – ஹெச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

  • "திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த 'நற்போதகம்' எனும் ஆன்மீக மாத இதழில் இரட்சணிய யாத்திரிகம் 13 ஆண்டுகள் தொடராக வெளிவந்தது.

  • இரட்சணிய யாத்திரிகம் 1894 ஆம் ஆண்டு மே திங்களில் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டது.
  • இந்நூல் ஐந்து பருவங்களை கொண்டது:

    1. ஆதிபருவம்

    2. குமார பருவம்

    3. நிதான பருவம்

    4. ஆரணிய பருவம்

    5. இரட்சணிய பருவம்
  • எச்.ஏ.கிருட்டிணனார் 'கிறித்துவக் கம்பர்' என்று அழைக்கப்படுகிறார்.மேலும் இவர் 'போற்றித் திருவகவல்', 'இரட்சணிய மனோகரம்'முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார்.
  • ஹெச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை எழுதிய நூல்கள்:

    • இரட்சணிய யாத்திரிகம்

    • இரட்சணிய சமய நிர்ணயம்

    • இரட்சணிய மனோகரம்

    • இரட்சணியக் குறள்

    • கிறித்தவர்களளின் தேவாரம்என்று அழைக்கப்படுவது – இரட்சணிய மனோகரம்

    சிறுபாணாற்றுப்படை

    கடையெழு வள்ளல்கள்:

    • பேகன்

    • பாரி

    • காரி

    • ஆய்

    • அதியமான்

    • நள்ளி

    • ஓரி
  • கடையெழு வள்ளல்கள் ஆண்ட பகுதிகள் பற்றிக் கூறும் நூல் – சிறுபாணாற்றுப்படை

  • முல்லைக் கொடி படரத் தேர் தந்தவன் – பாரி

  • மயிலுக்கு ஆடை தந்தவன் – பேகன்

  • 'அறிமடமும் சான்றோர்க்கு அணி' என்று கூறும் நூல் – பழமொழி நானூறு
  • கடையெழு வள்ளல்களும் – ஆண்ட நாடுகளும்:

  • பேகனின் ஊரான ஆவினன்குடி 'பொதினி' என்று அழைக்கப்பட்டு தற்போது பழனி என்று அழைக்ப்படுகிறது. பழனி மலையும் அதனை சுற்றியுள்ள மலைப் பகுதிகளும் பேகனது நாடாகும்.

  • பாரியின் நாடு பறம்பு மலையும் அதனைச் சூழ்ந்திருந்த முந்நூறு ஊர்களும் ஆகும். பறம்பு மலையே பிறம்பு மலையாகி, தற்போது பிரான்மலை எனப்படுகிறது. இம்மலை சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளது.

  • காரியின் நாடு (மலையமான் திருமுடிக்காரி) மலையமான் நாடு என்பதாகும். இது மருவி 'மலாடு' எனப்பட்டது. இது விழுப்ப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருக்கோவிலூரும் (திருக்கோயிலூர்) அதனைச் சூழ்ந்துள்ள பகுதிகள் ஆகும்.

  • ஆய் நாடு (ஆய் அண்டிரன்) – பொதியமலை எனப்படும் மலை நாட்டுப் பகுதியாகும். தற்போது அகத்தியர் மலை என்றும் அழைக்கப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம், பாபநாசம் ஆகிய மலைப்பகுதிகளும் அதனைச் சூழ்ந்துள்ள பகுதிகளுமாகும்.

  • அதியமான் நாடு (அதியமான் நெடுமான் அஞ்சி) தகடூர் என்றழைக்கப்பட்ட தருமபுரியை தலைநகராகக் கொண்டு விளங்கிய பகுதி. இப்பகுதியில் உள்ள 'பூரிக்கல்' மலைப்பகுதியில் இருந்து பறித்து வந்த நெல்லிக்கனியே ஔவையாருக்கு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

  • நள்ளியின் நாடு (நளிமலை நாடன்) நெடுங்கோடு மலை முகடு என்றழைக்கப்பட்ட பகுதி. தற்போது உதகமண்டலம் (ஊட்டி) என்றழைக்கப்படுகிறது.

  • ஓரியின் நாடு (வல்வில் ஓரி) நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லி மலையும் அதனைச் சூழ்ந்துள்ள பகுதிகளும் ஆகும். ஒய்மா நாட்டுநல்லியக்கோடனது நாடு – திண்டிவனத்தைச் சேர்ந்த ஒய்மா நாடு என அழைக்கப்பட்ட பகுதி ஆகும்.
  • சொல்லும் பொருளும்:

    • வளமலை – வளமான மலை (மலை நாடு) இன்று பழநி மலை என்று அழைக்கப்படுகிறது.

    • கவா அன் – மலைப்பக்கம்

    • கலிங்கம் – ஆடை

    • சுரும்பு – வண்டு

    • நாகம் – நாகப்பாம்பு, சுரபுன்னை

    • பிறங்கு – விளங்கும்

    • பறம்பு – பறம்பு மலை

    • கறங்கு – ஒலிக்கும்

    • மருள – வியக்க

    • நிழல் – ஒளி வீசும்

    • ஆலமர் செல்வன் – சிவபெருமான்

    • அமர்ந்தனன் – விரும்பினான்

    • சாவம் – வில்

    • மால்வரை – பெரிய மலை

    • கரவாது – மறைக்காது

    • துஞ்சு – தங்கு

    • நளிசினை – செறிந்த கிளை (பெரியகிளை)

    • போது – மலர்

    • கஞலிய – நெருங்கிய

    • நாகு – இளமை

    • குறும்பொறை – சிறுகுன்று

    • கோடியர் – கூத்தர்

    • மலைதல் – போரிடல்

    • உறழ் – செறிவு

    • நுகம் – பாரம்
  • 'அறிமடமும் சான்றோர்க்கு அணி' என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல் – பழமொழி நனூறு

  • 'தமிழுக்குத் தலை கொடுத்த குமண வள்ளல்' என்று போற்றப்படுபவர் – வள்ளல் குமணன்
  • இலக்கணக்குறிப்பு:

    • வாய்த்த, உவப்ப, கொடுத்த, ஈந்த – பெயரெச்சங்கள்

    • கவா அன் – செய்யுளிசை அளபடை

    • தடக்கை – உருச்சொற்றொடர்

    • நீலம் – ஆகுபெயர்

    • நெடுவழி, வெள்ளருவி,நெடுவேல்,நன்மொழி,நன்னாடு – பண்புத்தொகை

    • கடல்தானை – உவமைத்தொகை

    • அரவக்கடல் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை

    • மலைதல் – தொழிற்பெயர்

    • விரிகடல் வினைத்தொகை

    சிறுபாணாற்றுப்படை பற்றியக் குறிப்புகள்:

  • சிறுபாணாற்றுப்படையை இயற்றியவர் நல்லூர் நத்தத்தனார்.

  • இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.

  • ஒய்மா நாட்டு மன்னன் நல்லியக்கோடனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு 269 அடிகளில் எழுதப்பட்ட நூலாகும்.

  • இந்நூல் ஆசிரியப்பாவால் ஆனது.

  • திண்டிவனப்பகுதி ஒய்மா நாடு ஆகும்.

  • இடைக்கழி நாடு என்பது செங்கற்பட்டு மாவட்டத்து மதுராந்தகம் வட்டத்தில் உள்ள கடற்கரைப் பகுதி. இது உப்பங்கழிக்கும் கடலுக்கும் இடைப்பட்ட பகுதி. ஆதலால் இது இடைக்கழி நாடு எனப்பட்டது.

  • நல்லியக்கோடனின் தலைநகரம் – கிடங்கில்

  • கிடங்கில் என்பது திண்டிவனம்

  • சிறுபாணாற்றுப்படை கடையெழு வள்ளல்களைப் பற்றிக் கூறும் நூல் ஆகும்.

  • பேகன் – மயிலுக்குப் போர்வை தந்தவன்

  • பாரி – முல்லைக்குத் தேர் தந்தவன்

  • காரி – ஈர நன்மொழி இரவலர்க்கு ஈத்துக் காத்தவன்

  • ஆய் – நாகம் கொடுத்த ஆடையைச் சிறுவனுக்குக் கொடுத்தவன்

  • அதிகன் (அதியமான்) – நெல்லிக்கனியை ஔவைக்குத் தந்தவன்

  • நள்ளி – நடைப்பரிகாரம் முட்டாது கொடுத்தவன்

  • ஓரி – குறும்பொறை நாட்டையே கூத்தர்க்குக் கொடுத்தவன்

  • காரி என்பவனுடன் போர் செய்தவன் – ஓரி

  • கொடை மடம் என்றவுடன் நினைவுக்கு வருபவன் – பேகன்

  • வஞ்சி, மதுரை, உறந்தை ஆகிய மூன்றும் வறுமை அடைந்து விட்டதாக சிறுபாணாற்றுப்படை கூறுகிறது.

  • விறலியின் வருணனையை மிகச்சிறப்பாகக் கூறும் நூல் – சிறுபாணாற்றுப்படை.

  • நெய்தல் நிலத்து ஊர் எயிற்பட்டினத்தையும் முல்லை நிலத்து ஊர் வேலூரையும் மருதநிலத்து ஊர் ஆமூரையும் பற்றி சிறுபாணாற்றுப்படை கூறுகிறது.

  • ' பன்மீன் நடுவே பால்மதிபோல
    இன்நடை ஆயமொடு இருந்தோன்'

    என்றவர் – நல்லியக்கோடன்

    கோடை மழை

  • 'கோடை மழை' என்னும் சிறுகதையின் ஆசிரியர் – சாந்தா தத்

  • 'இலக்கியச் சிந்தனை' அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான விருதை பெற்ற நூல் – 'கோடை மழை'

  • இதனை இயற்றியவர் 'சாந்தா தத்' என்ற பெண் படைப்பாளர். இவர் ஹைதராபாத்தில் வெளியாகும் 'நிறை' மாத இதழின் ஆசிரியாராக உள்ளார்.

  • 'திசை எட்டும்' என்ற மொழிப்பெயர்ப்பு இதழின் ஆசிரியர் குழுவில் உள்ளார்.

  • இவருடைய மொழிபெயர்ப்ப்புகளை சாகித்திய அகாதமி வெளியிட்டுள்ளது.

  • இலக்கணம்

    குறியீடு

  • குறியீட்டால் பொருளை உணர்த்துவது குறியீட்டியம் எனப்படும்.

  • குறியீடு, பல துறைகளில் பயன்படுகிறது.

  • 19 ஆம் நூற்றாண்டில் குறியீட்டியம் ஓர் இலக்கியக் கோட்பாடாக உருப்பெற்றது.

  • சங்க இலக்கியத்தில் அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள், ' உள்ளுறை உவமம்' என்ற முதிர்ந்த குறிப்புப் பொருள் உத்தியில் இடம்பெற்றுள்ளன.

  • இந்தக் குறியீட்டு மரபு புதுக்கவிதைகளில் அதிகமாகக் காணப்படுகிறது.

  • 'வரங்கள்
    சாபங்கள்
    ஆகுமென்றால் இங்கே
    தவங்கள் எதற்காக?'

    என்ற அடிகளை எழுதியவர் – அப்துல் ரகுமான்

    'இந்த
    ஆதிரைப்பருக்கைகள்
    வீழ்ந்ததும்
    பூமிப்பாத்திரம்
    அமுதசுரபி'
    – (பால்வீதி, அப்துல் ரகுமான்)

  • சங்க இலக்கியத்தில், அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள் – உள்ளுறை உவமம்

  • மறைத்துச் சொல்லவும் மிகுத்துச் சொல்லவும் அழுத்திச் சொல்லவும் பயன்படும் இலக்கிய உத்தி – குறியீடு

  • ச.த. சற்குணரின் உரையைக் கேட்டுத் தூண்டப்பெற்ற மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய நூல் – 'கிறித்துவமும் தமிழும்'
  • வ.சு.ப.மாணிக்கம் பற்றிய குறிப்புகள்:

  • 'தமிழ் இமயம்' என்று அறிஞர்களால் போற்றப்படுபவர்.

  • 'தமிழ் வழிக் கல்வி இயக்கம்' என்ற அமைப்பை நிறுவியவர்.

  • அவருக்குத்தமிழக அரசு அவருடைய மறைவிற்குப்பிறகு, திருவள்ளுவர் விருது வழங்கியதுடன் 2006 ஆம் ஆண்டு அவருடைய நூல்களை நாட்டுடமையாக்கிச் சிறப்புச் செய்தது.
  • இவர் இயற்றிய நூல்கள்:

    • தமிழ்க்காதல்

    • வள்ளுவம்

    • கம்பர்

    • சங்கநெறி
    'ராஜா வந்திருக்கிறார்' என்ற நூலை எழுதியவர் – கு.அழகிரிசாமி

    நூல்களும் ஆசிரியர்களும்:

  • தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் – மயிலை சீனி. வேங்கடசாமி

  • மாறுபட்டுச் சிந்திக்கலாமா? – சிபி.கே.சாலமன்

  • ஏழு பெருவள்ளல்கள் – கி.வ.ஜெகந்நாதன்

  • இயேசு காவியம் – கண்ணதாசன்

  • கோபால்ல கிராமம் – கி.ராஜநாராயணன்

  • பால் வீதி – அப்துல்ரகுமான்

  • வீரபாண்டிய கட்டபொம்மன் – அரு.ராமநாதன்


  • Scroll to Top