6ஆம் வகுப்பு
இலக்கணம்
தமிழ் மொழியின் இலக்கண வகைகள்:
- எழுத்து இலக்கணம்
- சொல் இலக்கணம்
- பொருள் இலக்கணம்
- யாப்பு இலக்கணம்
- அணி இலக்கணம்
ஒலி வடிவாக எழுப்பப்படுவதும் வரிவடிவாக எழுதப்படுவதும் எழுத்து எனப்படுகிறது.
- குறில் எழுத்துக்கள் – அ, இ, உ, எ, ஒ
- நெடில் எழுத்துக்கள் – ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ
மாத்திரை:
மாத்திரை என்பது இங்குக் கால அளவைக் குறிக்கிறது. ஒரு மாத்திரை என்பது கண் இமைக்கவோ, ஒரு முறை கைநொடிக்கவோ ஆகும் கால அளவு ஆகும்.
- வல்லினம் – க், ச், ட், த், ப், ற்
- மெல்லினம் – ங், ஞ், ண், ந், ம், ன்
- இடையினம் – ய், ர், ல், வ், ழ், ள்
6ஆம் வகுப்பு
இலக்கணம்
சொல்லும் பொருளும்:
- நிருமித்த – உருவாக்கிய
- விளைவு – விளைச்சல்
- சமூகம் – மக்கள் குழு
- அசதி – சோர்வு
- ஆழி பெருக்கு – கடல் கோள்
- மேதினி – உலகம்
- ஊழி – நீண்டதொருகாலப் பகுதி
- உள்ளப்பூட்டு – அறியவிரும்பாமை
- கேணி – கிணறு
- சித்தம் – மணம்
- மாடங்கள் – மாளிகையின் அடுக்குகள்
பிரித்து எழுதுக:
- நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – நிலவென்று
- தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – தமிழெங்கள்
- அமுதென்று என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – அமுது + என்று
- செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்தால் செம்மை + தமிழ் எனப் பிரியும்.
- பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்தால் பொய் + அகற்றும் எனப் பிரியும்
- பாட்டு + இருக்கும் என்னும் சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – பாட்டிருக்கும்
- எட்டு + திசை என்ற சொல்லை சேர்த்து எழுதக் கிடைப்பது – எட்டுத்திசை
- நிலத்தினிடையே என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது – நிலத்தின் + இடையே
- முத்து + சுடர் என்பதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – முத்துச்சுடர்
முதலெழுத்தும் சார்பெழுத்தும்
- உயிர்மெய்
- ஆய்தம்
- உயிரளபெடை
- ஒற்றளபெடை
- குற்றியலிகரம்
- குற்றியலுகரம்
- ஐகாரக்குறுக்கம்
- ஒளகாரக்குறுக்கம்
- மகரக்குறுக்கம்
- ஆய்தக்குறுக்கம்
உயிர்மெய்
- மெய் எழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன.
- உயிர்மெய் எழுத்தின் ஒலி வடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும்.
- வரிவடிவம் மெய்யெழுத்தை ஒத்திருக்கும். ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்திருக்கும்.
- முதல் எழுத்துகளைச் சார்ந்து வருவதால் இவை சார்பெழுத்து வகையுள் அடங்கும்.
ஆய்தம்
- மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்றது.
- முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை என்ற வேறு பெயர்களும் இதற்கு உண்டு.
- நுட்பமான ஒலிப்புமுறையை உடையது.
- தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
- தனித்து இயங்காது.
- முதல் எழுத்துகளாகிய உயிரையும், மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆகும்.
சொல்லும் பொருளும்:
- இயன்றவரை – முடிந்தவரை
- ஒருமித்து – ஒன்றுபட்டு
- ஔடதம் – மருந்து
- மாசற – குறை இல்லாமல்
- சீர்தூக்கின் – ஒப்பிட்டு ஆராய்ந்து
- தேசம் – நாடு
- தூற்றும் படி – இகழும்படி
- மூத்தோர் – பெரியோர்
- மேதைகள் – அறிஞர்கள்
- மாற்றார் – மற்றவர்
- நெறி – வழி
- வற்றாமல் – அழியாமல்
பிரித்து எழுதுக:
- கண்டறி என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – கண்டு + அறி
- ஓய்வற என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது – ஓய்வு + அற
- ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – ஏனென்று
- ஔடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – ஔடதமாம்
- விண்வெளி என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – விண் + வெளி
- நீலம் + வான் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – நீலவான்
- இல்லாது + இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – இல்லாதியங்கும்
- நின்றிருந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – நின்று + இருந்த
- மருத்துவம் + துறை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – மருத்துவத்துறை
- நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல் – சேர்த்தல்
- எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல் – அரிது
- இடமெல்லாம் என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது – இடம் + எல்லாம்
- மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – மாசு + அற
- குற்றம் + இல்லாதவர் என்ற சொல்லை சேர்த்து எழுதக் கிடைப்பது – குற்றமில்லாதவர்
- சிறப்பு + உடையார் என்பதனை சேர்த்து எழுதக் கிடைப்பது – சிறப்புடையார்
இன எழுத்துக்கள்
(எ.கா) திங்கள் மஞ்சள், மண்டபம், சந்தனம், அம்பு, தென்றல்
(எ.கா) ஓஒதல், தூஉம், தழீஇ
சொல்லும் பொருளும்:
- நன்றியறிதல் – பிறர் செய்த உதவியை மறவாமை
- ஒப்புரவு – உதவி செய்தல்
- நட்டல் – நட்புக் கொள்ளுதல்
- நந்தவனம் – பூஞ்சோலை
- பண் – இசை
- பார் – உலகம்
- இழைத்து – பதித்து
தொகைச்சொற்களின் விளக்கம்:
- முத்தேன் – கொம்புத்தேன், பொந்துத்தேன், கொசுத்தேன்
- முக்கனி – மா, பலா, வாழை
- முத்தமிழ் – இயல், இசை, நாடகம்
பிரித்து எழுதுக:
- பாட்டிசைத்து என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது – பாட்டு + இசைத்து
- கண்ணுறங்கு என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – கண் + உறங்கு
- வாழை + இலை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – வாழையிலை
- கை + அமர்த்தி என்பதை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – கையமர்த்தி
- அறிவு + உடைமை என்னும் சொல்லை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – அறிவுடைமை
- நன்றி + அறிதல் என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது – நன்றியறிதல்
- பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – பொறை + உடைமை
மயங்கொலிகள்
(எ.கா) மணம் – மனம்
ண, ன, ந, ல, ள, ழ, ர, ற ஆகிய எட்டும் மயங்கொலிகள் ஆகும்.
மயங்கொலி எழுத்துக்களின் எண்ணிக்கை – 8
மயங்கொலியின் பொருள் வேறுபாடுகள்:
- வாணம் – வெடி
- வானம் – ஆகாயம்
- பணி – வேலை
- பனி – குளிர்ச்சி
- விலை – பொருளின் மதிப்பு
- விளை – உண்டாக்குதல்
- விழை – விரும்பு
- இலை – செடியின் இலை
- இளை – மெலிந்து போதல்
- இழை – நூல் இழை
- ஏரி – குளம்
- ஏறி – மேலே ஏறி
- கூரை – வீட்டின் கூரை
- கூறை – புடவை
- பரவை – கடல்
- பறவை – ஓர் உயிரினம்
சொல்லும் பொருளும்:
- மல்லெடுத்த – வலிமை பெற்ற
- சமர் – போர்
- நல்கும் – தரும்
- கழனி – வயல்
- மறம் – வீரம்
- எக்களிப்பு – பெருமகிழ்ச்சி
- கலம் – கப்பல்
- ஆழி – கடல்
- கதிர்ச்சுடர் – கதிரவனின் ஒளி
- மின்னல் வரி – மின்னல் கோடுகள்
- அரிச்சுவடி – அகரவரிசை எழுத்துக்கள்
பிரித்து எழுதுக:
- கல்லெடுத்து என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – கல் + எடுத்து
- நானிலம் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – நான்கு + நிலம்
- நாடு + என்ற என்னும் சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – நாடென்ற
- கலம் + ஏறி எனபதை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – கலமேறி
- பொருளுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – பொருள் + உடைமை
- உள்ளுவது + எல்லாம் என்பதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – உள்ளுவதெல்லாம்
- பயன் + இலா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – பயனிலா
- கதிர்ச்சுடர் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – கதிர் + சுடர்
- மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – மூச்சு + அடக்கி
- பெருமை + வானம் என்பதை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – பெருவானம்
- வணிகம் + சாத்து என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – வணிகச்சாத்து
- பண்டம் + மாற்று என்பதை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – பண்டமாற்று
- வண்ணப்படங்கள் என்னும் சொல்லை பிரித்து எழுதும் முறை – வண்ணம் + படங்கள்
- விரிவடைந்த என்னும் சொல்லை பிரித்து எழுதும் முறை – விரிவு + அடைந்த
நெய்தல் திணை:
- நிலம் – கடலும் கடல் சார்ந்த இடமும்
- மக்கள் – பரதர், பரத்தியர், எயினர், எயிற்றியர்
- தொழில் – மீன் பிடித்தல்
- பூ – தாழம்பூ
ஆங்கிலச் சொல்லும், தமிழ்ச் சொற்களும்:
- கரன்சி நோட் – பணத்தாள்
- பேங்க் – வங்கி
- செக் – காசோலை
- டிமாண்ட் டிராப்ட் – வரைவோலை
- டிஜிட்டல் – மின்னணு மயம்
- டெபிட் கார்டு – பற்று அட்டை
- கிரெடிட் கார்டு – கடன் அட்டை
- ஆன்லைன் ஷாப்பிங் – இணையத்தள வணிகம்
- ஈ-காமர்ஸ் – மின்னணு வணிகம்
சுட்டு எழுத்துக்கள், வினா எழுத்துக்கள்
அகச்சுட்டு:
இவன், அவன், இது, அது – இச்சொற்களில் உள்ள சுட்டெழுத்துக்களை நீக்கினால் பிற எழுத்துக்கள் பொருள் தருவதில்லை. இவ்வாறு சுட்டெழுத்துக்கள் சொல்லில் உள்ளேயே (அகத்தே) இருந்து பொருளைத் தருவது அகச்சுட்டு எனப்படும்.புறச்சுட்டு:
அந்நீர்வீழ்ச்சி, இம்மலை, இந்நூல் இச்சொற்களில் உள்ள சுட்டெழுத்துக்களை நீக்கினாலும் பிற எழுத்துக்கள் பொருள் தரும். இவ்வாறு சுட்டெழுத்துக்கள் சொல்லின் வெளியே (புறத்தே) இருந்து சுட்டுப் பொருளைத் தருவது புறச்சுட்டு எனப்படும்.அண்மைச் சுட்டு:
இவன், இது, இவர், இம்மரம், இவ்வீடு – இச்சொற்கள் நம் அருகில் உள்ளவற்றைச் சுட்டுகின்றன. எனவே இஃது அண்மைச் சுட்டு எனபடும். அண்மைச் சுட்டெழுத்து "இ" ஆகும்.சேய்மைச்சுட்டு:
சுட்டுத்திரிபு:
அ, இ ஆகிய சுட்டெழுத்துக்கள் அந்த, இந்த என திரிந்து சுட்டுப் பொருளைத் தருவது "சுட்டுத்திரிபு" எனப்படும்.(எ.கா) இப்பள்ளி – இந்தப்பள்ளி
வினா எழுத்துக்கள்:
வினாப் பொருளைத் தரும் எழுத்துக்களுக்கு "வினா எழுத்துக்கள்" என்று பெயர். சில வினா எழுத்துக்கள் சொல்லில் முதலில் இடம் பெறும். சில வினா எழுத்துக்கள் சொல்லின் இறுதியில் இடம் பெறும்.அகவினா:
வினா எழுத்துக்கள் சொல்லின் அகத்தே இருந்து வினாப் பொருளைத் தருமானால் அது அகவினா எனப்படும்.(எ.கா) எது, யார், ஏன் இச்சொற்களில் உள்ள வினா எழுத்துக்களை நீக்கினால் பிற எழுத்துக்களுக்குப் பொருள் இல்லை.
புறவினா:
வினா எழுத்துக்கள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளைத் தருமானால் அஃது புறவினா எனப்படும்.(எ.கா) அவனா, வருவானோ இச்சொற்களில் உள்ள ஆ ஓ ஆகிய வினா எழுத்துக்களை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும்.
சொல்லும் பொருளும்:
- மெய் – உண்மை
- தேசம் – நாடு
- நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – நூல் + ஆடை
- எதிர் + ஒலிக்க என்னும் சொல்லை சேர்த்து எழுதக் கிடைப்பது – எதிரொலிக்க
நால்வகைச் சொற்கள்
- பெயர்ச்சொல்
- வினைச்சொல்
- இடைச்சொல்
- உரிச்சொல்
பெயர்ச்சொல்:
ஒன்றின் பெயரைக் குறிக்கும் சொல் "பெயர்ச்சொல்" எனப்படும்.(எ.கா) பாரதி, பள்ளி, காலை, நன்மை, ஓடுதல்.
வினைச்சொல்:
வினை என்னும் சொல்லுக்குச் செயல் என்பது பொருள். செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.(எ.கா) வா, போ, எழுது, விளையாடு
இடைச்சொல்:
பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் இடைச்சொல் ஆகும்.(எ.கா) உம் – தந்தையும் தாயும்
மற்று – மற்றொருவர்
ஐ – திருக்குறளை
உரிச்சொல்:
பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது – உரிச்சொல் ஆகும்.(எ.கா) மா – மாநகரம்
சால – சாலச்சிறந்தது
பெயர்ச்சொல்:
ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.பெயர்ச்சொல் வகைகள்:
பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்.- பொருட்பெயர்
- இடப்பெயர்
- காலப்பெயர்
- சினைப்பெயர்
- பண்புப்பெயர்
- தொழிற்பெயர்
பொருட்பெயர்:
பொருளைக் குறிக்கும் பெயர் பொருட்பெயர் எனப்படும். இஃது உயிருள்ள பொருள்களையும் உயிரற்ற பொருள்களையும் குறிக்கும்.(எ.கா) மரம், செடி, மயில், பறவை, புத்தகம், நாற்காலி
இடப்பெயர்:
ஓர் இடத்தின் பெயரைக் குறிக்கும் பெயர் இடப்பெயர் எனப்படும்.(எ.கா) சென்னை, பள்ளி, பூங்கா, தெரு
காலப்பெயர்:
காலத்தைக் குறிக்கும் பெயர் காலப்பெயர் எனப்படும்.(எ.கா) நிமிடம், நாள், வாரம், சித்திரை, ஆண்டு
சினைப்பெயர்:
பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர் சினைப்பெயர் எனப்படும்.(எ.கா) கண், கை, இலை, கிளை
பண்புப்பெயர்:
பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர் பண்புப்பெயர் எனப்படும்.(எ.கா) வட்டம், சதுரம், செம்மை, நன்மை
தொழிற்பெயர்:
தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர் எனப்படும்.(எ.கா) படித்தல், ஆடுதல், நடித்தல்
இடுகுறிப்பெயர், காரணப்பெயர்:
இடுகுறிப்பெயர்:
நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல் பெயரிட்டு வழங்கினர். அவ்வாறு இட்டு வழங்கிய பெயர்கள் இடுகுறிப்பெயர்கள் ஆகும்.(எ.கா) மண், மரம், காற்று
இடுகுறிப் பொதுப்பெயர், இடுகுறி சிறப்புப்பெயர் என இடுகுறிப்பெயர் இருவகைப்படும்.
இடுகுறி பொதுப்பெயர்:
ஓர் இடுகுறிப்பெயர் அத்தன்மை உள்ள எல்லாப் பொருள்களையும் குறிப்பது இடுகுறிப் பொதுப்பெயர் எனப்படும்.(எ.கா) மரம், காடு
இடுகுறி சிறப்புப் பெயர்:
ஓர் இடுகுறிப்பெயர் குறிப்பாக ஒரு பொருளை மட்டும் குறிப்பது இடுகுறி சிறப்புப் பெயர் எனப்படும்.(எ.கா) மா, கருவேலங்காடு
காரணப் பெயர்:
நம் முன்னோர் சிலப் பொருள்களுக்கு காரணம் கருதி பெயரிட்டனர். இவ்வாறு காரணத்தோடு ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர் காரணப்பெயர் எனப்படும்.(எ.கா) நாற்காலி, கரும்பலகை.
இது காரணப் பொதுப்பெயர், காரணசிறப்புப் பெயர் என இருவகைப்படும்.
காரணப் பொதுப் பெயர்:
காரணப்பெயர் குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறித்தால் அது காரணப்பொதுபெயர் எனப்படும்.(எ.கா) பறவை, அணி
காரண சிறப்புப்பெயர்:
குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களும் ஒன்றை மட்டும் சிறப்பாகக் குறிப்பது காரணச்சிறப்புப்பெயர் ஆகும்.(எ.கா) வளையல், மரங்கொத்தி
"வாழை" என்பது இருகுறிசிறப்புப் பெயர் அகும்.
சொல்லும் பொருளும்:
- தண்டருள் – குளிர்ந்த கருணை
- கூர் – மிகுதி
- செம்மையருக்கு – சான்றோருக்கு
- ஏவல் – தொண்டு
- பராபரமே – மேலான பொருளே
- பணி – தொண்டு
- எய்தும் – கிடைக்கும்
- எல்லாரும் – எல்லா மக்களும்
- அல்லாமல் – அதைத் தவிர
- சுயம் – தனித்தன்மை
- உள்ளீடுகள் – உள்ளே இருப்பவை
- அஞ்சினர் – பயந்தனர்
- கருணை – இரக்கம்
- வீழும் – விழும்
- ஆகாது – முடியாது
- பார் – உலகம்
- நீள்நிலம் – பரந்த உலகம்
- முற்றும் – முழுவதும்
- மாரி – மழை
- கும்பி – வயிறு
பிரித்து எழுதுக:
- தம் + உயிர் என்பதை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – தம்முயிர்
- இன்புற்று + இருக்க என்பதை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – இன்புற்றிருக்க
- தானென்று என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது – தான் + என்று
- "கோ" என்றால் "பசு" என்று பொருள்.
- "முகி" என்றால் "முகம்" என்று பொருள்.
- எளிதாகும் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – எளிது + ஆகும்
- பாலையெல்லாம் என்னும் சொல்லியப் பிரித்து எழுதக் கிடைப்பது – பாலை + எல்லாம்
- இனிமை + உயிர் என்பதை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – இன்னுயிர்
- மலை + எலாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – மலையெலாம்
அணி இலக்கணம்
இயல்பு நவிற்சி அணி:
ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது இயல்பு நவிற்சி அணி ஆகும்.(எ.கா)
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
அம்மா என்குது வெள்ளைப்பசு – உடன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி
நாவால் நக்குது வெள்ளைப்பசு – பாலை
நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி"
கவிமணி தேசிக விநாயகனார், இப்பாடலில் கவிஞர் பசுவும் கன்றும் ஒன்றுடன் ஒன்று கொஞ்சி விளையாடுவதை இயல்பாக எடுத்துக் கூறியுள்ளார். எனவே இது இயல்பு நவிற்சி அணி ஆகும்.
உயர்வு நவிற்சி அணி:
ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது உயர்வு நவிற்சி அணி ஆகும்.(எ.கா)
கூதல் அடிக்குமென்று
வெந்நீரில் குளித்தால்
மேலே கருக்கமென்று
ஆகாச கங்கை
அனல் உறைக்குமென்று
பாதாள கங்கயைப்
பாடி அழைத்தார் உன் தாத்தா"
குளிர்நீரில் குளித்தால் என்ற பாடலில் உயர்வு நவிற்சி அணி அமைந்துள்ளது.
கலைச்சொற்கள்:
- மனிதனநேயம் – humanity
- கருணை – mercy
- உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை – Transplantation
- நோபல் பரிசு – Nobel prize
- சரக்குந்து – lorry
சொல்லும் பொருளும்:
- திங்கள் – நிலவு
- கொங்கு – மகரந்தம்
- அலர் – மலர்தல்
- திகிரி – ஆணைச்சக்கரம்
- பொற்கோட்டு – பொன்மயமான சிகரத்தில்
- மேரு – இமயமலை
- நாம நீர் – அச்சம் தரும் கடல்
- அளி – கருணை
பிரித்து எழுதுக:
- வெண்குடை என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது – வெண்மை + குடை
- பொற்கோட்டு என்னும் சொல்லைப் பிரித்தால் பொன் + கோட்டு எனக் கிடைக்கும்.
- அவன் + அளிபோல் என்ற சொல்லை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – அவனளிபோல்
- தொன்மை என்னும் சொல்லின் பொருள் – பழமை
- சீரிளமை என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் – சீர்மை + இளமை
- சிலம்பு + அதிகாரம் என்னும் சொல்லை சேர்க்கக் கிடைக்கும் சொல் – சிலப்பதிகாரம்
- கணினி + தமிழ் என்பதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் -கணினித்தமிழ்
- தரை + இறங்கும் என்பதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – தரையிறங்கும்
- வழி + தடம் என்பதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – வழித்தடம்
மொழி முதல், இறுதி எழுத்துக்கள்
மொழி முதல் எழுத்துகள்:
(இக்காலத்தில் ஙனம் என்னும் சொல்தனித்து இயங்காமல் அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம் என்னும் சொற்களில் மட்டுமே வழங்கி வருகிறது.)
மொழிக்கு முதலில் வராத எழுத்துகள்:
(எ.கா) டமாரம், ரம்பம், லண்டன், ஃப்ரான்ஸ், டென்மார்க், போன்றவை பிறமொழிச் சொற்கள்.
மொழி இறுதி எழுத்துகள்:
மொழி இறுதியாகா எழுத்துகள்:
(நொ என்னும் எழுத்து ஓரெழுத்து ஒரு மொழியாகத் துன்பம் என்னும் பொருளில் வரும்)
சொல்லின் இடையில் வரும் எழுத்துகள்
இலக்கியம்
சிலப்பதிகாரம்
கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்றுஇவ்
அங்கண் உலகு அளித்த லான்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம் திரிதலான்
மாமழை போற்றதும் மாமழை போற்றதும்
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்
மேல்நின்று தான் சுரத்தலான்"
பாடலின் பொருள்:
சிலப்பதிகாரம் பற்றியக் குறிப்புகள்:
சிலப்பதிகாரம் 3 காண்டங்களை உடையது.
- புகார்க் காண்டம்
- மதுரைக் காண்டம்
- வஞ்சிக் காண்டம்
- புகார்க் காண்டம் 10 காதைகள் உடையது
- மதுரைக் காண்டம் 13 காதைகள் உடையது
- வஞ்சிக் காண்டம் 7 காதைகள் உடையது
"நெஞ்சம் அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர்
மணியாரம் படைத்த தமிழ்நாடு" என்று பாராட்டியவர் – பாரதியார்
திருக்குறள் பற்றியக் குறிப்புகள்
- பதினென்கீழ்கணக்கு நூல்களுள் அதிக அறங்களைச் சொல்லும் நூல் – திருக்குறள்
- திருக்குறளின் சிறப்பை எடுத்துக்கூறும் நூல் – திருவள்ளுவமாலை
- பதினென்கீழ்கணக்கு நூல்களுள் குறள் வெண்பாவால் ஆன ஒரே நூல் – திருக்குறள்
- முதன் முதலில் திருக்குறளைப் பதிப்பித்தவர் – ஞானப்பிரகாசம்
- பரிமேலழகர் உரையுடன் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்தவர் – இராமாநுஜ கவிராயர்
திருக்குறளுக்கு வழங்கும் வேறு பெயர்கள்:
- உத்திரவேதம்
- தெய்வநூல்
- பொய்யாமொழி
- வாயுறை வாழ்த்து
- தமிழ் மறை
- பொது மறை
- திருவள்ளுவப் பயன்
- திருவள்ளுவம்
திருவள்ளுவருக்கு வழங்கும் வேறு பெயர்கள்:
- வள்ளுவநாயனார்
- தேவர்
- முதற்பாவலர்
- தெய்வப்புலவர்
- நான்முகன்
- மாதாநுபங்கி
- செந்நாப்போதார்
- பெருநாவலார்
- பொய்யில் புலவன்
அறிவியல் ஆத்திச்சூடி
"புதிய ஆத்திச்சூடி" இயற்றியவர் – பாரதியார்.
"அறிவியல் சிந்தனை கொள்
ஆய்வில் மூழ்கு
இயன்றவரைப் புரிந்துகொள்
ஈடுபாட்டுடன் அணுகு
உண்மை கண்டறி
ஊக்கம் வெற்றி தரும்
என்றும் அறிவியலே வெல்லும்
ஏன் என்று கேள்
ஐயம் தெளிந்து சொல்
ஒருமித்துச் செயல்படு
ஓய்வற உழை
ஔடதமாம் அனுபவம்"
என்ற அறிவியல் ஆத்திச்சூடியை இயற்றியவர் – நெல்லை சு. முத்து
மூதுரை
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்
தன்தேசம் அல்லாமல் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு"
என்று கல்வி கற்றவரின் சிறப்பைக் கூறியவர் – ஔவையார்.
மூதுரை பற்றியக் குறிப்புகள்
- மூதுரை இயற்றியவர் – ஔவையார்
- மூதுரை என்னும் "சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை" என்பது பொருள்.
- சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர்பெற்றது.
- இந்நூலில் 31 பாடல்கள் உள்ளன.
- அனைத்தும் நேரிசை வெண்பாக்கள்.
எளிமையான உவமைகளை எடுத்துக்காட்டி உயர்ந்த நீதியினைச் சொல்லும் நூல் – மூதுரை
"ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடுஇல்லை அந்நாடு
வேற்றுநாடு ஆகா தமவேஆம் ஆயினால்
ஆற்றுஉணா வேண்டுவது இல்."
என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல் – "பழமொழி நானூறு"
இதனை இயற்றியவர் "முன்றுரை அரையனார்".
ஆசாரக்கோவை
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடமை
நல்லினத் தாரோடு நட்டல் – இவையெட்டும்
சொல்லிய ஆசார வித்து"
என்ற பாடல் இடம் பெற்ற நூல் – "ஆசாரக் கோவை"
இதனை இயற்றியவர் – "பெருவாயின் முள்ளியார்".
ஆசாரக்கோவை பற்றியக் குறிப்புகள்:
- இந்நூலை இயற்றியவர் – பெருவாயின் முள்ளியார்.
- இவர் பிறந்த ஊர் கயத்தூர்.
- ஆசாரக்கோவை என்பதற்கு "நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு" என்பது பொருள்.
- இந்நூல் பதினென்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று.
- இந்நூல் 100 வெண்பாக்களை உடையது.
- அன்றாட வாழ்க்கையில் செய்யும் சிறு சிறு செயல்களையும் எந்த முறையில் செய்ய வேண்டும் என்று விரிவாகக் கூறும் நூல் – ஆசாரக்கோவை ஆகும்.
தாலாட்டு பற்றியக் குறிப்புகள்
- தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று.
- "தால்" என்பதற்கு "நாக்கு" என்பது பொருளாகும்.
- நாவை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு (தால் + ஆட்டு) என்று பெயர்பெற்றது.
- குழந்தையின் அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல் தாலாட்டு ஆகும்.
- காதால்கேட்டு வாய்மொழியாக பாடும் பாடல் "வாய்மொழி இலக்கியம்" எனப்படும்.
- "நட்டுப்புற இயல் ஆய்வு" என்னும் நூலைத் தொகுத்தவர் – சு.சக்திவேல்
- மணிமேகலை அமுதசுரபியில் முதன்முதலில் ஆதிரையிடம் பிச்சையேற்றாள்.
- உணவை அள்ள அள்ள குறையாத "அமுத சுரபியைப்" பெற்றவள் – மணிமேகலை.
ஐங்குறுநூறு பற்றியக் குறிப்புகள்
- இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
- ஐங்குறுநூறு அகநூல் ஆகும்.
- இந்நூல் 500 பாடல்களைக் கொண்டது.
- சிற்றெல்லை 3 அடி. பேரெல்லை 6 அடி.
- ஒவ்வொரு திணைக்கும் 100 பாடல்கள் உள்ளன.
- ஒவ்வொரு திணையும் பத்துப்பத்தாக பிரிக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு பத்தும் பாடலின் பொருள் அல்லது பயின்று வரும் சொல்லால் பெயர் பெறுகிறது.
- ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் – புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.
- ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் – யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை
- கடவுள் வாழ்த்துப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்
- இந்நூலை முதன்முதலாகப் பதிப்பித்தவர் – உ.வே.சாமிநாதர்
ஒவ்வொரு திணையையும் பாடிய புலவர்கள்:
- குறிஞ்சி – கபிலர்
- முல்லை – பேயனார்
- மருதம் – ஓரம்போகியார்
- நெய்தல் – அம்மூவனார்
- பாலை – ஓதலாந்தையார்
கலித்தொகை பற்றியக் குறிப்புகள்
- கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
- இது அகநூல் ஆகும்.
- கலித்தொகையில் கடவுள் வாழ்த்துடன் 150 பாடல்கள் உள்ளன.
- கடவுள் வாழ்த்தைப் பாடியவர் – நல்லந்துவனார்
- கலித்தொகையின் கடவுள் வாழ்த்து சிவனைப் பற்றியது.
- பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்ற திணைவரிசை கொண்டது.
- பாலையின் 35 பாடல்களைப் பாடியவர் – பெருங்கடுங்கோ
- குறிஞ்சியின் 29 பாடல்களைப் பாடியவர் – கபிலர்
- மருதத்தின் 35 பாடல்களைப் பாடியவர் – மருதன் இளநாகனார்
- முல்லையின் 17 பாடல்களைப் பாடியவர் – சோழன் நல்லுருத்திரன்
- நெய்தலின் 33 படல்களைப் பாடியவர் – நல்லந்துவனார்
- கலித்தொகையில் குறைந்த பாடல்களைக் கொண்ட திணை – முல்லை. 17 பாடல்கள்
- கலித்தொகையைத் தொகுத்தவர் – நெய்தல் திணையைப் பாடிய நல்லந்துவனார்
- கலித்தொகைக்கு உரை எழுதியவர் – நச்சினார்க்கினியர்
- கலித்தொகையை முதலில் பதிப்பித்தவர் – சி.வை.தாமோதரம் பிள்ளை
- "கற்றறிந்தோர் ஏத்தும் கலி" என்று சிறப்பிக்கப்படுகிறது.
- கலித்தொகையில் பாண்டியரைத்தவிர மற்ற மன்னர்கள் பற்றிக் குறிப்பிடவில்லை.
- "ஏறு தழுவுதல்" பற்றிக் கூறும் நூல் – கலித்தொகை
- பெருந்திணைப்பாடல்கள் இடம்பெற்ற ஒரே சங்க நூல் – கலித்தொகை
- காமக்கிழத்தி பேசுவதாக அமைந்த ஒரே சங்க நூல் – கலித்தொகை
- ஏடா, ஏடீ என்ற விளிச்சொற்கள் இடம்பெற்ற ஒரே சங்க நூல் – கலித்தொகை
சிவன் முப்புரம் எரித்தது, மகாபரதத்தில் சொல்லப்பட்ட அரக்குமாளிகை, முருகன் சூரபத்மன் போர், இராவனன் கயிலையைப் பெயர்த்தது. வீமன் துரியோதனின் தொடையைப் பிளந்தது துச்சாதனின் நெஞ்சைப் பிளந்தது, அசுவத்தாமன் சிகண்டியைக் கொன்றது. சூரியனின் மகன் கருணன், ஊர்வசி திலோத்தமை கதை, யயாதி அரசன் கதை, சிவன் தன் சடையில் கங்கையைத் தாங்கியது போன்ற செய்திகள் இடம்பெற்ற நூல் – கலித்தொகை
நேரிலே நிற்கவும் அஞ்சினாரே;
துன்று கருணை நிறைந்த வள்ளல் – அங்கு
சொன்ன மொழிகளைக் கேளும் ஐயா!
வாழும் உயிரை வாங்கிவிடல் – இந்த
மண்ணில் எவெர்க்கும் எளிதாகும்;
வீழும் உடலை எழுப்புதலோ – ஒரு
வேந்தன் நினைக்கிலும் ஆகதையா!
யாரும் விரும்புவது இன்னுயிராம் – அவர்
என்றுமே காப்பது அன்னதேயாம்;
பாரில் எறும்பும் உயிர்பிழைக்கப் – படும்
பாடு முழுதும் அறிந்திலீரோ?
நேரிய உள்ளம் இரங்கிடுமேல் – இந்த
நீள்நிலம் முற்றுமே ஆண்டிடலாம்;
பாரினில் மாரி பொழிந்திடவே – வயல்
பக்குவ மாவது அறிந்த்திலீரோ?
காட்டும் கருணை உடையவரே – என்றும்
கண்ணீய வாழ்வை உடையவராம்;
வாட்டும் உலகில் வருந்திடுவார் – இந்த
மர்மம் அறியாத மூடரையா!
காடு மலையெல்லாம் மேய்ந்துவந்து – ஆடுதன்
கன்று வருந்திடப் பாலையெல்லாம்
தேடிஉம் மக்களை ஊட்டுவதும் – ஒரு
தீய செயலென எண்ணினீரோ?
அம்புவி மீதில்இவ் ஆடுகளும் – உம்மை
அண்டிப் பிழைக்கும் உயிரலவோ?
நம்பி இருப்பவர் கும்பி எரிந்திடில்
நன்மை உனக்கு வருமோ ஐயா?
ஆயிரம் பாவங்கள் செய்வதெல்லாம் – ஏழை
ஆட்டின் தலையோடு அகன்றிடுமோ?
தீயவும் நல்லவும் செய்தவரை – விட்டுச்
செல்வது ஒருநாளும் இல்லைஐயா!
ஆதலால் தீவினை செய்யவேண்டா – ஏழை
ஆட்டின் உயிரையும் வாங்க வேண்டா;
பூதலந் தன்னை நரகம்அது ஆக்கிடும்
புத்தியை விட்டுப் பிழையும் ஐயா!"
என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல் – ஆசிய ஜோதி. இதனை இயற்றியவர் – கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
நாலடியார் பற்றியக் குறிப்புகள்
- ஆசிரியர் – பாண்டிநாட்டுச் சமணமுனிவர்கள்
- வேளண்வேதம், நாலடி நானூறு என்றும் வழங்கப்படும் நூல் – நாலடியார்
- தொகுத்தவர் – பதுமனார்
- அதிகாரம் வகுத்தவர் – பதுமனார்
- முப்பாலாகப் பகுத்தவர் – தருமர்
- உரைகண்டவர்கள் பதுமனாரும் தருமரும் ஆவர்.
- அறத்துப்பால் 13 அதிகாரம், பொருட்பால் 24 அதிகாரம், காமத்துப்பால் 3 அதிகாரம்
- நாலடியாரில் மொத்தம் 40 அதிகாரங்களும் 12 இயல்களும் உள்ளன.
- துறவறவியல் முதலில் உள்ளது.
- பதினென்கீழ்க்கனக்கில் உள்ள ஒரே தொகை நூல் நாலடியார்
- முத்தரையரைப் பற்றிக் கூறும் நூல் – நாலடியார்
- பதினென்கீழ்கணக்கு நூல்களுள் திருக்குறளுக்கு அடுத்துப் புகழ்பெற்ற நூல் – நாலடியார்
- நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யு.போப்
- "பழகு தமிழ் சொல்லருமை நால் இரண்டில்" என்ற அடிகளில் நால் என்பது நாலடியாரையும் இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கும்.
"ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி"
தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்
பாரதிதாசன்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்தஊர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
தமிழ் நல்லபுகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்ததேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!"
பாரதிதாசன் பற்றியக் குறிப்புகள்:
- பாரதிதாசனின் இயற்பெயர் – சுப்புரத்தினம்
- பிறந்த ஆண்டு – 29.04.1891
- பெற்றோர் – கனகசபை – லட்சுமி
- பிறந்த ஊர் – புதுச்சேரி
- 16 வயதில் புதுவை அரசினர் கல்லூரியில் பேராசிரியர் பணியில் சேர்ந்தார்.
- 1938-ல் இந்தி எதிர்ப்பு போராடத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார்.
- புதுவையில் பாரதியின் கட்டளைக்கிணங்கப் பாடியது
- பாரதிதாசன் "புரட்சிக்கவி" என்றும் "பாவேந்தர்" என்றும் போற்றப்படுகிறார்.
"எங்கெங்கு காணினும் சக்தியடா – தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா"
இதனைப் பாரதி "ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனக சுப்பு ரத்தினம் எழுதியது" எனக் குறிப்பிட்டுச் சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பினார்.
பாரதிதாசன் வலியுறுத்திய கருத்துக்கள்:
- பெண்கல்வி
- கைம்பெண் மறுமணம்
- பொதுவுடமை
- பகுத்தறிவு
பாரதிதாசன் இயற்றிய நூல்கள்:
- பாரதிதாசன் கவிதை தொகுப்பு 1,2,3
- இசை அமுது 1,2
- பாண்டியன் பரிசு
- எதிர்பாராத முத்தம்
- சேர தாண்டவம்
- அழகின் சிரிப்பு
- குடும்ப விளக்கு
- இருண்ட வீடு
- குறிஞ்சித்திட்டு
- கண்ணகி
- புரட்சிக் காப்பியம்
- மணிமேகலை வெண்பா
- காதல் நினைவுகள்
- கழைக்கூத்தியின் காதல்
- தமிழச்சியின் கத்தி
- அமைதி
- இளைஞர் இலக்கியம்
- சௌமியன்
- நல்ல தீர்ப்பு
- தமிழ் இயக்கம்
- இரண்யன் அல்லது இணையற்ற வீரன்
- காதலா கடமையா?
- சஞ்சீவி பார்வதத்தின் சாரல்
பெருஞ்சித்திரனார்
கோதையரே கும்மி கொட்டுங்கடி – நிலம்
எட்டுத்திசையிலும் செந்தமிழின் புகழ்
எட்டிடவே கும்மி கொட்டுங்கடி"
என்ற தமிழைப் போற்றும் கும்மி பாடலை இயற்றியவர் – பெருஞ்சித்தரனார்.
ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் – பெரும்
ஆழிப்பெருக்கிற்கும் கலத்திற்கும் முற்றும்
அழியாமலே நிலை நின்றதுவாம்!
பொய் அக்ற்றும்: உள்ளப் பூட்டறுக்கும் – அன்பு
பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் – உயிர்
மெய்புகட்டும்; அறமேன்மை கிட்டும்; இந்த
மேதினி வாழ்வழி காட்டிருக்கும்!"
என்று தமிழ் மொழியை பாவலரேறு பெருஞ்சித்தரனார் போற்றுகிறார்.
பெருஞ்சித்தரனார் பற்றியக் குறிப்புகள்:
- இவரது இயற்பெயர் – இராசமாணிக்கம்
- பிறந்த ஆண்டு – 03.1933
- பிறந்த ஊர் – சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம்
- மாணவர் பருவத்தில் " குழந்தை " என்னும் பெயரில் கையெழுத்து ஏடு நடத்தினார்.
- "அருணமணி" என்ற பெயரில் "மலர்க்காடு" என்ற கையெழுத்து ஏடு நடத்தினார்.
- 1950-ல் சேலம் மாநகராட்சிக் கல்லூரியில் படித்த போது பாவாணரிடம் தமிழ்க் கற்றார்.
- 1959-ல் தென்மொழி என்ற இதழைத் தொடங்கினார்.
- இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெரும் தூண்டுதலாக இருந்ததால் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
- வேலூர் சிறையில் இருந்த போது " ஐயை" என்ற காவியத்தின் முதல் பகுதியை எழுதினார்.
- சிறையிலிருந்து வந்து " தமிழ்ச்சிட்டு " என்ற இதழைத் தொடங்கினார்
- 1972 ல் தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாடு நடத்தினார்
- பாவாணரின் " அகரமுதலி"தொகுப்பதற்குப் பொருளுதவி செய்யும் திட்டத்தைத் தொடங்கினார்
- நெருக்கடிநிலை நடைமுறைக்கு வந்த போது சிறைப்பட்டார்.அப்போது "ஐயை " நூலின் இரண்டாம் பகுதியை எழுதினார்.
- பல்வேறு காலக்கட்டங்களில் தாம் எழுதிய உணர்வுப்பாடல்களை 1979 ல் "கனிச்சாறு " என்ற பெயரில் மூன்றுத் தொகுதிகளாக தொகுத்து வெளியிட்டார்.
- 1981 ல் உலகத்தமிழ் தமிழின முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பைத் தொடங்கினார்.
- 1982 ல் " தமிழ்நிலம் " என்ற ஏட்டைத் தொடங்கினார்.
- இவர் "பாவலரேறு" என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
பெருஞ்சித்தரனார் இயற்றிய நூல்கள்:
- அறுபருவத்திருக்கூத்து
- இட்ட சாபம் முட்டியது
- உலகியல் நூறு
- ஐயை
- கழுதை அழுத கதை
- கனிச்சாறு
- கொய்யாக்கனி
- தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
- திருக்குறள் மெய்ப்பொருள் உரை
- நூறாசிரியம்
- பாவியக்கொத்து
- மகபுகுவஞ்சி
- வாழ்வியல் முப்பது உள்ளிட்ட 35 நூல்களை எழுதியுள்ளார்.
இவர் நடத்திய இதழ்கள்:
- தென்மொழி
- தமிழ்ச்சிட்டு
- தமிழ்நிலம்
வாணிதாசன்
மண் தோன்றி, மழைத் தோன்றி, மலைகள் தோன்றி
ஊன் தோன்றி, உயிர் தோன்றி, உணர்வு தோன்றி
ஒளி தோன்றி, ஒலி தோன்றி, வாழ்ந்த அந்நாள்
தேன் தோன்றியது போல மக்கள் நாவில்
செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய்! வாழி!"
என்று தமிழ் மொழியை வாழ்த்திப் பாடியவர் – வாணிதாசன்
தமிழின் சிறப்பு, தமிழின் தொன்மை, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்" என்று தமிழ் மொழியின் இனிமையை வியந்து பாடியவர் – பாரதியார்.
"என்று பிறந்தவள் என்று உணராத
இயல்பினளாம் எங்கள் தாய்"
என்று தமிழ்த்தாயின் தொன்மையைப் பாரதியார் கூறுகிறார்.
தமிழுக்கு முத்தமிழ் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு.
தாவர இலைப் பெயர்கள்:
தமிழ் எண்கள்:
1 – க2 – உ
3 – ௩
4 – ச
5 – ரு
6 – சா
7 – எ
8 – அ
9 – ௬
10 – ௧ ௦
இரண்டாயிடம் ஆண்டுகளாக வழக்கில் இருக்கும் தமிழ் சொற்களும், அவை இடம் பெற்ற நூல்களும்:
"நீண்ட நீண்ட காலம்-நீ, நீடு வாழவேண்டும்!
வானம் தீண்டும் தூரம்-நீ, வளர்ந்து வாழவேண்டும்!"
என்ற பிறந்த நாள் வழ்த்துப் பாடலை இயற்றியவர் – கவிஞர் அறிவுமதி
"தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் " என்று பாடியவர் – பாரதியார்.
" மா" என்னும் சொல்லின் பொருள் – விலங்கு
தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் – தொல்காப்பியம்
தமிழில் அறிவியல் தொடர்பான செய்திகள்
"நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்." – தொல்காப்பியம்
"ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால் நாழி"
என ஔவையார் பாடலில் கூறப்பட்டுள்ளது.
"நெடு வெள்ளூசி நெடு வசி பரந்தவடு". – பதிற்றுப்பத்து
"கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்" – நற்றிணை
"தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்"- கபிலர்
தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர்கள்:
- அப்துல் கலாம்
- மயில்சாமி அண்ணாதுரை
- இஸ்ரோ தலைவர் சிவன்
பாரதியார்
காணி நிலம் வேண்டும் – அங்குத்
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் – அந்தக்
காணி நிலத்திடையே – ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும் – அங்குக்
கேணி அருகினிலே – தென்னைமரம்
கீற்றும் இளநீரும்
பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும் – நல்ல
முத்துச் சுடர் போலே – நிலாவொளி முன்பு வரவேணும் – அங்கு
கத்துங் குயிலோசை – சற்றே வந்து
காதில் படவேணும் – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாய் இளம்
தென்றல் வரவேணும்."
என்ற பாடலை இயற்றியவர் – பாரதியார்.
இப்பாடலில் வீடு என்பது எப்படி இருக்க வேண்டும் என்று பாரதியார் கற்பனை செய்கிறார்.
மேலைக் கடல்முழுதும் கப்பல்விடுவோம்
கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
கவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரசளிப்போம்!"
என்ற பாடலைப் பாடியவர் – பாரதியார்.
பாரதியார் பற்றியக் குறிப்புகள்:
- பாரதியாரின் இயற்பெயர் – சுப்பிரமணியன்
- காலம் : 12.1882 – 11.9.1921
- பெற்றோர் : சின்னசாமி – லட்சுமி
- பிறந்த ஊர் – எட்டையபுரம்
- எட்டயபுர சமஸ்தானப் புலவர்களால் " பாரதி " என்ற பட்டம் வழங்கப்பட்டது.
- அறிவில் சிறந்த இல்லரத்தார்க்கு கொடுக்கப்படும் பட்டம் – பாரதி.
- ஞானத்தில் உயர்ந்த துறவிகளுக்குக் கொடுக்கப்படும் பட்டம் – சரஸ்வதி
- பாரதி, சரஸ்வதி இரண்டுமே கலைமகளின் வேறுபயர்கள்
- பாரதியார் தன்னை " ஷெல்லிதாசன்" என்று அழைத்துக் கொண்டார்
- பாரதியாரின் புதுக்கவிதை முன்னோடி – வால்ட் விட்மன்
- கவிதையில் சுயசரிதம் எழுதிய முதல் கவிஞர் – பாரதியார்
- 1905 ல் சக்கரவர்த்தினி என்ற இதழ் தொடங்கினார்.
- கர்மயோகி, பாலபாரத் ( ஆங்கில இதழ்) ஆகியகவற்றை நடத்தினார்.
- சுதேசிமித்திரன் என்ற இதழின் துணையாசிரியர்.
- "இந்தியா" என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
தமிழ்த் தொண்டன் பாரதியார் செத்ததுண்டோ"
என்று பாரதியாரைப் போற்றியவர் – பாரதிதாசன்
வலசை போதல்:
- பறவைகள் இடம்பெயர்தலை "வலசை போதல்" என்பர்.
- பொதுவாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் பறவைகள் வலசை செல்கின்றன.
வலசையின் போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்:
- தலையில் சிறகு வளர்தல்.
- இறகுகளின் நிறம் மாறுதல்
- உடலில் கற்றையாக முடி வளர்தல்
கப்பல் பறவை:
கிழவனும் கடலும்:
- "கிழவனும் கடலும்" என்ற ஆங்கிலப் புதினம் 1954 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றது. இதன் ஆசிரியர் "எர்னெஸ்ட் ஹெமிங்வே"
- 1954 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற "கிழவனும் கடலும் " என்னும் நூலின் ஆசிரியர் – "எர்னெஸ்ட் ஹெமிங்வே"
- "புள்" என்பதன் வேறு பெயர் – "பறவை"
- "காக்கைக் குருவி எங்கள் சாதி" என்று பாடியவர் – பாரதியார்.
- சத்திமுத்தப்புலவரால் பாடப்பட்ட பறவை – செங்கால் நாரை
- "இரட்டைக் காப்பியங்கள்" என்பவை "சிலப்பதிகாரமும் மணிமேகலையும்" ஆகும்
- சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்". என்ற பாடலைப் பாடியவர் – மகாகவி பாரதியார்.
- "ரோபோ" என்னும் சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் – செக் நாட்டைச் சேர்ந்த "காரல் கபெக்"
- "ரோபோ" என்ற சொல்லுக்கு அடிமை என்பது பொருள்.
- உலகச் சதுரங்க வெற்றியாளர் "கேரி கேஸ்புரோவ்" என்பவரை வெற்றி கொண்ட மீத்திறன் கணினியின் பெயர் – "டீப் புளூ"
- இதனை உருவாக்கிய நிறுவனம் – ஐ.பி.எம்
- உலகிலேயே முதன்முறையாக ரோபோவுக்கு குடியுரிமை வழங்கியுள்ள நாடு – சவுதி அரேபியா. மேலும் இந்த ரோபோவுக்கு ஐக்கிய நாடுகள் சபை "புதுமைகளின் வெற்றியாளர்" என்ற பட்டத்தை வழங்கியது.
- தானே இயங்கும் இயந்திரம் – தானியங்கி
- உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின் பெயர் – டீப் புளூ
- "சோபியா" ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு – சவுதி அரேபியா
- "அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
- உள்ளழிக்கல் ஆகா அரண்" என்பது அப்துல் கலாமுக்கு தமிழில் மிகவும் பிடித்த திருக்குறள் ஆகும்.
- "விளக்குகள் பல தந்த ஒளி" என்ற நூலை இயற்றியவர் – "லிலியன் வாட்சன்"
- "உலகின் முதல் விஞ்ஞானி குழந்தைகளே" என்று கூறியவர் – "அப்துல் கலாம்"
- இராமன் விளைவைக் கண்டுபிடித்தவர் – "சர்.சி.வி.இராமன்".
- இராமன் விளைவு கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு – "1928 பிப்ரவரி 28"
- இக்கண்டுப்பிடிப்பு "இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப்" பெற்றுத் தந்தது.
- இராமன் விளைவு கண்டுப்பிடிக்கப்பட்ட "பிப்ரவரி 28"ஆம் நாள் "தேசிய அறிவியல் நாள்" எனக் கொண்டாடப்படுகிறது.
- சர்.சி.வி.இராமன் இராமன் விளைவைக் கண்டுப்பிடிக்க காரணமாக இருந்தது – "கடல்நீரின் நீல நிறம்"
- அப்துல்கலாமின் சுயசரிதை – அக்னிச்சிறகுகள்
- "புதுமைகளின் வெற்றியாளர் " என்னும் பட்டம் பெற்ற ரோபோ – சோபியா
ஔவையார் இயற்றிய நூல்கள்:
- ஆத்திச்சூடி
- கொன்றை வேந்தன்
- நல்வழி
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
ஏன்படித்தோம் எனபதையும் மறந்து விடோதே
நாட்டின நெறி்தவறி நடந்து விடோதே – நம்
நல்லவர்கள் தூற்றும்படி வளரந்து விடோதே
மூதத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாது – பண்பு
முறைகளிலும் மொழி்தனிலும் மாறக் கூடாது
மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக் கூடாது – தன்
மானமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது
துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும் – நீ
சோம்பலைக் கொல்லும் திறன் பெற்றிட வேணும்
வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட வேணும் – அறிவு
வளர்ச்சியிலே வான்முட்டைத் தொட்டிட வேணும்
வெற்றிமேல் வெற்றிவர விருதுவர பெருமைவர
மேதைகள் சொன்னது போல் விளங்கிட வேண்டும்
பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு வழ்ந்திட வேண்டும்."
இந்த பாடலை இயற்றியவர் – "பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்"
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றியக் குறிப்புகள்:
- "மக்கள் கவிஞர்" என்று அழைக்கப்படுபவர் – "பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்"
- பொதுவுடமைக் கருத்துகளை திரைப்படப் பாடலில் புகுத்தியவர்
- "எனது வலதுகை" என்று பாரதிதாசனால் புகழப்பட்டவர்
- "அவர் கோட்டை நான் பேட்டை" என்று வேடிக்கையாகச் சொன்னவர் – உடுமலை நாராயணகவி
- இவரது முதல் பாடல் " நல்லதைச் சொன்னா நாத்திகனா" என்பது
- சினிமாவில் 9 ஆண்டுகள் இருந்துள்ளார் (1951 – 1959)
- இவர் எழுதிய மொத்தத் திரைப்படப் பாடல்கள் – 56
அப்துல் ரகுமான் பற்றியக் குறிப்புகள்
- வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
- மாணவர்களை புதுக்கவிதை எழுதத் தூண்டியவர்.
- "கவிக்கோ" என்ற பட்டம் பெற்றவர்.
படிமக் கவிஞர்:
- தொன்மம் என்ற இலக்கிய உத்தியை மிகுதியாகப் பயன்படுத்தியவர்.
- "புதுக்கவிதையில் குறியீடு" என்பது முனைவர் பட்ட ஆய்வு.
கவிக்கோ அப்துல் ரகுமான் இயற்றிய நூல்கள்
- பால்வீதி
- நேயர் விருப்பம்
- சுட்டுவிரல்
- ஆலாபனை
- சொந்த சிறைகள்
- பித்தன்
- முட்டைவாசிகள்
- அவளுக்கு நிலா என்று பெயர்
- விலங்குகள் இல்லாத கவிதை
- விதைபோல் விழுந்தவன்
- முத்தமிழின் முகவரி
தமிழர் பெருவிழா
- "தமிழர் திருநாள்" என்று கொண்டாடப்படுவது "பொங்கல் திருவிழா". இத்த்ருவிழாவை "அறுவடைத் திருவிழா" எனவும் "உழவர் திருநாள்" எனவும் அழைப்பர்.
- தை முதல் நாளில் திருவள்ளுவராண்டு தொடங்குகிறது. தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.
"மாடு" என்ற சொல்லுக்கு "செல்வம்" என்பது பொருள். - திருவள்ளுவர் கி.மு.31 ல் பிறந்தவர். திருவள்ளூவராண்டைக் கணக்கிட நடைமுறை ஆண்டுடன் 31 ஐக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
(எ.கா) 2019+31 = 2050 - "மஞ்சுவிரட்டு" என்பது மாடுகளை அடக்கித் தழுவும் வீர விளையாட்டு ஆகும். இவ்விளையாட்டு "மாடுபிடித்தல்", "ஜல்லிக்கட்டு", "ஏறுதழுவுதல்" என்றும் அழைக்கப்படுகிறது.
- அறுவடைத் திருநாள் ஆந்திரா,கர்நாடகா, மகாராஷ்டிரா,உத்திரப் பிரதேசம், ஆகிய மாநிலங்களில் "மகரசங்கராந்தி" என்று கொண்டாடப்படுகிறது.
- அறுவடைத் திருநாள் பஞ்சாப் மாநிலத்தில் "லோரி" என்று கொண்டாடப்படுகிறது.
- அறுவடைத் திருநாள் குஜராத், இராஜஸ்தான் மாநிலங்களில் "உத்தராயன்" என்று கொண்டாடப்படுகிறது.
- பொங்கல் + அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – பொங்கலன்று
- போகிப்பண்டிகை என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் – போகி + பண்டிகை
கலைகள் – தமிழரின் சிற்பக்கலை:
- "மாமல்லன் (அ) மற்போரில் சிறந்தவன்" என்று அழைக்கப்படுபவர் – "நரசிம்மவர்ம பல்லவன்".
- இவர் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர் மகேந்திரவர்ம பல்லவனின் மகன் ஆவார்.
- "இரதக்கோவில்" என்று அழைக்கப்படுவது – மாமல்லபுர கடற்கரைக் கோவில்
சிற்பக்கலை நான்கு வகைப்படும்:
- குடைவரைக் கோவில்கள்
- கட்டுமானக் கோவில்கள்
- ஒற்றைக் கல் ரதங்கள்
- புடைப்புச் சிற்பங்கள்
முடியரசன்
மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி
ஊராக்கி ஓங்கும் நகராக்கி நாடென்ற
பேராக்கி வாழ்ந்த பெருமை அவன்பெற்றான்
மாநிலத்தில் முல்லை மருதம் குறிஞ்சி நெய்தல்
நானிலத்தைக் கண்டபெரும் நாகரிக மாந்தன்அவன்
ஆழக் கடல்கடந்தான் அஞ்சும் சமர்கடந்தான்
சூழும் பனிமலையைச் சுற்றிக் கொடிபொறித்தான்
முக்குளித்தான் ஆழிக்குள் முத்தெடுத்தான் தோணிக்குள்
எக்களிப்பு மீதூர ஏலம் மிளகு முதல்
பண்டங்கள்ஏற்றிப் பயன்நல்கும் வாணிகத்தால்
கண்டங்கள் சுற்றிக் கலமேறி வந்தவன் தான்
அஞ்சாமை மிக்கவன்தான் ஆனாலும் சான்றோர்கள்
அஞ்சுவதை அஞ்சி அகற்றி விலக்கிடுவான்"
கவிஞர் முடியரசன் பற்றியக் குறிப்புகள்:
- முடியரசனின் இயற்பெயர் – துரைராசு
- காலம் – 1920 – 1998
- "திராவிட நாட்டின் வானம்பாடி" என்று அழைக்கப்படுகிறார்
- முடியரசன் இயற்றிய நாடகம் : ஊன்றுகோல் (பண்டிதமணி கதிரேசஞ்செட்டியார் பற்றியது)
முடியரசன் எழுதிய நூல்கள்:
- பூங்கொடி
- காவியப்பாவை
- வீரகாவியம்
- புதியதொரு விதி செய்வோம்
தமிழர் வணிகம்
- சங்ககாலத்தில் வணிகக்குழுவினரை "வணிகச்சாத்து" என்பர்
- துறைமுக நகரங்கள் "பட்டினம்" என்றும் "பாக்கம்" என்றும் அழைக்கப்பட்டன.
- தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகமாகப் "பூம்புகார்" விளங்கியது.
- தனிநபரால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் வணிகம் "தனிநபர் வணிகம்" என்றும், ஒன்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து முதலீடு செய்து வணிகம் நடத்துவது "நிறுவன வணிகம்" ஆகும்.
- பழங்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து தேக்கு, மயில்தொகை, அரிசி, சந்தனம், இஞ்சி, மிளகு போன்றவை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
- சீனத்திலிருந்து கண்ணாடி,கற்பூரம், பட்டு போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.
- அரேபியாவில் இருந்து குதிரைகள் வாங்கப்பட்டன.
- வணிகர்கள் நேர்மையாகத் தொழில் செய்வர் என்பதை
- வணிகர்கள் பொருளை வாங்கும்பொழுது உரிய அளவை விட அதிகமாக வாங்கமாட்டார்கள், பிறருக்குக் கொடுக்கும் பொழுது அளவைக் குறைத்துக் கொடுக்கமாட்டார்கள். எனவே வணிகரை,
"வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்"
என்னும் திருக்குறள் வணிகரின் நேர்மையைப் பற்றிக் கூறுகிறது.
"நடுவு நின்ற நன்னெஞ்சினோர்" என்று பட்டினப்பாலை பாராட்டுகிறது.
பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சுற்றி
…………
…………….
உமணர் போகலும்" என்று கூறும் நூல் – நற்றிணை
"பாலொடு வந்து கூழொடு பெயரும்…." என்று கூறும் நூல் – குறுந்தொகை
"பொன்னொடு வந்து கறியொடு பெயரும்…….." என்று கூறும் நூல் – அகநானூறு.
"கொடுப்பதும் மிகைகொளாது
கொடுப்பதும் குறைபடாது" என்று கூறும் நூல் – பட்டினப்பாலை
"பாடுப்பட்டுத் தேடிய பணத்தை புதைத்து வைக்காதீர்" என்றவர் – ஔவையார்
தாராபாரதி
பூமியின் கிழக்கு வாசலிது!
தெய்வ வள்ளுவன் நெய்த குறள்தான்
தேசம் உடுத்திய நூலாடை!
மெய்களைப் போற்றிய இந்தியத் தாய்க்கு
மெய்யுணர்வு எங்கிற மேலாடை!
காளிதாசனின் தேனிசைப் பாடல்கள்
காவிரிக் கரையில் எதிரொலிக்க
கம்பனின் அமுதக் கவிதைகளுக்குக்
கங்கை அலைகள் இசையமைக்க
கன்னிக் குமரியின் கூந்த லுக்காகக்
காஷ்மீர்த் தோட்டம் பூத்தொடுக்கும்!
மேற்கு மலைகள் நதிகளை அனுப்பிக்
கிழக்குக் கரையின் நலம் கேட்கும்!
புல்வெளி யெல்லாம் பூக்கா டாகிப்
புன்னகை செய்த பொற்காலம்!
கல்லைக் கூட காவிய மாக்கிக்
கட்டி நிறுத்திய கலைக்கூடம்!
அன்னை நாட்டின் அமுத சுரபியில்
அன்னிய நாடுகள் பசிதீர
அண்ணல்காந்தியின் சின்னக் கைத்தடி
அறத்தின் ஊன்று கோலாக
புதுமைகள் செய்த தேசமிது
பூமியின் கிழக்கு வாசலிது!"
என்ற பாடல் இயற்றி இந்தியாவின் பெருமையைப் பறைசாற்றுபவர் – "தாராபாரதி"
தாராபாரதி பற்றியக் குறிப்புகள்:
- இவரது இயற்பெயர் – இராதாகிருஷ்ணன்
- காலம் : 1947 – 2000
- தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்
"கவிஞாயிறு" என்ற அடைமொழி பெற்றவர்.
தாராபாரதி இயற்றிய நூல்கள்:
- புதிய விடியல்கள்
- இது எங்கள் கிழக்கு
- விரல் நுனி வெளிச்சங்கள்
தமிழக மகளிர் – வீரம்
- இராமநாதபுரத்தை ஆட்சி செய்த "செல்லமுத்து" மன்னரின் ஒரே மகள் "வேலுநாச்சியார்".
- வேலுநாச்சியார் தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலம், பிரெஞ்சு,உருது ஆகிய மொழிகளையும் சிறப்பாகக் கற்றார்.
- சிலம்பம்,குதிரை ஏற்றம், வாள்போர், வில்பயிற்சி,ஆகியவற்றையும் முறையாகக் கற்றுக் கொண்டார்.
- வேலுநாச்சியாரின் அமைச்சர் – தாண்டவாரயர்.
- வேலுநாச்சியாரின் தளபதிகள் – "சின்ன மருது", "பெரிய மருது"
- வேலுநாச்சியாரின் படைப்பிரிவில் ஆண்கள் படைப் பிரிவிற்கு "மருது சகோதரர்களும்" பெண்கள் படைப் பிரிவிற்கு "குயிலியும்" தலைமை தாங்கினர்.
- வேலுநாச்சியார் "சிவகங்கை"யை மீட்பதற்காக போராடினார்.
- வேலுநாச்சியார் ஐதர் அலியின் உதவியோடு சிவகங்கையை மீட்டார்.
- வேலுநாச்சியாரின் காலம் – 1730-1796
- வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு – 1780
- ஜான்சி ராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்துப் போர்புரிந்தவர் – வேலுநாச்சியார்.
"சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை" மணந்து கொண்டார்.
தாயுமானவர்
செம்மையருக்கு ஏவல்என்று செய்வேன் பராபரமே
அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால்
இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே
எல்லாரும் இன்புற்றி இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே"
தாயுமானவர் பற்றியக் குறிப்புகள்
- தாயுமானவர் பிறந்த ஊர் – திருமறைக்காடு
- பெற்றோர் – கேடிலியப்பப்பிள்ளை – கெசவல்லி அம்மையார்
- தாயுமானவர் திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்கராகப் பணிபுரிந்தவர்.
- தாயுமனவர் பாடல்கள் "தமிழ் மொழியின் உபநிடதம்" என்று அழைக்கப்படுகிறது.
- தாயுமானவர் நினைவு இல்லம் இராமநாதபுரத்து இலட்சுமி புரத்தில் உள்ளது.
- இவர் பாடல்களுக்குத் "தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு" என்று பெயர்
- இதில் 5 உட்பிரிவு, 1452 பாடல்கள் உள்ளன
- இப்பாடல்கள் பராபரக்கண்ணி என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது.
- "கண்ணி" என்பது இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல் வகை ஆகும்.
- தாயுமானவர் "கந்தர் அனுபூதி சொன்ன எந்தை" என்று அருணகிரி நாதரைப் பாராட்டியுள்ளார்.
- தாயுமானவர் பாடலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் – குணங்குடி மஸ்தான் சாகிபு
- கலீல் கிப்ரான்" லெபனான் நாட்டைச் சேர்ந்தவர். கவிஞர்,புதின ஆசிரியர்,கட்டுரையாசிரியர்,ஓவியர் எனப் பன்முகம் கொண்டவர்.
- "தீர்க்கதரிசி" என்னும் நூலை மொழிபெயர்த்தவர் – "புவியரசு."
- "தனி ஒருவனுக்கு உணவு இல்லையேல் இச்செகத்தினை அழித்திடுவோம்" என்றவர் – பாரதியார்
"எஸ்.ராமகிருஷ்ணன்" எழுதிய நூல்கள்:
- உபபாண்டவம்
- கதாவிலாசம்
- தேசாந்திரி
- கால் முளைத்த கதைகள்
உ.வே.சா
உ.வே.சா எழுதிய உரைநடை நூல்கள்:
- மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் சரித்திரம்
- வித்துவான் தியாகராஜ செட்டியார் வராலாறு
- நான் கண்டதும் கேட்டதும்
- புதியதும் பழையதும்
- நினைவு மஞ்சரி
- சிலப்பதிகாரக் கதைச் சுருக்கம்
- மணிமேகலைக் கதைச் சுருக்கம்
- உதயணன் கதைச் சுருக்கம்
- புத்த சரிதம்
- திருக்குறளும் திருவள்ளுவரும்
- மத்தியார்ச்சுன மான்மியம்
- நல்லூரைக் கோவை
- என் சரித்திரம்
- சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும்
உ.வே.சா இயற்றிய கவிதை நூல்கள்:
- கயற்கண்ணிமாலை
- தமிழப்பா
- மஞ்சரி
உ.வே.சா பெற்ற பட்டங்களும் வழங்கியவர்களும்:
- டாக்டர் – சென்னைப் பல்கலைக்கழகம்
- தமிழ்த் தாத்தா – தமிழ் அன்பர்கள்
- மகாமகோபாத்தியாய – சென்னை அரசாங்கம், 1906
- திராவிட வித்யா பூஷணம் – பாரத தரும மகா மண்டலத்தார் , 1917
- உ.வே.சா முதலில் பதிப்பித்த நூல் – வேணுலிங்க விலாசச் சிறப்பு
- உ.வே.சா முதலில் பதிப்பித்த காப்பியம் – சீவக சிந்தாமணி
- உ.வே.சா வாழ்ந்த காலம் – 1855 -1942
- உ.வே.சா ஆசிரியர் – மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
- உ.வே.சா அவர்களுக்கு ஆசிரியர் வைத்த பெயர் – சாமிநாதன்
- உ.வே.சா அவர்களின் இசையாசிரியர் – சோமசுந்தர பாரதியார்.
தட்சிணாத்திய கலாநிதி – சங்கராச்சாரியார் , 1925
கவிமணி தேசிக விநாயகம் பற்றியக் குறிப்புகள்
- இவர் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்.
- பெற்றோர் – சிவதானுப்பிள்ளை – ஆதிலட்சுமி
- பிறந்த ஊர் – நாகர்கோவிலை அடுத்த பேரூர்
- காலம் – 1876 – 1954
- இவரின் ஆசிரியர் சாந்தலிங்க தம்பிரான்
- 36 ஆண்டுகள் பள்ளி ஆசிரியாகப் பணியாற்றியவர்.
- "கவிமணி" என்னும் பட்டம் பெற்றவர்.
- ஆங்கில மொழியில்"எட்வின் அர்னால்டு" என்பவர் எழுதிய "லைட் ஆஃப் ஆசியா (Light of Asia)" என்ற நூலைத் தழுவி எழுதப்பட்டதே "ஆசிய ஜோதி" என்னும் நூலாகும்.இந்நூல் புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது.
கவிமணி தேசிக விநாயகம் இயற்றிய நூல்கள்:
- மலரும் மாலையும்
- ஆசிய ஜோதி
- நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்
- கந்தளூர் சாலை
- தேவியின் கீர்த்தனைகள்
- உமர்கய்யாம் பாடல்கள்
- கவிதைத் தொகுப்பு – மலரும் மாலையும்
- ஆர்னால்ட் எழுதிய "லைட் ஆஃப் ஆசியா" என்ற நூலின் மொழிபெயர்ப்பு – ஆசிய ஜோதி
- நகைச்சுவை நூல் – மருமக்கள் வழி மான்மியம்
- வரலாற்று நூல் – கந்தளூர் சாலை
- இசைப்பாடல் நூல் – தேவியின் கீர்த்தனைகள்
- தீண்டாதார் விண்ணப்பம் என்ற பாட்டு நாட்டுப்புறப் பாடல் மெட்டில் அமைந்துள்ளது.
- பாரசீக மொழியில் உமர்கய்யாம் பாடிய ருபாயத்தின் மொழிபெயர்ப்பு எட்வர்ட் பிட்ஸ் ஜெரால்டின் ஆங்கில மொழிபெயர்ப்பு.அதனைத் தழுவி எழுந்தது – உமர்கய்யாம் பாடல்கள்.
முயலுநர் உன்மையானே" என்ற அடிகள் இடம் பெற்ற நூல் – "புறநானூறு"
பாருங்கள்.உலகம் அழகானது" என்று கூறியவர் – "கைலாஷ் சத்யார்த்தி"
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
அம்மா என்குது வெள்ளைப்பசு – உடன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி
நாவால் நக்குது வெள்ளைப்பசு – பாலை
நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி"
புத்தகத்தில் இல்லாத குறிப்புகள்
தய்பிள்ளை உறவம்மா, உனக்கும் எனக்கும்
அமிழ்தே நீ இல்லை என்றால்
அத்தனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும்
தமிழே உன்னை நினைக்கும்
தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும்"
என்ற பாடலை பாடியவர் – கவிஞர் காசி ஆனந்தன்
காமராசரின் சிறப்புப் பெயர்கள்
- பெருந்தலைவர்
- படிக்காத மேதை
- கர்மவீரர்
- கறுப்புக் காந்தி
- ஏழைப் பங்காளர்
- தலைவர்களை உருவாக்குபவர்
காமராசரின் கல்விப் பணிகள்:
- இலவசக் கல்வித்திட்டம் அறிமுகம்
- மதிய உணவுத்திட்டம்
- சீருடைத் திட்டம்
- பள்ளி சீரமைப்பு மாநாடுகள் நடத்தப்படுதல்
- கிளை நூலகங்கள் தொடக்கம்
- மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கால்நடைமருத்துவக் கல்லூரிகல் தொடக்கம்
காமராசருக்கு தமிழக அரசு செய்த சிறப்புகள்:
- மதுரைப் பல்கலைக்கழகத்திற்கும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
- நடுவண் அரசு "1976" ல் "பாரதரத்னா" விருது வழங்கியது.
- காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம் மற்றும் விருதுநகர் இல்லம் ஆகியன அரசுடமை ஆக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன.
- சென்னை மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது.
- சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம்10.2000 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
- காமராசரை "கல்விக் கண் திறந்தவர்" என்று பாராட்டியவர் – பெரியார்.
பிரித்து எழுதுக:
- பசியின்றி என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – பசி + இன்றி
- படிப்பறிவு என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது – படிப்பு + அறிவு
- காடு + ஆறு என்பதை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – காட்டாறு
நூலகம் நோக்கி
நூலகத்தில் படித்து உயர்நிலை அடைந்தவர்கள்:
- அறிஞர் அண்ணா
- ஜவஹர்லால் நேரு
- அண்ணல் அம்பேத்கர்
- காரல் மார்க்ஸ்
தமிழ்நாட்டில் காந்தி
அறத்தினில் நேர்மை கான்போம்;
துன்புறும் உயிர்கள் கண்டால்;
துரிசறு கனிவு காண்போம்;
வன்புகழ கொடையிற் காண்போம்;
வலிமையைப் போரில் காண்போம்;
தன்பிறப் புரிமை யாகத்
தமிழ்மொழி போற்றக் காண்போம்."
என்ற பாடலை இயற்றியவர் – "புலவர் அ.முத்தரையனார், மலேசியக் கவிஞர்"