8 ஆம் வகுப்பு
பாடம் 1 : தமிழ் இன்பம்
தமிழ்மொழி வாழ்த்து
வாழிய வாழியவே!
வான மளந்தது அனைத்தும் அளந்திடு
வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழியவே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!
தொல்லை வினைதரு தொல்லை அகன்று
சுடர்க தமிழ்நாடே!
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே!"
என்று தமிழ்மொழியை வாழ்த்தியவர் – பாரதியார்.
பாடலின் பொருள்:
- தமிழ்மொழி எக்காலத்தும் நிலைபெற்று வாழ்க!
- ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ்மொழி வாழ்க!
- ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ்கொண்ட தமிழ்மொழி வாழ்க!
- எங்கள் தாய்மொழியாகிய தமிழ்மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்க!
- எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருள் நீங்கட்டும்! அதனால் தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுதும் சிறப்படைக!
- பொருந்தாத பழைய கருத்துக்களால் உண்டாகும் துன்பகள் நீங்கித் தமிழ்நாடு ஒளிர்க!
- தமிழ்மொழி வாழ்க! தமிழ்மொழி வாழ்க! என்றென்றும்தமிழ்மொழி வாழ்க!
- வானம்வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மையையும் அறிந்து மேன்மேலும் வளரும் தமிழ்மொழி வாழ்க!
சொல்லும் பொருளும்:
- நிரந்தரம் – காலம் முழுமையும்
- வைப்பு – நிலப்பகுதி
- சூழ்கலி – சூழ்ந்துள்ள அறியாமை இருள்
- வண்மொழி – வளமிக்க மொழி
- இசை – புகழ்
- தொல்லை – பழமை, துன்பம்
பாரதியார் பற்றிய குறிப்புகள்:
- கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர்பாரதியார்.
- "இந்தியா", "விஜயா" முதலான இதழ்களை நடத்தி விடுதலைப் போருக்கு வித்திட்டவர்.
- கவிதைகள் மட்டுமின்றி , "சந்திரிகையின் கதை", "தராசு" உள்ளிட்ட உரைநடை நூல்களையும் வசன கவிதைகளையும் சீட்டுக்கவிகளையும் எழுதியவர்.
பாரதியாரை பாரதிதாசன் புகழ்ந்துள்ள விதம்:
- சிந்துக்குத் தந்தை
- செந்தமிழ்த் தேனீ
- புதிய அறம் பாட வந்த அறிஞன்
- மறம் பாட வந்த மறவன்
இவருடைய கவிதைகள் "பாரதியார் கவிதைகள்" என்று தொகுக்கப்பட்டுள்ளது.
"செந்தமிழே செங்கரும்பே செந்தமிழர் சீர்காக்கும்
நந்தா விளக்கனைய நாயகியே – முந்தை
மொழிக்கெல்லாம் மூத்தவளே மூவேந்தர் அன்பே
எழில்மகவே எந்தம் உயிர்.
உயிரும்நீ மெய்யும்நீ ஓங்கும் அறமாம்
பயிரும்நீ இன்பம்நீ அன்புத் தருவும்நீ
வீரம்நீ காதல்நீ ஈசன் அடிக்குநல்
ஆரம்நீ யாவும்நீ யே!"
என்ற செந்தமிழ் அந்தாதியை பாடியவர் – து.அரங்கன்
- மக்கள் வாழும் நிலப்பகுதியை குறிக்கும் சொல் – வைப்பு
- என்றென்றும் என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது – என்று + என்றும்
- வானமளந்தது என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் – வானம் + அளந்தது
- அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – அறிந்ததனைத்தும்
- வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – வானமறிந்த
தமிழ்மொழி மரபு
- வாழ்வுக்குரிய ஒழுங்குமுறை ஒழுக்கம் எனப்படும்.
- மொழிக்குரிய ஒழுங்குமுறை மரபு எனப்படும்.
- செய்யுளுக்கும் மரபுக்குக் இடையே உள்ள தொடர்பைப் பற்றிக் கூறும் நூல் – "தொல்காப்பியம்"
"நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்
திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்
மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லை
மரபுவழிப் பட்ட சொல்லின் ஆன
மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும்"
என்ற பாடல் இடம்பெற்ற நூல் – தொல்காப்பியம்.
பாடலின் பொருள்:
- இவ்வுலகம் நிலம், தீ, நீர் , காற்று, வானம் ஆகிய ஐந்தும் கலந்த கலவையாகும். இவ்வுலகில் தோன்றிய பொருள்கள் அனைத்தும் இந்த ஐம்பூதங்களின் சேர்க்கையால் உருவானவையே ஆகும்.
- உலகத்துப் பொருள்களை இரு திணைகளாகவும் ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறுதல் தமிழ்மொழியின் மரபு.
- திணை, பால் வேறுபாடு அறிந்து, இவ்வுலகப் பொருள்களை நம் முன்னோர் கூறிய சொற்களால் கூறுதல் வேண்டும். இம்மரபான சொற்களையே செய்யுளிலும் பயன்படுத்துதல் வேண்டும்.
- தமிழ்மொழிச் சொற்களை வழங்குவதில் இம்மரபு மாறினால் பொருள் மாறிவிடும்.
சொல்லும் பொருளும்:
- விசும்பு – வானம்
- மயக்கம் – கலவை
- இருதிணை – உயர்திணை, அஃறிணை
- வழாஅமை – தவறாமை
- மரபு – வழக்கம்
- திரிதல் – மாறுபடுதல்
- செய்யுள் – பாட்டு
- தழாஅல் – தழுவுதல் (பயன்படுத்துதல்)
- ஐம்பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
அளபடை:
புலவர்கள் சில எழுத்துக்களை அவற்றுக்கு உரிய மாத்திரை அளவை விட நீண்டு ஒலிக்குமாறு பயன்படுத்துவது உண்டு. இவ்வாறு நீண்டு ஒலிப்பது அளபடை எனப்படும்.
தொல்காப்பியம் பற்றிய குறிப்புகள்:
- தொல்காப்பியத்தின் ஆசிரியர் – தொல்காப்பியர்
- தமிழில் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் – தொல்காப்பியம்
- இந்நூல் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டது.
- ஒவ்வொரு அதிகாரமும் 9 இயல்கலை உடையது.
- மொத்தம் 27 இயல்களை உடையது.
- மரபியல் பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது
இளமைப்பெயர்கள்:
- புலி – பறழ்
- சிங்கம் – குருளை
- யானை – கன்று
- பசு – கன்று
- கரடி -குட்டி
ஒலி மரபு:
- புலி – உறுமும்
- சிங்கம் – முழங்கும்
- யானை – பிளிறும்
- பசு – கதறும்
- கரடி – கத்தும்
நந்தா விளக்கனைய நாயகியே – முந்தை
மொழிக்கெல்லாம் மூத்தவளே மூவேந்தர் அன்பே
எழில்மகவே எந்தம் உயிர்.
உயிரும்நீ மெய்யும்நீ ஓங்கும் அறமாம்
பயிரும்நீ இன்பம்நீ அன்புத் தருவும்நீ
வீரம்நீ காதல்நீ ஈசன் அடிக்குநல்
ஆரம்நீ யாவும்நீ யே!"
என்ற செந்தமிழ் அந்தாதியை பாடியவர் – து.அரங்கன்
தமிழ்மொழி மரபு
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்
திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்
மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லை
மரபுவழிப் பட்ட சொல்லின் ஆன
மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும்"
என்ற பாடல் இடம்பெற்ற நூல் – தொல்காப்பியம்.
தமிழ் வரிவடிவ வளர்ச்சி
- மனிதன் தனக்கு எதிரே இல்லாதவர்களுக்கும் பின்னால் வரும் தலைமுறையினருக்கும் தனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான். அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். இதுவேஎழுத்து வடிவத்தின் தொடக்க நிலை ஆகும்.
- தொடக்ககாலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர்.
- ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்து நிலை என்பர்.
- இன்று உள்ள எழுத்துக்கள் ஒரு காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திரிபுகளாகக் கருதப்படுகின்றன.
- அச்சுக்கலை தோன்றிய பிறகே தமிழ் எழுத்துக்கள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன.
- தமிழ் எழுத்துக்களின் பழைய வரி வடிவங்களை கோவில்களில் உள்ள கருங்கல் சுவர்களிலும் செப்பேடுகளிலும் காணமுடிகிறது.
- கல்வெட்டுகள் கி.மு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.
- செப்பேடுகள் கி.பி 7 ஆம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.
- கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை வட்டெழுத்து, தமிழெழுத்து என இருவகையாகப் பிரிக்கலாம்.
- வட்டெழுத்து என்பது வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து ஆகும்.
- தமிழெழுத்து என்பது இக்காலத்தில் எழுதப்படும் தமிழ் எழுத்துக்களின் பழைய வரி வடிவம் ஆகும். சேர மண்டலம், பாண்டிய மண்டலம் ஆகிய பகுதிகளில் 8 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் வட்டெழுத்துக்களே ஈடம் பெற்றுள்ளன.
- முதலாம் இராசராச சோழனின் ஆட்சிக் காலமான 13 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைய தமிழெழுத்துக்கள் காணப்படுகின்றன.
- கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள் கண்ணெழுத்துக்கள் என்று அழைக்கப்பட்டன.
- "கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி " என்ற அடிகள் இடம்பெற்ற நூல் – சிலப்பதிகாரம்
கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களில் அமைப்பு:
- "ஸ" எனும் வட எழுத்து காணப்படுகிறது.
- மெய்யைக் குறிக்கப் புள்ளி பயன்படுவதில்லை.
- எகர, ஒகரக் குறில் நெடில் வேறுபாடில்லை.
சொற்பூங்கா
- தமிழ்மொழி செந்தமிழாகவும் செழுந்தமிழாகவும் உயிரோட்டத் தமிழாகவும் இருந்து வருகிறது.
- தமிழில் சொல் என்பதற்கு நெல் என்ற பொருள் உண்டு.
- "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்றவர் – தொல்காப்பியர்.
- மொழி என்பதற்கு சொல் என்ற பொருளும் உண்டு.
- மொழியை ஓரெழுத்து மொழி, ஈரெழுத்து மொழி, இரண்டுக்கும் மேற்பட்ட எழுத்துக்கள் உடைய மொழி என மூன்று வகையாக பிரிப்பர்.
- ஓர் எழுத்து மொழி எவை எனின் "நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி" என்பார் தொல்காப்பியர். குற்றெழுத்து ஒன்று தனித்து நின்று சொல் ஆவது இல்லை என்பதை "குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைபு இலவே" என்பார் தொல்காப்பியர்.
- உயிர் வரிசையில் ஆறு எழுத்துக்களும், ம வரிசையில் ஆறு எழுத்துக்களும் த, ப, ந என்னும் வரிசைகளில் ஐந்து ஐந்து எழுத்துகளும் க, ச, வ என்னும் வரிசைகளில் நான்கு நான்கு எழுத்துகளும் , ய வரிசையில் ஒன்றும் ஆக நாற்பது நெடில்கள் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் என்றார் நான்னூலார்; நொ, து என்னும் குறில்களையும் சேர்த்து 42 என்றார்.
- ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை – 42
ஓரெழுத்து ஒருமொழிகள்:
- உயிர் எழுத்து – ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ
- மகர வரிசை – மா, மீ, மூ, மே, மை, மோ
- தகர வரிசை – தா, தீ, தூ, தே, தை
- பகர வரிசை – பா, பூ, பே, பை, போ
- நகர வரிசை – நா, நீ, நே, நை, நோ
- ககர வரிசை – கா, கூ, கை, கோ
- சகர வரிசை – சா, சீ, சே, சோ
- வகர வரிசை – வா, வீ, வை, வௌ
- யகர வரிசை – யா
- குறில் எழுத்து – நொ, து
இரா.இளங்குமரனார் பற்றிய குறிப்புகள்:
- செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் – இரா.இளங்குமரனார்
- இவர் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்
- நூலாசிரியர், இதழாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர் எனப் பன்முகத் திறன் பெற்றவர்.
- "தேவநேயம்" என்னும் நூலைத் தொகுத்துள்ளார்.
- திருச்சிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும் , பாவாணர் நூலகமும் அமைத்துள்ளார்.
இரா.இளங்குமரனார் இயற்றிய நூல்கள்:
- இலக்கண வரலாறு
- தமிழிசை இயக்கம்
- தனித்தமிழ் இயக்கம்
- தமிழின் தனிப்பெருஞ்சிறப்புகள்
எழுத்துகளின் பிறப்பு
- உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி, இதழ், நாக்கு, பல், மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறுவேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன. இதனையே எழுத்துகளின் பிறப்பு என்பர்.
- எழுத்துக்களின் பிறப்பினை இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு என இரண்டு வகையாகப் பிரிப்பர்.
எழுத்துக்களின் முயற்சிப் பிறப்பு:
உயிர் எழுத்துக்கள்:
- அ, ஆ ஆகிய இரண்டும் வாய்திறத்தலாகிய முயற்சியால் பிறக்கின்றன.
- இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய ஐந்தும் வாய்திறக்கும் முயற்சியுடன் நாக்கின் அடி ஓரமானது மேல்வாய்ப் பல்லைப் பொருந்தும் முயற்சியால் பிறக்கின்றன.
- உ, ஊ, ஒ, ஓ, ஒளஆகிய ஐந்தும் வாய்திறக்கும் முயற்சியுடன் இதழ்களைக் குவிப்பதால் பிறக்கின்றன.
மெய் எழுத்துக்கள்:
- க், ங் – ஆகிய இருமெய்களும் நாவின் முதற்பகுதி, அண்ணத்தின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
- ச், ஞ் – ஆகிய இருமெய்களும் நாவின் இடைப்பகுதி, நடுஅண்ணத்தின் இடைப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
- ட், ண்- ஆகிய இருமெய்களும் நாவின் நுனி, அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
- த், ந்- ஆகிய இருமெய்களும் மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துவதால் பிறக்கின்றன.
- ப், ம் – ஆகிய இருமெய்களும் மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கின்றன.
- ய்- இது நாக்கின் அடிப்பகுதி, மேல் வாய் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கிறது.
- ர், ழ் – ஆகிய இருமெய்களும் மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கின்றன.
- ல் – இது மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கிறது.
- ள் – இது மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதலால் பிறக்கிறது.
- வ்- இது மேல்வாய்ப் பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கிறது.
- ற், ன் – ஆகிய இருமெய்களும் மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கின்றன.
சார்பெழுத்துக்கள்:
- ஆய்த எழுத்து வாயைத்திறந்து ஒலிக்கும் முயற்சியால் பிறக்கிறது.
- பிற சார்பெழுத்துகள் யாவும் தத்தம் முதலெழுத்துகள் தோன்றும் இடங்களிலேயே அவை பிறப்பதற்கு உரிய முயற்சிகளைக் கொண்டு தாமும் பிறக்கின்றன.
- இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துக்கள் – உ, ஊ
- ஆய்த எழுத்து பிறக்கும் இடம் – தலை
- வல்லின எழுத்துக்கள் பிறக்கும் இடம் – மார்பு
- நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துக்கள் – ட், ண்
- கீழ் இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து – வ்
மெய்யெழுத்துக்கள் பிறக்கும் இடம்:
- க், ங் – நாவின் முதல், அண்னத்தின் அடி
- ச், ஞ் – நாவின் இடை, அண்ணத்தின் இடை
- ட், ண் – நாவின் நுனி, அண்ணத்தின் நுனி
- த், ந் – நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி
பறவைகளின் ஒலிமரபு:
- ஆந்தை அலறும்
- காகம் கரையும்
- சேவல் கூவும்
- குயில் கூவும்
- கோழி கொக்கரிக்கும்
- புறா குனுகும்
- மயில் அகவும்
- கிளி பேசும்
- கூகை குழறும்
தொகை மரபு:
- மக்கள் கூட்டம்
- ஆநிரை
- ஆட்டு மந்தை
வினை மரபு:
- சோறு உண்
- முறுக்குத் தின்
- சுவர் எழுப்பு
- தண்ணீர் குடி
- பால் பருகு
- கூடை முடை
- பூக் கொய்
- இலை பறி
- பானை வனை
பாடம் 2 : ஈடில்லா இயற்கை
ஓடை
உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும்
பாட இந்த ஓடைப்
பள்ளி சென்று பயின்ற தோடி!
ஏடு போதா இதன்கவிக் கார்
ஆடு செய்யப் போராரோடி!
நன்செய் புன்செய்க்கு உணவை ஊட்டி
நாட்டு மக்கள் வறுமை ஓட்டிக்
கொஞ்சிக் குலவிக் கரையை வாட்டிக்
குளிர்ந்த புல்லுக்கு இன்பம் கூட்டி
நெஞ்சில் ஈரம் இல்லார் நாண
நீளுழைப்பைக் கொடையைக்காட்டிச்
செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின்
சீருக்கு ஏற்ப முழவை மீட்டும்"
என்ற பாடலை எழுதியவர் – வாணிதாசன்
பாடலின் பொருள்:
- நீரோடையில் நீந்தி விளையாட மனம் ஆர்வம் கொள்கிறதே! கற்களில் உருண்டும் தவழ்ந்தும் நெளிந்தும் செல்லும் ஓடையில் நீந்தி விளையாட மனம் ஆர்வம் கொள்கிறதே!
- சலசலஎன்று ஒலி எழுப்பியபடி ஓடுவதற்கு இந்த ஓடை எந்தப் பள்ளியில் படித்ததோ? நூல்களால் வருணித்துச்சொல்ல முடியாத இதன் அழகுக்கு இணையாக யாரால் எழுத முடியும்?
- நன்செய், புன்செய்நிலங்களுக்குநீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது. அவ்வாறு விளைந்த பயிர்கள் மூலம் உணவுன் தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது.
- குளிர்ச்சியைத் தரும் புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது. நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது.
- சிறந்த சொற்களைப் பேசும் பெண்கள் பாடும் வள்லைப் பாட்டின் சிறப்புக்கேற்ப முழவை முழக்குவது போல் ஒலி எழுப்புகிறது.
சொல்லும் பொருளும்:
- தூண்டுதல் – ஆர்வம் கொள்ளுதல்
- ஈரம் – இரக்கம்
- முழவு – இசைக்கருவி
- பயிலுதல் – படித்தல்
- நாணம் – வெட்கம்
- செஞ்சொல் – திருந்திய சொல்
- நன்செய் – நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்
- புன்செய் – குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்
- வள்ளைப்பாட்டு – நெல்குத்தும்போது பாடப்படும் பாடல்
வாணிதாசன் பற்றிய குறிப்புகள்:
- இவரது இயற்பெயர் – அரங்கசாமி என்ற எத்திராசலு.
- இவர் பாரதிதாசனின் மாணவர்.
- "தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்" என்று புகழப்படுகிறார்.
- தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர்.
- இவருக்குப் பிரெஞ்சு அரசு "செவாலியர் விருது" வழங்கியுள்ளது.
வாணிதாசனின் நூல்களுள் சில:
- தமிழச்சி
- கொடிமுல்லை
- தொடுவானம்
- எழிலோவியம்
- குழந்தை இலக்கியம்
கோணக்காத்துப் பாட்டு
சொல்லும் பொருளும்:
- முகில் – மேகம்
- கொடிகலங்கி – மிக வருந்தி
- சம்பிரமுடன் – முறையாக
- சேகரம் – கூட்டம்
- வின்னம் – தேசம்
- வாகு – சரியாக
- காலன் – எமன்
- மெத்த – மிகவும்
விழுந்ததங்கே என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் – விழுந்தது + அங்கே
செத்திறந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் – செத்து + இறந்த
பருத்தி + எல்லாம் என்னும் சொல்லை செர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – பருத்தியெல்லாம்
நிலம் பொது
- அமெரிக்காவில் பூஜேசவுண்ட் என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள் "சுகுவாமிஷ் பழங்குடியினர்". அவர்களின் தலைவராக விளங்கியவர் – சியாட்டல்.
- அவர் அப்பகுதியிலுள்ள இயற்கை வளங்கள் சிதையாமல் காக்கப்பட வேண்டும் எனபதை வலியுறித்தி அமெரிக்கக் குடியரசுத்தலைவருக்குக் கடிதம் ஒன்றுஎழுதினார்.
- "தமிழகப் பழங்குடிகள்" என்னும் நூலை எழுதியவர் – "பக்தவத்சல பாரதி"
வெட்டுக்கிளியும் சருகுமானும்
- தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் எல்லைக்கு அருகேயுள்ள பரம்பிக்குளம், ஆனைமலை போன்ற பகுதிகளில் காடர்கள் என்னும் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர்.
- பரம்பிக்குளம், ஆனைமலைப் பகுதிகளில் காடர்கள் வசிக்கும் சிற்றூர்கள் பல உள்ளன.காடர்கள் மிகச்சிறிய பழங்குடிச் சமுதாயத்தினர். தாங்கள் பேசும் மொழியை "ஆல்அலப்பு" என்று அழைக்கின்றனர். அவர்களின் வாழ்க்கைமுறை பற்றிய எழுத்துக் குறிப்புகள் ஏதும் அவர்களிடம் இல்லை.
- காடர்களின் கதைகள் சிலவற்றைத் தொகுத்தவர்கள் – மனிஷ் சாண்டி, மாதுரி ரமேஷ்
- காடர்களின் கதைகளை "யானையோடு பேசுதல்" என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்தவர் – வ.கீதா
இலக்கணம்
வினைமுற்று
வினைமுற்று:
(எ.கா.):மலர்விழி எழுதினாள்
கண்ணன் பாடுகிறான்
மாடு மேயும்.
வினைமுற்று இரண்டு வகைப்படும்
- தெரிநிலை வினைமுற்று
- குறிப்பு வினைமுற்று
தெரிநிலை வினைமுற்று:
ஒரு செயல் நடைபெறுவதற்குச் செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் முதன்மையானவை ஆகும். இவை ஆறும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று எனப்படும்.(எ.கா): எழுதினாள்
செய்பவர் – மாணவி
காலம் – இறந்தகாலம்
கருவி – தாளும் எழுதுகோலும்
செய்பொருள் – கட்டுரை
நிலம் – பள்ளி
செயல் – எழுதுதல்
குறிப்பு வினைமுற்று:
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவற்றுள் ஒன்றனை அடிப்படையாகக் கொண்டு காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று குறிப்பு வினைமுற்று எனப்படும்.பொருள் – பொன்னன்
சினை- கண்ணன்
இடம் – தென்னாட்டார்
பண்பு (குணம்) – கரியன்
காலம் – ஆதிரையான்
தொழில் – எழுத்தன்
ஏவல் வினைமுற்று:
(எ.கா): பாடம் படி, கடைக்குப் போ(எ.கா): எழுது – ஒருமை, எழுதுமின் – பன்மை
வியங்கோள் வினைமுற்று:
ஏவல் வினைமுற்று:
- முன்னிலையில் வரும்
- ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு
- கட்டலைப் பொருளை மட்டும் உணர்த்தும்
- விகுதி பெற்றும் பெறாமலும் வரும்
வியங்கோள் வினைமுற்று:
- இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும்.
- ஒருமை, பன்மை வேறுபாடு இல்லை
- வாழ்த்துதல், விதித்தல், வைதல், வேண்டல் ஆகிய பொருள்களை உணர்த்தும் விகுதி பெற்றே வரும்.
- விதித்தல் பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று, தன்மை இடத்தில் வராது.
- இயர், அல், ஆகிய இரண்டு விகுதிகள் தற்கால வழக்கில் இல்லை. செய்யுல் வழக்கில் மட்டுமே உள்ளன.
- "மாடு வயலில் புல்லை மேய்ந்தது" இத்தொடரிலுள்ள வினைமுற்று – மேய்ந்தது
தொடர் வகைகள்
செய்தித்தொடர்:
ஒரு செய்தியத் தெளிவாகக் கூறும் தொடர் செய்தித்தொடர் எனப்படும்.(எ.கா): கரிகாலன் கல்லணையை கட்டினான்
வினாத்தொடர்:
ஒருவரிடம் ஒன்றை வினவுவதாக அமையும் தொடர் வினாத்தொடர் ஆகும்.(எ.கா): சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
விழைவுத்தொடர்:
ஏவல், வேண்டுதல், வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர் விழைவுத்தொடர் ஆகும்.(எ.கா):
இளமையில் கல் (ஏவல்)
உன் திருக்குறள் நூலைத் தருக (வேண்டுதல்)
உழவுத்தொழில் வாழ்க (வாழ்த்துதல்)
கல்லாமை ஒழிக (வைதல்)
உணர்ச்சித்தொடர்:
உவகை, அழுகை, அவலம், அச்சம், வியப்பு முதலான உணர்ச்சிகளை உணர்த்தும் தொடர் உணர்ச்சித்தொடர் எனப்படும்.(எ.கா):
அடடா! என் தங்கை பரிசு பெற்றாள்! (உவகை)
ஆ! புலி வருகிறது! (அச்சம்)
பழந்தமிழ் இலக்கியங்கள் பல அழிந்துவிட்டனவே! (அவலம்)
ஆ! மலையின் உயரம்தான் என்னே! (வியப்பு)
திருக்குறள்
"சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி"
பொருள்:
தான் சமமாக இருந்து தன்னிடம் வைக்கப்படும் பொருள்களின் எடையைத் துலாக்கோல் சரியாகக் காட்டும். அதுபோல நடுவுநிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே சான்றோர்க்கு அழகாகும்.
இக்குறளில் உவமை அணி பயின்று வந்துள்ளது.
"வலியில் நிலைமையான்வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று"
பொருள்:
மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவர் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக்கொண்ட பசு பயிரை மேய்ந்ததைப் போன்றது.
இக்குறளில் இல்பொருள் உவமை அணி பயின்று வந்துள்ளது.
"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தாறு போலக் கெடும்."
பொருள்:
பழிவருமுன்னே சிந்தித்து தம்மைக் காத்துக்கொள்ளாதவருடைய வாழ்க்கை, நெருப்பின் அருகில் வைக்கப்பட்ட வைக்கோல் போர் போல அழிந்துவிடும்.
இக்குறட்பாவில் உவமை அணி பயின்று வந்துள்ளது.
"கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து."
பொருள்:
வலிமையான சக்கரங்களைக் கொண்டபெரியதேர் கடலில் ஓட இயலாது. கடலில் ஓடும் கப்பல் தரையில் ஓட இயலாது. அவரவர் தமக்குரிய இடங்களிலேயேசிறப்பாகச் செயல்பட முடியும்.
இக்குறட்பாவில் பிறிது மொழிதல் அணி பயின்று வந்துள்ளது.
திருக்குறள் பற்றிய குறிப்புகள்:
- திருக்குறள் பதினென்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று.
- திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல் ஆகும்.
- திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது.
அறத்துப்பால் 4 இயல்களை உடையது.
- பாயிரவியல்
- இல்லறவியல்
- துறவறவியல்
- ஊழியியல்
பொருட்பால் 3 இயல்களை உடையது.
- அரசியல்
- அமைச்சியல்
- ஒழிபியல்
இன்பத்துப்பால் 2 இயல்கலை உடையது.
- களவியல்
- கற்பியல்
பாடம் 3 : உடலை ஓம்புமின்
நோயும் மருந்தும்
ஊர்வனவும் போலாதும் உவசமத்தின் உய்ப்பனவும்
யார்வினவும் காலும் அவைமூன்று கூற்றவா
நேர்வனவே ஆகும் நிழல்இகழும் பூணாய்
பேர்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி
தீர்தற்குஉரிய திரியயோக மருந்துஇவை
ஓர்தல் தெளிவோடு ஒழுக்கம் இவையுண்டார்
பேர்த்து பிணியுள் பிறவார்பெரிது இன்பமுற்றே"
என்ற பாடல் இடம்பெற்ற நூல் – நீலகேசி.
பாடலின் பொருள்:
- ஒளிபொருந்திய அணிகலன்களை அணிந்த பெண்ணே! நோயின் தன்மை பற்றி யார் வினவினாலும் அது மூன்று வகைப்படும் என அறிவாயாக.
- மருந்தினால் நீங்கும் நோய்கள் ஒருவகை. எதனாலும் தீராததன்மையுடைய நோய்கள் மற்றொரு வகை.
- அடங்கி இருப்பனபோல வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன இன்னொரு வகை.
- அகற்றுவதற்கு அரியவை பிறவித் துன்பங்கள் ஆகும். இவற்றைத் தீர்க்கும் மருந்துகள் மூன்று. நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் என்பவையே அம்மருந்துகள். இவற்றை ஏற்றோர் பிறவித் துன்பத்திலிருந்து நீங்கி உயரிய இன்பத்தை அடைவர்.
சொல்லும் பொருளும்:
- தீர்வன – நீங்குபவை
- திறத்தன – தன்மையுடையன
- உவசமம் – அடங்கி இருத்தல்
- கூற்றவா- பிரிவுகளாக
- நிழல்இகழும் – ஒளிபொருந்திய
- பூணாய் – அணிகலன்களைஅணிந்தவளே
- பேர்தற்கு – அகற்றுவதற்கு
- பிணி – துன்பம்
- திரியோகமருந்து – மூன்று யோகமருந்து
- ஓர்தல் – நல்லறிவு
- தெளிவு – நற்காட்சி
- பிறவார் – பிறக்கமாட்டார்
நீலகேசி பற்றிய குறிப்புகள்:
- நீலகேசி ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று.
- இந்நூல் சமணசமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது.
- கடவுள் வாழ்த்து நீங்கலாக 10 சருக்கங்களை உடையது.
- இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
- " தீர்வனவும் தீராத் திறத்தனவும்……" என்ற பாடலும், "பேர்தற்கு அரும்பிணி தாம்இவை…….." என்ற பாடலும் நீலகேசிக் காப்பியத்தின் தருவுரைச் சருக்கத்தில் இடம்பெற்றுள்ளன.
- நீலகேசி கூறும் நோயின் வகைகள் – 3
வருமுன் காப்போம்
உலகில் இன்பம் உடையவராம்
இடமும் பொருளும் நோயாளிக்கு
இனிய வாழ்வு தந்திடுமோ?
சுத்தமுள்ள இடமெங்கும்
சுகமும் உண்டு நீ அதனை
நித்தம் நித்தம் பேணுவையேல்
நீண்ட ஆயுள் பெறுவாயே
காலை மாலை உலாவிநிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப் போவானே!
கூழை யேநீ குடித்தாலும்
குளித்த பிறகு குடியப்பா
ஏழை யேநீ ஆனாலும்,
இரவில் நன்றாய் உறங்கப்பா!
மட்டுக் குணவை உண்ணாமல்
வாரி வாரித் தின்பாயேல்
திட்டு முட்டுப் பட்டிடுவாய்!
தினமும் பாயில் விழுந்திடுவாய்!
தூய காற்றும் நன்னீரும்
சுண்டப் பசித்த பின்உணவும்
நோயை ஓட்டி விடும்அப்பா!
நூறு வயது தரும்அப்பா!
அருமை உடலின் நலமெல்லாம்
அடையும் வழிகள் அறிவாயே!
வருமுன் நோயைக் காப்பாயே!
வையம் புகழ வாழ்வாயே!"
என்ற பாடலை இயற்றியவர் – கவிமணி தேசிக விநாயகனார்.
பாடலின் பொருள்:
- உடலில் உறுதி கொண்டவரே, உலகில் மகிழ்ச்சி உடையவர் ஆவார்.
- உடல் உறுதியற்ற நோயாளர்க்கு வாழும் இடமும் செல்வமும் இனிய வாழ்வு தராது.
- சுத்தம் நிறைந்துள்ள எல்லா இடங்களிலும் சுகம் உண்டு.
- நாள்தோறும் நீங்கள் தூய்மையைப் போற்றிப் பாதுகாத்தால் நீடித்த வாழ்நாளைப் பெறலாம்.
- காலையும் மாலையும் நடைப்பயிற்சி மேற்கொண்டு நல்லகாற்றைச் சுவாசித்து வருவோரை நோய் அணுகாது.அவர் உயிரைக் கவர எமனும் அணுகமாட்டான். எனவே, நீங்கள் கூழைக் குடித்தாலும் குளித்த பிறகே குடித்தல் வேண்டும்!
- நீங்கள் வறுமையில் வாழ்ந்தாலும் இரவில் நன்றாக உறங்குதல் வேண்டும்.
- அளவாக உண்ணாமல் அதிகமாக உண்டால் செரிமானம் தடுமாறி நாள்தோறும் நோய்வாய்ப்பட்டுப் பாயில் விழுவீர்கள்.
- தூய்மையான காற்றும் நல்ல குடிநீரும் நன்கு பசித்த பிறகு உண்பதும் நம்மை நோய் அணுகாமல் காப்பாற்றும்! நூறாண்டு வாழ வைக்கும்.
- அரிய நம் உடல் நலமோடு இருப்பதற்கான வழிகள் இவை என்பதை அறிவீர்களாக! ஆகவே நோய் வருமுன் காப்போம்! உலகம் புகழ வாழ்வோம்!.
சொல்லும் பொருளும்:
- நித்தம் நித்தம் – நாள்தோறூம்
- மட்டு – அளவு
- சுண்ட – நன்கு
- வையம் – உலகம்
- பேணுவையேல் – பாதுகாத்தால்
- திட்டுமுட்டு – தடுமாற்றம்
தேசிக விநாயகனார் பற்றிய குறிப்புகள்:
- பிறந்த ஊர் – குமரி மாவட்டத்தில் உள்ள தேரூர்.
- கவிமணி என்று போற்றப்படுகிறார்.
இவர் இயற்றிய நூல்கள்:
- ஆசிய ஜோதி
- மருமக்கள் வழி மான்மியம்
- கதர் பிறந்த கதை
- மலரும் மாலையும்
- உமர்கய்யாம் பாடல்கள்
தமிழர் மருத்துவம்
- "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் " என்று கூறும் நூல் – திருக்குறள் - தமிழர் தத்துவங்களான சாங்கியம், ஆசீவகம் போன்றவை உடலுக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள ஒற்றுமையைக் கண்டறிந்து , உடலில் ஐம்பூதங்களினால் ஏற்படும் மாற்றங்களை விளக்கின.
- "வேர்பாரு;தழைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே" என்று கூறியவர்கள் – சித்தர்கள்.
- "நோய்நாடி நோய் முதல்நாடி" என்று கூறும் நூல் – திருக்குறள்.
நடைமுறையில் உள்ள மருத்துவமுறைகளுள் சில:
- சித்த மருத்துவம்
- ஆயுர்வேத மருத்துவம்
- யுனானி மருத்துவம்
- அலோபதி மருத்துவம்
தனக்குள் ஓர் உலகம்
- மனித மூளையினுள் இருக்கும் செல்களின் எண்ணிக்கை – ட்ரில்லியன். அவற்றுள் நூறு பில்லியன் அதாவது பத்தாயிரம் கோடி நியூரான்கள் உள்ளன.
- மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு 800 மி.லி குருதி தேவைப்படுகிறது.
- தலையின் பகுதியில் நடைபெறும் சில தன்னிச்சையான செயல்களான வெளிச்சத்திற்கு ஏற்றப்படி கண்களைத் திறப்பது, தலையைத் திருப்பும் போது கண்களை நிலைநிறுத்துவது ஆகியவற்றை எல்லாம் மூளையே பார்த்துக் கொள்கிறது. ஆனால் ஏப்பம் விடுவது, இருமல், தும்மல், கொட்டாவி, வாந்தி ஆகியவற்றுக்கெல்லாம் மூளைக்குப் பதிலாக முதுகெலும்பு இருந்தாலே போதும்.
- மூளைக்குச் செல்லும் நரம்புகளில் இட- வல மாற்றம் ஒன்று நிகழ்கிறது. அதாவது வலப்பக்கச் செய்திகள் மூளையின் இடப்பக்கப் பகுதிக்கும், இடப்பக்கச் செய்திகள் மூளையின் வலப்பக்கப் பகுதிக்கும் செல்கின்றன.
- சுமார் 90 நிமிடங்களுக்கு ஒருமுறை நாம் மனநிலை மாறுகிறோம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
- சராசரி மனிதன் தனது வாழ்நாளில் இருபது வருடம் தூங்குகின்றான்.
சுஜாதா பற்றிய குறிப்புகள்:
- இவரது இயற்பெயர் – ரங்கராஜன்
- இவர் சிறுகதைகள், புதினங்கள்,நாடகங்கள்,அறிவியல் புனைவுக் கதைகள், திரைப்படக் கதை வசனம் எனப் பல துறைகளில் பணியாற்றியுள்ளார்.
- மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் இவர் முக்கியப் பங்கு ஆற்றியுள்ளார்.
சுஜாதா இயற்றிய நூல்கள்:
- என் இனிய எந்திரா
- மீண்டும் ஜீனோ
- ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்
- தூண்டில் கதைகள்
- தலைமைச் செயலகம்
இலக்கணம்
எச்சம்
பெயரெச்சம்:
(எ.கா) படித்த மாணவன், படித்த பள்ளி
(எ.கா)
பாடிய பாடல் – இறந்த கால பெயரெச்சம்
பாடுகின்ற பாடல் – நிகழ்காலப் பெயரெச்சம்
பாடும் பாடல் – எதிர்காலப் பெயரெச்சம்
தெரிநிலைப் பெயரெச்சம்:
(எ.கா.): எழுதிய கடிதம்குறிப்புப் பெயரெச்சம்:
(எ.கா.): சிறிய கடிதம்வினையெச்சம்:
படித்து என்னும் சொல் முடித்தான், வியந்தாள், மகிழ்ந்தார் போன்றவினைச் சொற்களுள் ஒன்றைக் கொண்டு முடியும்.(எ.கா.):
படித்து முடித்தான்.
படித்து வியந்தான்.
இவ்வாறு வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும்.
தெரிநிலை வினையெச்சம்:
(எ.கா.): எழுதி வந்தான்குறிப்பு வினையெச்சம்:
(எ.கா.): மெல்ல வந்தான்முற்றெச்சம்:
(எ.கா.): வள்ளி படித்தனள்.இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்தாள் என்னும் வினைமுற்றுப் பொருளைத் தருகிறது.
(எ.கா.): வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்.
பாடம் 4 : கல்வி கரையில
கல்வி அழகே அழகு
மற்றோர் அணிகலம் வேண்டாவாம் – முற்ற
முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே
அழகுக்கு அழகுசெய் வார்"
என்ற பாடல் இடம்பெற்ற நூல் – நீதிநெறி விளக்கம்.
இதனை இயற்றியவர் – குமரகுருபரர்.
பாடலின் பொருள்:
ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலனுக்கு மேலும் அழகூட்ட வேறு அனிகலன்கள் தேவையில்லை. அதுபோலக் கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை.சொல்லும் பொருளும்:
- கலன் – அணிகலன்
- முற்ற – ஒளிர
குமரகுருபரர் பற்றிய குறிப்புகள்:
- குமரகுருபரர் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
- இவர் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கும் பல சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளார்.
- மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டிக் காட்டுவதால் "நீதிநெறி விளக்கம்" எனப் பெயர் பெற்றது.
- நீதிநெறி விளக்கத்தில் கடவுள் வாழ்த்து உட்பட 102 வெண்பாக்கள் உள்ளன.
- "கற்றோர்க்குக் கல்வி நலனே…. " என்ற பாடல் நீதிநெறி விளக்கத்தில் 13 ஆம் பாடல் ஆகும்.
குமரகுருபரர் இயற்றிய நூல்கள்:
- கந்தர் கலிவெண்பா
- கயிலைக் கலம்பகம்
- சகலகலாவல்லி மாலை
- மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
- முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
- நீதிநெறி விளக்கம்
மெல்ல நினைக்கின்பிணி பல – தெள்ளிதின்
ஆராய்ந்தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து"
என்றபாடல் இடம்பெற்ற நூல் நாலடியார்.
புத்தியைத் தீட்டு
புத்தியைத் தீட்டு
கண்ணியம் தவறாதே – அதிலே
திறமையைக் காட்டு!
ஆத்திரம் கண்ணை
மறைத்திடும் போது
அறிவுக்கு வேலை கொடு – உன்னை
அழித்திட வந்த
பகைவன்என்றாலும்
அன்புக்குப் பாதை விடு!
மன்னிக்கத் தெரிந்த
மனிதனின் உள்ளம்
மாணிக்கக் கோயிலப்பா – இதை
மறந்தவன் வாழ்வு
தடம் தெரியாமல்
மறைந்தே போகுமப்பா!
இங்கே இருப்பது சில காலம்
இதற்குள் ஏனோ அகம்பாவம்
இதனால் உண்டோ ஒரு லாபம் – இதை
எண்ணிப்பாரு தெளிவாகும்!"
என்ற கவிதையை எழுதியவர் – ஆலங்குடி சோமு
சொல்லும் பொருளும்:
- தடம் – அடையாளம்
- அகம்பாவம் – செருக்கு
பல்துறைக் கல்வி
திரு.வி.க அவர்கள் தமிழ் இலக்கியங்களைக் கூறும் விதம்:
- இயற்கை ஓவியம் "பத்துப்பாட்டு"
- இயற்கை இன்பக்கலம் "கலித்தொகை"
- இயற்கை வாழ்வில்லம் "திருக்குறள்"
- இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் "சிலப்பதிகாரமும் மணிமேகலையும்"
- இயற்கைத் தவம் "சிந்தாமணி"
- இயற்கைப் பரிணாமம் "கம்பராமாயணம்"
- இயற்கை அன்பு "பெரியபுராணம்"
- இயற்கை இறையுறையுள் "தேவார திருவாசக திருவாய் மொழிகள்"
"ஏடன்று கல்வி; சிலர் எழுதும் பேசும்
இயலன்று கல்வி;பலர்க் கெட்டா தென்னும்
வீடன்று கல்வி;ஒரு தேர்வு தந்த
விலைவன்று கல்வி;அது வளர்ச்சி வாயில்" என்றார் – குலோத்துங்கன்
திரு.வி.க பற்றிய குறிப்புகள்:
- திரு.வி.க என்பதன் விரிவாக்கம் – திருவாரூர் விருத்தாச்சலம் கல்யாணசுந்தரனார்.
- அரசியல், சமுதாயம்,சமயம், தொழிலாளர் நலன் எனப் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்.
- சிறந்த மேடைப் பேச்சாளர்
- தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்படுபவர்
திரு.வி.க இயற்றிய நூல்கள்:
- மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
- பெண்ணின் பெருமை
- தமிழ்ச்சோலை
- பொதுமை வேட்டல்
- முருகன் அல்லது அழகு
- இளமை விருந்து
ஆன்ற குடிப்பிறத்தல்
- "அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமைஎன்னும் வழக்கு" என்னும் திருக்குறள் "பன்புடைமை" என்னும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது. - "ஜெயகாந்தனோடு பல்லாண்டு" என்னும் நூலை எழுதியவர் – "பி.ச.குப்புசாமி"
- "ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள்" என்னும் நூலின் ஆசிரியர் – "பி.ச.குப்புசாமி"
இலக்கணம்
வேற்றுமை
- பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறையை வேற்றுமை என்பர். இதற்காகப் பெயர்ச்சொல்லுடன் இணைக்கப்படும் அசைகளை வேற்றுமை உருபுகள் என்று கூறுவர்.
- சில இடங்களில் உருபுகளுக்குப் பதிலாக முழுச்சொற்களே வேற்றுமை உருபாக வருவதும் உண்டு. அவற்றைச் சொல்லுருபுகள் என்பர்.
- ஓவியர் தூரிகையால் ஓவியம் தீட்டினார். இதில் ஆல் என்பது வேற்றுமை உருபாக வந்துள்ளது. ஓவியர் தூரிகை கொண்டு ஓவியம் தீட்டினார். இதில் கொண்டு என்பது சொல்லுருபாக வந்துள்ளது.
- வேற்றுமை உருபுகள் இடம் பெற்றுள்ள தொடர்களை வேற்றுமைத் தொடர்கள் என்பர்.வேற்றுமை உருபுகள் இடம் பெற வேண்டிய இடத்தில் அது இடம்பெறாமல் மறைந்திருந்து பொருள் தந்தால் அதனை வேற்றுமைத்தொகை என்பர்.
வேற்றுமை 8 வகைப்படும்:
- முதல் வேற்றுமை
- இரண்டாம் வேற்றுமை
- மூன்றாம் வேற்றுமை
- நான்காம் வேற்றுமை
- ஐந்தாம் வேற்றுமை
- ஆறாம் வேற்றுமை
- ஏழாம் வேற்றுமை
- எட்டாம் வேற்றுமை
முதல் வேற்றுமை:
- பெரும்பாலான சொற்றொடர்களில் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை ஆகிய மூன்று உறுப்புகள் இடம் பெற்றிருக்கும்.
- எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இனையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளைத் தருவது முதல் வேற்றுமை ஆகும்.
- முதல் வேற்றுமையை எழுவாய் வேற்றுமை என்பர்.
இரண்டாம் வேற்றுமை:
இரண்டாம் வேற்றுமை உருபு "ஐ" என்பதாகும்.கபிலர் பரணரைப் புகழ்ந்தார்
கபிலரைப் பரணர் புகழ்ந்தார்
- ஆக்கல் – கரிகாலன் கல்லணையைக் கட்டினான்
- அழித்தல் – பெரியார் மூடநம்பிக்கைகளை ஒழித்தார்
- அடைதல் – கோவலன் மதுரையை அடைந்தான்
- நீத்தல் – காமராசர் பதவியைத் துறந்தார்
- ஒத்தல் – தமிழ் நமக்கு உயிரைப் போன்றது
- உடைமை – வள்ளுவர் பெரும் புகழை உடையவர்
மூன்றாம் வேற்றுமை:
- கருவியே செய்யப்படும் பொருளாக மாறுவது முதற்கருவி – மரத்தால் சிலை செய்தான்
- ஒன்றைச் செய்வதற்குத் துணையாக இருப்பது துணைக்கருவி – உளியால் சிலை செய்தான்
- கருத்தாப்பொருள் ஏவுதல் கருத்தா, இயற்றுதல் கருத்தா என இரு வகைப்படும்.
- பிறரைச் செய்ய வைப்பது ஏவுதல் கருத்தா – கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது
- தானே செய்வது இயற்றுதல் கருத்தா – சேக்கிழாரால் பெரியபுராணம் இயற்றப்பட்டது.
- ஆன் என்னும் உருபு பெரும்பாலும் செய்யுள் வழக்கில் இடம்பெறும்.
(எ.கா) புறந்தூய்மை நீரான் அமையும் - ஒடு, ஓடு ஆகிய மூன்றாம் வேற்றுமை உருபுகள் உடனிகழ்ச்சிப் பொருளில் வரும்.
(எ.கா) தாயொடு குழந்தை சென்றது. அமைச்சரோடு அலுவலர்கள் சென்றனர்.
நான்காம் வேற்றுமை:
- கொடை – முல்லைக்குத் தேர் கொடுத்தான்
- பகை – புகை மனிதனுக்குப் பகை
- நட்பு – கபிலருக்கு நண்பர் பரணர்
- தகுதி – கவிதைக்கு அழகு கற்பனை
- அதுவாதல் – தயிருக்குப் பால் வாங்கினான்
- பொருட்டு – தமிழ்வளர்ச்சிக்குப் பாடுபட்டார்
- முறை – செங்குட்டுவனுக்குத் தம்பி இளங்கோ
- எல்லை – தமிழ்நாட்டுக்குக் கிழக்கு வங்கக்கடல்
(எ.கா) கூலிக்காக வேலை
ஐந்தாம் வேற்றுமை:
- நீங்கல் – தலையின் இழந்த மயிர்
- ஒப்பு – பாம்பின் ஒரு நிறம் குட்டி
- எல்லை – தமிழ்நாட்டின் கிழக்கு வங்கக்கடல்
- ஏது – சிலேடை பாடுவதில் வல்லவர் காளமேகம்
ஆறாம் வேற்றுமை:
(எ.கா) இராமனது வில், நண்பனது கை
ஏழாம் வேற்றுமை:
(எ.கா) எங்கள் ஊரின்கண் மழை பெய்தது
இரவின்கண் மழை பெய்தது
எட்டாம் வேற்றுமை:
- பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது – வேற்றுமை
- எட்டாம் வேற்றுமை விளி வேற்றுமை என்றும் அழைக்கப்படுகிறது.
- உடனிகழ்ச்சிப் பொருளில் மூன்றாம் வேற்றுமை வரும்.
- "அறத்தான் வருவதே இன்பம்" இத்தொடரில் மூன்றாம் வேற்றுமை பயின்று வந்துள்ளது.
- "மலர் பானையை வனைந்தாள்" இத்தொடர் ஆக்கல் பொருளைக் குறிக்கிறது.
பாடம் 5 : குழலினிது யாழினிது
திருக்கேதாரம்
கண்ணின்ஒளிகனகச்சுனை வயிரம்அவைசொரிய
மண்நின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண்டு எறியக்
கிண் என்றுஇசை முரலும்திருக் கேதாரம்என்னீரே"
என்ற பாடல் இடம்பெற்ற நூல் தேவாரம்.
இயற்றியவர் – சுந்தரர்.
பாடலின் பொருள்:
- பண்ணோடு சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது அதற்கு ஏற்றவாறு முதிர்ந்த மூங்கில்களால் ஆகிய புல்லாங்குழலும் முழவும் இணைந்து ஒலிக்கும்.
- கண்களுக்கு இனிய குளிர்ச்சி தரும் ஒளியைஉடைய பொன்வண்ண நீர்நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த்திவலைகளை வாரி இறைக்கும்.
- நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் மதயானைகள் மணிகளைவாரி வாரி வீசும்.
- இவற்றால் இடையறாது எழும் ‘கிண்’ என்னும் ஒலியானது இசையாக முழங்கும். இத்தகைய சிறப்புகள் உடைய நகரம் திருக்கேதாரம் ஆகும்.
சொல்லும் பொருளும்:
- பண் – இசை
- கனகச்சுனை – பொன் வண்ண நீர்நிலை
- மதவேழங்கள் – மதயானைகள்
- முரலும் – முழங்கும்
- பழவெய் – முதிர்ந்த மூங்கில்
தேவாரம் பற்றிய குறிப்புகள்:
- தே + ஆரம் – இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை என்றும்,தே + வாரம் – இனிய ஓசை பொருந்திய பாடல்கள் எனவும் பொருள் கொள்ளப்படும்.
- பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.
- சுந்தரர் தேவாரம் பாடிய மூவருல் ஒருவர்.
- "நம்பியாரூரர்", "தம்பிரான் தோழர்" என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுபவர் – சுந்தரர்.
- சுந்தரர் அருளிய தேவாரப் பாடல்கள் பன்னிரு திருமுறைகளில் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன.
- சுந்தரர் இயற்றிய திருத்தொண்டத்தொகையை முதல் நூலாகக் கொண்டே சேக்கிழார் பெரியபுராணத்தை படைத்தளித்தார்.
- திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும்.
- இந்நூலைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.
பாடறிந்து ஒழுகுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
அன்பு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்
செறிவுஎனப்படுவது கூறியது மறாஅமை
நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை
முறை எனப்படுவது கண்ஓடாது உயிர் வௌவல்
பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்"
என்ற பாடல் இடம்பெற்ற நூல் – கலித்தொகை.
பாடலின் பொருள்:
- இல்வாழ்வு என்பது வறியவர்களுக்கு உதவி செய்தல்.
- பாதுகாத்தல் என்பது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல்.
- பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.
- அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல்.
- அறிவு எனப்படுவது அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல்.
- செறிவு எனப்படுவது முன் சொன்னவாக்கைமறுக்காமல் காப்பாற்றுதல்.
- நிறை எனப்படுவது மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல்.
- நீதிமுறை எனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல்.
- பொறுமை எனப்படுவது தம்மை இகழ்வாரையும் பொறுத்தல்.
- நாம் ஒவ்வொருவரும் இத்தகைய பண்புநலன்களைப் பின்பற்றி வாழ வேண்டும்.
சொல்லும் பொருளும்:
- அலந்தவர் – வறியவர்
- செறாஅமை – வெறுக்காமை
- நோன்றல் – பொறுத்தல்
- போற்றார் – பகைவர்
- கிளை – உறவினர்
- பேதையார் – அறிவற்றவர்
- மறாஅமை – மறவாமை
- பொறை – பொறுமை
கலித்தொகை பற்றிய குறிப்புகள்:
- கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
- இது கலிப்பா எனும் பாவகையால் ஆன நூல்.
- கலித்தொகை 150 பாடல்களைக் கொண்டது.
- கலித்தொகை 5 பிரிவுகளை உடையது.
- குறிஞ்சிக்கலி
- முல்லைக்கலி
- நெய்தற்கலி
- மருதக்கலி
- பாலைக்கலி
- கலித்தொகையை தொகுத்தவர் – நல்லந்துவனார். இவர் சங்க காலப் புலவர்களுள் ஒருவர்.
- கலித்தொகையில் நெய்தல்கலிப் பாடல்களை இயற்றியவர் – நல்லந்துவனார்.
நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்
- உலகில் பழமையான கைவினைக் கலைகளுள் ஒன்று – "மண்பாண்டக் கலை"
- சிந்துசமவெளி அகழாய்வில் பானை ஓடுகள் கிடைத்துள்ளன.
- தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.
- நாகை மாவட்டம் செம்பியன் கண்டியூரில் கலையழகு மிகுந்த மண்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
- மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் ஏராளமான சுடுமண் பொருள்கள் கிடைத்துள்ளன.
- மண்பானை செய்யும் சக்கரம் திருவை எனப்படும்.
- பானை செய்தலைப் பானை வனைதல் என்று சொல்வது மரபு.
- சுடுமண் சிற்பக்கலை ஆங்கிலத்தில் "டெரகோட்டா" எனப்படும்.
- கல்மூங்கில், மலைமூங்கில், கூட்டு மூங்கில் என மூன்றுவகை மூங்கில்கள் உண்டு. அவற்றுள் கூட்டு மூங்கில்களே கைவினைப் பொருள்கள் செய்வதற்கு ஏற்றவை.
பாய்களில் பலவகை உண்டு.
- குழந்தைகளைப் படுக்க வைப்பது – தடுக்குப் பாய்
- உட்காரவும் உண்ணவும் உதவுவது – பந்திப்பாய்
- உட்காரவும் படுக்கவும் உதவுவது – திண்ணைப்பாய்
- திருமணத்துக்குப் பயன்படுத்துவது – பட்டுப்பாய்
- இசுலாமியர் தொழுகைக்கு பயன்படுத்துவது – தொழுகைப்பாய்
- முற்காலத்தில் பாய்மரக் கப்பல்களில் பாய்கள் பயன்படுத்தப்பட்டதை "கூம்பொடு மீப்பாய் களையாது" என்ற அடிகளில் புறநானூறு கூறுகிறது.
- தமிழ்நாட்டின் மாநில மரம் – பனை மரம்
- பிரம்பு என்பது கொடி வகையைச் சார்ந்த ஒரு தாவரம். இதன் தாவரவியல் பெயர் "கலாமஸ் ரொடாங்" என்பதாகும். இது நீர்நீறைந்த வரப்புகளிலும், மண்குகைகளிலும் செழித்து வளரும்.
- தமிழகத்தில் இப்போது இஃது அருகிவிட்டது. நமது தேவைக்காக அசாம், அந்தமான், மலேசியா ஆகிய இடங்களில் இருந்து தருவிக்கப்படுகிறது.
- பழந்தமிழ் இலக்கியங்களை பாதுகாத்து வந்தவை – பனையோலைகள்
தமிழர் இசைக்கருவிகள்
- குரல்வழி இசை, கருவிவழி இசை என இசையை இரண்டாகப் பிரிப்பர்.
- சங்ககாலத்தில் இசைக்கருவிகளை இசைத்துப் பாடல் பாடுவோர் பாணர் எனப்பட்டனர்.
- "நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன்சூடான் பாடினி அணியாள்" என்றஇசைக்கருவிகள் பற்றிய அடிகள் இடம்பெற்ற நூல்- புறநானூறு
இசைக்கருவிகள் 4 வகைப்படும்
- தோல்கருவிகள்
- நரம்புக்கருவிகள்
- காற்றுக்கருவிகள்
- கஞ்சக்கருவிகள்
- விலங்குகளின் தோலால் மூடப்பட்டுச் செய்யப்படும் கருவிகள் தோல்கருவிகள் எனப்படும். (எ.கா) முழவு, முரசு
- நரம்பு அல்லது தந்திகளை உடையவை நரம்புக்கருவிகள் எனப்படும் (எ.கா) யாழ், வீணை
- காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படுபவை காற்றுக்கருவிகள் எனப்படும் (எ.கா) குழல், சங்கு
- ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுபவை கஞ்சக்கருவிகள் எனப்படும் (எ.கா) சாலரா, சேகண்டி
- உடுக்கை எனபது தோல்கருவி ஆகும். பெரிய உடுக்கையை தவண்டை என்றும் சிறிய உடுக்கையை குடுகுடுப்பை என்றும் கூறுவர்.
- "தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம் பயில்வார்" என்று உடுக்கையைப் பற்றிக் கூறும் நூல் – "சம்பந்தர் தேவாரம்".
- குடமுழா என்பது 5 முகங்களை உடைய முரசு வகையைச் சார்ந்தது. இது தோல்கருவி வகையைச் சார்ந்தது ஆகும். இதனைப் பஞ்சமகா சப்தம் என்பர். இது கோயில்களில் இசைக்கப்படும் இசைக்கருவி ஆகும்.
- குழல் என்பது காற்றுக்கருவி ஆகும். இதனை வேய்ங்குழல், புல்லாங்குழல் என்றும் அழைப்பர்.
- கொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல்குழல் எனப் பலவகையான குழல்கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
- "குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்" என்று குழலைப் பற்றிக் கூறும் நூல் – திருக்குறள் - சங்கு ஓர் இயற்கைக்கருவி ஆகும். இது கடலில் இருந்து எடுக்கப்படுகிறது. வலமாகச் சுழிந்து இருக்கும் சங்கை வலம்புரிச் சங்கு என்பர். சங்கின் ஒலியைச் சங்கநாதம் என்பர். இலக்கியங்களில் இதனைப் பணிலம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
- "சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடலோர் எம்பாவாய்" என்று சங்கினைப் பற்றிக் கூறும் நூல் – திருப்பாவை - சாலரா என்பது கஞ்சக்கருவி வகையைச் சார்ந்தது. இதனைப் பாண்டில் என அழைப்பர். இது இக்காலத்தில் ஜால்ரா எனப்படுகிறது.
- வட்ட வடிவமான மணி வகையைச் சார்ந்தது சேகண்டி. இது கஞ்சக்கருவி வகையைச் சார்ந்தது. இதனைச் சேமங்கலம் என்று அழைப்பர்.
- பலாமரத்தினால் செய்யப்பட்டு விலங்குத் தோலினால் கட்டப்படும் கருவி திமிலை ஆகும். இது மணற்கடிகார வடிவில் அமைந்திருக்கும். இதனைப் பாணி என்னும் பெயரால் அழைப்பர்.
- "சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி
வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டி" என்று திமிலை கருவியைப் பற்றிக் கூறும் நூல் – "பெரியபுராணம்" - விலங்குத் தோலால் இழுத்துக் கட்டப்பட்ட கருவி பறையாகும்.
பழங்காலத்தில் செய்திகளைத் தெரிவிக்க கோட்பறையை முழங்கினர்.
பகைவர்களின் ஆநிரையைக் கவரச் செல்லும் போது ஆகோட்பறையை முழங்குவர்.
இக்காலத்தில் தப்பு எனும் பெயரில் இது வழங்கப்படுகிறது.
இதனை முழங்கிக்கொண்டு ஆடும் ஆட்டம் தப்பாட்டம் என்று அழைக்கப்படுகிறது. - மத்தளம் என்பது தோல்கருவி ஆகும். இதனை முதற்கருவி என்பர்.
- "மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தர்கீழ்" என்று மத்தளம் பற்றி கூறும் நூல் – நாச்சியார் திருமொழி. - தமிழர்கள் போர்த்துனையாகக் கொண்ட கருவிகளுள் முதன்மையானது முரசு ஆகும்.
முரசு தோல்கருவி வகையைச் சார்ந்தது.
படைமுரசு, கொடைமுரசு, மணமுரசு என்று மூன்று வகையான முரசுகள் பழந்தமிழ்நாட்டில் இருந்தன. - தமிழ்மக்களிடம் 36 வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
- "மாக்கண் முரசம்" என்று குறிப்பிடும் நூல் – மதுரைக்காஞ்சி
- ஒரே முகத்தையுடைய முரசு வகையைச் சார்ந்தது முழவு.
ஒரு பெரிய குடத்தின் வாயில் தோலை இழுத்துக் கட்டப்பட்ட கருவியாகும்.
இத்தோலில் ஒருவகை பசை மண்னைத் தடவி முழங்குவர். - "மண்னமை முழவு" என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ள நூல் – பொருநராற்றுப்படை
- காலத்தை அறிவிக்க நாழிகை முழவு, காலை முழவு ஆகியவை பயன்படுத்தப்பட்டன.
- "கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்" என்று கூறும் நூல் – புறநானூறு
- யாழ் என்பது நரம்புக்கருவி வகையைச் சார்ந்தது.
- பேரியாழ், செங்கோட்டியாழ் போன்றவை மிகப்பழமையானவை.
- யாழின் வகைக்கு ஏற்ப அதில் இருக்கும் நரம்புகளின் எண்ணிக்கை வேறுபடுகிறது.
- வீணை என்பது நரம்புக்கருவி வகையைச் சார்ந்தது. இது யாழ் போன்ற அமைப்புடையது. இஃது 7 நரம்புகளைக் கொண்டது.
- பரிவாதினி என்னும் வீணை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் வழக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இலக்கணம்
தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்
தொகைநிலைத் தொடர்கள்:
இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி (மறைந்து) வருமானால் அவை தொகைநிலைத்தொடர் எனப்படும்.தொகைநிலைத்தொடர் 6 வகைப்படும்
- வேற்றுமைத்தொகை
- வினைத்தொகை
- பண்புத்தொகை
- உவமைத்தொகை
- உம்மைத்தொகை
- அன்மொழித்தொகை
வேற்றுமைத்தொகை:
இரு சொர்களுக்கு இடையில் வேற்றுமை உருபு மறைந்து வந்து பொருள் தந்தால்அது வேற்றுமைத்தொகை எனப்படும்.(எ.கா): திருக்குறள் படித்தாள்.
இத்தொடர் திருக்குறளைப் படித்தாள் என விரிந்து நின்று பொருள் தருகிறது.
இரு சொற்களுக்கும் இடையில் "ஐ" என்னும் இரண்டாம் வேற்றுமைஉருபு மறைந்து வந்துள்ளது.
- திருவாசகம் படித்தான் – (ஐ) இரண்டாம் வேற்றுமைத்தொகை
- தலைவணங்கு – (ஆல்) மூன்றாம் வேற்றுமைத்தொகை
- சிதம்பரம் சென்றான் – (கு) நான்காம் வேற்றுமைத்தொகை
- மலைவீழ் அருவி – (இன்) ஐந்தாம் வேற்றுமைத்தொகை
- கம்பர் பாடல் – (அது) ஆறாம் வேற்றுமைத்தொகை
- மலைக்குகை – (கண்) ஏழாம் வேற்றுமைத்தொகை
உருபும் பயனும் உடன்தொக்க தொகை
(எ.கா.): பணப்பைஇது பணத்தைக் கொண்ட பை என விரிந்து பொருள் தருகிறது. பணம், பை என்னும் இரு சொற்களுக்கு இடையில் "ஐ" என்னும் வேற்றுமை உருபும் "கொண்ட" என்னும் சொல்லும் (உருபின் பயன்) மறைந்து வந்துள்ளன.
இவ்வாறு ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் சொல்லும் (பயன்) மறைந்து வருவது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை எனப்படும்.
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை:
(எ.கா.) பால் குடம் – (பாலைக் கொண்ட குடம்)மூன்றாம் வேற்றுமைஉருபும் பயனும் உடன்தொக்க தொகை
(எ.கா.) பொற்சிலை – (பொன்னால் ஆகிய சிலை)
நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
(எ.கா.) மாட்டுக் கொட்டகை- (மாட்டுக்குக் கட்டப்பட்ட கொட்டகை)
வினைத்தொகை:
(எ.கா): ஆடுகொடி, வளர்தமிழ்இத்தொடர்களில் ஆடு, வளர் என்பவை வினைப்பகுதிகள்.
இவை முறையே கொடி, தமிழ் என்னும் பெயர்ச்சொற்களோடு சேர்ந்து காலம் காட்டாத பெயரெச்சங்களாக உள்ளன.
அதாவது காலம் காட்டும் இடைநிலைகள் தொக்கி உள்ளன.
மேலும் இவை முறையே ஆடிய கொடி, ஆடுகின்ற கொடி, ஆடும் கொடி எனவும் வளர்ந்ததமிழ், வளர்கின்றதமிழ், வளரும் தமிழ் எனவும் முக்காலத்திற்கும் பொருந்தும்படி பொருள் தருகின்றன.
இவ்வாறு காலம் காட்டும் இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சத்தை வினைத்தொகை என்பர்.
"காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை" என்று கூறும் நூல் – நன்னூல்
பண்புத்தொகை:
(எ.கா): வெண்ணிலவு, கருங்குவளைஇத்தொடர்களில் வெண்மை, கருமை என்னும் பண்புகள் நிலவு, குவளை என்னும் பெயர்ச்சொற்களைத் தழுவி நிற்கின்றன.
ஆன, ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து வெண்மையான நிலவு, கருமையாகிய குவளை என்னும் பொருள்களைத் தருகின்றன.
இவ்வாறு பண்புப் பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையே ஆன, ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.
இருபெயரொட்டுப் பண்புத்தொகை:
(எ.கா): பனைமரம்இத்தொடர் பனையாகிய மரம் என விரியும். மரம் என்பது பொதுப்பெயர். பனை என்பது மரங்களுள் ஒன்றினைக் குறிக்கும் சிறப்புப்பெயர்.
இவ்வாறு சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நிற்க, இடையில் ஆகியஎன்னும் பண்புருபுமறைந்து வருவதுஇருபெயரொட்டுப் பண்புத்தொகை எனப்படும்.
உவமைத்தொகை:
(எ.கா): மலர்விழிஇத்தொடர் மலர்போன்ற விழி என்ற பொருள் தருகிறது.
மலர் – உவமை, விழி – உவமேயம்.
இடையில் போன்ற என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது.
இவ்வாறு உவமைக்கும் உவமேயத்துக்கும் இடையில் போல, போன்ற, நிகர, அன்ன முதலிய உவம உருபுகளுள் ஒன்று மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.
உம்மைத்தொகை:
(எ.கா): இரவுபகல், தாய்தந்தைஇத்தொடர்கள் இரவும் பகலும், தாயும் தந்தையும் எனவிரிந்து பொருள் தருகின்றன.
இதில் சொற்களின் இடையிலும் இறுதியிலும் "உம்" என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருகிறது.
இவ்வாறு சொற்களுக்குஇடையிலும் இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவதை உம்மைத்தொகை என்பர்.
எண்ணும்மை:
ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களில் "உம்" என்னும் உருபு வெளிப்பட வருவது எண்ணும்மை எனப்படும்.(எ.கா): இரவும் பகலும், பசுவும் கன்றும்
அன்மொழித்தொகை:
(எ.கா.): பொற்றொடி வந்தாள் (தொடி – வளையல்)இத்தொடரில் பொற்றொடி என்பது பொன்னாலான வளையல் எனப் பொருள் தரும்.
இத்தொடர் வந்தாள் என்னும் வினைச்சொல்லைத் தழுவி நிற்பதால் பொன்னாலாகிய வளையலை அணிந்த பெண் வந்தாள் என்னும் பொருள் தருகிறது.
இதில் "ஆல்" என்னும் மூன்றாம் வேற்றுமை உருபும் "ஆகிய" என்னும் அதன் பயனும் மறைந்து வந்து, வந்தாள் என்னும் அச்சொல்லால் பெண் என்பதையும் குறிப்பதால் இது மூன்றாம் வேற்றுமைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை எனப்படும்.
இவ்வாறு வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களுள் , அவை அல்லாத வேறு பிற சொற்களும் மறைந்து வருவது அன்மொழித்தொகை (அல் + மொழி + தொகை) எனப்படும்.
தொகாநிலைத்தொடர்:
ஒரு தொடரில் இரு சொற்கள் வந்து அவற்றின் இடையில் எச்சொல்லும் எவ்வுருபும் மறையாமல் நின்று பொருள் உணர்த்தினால் அதனைத் தொகாநிலைத் தொடர் எனப்படும்.தொகாநிலைத்தொடர் 9 வகைப்படும்.
- எழுவாய்த்தொடர்
- விளித்தொடர்
- வினைமுற்றுத்தொடர்
- பெயரெச்சத் தொடர்
- வினையெச்சத் தொடர்
- வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
- இடைச்சொல் தொடர்
- உரிச்சொல் தொடர்
- அடுக்குத் தொடர்
எழுவாய்த்தொடர்:
(எ.கா) மல்லிகை மலர்ந்ததுஇதில் மல்லிகை என்னும் எழுவாயைத் தொடர்ந்து மலர்ந்தது என்னும் பயனிலை அமைந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால் இஃது எழுவாய்த்தொடர் ஆகும்.
விளித்தொடர்:
(எ.கா) நண்பா படிஇதில் நண்பா என்னும் விளிப்பெயர் படி என்னும் பயனிலையைக் கொண்டு முடிந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால் இது விளித்தொடர் ஆகும்.
வினைமுற்றுத்தொடர்:
(எ.கா) சென்றனர் வீரர்இதில் சென்றனர் என்னும் வினைமுற்று வீரர் என்னும் பெயரைக் கொண்டு முடிந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால் இது வினைமுற்றுத்தொடர் ஆகும்.
பெயரெச்சத்தொடர்:
(எ.கா) வரைந்த ஓவியம்இதில் வரைந்த என்னும் எச்சவினை ஓவியம் என்னும் பெயர்ச்சொல் கொண்டு முடிந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால் இது பெயரெச்சத்தொடர் ஆகும்.
வினையெச்சத்தொடர்:
(எ.கா) தேடிப் பார்த்தான்இதில் தேடி என்னும் வினையெச்சச்சொல் பார்த்தான் என்னும் வினைமுற்றுச்சொல் கொண்டு முடிந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால் இது வினையெச்சத்தொடர் ஆகும்.
வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்:
(எ.கா) கவிதையை எழுதினார்இதில் "ஐ" என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாகவந்து பொருளைஉணர்த்துவதால்இது வேற்றுமைத் தொகாநிலைத்தொடர் ஆகும்.
இடைச்சொல் தொடர்:
(எ.கா) மற்றுப் பிற (௳ற்று + பிற)இதில் மற்று என்னும்இடைச்சொல் வெளிப்படையாக வந்துள்ளதால்இது இடைச்சொல் தொடர் ஆகும்.
உரிச்சொல் தொடர்:
(எ.கா) சாலவும் நன்றுஇதில் சால என்னும் உருச்சொல் வெளிப்படையாக வந்துள்ளதால் இஃது உரிச்சொல் தொடர் ஆகும்.
அடுக்குத்தொடர்:
(எ.கா) நன்று நன்று நன்றுஇதில் ஒரே சொல் பலமுறை அடுக்கி வந்துள்ளதால் அடுக்குத்தொடர் ஆகும்.
- சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது – வேற்றுமைத்தொகை
- செம்மரம் என்பது பண்புத்தொகை
- கண்ணா வா! என்பது விளித்தொடர்
- கார்குழலி படித்தாள் – எழுவாய்த்தொடர்
- பாடி முடித்தான் – வினையெச்சத் தொடர்
- புலவரே வருக – விளித்தொடர்
- எழுதிய பாடல் – பெயரெச்சத் தொடர்
- வென்றான் சோழன் – வினைமுற்றுத் தொடர்
இணைச்சொற்கள்:
தொடர்களில் சில சொற்கள் இணையாக இடம்பெற்று, பொருளுக்கு வலுவூட்டும். அவற்றை இணைச்சொற்கள் என்கிறோம்.(எ.கா) தாய் குழந்தையை பாராட்டி சீராட்டி வளர்த்தாள்
இணைச்சொற்கள் 3 வகைப்படும்.
- நேரிணை
- எதிரிணை
- செறியிணை
(எ.கா) சீரும் சிறப்பும், பேரும் புகழும்
(எ.கா) இரவுபகல், உயர்வு தாழ்வு
(எ.கா) பச்சைப்பசேல், வெள்ளைவெளேர்
பாடம் 6 : வையம்புகழ் வணிகம்
வளம் பெருகுக
இட்டவித்து எஞ்சாமை நாறுக! நாறார
முட்டாது வந்து மழை பெய்க! பெய்தபின்
ஒட்டாது வந்து கிளைபயில்க! அக்கிளை
பால்வார்பிறைஞ்சிக் கதிரீன! அக்கதிர்
ஏர்கெழுசெல்வர் களம் நிறைக! அக்களத்துப்
போரெல்லாங் காவாது வைகுக! போரின்
உருகெழும் ஓதை வெரீஇப் பெடையோடு
நாரை பிரியும் விளைவயல்
யாணர்த் தாகஅவன் அகன்றலை நாடே!"
என்ற பாடல் இடம்பெற்ற நூல் – தகடூர் யாத்திரை
பாடலின் பொருள்:
- சேர மன்னரின் அகன்ற பெரிய நாட்டில் பெருகிய மழைநீரால் வருவாய்சிறந்து விளங்குக.
- அகன்ற நிலப்பகுதியில் இவ்விதைகள் குறைவின்றி முளைவிடுக.
- முளைத்தவிதைகள் செழிப்புடன் வளரத்தட்டுப்பாடின்றி மழைபொழிக.
- தகுந்தகாலத்தில் மழைபொழிவதால் பயிர்கள் வாட்டமின்றிக் கிளைத்து வளர்க.
- கிளைத்துச் செழித்தபயிர்கள் பால்முற்றிக் கதிர்களை ஈனுக. அக்கதிர்கள் அறுவடைசெய்யப் பெற்று ஏரினால் வளம் சிறக்கும் செல்வர்களின் களத்தில் வந்து நிறைக.
- அக்களத்தில் வந்து நிறைந்துள்ள நெற்போர் காவல் இன்றியே விளங்குக.
- போரினைஅடித்து நெல்லினைக் கொள்ளும் காலத்தில் உழவர்கள் எழுப்பும் ஆரவார ஒலியால் நாரை இனங்கள் அஞ்சித் தம் பெண் பறவைகளோடு பிரிந்து செல்லும் சிறப்புடைய சேர மன்னரின் அகன்ற பெரிய நாடு புதுவருவாயுடன் சிறந்து விளங்குக.
சொல்லும் பொருளும்:
- வாரி – வருவாய்
- எஞ்சாமை – குறைவின்றி
- முட்டாது – தட்டுப்பாடின்றி
- ஒட்டாது – வாட்ட இன்றி
- வைகுக – தங்குக
- ஓதை – ஓசை
- வெரீஇ – அஞ்சி
- யாணர் – புதுவருவாய்
அக்களத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – அ + களம்
கதிர் + ஈன என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – கதிரீன
மழைச்சோறு
- மழை பெய்யாமல் ஊரில் பஞ்சம் ஏற்படும் காலங்களில், சிற்றூர் மக்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று உப்பில்லாச் சோற்றை ஒரு பானையில் வாங்குவர். ஊர்ப் பொது இடத்தில்வைத்து அச்சோற்றை அனைவரும் பகிர்ந்து உண்பர். கொடிய பஞ்சத்தைக் காட்டும் அடையாளமாக நிகழும் இதனைக் கண்டு வானம் மனமிரங்கி மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்நிகழ்வை மழைச்சோறுநோன்பு என்பர்.
- "கொங்குநாட்டு மழைச்சோற்று வழிபாடு" என்னும் கட்டுரை இடம்பெற்ற நூல் – "பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்"
- "பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்" என்னும் நூலின் பதிப்பாசிரியர் – அ.கௌரன்
கொங்குநாட்டு வணிகம்
- திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்றவர் – "ஔவையார்"
- தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டியர்களுக்கு உரியதாகக் கூறுகின்றன.
- "வான்புகழ் மூவர் தண்பொழில்வரைப்பு"என்று கூறும் நூல் – தொல்காப்பியம்
- வால்மீகி இராமாயணம், மகாபாரதம், அர்த்தசாத்திரம், அசோகர் கல்வெட்டு ஆகியவற்றில் மூவேந்தர்கள் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன.
- முடியுடை வேந்தர்களில் சேரர்களே பழமையானவர்கள் என்று கூறுபவர் உண்டு. சேர, சோழ, பாண்டிய என்னும் தொடரையே இதற்குச் சான்றாகக் காட்டுவர். மேலும் தொல்காப்பியமும் " போந்தைவேம்பே ஆரென வரூஉம் மாபெருந்தானையர்மலைந்த பூவும்" எனச் சேரரை முன்வைக்கிறது.
- சேரர்களின் நாடு குடநாடு எனப்பட்டது. இவர்களின் தலைநகராக வஞ்சி விளங்கியது. இந்நகர் மேற்கு மலைத்தொடரில் தோன்றி அரபிக்கடலில் கலக்கும்பேரியாற்றங்கரையில் இருந்தது. இதனைக் கருவூர் என்றும் அழைப்பர்.
- தொண்டி, முசிறி, காந்தளூர்என்பன சேரநாட்டின்துறைமுகப் பட்டினங்களாக விளங்கின. சேரர்களின் கொடி விற்கொடி ஆகும். பனம்பூ இவர்களுக்கு உரிய பூ ஆகும்.
- பண்டைய நாடு என்பது இன்றைய கேரளப் பகுதிகளும் தமிழ்நாட்டின் சேலம், கோவை மாவட்டங்களின் பகுதிகளும் இணைந்த பகுதியாகவிளங்கியது என்பர்.
- சேலம், கோவைப் பகுதிகள் கொங்கு நாடு என்று பெயர் பெற்றன. இப்பகுதிகளைச் சேரர்களின் உறவினர்கள் ஆட்சி செய்து வந்தனர்.
- கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டலச் சதகம் என்னும் நூலில் வடக்கே பெரும்பாலை, தெற்கே பழனிமலை, மேற்கே வெள்ளிமலை, கிழக்கே மதிற்கரை என இந்நான்கு எல்லைகளுக்குட்பட்ட பகுதியாகக் கொங்குமண்டலம் விளங்கியதாகக் கூறப்படுகிறது.
- இன்றைய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களையும் சேலம், கரூர் மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியதாகக் கொங்குமண்டலம் விளங்கியது என்பர்.
- கொங்குநாட்டுப் பகுதியை காவிரி, பவானி, நொய்யல், ஆன்பொருநை என்று அழைக்கப்படும் அமராவதி ஆகிய ஆறுகள் வளம் செழிக்கச் செய்கின்றன.
- உழவு, கைத்தொழில், வணிகம் என்னும் மூன்றும் ஒரு நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு அடிப்படைகளாகும் என்பர்.
- உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியுள்ளனர்.
- கடல் வணிகத்தில் சேரநாடு சிறப்புற்றிருந்தது. அதற்கு அந்நாட்டின் இயற்கை அமைப்பே காரணமாக அமைந்திருந்தது. சேரர்கள் வலிமைமிகுந்த கப்பல் படையை வைத்திருந்தனர்.
- செங்குட்டுவனின் கடற்போர் வெற்றியால் அவன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்று அழைக்கப்பட்டான்.
- கடம்பர் என்னும் கடற்கொள்ளையர்களைச் சேரமன்னர்கள் அடக்கினர்.
- முசிறி சேரர்களின் சிறந்த துறைமுகங்களுள் ஒன்றாக விளங்கியது. இங்கிருந்துதான் மற்ற நாடுகளுக்கு மிளகு, முத்து, யானைத்தந்தங்கள், பட்டு, மணி போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன.
மிசையம்பியின் மனைமறுக்குந்து
……
கலந்தந்தபொற்பரிசம்
கழித்தோணியால் கரைசேர்க்குந்து"
என்ற புறநானூற்றுப் பாடல் விளக்குகிறது.
- சேரநாட்டில் உள்நாட்டு வணிகமும் நன்கு வளர்ச்சியுற்றிருந்தது. மக்கள் தத்தம் பொருள்களைத் தந்து தமக்குத்தேவையான பொருளைப் பெற்றனர். நெல்லே விலையைக் கணக்கிட அடிப்படையாக இருந்தது என்பர். உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையனவாக இருந்தன என்பதை,
- "நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
- கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடமே நீலகிரி ஆகும். இம்மாவட்டம் முழுவதும் மலைப் பகுதியாலானது. காடுகள் நிறைந்த இம்மாவட்டத்தில் தோட்டப்பயிர்களான காப்பி, தேயிலை, உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோசு ஆகியவை பெருமளவில் பயிரிடப்படுகின்றன; தைலமரம் (யூகலிப்டஸ்) வளர்க்கப்படுகிறது.
- நீலகிரி மாவட்டம் தேயிலைத் தொழிற்சாலைகள் நிறைந்தது. புகைப்படச் சுருள் தயாரிப்புத் தொழிற்சாலை, துப்பாக்கி வெடிமருந்துத் தொழிற்சாலை, தைலமரம் (யூகலிப்டஸ்) எண்ணெய்த் தொழிற்சாலை ஆகியனவும் உள்ளன.
- கோவன்புத்தூர் என்னும் பெயரே கோயம்புத்தூர் என்று மருவி வழங்கப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் நெல், வாழை, கரும்பு, காய்கறிகள், பூக்கள் போன்றவை பெருமளவில் பயிரிடப்படுகின்றன. பஞ்சாலைகள், நூற்பாலைகள், மின்சாரப் பொருள்கள், எந்திரங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இம்மாவட்டத்தில் நிறைந்துள்ளன.
- வரலாற்றுச் சிறப்புமிக்க திண்டுக்கல்லில் நெல், சோளம், தினைவகைகள், வாழைப்பழம், காய்கறிகள் போன்றவை விளைவிக்கப்படுகின்றன. இப்பகுதி மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்றது. எனவே "தமிழ்நாட்டின் ஹாலந்து" என்றும் சிறப்பிக்கப்படுகிறது. அரிசி, தோல், பூட்டுத் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் இது. இங்குள்ள சின்னாளபட்டிச் சுங்குடிச் சேலைகள் புகழ்பெற்றவை.
- பரப்பளவில் ஈரோடு தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்குகிறது. இம்மாவட்டத்தில் நெல், நிலக்கடலை, மஞ்சள், கரும்பு, பருத்தி, எள் போன்றவை பயிரிடப்படுகின்றன. தமிழகத்திலேயே மஞ்சள் சந்தை ஈரோட்டில் தான் நடைபெறுகின்றது.
- இன்று திருப்பூர் மிகச்சிறந்த பின்னலாடை நகரமாக விளங்குகிறது. நெல், கரும்பு, பருத்தி, வாழை போன்றவை இங்கு விளைவிக்கப்படும் முதன்மையான பயிர்களாகும். இம்மாவட்டம் பின்னலாடைகள், ஆயத்தஆடைகள் மூலம் தமிழ் நாட்டிற்குப் பெரும் வருவாயை ஈட்டித் தருகிறது. இந்தியாவின் முதல் ஆயத்தஆடைப் பூங்காவான நேதாஜி ஆயத்தஆடைபூங்கா இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேசிய அளவில் புகழ்பெற்ற காங்கேயம் காளைகள் இம்மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கின்றன.
- பச்சைமலை, கொல்லிமலை, சேர்வராயன் மலையின் ஒரு பகுதி ஆகியவை நாமக்கல் மாவட்டத்தில் உள்ளன. நெல், கரும்பு, சோளம், நிலக்கடலை, பருத்தி ஆகியவற்றுடன் மலைப்பகுதிகளில் விளையும் திராட்சை, ஆரஞ்சு, காப்பி, பாக்கு, ஏலம் போன்றவையும் பயரிடப்படுகின்றன. முட்டைக்கோழி வளர்ப்பிலும் முட்டை உற்பத்தியிலும் தென்னிந்தியாவிலேயே நாமக்கல் முதன்மை இடம் வகிக்கிறது.
- மாங்கனி நகரம் என்னும் சிறப்புப் பெயர் கொண்டது சேலம். இம்மாவட்டத்தில் நெல் பருப்பு வகைகள், பருத்தி, கரும்பு, மாம்பழம், காப்பி, பாக்கு ஆகியன பயிரிடப்படுகின்றன. இந்தியாவிலேயே இம்மாவட்டத்தில் தான் ஜவ்வரிசி அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் கைத்தறி நெசவு அதிகமாக உள்ள மாவட்டம் சேலம். "ஏழைகளின் ஊட்டி" என்றழைக்கப்படும் ஏற்காடு சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
- கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய கரூர் "வஞ்சிமாநகரம்" என்ற சிறப்புப் பெயர் பெற்றது. "கிரேக்க அறிஞர் தாலமி", கரூரைத் தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாகக் குறிப்பிட்டுள்ளார்.
கொள்ளீ ரோவெனச் சேரிதொறும்நுவலும்" என்ற அகநானூற்றுப் பாடலின் மூலம் அறியலாம்.
- "வான்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு" என்று குறிப்பிடும் நூல் – தொல்காப்பியம்
- சேரர்களின் தலைநகரம் – வஞ்சி
- பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது – நெல்
- ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு – "அமராவதி"
- வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்துள்ள மாவட்டம் – கோயம்புத்தூர்
- மாங்கனி நகரம் – சேலம்
- சுங்குடிச் சேலைகளுக்கு புகழ் பெற்ற ஊர் – சின்னாளப்பட்டி (திண்டுக்கல் மாவட்டம்)
- சேரர்களின் நாடு குடநாடு எனப்பட்டது
- பின்னலாடை நகரம் – திருப்பூர்
- தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல்
காலம் உடன் வரும்
- பழந்தமிழர் வாழ்வோடு பின்னிப் பிணைந்தவை – உழவும் நெசவும்
- கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கன்னிவாடியில் பிறந்தவர். இவர் சிறந்த சிறுகதைக்கான இலக்கியச் சிந்தனை விருது பெற்றவர்.
கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் இயற்றிய நூல்கள்:
- கன்னிவாடி
- குணச்சித்திரங்கள்
- உப்புக்கடலைக் குடிக்கும் பூனை
இலக்கணம்
புணர்ச்சி
- நிலைமொழியின் இறுதி எழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் இணைவதைப் புணர்ச்சி என்பர்.
- நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அஃது உயிரீற்றுப் புணர்ச்சி எனப்படும்.
(எ.கா.) சிலை + அழகு = சிலையழகு (லை = ல்+ஐ) - நிலைமொழியின் இறுதி எழுத்து மெய்எழுத்தாக இருந்தால் அஃது மெய்யீற்றுப் புணர்ச்சி எனப்படும்.
(எ.கா.) மண்+ அழகு = மண்ணழகு - வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அஃது உயிர்முதல் புணர்ச்சி எனப்படும்.
(எ.கா.) பொன் + உண்டு = பொன்னுண்டு - வருமொழியின் முதல் எழுத்து மெய்எழுத்தாக இருந்தால் அஃது மெய்முதல் புணர்ச்சி எனப்படும்.
(எ.கா.) பொன் + சிலை = பொற்சிலை(சி = ச்+ இ)
இயல்பு புணர்ச்சியும் விகாரப் புணர்ச்சியும்:
- நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது இயல்பு புணர்ச்சி ஆகும்.
(எ.கா.) தாய் + மொழி = தாய்மொழி (இரு சொற்களிலும் எம்மாற்றமும் நிகழவில்லை.) - உடல் + ஓம்பல் = உடலோம்பல் (இங்கு ல் + ஓ இணைந்து லோ என்னும் உயிர்மெய்எழுத்து ஆயிற்று.
புதிய எழுத்து எதுவும் தோன்றவோ வேறு எழுத்தாகத் திரியவோ மறையவோ இல்லை.) - இரண்டு சொற்கள் இணையும் போது நிலைமொழியிலோ வருமொழியிலோ அல்லது இரண்டிலுமோ மாற்றங்கள் நிகழுமாயின், அது விகாரப் புணர்ச்சி எனப்படும்.
- விகாரப் புணர்ச்சி தோன்றல், திரிதல், கெடுதல் என மூவகைப்படும்.
- நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது புதிதாக ஓர் எழுத்துத் தோன்றுவது தோன்றல் விகாரம் ஆகும்.
(எ.கா.) தமிழ் + தாய் = தமிழ்த்தாய் - நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஓர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது திரிதல் விகாரம் ஆகும்.
(எ.கா.) வில் + கொடி = விற்கொடி - நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஓர் எழுத்து மறைவது கெடுதல் விகாரம் ஆகும்.
(எ.கா.) மனம் + மகிழ்ச்சி = மனமகிழ்ச்சி - இரண்டு சொற்கள் இணையும் போது ஒன்றுக்கு மேற்பட்ட விகாரங்கள் நிகழ்வதும் உண்டு.
(எ.கா.) நாடகம் + கலை = நாடகக்கலை
இங்குக் கெடுதல் விகாரத்தின்படி நிலைமொழி ஈற்றில் உள்ள மகர மெய் மறைந்தது.
தோன்றல் விகாரத்தின்படி "க்" என்னும் மெய்யெழுத்து தோன்றியது.
மரபுத்தொடர்கள்:
நாம் பேச்சிலும் எழுத்திலும் சில மரபுத் தொடர்களைப் பயன்படுத்துகிறோம். அத்தொடர்கள் நம்முடைய கருத்துகளுக்கு வலுச்சேர்க்கின்றன.சில மரபுத் தொடர்களுக்கு நேரடிப் பொருள் கொள்ளாமல், அவற்றின் உட்பொருளை அறிந்து பயன்படுத்த வேண்டும்.
(எ.கா.) 1. திண்டுக்கல், பூக்கள் உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் நகரமாக விளங்குகிறது.
கொடிகட்டிப் பறத்தல் – புகழ்பெற்று விளங்குதல்
அவர் ஓர் அவசரக்குடுக்கை.
அவசரக்குடுக்கை – எண்ணிச் செயல்படாமை
பாடம் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு
படை வேழம்
எரிகொல் மறலிகொள் ஊழி யின்கடை
அதுகொல் என அலறா இரிந்தனர்
அலதி குலதியொடு ஏழ்க லிங்கரே
வழிவர் சிலர்கடல்பாய்வர் வெங்கரி
மறைவர் சிலர்வழி தேடி வன்பிலம்
இழிவர் சிலர்சிலர் தூறு மண்டுவர்
இருவர் ஒருவழி போகல் இன்றியே
ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர்
உடலின் நிழலினை வெருவி அஞ்சினர்
அருவர் வருவர் எனாஇறைஞ்சினர்
அபயம் அபயம் எனநடுங்கியே
மழைகள் அதிர்வன போல் உடன்றன
வளவன் விடுபடைவேழம் என்றிருள்
முழைகள் நுழைவர்கள் போரில் இன்றுநம்
முதுகு செயும்உப காரம் என்பரே"
என்ற பாடல் இடம்பெற்ற நூல் கலிங்கத்துப்பரணி.
இயற்றியவர் – ஜெயங்கொண்டார்.
பாடலின் பொருள்:
- சோழர் படையின் தாக்குதலைக் கண்ட கலிங்கர், இஃது என்ன மாய வித்தையா என வியந்தனர். தம்மை எரிக்கவந்த தீயோ என அஞ்சினர். சோழட்படை தம் உயிரைப் பறிக்கும் காலனோ என அஞ்சினர்; தமது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதோ என எண்ணி, அலைந்து குலைந்து நடுங்கினர்.
- அப்படி நடுங்கிய கலிங்கப்படையினர் படைக் கூட்டத்திலிருந்துவிலகி ஓடினர். சிலர் கடலில்தாவிக் குதித்து தப்பினர். சிலர் யானைகளின் பின்னே மறைந்து கொண்டனர். எத்திசையில்செல்வதுஎனத் தெரியாமல் ,செல்வதர்கு அரிதானமலைக் குகைகளினுள்ளும் புதர்களுள்ளும்தப்பி ஓடினர்.
- கலிங்க வீரர்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓடினர். தம் நிழலையும்மற்றவர் நிழலையும் கண்டு தமிழர்கள் துரத்தி வருவதாக எண்ணி அஞ்சினர்; தஞ்சம் வேண்டி வணங்கினர்.
- சோழ மன்னன் படையிலுள்ள யானைகள் சினமுற்று இடையைப் போலப் பிளிறின; அவ்வோசையைக்கேட்டு அஞ்சிய வீரர்கள்இருள் நிறைந்தகுகைக்குள்சென்றுமறைந்தனர்;ஏனையோர் புறமுதுகு காட்டி ஓடிப் பிழைத்தனர்.
சொல்லும் பொருளும்:
- மறலி – காலன்
- கரி – யானை
- தூறு – புதர்
- அருவர் – தமிழர்
- உடன்றன – சினந்து எழுந்தன
- வழிவர் – நழுவி ஓடுவர்
- பிலம் – மலைக்குகை
- மண்டுதல் – நெருங்குதல்
- இறைஞ்சினர் – வணங்கினர்
- முழை – மலைக்குகை
கலிங்கத்துப்பரணி பற்றிய குறிப்புகள்:
- போர் முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிகொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் பரணி ஆகும்.
- கலிங்கத்துப்பரணி 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பரணி வகையைச் சார்ந்த நூல்.
- தமிழில் முதன்முதலில் எழுந்த பரணி நூல் – கலிங்கத்துப்பரணி
- இது முதலாம் குலோத்துங்க சோழன், அவருடைய படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான் ஆகியோரின் கலிங்கப் போர்வெற்றியைப் பேசுகிறது.
- கலிங்கத்துப் பரணியை தென்தமிழ்த் தெய்வப்பரணி என்று ஒட்டக்கூத்தர் புகழ்ந்துள்ளார்.
- கலிங்கத்துப்பரணி கலித்தாழிசையால் பாடப்பெற்றது.
- கலிங்கத்துப்பரணி 599 தாழிசைகள் கொண்டது.
- ஜெயங்கொண்டார் தீபங்குடி என்னும் ஊரினைச் சேர்ந்தவர்.
- இவர் முதல் குலோத்துங்கச் சோழனுடைய அவைக்கலப் புலவராகத் திகழ்ந்தவர்.
- ஜெயங்கொண்டாரைப் பரணிக்கோர் செயங்கொண்டார் என்று பலப்பட்டடைச் சொக்கநாதப் புலவர் புகழ்ந்துள்ளார்.
விடுதலைத் திருநாள்
முற்றுகையிட்ட
அந்நிய இருட்டின்
அரக்கக்கூத்து
முடிந்தது என்று
முழங்கி நின்றது
எந்த நாளோ
அந்த நாள் இது.
செத்த பிணமாய்ச்
சீவனில் லாமல்
மொத்தமாய்த் தேசத்தை
முற்றுகையிட்ட
மூட மூட
நிர்மூட உறக்கத்தை
ஓட ஓட
விரட்டி யடித்து
விழிக்க வைத்தது –
வையம்
வியக்க வைத்தது –
எந்த நாளோ
அந்த நாள் இது.
சபதம் முடித்து
கூந்தல் முடித்துக்
குங்குமப் பொட்டு வைத்து
ஆனந்த தரிசனம்
அளித்து நின்றது
எந்த நாளோ
அந்த நாள்இது.
சதி வழக்கினிலே
சம்பந்தப் பட்டுத்
தூக்குக் கயிற்றில்
தொங்கப் போகும்
கடைசிக் கணத்திலும்
கண்முன் நிறுத்திப்
பகத்சிங் பார்த்துப்
பரவசப் பட்ட
அற்புத விடியலை
அழைத்து வந்தது
எந்த நாளோ
அந்த நாள் இது.
முற்றிப் படர்ந்த
முட்காட்டைஎரித்து
விளைந்த மூங்கிலை
வீரமாய்த் துளைத்து
மூச்சுக்காற்றை
மோகித்து நுழைத்து
புரட்சிப்
புல்லாங்குழலில்
பூபாளம் இசைத்தது
எந்த நாளோ
அந்த நாள் இது.
இதந்தரும் இந்தச்
சுதந்திர நாளைச்
சொந்தம் கொண்டாடத்
தந்த பூமியைத்
தமிழால் வணங்குவோம்."
என்று நாட்டின் சுதந்திரத்தை கொண்டாடியவர் – மீரா
பாடலின் பொருள்:
- முந்நூறு ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட அரக்கராகிய அந்நியரின் ஆட்சி முடிந்தது என்பதைக் கூறும் நாள் இன்று. உயிரற்ற பிணங்களைப் போலக் கிடந்த நாட்டு மக்கள் அனைவரையும் பற்றியிருந்த அறியாமை என்னும் உறக்கத்தை ஓட ஓட விரட்டிய நாள் இன்று.
- அடிமையாய்த் தவித்துக் கொண்டிருந்த இந்தியத்தாய் சினந்து எழுந்து தன்கைவிலங்கை உடைத்துப் பகைவரை அழித்து,அவிழ்ந்த கூந்தலை முடித்து நெற்றியில் திலகமிட்டு, இந்தியருக்கு மகிழ்வான காட்சியை அளித்த நாள் இன்று.
- சதி வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங், தூகிலிடப்படும் கடைசி நேரத்திலும் தன் மனக்கணக்கில் கனவுகண்ட இந்தியாவின் விடியல் தோன்றிய நாள் இன்று. பகைமை என்னும் முள்காட்டினை அழித்து, அங்கு விளைந்த மூங்கிலைப் புரட்சி என்னும் புல்லாங்குழல் ஆக்கி மூச்சுக்காற்றால் பூபாள இசை பாடும் இனிய நாள் இன்று.
- இன்பம் தரும் இந்த விடுதலைத் திருநாளைக் கொண்டாட வாய்ப்பளித்த நம் தாய்நாட்டை தமிழால் வணங்குவோம்.
சொல்லும் பொருளும்:
- சீவன் – உயிர்
- சத்தியம் – உண்மை
- ஆனந்த தரிசனம் – மகிழ்வான காட்சி
- வையம் – உலகம்
- சபதம் – சூளுரை
- மோகித்து – விரும்பி
மீரா பற்றிய குறிப்புகள்:
- இவரது இயற்பெயர் – மீ.இராசேந்திரன்
- இவர் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியவர்
- நடத்திய இதழ் – அன்னம் விடு தூது
மீரா இயற்றிய நூல்கள்:
- ஊசிகள்
- குக்கூ
- மூன்றும் ஆறும்
- வா இந்தப் பக்கம்
- கோடையும் வசந்தமும்
பாரதரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன்
- கேராளாவைச் சேர்ந்தவர்களாகிய எம்.ஜி.ஆரின் பெற்றோர் குடும்பத்துடன் இலங்கைக்குக் குடிபெயர்ந்தனர்.
- இலங்கையில் உள்ள கண்டியில் 1917 கோபாலன் – சத்யபாமா இணையருக்கு ஐந்தாம் மகனாக எம்.ஜி.ஆர் பிறந்தார். பின்னாளில் கும்பகோணத்தில் குடியேறினர்.
- காமராசர் அறிமுகப்படுத்திய மதிய உணவுத்திட்டத்தை, "சத்துணவுத் திட்டமாக" விரிவுபடுத்தியவர் – எம்.ஜி.இராமச்சந்திரன்
- புரட்சித்தலைவர் என்று அனைவராலும் அழைக்கப்படுஅவர் – எம்.ஜி.இராமச்சந்திரன்
- பள்ளிக் குழந்தைகளுக்குக் காலணிகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர் – எம்.ஜி.இராமச்சந்திரன்
- பொன்மனச் செம்மல் என்று அழைக்கப்படுபவர் – எம்.ஜி.இராமச்சந்திரன்
- தந்தைப் பெரியார் உருவாக்கிய எழுத்துச் சீர்திருத்தங்கள் சிலவற்றை நடைமுறைப்படுத்தியவர் – எம்.ஜி.இராமச்சந்திரன்
- மதுரையில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியவர் – எம்.ஜி.இராமச்சந்திரன்
- தஞ்சைத் தமிழ்ப் பல்கலைகழகம் ஏற்படுத்தியவர் – எம்.ஜி.இராமச்சந்திரன்
- சென்னைப் பல்கலைகழகம் எம்.ஜி.ஆரின் பணியைப் பாராட்டி "டாக்டர் பட்டம்" வழங்கியது.
- தமிழக அரசு இவர் நினைவைப் போற்றும் வகையில் "எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தை" நிறுவியுள்ளது.
- இந்திய அரசு எம்.ஜி.ஆருக்கு 1988 ஆம் ஆண்டு "பாரதரத்னா (இந்திய மாமணி) விருது" வழங்கிச் சிறப்பித்தது.
- எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி (2017 – 2018) தமிழக அரசால் சென்னையிலும் மதுரையிலும் பேருந்து நிலையங்களுக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- எம்.ஜி.ஆர் கல்வி பயின்ற இடம் – கும்பகோணம்
- இந்திய அரசு சிறந்த நடிகருக்கான "பாரத்" என்னும் பட்டத்தை எம்.ஜி.ஆருக்கு வழங்கியது.
- ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் – "மதுரை"
- எம்.ஜி.ஆருக்கு அழியாத புகழைத் தேடிதந்த திட்டம் – "இலவசக் காலணி திட்டம்"
அறிவுசால் ஔவையார்
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கீந் தனையே"
என்று ஔவையார் கூறுகிறார்.
அதியமானுக்காக தொண்டைமானிடம் தூது சென்றவர் – ஔவையார்
கண்திரள் நோன்காழ்திருத்திநெய்யணிந்து
கடியுடைவியன்நகரவ்வே அவ்வே
பகைவர்க்குத்திக்கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோஎன்றும்
உணடாயின் பதம் கொடுத்து
இல்லாயின் உடன்உண்ணும்
இல்லோர்ஒக்கல்தலைவன்
அண்ணல் எம் கோமான் வைந்நுதி வேலே"
என்று பாடியவர் – ஔவையார்
இலக்கணம்
வல்லினம் மிகும் இடங்களும், மிகா இடங்களும்
வல்லினம் மிகும் இடங்கள்:
(எ.கா.) அந்தப்பக்கம். இந்தக்கவிதை.
(எ.கா.) எந்தத்திசை? எந்தச்சட்டை?
(எ.கா.) தலையைக் காட்டு. பாடத்தைப்படி.
(எ.கா.) எனக்குத் தெரியும். அவனுக்குப் பிடிக்கும்.
(எ.கா.) எழுதிப் பார்த்தாள். ஓடிக் களைத்தான்.
(எ.கா.) பெற்றுக் கொண்டேன். படித்துப் பார்த்தார்.
(எ.கா.) செல்லாக்காசு, எழுதாப்பாடல்.
(எ.கா.) மலர்ப்பாதம், தாய்த்தமிழ்.
(எ.கா.) தமிழ்த்தாய், வாய்ப்பவளம்.
(எ.கா.) எட்டுப்புத்தகம், பத்துக்காசு.
(எ.கா.) அப்படிச்செய், இப்படிக்காட்டு, எப்படித் தெரியும்?
(எ.கா.) கிழக்குக்கடல், மேற்குச்சுவர், வடக்குத்தெரு, தெற்குப்பக்கம்.
(எ.கா.) மரம் + சட்டம் = மரச்சட்டம், வட்டம் + பாறை = வட்டப்பாறை.
வல்லினம் மிகா இடங்கள்:
(எ.கா.) தம்பி படித்தான், யானை பிளிறியது.
(எ.கா.) அது சென்றது. இது பெரியது, எது கிடைத்தது?
(எ.கா.) எழுதிய பாடல், எழுதாத பாடல்.
(எ.கா.) இலைபறித்தேன், காய்தின்றேன்.
(எ.கா.) தின்று தீர்த்தான், செய்து பார்த்தாள்.
(எ.கா.) எழுதுபொருள், சுடுசோறு
(எ.கா.) எழுதும்படி சொன்னேன். பாடும்படி கேட்டுக்கொண்டார்.
(எ.கா.) தாய்தந்தை, வெற்றிலைபாக்கு
எதிர்மறைச் சொற்கள்:
வந்தது நீ அல்ல; பார்த்தது நான் அல்ல; நான் படித்த புத்தகம் இது அல்ல என்றெல்லாம் பேசுகின்றோம். இவையெல்லாம் சரியான தொடர்கள் அல்ல. எதிர்மறை வினைமுற்றுகள் பல உண்டு. அவற்றை இடம் அறிந்து பயன்படுத்த வேண்டும்.- தன்மை ஒருமை – நான் அல்லேன்.
- முன்னிலை பன்மை – நாம் அல்லோம்.
- முன்னிலை ஒருமை – நீ அல்லை.
- முன்னிலை பன்மை – நீவீர் அல்லீர்.
- படர்க்கை ஆண்பால் – அவன் அல்லன்.
- படர்க்கை பெண்பால் – அவள் அல்லள்.
- படர்க்கை பலர்பால் – அவர் அல்லர்.
- படர்க்கை ஒன்றன்பால் – அஃது அன்று.
- படர்க்கை பலவின்பால் – அவை அல்ல.
பாடம் 8 : அறத்தால் வருவதே இன்பம்
ஒன்றே குலம்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்ம்மினே
படமாடக் கோயில் பகவற்குஒன்றுஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்குஅங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்குஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்குஅது ஆமே"
என்ற பாடல் இடம்பெற்ற நூல் – திருமந்திரம்.
இதனை இயற்றியவர் – திருமூலர்
பாடலின் பொருள்:
சொல்லும் பொருளும்:
- நமன் – எமன்
- சித்தம் – உள்ளம்
- நம்பர் – அடியார்
- படமாடக் கோயில் – படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயில்
- நாணாமே – கூசாமல்
- உய்ம்மின் – ஈடேறுங்கள்
- ஈயில் – வழங்கினால்
திருமந்திரம் பற்றிய குறிப்புகள்:
- திருமந்திரத்தை இயற்றியவர் – திருமூலர்
- இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகவும் பதிணென் சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுகிறார்.
- "தமிழ் மூவாயிரம்" என்று அழைக்கப்படுவது – திருமந்திரம்
- இது பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக இடம்பெற்றுள்ளது.
- திருமந்திரம் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.
மெய்ஞ்ஞான ஒளி
உள்ளிருக்கும் மெய்ஞஞான ஒளியே பராபரமே!
காசை விரும்பிக் கலங்கிநின்று உன்பாத
ஆசை விரும்பாது அலைந்தேன் பராபரமே!
அறிவை அறிவோர்க்கு ஆனந்த வெள்ளமதாய்க்
கரையறவே பொங்கும் கடலே பராபரமே!
அடக்கத் தாம்மாய ஐம்பொறியைக் கட்டிப்
படிக்கப் படிப்பு எனக்குப் பகராய் பராபரமே!"
என்ற பாடலை இயற்றியவர் – குணங்குடி மஸ்தான் சாகிபு
பாடலின் பொருள்:
சொல்லும் பொருளும்:
- பகராய் – தருவாய்
- ஆனந்த வெள்ளம் – இன்பப்பெருக்கு
- பராபரம் – மேலான பொருள்
- அறுத்தவர்க்கு – நீக்கியவர்க்கு
குணங்குடி மஸ்தான் சாகிபு பற்றிய குறிப்புகள்:
- குணங்குடி மஸ்தான் சாகிபின் இயற்பெயர் – சுல்தான் அப்துல்காதர்
- இவர் இளம் வயதிலேயே முற்றும் துறந்தவராக வாழ்ந்தார்.
- சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளில் தவம் இயற்றிஞானம் பெற்றார்.
- இவரது பாடல்கள் "குணங்குடியார் பாடற்கோவை" என்று தொகுக்கப்பட்டுள்ளது.
குணங்குடி மஸ்தான் சாகிபு இயற்றிய நூல்கள்:
- எக்காளக் கண்ணி
- மனஒன்மணிக் கண்ணி
- நந்தீசுவரக் கண்ணி
அயோத்திதாசர் சிந்தனைகள்
- அயோத்திதாசர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர்.
- சமத்துவம், பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை மக்களிடம் பரவலாக்கியவர்கள் தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் ஆவர். இவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் அயோத்திதாசர்.
- அயோத்திதாசர் 1845ஆம் ஆண்டு மேதிங்கள் இருபதாம் நாள் சென்னையில் பிறந்தார். இவரது இயற்பெயர் காத்தவராயன் என்பதாகும்.
- இவரது ஆசிரியர் பெயர் அயோத்திதாசப் பண்டிதர். இவரது ஆசிரியர் பெயரையே தம் பெயராக வைத்துக் கொண்டார்.
- நீலகிரிக்குச் சென்று அங்கு வாழ்ந்த அயோத்திதாசர், திருமணத்திற்குப் பிறகு பர்மாவுக்குச் சென்றார்.
- அயோத்திதாசர் தமிழ் மட்டுமின்றி பாலி, வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.
- 1907 ஆம் ஆண்டு சென்னையில் ஒருபைசாத் தமிழன் என்னும் வார இதழை காலணா விலையில் தொடங்கினார்.
- ஓர் ஆண்டிற்குப் பின் அவ்விதழின் பெயரைத் தமிழன் என்று மாற்றினார்.
- "நிலவு நாளும் வளர்ந்து முழுநிலவாகி ஒளிவீசுவது போல் கல்வி நிறுவனங்களில் அறிவை வளர்க்கும் நூல்கள் கற்பிக்கப்பட வேண்டும்; கல்வியோடு கைத்தொழில், வேளாண்மை, தையல், மரம் வளர்த்தல் பன்றவற்றையும் கற்க வேண்டும்" என்று வலியுறித்தியவர் – அயோத்திதாசப் பண்டிதர்.
- "மக்களும் அவர்தம் நோக்கங்களும் பெருமைப்படத்தக்கனவாக இருக்க வேண்டுமானால், அவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி அமைய வேண்டும். அவர் மக்களுள் மாமனிதராக அறிவாற்றல் பெற்றவராக, நன்னெறியைக் கடைப்பிடிப்பவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட தலைவரை வனக்கத்துக்கு உரியவராக மக்கள் ஏற்பார்கள்; கடவுளெனத் துதிப்பார்கள்" என்று ஒரு நாட்டுக்கு வழிகாட்டும் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என விளக்குபவர் – அயோத்திதாசப் பண்டிதர்.
- அயோத்திதாசர் தமது கொள்கைகளை வலியுறுத்தவும் ஒடுக்கப்பட்டோர் உரிமைகளைப் பாதுகாக்கவும் 1892-ல் "திராவிட மாகஜன சங்கம்" என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார்.
அயோத்திதாசர் பதிப்பித்த நூல்கள்:
- போகர் எழுநூறு
- அகத்தியர் இருநூறு
- சிமிட்டு இரத்திரனச் சுருக்கம்
- பாலவாகடம்
அயோத்திதாசர் எழுதிய நூல்கள்:
- புத்தரது ஆதிவேதம்
- இந்திரர் தேச சரித்திரம்
- விவாக விளக்கம்
- புத்தர் சரித்திரப்பா
மனித யந்திரம்
- மாகாணி, வீசம் போன்றவை அக்காலத்தில் இருந்த அளவைப் பெயர்களாகும்.
- அணா, சல்லி, துட்டு என்பது அக்காலத்தில் வழக்கத்த்ல் இருந்த நாணயப் பெயர்கள் ஆகும்.
- பதினாறு அணாக்கள் கொண்டது ஒரு ரூபாய். அதனால் தான் இன்றும் பேச்சு வழக்கில் அரை ரூபாயை எட்டணா என்றும் கால் ரூபாயை நாலணா என்றும் கூறுகின்றனர்.
புதுமைப்பித்தன் பற்றிய குறிப்புகள்:
- புதுமைப்பித்தனின் இயற்பெயர் செ.விருத்தாச்சலம்
- "சிறுகதை மன்னன்" என்று போற்றப்படுபவர் – புதுமைப்பித்தன்
- சிறுகதைகளில் புதுப்புது உத்திகளைக்கையாண்டவர் என்றுஇவரைத் திறனாய்வாளர்கள் போற்றுகின்றனர்.
- நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார்.
- இவரது சிறுகதை மணிக்கொடி இதழில் வெளியாகியுள்ளது.
புதுமைப்பித்தன் இயற்றிய சிறுகதைகள்:
- கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்
- சாப விமோசனம்
- பொன்னகரம்
- ஒரு நாள் கழிந்தது
இலக்கணம்
யாப்பு இலக்கணம்
- குறிப்பிட்ட வடிவத்தில் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதப்படும் கவிதைகளை மரபுக்கவிதைகள் என்பர்.
- இலக்கணக் கட்டுப்பாடுகளின்றிக் கருத்துக்கு மட்டும் முதன்மை கொடுத்து எழுதப்படும் கவிதைகளைப் புதுக்கவிதைகள் என்பர்.
- மரபுக்கவிதைகள் எழுதுவதற்கான இலக்கணம் யாப்பு இலக்கணம் எனப்படும்.
யாப்பு இலக்கணத்தின்படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள் ஆறு. அவை
- எழுத்து
- அசை
- சீர்
- தளை
- அடி
- தொடை
எழுத்து:
யாப்பிலக்கணத்தின்படி எழுத்துகளை மூன்றாகப் பிரிப்பர்.அவையாவன:
- குறில் – உயிர்க்குறில், உயிர்மெய்க்குறில்
- நெடில் – உயிர்நெடில், உயிர்மெய்நெடில்
- ஒற்று – மெய்யெழுத்து, ஆய்த எழுத்து
அசை:
- எழுத்துகள் ஒன்றோ சிலவோ சேர்ந்து அமைவது அசை. அது நேரசை, நிரையசை என இருவகைப்படும்.
- குறில் அல்லது நெடில் எழுத்து, தனித்து வந்தாலும் ஒற்றுடன் சேர்ந்து வந்தாலும் நேரசையாகும்.
(எ.கா.) ந, நம், நா, நாம். - இரண்டு குறில் எழுத்துகள் அல்லது குறில், நெடில் எழுத்துகள் இணைந்து வந்தாலும் அவற்றுடன் ஒற்றெழுத்து சேர்ந்து வந்தாலும் நிரையசையாகும்.
(எ.கா.) கட, கடல், கடா, கடாம்.
சீர்:
- ஓர் அசையோ ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளோ சேர்ந்து அமைவது சீர்.
- சீர்களை ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர் என வகைப்படுத்துவர்.
தளை:
- சீர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவதைத் தளை என்பர்.
- முதல் சீரின் இறுதியிலும் வரும்சீரின் முதலிலும் உள்ள அசைகள் எவ்வகை அசைகள் என்பதன் அடிப்படையில், தளைகள் ஏழு வகைப்படும்.
அடி:
இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்டசீர்களைக் கொண்டு அமைவது அடி ஆகும். அடி ஐந்து வகைப்படும்.தொடை:
செய்யுளில் ஓசை இன்பமும் பொருள் இன்பமும் தோன்றும் வகையில் சீர்களுக்கு இடையிலோ, அடிகளுக்கு இடையிலோ அமையும் ஒற்றுமையே தொடை ஆகும்.தொடை எட்டு வகைப்படும்.
முதன்மையான தொடைகள் வருமாறு:
- முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை.
- இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை.
- இறுதி எழுத்து அல்லது இறுதி ஓசை ஒன்றிவரத் தொடுப்பது இயைபு.
பா வகைகள்:
- பா நான்கு வகைப்படும். அவை வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா.
- வெண்பா செப்பல் ஓசை உடையது. அறநூல்கள் பலவும் வெண்பாவால் அமைந்தவை.
- ஆசிரியப்பா அகவல் ஓசை உடையது. சங்க இலக்கியங்கள் பலவும் ஆசிரியப்பாவால் அமைந்தவை.
- கலிப்பா துள்ளல் ஓசை உடையது. கலித்தொகை கலிப்பாவால் ஆனது.
- வஞ்சிப்பா தூங்கல் ஓசை உடையது.
அடி 5 வகைப்படும்.
- குறளடி
- சிந்தடி
- அளவடி
- நெடிலடி
- கழிநெடிலடி
திருக்குறள்
பிழைத்தவேல் ஏந்தல் இனிது".
பொருள்:
காட்டு முயலை வீழ்த்திய அம்பினை ஏந்துவதை விட யானைக்குக் குறிவைத்துத் தவறிய வேலை ஏந்துவது பெருமை தரும். (பெரிய முயற்சியே பெருமை தரும்.)இக்குறட்பாவில் பிறிதுமொழிதல் அணி பயின்று வந்துள்ளது.
"நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு".
பொருள்:
நல்ல நூல்கள் படிக்கப் படிக்க இன்பம் தருவது போலப் பண்புடையவர் நட்பு பழகப் பழக இன்பம் தரும்.இக்குறட்பாவில் உவமை அணி பயின்று வந்துள்ளது.
"பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலம்தீமை யால்திரிந்து அற்று".
பொருள்:
தூய்மையற்ற பாத்திரத்தில் வைக்கப்படும் பால் திரிந்து விடும். அதுபோல நற்பண்பு இல்லாதவன் பெற்ற பெருஞ்செல்வமும் யாருக்கும் பயனின்றி அழியும்.இக்குறட்பாவில் உவமையணி பயின்று வந்துள்ளது.
பாடம் 9 : குன்றென நிமிர்ந்து நில்
உயிர்க்குணங்கள்
அன்புஇரக்கம் வெகுளிநாணம்
நிறைஅழுக்காறு எளிமை
நினைவுதுணிவு இன்பதுன்பம்
பொறைமதம் கடைப்பிடிகள்
பொச்சாப்பு மானம் அறம்
வெறுப்புஉவப்பு ஊக்கம்மையல்
வென்றிஇகல் இளமைமூப்பு
மறவிஓர்ப்பு இன்னபிற
மன்னும்உயிர்க் குணங்கள்எல்லாம்
குறைவறப் பெற்றவள்நீ
குலமாதே பெண்ணரசி
இறைமகன் வந்திருக்க
இன்னும்நீ உறங்குதியோ
புறப்படு புன்னகைநீ
பூத்தேலோ ரெம்பாவாய்!"
என்ற பாடலை இயற்றியவர் – "இறையரசன்"
பாடலின் பொருள்:
- அறிவு, கருணை, ஆசை, அச்சம், அன்பு, இரக்கம், சினம், நாணம், மேன்மை, பொறாமை, எளிமை, நினைவு, துணிவு, இன்பம், துன்பம், பொறுமை, கொள்கையைப் பின்பற்றுதல், சோர்வு, மானம், அறம், வெறுப்பு, மகிழ்ச்சி, ஊக்கம், விருப்பம், வெற்றி, பகை, இளமை, முதுமை, மறதி, ஆராய்ந்து தெளிதல் போன்றவை இவ்வுலகில் நிலைபெற்ற மனிதர்களிடம் உள்ள பண்புகளாகும்.
- இவற்றையுடைய மனிதகுலத்தில் பிறந்த பெண்ணே! நற்பண்புகள் எவையென அறிவுறுத்த இறைவனின் திருக்குமாரன் வந்தபின்னும் நீ உறங்கலாமா? உண்மையை உணர, புன்னகை பூத்து நீ புறப்படுவாயாக!
சொல்லும் பொருளும்:
- நிறை – மேன்மை
- பொறை – பொறுமை
- பொச்சாப்பு – சோர்வு
- மையல் – விருப்பம்
- ஓர்ப்பு – ஆராய்ந்து தெளிதல்
- அழுக்காறு – பொறாமை
- மதம் – கொள்கை
- இகல் – பகை
- மன்னும் – நிலைபெற்ற
இறையரசன் பற்றிய குறிப்புகள்:
- இறையரசனின் இயற்பெயர் – சே.சேசுராசா.
- கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிந்தவர்.
- ஆண்டாள் இயற்றிய திருப்பாவையைத் தழுவி, கன்னிப்பாவை என்னும் நூலை எழுதியவர் – இறையரசன்.
இளைய தோழனுக்கு
நாளைமட்டுமல்ல
இன்றும்
நம்முடையதுதான்
நட
பாதங்கள்
நடக்கத்
தயாராய் இருந்தால்
பாதைகள்
மறுப்புச் சொல்லப்
போவதில்லை.
நெய்யாய்த் திரியாய்
நீயேமாறினால்
தோல்வியும் உனக்கொரு
தூண்டுகோலாகும்!
வெற்றி
உனைச்சுற்றி
வெளிச்சவிதை
விதைக்கும்!
கவலைகளைத்
தூக்கிக்கொண்டு
திரியாதே…
அவை
கைக்குழந்தைகளல்ல..
ஓடிவந்து கைகுலுக்க
ஒருவருமில்லையா?
உன்னுடன்நீயே
கைகுலுக்கிக்கொள்!
தூங்கி விழுந்தால்
பூமி உனக்குப்
படுக்கையாகிறது.
விழித்து நடந்தால்
அதுவேஉனக்குப்
பாதையாகிறது!
நீ
விழித்தெழும் திசையே
பூமிக்குக்கிழக்கு!
உன்
விரல்களில் ஒளிரும்
சூரியவிளக்கு!
நட!
நாளைமட்டுமல்ல
இன்றும்
நம்முடையதுதான்
நட!"
என்ற கவிதையை எழுதியவர் – மு.மேத்தா
பாடலின் பொருள்:
- செயல்படத் தொடங்கு! நாளை மட்டும் அல்ல, இன்றும் நமது நாள் தான்.உனது பாதங்கள் நடக்கத் தயாராக இருந்தால், நீ செல்லும் பாதைகள் உன்னை எதிர்க்கப் போவதில்லை.
- உலகிற்கு ஒளியேற்ற எண்ணெயாய், திரியாய் உன்னையே நீ மாற்றினால் தோல்வியும் உன் உயர்விற்குத் தூண்டுகோலாகும்! வெற்றி உன் அங்கமாகி, வாழ்வில் ஒளியேற்றும்.
- கவலைகளை உள்ளத்தில் தேங்கவிட வேண்டாம். உன்னைப் பாராட்டிப் புத்துணர்வூட்ட ஒருவரும் இல்லையென்று வருந்தாதே! உன்னைவிட ஒருவரும் உன்னைப் பாராட்டிப் புத்துனர்வூட்ட முடியாது.
- நீ சோர்ந்து தளர்ந்தால் பூமி உன் நோய்ப் படுக்கையாகும். நீ கிளர்ந்து எழுந்தால் அதுவே உனக்குப் பாதையாகும்.
- நீ செயல்படப் புறப்படும் திசைதான் இனி இந்தப் பூமிக்குக் கிழக்கு.கதிரவன்உன் விரல்களில் விளக்காக ஒளிவீசும். செயல்படத் தொடங்கு! நாளைமட்டுமல்ல, இன்றும் நமது நாள்தான்.
மு.மேத்தா பற்றிய குறிப்புகள்:
- வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் மு.மேத்தா.
- புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவராக இவரைப் போற்றுவர்.
- இவர் பல நூல்களையும் திரையிசைப் பாடல்களையும் எழுதியுள்ளார்.
- கல்லூரி பேராசிரியராகப் பனியாற்றி ஓய்வு பெற்றவர்.
- மு.மேத்தா எழுதிய "ஆகாயத்துக்கு அடுத்த வீடு" என்னும் புதுக்கவிதை நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.
மு.மேத்தா எழுதிய நூல்கள்:
- கண்ணீர்ப் பூக்கள்
- ஊர்வலம்
- சோழநிலா
- மகுடநிலா
சட்டமேதை அம்பேத்கர்
- சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் – அம்பேத்கர்
- இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை – பீமராவ் ராம்ஜி அம்பேத்கர்
- அம்பேத்கர் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 14 ஆம் நாள் ராம்ஜி சக்பால் – பீமாபாய் இணையருக்குப் பதினான்காவது குழந்தையாகப் பிறந்தார். இவரது ஊர் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள இரத்தினகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அம்பவாதே என்பதாகும்.
- இவர் தமது ஆசிரியரின் மீது கொண்ட பற்றின் காரணமாக பீமாராவ் சக்பால் அம்பவாதேகர் என்னும் தம் பெயரை பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்றிக் கொண்டார்.
- பரோடா மன்னரின் உதவியுடன் மும்பைப் பல்கலைக்கழகத்தில் படித்து 1912 ல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
- பரோடா மன்னர் சாயாஜிராவ் உதவியுடன் உயர்கல்வி கற்க அமெரிக்கா சென்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதாரம், அரசியல், தத்துவம், சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார்.
- 1915-ல் பண்டைக்கால இந்திய வணிகம் என்ற ஆய்விற்காக முதுகலைப் பட்டம் பெற்றார். இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றைப் படைத்தளித்தார். இதுவே அச்சில் வெளிவந்த அம்பேத்கரின் முதல் நூலாகும்.
- இந்தியாவின் தேசியப்பங்கு வீதம் என்ற ஆய்வுக்காக கொலம்பியா பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது.
- 1920 ஆம் ஆண்டு பொருளாதாரப் படிப்பிற்காக இலண்டன் சென்றார்.
- 1921 ஆம் ஆண்டு முதுநிலை அறிவியல் பட்டமும் 1923 ஆம் ஆண்டு ரூபாய் பற்றிய பிரச்சனை என்னும் ஆராய்ச்சிக் கட்டுரைக்காக முனைவர் பட்டமும் பெற்றார். அதே ஆண்டில் சட்டப்படிப்பில் பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்.
- 1924 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை என்ற அமைப்பை நிறுவினார்.
- 1930 ஆம் ஆண்டு இலண்டனின் நடைபெற்ற வட்டமேசை மநாட்டில் கலந்துகொள்வதற்காகப் புறப்படும் முன் "என் மக்களுக்கு நியாயமாக என்ன கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன்; அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழு மனத்துடன் ஆதரிப்பேன்" என்று கூறினார்.
- அம்பேத்கருக்கும் காந்தியடிகளுக்கும் இடையே பூனா ஒப்பந்தம் ஏற்பட்ட ஆண்டு – 1931. இவ்வொப்பந்தத்தின்படி ஒடுக்கப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்கு பதில் தனித்தொகுதி வழங்கப்பட்டது.
- இந்திய அரசாங்கச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு – 1935
- அம்பேத்கர் "ஒடுக்கப்பட்ட பாரதம்" என்னும் இதழை தொடங்கிய ஆண்டு – 1927
- 1930 ஆம் ஆண்டு நாசிக் கோயில் நுழைவுப் போராட்டத்தினை நடத்தி வெற்றி கண்டார்.
- 1947 ஆகஸ்டு 15 ல் இந்தியா விடுதலை பெற்றது. ஜவகர்லால் நேரு தலைமையில் அமைந்த அரசில் சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
- 1947 ஆகஸ்டு 29ல் அரசியல் நிர்ணய மன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட 7 பேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு உருவாக்கப்பட்டது.
அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழுவில் இடம்பெற்றவர்கள்:
- அம்பேத்கர் (தலைவர்)
- கோபால்சாமி
- அல்லாடி கிருஷ்ணமூர்த்தி
- கே.எம்.முன்ஷி
- சையது முகமது சாதுல்லா
- மாதவராவ்
- டி.பி.கைத்தான்
அம்பேத்கரின் பொன்மொழி:
- "நான் வனங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை."
- இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் – அம்பேத்கர்
- பூனா ஒப்பந்தம் இரட்டை வாக்குரிமையை மாற்ற ஏற்படுத்தப்பட்டது.
- சமத்துவச் சமுதாயம் அமைய அம்பேத்கர் ஏற்படுத்திய இயக்கம் – "சமாஜ் சமாத சங்கம்"
- அம்பேத்கரின் சமூகப் பனியை பாராட்டி இந்திய அரசு "பாரதரத்னா விருது" வழங்கியது.
- புத்த சமயம் தொடர்பாக அம்பேத்கர் எழுதிய நூல் – "புத்தரும் அவரின் தம்மமும்"
- அம்பேத்கர் நிறுவிய அரசியல் கட்சியின் பெயர் – "சுதந்திரத் தொழிலாளர் கட்சி"
- பொருளாதாரப் படிப்பிற்காக அம்பேத்கர் இலண்டன் சென்றார்.
எழுத்தாளர் கோமகள் பற்றிய குறிப்புகள்:
- கோமகளின் இயற்பெயர் – இராஜலட்சுமி
- சிறுகதைகள், புதினங்கள், குறும்புதினங்கள், வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள் முதலியவற்றை எழுதியுள்ளார்.
- இவரது "அன்னை பூமி" என்னும் புதினம் தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றுள்ளது.
- தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை விருதினையும் பெற்றுள்ளார்.
எழுத்தாளர் கோமகள் இயற்றிய நூல்கள்:
- உயிர் அமுதாய்
- நிலாக்கால நட்சத்திரங்கள்
- அன்பின் சிதறல்
இலக்கணம்
அணி இலக்கணம்
பிறிதுமொழிதல் அணி:
உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூற வந்த கருத்தை உணர வைப்பது பிறிதுமொழிதல் அணி எனப்படும்.(எ.கா.)
"கடலோடா கால்வல் நெடுந்தேர்கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து".
விளக்கம்:
இத்திருக்குறள், "நிலத்தில் ஓடும் தேர் கடலில் ஓடாது. கடலில் ஓடும் கப்பல் நிலத்தில் ஓடாது" என்று உவமையை மட்டும் கூறுகிறது. இதன்மூலம் ஒவ்வொருவரும் தமக்கு உரிய இடத்தில் வெற்றி பெறமுடியும்; தமக்குப் பொருத்தமில்லாத இடத்தில் வெற்றி பெறுதல் இயலாது என்னும் கருத்தை நாம் உணர்ந்து கொள்கிறோம். எனவே இக்குறட்பாவில் பிறிதுமொழிதல் அணி இடம்பெற்றுள்ளது.
வேற்றுமை அணி:
இரண்டு பொருள்களுக்கு இடையேஉள்ள ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமையணி எனப்படும்.(எ.கா.)
"தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்டவடு".
விளக்கம்:
இத்திருக்குறளில் முதலில் நெருப்பு, கொடுஞ்சொல் ஆகிய இரண்டும் சுடும் தன்மை உடையவை என்று கூறப்படுகிறது. பின்னர், நெருப்பினால் சுட்ட காயம் ஆறிவிடும்; உள்ளத்தில் ஏற்பட்ட வடு ஆறாது என்று இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு கூறப்படுகிறது. எனவே இது வேற்றுமைஅணி ஆகும்.
இரட்டுறமொழிதல் அணி:
ஒரு சொல் அல்லது தொடர்இரு பொருள்தருமாறு அமைவது இரட்டுற மொழிதல் என்னும் அணியாகும். இதனைச் சிலேடை என்றும் கூறுவர்.(எ.கா)
"ஓடும் இருக்கும் அதனுள்வாய் வெளுத்திருக்கும்
நாடுங்குலைதனக்குநாணாது- சேடியே
தீங்காயது இல்லா திருமலைராயன்வரையில்
தேங்காயும் நாயும்நேர் செப்பு".
விளக்கம்:
- இப்பாடலின் பொருள் தேங்காய், நாய் ஆகிய இரண்டுக்கும் பொருந்துவதாக அமைந்துள்ளது.
- தேங்காயில் ஓடு இருக்கும்; தேங்காயின் உட்பகுதி வெண்மை நிறத்தில் இருக்கும்; தேங்காய் கோணல் இல்லாமல் குலையாகத் தொங்கும்.
- நாய் சிலசமயம் ஓடிக்கொண்டிருக்கும்; சிலசமயம் ஓரிடத்தில் படுத்து இருக்கும்; அதன் வாயின் உட்பகுதி வெண்மையாக இருக்கும்; குரைப்பதற்கு வெட்கப்படாது.
- இவ்வாறு இப்பாடல் இரண்டு பொருள் தரும்படி பாடப்பட்டுள்ளதால் இஃது இரட்டுறமொழிதல் அணி ஆகும்.