9th Std Tamil Book Read online Mode 2025

9 ஆம் வகுப்பு

இலக்கணம்

சொல்லும் பொருளும்:

  • சத்துவம் – அமைதி.மேன்மை ஆகியவற்றைச் சுட்டும் குணம்

  • இராசசம் – போர், தீவிரமான செயல்களைக் குறிக்கும் குணம்

  • தாமசம் – சோம்பல், தாழ்மை போன்றவற்றை குறிக்கும் குணம்

  • ஊனரசம் – குறையுடைய சுவை

கண்ணி:

  • இரண்டு கண்களைப் போல் இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலைக்குக் கண்ணி என்று பெயர்.

  • அதேபோல் தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி ஆகும்.
  • இலக்கணக்குறிப்பு:

    • முத்திக்கனி – உருவகம்

    • தெள்ளமுது – பண்புத்தொகை

    • குற்றமிலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

    • செவிகள் உணவான – நான்காம் வேற்றுமைத்தொகை

    • சிந்தாமணி – ஈறுகெட்ட எதிமறைப் பெயரெச்சம்

    • எத்தனை எத்தனை, விட்டு விட்டு – அடுக்குத் தொடர்கள்

    • ஏந்தி – வினையெச்சம்

    • காலமும் – முற்றும்மை

    தமிழாக்கம் தருக:

    • Software – மென்பொருள்

    • Browser – உலவி

    • Crop – செதுக்கு

    • Cursor – ஏவி அல்லது சுட்டி

    • Cyberspace – இணைய வெளி

    • Server – வையக விரிவு வலை வழங்கி

    • Folder – உறை

    • laptop – மடிக்கணினி

    தொடர் இலக்கணம்

  • ஒரு சொற்றொடர் எழுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச்சொல் 'எழுவாய்' எனப்படும்.

  • 'கனகாம்பரம் பூத்தது' இந்தச் சொற்றொடரில் வினைச்சொல் – பூத்தது. இந்த வினைச்சொல்லே 'பயனிலை' ஆகும்.

  • ஒரு தொடரின் பயன் நிலைத்து இருக்கும் இடத்தைப் பயனிலை என்கிறோம்.

  • 'மீனா கனகாம்பரத்தைச் சூடினாள்' இத்தொடரில், சொற்றொடர் எழுவதற்குக் காரணமாக அமைந்த மீனா என்னும் பெயர்ச்சொல்லே எழுவாய் ஆகும்.

  • அவ்வெழுவாயின் பயனிலை'சூடினாள்' என்பதாகும். எனில், மற்றொரு பெயர்ச்சொல்லான 'கனகாம்பரம்' என்பது 'செயப்படுபொருள்' என்று அழைக்கப்படுகிறது.

  • எழுவாய் ஒரு வினையைச் செய்ய அதற்கு அடிப்படையாய்த் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளே, 'செயப்படுபொருள்' ஆகும்.

  • (ஒரு தொடரில் எழுவாயும், செயப்படு பொருளும் பெயர்ச்சொல்லாக இருக்கும். பயனிலை, அந்தத் தொடரின் பயன் நிலைத்து இருக்கும் இடமாகும். ஒரு தொடரில் செயப்படுபொருள் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. செயப்படுபொருள் தோன்றும் தொடர், விளக்கமாக இருக்கும்.)

  • 'படித்தாய்' இத்தொடரில் படித்தாய் என்பது பயனிலை.

  • நீ என்னும் எழுவாய் வெளிப்படையாகத் தெரியவில்லை. இதைத் 'தோன்றா எழுவாய்' என்று கூறுகிறோம்.

  • 'நான் வந்தேன்' இத்தொடரில் வினைமுற்று பயனிலையாக வந்தது. இது 'வினைப்பயனிலை'எனப்படும்.

  • 'சொன்னவள் கலா' இங்கு 'கலா' என்னும் பெயர்ச்சொல் பயனிலையாக வந்துள்ளது. இது 'பெயர்ப்பயனிலை' எனப்படும்.

  • 'விளையாடுபவன் யார்?' இங்கு 'யார்' என்னும் வினாச்சொல் பயனிலையாக வந்துள்ளது. இது 'வினாப்பயனிலை' எனப்படும்.

  • சில இடங்கள் தவிர, ஒரு சொற்றொடரில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் மூன்றும் இந்த வரிசையில்தான் வரவேண்டும் என்று எந்தக் கட்டுப்பாடும் இல்லை. தமிழின் தொடர் அமைப்பின் சிறப்புகளுள் இதுவும் ஒன்று.

  • (எ.கா)
    • நான் பாடத்தைப் படித்தேன் (எழுவாய், செயப்படுபொருள், பயனிலை)

    • பாடத்தை நான் படித்தேன் (செயப்படுபொருள், எழுவாய், பயனிலை)

    • படித்தேன் நான் பாடத்தை (பயனிலை, எழுவாய், செயப்படுபொருள்)

    • நான் படித்தேன் பாடத்தை (எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்)

    • பாடத்தைப் படித்தேன் நான் (செயப்படுபொருள், பயனிலை, எழுவாய்)
  • 'அன்பரசன் நல்ல பையன்' இத்தொடரில் நல்ல என்னும் சொல், எழுவாயாக வரும் பெயர்ச்சொல்லுக்கு அடையாக வருகிறது. இவ்வாறு அமைவதனைப் பெயரடை என்கிறோம்.

  • 'மகிழ்நன் மெல்ல வந்தான்' இத்தொடரில் மெல்ல என்னும் சொல், வந்தான் என்னும் வினைப் பயனிலைக்கு அடையாக வருகிறது. இதை வினையடை என்கிறோம்.
  • வினை வகைகள்:

    1. தன்வினை

    2. பிறவினை

    3. காரண வினை

    தன்வினை:

  • வினையின் பயன் எழுவாயைச் சேருமாயின் அது தன்வினை எனப்படும்.

  • (எ.கா) பந்து உருண்டது.

    பிறவினை:

  • வினையின் பயன் எழுவாயையன்றிப் பிறிதொன்றைச் சேருமாயின் பிறவினை எனப்படும்.

  • (எ.கா) பந்தை உருட்டினான்.

    காரண வினை:

  • எழுவாய் தானே வினையை நிகழ்த்தாமல், வினைநிகழ்வதற்குக் காரணமாக இருப்பது காரணவினை எனப்படும்.

  • (எ.கா) பந்தை உருட்டவைத்தான்

  • காரணவினைகள், வி, பி போன்ற விகுதிகளைக் கொண்டும் செய், வை, பண்ணு போன்ற துணைவினைகளை இணைத்தும் உருவாக்கப்படுகின்றன.
  • எடுத்துக்காட்டுகள்:

  • தன்வினை – நடந்தான்

  • பிறவினை – நடத்து

  • காரண வினை – நடத்தச் செய்தார்.

  • தன்வினை – திருந்தினான்

  • பிறவினை – திருத்தினான்

  • காரண வினை – திருந்தச் செய்தான்

  • தன்வினை – ஆடினான்

  • பிறவினை – ஆட்டினான்

  • காரண வினை – ஆட்டுவித்தான்/ஆடவைத்தான்
  • செய்வினை:

  • செய்பவரை முதன்மைப்படுத்தும் வினை செய்வினை எனப்படும்.

  • (எ.கா)
    அப்பா சொன்னார்
    பாட்டு பாடுகிறாள்.

    செயப்பாட்டு வினை:

  • செயப்படுபொருளை முதன்மைப்படுத்தும் வினை செயப்பாட்டு வினை எனப்படும்.

  • (எ.கா) தோசை வைக்கப்பட்டது, பாட்டுப் பாடப்பட்டது.

    தொடர் வகைகள்:

  • மன்னன் வந்தான் – எழுவாய்த் தொடர்

  • வந்தான் மன்னன் – வினைமுற்றுத் தொடர்

  • அண்ணனோடு வருவான் – வேற்றுமைத் தொடர் (ஓடு – வேற்றுமை உருபு)

  • நண்பா கேள் – விளித்தொடர்

  • உண்ணச் சென்றான் – தெரிநிலை வினையெச்சத் தொடர்

  • நன்கு பேசினான் – குறிப்பு வினையெச்சத் தொடர்(வினயடைத் தொடர்)

  • பாடும் குயில் – தெரிநிலைப் பெயரெச்சத் தொடர்

  • இனிய காட்சி – குறிப்புப் பெயரெச்சத் தொடர் (பெயரடைத் தொடர்)

  • பாம்பு பாம்பு, வா வா – அடுக்குத் தொடர்.
  • பயன்பாட்டுத் தொடர்கள்:

  • அப்துல் நேற்று வந்தான் – தன்வினைத் தொடர்

  • அப்துல் நேற்று வரவழைத்தான் – பிறவினைத்தொடர்

  • கவிதா உரை படித்தாள் – செய்னினைத் தொடர்

  • உரை கவிதாவால் படிக்கப்பட்டது – செயப்பாட்டு வினைத்தொடர்

  • குமரன் மழையில் நனைந்தான் – உடன்பாட்டுவினைத் தொடர்

  • குமரன் மழையில் நனையவில்லை – எதிர்மறை வினைத் தொடர்

  • என் அண்னன் நாளை வருவான் – செய்தித்தொடர்

  • எவ்வளவு உயரமான மரம்! – உணர்ச்சித் தொடர்

  • உள்ளே பேசிக்கொண்டிருப்பவர் யார்? – வினாத் தொடர்

  • பூக்களைப் பறிக்காதீர் – கட்டளைத் தொடர்

  • இது நாற்காலி, அவன் மாணவன் – பெயர்ப் பயனிலைத் தொடர்

  • சொல்லும் பொருளும்:

    • குந்த – உட்கார

    • கந்தம் – மணம்

    • மிசை – மேல்

    • விசனம் – கவலை

    • மா – வண்டு

    • மது – தேன்

    • வாவி – பொய்கை/குளம்

    • வளர் முதல் – நெற்பயிர்

    • தரளம் – முத்து

    • பணிலம் – சங்கு

    • வரம்பு – வரப்பு

    • கழை – கரும்பு

    • கா – சோலை

    • குழை – சிறு கிளை

    • அரும்பு – மலர் மொட்டு

    • மாடு – பக்கம்

    • நெருங்கு வளை – நெருங்குகின்ற சங்குகள்

    • கோடு – குளக்கரை

    • மேதி – எருமை

    • துதைந்து எழும் – கலக்கி எழும்

    • கன்னி வாளை – இளமையான வாளைமீன்

    • சூடு – நெல் அரிக்கட்டு

    • சுரிவளை – சங்கு

    • வேரி – தேன்

    • பகடு – எருமைக்கடா

    • பாண்டடில் – வட்டம்

    • சிமயம் – மலையுச்சி

    • நாளிகேரம் – தென்னை

    • நரந்தம் – நாரத்தை

    • கோளி – அரச மரம்

    • சாலம் – ஆச்சா மரம்

    • தமாலம் – பச்சிலை மரங்கள்

    • இரும்போந்து – பருத்த பனைமரம்

    • சந்து – சந்தன மரம்

    • நாகம் – நாக மரம்

    • காஞ்சி – ஆற்றுப்பூவரசு

    • யாக்கை – உடம்பு

    • புணரியோர் – தந்தவர்

    • புன்புலம் – புல்லிய நிலம்

    • தாட்கு – முயற்சி, ஆளுமை

    • தள்ளாதோர் இவண் தள்ளாதோரே – குறைவில்லாது நீர்நிலை அமைப்பவர்கள் குறைவில்லாது புகழுடையவர்களாக விளங்குவார்கள்.

    இலக்கணக்குறிப்பு:

    • வெந்து, வெம்பி, எய்தி – வினையெச்சங்கள்

    • மூடுபனி, ஆடிகிளை – வினைத்தொகைகள்

    • வெறுங்கனவு – பண்புத்தொகை

    • கருங்குவளை, செந்நெல் – பண்புத்தொகைகள்

    • விரிமலர் – வினைத்தொகை

    • தடவரை – உரிச்சொல் தொடர்

    • மூதூர், நல்லிசை, புன்புலம் – பண்புத்தொகைகள்

    • நிறுத்தல் – தொழிற்பெயர்

    • அமையா – ஈறுகெட்ட எதிமறைப் பெயரெச்சம்

    • நீரும் நிலமும், உடம்பும் உயிரும் – எண்ணும்மைகள்

    • அடுபோர் – வினைத்தொகை

    • கொடுத்தோர் – வினையாலணையும் பெயர்

    பகுபத உறுப்பிலக்கணம்:

    பாய்வன – பாய் + வ் + அன் + அ

    பாய் – பகுதி

    வ் – எதிர்கால இடைநிலை

    அன் – சாரியை

    அ – பலவின் பால் வினைமுற்று விகுதி

    துணை வினைகள்

  • வினைச்சொற்களை அமைப்பின் அடிப்படையில் 'தனிவினை', 'கூட்டுவினை' என இருவகைப்படுத்தலாம்.
  • தனிவினை:

  • 'படி', 'படியுங்கள்', 'படிக்கிறர்கள்'

  • இவற்றில்படி என்னும் வினையடியும் சில ஒட்டுகளும் உள்ளன. படி என்னும் வினையடி, பகாப்பதம் ஆகும். அதைமேலும் பொருள்தரக்கூடிய கூறுகளாகப் பிரிக்கமுடியாது. இவ்வாறு, தனிவினையடிகளை அல்லது தனிவினையடிகளைக் கொண்டவினைச் சொற்களைத் தனிவினை என்பர்.
  • கூட்டுவினை:

  • 'ஆசைப்பட்டேன்', 'கண்டுபிடித்தார்கள்', 'தந்தியடித்தேன்', 'முன்னேறினோம்'

  • ஆசைப்படு, கண்டுபிடி, தந்தியடி, முன்னேறு என்பன அவற்றின் வினையடிகள். அவை பகுபதங்கள் ஆகும். இவ்வாறு பகுபதமாக உள்ள வினையடிகளைக் கூட்டுவினையடிகள் என்பர். அவ்வகையில்கூட்டுவினையடிகளைக் கொண்டவினைச் சொற்களைக் கூட்டுவினை என்பர்.
  • முதல் வினையும் துணை வினையும்:

    நான் படம் பார்த்தேன்.

    கண்ணன் போவதைப் பார்த்தேன்.


    இந்தச் சொற்றொடர்களில், பார் என்னும் வினை, கண்களால் பார்த்தல் என்னும் பொருளைத் தருகிறது. இது பார் என்னும் வினையின் அடிப்படைப் பொருள் அல்லது சொற்பொருள் எனலாம்.

    ஓடப் பார்த்தேன்.

    எழுதிப் பார்த்தாள்.


  • இந்தச் சொற்றொடர்களில் ஓடப்பார், எழுதிப்பார் என்பன கூட்டுவினைகள் ஆகும்.

  • இவற்றில்இரண்டு உறுப்புகள் உள்ளன. ஓட,எழுதி என்பன முதல்உறுப்புகள்.

  • இவைஅந்தந்த வினைகளின் அடிப்படைப் பொருளைத் தருகின்றன.

  • பார் என்பது இரண்டாவது உறுப்பு. இது இவ்வினையின் அடிப்படைப் பொருளான பார்த்தல் என்னும் பொருளைத் தராமல் தனது முதல் உறுப்போடு சேர்ந்து வேறு பொருள் தருகிறது.

  • ஓடப் பார்த்தேன் – இதில்பார் என்பது முயன்றேன் என்னும் முயற்சிப் பொருளைத்தருகிறது.

  • எழுதிப் பார்த்தாள் – இதில்பார் என்பது சோதித்து அறிதல் என்னும் பொருளைத் தருகிறது.

  • ஒரு கூட்டுவினையின் முதல் உறுப்பாக வந்து தன் அடிப்படைப் பொருளைத் தரும் வினைமுதல்வினை(MAIN VERB) எனப்படும்.

  • ஒரு கூட்டுவினையின் இரண்டாவது உறுப்பாக வந்து தன் அடிப்படைப் பொருளை விட்டுவிட்டு முதல் வினைக்குத் துணையாக வேறு இலக்கணப் பொருளைத்தரும் வினை துணைவினை எனப்படும்.

  • கூட்டுவினையின் முதல் வினை செய அல்லது செய்து என்னும் வினையெச்ச வடிவில்இருக்கும்.

  • துணைவினை வினையடி வடிவில்இருக்கும். துணைவினையே திணை, பால், இடம், காலம் காட்டும் விகுதிகளைப் பெறும்.

  • தமிழில் ஏறத்தாழ 40 துணைவினைகள் உள்ளன. அவற்றுள் பெரும்பாலானவை முதல்வினையாகவும் செயல்படுகின்றன.

  • பார், இரு, வை, கொள், போ, வா, முடி, விடு, தள்ளு, போடு, கொடு, காட்டு முதலானவை இரு வகை வினைகளாகவும் செயல்படுகின்றன.
  • துணைவினைகளின் பண்புகள்:

  • துணைவினைகள் பேசுவோரின் மனநிலை, செயலின் தன்மை போன்றவற்றைப் புலப்படுத்துகின்றன. இவை முதல்வினையைச் சார்ந்து அதன் வினைப் பொருண்மைக்கு மெருகூட்டுகின்றன.பேச்சு மொழியிலேயே துணைவினைகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

  • வினையடி – இரு
    • முதல்வினை

    • புத்தகம் மேசையில் இருக்கிறது.

      எங்களிடம் பணம் இருக்கிறது.

    • துணைவினை

    • நான் மதுரைக்குப் போயிருக்கிறேன்

      அப்பா வந்திருக்கிறார்
    வினையடி – வை
    • முதல்வினை

    • அவள் நெற்றியில் பொட்டு வைத்தாள்

      அவன் வானொலியில் பாட்டு வைத்தான்

    • துணை வினை

    • நீ என்னை அழ வைக்காதே

      அவர் ஒருவரைப் பாட வைத்தார்
    வினையடி – வா
    • முதல் வினை

    • நீ நாளைக்கு வீட்டுக்கு வா

      எனக்கு இப்போதுதான் புத்தி வந்தது.

    • துணைவினை

    • அந்நியர் நம்மை ஆண்டு வந்தனர்

      வானம் இருண்டு வருகிறது.
    வினையடி – தள்ளு
    • முதல்வினை

    • அவன் என்னைக் கீழே தள்ளினான்

      காய்கறி வண்டியைத் தள்ளிச் சென்றார்.

    • துணைவினை

    • அவர் கதைகதையாக எழுதித்தள்ளுகிறார்

      அவன் அனைத்தையும் வாசித்துத் தள்ளுகிறான்
  • ஆங்கில மொழியில் துணைவினைகள் முதல் வினைகளுக்கு முன்பாக இடம்பெறும்.
    (எ.கா.)
    I will go to School இத்தொடரில் go முதல்வினை; will துணைவினை.

  • தமிழ் மற்றும் ஜப்பானிய மொழிகளில் அத்தகைய உறுப்புகள் முதல்வினைகளுக்குப் பின்பே இடம்பெறும்.
    (எ.கா)
    கீழே விழப் பார்த்தான். இத்தொடரில் விழு (விழ) என்பது முதல்வினை; பார்த்தான் என்பது துணைவினை.

  • தமிழின் துணைவினைக் கொள்கை ஆங்கிலத்தின் துணைவினைக் கொள்கையிலிருந்து வேறுபட்டது. அதாவது, தமிழில் துணைவினையாக வரும் வேர்ச்சொல் சில தொடர்களில் முதல் வினையாகவும் வரும்.
  • சேர்த்து எழுதுக:

  • பெயர்+வினை = வினை

  • தந்தி + அடி = தந்தியடி

  • ஆணை+ இடு = ஆணையிடு

  • கேள்வி + படு = கேள்விப்படு

  • வினை+வினை = வினை

  • கண்டு + பிடி = கண்டுபிடி

  • சுட்டி+ காட்டு = சுட்டிக்காட்டு

  • சொல்லி + கொடு = சொல்லிக்கொடு

  • இடை+வினை = வினை

  • முன் + ஏறு = முன்னேறு

  • பின் + பற்று = பின்பற்று

  • கீழ் + இறங்கு = கீழிறங்கு
  • சொல்லும் பொருளும்:

    • மிசை – மேலே

    • மல்லல் – வளம்

    • சமயக் கணக்கர் – சமயத் தத்துவவாதிகள்

    • பாடைமாக்கள் – பல மொழிபேசும் மக்கள்

    • குழீஇ – ஒன்று கூடி

    • தோம் – குற்றம்

    • கோட்டி – மன்றம்

    • பொலம் – பொன்

    • வேதிகை – திண்ணை

    • தூணம் – தூண்

    • தாமம் – மாலை

    • கதலிகைக் கொடி – சிறு சிறு கொடியாகப் பல கொடிகள் கட்டியது

    • காழூன்று கொடி – கொம்புகளில் கட்டும் கொடி

    • விலோதம் – துணியாலான கொடி

    • வசி – மழை

    • செற்றம் – சினம்

    • கலாம் – போர்

    • துருத்தி – ஆற்றிடைக்குறை (ஆற்றின் நடுவே இருக்கும் மணல் திட்டு)

    இலக்கணக்குறிப்பு:

  • தோரணவீதியும், தோமறு கோட்டியும் – எண்னும்மைகள்

  • காய்க்குலைக் கமுகு, பூக்கொடி வல்லி, முத்துத்தாமம் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகைகள்

  • மாற்றுமின், பரப்புமின் – ஏவல் வினைகள்

  • உறுபொருள் – உரிச்சொற்றொடர்

  • தாழ்பூந்துறை – வினைத்தொகை

  • பாங்கறிந்து – இரண்டாம் வேற்றுமைத் தொகை

  • நன்பொருள், தண்மணல், நல்லுரை – பண்புத்தொகைகள்
  • பகுபத உறுப்பிலக்கணம்:

  • பரப்புமின் – பரப்பு+மின்

  • பரப்பு – பகுதி

  • மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி
  • விகாரப் புணர்ச்சி மூன்று வகைப்படும்.

    1. தோன்றல்

    2. திரிதல்

    3. கெடுதல்
  • வல்லினம் மிகுந்து வருதல் தோன்றல் விகாரப் புணர்ச்சியின் பாற்படும்.

  • வல்லினம் மிகும் இடங்கள்

  • அ, இ என்னும் சுட்டெழுத்துகளுக்குப் பின்னும், அந்த, இந்த என்னும் சுட்டுப் பெயர்களின் பின்னும், எ என்னும் வினாவெழுத்தின் பின்னும், எந்த என்னும் வினாச்சொல்லின் பின்னும் வல்லினம் மிகும்.

  • (எ.கா)

    அச் சட்டை

    இந்தக் காலம்

    எத் திசை?

    எந்தப் பணம்?

  • ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகும்.

  • (எ.கா)

    கதவைத் திற

    தகவல்களைத் திரட்டு

    காட்சியைப் பார்

  • கு என்னும் நான்காம் வேற்றுமைஉருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகும்.

  • (எ.கா)

    முதியவருக்குக் கொடு

    மெட்டுக்குப் பாட்டு

    ஊருக்குச் செல்

  • என, ஆக போன்ற சொல்லுருபுகளின் பின் வல்லினம் மிகும்.

  • (எ.கா)

    எனக் கேட்டார்

    வருவதாகக் கூறு

  • அதற்கு, இதற்கு, எதற்கு என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும்.

  • (எ.கா)

    அதற்குச் சொன்னேன்

    இதற்குக் கொடு

    எதற்குக் கேட்கிறாய்?

  • இனி, தனி ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகும்.

  • (எ.கா)
    இனிக் காண்போம்

    தனிச்சிறப்பு:

  • மிக என்னும் சொல்லின்பின் வல்லினம் மிகும்.
  • (எ.கா)
    மிகப் பெரியவர்

  • எட்டு, பத்து என்னும் எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகும்.
  • (எ.கா)
    எட்டுத் தொகை, பத்துப் பாட்டு

  • ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும்.
  • (எ.கா)
    தீப் பிடித்தது, பூப் பந்தல்.

  • ஈறுகெட்டஎதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.
  • (எ.கா)
    கூவாக் குயில்
    ஓடாக் குதிரை

  • வன்தொடர்க் குற்றியலுகரங்கள் நிலைமொழியாக இருந்து புணர்கையில் வல்லினம் மிகும்.
  • (எ.கா)
    கேட்டுக் கொண்டான்
    விற்றுச் சென்றான்

  • (அகர, இகர ஈற்று) வினையெச்சங்களுடன் புணர்கையில் வல்லினம் மிகும்.
  • (எ.கா)
    ஆடச் சொன்னார்
    ஓடிப் போனார்

  • ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும்.
  • (எ.கா) புலித் தோல்

  • திசைப் பெயர்களின் பின் வல்லினம் மிகும்.
  • (எ.கா) கிழக்குப் பகுதி, வடக்குப் பக்கம்

  • இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும்.
  • (எ.கா) மல்லிகப்பூ, சித்திரைத் திங்கள்

  • உவமைத் தொகையில் வல்லினம் மிகும்.
  • (எ.கா) தாமரைப் பாதம்

  • சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களின்பின் வல்லினம் மிகும்.
  • (எ.கா) சாலப் பேசினார், சாலச் சிறந்தது.

  • தனிக் குற்றெழுத்தை அடுத்துவரும் ஆகார எழுத்தின் பின் வல்லினம் மிகும்.
  • (எ.கா) நிலாச் சோறு, கனாக் கண்டேன்

  • சில உருவகச் சொற்களில் வல்லினம் மிகும்.
  • (எ.கா) வாழ்க்கைப்படகு, உலகப்பந்து

  • ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்ற சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம் – தொகைச்சொற்கள்

  • வல்லினம் மிகா இடங்கள்

  • அது, இது என்னும் சுட்டுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.
  • (எ.கா) அது செய், இது காண்

  • இவ்வினாப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.
  • (எ.கா) எது கண்டாய்? எவை தவறுகள்?

  • எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது.
  • (எ.கா) குதிரை தாண்டியது, கிளி பேசியது

  • மூன்றாம், ஆறாம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகாது.
  • (எ.கா) அண்ணனோடு போ, எனது சட்டை

  • விளித் தொடர்களில் வல்லினம் மிகாது.
  • (எ.கா) தந்தையே பாருங்கள். மகளே தா

  • பெயரெச்சத்தில்வல்லினம் மிகாது.
  • (எ.கா) வந்த சிரிப்பு, பார்த்த பையன்

  • இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.
  • (எ.கா) நாடு கண்டான், கூடு கட்டு

  • படி என்று முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது.
  • (எ.கா) வரும்படி சொன்னார்,பெறும்படி கூறினார்

  • வியங்கோள் வினைமுற்றுத் தொடரில்வல்லினம் மிகாது.
  • (எ.கா) வாழ்க தமிழ், வருக தலைவா!

  • வினைத் தொகையில் வல்லினம் மிகாது.
  • (எ.கா) குடிதண்ணீர், வளர்பிறை,திருவளர்செல்வன்

  • எட்டு, பத்து தவிர பிறஎண்ணுப் பெயர்களுடன் புணரும் வல்லினம் மிகாது.
  • (எ.கா) ஒரு புத்தகம், மூன்று கோடி

  • உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது.
  • (எ.கா) இரவு பகல்

  • அன்று, இன்று, என்று, ஆவது, அடா, அடி,போன்ற என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகாது.

  • (எ.கா)
    அன்று சொன்னார்

    என்று தருவார்

    அவராவது தருவதாவது

    யாரடா சொல்

    ஏனடி செல்கிறாய்?

    கம்பரைப் போன்ற கவிஞர் யார்?

  • அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு, அத்தனை, இத்தனை, எத்தனை, அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு, அத்தகைய, இத்தகைய, எத்தகைய, அப்போதைய, இப்போதைய, எப்போதைய, அப்படிப்பட்ட, இப்படிப்பட்ட, எப்படிப்பட்ட, நேற்றைய, இன்றைய, நாளைய ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகாது.

    (எ.கா)

  • அவ்வளவு பெரியது

    அத்தனைசிறியது

    அவ்வாறு பேசினான்

    அத்தகைய பாடங்கள்

    அப்போதைய பேச்சு

    அப்படிப்பட்டகாட்சி

    நேற்றைய சண்டை

  • மூன்று, ஐந்து, ஆறாம் வேற்றுமைத் தொடர்களில் வல்லினம் மிகாது.
  • (எ.கா)
    என்னோடு சேர்.
    மரத்திலிருந்து பறி.
    குரங்கினது குட்டி.

  • இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், வேற்றுமைத் தொகைகளில் வல்லினம் மிகாது.
  • (எ.கா)
    தமிழ் படி. (ஐ)
    கைதட்டு. (ஆல்)
    வீடு சென்றாள். (கு)
    வரைபாய்ந்தான். (இருந்து)

  • நிலைமொழி உயர்திணையாய் அமையும் பெயர்த் தொகையில் வல்லினம் மிகாது.
  • (எ.கா)
    தலைவி கூற்று.
    தொண்டர் படை

  • சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களைத் தவிர ஏனைய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது.
  • (எ.கா)
    உறு பொருள்
    நனி தின்றான்
    கடி காவல்

  • அடுக்குத் தொடர், இரட்டைக் கிளவி ஆகியவற்றில் வல்லினம் மிகாது.
  • (எ.கா)
    பார் பார்
    சல சல

  • கள் என்னும் அஃறிணைப் பன்மைவிகுதி சேரும்போது வல்லினம் மிகாது.
  • (எ.கா)
    கருத்துகள்
    பொருள்கள்
    வாழ்த்துகள்

  • ஐகார வரிசைஉயிர்மெய் ஓரெழுத்துச் சொற்களாய் வர, அவற்றோடு கள் விகுதி சேரும்போது வல்லினம் மிகாது.
  • (எ.கா) பைகள், கைகள்

    சொல்லும் பொருளும்:

    • களர் நிலம் – உவர் நிலம்

    • நவிலல் – சொல்லல்

    • வையம் – உலகம்

    • மாக்கடல் – பெரிய கடல்

    • இயற்றுக – செய்க

    • மின்னாளை – மின்னலைப் போன்றவள்

    • மின்னாள் – ஒளிரமாட்டாள்

    • தணல் – நெருப்பு

    • தாழி – சமைக்கும் கலன்

    • அணித்து – அருகில்

    • தவிர்க்க ஒணா – தவிர்க்க இயலாத

    • யாண்டும் – எப்பொழுதும்

    • மூவாது – முதுமை அடையாமல்

    • நாறுவ – முளைப்ப

    • தாவா – கெடாதிருத்தல்

    இலக்கணக்குறிப்பு:

    • மாக்கடல் – உரிச்சொற்றொடர்

    • ஆக்கல் – தொழிற்பெயர்

    • பொன்னேபோல் – உவம உருபு

    • மலர்க்கை – உவமைத்தொகை

    • வில்வாள் – உம்மைத்தொகை

    • தவிர்க்க ஒணா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

    • அறிவார், வல்லார் – வினையாலணையும் பெயர்

    • விதையாமை, உரையாமை – எதிர்மறை தொழிற்பெயர்கள்

    • தாவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

    இடைச்சொல் – உரிச்சொல்:

  • இன், கு, உடைய, உம், ஐ, விட, கள், ஆனால், தான், போல, உடன் போன்றவை இடைச் சொற்கள் ஆகும்.

  • பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள் ஆகியவை போல் இடைச்சொற்கள் தமிழில் மிகுதியாக இல்லை. ஆயினும்,இடைச்சொற்களே மொழிப்பயன்பாட்டை உருவாக்குகின்றன.

  • இடைச் சொற்கள், பெயரையும், வினையையும் சார்ந்து இயங்கும் இயல்பைஉடையன; தாமாகத் தனித்து இயங்கும் இயல்பை உடையன அல்ல என்கிறார் தொல்காப்பியர்.
  • இடைச் சொற்களின் வகைகள்:

  • வேற்றுமை உருபுகள் – ஐ, ஆல், கு, இன், அது, கண்

  • பன்மை விகுதிகள் – கள், மார்

  • திணை, பால் விகுதிகள் – ஏன், ஓம், ஆய், ஈர்(கள்), ஆன், ஆள், ஆர், ஆர்கள், அது, அ

  • கால இடைநிலைகள் – கிறு, கின்று

  • பெயரெச்ச, வினையெச்ச விகுதிகள் – அ, உ, இ, மல்,…

  • எதிர்மறை இடைநிலைகள் – ஆ, அல், இல்

  • தொழிற்பெயர் விகுதிகள் – தல், அம், மை

  • வியங்கோள் விகுதிகள் – க, இய

  • சாரியைகள் – அத்து, அற்று, அம்,….

  • உவம உருபுகள் – போல, விட, காட்டிலும், மாதிரி

  • இனைப்பிடைச் சொற்கள் – உம், அல்லது, இல்லையென்றால், ஆனால், ஓ, ஆகவே, ஆயினும், எனினும்,……….

  • தத்தம் பொருள் உணர்த்தும் இடைச்சொற்கள் – உம், ஓ, ஏ, தான், மட்டும், ஆவது,கூட, ஆ, ஆம்

  • சொல்லுருபுகள் – மூலம், கொண்டு, இருந்து, பற்றி, வரை

  • வினா உருபுகள் – ஆ, ஓ

  • இவற்றுள் உம், ஓ, ஏ, தான், மட்டும், ஆவது, கூட, ஆ, ஆம் ஆகிய இடைச்சொற்கள் தற்காலத் தமிழில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

  • உம்:
  • உம் என்னும் இடைச்சொல் எதிர்மறை, சிறப்பு, ஐயம், எச்சம், முற்று, அளவை, தெரிநிலை, ஆக்கம் என்னும் பொருள்களில் வரும்.

  • மழைபெய்தும் புழுக்கம் குறையவில்லை. (எதிர்மறை உம்மை)

  • பாடகர்களும் போற்றும் பாடகர். (உயர்வு சிறப்பு)

  • ஓ:
  • ஓகார இடைச்சொல் ஒழியிசை, வினா, சிறப்பு (உயர்வு, இழிவு), எதிர்மறை, தெரிநிலை, கழிவு, பிரிநிலை, அசைநிலை ஆகிய எட்டுப் பொருளில் வரும் என்று நன்னூல் கூறுகிறது.

  • தற்காலத்தில் ஓகார இடைச்சொல்பிரிநிலைப் பொருளில்அதிகமாக வருகின்றது. அதைத் தவிர ஐயம், உறுதியாகக் கூறமுடியாமை, மிகை, இது அல்லது அது, இதுவும் இல்லை- அதுவும் இல்லை போன்ற பொருள்களிலும் வருகின்றன.

  • இன்றைக்கு மழைபெய்யுமோ? (ஐயம்)

  • பூங்கொடியோ மலர்க்கொடியோ பேசுங்கள். (இது அல்லது அது)

  • பாலுவோ கண்ணனோ பேசாதீர்கள். (இதுவும் இல்லை- அதுவும் இல்லை)

  • ஏ:
  • ஏகார இடைச்சொல் பிரிநிலை, வினா, எண், ஈற்றசை, தேற்றம், இசைநிறை ஆகிய ஆறு பொருள்களில் வரும் என்று நன்னூல் குறிப்பிடுகின்றது.

  • தற்காலத்தில் ஏகாரம் தேற்றப் பொருளில்(அழுத்தம்) மட்டுமே வருகிறது.

  • அண்ணல் காந்தி அன்றே சொன்னார்.

  • நடந்தே வந்தான்.

  • தான்:
  • தான் என்னும் இடைச்சொல்லும் அழுத்தப் பொருளில்தான் வருகின்றது. சொற்றொடரில் எந்தச் சொல்லுடன் வருகிறதோ, அதனை முதன்மைப்படுத்துகின்றது. ஒர சொற்றொடரில் ஒருமுறை மட்டுமேவருகிறது.

  • நிர்மலாதான் நேற்று விழாவில் பாடினாள்.

  • நிர்மலா நேற்றுதான் விழாவில் பாடினாள்.

  • நிர்மலா நேற்று விழாவில்தான் பாடினாள்.

  • நிர்மலா நேற்று விழாவில் பாடினாள் தான்.

  • வேறுபாட்டை உணருங்கள்:

  • நிர்மலாதான் பாடினாள். (தான் – இடைச்சொல்)

  • நிர்மலாதானும் பாடினாள். (தான் – தற்சுட்டுப் படர்க்கை ஒருமை இடப்பெயர் – பெயர்ச்சொல்)
  • மட்டும்:

  • இச்சொல் வரையறைப் பொருள் தருகிறது. முடிந்தவரை, குறிப்பிட்ட நேரம் வரை என்னும் பொருள்களிலும் வருகிறது.

  • படிப்பு மட்டும் இருந்தால் போதும். (வரையறைப் பொருள்)

    ஆவது:

  • இது பல பொருள்களில் வரும் இடைச்சொல்லாகும்.

  • (எ.கா) ஐந்து பேராவது வாருங்கள் (குறைந்த அளவு)

  • அவனாவது, இவனாவது செய்து முடிக்க வேண்டும் (இது அல்லது அது)

  • முதலாவது, இரண்டாவது ……….(வரிசைப்படுத்துதல்)
  • கூட:

  • என்னிடம் ஒரு காசு கூட இல்லை (குறைந்தபட்சம்)

  • தெருவில் ஒருவர் கூட நடமாடவில்லை ( முற்றுப் பொருள்)

  • அவனுக்கு வரையக்கூடத் தெரியும் (எச்சம் தழுவிய கூற்று)
  • ஆ:

  • இது வினாப் பொருளில் வரும் இடைச்சொல்லாகும்

  • ஆ என்னும் இடைச்சொல் சொற்றொடரில் எந்தச் சொல்லுடன் இணைந்து வருகிறதோ. அச்சொல் வினாவாகிறது.
  • ஆம்:

  • சொற்றொடரின் இறுதியில் வந்து இசைவு, சாத்தியம்,பொருத்தம், ஆகிய பொருள்களிலும், தகவலாகவும், வதந்தியாகவும் செய்தியைக் கூறுவதற்கு பயன்படுகிறது.

  • உள்ளே வரலாம் (இசைவு)

  • இனியன் தலைநகர் போகிறானாம் (தகவல்/செய்தி)

  • பறக்கும் தட்டு நேற்றுப் பறந்ததாம்.

  • 'அன்று' என்பது ஒருமைக்கும், 'அல்ல' என்பது பன்மைக்கும் உரியன.

  • (எ.கா) இது பழம் அன்று.

    இவை பழங்கள் அல்ல.

    'எத்தனை' என்பது எண்ணிக்கயைக் குறிக்கும்

    'எத்துணை' என்பது அளவையும் காலத்தையும் குறிக்கும்.

    (எ.கா) எத்தனை நூல்கள் வேண்டும்?

    எத்துணை பெரிய மரம், எத்துணை ஆண்டு பழமையானது.

  • உரிச்சொற்கள் பெயர்களையும் வினைகளையும் சார்ந்து வந்து பொருள் உணர்த்துகின்றன.

  • உரிச்சொல் இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருள்களுக்கு உரியதாய் வரும்.

  • உரிச்சொற்கள் ஒவ்வொன்றும் தனித்த பொருள் உடையவை.

  • உரிச்சொற்கள் ஒவ்வொன்றும் தனித்த பொருள் உடையவை. ஆனால் இவை தனித்து வழங்கப்படுவதில்லை.

  • உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று நான்னூலார் கூறுகிறார்.
  • உரிச்சொற்கள்:

    • ஒரு சொல் பல பொருளுக்கு உரியது:

    • கடி மலர் – மணம் மிக்க மலர்

    • கடி நகர் – காவல் மிக்க நகர்

    • கடி விடுதும் – விரைவாக விடுவோம்

    • கடி நுனி – கூர்மையான நுனி

    பல சொல் ஒரு பொருள்:

  • உறு, தவ, நனி, என்ற மூன்று உரிச்சொற்களும் மிகுதி என்னும் பொருளில் வருகின்றன.

  • உறு பசி; தவச் சிறிது; நனி நன்று

  • உரிச்சொற்கள், பெயரையும் வினையையும் சார்ந்து அவற்றிற்கு முன்னால் வந்து பொருள் உணர்த்துகின்றன. மேலும் அவை

  • 1) ஒரு சொல் பல பொருள்களுக்கு உரியதாய் வருவதும் உண்டு

    2) பலசொல் ஒரு பொருளுக்கு உரியதாய் வருவதும் உண்டு

  • உவப்பு என்பதன் பொருள் – உவகை

  • பசப்பு என்பதன் பொருள் – நிறம் மங்குதல்

  • பயப்பு என்பதன் பொருள் – பயன்
  • பகுபத உறுப்பிலக்கணம்:

  • பதம் என்றால் சொல் என்று பொருள்படும். இது இரண்டு வகைப்படும். அவை பகுபதம், பகாப்பதம் ஆகும்.

  • பிரிக்கக் கூடியதும் பிரித்தால் பொருள் தருவதுமான சொல் பகுபதம் எனப்படும். இது பெயர்ப் பகுபதம், வினைப் பகுபதம் என இருவகைப்படும்.
  • பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும்.

    1. பகுதி (முதனிலை)

    2. விகுதி இறுதி நிலை)

    3. இடைநிலை

    4. சந்தி

    5. சாரியை

    6. விகாரம்

    பகுதி (முதனிலை):

  • சொல்லின் முதலில் நிற்கும்; பகாப்பதமாக அமையும்; வினைச் சொல்லில் ஏவலாகவும், பெயர்ச் சொல்லில் அறுவகைப் பெயராகவும் அமையும்.

  • (எ.கா)

  • ஊரான் – ஊர்

  • நடிகன் – நடி

  • வரைந்தான் – வரை

  • மடித்தார் – மடி

  • மகிழ்ந்தான் – மகிழ்
  • விகுதி (இறுதிநிலை):

  • சொல்லின் இறுதியில் நின்று திணை, பால், எண், இடம் காட்டும்.

  • ஆண்பால் வினைமுற்று விகுதி – அன், ஆன்

  • பெண்பால் வினைமுற்று விகுதி – அள், ஆள்

  • பலர்பால் வினைமுற்று விகுதி – அர், ஆர்

  • ஒன்றன்பால் வினைமுற்று விகுதி – து,று

  • பலவின்பால் வினைமுற்று விகுதி – அ, ஆ

  • தன்மை ஒருமை வினைமுற்று விகுதி – என், ஏன்

  • தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி – அம், ஆம், எம், ஏம், ஓம்

  • முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி – ஐ,அய்,இ

  • முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி – இர், ஈர்

  • பெயரெச்ச விகுதிகள் – அ, உம்

  • வினையெச்ச விகுதிகள் – உ, இ

  • வியங்கோள் வினைமுற்று விகுதி – க, இய, இயர்

  • தொழிற்பெயர் விகுதி – தல், அல், ஐ, கை, சி, பு,…
  • இடைநிலை:

  • பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலம் காட்டும்.

  • இறந்த கால இடைநிலை – த், ட், ற், இன்

  • நிகழ்கால இடைநிலை – கிறு, கின்று, ஆநின்று

  • எதிர்கால இடைநிலைகள் – ப், வ், க்

  • எதிர்மறை இடைநிலைகள் – இல், அல், ஆ

  • பெயர் இடைநிலைகள் – ஞ், ந், வ், ச், த்
  • சந்தி:

  • பகுதியையும் பிற உறுப்புகளையும் இணைக்கும்; பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும்.

  • சந்தி – த், ப், க்

  • உடம்படுமெய் சந்தி – ய், வ்
  • சாரியை:

  • பகுதி, விகுதி, இடைநிலைகளைச் சார்ந்து வரும்; பெரும்பாலும்

  • இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில்வரும்.

  • சாரியை – அன், ஆன், இன், அல்,அற்று, இற்று, அத்து,அம், தம், நம், நும், ஏ, அ, உ, ஐ, கு, ன்
  • விகாரம்:

  • தனி உறுப்பு அன்று; பகுபத உறுப்புகளில் ஏற்படும் மாற்றமே விகாரம் ஆகும்.
  • எழுத்துப்பேறு:

  • பகுபத உறுப்புகளுள் அடங்காமல் பகுதி, விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து எழுத்துப்பேறு ஆகும். பெரும்பாலும் ‘த்’ மட்டுமேவரும். சாரியைஇடத்தில்‘த்’ வந்தால்அது எழுத்துப்பேறு.

  • (எ.கா)

  • வந்தனன்: வா(வ) + த் (ந்) +த் + அன் + அன்

  • வா- பகுதி ('வ' ஆனது விகாரம்)

  • த்(ந்) – சந்தி ('ந்' ஆனது விகாரம்)

  • த்- இறந்தகாலஇடைநிலை

  • அன் – சாரியை

  • அன் – ஆண்பால்வினைமுற்று விகுதி

  • செய்யாதே: செய் + ய் + ஆ + த்+ ஏ

  • செய் – பகுதி

  • ய் – சந்தி

  • ஆ – எதிர்மறைஇடைநிலை

  • த்- எழுத்துப்பேறு

  • ஏ – முன்னிலை ஒருமைவினைமுற்று விகுதி

  • இலக்கணக்குறிப்பு:

    • செங்கோல். பேரழகு – பண்புத்தொகைகள்

    • எழுந்த – பெயரெச்சம்

    • பாடாத – எதிர்மறைப் பெயரெச்சம்

    • பாடு – ஏவல் வினைமுற்று.

    • ஓங்கிய – பெயரெச்சம்

    • நிலைஇய – சொல்லிசை அளபடை

    • குழா அத்து – செய்யுளிசை அளபடை

    • வாயில் – இலக்கணப் போலி

    • மா கால் – உரிச்சொல் தொடர்

    • முழங்கிசை, இமிழிசை – வினைத்தொகைகள்

    • நெடுநிலை, முந்நீர் – வினைத்தொகைகள்

    • மகிழ்ந்தோர் – வினையாலணையும் பெயர்

    சொல்லும் பொருளும்:

    • புரிசை – மதில்

    • அணங்கு – தெய்வம்

    • சில்காற்று – தென்றல்

    • புழை – சாளரம்

    • மாகால் – பெருங்காற்று

    • முந்நீர் – கடல்

    • பணை – முரசு

    • கயம் – நீர்நிலை

    • ஓவு – ஓவியம்

    • நியமம் – அங்காடி

    ஆகுபெயர்

    • ஒன்றின் இயற்பெயர், அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்குத் தொன்று தொட்டு ஆகி வருவது 'ஆகுபெயர்' ஆகும்.

    • 'தொல்காப்பியர்' ஆகுபெயர்கள் 'ஏழு' என்று கூறியுள்ளார்

    • 'நான்னூல்' இயற்றிய ' பவனந்தி முனிவர்' ஆகுபெயர்கள் 'பதினைந்து' என்று கூறியுள்ளார்.

    பொருளாகு பெயர்:

  • (எ.கா) முல்லையைத் தொடுத்தாள்

  • முதற்பொருளாகிய முல்லைக்கொடி, அதன் சினை(உறுப்பு)யாகிய பூவுக்கு ஆகி வந்தது.
  • இடவாகு பெயர்:

  • (எ.கா) வகுப்பறை சிரித்தது.

  • வகுப்பறை என்னும் இட்ப்பெயர் அங்குள்ள மாணவர்களுக்கு ஆகி வந்தது.
  • காலவாகுபெயர்:

  • (எ.கா) கார் அறுத்தான்

  • கார் அன்னும் காலப்பெயர் அக்காலத்தில் விளையும் பயிருக்கு ஆகி வருவது 'காலவாகு பெயர்' எனப்படும்.
  • சினையாகு பெயர்:

  • (எ.கா) மருக்கொழுந்து நட்டான்

  • மருக்கொழுந்து என்னும் சினைப் (உறுப்பு) பெயர், அதன் செடிக்கு ஆகிவந்தது.
  • பண்பாகு பெயர்:

  • (எ.கா) மஞ்சள் பூசினாள்

  • மஞ்சள் என்னும் பண்பு, அவ்வண்ணத்தில் உள்ள கிழங்குக்கு ஆகி வந்தது.
  • தொழிலாகு பெயர்:

  • (எ.கா) வற்றல் தின்றான்

  • வற்றல் என்னும் தொழிற்பெயர் வற்றிய உணவுப் பொருளுக்கு ஆகி வந்தது.
  • கருவியாகு பெயர்:

  • (எ.கா) வானொலி கேட்டு மகிழ்ந்தனர்.

  • வானொலி என்னும் கருவி, அதன் காரியமாகிய நிகழ்ச்சிகளுக்கு ஆகி வந்தது.
  • காரியவாகு பெயர்:

  • (எ.கா) பைங்கூழ் வளர்ந்தது.

  • கூழ் என்னும் காரியம் அதன் கருவியாகிய பயிருக்கு ஆகி வந்தது.
  • கருத்தாவாகு பெயர்:

  • (எ.கா) அறிஞர் அண்ணாவைப் படித்திருக்கிறேன்

  • அறிஞர் அண்ணா என்னும் கருத்தாவின் பெயர், அவர் இயற்றிய நூல்களுக்கு ஆகி வந்தது.
  • எண்ணலளவை ஆகுபெயர்:

  • (எ.கா) ஒன்று பெற்றால் ஒளிமயம்

  • ஒன்று என்னும் எண்ணுப் பெயர், அவ்வெண்ணுக்குத் தொடர்புடைய குழந்தைக்கு ஆகி வந்தது.
  • எடுத்தலளவை ஆகுபெயர்:

  • (எ.கா) இரண்டு கிலோ கொடு

  • நிறுத்தி அளக்க்கும் எடுத்தல் என்னும் அளவை பெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.
  • முகத்தலளவை ஆகுபெயர்:

  • (எ.கா) அரை லிட்டர் வாங்கு

  • முகந்து அளக்கும் முகத்தல் அளவை பெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.
  • நீட்டலளவை ஆகுபெயர்:

  • (எ.கா) ஐந்து மீட்டர் வெட்டினான்.

  • நீட்டி அளக்கும் நீட்டலளவைப் பெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.

  • சொல்லும் பொருளும்:

    • மைவனம் – மலைநெல்

    • முருகியம் – குறிஞ்சிப்பறை

    • பூஞ்சினை – பூக்களை உடைய கிளை

    • சிறை – இறகு

    • சாந்தம் – சந்தனம்

    • பூவை – நாகணவாய்ப் பறவை

    • பொலம் – அழகு

    • கடறு – காடு

    • முக்குழல் – கொன்றை, ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆன குழல்கள்

    • பொலி – தானியக்குவியல்

    • உழை – பெண் மான்

    • வாய்வெரீஇ – சோர்வால் வாய் குழறுதல்

    • குருளை – குட்டி

    • இனைந்து – துன்புறுதல்

    • உயங்குதல் – வருந்துதல்

    • படிக்கு உற – நிலத்தில் விழ

    • கோடு – கொம்பு

    • கல் – மழை

    • முருகு – தேன், மணம், அழகு

    • மல்ல்ல் – வளம்

    • செறு – வயல்

    • கரிக்குருத்து – யானைத்தந்தம்

    • போர் – வைக்கோற்போர்

    • புரை தப – குற்றமின்றி

    • தும்பி – ஒரு வகை வண்டு

    • துவரை – பவளம்

    • மரை – தாமரை மலர்

    • விசும்பு – வானம்

    • மதியம் – நிலவு

    • தீபம் – விளக்கு

    • சதிர் – நடனம்

    • தாமம் – மாலை

    இலக்கணக்குறிப்பு:

    • இடிகுரல் – உவமைத் தொகை

    • இன்னுயிர் – பண்புத்தொகை

    • பிடிபிசி – வேற்றுமைத்தொகை

    • பைங்கிளி – பண்புத்தொகை

    • பூவையும் குயில்களும், முதிரையும் சாமையும், வரகும் – எண்ணும்மைகள்

    • பெருங்கடல், முதுவெயில், இன்னிளங்குருளை – பண்புத்தொகைகள்

    • அதிர்குரல் – வினைத்தொகை

    • மன்னிய – பெயரெச்சம்

    • வெரீஇ – சொல்லிசை அளபடை

    • கடிகமழ் – உரிச்சொல் தொடர்

    • மலர்க்கண்ணி – மூன்றாம் வேற்றுமை உருபு பயனும் உடந்தொக்க தொகை

    • எருத்துக்கோடு – ஆறாம் வேற்றுமைத்தொகை

    • கரைபொரு – இரண்டாம் வேற்றுமைத்தொகை

    • மரைமுகம் – உவமைத் தொகை

    • கருமுகில் – பண்புத்தொகை

    • வருமலை – வினைத்தொகை

    • கொட்ட – வினையெச்சம்

    • முத்துடைத்தாமம் – இரண்டாம் வேற்றுமைத் தொகை
    கோர்வை/கோவை – கோ என்பது வேர்ச்சொல். கோப்பு, கோவை, கோத்தல், கோத்தான், கோத்தாள் என்பதே சரி.
    (எ.கா) ஆசாரக்கோவை, ஊசியில் நூலைக் கோத்தான்.

    புணர்ச்சி

  • தமிழில் இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட சொற்கள் சேர்வது 'புணர்ச்சி' எனப்படும். முதலில் நிற்கும் நிலைமொழியோடு, அதைத் தொடர்ந்து வரும் வருமொழி இணைவதைப் 'புணர்ச்சி' எனப்படும்.

  • புணர்ச்சியில் நிலைமொழியின் இறுதி எழுத்தைப் பொருத்து 'உயிரீறு', 'மெய்யீறு' எனவும் வருமொழியின் முதல் எழுத்தைப் பொருத்து 'உயிர்முதல்' 'மெய்ம்முதல்' எனவும் பிரிக்கலாம்.

  • எழுத்து வகையால் சொற்கள் நான்கு வகைப்படும்
    1. உயிரீறு

    2. மெய்யீறு

    3. உயிர் முதல்

    4. மெய்ம்முதல்
    எடுத்துக்காட்டுகள்:

  • உயிரீறு – கலை + அழகு

  • மெய்யீறு – மண் + குடம்

  • உயிர்முதல் – வாழை + இலை

  • மெய்ம்முதல் – வாழை + மரம்

  • மேலும் இப்புணர்ச்சியை நிலமொழி இறுதி எழுத்து, வருமொழி முதல் எழுத்து அடிப்படையில் நான்காகப் பிரிக்கலாம்.
    1. உயிர்முன் உயிர் – மணி (ண்+ இ) +அடி = மணியடி

    2. உயிர்முன் மெய் – பனி + காற்று = பனிக்காற்று

    3. மெய்ம்முன் உயிர் – ஆல் + இலை = ஆலிலை

    4. மெய்ம்முன் மெய் – மரம் + (க்+இ) கிளை = மரக்கிளை

    இயல்புப் புணர்ச்சியும் விகாரப் புணர்ச்சியும்:

    இயல்புப் புணர்ச்சி:

    புணர்ச்சியின் போது மாற்றங்கள் எதுவுமின்றி இயல்பாகப் புணர்வது 'இயல்புப் புணர்ச்சி' எனப்படும்.

    (எ.கா)

  • வாழை + மரம் – வாழை மரம்

  • செடி + கொடி – செடிகொடி

  • மண் + மலை – மண்மலை

  • பொன் + வளை – பொன்வளை
  • விகாரப் புணர்ச்சி:

    புணர்ச்சியின் போது ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் அது விகாரப் புணர்ச்சி எனப்படும். இது மூன்று வகைப்படும்.
    1. தோன்றல் விகாரம்

    2. திரிதல் விகாரம்

    3. கெடுதல் விகாரம்
    எடுத்துக்காட்டுகள்:

  • நுழைவு + தேர்வு – நுழைவுத்தேர்வு (தோன்றல் விகாரம்)

  • பூ + கூடை – பூக்கூடை (தோன்றல் விகாரம்)

  • கல்லூரி + சாலை – கல்லூரிச்சாலை (தோன்றல் விகாரம்)

  • பல் + பசை – பற்பசை (திரிதல் விகாரம்)

  • கல் + சிலை – கற்சிலை (திரிதல் விகாரம்)

  • புறம் + நானூறு – புறநானூறு (கெடுதல் விகாரம்)

  • கபிலர் + பரணர் – கபிலபரணர் (கெடுதல் விகாரம்)
  • உயிரீற்றுப் புணர்ச்சி:

    உடம்படுமெய்:

  • உயிரை ஈறாக உடைய சொற்களின் முன் உயிரை முதலாக உடைய சொற்கள் வந்து சேரும்; அப்போது சொற்கள் சேராமல் தனித்து நிற்கும்; ஒன்று சேராத உயிரொலிகளை ஒன்று சேர்ப்பதற்கு அங்கு ஒரு மெய் தோன்றும். இதனை உடம்படுமெய் என்று சொல்வர்.

  • நிலை மொழியின் ஈற்றில்'‘இ, ஈ, ஐ' என்னும் உயிரெழுத்துகளை ஈறாக உடைய சொற்கள் நிற்கும். அவற்றின் முன், பன்னிரண்டு உயிர்களையும் முதலாவதாக உடைய சொற்கள் சேரும். அந்நிலையில் யகரம் உடம்படுமெய்யாக வரும்.

  • மணி + அழகு = மணி + ய் + அழகு = மணியழகு

  • தீ + எரி = தீ + ய் + எரி = தீயெரி

  • ஓடை + ஓரம் = ஓடை + ய் + ஓரம் = ஓடையோரம்

  • 'இ, ஈ, ஐ' தவிர, பிற உயிரெழுத்துகள் நிலை மொழி ஈறாக வரும் போது அவற்றின் முன் வருமொழியில் பன்னிரண்டு உயிர்களும் வந்து புணர்கையில் வகர மெய் தோன்றும்.

  • பல+ உயிர் = பல+ வ்+ உயிர் = பலவுயிர்

  • பா+ இனம் = பா+ வ்+ இனம் = பாவினம்

  • நிலைமொழி ஈறாக ஏகாரம் வந்து, வருமொழியில் பன்னிரண்டு உயிரெழுத்துகளையும் உடைய சொற்கள் வந்து

  • புணர்கையில் யகரமோ வகரமோ தோன்றும்.

  • சே+ அடி = சே+ ய் + அடி = சேயடி;

  • சே+ வ்+ அடி = சேவடி

  • தே+ ஆரம் = தே+ வ்+ ஆரம் = தேவாரம்

  • இவனே+ அவன் = இவனே+ய் + அவன் = இவனேயவன்

  • 'இ ஈ ஐ வழி யவ்வும் ஏனை

  • உயிர்வழி வவ்வும் ஏ முன் இவ்விருமையும்

  • உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும்' என்று கூறும் நூல் – நன்னூல்
  • குற்றியலுகரப் புணர்ச்சி:

  • வட்டு + ஆடினான் = வட்(ட்+உ) + ஆடினான் = வட்ட் + ஆடினான் = வட்டாடினான்

  • நிலை மொழியாக வரும் குற்றியலுகரத்தின் முன் உயிரெழுத்துகள் வந்தால், நிலை மொழியிலுள்ள உகரம் கெடும். வருமொழியிலுள்ள உயிரெழுத்து நின்ற மெய்யுடன் இணையும்.

  • குற்றியலுகரத்தைப் போலவே சில முற்றியலுகரத்துக்கும் இவ்விரு விதிகளும் பொருந்தும்.

  • உறவு + அழகு = உற(வ்+உ) = உறவ்+ அழகு = உறவழகு

  • உடம்படுமெய் புணர்ச்சிக்கு சில எடுத்துக்காட்டுகள்:
    • மணி + அடி = மணியடி

    • குரு + அருள் = குருவருள்

    • தே + இலை = தேயிலை

    • தே + ஆரம் = தேவாரம்
    குற்றியலுகரப் புணர்ச்சிக்கு சில எடுத்துக்காட்டுகள்:
    • எனது + உயிர் = எனதுயிர்

    • நாடு + யாது = நாடியாது

    • நிலவு + ஒளி = நிலவொளி

    குற்றியலுகரம் பற்றியக் குறிப்புகள்

  • தனிக்குறில் அல்லாது, சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்கள் ஏறிய உகரம் ( கு, சு, டு, து, பு, று ) தன் ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும்.

  • இவ்வாறு குறைந்து ஒலிக்கும் உகரம் ' குற்றியலுகரம்' ஆகும். சொல்லின் இறுதியில் நிற்கும் உகரத்தின் முந்தைய எழுத்தைப் பொறுத்துக் குற்றியலுகரம் ஆறு வகைப்படும்.

  • 1. வன்தொடர்க் குற்றியலுகரம் (எ.கா) நாக்கு, வகுப்பு

    2. மென்தொடர்க் குற்றியலுகரம் (எ.கா) நெஞ்சு, இரும்பு

    3. இடைத்தொடர்க் குற்றியலுகரம் (எ.கா) மார்பு, அமிழ்து

    4. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் (எ.கா) முதுகு, வரலாறு

    5. ஆய்த்த்தொடர்க் குற்றியலுகரம் (எ.கா) எஃகு, அஃது

    6. நெடில் தொடர்க் குற்றியலுகரம் (எ.கா) காது, பேசு

    மெய் மயக்கம்:

  • புணர்ச்சியில் இரு சொற்கள் இணையும் போது வருமொழியில் க, ச, த, ப வந்தால் சில இடங்களில் மீண்டும் அதே எழுத்துத் தோன்றும். இதை 'வலி மிகுதல்' என்பர். இது போன்றே சில இடங்களில் மெல்லினமும் மிகுதல் உண்டு. குறிப்பாக, ங, ஞ, ந, ம என்ற நான்கு எழுத்துகளும் கீழ்க்கண்டவாறு மிகும்.

  • 'ய'கர ஈற்றுச்ச் சொற்கள் முன் வல்லினம் மிகும்.

    (எ.கா)
  • மெய் + மயக்கம் = மெய்ம்மயக்கம்

  • மெய் + ஞானம் + மெய்ஞ்ஞானம்

  • செய் + நன்றி = செய்ந்நன்றி

  • வேற்றுநிலை மெய்ம்மயக்கத்தில் ய, ர, ழ முன்னர் வல்லினம் மிகும்.

    (எ.கா)
  • வேய் + குழல் = வேய்ங்குழல்

  • கூர் + சிறை = கூர்ஞ்சிறை

  • பாழ் + கிணறு = பாழ்ங்கிணறு

  • 'புளி' என்னும் சுவைப்பெயர் முன்னர் வல்லெழுத்து மட்டுமின்றி மெல்லினமும் மிகும்.

    (எ.கா)
  • புளி + கறி = புளிங்கறி

  • புளி + சோறு = புளிஞ்சோறு

  • உயிரழுத்தை இறுதியில் கொண்ட மரப் பெயர்களுக்கு முன்னர் மெல்லினம் மிகும்.

  • (எ.கா)

  • மா + பழம் = மாம்பழம்

  • விள + காய் = விளங்காய்

  • 'பூ' என்னும் பெயர் முன்னர் வல்லினத்தோடு மெல்லினமும் மிகும்.

  • (எ.கா)

  • பூ + கொடி = பூங்கொடி

  • பூ + சோலை = பூஞ்சோலை

  • பூ + தொட்டி = பூந்தொட்டி

  • சொல்லும் பொருளும்:

    • தெங்கு – தேங்காய்

    • இசை – புகழ்

    • வருக்கை – பலாப்பழம்

    • நெற்றி – உச்சி

    • மால்வரை – பெரியமலை

    • மடுத்து – பாய்ந்து

    • கொழுநிதி – திரண்ட நிதி

    • மருப்பு – கொம்பு (அ) தந்தம்

    • வெறி – மணம்

    • கழனி – வயல்

    • செறி – சிறந்த

    • இரிய – ஓட

    • அடிசில் – சோறு

    • மடிவு – சோம்பல்

    • கொடியன்னார் – மகளிர்

    • நற்றவம் – பெருந்தவம்

    • வட்டம் – எல்லை

    • வெற்றம் – வெற்றி

    இலக்கணக்குறிப்பு:

    • தேமாங்கனி, செந்நெல், தண்கடல், நற்றவம் – பண்புத்தொகைகள்

    • விளைக – வியங்கோள் வினைமுற்று

    • செய்கோலம் – வினைத்தொகை

    • தேர்ந்த – பெயரெச்சம்

    • இறைஞ்சி – வினையெச்சம்

    • அஞ்சி – பெயரெச்சம்

    • வெண்குடை, இளங்கமுகு – பண்புத்தொகைகள்

    • கொல்யானை, குவிபொட்டு – வினைத்தொகைகள்

    பொருளிலக்கணம்

  • எழுத்தும், சொல்லும் மொழியின் அமைப்பையும், பயன்பாட்டையும் கூறுகின்றன.

  • 'பொருளிலக்கணம்' தமிழர் வாழ்க்கையிலிருந்து பிறந்த இலக்கியத்தின் கொள்கைகள் பற்றிக் கூறுகின்றது.

  • பொருளிலக்கணம் இரு வகைப்படும்.

    1.அகப்பொருள்

    2. புறப்பொருள்

  • தலைவனுக்கும் தலைவிக்கும் இடையில் உள்ள அன்பையும், வாழ்க்கை நிகழ்வுகளையும் கூறுவதே அகப்பொருள்.

  • அகம் சாராத அறம், பொருள், வீடு, கல்வி, வீரம், கொடை, புகழ் முதலியவற்றைப் பற்றிக் கூறுவது 'புறப்பொருள்'.

  • அகப்பொருள் ஒழுக்கத்தைப் பற்றிக் கூறும் இலக்கணம் 'அகத்திணை' எனவும், புறப்பொருள் ஒழுக்கத்தைப் பற்றிக் கூறும் இலக்கணம் 'புறத்திணை' எனவும் அழைக்கப்படுகின்றன.

  • ஐவகை நிலங்களில் வாழும் மக்களின் அன்பு ஒழுக்கத்தை முதல், கரு, உரி என்னும் முப்பொருள்களின் வழி அகப்பொருள் இலக்கணமாகத் 'தொல்காப்பியர்' கூறுகிறார்.
  • தொல்காப்பியர் காட்டும் அகத்திணைகள் ஏழு வகைப்படும்.

    1. கைக்கிளை

    2. முல்லை

    3. குறிஞ்சி

    4. பாலை

    5. மருதம்

    6. நெய்தல்

    7. பெருந்திணை
  • வாழ்வியல் நிகழ்வுகள் நடைபெறுவதற்கு அடிப்படையாய் அமைந்த நிலமும், பொழுதும் 'முதற்பொருள்' ஆகும்.

  • அகப்பாட்டுக்கு உரிய மூன்று பொருள்களுள் முதன்மை வாய்ந்தது 'உரிப்பொருள்' ஆகும். உரிப்பொருள் என்பது அந்தந்தத் திணைக்குரிய ஒழுக்கம் ஆகும்.

  • இடமும் நேரமுமே நிலம், பொழுது என அழைக்கப்படுகின்ற முதற்பொருள்களாகும். இவ்விரண்டும் இன்றிச் செயல்கள் நடைபெறுவதில்லை.

  • ஐவகை நிலங்களும் திணைகளும்:

    குறிஞ்சி:

  • மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி ஆகும்.

  • தலைவனும், தலைவியும் உள்ளத்தால் இணைவதே குறிஞ்சித் திணை ஆகும்.
  • முல்லை:

  • காடும் காடு சார்ந்த இடமும் முல்லை ஆகும்.

  • தலைவன் வருகைக்காகக் காத்திருத்தல் முல்லைத் திணை ஆகும்.
  • மருதம்:

  • வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் ஆகும்

  • தலைவன் தலைவிக்கிடையே ஏற்படும் சிறுபிணக்காகிய ஊடல் மருத்திணை ஆகும்.
  • நெய்தல்:

  • கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் ஆகும்

  • கடலுக்குச் சென்ற தலைவன் பொழுதொடு திரும்பாத்தற்குத் தலைவி வருந்தியிருத்தல் நெய்தல் திணை ஆகும்.
  • பாலை:

  • சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை ஆகும்.

  • தலைவன், தலைவியை விட்டுப் பிரிதல் பலைத் திணை ஆகும்.

  • 'புறம்' என்றால் வெளியே என்று பொருள்.

  • (எ.கா) புறநானூறு, புறநகர்

  • 'புறம்' என்றால் 'பக்கம்' என்ற பொருளும் உண்டு.

  • (எ.கா) உட்புறம், வெளிப்புறம், வலப்புறம், மேற்புறம்

  • 'புரம்' என்றால் 'நகரம்' என்ற பொருளில் வரும்.

  • (எ.கா) காஞ்சிபுரம், விழுப்புரம்

  • பொழுது என்பது நிகழ்ச்சி நடைபெறும் காலம் ஆகும்.

  • காலத்தைத் தமிழர் இரண்டாகப் பிரிப்பர். அவை 'பெரும்பொழுது', 'சிறுபொழுது' என இருவகைப்படும்.

  • ஒரு கவிதை நிகழ்வை உருவாக்கப் பயன்படும் வாழ்வியல் சார்ந்த பின்னணிப் பொருள்கள் 'கருப்பொருள்கள்' ஆகும்.
  • ஒவ்வொரு திணைக்கும் அமையக்கொடிய கருப்பொருள்கள்:

    • தெய்வம்

    • மக்கள்

    • உணவு

    • விலங்குகள்

    • மரம்

    • பறவை

    • பண்

    • பறை

    • தொழில்

    • யாழ்

    • ஊர்

    • நீர்

    • பூ
  • புறத்திணை என்பது பொதுவாழ்க்கை.

  • அகத்திணையை ஏழு பிரிவுகளில் கூறிய தொல்காப்பியர், புறத்திணைகளையும் ஏழு பிரிவுகளாக் கூறுகிறார். அவை,
    1. வெட்சி

    2. வஞ்சி

    3. உழிஞை

    4. தும்பை

    5. வாகை

    6. காஞ்சி

    7. பாடாண்
  • புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூல் புறத்திணைகளைப் பன்னிரண்டாக வகைப்படுத்தியுள்ளது. அவை,
    1. வெட்சி

    2. கரந்தை

    3. வஞ்சி

    4. காஞ்சி

    5. நொச்சி

    6. உழிஞை

    7. தும்பை

    8. வாகை

    9. பாடாண்

    10. பொதுவியல்

    11. கைக்கிளை

    12. பெருந்திணை
  • திணையின் உட்கூறு துறை எனப்படும்.
  • வெட்சித்திணை:

    விளக்கம்:
  • மன்னரின் ஆணைப்படி, வீரர்கள் பகை நாட்டுப் பசுக்கூட்டங்களைக் கவர்தலும் கவர்ந்தவற்றை மீட்டலும்.
  • துறை எண்ணிக்கை:

  • வெட்ச்சித் திணை 14 துறைகளை உடையது.
  • வஞ்சித்திணை:

    விளக்கம்:

  • மண்ணாசை கொண்டு அரசன் போர் தொடுத்தலும் மண்ணாசையுடன் வரும் பகையரசனோடு எதிர் நின்று போரிடுதலும்.

  • துறை எண்ணிக்கை:
  • வஞ்சித்திணை 13 துறைகளை உடையது.
  • உழிஞைத்திணை:

    விளக்கம்:

  • பகை மன்னனின் கோட்டையை முற்றுகை இடுதலும் கோட்டையின் உள்ளிருக்கும் வேந்தன் காத்தலும்.
  • துறை எண்ணிக்கை:

  • உழிஞைத்திணை 8 துறைகளை உடையது.
  • தும்பைத்திணை:

    விளக்கம்:

  • தனது வலிமையை நம்பி வந்த மன்னனை, எதிர்த்து வலிமையுடன் போரிடுதல்.
  • துறை எண்ணிக்கை:

  • தும்பைத்திணை 12 துறைகளை உடையது.

  • வாகைத்திணை:

    விளக்கம்:

  • போர் வீரம் மட்டுமல்லாமல் பல்வேறு ஒழுக்கங்களிலும் மற்றவரிலிருந்து மேம்பாடு மிக்கவராகத் தனித்து நிற்றல்.

  • துறை எண்ணிக்கை:

  • வாகைத்திணை 18 துறைகளை உடையது.

  • காஞ்சித்திணை:

    விளக்கம்:

  • நிலையாமையை உணர்த்துவது. சிறப்புடைய வீட்டின்பம் காரணமாக, பல வழிகளிலும் நிலையற்ற உலகில் பொருந்திய நல்ல நெறியினை மேற்கொள்ளுதல்.

  • துறை எண்ணிக்கை:

  • காஞ்சித்திணை 20 துறைகளை உடையது.

  • பாடாண் திணை:

    விளக்கம்:

  • ஒருவர் பெற்ற கல்வி, புகழ், ஈகை, போன்ற மேம்பாடுகளைப் போற்றிப் பாடுதல்.

  • துறை எண்ணிக்கை:

  • பாடாண் திணை 10 துறைகளை உடையது.

  • சொல்லும் பொருளும்:

  • விண் – வானம்

  • ரவி – கதிரவன்

  • கமுகு – பாக்கு

  • அறம் – நற்செயல்

  • வெகுளி – சினம்

  • ஞானம் – அறிவு

  • விரதம் – மேற்கொண்ட நன்னெறி
  • இலக்கணக்குறிப்பு:

  • பிறவிஇருள், ஒளியமுது, வாழ்க்கைப்போர் – உருவகங்கள்

  • பாண்டம் பாண்டமாக – அடுக்குத்தொடர்

  • வாயிலும் சன்னலும் – எண்ணும்மை

  • பகுபத உறுப்பிலக்கணம்:

  • இனைகின்றன – இணை + கின்று + அன் + அ

  • இணை – பகுதி

  • கின்று – நிகழ்கால இடைநிலை

  • அன் – சாரியை

  • அ – பலவின் பால் வினைமுற்று விகுதி

  • ஆக்குக, போக்குக, நோக்குக, காக்க – வியங்கோள் வினைமுற்றுகள்
  • பகுபத உறுப்பிலக்கணம்:

    காக்க – கா + க் + க

    கா – பகுதி

    க் – சந்தி

    க – வியங்கோள் வினைமுற்று விகுதி

    யாப்பிலக்கணம்

  • மரபுக் கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணமே யாப்பிலக்கணம் ஆகும்.
  • யாப்பின் உறுப்புகள் ஆறு வகைப்படும்.

    • எழுத்து

    • சீர்

    • அசை

    • தளை

    • அடி

    • தொடை
    எழுத்து:

  • யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துகள் குறில், நெடில், ஒற்று என மூவகைப்படும். எழுத்துகளால் ஆனது 'அசை' எனப்படும்.

  • அசை:

  • ஓரெழுத்தோ இரண்டெழுத்தோ நிற்பது அசை ஆகும். இது நேரசை, நிரையசை என இரு வகைப்படும். அசைப்பிரிப்பில் ஒற்றெழுத்தைக் கணக்கிடுவதில்லை.

  • நேரசை:
    • தனிக்குறில் – ப

    • தனிக்குறில் ஒற்று – பல்

    • தனி நெடில் – பா

    • தனிநெடில் ஒற்று – பால்
    நிரையசை:
    • இருகுறில் – அணி

    • இருகுறில் ஒற்று – அணில்

    • குறில்நெடில் – விழா

    • குறில் நெடில் ஒற்று – விழார்

    சீர்:

  • ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அசைகளின் கூட்டம் 'சீர்' ஆகும். இதுவே பாடலின் ஓசைக்கு அடிப்படையாய் அமையும்.
  • சீர் நான்கு வகைப்படும்.

    1. ஓரசைச்சீர்

    2. ஈரசைச்சீர்

    3. மூவசைச்சீர்

    4. நாலசைச்சீர்
  • நேர் என்பதோடு உகரம் சேர்ந்து முடிவது உண்டு. அதனை 'நேர்பு' என்னும் அசையாகக் கொள்வர். நிரை என்னும் அசையோடு உகரம் சேர்ந்து முடியும் அசைகள் நிரைபு என்று கூறப்படும். இவை வெண்பாவின் இறுதியாய் மட்டுமே அசையாகக் கொள்ளப்படும்.

  • ஈரசைச்சீர்களுக்கு 'இயற்சீர்' 'ஆசிரிய உரிச்சீர்' என்னும் வேறு பெயர்களும் உண்டு.
  • ஓரசைச்சீர்:

    • நேர் – நாள்

    • நிரை – மலர்

    • நேர்பு – காசு

    • நிரைபு – பிறப்பு

    ஈரசைச்சீர்:

    • நேர் நேர் – தேமா

    • நிரை நேர் – புளிமா

    • இவை இரண்டும் 'மாச்சீர்' ஆகும்.

    • நிரை நிரை – கருவிளம்

    • நேர் நிரை – கூவிளம்

    • இவை இரண்டும் விளச்சீர் ஆகும்.

    மூவசைச்சீர்:

    காய்ச்சீர்:

    • நேர் நேர் நேர் – தேமாங்காய்

    • நிரை நேர் நேர் – புளிமாங்காய்

    • நிரை நிரை நேர் – கருவிளங்காய்

    • நேர் நிரை நேர் – கூவிளங்காய்

    கனிச்சீர்:

    • நேர் நேர் நிரை – தேமாங்கனி

    • நிரை நேர் நிரை – புளிமாங்கனி

    • நிரை நிரை நிரை – கருவிளங்கனி

    • நேர் நிரை நிரை – கூவிளங்கனி
  • மூவசைச் சீர்களை அடுத்து நேரசையோ அல்லது நிரையசையோ சேர்கின்ற பொழுது 'நாலசைச்சீர்' தோன்றும்.

  • வெண்பாவில் இயற்சீரும், வென்சீரும் மட்டுமே வரும்; பிற சீர்கள் வராது.
  • தளை:

  • பாடலில், நின்ற சீரின் ஈற்றசையும் அதனையடுத்து வரும் சீரின் முதலசையும் பொருதுதல் 'தளை' எனப்படும். இது ஒன்றியும் ஒன்றாமலும் வரும்.
  • தளை ஏழு வகைப்படும்.

    1. நேரொன்றாசிரியத்தளை – மா முன் நேர்

    2. நிரையொன்றாசிரியத் தளை – விளம் முன் நிரை

    3. இயற்சீர் வெண்டளை – மா முன் நிரை, விளம் முன் நேர்

    4. வென்சீர் வெண்டளை – காய் முன் நேர்

    5. கலித்தளை – காய் முன் நிரை

    6. ஒன்றிய வஞ்சித் தளை – கனி முன் நிரை

    7. ஒன்றா வஞ்சித் தளை – கனி முன் நேர்

    அடி:

  • இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட சீர்களும் தொடர்ந்து வருவது 'அடி' என்னப்ப்படும்.

  • அடி ஐந்து வகைப்படும்.
    1. இரண்டு சீர்களைக் கொண்டது – குறளடி

    2. மூன்று சீர்களைக் கொண்டது – சிந்தடி

    3. நான்கு சீர்களைக் கொண்ட்து – அளவடி. இது நேரடி என்றும் அழைக்கப்படும்.

    4. ஐந்து சீர்களைக் கொண்ட்து – நெடிலடி

    5. ஆறு சீர் அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டது – கழிநெடிலடி.

    தொடை:

  • தொடை என்பதற்கு 'தொடுத்தல்' என்பது பொருள்.

  • பாடலின் அடிகளிலோ, சீர்களிலோ எழுத்துகள் ஒன்றிவரத் தொடுப்பது 'தொடை' ஆகும்.

  • தொடை என்னும் செய்யுள் உறுப்பு, பாடலில் உள்ள அடிகள் தோறும் அல்லது சீர்கள்தோறும் ஒரு குறிப்பிட்ட வகையிலான ஓசை பொருந்தி வருமாறு பாடலை இயற்றுதல் பற்றி அமைகிறது.
  • தொடை எட்டு வகைப்படும்.

    1. மோனை

    2. எதுகை

    3. இயைபு

    4. அளபடை

    5. முரண்

    6. இரட்டை

    7. அந்தாதி

    8. செந்தொடை

    மோனைத்தொடை:

  • ஒரு பாடலில் அடிகளிலோ, சீர்களிலோ முதலெழுத்து ஒன்றி அமைவது.

  • (எ.கா) 'ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்

  • ஒற்றினால் ஒற்றிக் கொளல்
  • எதுகைத் தொடை:

  • அடிகளிலோ சீர்களிலோ முதல் எழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றியமைவது.

  • (எ.கா)

  • 'திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
    அறனல்ல செய்யாமை நன்று'
  • இயைபுத்தொடை:

  • அடிகள் தோறும் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ ஒன்றியமைவது.

  • (எ.கா) வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

  • மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

  • இலக்கணக்குறிப்பு:

  • உருண்டது, போனது – ஒன்றன் பால் வினைமுற்றுகள்

  • சரிந்து – வினையெச்சம்

  • அனைவரும் – முற்றும்மை

  • களைஇய – சொல்லிசை அளபடை

  • பெருங்கை, மென்சினை – பன்புத் தொகைகள்

  • பொளிக்கும் – செய்யும் என்னும் வினைமுற்று

  • பிடிபசி – ஆறாம் வேற்றுமைத்தொகை

  • அன்பின – பலவின்பால் அஃறிணை வினைமுற்று

  • நல்கலும் நல்குவர் – எச்ச உம்மை
  • சொல்லும் பொருளும்:

  • நசை – விருப்பம்

  • நல்கல் – வழங்குதல்

  • பிடி – பெண்யானை

  • வேழம் – ஆண்யானை

  • யா – ஒரு வகை மரம். இது பாலை நிலத்தில் வளரும்.

  • பொளிக்கும் – உரிக்கும்

  • ஆறு – வழி
  • பகுபத உறுப்பிலக்கணம்:

    உடையார் – உடை + ய் + ஆர்

    உடை – பகுதி

    ய் – சந்தி (உடம்படுமெய்)

    அர் – பலர்பால் வினைமுற்று விகுதி

    பொளிக்கும் – பொளி + க் + க் + உம்

    பொளி – பகுதி

    க் – சந்தி

    க் – எதிர்கால இடைநிலை

    உம் – வினைமுற்று விகுதி

    அணி

  • அணி என்றால் அழகு என்பது பொருள்; செய்யுளின் கருத்தை அழகுப்படுத்துவது அணி எனப்படும்.சொல்லாலும், பொருளாலும் அழகுபட எடுத்துரைப்பது 'அணி' இலக்கண இயல்பாகும்.
  • உவமையணி:

  • அணிகளில் இன்றியமையாதது உவமையணி ஆகும். மற்ற அணிகள் உவமையிலிருந்து கிளைத்தவையாகவே உள்ளன.

  • மலர்ப்பாதம் – மலர் போன்ற பாதம்

  • இத்தொடரில் பாதத்துக்கு மலர் உவமையாகக் கூறப்படுகிறது.

  • பாதம் – உவமேயம்

  • மலர் – உவமை

  • போன்ற- உவம உருபு

  • 'இனிய உளவாக இன்னாத கூறல்
    கனியிருப்பக் காய்கவர்ந் தற்று'


    இதில் உவமையணி அமைந்துள்ளது.

    உருவக அணி:

  • கவிஞன், தான் ஒரு பொருளைச் சிறப்பிக்க எண்ணி, அதற்கு உவமையாகும் வேறொரு பொருளோடு ஒன்றுபடுத்திக் கூறுவான்.

  • உவமையின் தன்மையைப் பொருள் மேல் ஏற்றிக் கூறும் இத்தன்மையே ’உருவகம்’ எனக் கூறப்படும். உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது உருவக அணி ஆகும்.

  • (எ.கா.)

    'இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக

    வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி

    அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்

    பைங்கூழ் சிறுகாலைச் செய்.'


  • இப்பாடலில், இன்சொல்- நிலமாகவும், வன்சொல்- களையாகவும், வாய்மை- எருவாகவும், அன்பு – நீராகவும், அறம் – கதிராகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளன.
  • பின்வருநிலை அணிகள்:

  • ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் பல இடத்தும் வருதலே 'பின்வருநிலை அணி' ஆகும். இது மூன்று வகைப்படும்.
    1. சொற்பின்வருநிலையணி

    2. பொருள் பின்வருநிலையணி

    3. சொற் பொருள் பின்வருநிலையணி

    சொற்பின்வருநிலையணி:

  • முன் வந்த சொல்லே பின்னும் பலவிடத்தும் வந்து வேறு பொருள் உணர்த்துவது சொற் பின்வருநிலை அணியாகும்.

  • (எ.கா.)

    'துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
    துப்பாய தூஉம் மழை.'


  • இக்குறளில் "துப்பு" என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து வேறு வேறு பொருள்களைத் தருகிறது.

  • துப்பார்க்கு – உண்பவர்க்கு; துப்பு – நல்ல, நன்மை; துப்பு – உணவு என்று பல பொருள்களில் வருவதைக் காணலாம்.
  • பொருள் பின்வருநிலையணி:

  • செய்யுளில் முன்னர் வந்த பொருளே பின்னர் பல இடங்களிலும் வருவது பொருள் பின்வருநிலையணி ஆகும்.

  • (எ.கா)

    'அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா
    நெகிழ்ந்தன நேர்முகை முல்லை – மகிழ்ந்திதழ்
    விண்டன கொன்றை விரிந்த கருவிளை
    கொண்டன காந்தள் குலை'


  • இச்செய்யுளில் அவிழ்ந்தன, அலர்ந்தன, நெகிழ்ந்தன, விண்டன, விரிந்தன, கொண்டன ஆகிய சொற்கள் மலர்ந்தன என்ற ஒரு பொருளையே தந்தன.

  • 'கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
    மாடல்ல மற்றை யவை.'

  • இக்குறட்பாவில் செல்வம், மாடு ஆகிய இரு சொற்களுமே செல்வத்தையே குறிக்கின்றன.
  • சொற்பொருள் பின்வருநிலையணி:

  • முன்னர் வந்த சொல்லும் பொருளும் பின்னர்ப் பல இடங்களிலும் வருவது சொற்பொருட் பின்வருநிலையணி ஆகும்.

  • (எ.கா.)

    'எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
    பொய்யா விளக்கே விளக்கு.'


  • இக்குறட்பாவில் "விளக்கு" என்னும் சொல் ஒரே பொருளில் பலமுறை வந்துள்ளதால் இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.
  • வஞ்சப்புகழ்ச்சி அணி:

  • வஞ்சப் புகழ்ச்சியணி என்பது புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதுமாகும்.

  • (எ.கா.) 'தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
    மேவன செய்தொழுக லான்'

  • கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று புகழப்படுவது போலத் தோன்றினாலும், கயவர்கள் இழிந்த செயல்களையே செய்வர் என்னும் பொருளைக் குறிப்பால் உணர்த்துகிறது. எனவே, இது புகழ்வது போலப் பழிப்பது ஆகும்.

  • (எ.கா.)

    'பாரி பாரி என்றுபல ஏத்தி,
    ஒருவற் புகழ்வர், செந்நாப் புலவர்
    பாரி ஒருவனும் அல்லன்;
    மாரியும் உண்டு, ஈண்டு உலகுரப் புதுவே'


  • இப்பாடலின் பொருள்: புலவர் பலரும் பாரி ஒருவனையே புகழ்கின்றனர். பாரி ஒருவன் மட்டுமா கைம்மாறு கருதாமல் கொடுக்கின்றான்? மாரியும்தான் கைம்மாறு கருதாமல் கொடுத்து இவ்வுலகத்தைப் புரக்கிறது.

  • இது பாரியை இகழ்வது போலத் தோன்றினாலும், பாரிக்கு நிகராகக் கொடுப்பவரில்லை என்று புகழ்கிறது.
  • இலக்கணக்குறிப்பு:

  • பண்பும் அன்பும், இனமும் மொழியும் – எண்ணும்மைகள்

  • சொன்னோர் – வினையாலணையும் பெயர்

  • உணர்ந்தோர் – வினையாலணையும் பெயர்

  • நெறிப்படுத்துவர் – வினையாலணையும் பெயர்

  • இலக்கியம்

    தமிழ்விடு தூது

    "தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான
    முத்திக் கனியேஎன் முத்தமிழே- புத்திக்குள்
    உண்ணப் படும்தேனேஉன்னோடு உவந்துஉரைக்கும்
    விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் – மண்ணில்
    குறம்என்றும் பள்ளுஎன்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு
    உறவுஎன்று மூன்றுஇனத்தும் உண்டோ – திறம்எல்லாம்
    வந்துஎன்றும் சிந்தாமணியாய் இருந்தஉனைச்
    சிந்துஎன்றுசொல்லிய நாச்சிந்துமே – அந்தரமேல்
    முற்றும்உணர்ந்ததேவர்களும் முக்குணமே பெற்றார்நீ
    குற்றம்இலாப் பத்துக் குணம்பெற்றாய் – மற்றொருவர்
    ஆக்கிய வண்ணங்கள்ஐந்தின்மேல் உண்டோ நீ
    நோக்கிய வண்ணங்கள்நூறுஉடையாய் – நாக்குலவும்
    ஊனரசம் ஆறுஅல்லால் உண்டோ செவிகள்உணவு
    ஆன நவரசம்உண்டாயினாய் – ஏனோர்க்கு
    அழியா வனப்பு ஒன்று அலது அதிகம் உண்டோ
    ஒழியா வனப்புஎட்டு உடையாய்…."


    என்ற அடிகள் இடம்பெற்ற நூல் – தமிழ்விடுதூது

    பாடலின் பொருள்:

    • இனிக்கும் தெளிந்த அமுதமாய் அந்த அமிழ்தினும் மேலான வீடுபேற்றைத் தரும் கனியே! இயல் இசை நாடகம் என மூன்றாய்ச் சிறந்து விளங்கும் என் தமிழே! அறிவால் உண்ணப்படும் தேனே!உன்னிடம் நான் மகிழ்ந்து விடுக்கும் வேண்டுகோள் ஒன்றுள்ளது. அதை கேட்பாயாக!

    • தமிழே! உன்னிடமிருந்து குறவஞ்சி, பள்ளு என்ற நூல்களைப் பாடி புலவர்கள் சிறப்பு கொள்கின்றனர்.நீயும் அவற்றைப் படிக்க எடுத்துக்கொடுப்பாய். அதனால் உனக்குத் தாழிசை, துறை, விருத்தம் என்னும் மூவகைப் பாவினங்களிலும் உறவு ஏதேனும் உண்டோ?

    • பாவின் திறம் அனைத்தும் கைவரப்பெற்று (பொருந்தி நின்று) என்றுமே சிந்தா (கெடாத) மணியாய் இருக்கும் உன்னை (இசைப்பாடல்களுள் ஒருவகையான) ‘சிந்து’ என்று (அழைப்பதுநின் பெருமைக்குத் தகுமோ? அவ்வாறு) கூறிய நா இற்று விழும் அன்றோ?

    • வானத்தில் வசிக்கும் முற்றும் உணர்ந்த தேவர்கள் கூட,சத்துவம், இராசசம்,தாமசம் என்னும் மூன்று குணங்களையேப் பெற்றுள்ளார்கள். ஆனால் நீயோ பத்துக்குற்றங்கள் இல்லாமல்செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை,உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி என்னும் பத்துக் குணங்களையும் பெற்றுள்ளார்.

    • மனிதரால் உண்டாக்கப்பட்ட வண்ணங்கள் வெண்மை, செம்மை,கருமை, பொன்மை,பசுமை என ஐந்திர்கும் மேல் இல்லை. நீயோ புலவர்கள் கண்டடைந்த குறில், அகவல்,தூங்கிசை,வண்ணம் ஈறாக நூறு வண்ணங்களைக் கொண்டுள்ளாய்.

    • நாவின் மீது பொருந்தும் குறைபாடுடைய உணவின் சுவைகள் ஆறுக்கு மேல் இல்லை.நீயோ செவிகளுக்கு விருந்தளிக்கும் ஒன்பது சுவைகளைப் பெற்றுள்ளாய்.தமிழை அடையப் பெறாத மற்றையோர்க்கு அழியாத அழகு ஒன்றே ஒன்று அல்லாமல் அதிகம் உண்டோ? நீயோ நீங்காத அம்மை முதலிய அழகு எட்டினைப் பெற்றுள்ளாய்.

  • தமிழ்விடு தூது சிற்றிலக்கியம் என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது.

  • "இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்" என்று கூறும் நூல் – பிங்கல நிகண்டு

  • பெரிய புராணம்

    "மாவி ரைத்தெழுந்த தார்ப்ப வரைதரு
    பூவி ரித்த புதுமதுப் பொங்கிட
    வாவி யிற்பொலிநாடு வளந்தரக்
    காவி ரிப்புனல்கால்பரந் தோங்குமால்"


    என்ற பாடல் இடம் பெற்ற நூல் – பெரியபுராணம்

    பாடலின் பொருள்:

  • காவிரி நீர் மலையிலிருந்து புதிய பூக்களை அடித்துக்கொண்டு வருகிறது. அப்பூக்களில் தேன் நிறைந்திருப்பதால் வண்டுகள் சூழ்ந்து ஆரவாரம் செய்கின்றன. நீர்நிலைகள் நிறைந்த நாட்டுக்கு வளத்தைத் தரும் பொருட்டுக் காவிரி நீர் கால்வாய்களில் பரந்து எங்கும் ஓடுகிறது.

  • பெரிய புராணம் பற்றியக் குறிப்புகள்:
    • சுந்தரரின் திருத்தொண்டத் தொகை அடியவர் பெருமையை ஓர் அடியில் கூறுகிறது.

    • இதைச் சிறிது விரித்து நம்பியாண்டார் நம்பியால் எழுதப்பட்ட திருத்தொண்டர் திருவந்தாதி ஒவ்வொரு பாடலிலும் அவ்வடியார்களின் சிறப்பைக் கூறுவதாக உள்ளது.

    • இந்த இரண்டு நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு சேக்கிழாரால் ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வோர் அடியாக அறுபத்து மூவரின் சிறப்புகளை விளக்கிப் பாடப்பட்டது திருத்தொண்டர் புராணம். இதன் பெருமை காரணமாக இது "பெரியபுராணம்" என்று அழைக்கப்படுகிறது.

    • பெரியபுராணம் 2 காண்டம், 13 சருக்கம், 4286 பாடல்கள் கொண்டது.

    • இந்நூல் 63 நாயன்மார்களையும் 9 தொகை அடையார்களையும் கூறும் நூல் ஆகும்.

    • "உலகெலாம்" என்று இறைவன் அடியெடுத்துக் கொடுக்கப் பாடப்பட்ட நூல் – பெரியபுராணம்

    • தமிழின் முதல் கள ஆய்வு நூல் – பெரியபுராணம்

    • பெரியபுராணம் வடமொழியில் "சிவபக்தவிலாசம்", "உபமன்யுவிலாசம்" என்ற பெயர்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

    புறநானூறு

    "வான் உட்கும் வடிநீண் மதில்,

    மல்லல் மூதூர் வய வேந்தே!

    செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்

    ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி,

    ஒருநீ ஆகல் வேண்டினும், சிறந்த

    நல்லிசை நிறுத்தல் வேண்டினும், மற்று

    அதன்தகுதி கேள்இனி மிகுதி ஆள!


    நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்

    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!

    உண்டி முதற்றே உணவின் பிண்டம்;

    உணவெனப் படுவது நிலத்தொடு நீரே;

    நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு

    உடம்பும் உயிரும் படைத்திசினோரே!


    வித்திவான் நோக்கும் புன்ப்புலம் கண்ணகன்

    வைப்பிற்று ஆயினும்,நண்னி ஆளும்

    இறைவன் தாட்கு உதவாதே! அதனால்

    அடுபோர்ச் செழிய! இகழாது வல்லை;

    நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்

    தட்டோர் அம்ம! இவண் தட்டோரே!

    தள்ளாதோர் இவண் தள்ளா தோரே!"


    என்ற பாடல் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது.

  • இது பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடியது ஆகும்.
  • பாடலின் பொருள்:

  • வான்வரை உயர்ந்த மதிலைக் கொண்ட பழைமையான ஊரின் தலைவனே! வலிமை மிக்க வேந்தனே! நீ மறுமை இன்பத்தை அடைய விரும்பினாலோ உலகு முழுவதையும் வெல்ல விரும்பினாலோ நிலையான புகழைப் பெற விரும்பினாலோ செய்யா வேண்டியன என்னவென்று கூறுகிறேன் கேட்பாயாக!

  • உலகில் உள்ள யாவற்றையும் மிகுதியாகக் கொண்டுவிளங்கும் பாண்டிய நெடுஞ்செழியனே! நீர் இன்றிஅமையாத உடல் உணவால் அமைவது; உணவையே முதன்மையாகவும் கொண்டது; எனவே "உனவு தந்தவர் உயிர் தந்தவர்" ஆவார்.

  • "உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும்.". நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்தவர் இவ்வுலகில் உடலையும் உயிரையும் ஒன்று சேர்த்தவர். நெல் முதலிய தானியங்களை விதைத்து மழையைப் பார்த்திருக்கும் பரந்த நிலமாயினும் அதனைச் சார்ந்து ஆளும் அரசனின் முயற்சிக்குச் சிறிதும் உதவாது. அதனால், நான் கூறிய மொழிகளை இகழாது விரைவாகக் கடைப்பிடிப்பாயாக.

  • நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர்நிலையைப் பெருகச் செய்தல் வேண்டும்.அவ்வாறு நிலத்துடன்நீரைக் கூட்டியோர்மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவர். இதைச் செய்யாதவர் புகழ் பெறாது வீணே மடிவர்.

  • மேற்கண்ண்ட பாடலில் அமைந்துள்ள திணை – பொதுவியல் திணை; துறை – பொருண்மொழிக்காஞ்சி துறை ஆகும்.
  • பொதுவியல் திணை:

  • வெட்சி முதலிய புறத்திணைகளுக்கெல்லாம் பொதுவான செய்திகளையும் முன்னர் விளக்கப்படாத செய்திகளையும் கூறுவது பொதுவியல் திணையாகும்.
  • பொருண்மொழிக்காஞ்சி துறை:

  • சான்றோர் தெளிவாய் ஆராய்ந்து தெளிந்த பொருள்களைப் பிறர்க்குப் பயன்படுமாறு எடுத்துரைப்பது பொருண்மொழிக்காஞ்சித் துறையாகும்.
  • புறநானூறு பற்றியக் குறிப்புகள்:

  • புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.

  • இது 400 பாடல்களால் ஆனது.

  • இதிலுள்ள பாடல்களை 158 புலவர்கள் பாடியுள்ளனர்.

  • "தமிழ்க் கருவூலம்" என்று அழைக்கப்படுவது – புறநானூறு

  • இது "புறம்" என்றும் "புறப்பாட்டு" எனவும் வழங்கப்பெறும்.

  • புறநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்.

  • புறநானூற்றின் கடவுள் வாழ்த்து சிவனைப் பற்றியது.

  • அறம், பொருள், வீடு என்ற மூன்றையும் பாடும் நூல் – புறநானூறு

  • புறநானூற்றில் பெண்களின் வீரத்தைக் கூறும் துறை – மூதின் முல்லை

  • இது பண்டைய வேந்தர்களின் வீரம், வெற்றி, கொடை குறித்தும் குறுநில மன்னர்கள், புலவர்கள், சான்றோர்கள் உள்ளிட்டவர்களின் பெருமைகளைப் பற்றியும் அன்றைய மக்களின் புறவாழ்க்கையைப் பற்றியும் கூறுகிறது.

  • இந்நூல் பண்டைத் தமிழர்களின் அரிய வரலாற்றுச்செய்திகள் அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாகத் தொகழ்கிறது
  • புறநானூற்றில் இடம் பெற்றுள்ள தொடர்கள்:

  • "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!"

  • "உண்பது நாழி உடுப்பவை இரண்டே!"

  • "யாதும் ஊரே யாவரும் கேளிர்!"

  • "சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!"

  • "நன்னடைநல்கல் வேந்தற்குக் கடனே!"

  • "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
    பிற்றைநிலை முனியாது கற்ரல் நன்றே!"

  • "உனவு எனப்படுவது நிலத்துடன் நீராகும்" என்று கூறும் நூல் – புறநானூறு.

  • "நீரின்றி அமையது யாக்கை" என்று கூறும் நூல் – புறநானூறு

  • "புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
    வலவன் ஏவா வான ஊர்தி"
    -என்று கூறிய நூல் – புறநானூறு

    மணிமேகலை

    மணிமேகலையில் குறிப்பிடப்படும் ஐம்பெருங்குழுவினர்:

    • அமைச்சர்

    • சடங்கு செய்விப்போர்

    • படைத்தலைவர்

    • தூதர்

    • சாராணர் (ஒற்றர்)

    மணிமேகலையில் குறிப்பிடப்படும் எண்பேராயம்:

    • கரணத்தியலவர்

    • கரும விதிகள்

    • கனகச்சுற்றம்

    • கடைக்காப்பாளர்

    • நகரமாந்தர்

    • படைத்தலைவர்

    • யானை வீரர்

    • இவுளி மறவர்
  • புகார் நகரோடு அதிகம் தொடர்புடையதாகத் திகழ்ந்த "இந்திர விழா" சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் விவரிக்கப்படுகிறது. இந்த விழா 28 நாள்கள் நடைபெறும்.

  • "மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடெனும்
    இத்திறம் தத்தம் இயல்பினிற் காட்டும்
    சமயக் கணக்கரும் தந்துறை போகிய
    அமயக் கணக்கரும் அகலா ராகிக்

    கரந்துரு எய்திய கடவு ளாளரும்
    பரந்தொருங்கு ஈண்டிய பாடை மாக்களும்
    ஐம்பெருங்குழுவும் எண்பேர் ஆயமும்
    வந்தொருங்கு குழீஇ வான்பதி தன்னுள்"


    என்ற பாடலடிகள் மணிமேகலையில் விழாவறைக் காதையில் இடம்பெற்றுள்ளது.

    பாடலின் பொருள்:

    இந்திர விழாவைக் காண வந்தோர்:

  • உயர்வுடைய புகார் நகரில் மெய்ப்பொருள் உணர்த்தும் உலகியல், தத்துவம், வீடுபேறுஆகிய பொருள்களைஅவரவர் இயற்கைத் தன்மைக்குஏற்ப விளக்குபவராகியசமயவாதிகள் கூடியிருக்கின்றனர். தமது நெரியில் சிறந்தவராக விளங்கும்காலத்தைக் கணக்கிட்டுச் சொல்லும்காலக் கணிதரும் கூடியிருக்கின்றனர்.இந்நகரை விட்டு நீங்காதவராய்த்தம் தேவருடலை மறைத்துமக்கள் உருவில் வந்திருக்கும் கடவுளரும் கடல்வழி வாணிகம் செய்துபெரும் செல்வம் காரணமாய்ப்புகார் நகரில் ஒன்றுத் திரண்டிருக்கும் பல மொழி பேசும்அயல் நாட்டினரும் குழுமியிருக்கின்றனர்.அரசர்க்குரிய அமைச்சர் குழுவாகிய ஐம்பெருங்குழு,எண்பேராயத்தைச் சேர்ந்தவர்களும் அரசவையில் ஒன்று திரண்டிருக்கின்றனர்.
  • மணிமேகலை நூல் பற்றியக் குறிப்புகள்:

  • இயற்றப்பட்ட காலம் 2 ஆம் நூற்றாண்டு.

  • சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் எனப்படும்.

  • மணிமேகலை ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.

  • மணிமேகலையின் துறவு வாழ்க்கையை கூறுவதால், இந்நூலுக்கு "மணிமேகலைத் துறவு" என்னும் வேறு பெயரும் உண்டு.

  • இது பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம்; பண்பாட்டுக் கூறுகளைக் காட்டும் தமிழ்க்காப்பியம்;

  • இந்நூல் பௌத்த மதச் சார்புடையது.

  • கதை அடிப்படையில் மணிமேகலையைச் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி எனக் கூறுவர்.

  • மணிமேகலை முப்பது காதைகளை உடையது.

  • மணிமேகலையின் முதலாவது காதை விழாவறை காதை ஆகும்.

  • மணிமேகலையை இயற்றியவர் – சீத்தலைச் சாத்தனார்.

  • இவர் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர் என்று கூறுவர்.

  • கூலவாணிகம் (கூலம் – தானியம்)செய்தவர்; இக்காரணங்களால் இவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்று அழைக்கப்படுகிறார்.

  • சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளும் இவரும் சமகாலத்தவர் என்பர்.

  • "தண்டமிழ் ஆசான்", "சாத்தன்", "நன்னூற்புலவன்" என்று இளங்கோவடிகள் சாத்தனாரைப் பாராட்டியுள்ளார்.

  • "அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
    மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம்
    உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்"


    என்ற பாடலடிகள் இடம் பெற்ற நூல் – "மணிமேகலை".

    திருக்குறள்

    "அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
    இகழ்வார்ப் பொறுத்தல் தலை"

    – என்ற குறட்பாவில் அமைந்துள்ள அணி – உவமையணி

    "செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
    செல்வத்துள் எல்லாந் தலை"

    – என்ற குறட்பாவில் அமைந்துள்ள அணி –சொற்பொருள் பின்வருநிலையணி

    "குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
    மிகைநாடி மிக்க கொளல்"

    – என்ற குறட்பாவில் பயின்றுவந்துள்ள அணி – சொற்பொருள் பின்வருநிலையணி

    "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
    கருமமே கட்டளைக் கல்"

    – என்ற குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி – ஏகதேச உருவக அணி

    "சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
    கலத்துநீர் பெய்திரீஇ யற்று"

    – என்ற குறட்பாவில்பயின்று வந்துள்ள அணி – உவமையணி

    திருக்குறளுக்கு வழங்கும் வேறு பெயர்கள்:

    • முப்பால்

    • பொதுமறை

    • பொய்யாமொழி

    • வாயுறை வாழ்த்து

    • தெய்வநூல்

    • தமிழ்மறை

    • முதுமொழி

    • பொருளுரை

    திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள்:

    திருக்குறளுக்கு பதின்மர் (பத்து பேர்) உரை எழுதியுள்ளனர்.
    • தருமர்

    • மணக்குடவர்

    • தாமத்தர்

    • நச்சர்

    • பரிதி

    • பரிமேலழகர்

    • திருமலையர்

    • மல்லர்

    • பரிப்பெருமாள்

    • காளிங்கர்
  • இவ்வுரைகளுள் பரிமேலழகர் உரையே சிறந்தது என்பர்.
  • திருவள்ளுவருக்கு வழங்கும் வேறு பெயர்கள்:

    1. நாயனார்

    2. தேவர்

    3. முதற்பாவலர்

    4. தெய்வப் புலவர்

    5. நான்முகனார்

    6. மாதானுபங்கி

    7. செந்நாப்போதார்

    8. பெருநாவலர்

    திருக்குறள் பற்றிய சில ஆராய்ச்சி செய்திகள்:

  • திருக்குறள் முதன்முதலில்அச்சிடப்பட்டஆண்டு-1812

  • திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது

  • திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை

  • திருக்குறளில் இடம்பெறும் ஒரேபழம்- நெருஞ்சிப்பழம்

  • திருக்குறளில் இடம்பெறும் ஒரேவிதை- குன்றிமணி

  • திருக்குறளில் இருமுறை வரும் ஒரேஅதிகாரம்- குறிப்பறிதல்

  • திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்

  • திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்

  • திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்

  • திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.

  • ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

  • திருக்குறளை ஆங்கிலத்தில்மொழி பெயர்த்தவர்- ஜி.யு. போப்

  • திருக்குறள் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளிவந்துள்ளது.

  • "அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ(டு)
    ஐந்துசால்பு ஊன்றிய தூண்"
    – என்ற குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி – "ஏகதேச உருவக அணி"

    "ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு)
    ஆழி எனப்படு வார்."
    என்ற குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி – "ஏகதேச உருவக அணி"

    "உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃதாற்றாது
    எழுவாரை எல்லாம் பொறுத்து"
    என்ற குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி – "ஏகதேச உருவக அணி"

    தொல்காப்பியம்

    "ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
    இரண்டறி வதுவே அதனொடு நாவே
    மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
    நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
    ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
    ஆறறி வதுவே அவற்றொடு மனமே
    நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே"

    -என்ற பாடலை இயற்றியவர் – தொல்காப்பியர்.

  • இப்பாடலில் தொல்காப்பியர் ஓறறிவு முதல் ஆறறிவு உயிரினங்களை வகைப்படுத்தியுள்ளார்.
  • அறிவு நிலை: ஓறறிவு

    அறியும் ஆற்றல் – உற்றறிதல் (தொடுதல் உணர்வு)
    எடுத்துக்காட்டு – புல்,மரம்

    அறிவு நிலை: ஈறறிவு

    அறியும் ஆற்றல் – உற்றறிதல் + சுவைத்தல்
    எடுத்துக்காட்டு – சிப்பி, நத்தை

    அறிவு நிலை: மூவறிவு

    அறியும் ஆற்றல் – உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல்
    எடுத்துக்காட்டு – கரையான், எறும்பு

    அறிவு நிலை: நான்கறிவு

    அறியும் ஆற்றல் – உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் + காணல்
    எடுத்துக்காட்டு – நண்டு, தும்பி

    அறிவு நிலை: ஐந்தறிவு

    அறியும் ஆற்றல் – உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் + காணல் + கேட்டல்
    எடுத்துக்காட்டு – பறவை, விலங்கு

    அறிவு நிலை: ஆறறிவு

    அறியும் ஆற்றல் – உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் + காணல் + கேட்டல் + பகுத்தறிதல் (மனம்)
    எடுத்துக்காட்டு – மனிதன்

    தொல்காப்பியம் பற்றியக் குறிப்புகள்:

  • தமிழ்மொழியில் கிடைக்கப் பெற்ற முதல் இலக்கண நூல் – தொல்காப்பியம்

  • தொல்காப்பியத்தை இயற்றியவர் – தொல்காப்பியர்

  • தொல்காப்பியம் பிறகாலத்தில் தோன்றிய பல இலக்கண நூல்களுக்கு முதல் நூலாக அமைந்திருக்கிறது.

  • இந்நூல் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களையும் 27 இயல்களையும் கொண்டது.

  • எழுத்து, சொல் அதிகாரங்களில் மொழி இலக்கணங்களை விளக்குகிறது.

  • பொருளதிகாரத்தில் தமிழரின் அகம்,புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளையும் தமிழ் இலக்கிய கோட்பாடுகளையும் விளக்குகிறது.

  • இந்நூலில் பல அறிவியல் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாகப் "பிறப்பியலில்" எழுத்துக்கள் பிறக்கும் இடங்களை உடற்கூற்றியல் அடிப்படையில் விளக்கியிருப்பதை அயல்நாட்டு அறிஞர்களும் வியந்து போற்றுகின்றனர். இது தமிழர்களின் அறிவாற்றலுக்குச் சிறந்த சான்றாகும்.

  • குடும்ப விளக்கு

  • "குடும்ப விளக்கு" என்னும் நூலை இயற்றியவர் – "பாரதிதாசன்"

  • "கல்வி இல்லாத பெண்கள்
    களர்நிலம் அந்நி லத்தில்
    புல்விளைந் திடலாம் நல்ல
    புதல்வர்கள் விளைதல் இல்லை
    கல்வியை உடைய பெண்கள்
    திருந்திய கழனி அங்கே
    நல்லறிவு உடைய மக்கள்
    விளைவது நவில வோநான்!

    வானூர்தி செலுத்தல் வைய
    மாக்கடல் முழுது அளத்தல்
    ஆன்எச் செயலும் ஆண்பெண்
    அனைவர்க்கும் பொதுவே! இன்று
    நானிலம் ஆட வர்கள்
    ஆணையால் நலிவு அடைந்து
    போனதால் பெண்களுக்கு
    விடுதலை போனது அன்றோ!

    இந்நாளில் பெண்கட்கு எல்லாம்
    ஏற்பட்ட பணியை நன்கு
    பொன்னேபோல் ஒருவகை யாலும்
    விடுதலை பூணும் செய்கை
    இன்னொரு மலர்க்கை யாலும்
    இயற்றுக! கல்வி இல்லா
    மின்னாளைவாழ்வில் என்றும்
    மின்னாள் என்றே உரைப்பேன்!

    சமைப்பதும் வீட்டு வேலை
    சலிப்பின்றிச் செயலும் பெண்கள்
    தமக்கே ஆம் என்று கூறல்
    சரியில்லை;ஆடவர்கள்
    நமக்கும் அப் பணிகள்ஏற்கும்
    என்றெண்ணும்நன்னாள்காண்போம்!
    சமைப்பது தாழ்வா? இன்பம்
    சமைக்கின்றார் சமையல் செய்வார்!

    உணவினை ஆக்கல் மக்கட்கு
    உயிர் ஆக்கல் அன்றோ?வாழ்வு
    பணத்தினால்அன்று! வில்வாள்
    படையினால் காண்ப தன்று!
    தணலினை அடுப்பில் இட்டுத்
    தாழியில் சுவையை இட்டே
    அணித்திருந் திட்டார்உள்ளத்து
    அன்பிட்ட உணவால் வாழ்வோம்!

    சமைப்பது பெண்க ளுக்குத்
    தவிர்க்க ஒணாக் கடமை என்றும்
    சமைத்திடும் தொழிலோ, நல்ல
    தாய்மார்க்கே தக்கது என்றும்
    தமிழ்த்திரு நாடு தன்னில்
    இருக்குமோர் சட்டந் தன்னை
    இமைப் போதில் நீக்கவேண்டில்
    பெண்கல்வி வேண்டும் யாண்டும்! "


    -என்ற பாடல் இடம் பெற்ற நூல் – குடும்ப விளக்கு.

    இதனை இயற்றியவர் – பாரதிதாசன்

    குடும்ப விளக்கு பற்றியக் குறிப்புகள்:

  • குடும்ப விளக்கு, குடும்ப உறவுகள் அன்பு என்னும் நூலால் பிணைந்துள்ளதைக் காட்டுகிறது.

  • கற்ற பெண்ணின் குடும்பமே பல்கலைகழகமாக மிளிரும் என்பதைக் காட்டுகிறது.

  • குடும்பம் தொடங்கி உலகினைப் பேணுதல்வரை தன் பணிகளைச் சிறப்பாகச் செய்யும் பெண்ணுக்குக் கல்வி முதன்மையானதும் இன்றியமையாததும் ஆகும்.

  • இந்நூல் 5 பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

  • சிறுபஞ்சமூலம்

    "பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,
    மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,
    விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு
    உரையாமைசெல்லும் உணர்வு"


    -என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல் – "சிறுபஞ்சமூலம்"

    பாடலின் பொருள்:

  • பூக்காமலே சில மரங்கள் காய்ப்பதுண்டு. இதைப் போலவே நன்மை, தீமைகளை நன்குணர்ந்தவர், வயதில் இளையவராக இருந்தாலும், அவர் மூத்தவரோடுவைத்துஎண்ணத்தக்கவரே ஆவார். பாத்திஅமைத்து விதை விதைக்காமலே, தானே முளைத்து வளரும் விதைகளும் உள்ளன. அதைப் போலவே மேதையரும் பிறர் உணர்த்தாமல் எதையும் தாமேஉணர்ந்து கொள்வர்.

  • மேற்கண்ட பாடலில் பயின்று வந்துள்ள அணி – "உவமையணி"

    "குளம்தொட்டுக் கோடு பதித்து வழிசீத்து
    உளம்தொட்டு உழுவயல் ஆக்கி – வளம்தொட்டுப்
    பாகுபடும் கிணற்றோடு என்று இவ்வைம் பாற்படுத்தான்
    ஏகும் சொர்க்கத்து இனிது"


    என்ற பாடல் இடம் பெற்ற நூல் – சிறுபஞ்சமூலம்

    சிறுபஞ்சமூலம் பற்றியக் குறிப்புகள்:

  • தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து நீதிநூல்கள் தோன்றின. அவை "பதினெண் கீழ்கணக்கு" எனத் தொகுக்கப்பட்டுள்ளன.

  • "சிறுபஞ்சமூலம்" பதினென்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று.

  • சிறுபஞ்சமூலம் என்பதற்கு ஐந்து சிறிய வேர்கள் என்பது பொருள். அவை "கண்டங்கத்திரி", "சிறுவழுதுணை", "சிறுமல்லி", "பெருமல்லி", "நெருஞ்சி" ஆகியன. இவ்வேர்களால் ஆன மருந்து உடலின் நோயைப் போக்குகின்றது.

  • அதுபோலச் சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துக்கள் மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாய் உள்ளன.

  • இப்பாடல்கள் நன்மை தருவன, தீமை தருவன, நகைப்புக்கு உரியன என்னும் வகையில் வாழ்வியல் உண்மைகளை எடுத்துக்காட்டுகின்றன.

  • சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் "காரியாசான்" "காரி" என்பது இவரது இயற்பெயர். "ஆசான்" என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்த பெயர்.

  • "மாக்காரியாசான்" என்று பாயிரச் செய்யுள் இவரைச் சிறப்பிக்கிறது.

  • இவர் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் ஆவார்.

  • சிறுபஞ்சமூலத்தின் பாடலில் ஐந்து கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

  • சிந்து பற்றியக் குறிப்புகள்

  • சிந்து என்பது ஓசை நயத்துடன் பாடக்கூடிய பாவகை.

  • நாட்டுப்புறப் பாடல் அமைப்பிலிருந்து தோன்றிய இவ்வடிவம் சிலப்பதிகாரக் காலத்திலிருந்து வழக்கில் இருக்கிறது.

  • சிந்து வகைப் பாடல்களை ஆராய்ந்தால், அவை சந்தமும் இயைபுத் தொடையும் அமைந்த கண்ணிகளைக் கொண்டவை என்பதை அறிய முடிகிறது.

  • இதே காலத்தில் கும்மிப்பாடல்களும் காவடிச்சிந்து, வழிநடைச்சிந்து. நொண்டிச்சிந்து போன்ற சந்தப் பாடல்களும் ஆனந்தக்களிப்பு, தெம்மாங்கு (தென்பாங்கு) முதலிய நாட்டுப்பாடல் வடிவங்களும் புதிய பாவடிவங்களாகத் தோன்றியுள்ளன.

  • ஓரெதுகை பெற்ற இரண்டு அடிகள் அளவொத்து வருவது "சிந்துப் பாவகை" ஆகும்.

  • "பாரதியார்" சிந்து வகையினை அதிகமாகக் கையாண்டிருக்கிறார். அவர் "சிந்துக்குத் தந்தை" என்று போற்றப்படுகிறார்.

  • சிந்து என்பது இசைத்தமிழ்ப் பாகுபாடுகளில் ஒன்று. பல்லவி (எடுப்பு), அனுபல்லவி (தொடுப்பு), இன்றிச் சரணங்களுக்குரிய (முடிப்பு) கண்ணிகளுடன் உடைய பாக்கள் சிலவகைச் சிந்துகளில் காணப்படுகின்றன.

  • சித்தர் பாடல்கள் பல சிந்துவகையில் அமைந்திருப்பதை காணலாம்.

  • (எ.கா) கடுவெளிச் சித்தரின் "பாப்பம் செய்யாதிருமனமே" என்னும் பாடல்.

    மதுரைக்காஞ்சி

  • மதுரையைச் சிறப்பித்துப் பாடியுள்ள நூல்களுள் பதினென் மேற்கணக்கின் "மதுரைக் காஞ்சி" முதன்மையானது.

  • "மண்உற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கின்

    விணுற ஓங்கிய பல்படைப் புரிசைத்

    தொல்வலி நிலைஇய, அணங்குடை நெடுநிலை

    நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்

    மழைஆடும் மலையின் நிவந்த மாடமொடு

    வையை அன்ன வழக்குடை வாயில்

    வகைபெற எழுந்து வானம் மூழ்கிச்

    சில்காற்று இசைக்கும் பல்புழை நல்இல்

    ஆறு கிடந்தன்ன அகல்நெடுந் தெருவில்

    பல்வேறு குழாஅத்து இசைஎழுந்து ஒலிப்ப

    மாகால் எடுத்த முந்நீர் போல

    முழங்கிசை நன்பணை அறைவனர் நுவலக்

    கயம் குடைந்தன்ன இயம்தொட்டு இமிழிசை

    மகிழ்ந்தோர் ஆடும் கலிகொள் சும்மை

    ஓவுக் கண்டன்ன இரு பெரு நியமத்து."
    -என்ற "மதுரைக்காஞ்சி பாடலில் "மாங்குடி மருதனார்" மதுரையைப் பற்றிக் கூறியுள்ளார்.

    மேற்கண்ட பாடலின் பொருள்:

  • மதுரை மாநகரில் ஆழமான தெளிந்த நீரையுடைய அகழி உள்ளது. பலகற்களைக் கொண்டு கட்டப்பட்ட மதில் வானளவு உயர்ந்துள்ளது. பழைமையானதும் வலிமை மிக்கதும் தெய்வத்தன்மை பொருந்தியதுமாகிய வாயில்உள்ளது. அவ்வாயில் நெய்பூசியதால் கருமையடைந்த வலிமையான கதவுகளைஉடையது. மேகங்கள் உலாவும் மலை போல் மாளிகைகள் உயர்ந்து உள்ளன. இடைவிடாது ஓடுகின்ற வையை ஆற்றைப் போல மக்கள் எப்போதும் வாயில்கள் வழிச் செல்கின்றனர்.

  • மண்டபம், கூடம், அடுக்களை எனப் பல்வேறு அங்கங்களைக் கொண்டு வான்வரை ஓங்கிய தென்றல் காற்று இசைக்கும் பலசாளரங்களையுடைய நல்ல இல்லங்கள் உள்ளன. ஆறு போன்ற அகலமான நீண்ட தெருக்களில் பொருள்களை வாங்க வந்த மக்கள் பேசும் பல்வேறு மொழிகள் ஒலிக்கின்றன. விழாபற்றிய முரசறைவோரின் முழக்கம் பெருங்காற்று புகுந்த கடலொலி போல் ஒலிக்கிறது. இசைக் கருவிகளை இயக்குவதால்உண்டாகும் இசை நீர்நிலைகளைக் கையால் குடைவித்து விளையாடும் தன்மை போல எழுகிறது. அதனைக் கேட்ட மக்கள் தெருக்களில் ஆரவாரத்தோடு ஆடுகின்றனர். பெரிய தெருக்களில்இருக்கும் நாளங்காடியும்அல்லங்காடியும்ஓவியங்கள் போலக் காட்சியளிக்கின்றன.

  • "மதுரைக் காஞ்சி" இயற்றியவர் – மாங்குடி மருதனார்.

  • கூட்டுறை வயமாப் புலியொடு குழும" என்ற அடிகளின் மூலமாக மதுரையில் வனவிலங்கு சரணாலயம் இருந்த செய்தியை "மதுரைக் காஞ்சியின்" மூலம் அறியலாம்.

  • மதுரையில் "வன விலங்கு சரணாலயம்" இருந்த செய்தியைக் கூறும் நூல் – "மதுரைக்காஞ்சி"

  • "பத்துப்பாட்டு ஆராய்ச்சி" என்ற நூலை எழுதியவர் – "மா.இராசமாணிக்கனார்"
  • மதுரைக்காஞ்சி பற்றியக் குறிப்புகள்:

  • மதுரைக்காஞ்சி பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.

  • "காஞ்சி" என்றால் "நிலையாமை" என்பது பொருள்.

  • மதுரையின் சிறப்புகளைப் பாடுவதாலும் நிலையாமையைப் பற்றிக் கூறுவதாலும் "மதுரைக்காஞ்சி" எனப்பட்டது.

  • இந்நூல் 782 அடிகளைக் கொண்டது. அவற்றுள் 354 அடிகள் மதுரையைப் பற்றி மட்டும் சிறப்பித்துக் கூறுகின்றன.

  • இந்நூலைப் "பெருகுவள மதுரைக்காஞ்சி" என்பர்.

  • மதுரைக் காஞ்சியின் பாட்டுடைத் தலைவன் " தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்"

  • மதுரைக் காஞ்சியைப் பாடியவர் – மாங்குடி மருதனார்.

  • இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாங்குடி என்னும் ஊரில் பிறந்தவர்.

  • இவர் எட்டுத்தொகையில் 13 பாடல்களைப் பாடியுள்ளார்.

  • இராவண காவியம்

    " அடுப்பிடு சாந்தமொடு அகிலின் நாற்றமும்
    துடுப்பிடு மைவனச் சோற்றின் நாற்றமும்
    மடுப்படு காந்தளின் மணமுந் தோய்தலாற்
    கடைப்படு பொருளெலாம் கமழும் குன்றமே
    அருவிய முருகியம் ஆர்ப்பப் பைங்கிளி
    பருகிய தமிழிசை பாடப் பொன்மயில்
    அருகிய சிறைவிரித் தாடப் பூஞ்சினை
    மருவிய குரக்கினம் மருண்டு நோக்குமால்"


    – என்ற பாடல் இராவண காவியத்தில் இடம்பெற்றுள்ளது.

    பாடலின் பொருள்:

  • தீயில் சுட்ட சந்தன மரக் குச்சிகள், அகில் இவற்றின் நறுமணமும் உலையிலிட்ட மலை நெல்லரிசிச் சோற்றின் மணமும் வெளிப்படும் காந்தள் மலரின் மணமும் பரவித் தோய்ந்து கிடந்ததனால் எல்லா இடங்களிலும் உள்ள பொருள்கள்மனம் கமழ்ந்து காணப்பட்டன.

  • அருவிகள் பாறையாய் ஒலிக்கும்; பைங்கிளி தானறிந்த தமிழிசையைப் பாடும்; பொன் போன்ற அழகிய மயில் தன் அருமையான சிறகினை விரித்து ஆடும்; இக்காட்சியினைப் பூக்கள் நிறைந்த மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் குரங்கினம் மிரட்சியுடன் பார்க்கும்.

  • "இராவண காவியம் காலத்தின் விளைவு, ஆராய்ச்சியின் அறிகுறி, புரட்சிப் பொறி உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்" என்று கூறியவர்- "அறிஞர் அண்ணா"
  • இராவண காவியம் பற்றியக் குறிப்புகள்:

  • இந்நூலின் ஆசிரியர் – புலவர் குழந்தை

  • இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தமிழ்ப் பெருங்காப்பியம் "இராவண காவியம்"

  • இந்நூல் "தமிழக்க் காண்டம்", "இலங்கைக் காண்டம்", "விந்தக் காண்டம்", "பழிபுரி காண்டம்", "போர்க்காண்டம்" என ஐந்து காண்டங்களை உடையது.

  • இந்நூல் 3100 பாடல்களை உடையது.

  • இந்நூல் "புலவர் குழந்தை" அவர்களால் இயற்றப்பட்டது.

  • தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் இவர் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்.

  • இவர் "யாப்பதிகாரம்", "தொடையதிகாரம்" உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கண இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.

  • இராமாயணத்தில் எதிர்நிலை மாந்தராகப் படைக்கப்பட்ட இராவணனை முதன்மை நாயனாகக் கொண்டு அமைக்கப்பட்ட்து "இராவண காவியம்".

  • நாச்சியார் திருமொழி

    "கதிரொளி தீபம் கலசம் உடனேந்தி

    சதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள

    மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டுஎங்கும்

    அதிரப் புகுதக் கனாக்கண்டேன்தோழிநான்

    மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத

    முத்துடைத் தாமம்நிரைதாழ்ந்தபந்தற்கீழ்

    மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்துஎன்னைக்

    கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழிநான்"


    -என்ற பாடல் இடம்பெற்ற நூல் – நாச்சியார் திருமொழி

    இதனை இயற்றியவர் – ஆண்டாள்

    பாடலின் பொருள்:

  • ஆடும் இளம்பெண்கள் கைகளில் கதிரவன் போன்ற விளக்கையும், கலசத்தையும் ஏந்தியவாறு வந்து எதிர்கொண்டு அழைக்கிறார்கள். வடமதுரையை ஆளும் மன்னன் கண்ணன் பாதுகைகளை அணிந்து கொண்டு புவி அதிர மகிழ்ச்சியுடன் நடந்து வருகிறான். இக்காட்சியை கனவில் கண்டதாக ஆண்டாள் கூறுகிறார்.

  • மத்தளம் முதலான இசைக்கருவிகள் முழங்குகின்றன.வரிகளையுடைய சங்குகளை ஊதுகின்றனர். அத்தை மகனும், மது என்ற அரக்கனை அழைத்தவனுமான கண்ணன், முத்துகளையுடைய மாலைகள்தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ், என்னைத் திருமணம் செய்துகொள்கிறான்இக்காட்சியைக் கனவில் கண்டதாக ஆண்டாள் கூறுகிறார்.

  • சீவக சிந்தாமணி

  • சீவகனைத் தலைவனாக்க் கொண்டு தோன்றிய காப்பியம் – சீவக சிந்தாமணி. இன்பங்களைத் துறந்து துறவு பூண வேண்டும் என்பதே இக்காப்பியத்தின் மையக்கருத்தாகும்.

  • "காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகின் நெற்றிப்
    பூமாண்ட தீந்தேன் தொடை கீறி வருக்கைபோழ்ந்து
    தேமாங்கனி சிதறி வாழைப் பழங்கள் சிந்தும்
    ஏமாங்கதம் என்று இசையால்திசை போயது உண்டே!" –
    என்ற சீவக சிந்தாமணி என்ற பாடலில் ஏமங்கத நாட்டின் வளம் கூறப்பட்டுள்ளது.

    பாடலின் பொருள்:

  • தென்னை மரத்திலிருந்து நன்றாகமுற்றிய காய் விழுகிறது. அது விழுகின்ற வேகத்தில்,பாக்கு மரத்தின் உச்சியிலுள்ள சுவைமிக்க தேனடையைக் கிழித்து, பலாப் பழத்தினைப் பிளந்து, மாங்கனியைச் சிதற வைத்து,வாழைப் பழத்தினை உதிரச்செய்தது.இத்தகு வளம் நிறைந்த ஏமாங்கதநாட்டின் புகழ் உலகின் பல திசைகளிலும் பரவியிருந்தது.
  • ஐம்பெருங்காப்பியங்கள்:

    • சிலப்பதிகாரம்
    • மணிமேகலை
    • குண்டலகேசி
    • வளையாபதி
    • சீவகசிந்தாமணி

    சீவக சிந்தாமணி பற்றியக் குறிப்புகள்:

  • சீவக சிந்தாமணி ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.

  • இது விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் ஆகும்.

  • "இலம்பகம்" என்ற உட்பிரிவு காணப்படுகிறது.

  • 13 இலம்பகங்களைக் கொண்டுள்ள இந்நூல் "மணநூல்" எனவும் அழைக்கப்படுகிறது.

  • ஏமாங்கத நாட்டின் வளம் பற்றி "நாமகள் இலம்பகத்தில்" கூறப்பட்டுள்ளது.

  • சீவக சிந்தாமணியின் ஆசிரியர் – திருத்தக்க தேவர். இவர், இன்பச்சுவை மிக்க இலக்கியமும் இயற்ற முடியும் என்று நிறுவும் வகையில் இக்காப்பியத்தை இயற்றினார்.

  • திருத்தக்கதேவரின் காலம் – கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு.

  • திருத்தக்கதேவர் சீவக சிந்தாமணியை பாடுவதற்கு முன்னோட்டமாக "நரிவிருத்தம்" என்னும் நூலைப் பாடினார்.

  • முத்தொள்ளாயிரம்

  • "முத்தொள்ளாயிரம்" என்னும் காப்பியம் "சேரன்", "சோழன்", "பாண்டியன்" என்னும் மூவேந்தரகளின் நாடுகளின் வளங்களை நயமாக வெளிப்படுத்துகிறது.

  • "அள்ளற் பழனத் தரக்காம்பல் வாய்அவிழ
    வெள்ளந்தீப் பட்ட தெனவெரீஇப் – புள்ளினம்தங்
    கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ
    நச்சிலைவேற் கோக்கோதை நாடு."


    -என்ற முத்தொள்ளாயிரப் பாடல் சேர நாட்டின் வளத்தைக் கூறுகிறது.

  • இப்பாடல் சேர நாட்டை அச்சமில்லாத நாடாக காட்டுகிறது.

  • இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி – "தற்குறிப்பேற்ற அணி"
  • பாடலின் பொருள்:

  • சேறுபட்ட நீர்மிக்க வயல்களில் அரக்கு நிறத்தில் செவ்வாம்பல்கள் மெல்ல விரிந்தன. அதைக் கண்ட நீர்ப்பறவைகள்தண்ணீரில் தீப்பிடித்துவிட்டது. என்று அஞ்சி விரைந்துதம் குஞ்சுகளைச் சிறைகளுக்குள்ஒடுக்கி வைத்துக் கொண்டன.அடடா! பகைவர் அஞ்சும் வேலைக் கொண்ட சேரனின் நாட்டில் இந்த அச்சம் இருக்கின்றதே!

  • "காவல் உழவர் களத்(து)அகத்துப் போர்ஏறி
    நாவலோஓ ! என்றிசைக்கும் நாளோதை காவலன்தன்
    கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே
    நல்யானைக் கோக்கிள்ளி நாடு."

    -என்ற முத்தொள்ளாயிரப் பாடல் சோழ நாட்டின் வளத்தைக் கூறுகிறது.

  • இப்பாடல் சோழ நாட்டை ஏர்க்களச் சிறப்புமிக்க நாடாக காட்டுகிறது.

  • இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி – "உவமை அணி"
  • பாடலின் பொருள்:

  • நெல்லை அறுவடை செய்து காக்கும் உழவர்கள் நெற்போர் மீதேறிநின்று கொண்டு மற்ற உழவர்களை "நாவலோ" என்று கூவி அழைப்பர். இவ்வாறு அவர்கள் செய்வது வீரர்கள் போர்க்களத்தில் கொல்யானை மீதேறி,நின்று கொண்டு "நாவலோ" என்று அழைப்பது போலிருந்தது. யானைப்படைகளை உடைய சோழனது நாடு, இத்தகு வளமும் வீரமும் மிக்கது.

  • "நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்
    பந்தர் இளங்கமுகின்பாளையும்-சிந்தித்
    திகழ் முத்தம்போல் தோன்றும் செம்மற்றே தென்னன்
    நகை முத்த வெண்குடையான் நாடு."

    -என்ற முத்தொள்ளாயிரப் பாடல் பாண்டிய நாட்டின் வளத்தைக் கூறுகிறது.

  • இப்பாடல் பாண்டிய நாட்டை முத்துடை நாடாக சிறப்பிக்கிறது.

  • இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி – "உவமை அணி"
  • பாடலின் பொருள்:

  • சங்குகள் மணலில் ஈனுகின்ற முட்டைகள் முத்துக்கள் போலிருக்கின்றன.தரையில் உதிர்ந்துகிடக்கும் புன்னை மொட்டுகள் முத்துகள் போலிருக்கின்றன.பந்தல் போட்டதுபோல் தோன்றும் பாக்கு மரத்தின் பாளையிலிருந்து சிந்தும் மணிகளும் முத்துகள் போலிருக்கின்றன.முத்துகளால் ஆன வெண்கொற்றக் குடையை உடையபாண்டியனது நாடு இத்தகைய முத்து வளம் மிக்கது.
  • முத்தொள்ளாயிரம் பற்றியக் குறிப்புகள்:

  • வெண்பாவால் எழுதப்பட்ட நூல் – முத்தொள்ளாயிரம்

  • மன்னர்களின் பெயரைக் குறிப்பிடாமல் சேர, சோழ, பாண்டியர் என்று பொதுவாகக் குறிப்பிடுகிறது. மூன்று மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட 900 பாடல்களைக் கொண்ட நூல் என்பதால் "முத்தொள்ளாயிரம்" என்று பெயர் பெற்றது.

  • நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. "புறத்திரட்டு" என்னும் நூலிலிருந்து 108 செய்யுள்கள் கிடைத்துள்ளன. அவை முத்தொள்ளாயிரம் என்னும் பெயரில் பதிக்கப்பட்டுள்ளன.

  • ஆசிரியர் பெயரை அறிய முடியவில்லை. இவர் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார்.

  • "பிறவி இருளைத் துளைத்து
    சூழலின் நிழலை வெறுத்து முகமுயர்த்தி
    எப்படி விண்ணின்று வழியும் ஒளியமுதைத் தேடிப் போகிறது
    ரவியின் கோடானுகோடி விரல்களின் அழைப்பிற்கு இணங்கி’
    எப்படி உடலை நெளித்து நீட்டி, வளைத்து வளருகிறது
    எப்படி அமிருதத்தை நம்பி, ஒளியை வேண்டி
    பெருமரத்துடன் சிறு கமுகு போட்டியிடுகிறது
    அதுவே வாழ்க்கைப் போர்
    முண்டி மோதும் துணிவே இன்பம்
    உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி"


    -என்ற பாடலை இயற்றியவர் –

    "ந.பிச்சமூர்த்தி"

    பாடலின் பொருள்:

  • கமுகு மரம், தான் தோன்றிய இடத்தில் இருந்த பெருமரத்தின் நிழல் என்னும் இருளைத் துளைத்து நின்றது.பெருமரத்தின் நிழலை வெறுத்தது. உச்சிக்கிளையை மேலே உயர்த்தியது.விண்ணிலிருந்து வரும் கதிரவன் ஒளியாகிய உயிர்ப்பைத் (அமுதை) தேடியது. மீண்டும் மீண்டும் உயர்ந்து உயரே கதிரவன் ஒளிக்கதிகளாகிய விரல்களின் அழைப்பைக் கண்டதும், பெருமரத்தின் இருட்டில் இருந்துகொண்டே தன் கிளைகளை வளைத்து நீட்டியது.

  • அமுதத்தை நம்பி,ஒளியை வேண்டிக் கமுகு அப்பெருமரத்துடன் போட்டி போடுகிறது அதுதான் வாழ்க்கைப்போர். வாழ்க்கை உறுதிபெற வேண்டுமென்றால் போட்டியிட்டு, போரிட்டே ஆக வேண்டும். பெருமரத்தைமுட்டி மோதிமேலே செல்லும் துணிச்சலே இன்பம்.முயற்சி உள்ளனவே வாழ்வில் மலர்ச்சி பெறும்.கமுகுமரம் கடுமையாகப் பெருமரத்தோடு முட்டிமோதித் துணிச்சலான முயற்சிகளில் ஈடுபட்டது.நம்பிக்கை,தன்முனைப்போடுகூடிய போட்டியில் கமுகு வென்றது.பெருமரத்தை விஞ்சி வளர்ச்சி நடை போடுகிறது.

  • யசோதர காவியம்

    "ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக
    போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக
    நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக
    காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே."


    -என்ற பாடல் இடம் பெற்ற நூல் – "யசோதர காவியம்"

    யசோதர காவியம் பற்றியக் குறிப்புகள்:

  • இதன் ஆசிரியர்: வெண்ணாவலூர் உடையார்வேள்.

  • இந்நூல் 320 பாடல்களை உடையது.

  • வடமொழியில் எழுதப்பட்ட உத்திர புராணத்திலிருந்து இதன் கதை எடுக்கப்பட்டது என்றும், புட்பதத்தர் எழுதிய யசோதர சரிதத்தின் தழுவல் என்றும் கூறுவர்.

  • ஐஞ்சிறுங்காப்பியங்களுள் ஒன்று யசோதர காவியம்.

  • இந்நூல் வடமொழியிலிருந்து தமிழில் தழுவப் பெற்றதாகும்.

  • இது சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது என்பர்.

  • யசோதர காவியம், "யசோதரன்" என்னும் அவந்தி நாட்டு மன்னனின் வரலாற்றைக் கூறுகிறது.

  • இந்நூல் 5 சருக்கங்களை உடையது.

  • குறுந்தொகை

  • "யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் – "குறுந்தொகை"

  • குறுந்தொகை அதன் சிறப்புக் கருதி "நல்ல குறுந்தொகை" என்று அழைக்கப்படுகிறது.

  • "நசைபெரிது உடையர்; நல்கலும் நல்குவர்
    பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
    மென்சினை யாஅம் பொளிக்கும்
    அன்பின- தோழி அவர் சென்ற ஆறே"

    – என்ற பாடலைப் பாடியவர் – "பாலை பாடிய பெருங்கடுங்கோ" (குறுந்தொகை)
  • இப்பாடலில் அமைந்துள்ள திணை – பாலைத்திணை

  • இப்பாடலில் அமையப்பெற்றுள்ள துறை – தலைவன் விரைந்து வருவான் எனத் தோழி தலைவியை ஆற்றியது.
  • பாடலின் பொருள்:

  • தோழி தலைவியிடம், " தலைவன் உன்னிடம் மிகுந்த விருப்பம் உடையவன். அவன் மீண்டும் வந்து அன்புடன் இருப்பான். பொருள் ஈட்டுவதற்காகப் பிரிந்து சென்ற வழியில் பெண் யானையின் பசியைப் போக்க, பெரிய கைகளை உடைய ஆண்யானை, மெல்லிய கிளைகளை உடைய "யா" மரத்தின் பட்டையை உரித்துத் தன் அன்பை வெளிப்படுத்தும்."

  • (அந்தக் காட்சியைத் தலைவனும் காண்பான்; அக்காட்சி உன்னை அவனுக்கு நினைவுப்படுத்தும். எனவே அவன் விரைந்து உன்னை நாடி வருவான். வருந்தாது ஆற்றியிருப்பாயாக) என்று கூறினாள்.
  • குறுந்தொகை பற்றியக் குறிப்புகள்:

  • குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.

  • இது அகநூல் ஆகும்.

  • இதை 203 புலவர்கள் பாடியுள்ளனர்.

  • குறுந்தொகையைத் தொகுத்தவர் – பூரிக்கோ

  • தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.

  • குறுந்தொகையில் கடவுள் வாழ்த்துப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்

  • குறுந்தொகையில் கடவுள் வாழ்த்து முருகனைப் பற்றியது.

  • அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் ஆகும்.

  • இது, தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளைக் கவிதையாக்கிக் கூறுகிறது.

  • கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 பாடல்களைக் கொண்டது.

  • இதன் பாடல்கள் நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் கொண்டவை.

  • 1915 ஆம் ஆண்டு சௌரிப்பெருமாள் அரங்கனார் முதன்முதலில் இந்நூலைப் பதிப்பித்தார்.

  • .
  • பெருங்கடுங்கோ சேர மரபைச் சேர்ந்த மன்னர்.;கலித்தொகையில் பாலைத் திணையைப் பாடியதால் "பாலை பாடிய பெருங்கடுங்கோ" என அழைக்கப் பெற்றார்.

  • "நசைபெரிது உடையர்; நல்கலும் நல்குவர்" என்ற பாடல் குறுந்தொகையில் 37 ஆவது பாடல் ஆகும்.

  • தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்

    தமிழின் தொன்மை, தமிழின் சிறப்புகள், திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்

  • திராவிட மொழிகளுள் மூத்த மொழியாய் இலங்குவது – தமிழ் மொழி

  • தமக்குத் தோன்றிய கருத்துகளைப் பிறருக்கு உணர்த்த மனிதர் கண்டுபிடித்த கருவியே மொழியாகும்.

  • முதலில் தம் எண்ணங்களை மெய்ப்பாடுகள், சைகைகள், ஒலிகள், ஓவியங்கள் போன்றவற்றின் மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்க முயன்றனர். இவற்றின் மூலம் பருப்பொருள்களை மட்டுமே ஓரளவு உணர்த்த முடிந்தது. நுண்பொருள்களை உணர்த்த இயலவில்லை. அதனால், ஒலிகளை உண்டாக்கிப் பயன்படுத்தத் தொடங்கினர். சைகையோடு சேர்ந்து பொருள் உணர்த்திய ஒலி, காலப்போக்கில் தனியாகப் பொருள் உணர்த்தும் வலிமைபெற்று மொழியாக வளர்ந்தது.

  • உலகத்திலுள்ள மொழிகளெல்லாம் அவற்றின் பிறப்பு, தொடர்பு, அமைப்பு, உறவு ஆகியவற்றின் அடிப்படையில் மொழிக்குடும்பங்கள் பலவாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

  • இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300 க்கும் மேற்பட்டது. இவற்றை நான்கு மொழிக் குடும்பங்களாகப் பிரிக்கின்றனர்.
    • இந்தோ – ஆசிய மொழிகள்

    • திராவிட மொழிகள்

    • ஆஸ்திரோ ஆசிய மொழிகள்

    • சீன – திபெத்திய மொழிகள்
  • இந்திய நாடு "மொழிகளின் காட்சிச்சாலை"யாகத் திகழ்கிறது என்று மொழியியல் அறிஞர் "ச. அகத்தியலிங்கம்" குறிப்பிட்டுள்ளார்.

  • உலகின் குறிப்பிடத்தக்க, பழைமையான நாகரிகங்களுள் இந்திய நாகரிகமும் ஒன்று. "மொகஞ்சதாரோ- ஹரப்பா" அகழாய்வுக்குப் பின்னர் இது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இதைத் "திராவிட நாகரிகம்" என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

  • திராவிடர் பேசிய மொழியே திராவிட மொழி எனப்படுகிறது.

  • திராவிடம் என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர்" குமரிலபட்டர்."

  • "தமிழ்" என்ற சொல்லிலிருந்து தான் "திராவிடா" என்ற சொல் பிறந்தது என்று மொழி ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

  • "ஹீராஸ் பாதிரியார்" என்பவர் இம்மாற்றத்தைத் தமிழ் – தமிழா – தமிலா – டிரமிலா – ட்ரமிலா – த்ராவிடா – திராவிடா என்று விளக்குகின்றார்.

  • 18ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இந்திய மொழிகள் அனைத்திற்கும் வடமொழியே மூலம் எனவும் அதிலிருந்தே மற்ற மொழிகள் தோன்றி வளர்ந்தன எனவும் அறிஞர்கள் கருதினர்.

  • "அறிஞர் வில்லியம் ஜோன்ஸ்" என்பார் வடமொழியை ஆராய்ந்து மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என முதன்முதலில் குறிப்பிட்டார். தொடர்ந்து, 1816 ஆம் ஆண்டில் பேராசிரியர்கள் பாப், ராஸ்க், கிரிம் முதலானோராலும் மொழி சார்ந்த பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

  • முதன் முதலில் "பிரான்சிஸ் எல்லிஸ்" என்பார் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்து இவை தனியொரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற கருத்தைமுன்வைத்தார். மேலும் இம்மொழிகளை ஒரே இனமாகக் கருதித் தென்னிந்திய மொழிகள் எனவும் பெயரிட்டார்.

  • ஹோக்கன் என்பவர் இம்மொழிகள் அனைத்தையும் இணைத்துத் "தமிழியன்" என்று பெயரிட்டதோடு ஆரிய மொழிகளிலிருந்து இவை மாறுபட்டவை என்றும் கருதினார். "மாக்ஸ் முல்லரும்" இதேகருத்தைக் கொண்டிருந்தார்.

  • 1856-ல் "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்ற நூலை எழுதியவர் – "கால்டுவெல்". இவர் திராவிட மொழிகள் ஆரியக் குடும்பத்திலிருந்து வேறுபட்டவை என்று கூறினார். திராவிட மொழிகள் மூன்று வகைப்படும்.
    • தென் திராவிட மொழிகள்

    • நடுத் திராவிட மொழிகள்

    • வடத் திராவிட மொழிகள்

    தென்திராவிட மொழிகள்:

    • தமிழ்

    • மலையாளம்

    • கன்னடம்

    • குடகு (கொடகு)

    • துளு

    • கோத்தா

    • கொரகா

    • இருளா

    நடுத்திராவிட மொழிகள்:

    • தெலுங்கு

    • கூயி

    • கூவி (குவி)

    • கோண்டா

    • கோலாமி (கொலாமி)

    • நாய்க்கி

    • பெங்கோ

    • மண்டா

    • பர்ஜி

    • கதபா

    • கோண்டி

    • கோயா

    வடத் திராவிட மொழிகள்:

    • குரூக்

    • மால்தோ

    • பிராகுய் (பிராகுயி)

    அண்மையில் கண்டறியப்பட்ட திராவிட மொழிகள்:

    1. எருகலா

    2. தங்கா

    3. குறும்பா

    4. சோழிகா
  • திராவிட மொழிகளின் எண்ணிக்கை – 28

  • "தமிழ் வடமொழியின் மகளன்று;அது தனிக்குடும்பத்திற்கு உரிய மொழி;சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி;தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம்." என்று கூறியவர் – "கால்டுவெல்"

  • திராவிட மொழிகள் பொதுவான அடிச்சொற்களைக் கொண்டிருக்கிறது.

  • அடிச்சொல்திராவிட மொழிகள்
    கண்தமிழ்
    கண்ணுமலையாளம், கன்னடம்
    கன்னுதெலுங்கு, குடகு
    ஃகன்குரூக்
    கெண்பர்ஜி
    கொண்தோடா

    திராவிட மொழிகளில் எண்கள் பெயர்கள் ஒன்று போலவே அமைந்துள்ளன.

    • மூன்று – தமிழ்

    • மூணு – மலையாளம்

    • மூடு – தெலுங்கு

    • மூரு – கன்னடம்

    • மூஜி – துளு
  • வடமொழியில் கைவிரல்கள் பெண்பால் என்றும் கால்விரல்கள் ஆண்பால் என்றும் வேறுபடுத்தப்படுகின்றன.

  • ஜெர்மன் மொழியில் வாய் – ஆண்பால், மூக்கு – பெண்பால், கண் – பொதுப்பால் எனப் பகுக்கும் நிலை உள்ளது.

  • திராவிட மொழிகளில் ஆண்பால் பெண்பால் என்ற பகுப்பு உயர்திணை ஒருமையில் காணப்படுகிறது.

  • "மந்தி" என்பதற்கு "பெண் குரங்கு" என்பது பொருள்.

  • "பிடி" என்பதற்கு "பெண் யானை" என்று பொருள்.
  • சில திராவிட மொழிகளின் பழமையான இலக்கிய இலக்கணங்கள்:

    மொழி – தமிழ் :
    • இலக்கியம் – சங்க இலக்கியம்

    • காலம் – கி.மு.5 – கி.பி.2 ஆம் நூற்றாண்டு

    • இலக்கணம் – தொல்காப்பியம்

    • ஆதாரம் – தமிழ் இலக்கிய வரலாறு (மு.வ),சாகித்திய அகாதெமி)
    மொழி – கன்னடம் :
    • இலக்கியம் – கவிராஜ மார்க்கம்

    • காலம் – கி.பி.9 ஆம் நூற்றாண்டு

    • இலக்கணம் – கவிராஜ மார்க்கம்

    • காலம் – கி.பி,9 ஆம் நூற்றாண்டு

    • ஆதாரம் – இந்திய இலக்கணக் கொள்கைகளின் பின்னணியில் தமிழ் இலக்கனம் -செ.வை.சண்முகம்
    மொழி – தெலுங்கு :
    • இலக்கியம் – பாரதம்

    • காலம் – கி.பி.11 ஆம் நூற்றாண்டு

    • இலக்கணம் – ஆந்திர பாஷா பூஷணம்

    • காலம் – கி.பி.12 ஆம் நூற்றாண்டு

    • ஆரதாரம் – இந்திய இலக்கணக் கொள்கைகளின் பின்னணியில் தமிழ் இலக்கனம் -செ.வை.சண்முகம்
    மொழி – மலையாளம் :
    • இலக்கியம் – ராம சரிதம்

    • காலம் – கி.பி.12 ஆம் நூற்றாண்டு

    • இலக்கணம் – லீலா திலகம்

    • காலம் – கி.பி.15 ஆம் நூற்றாண்டு

    • ஆதாரம் – மலையாள இலக்கிய வரலாறு – சாகித்திய அகாதெமி

    திராவிட மொழிகளில் சொல் ஒற்றுமை:

    (எ.கா) மரம்
    • தமிழ் – மரம்

    • மலையாளம் – மரம்

    • தெலுங்கு – மானு

    • கன்னடம் – மரம்

    • துளு – மர

    • கூர்க் – மர
    (எ.கா) "நீ"
    • தமிழ் – நீ

    • மலையாளம் – நீ

    • தெலுங்கு – நீவு

    • கன்னடம் – நீன்

    • துளு – ஈ

    • கூர்க் – நின்
  • இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, பிஜித்தீவு ஆகிய நாடுகளில் மட்டுமல்லாமல் தென்ஆப்பிரிக்கா, மொரிஷியஸ், இங்கிலாந்து, கயானா, மடகாஸ்கர், ட்ரினிடாட், ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிலும் பேசப்படும் பெருமையுடையது தமிழ் மொழி. மொரிசியஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பணத்தாளில் தமிழ்மொழி இடம் பெற்றுள்ளது.

  • திராவிட மொழிகளுள் பிற மொழித்தாக்கம் மிகவும் குறைந்ததாகக் காணப்படும் மொழி தமிழேயாகும்.

  • ஏனைய திராவிட மொழிகளை விடவும் தமிழ்மொழி தனக்கெனத் தனித்த இலக்கண வளத்தைப் பெற்றுத் தனித்தியங்கும் மொழியாகும். தமிழ்மொழி, திராவிட மொழிகள் சிலவற்றின் தாய்மொழியாகக் கருதப்படுகி்றது.

  • ஒரே பொருளைக் குறிக்கப் பல சொற்கள் அமைந்த சொல்வளமும் சொல்லாட்சியும் நிரம்பப் பெற்ற மொழி தமிழேயாகும். இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழிழேயே அமைந்துள்ளன.

  • ஈரோடு தமிழன்பன்

    "காலம் பிறக்கும்முன் பிறந்த்தது தமிழே! எந்தக்
    காலமும் நிலையாய இருப்பதும் தமிழே!

    அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் – அவை
    அமைந்ததைச் சொல்லும் இலக்கனங்கள்
    நிகரிலாக் காப்பியப் பூவனங்கள் – உன்
    நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்!

    ஏனிவ் விருட்டெனக் கேட்டுவரும் – நீதி
    ஏந்திய தீபமாய்ப் பாட்டுவரும்
    மானிட மேன்மையைச் சாதித்திடக் – குறள்
    மட்ட்மே போதுமே ஓதி, நட….

    எத்தனை எத்தனை சமயங்கள் – தமிழ்
    ஏந்தி வளர்த்தது தாயெனவே
    சித்தர் மரபிலே தீதறுக்கும் – புதுச்
    சிந்தனை வீச்சுகள் பாய்ந்தனவே…

    விரலை மடக்கியவன் இசையில்லை – எழில்
    வீனையில் என்று சொல்வது போல்
    குறைகள் சொல்வதை விட்டுவிட்டுப் புதுக்
    கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்!"


    என்ற பாடலை இயற்றியவர் – "ஈரோடு தமிழன்பன்".

    இப்பாடல் "தமிழோவியம்"என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

    ஈரோடு தமிழன்பன் பற்றியக் குறிப்புகள்:

  • இவரது இயற்பெயர் : ஜெகதீசன்

  • பெற்றோர் : நடராஜா – வள்ளியம்மாள்

  • பிறந்த ஊர் : கோவை மாவட்டம் சென்னிமலை

  • ஈரோட்டில் பணியாற்றியதால் "ஈரோடு தமிழன்பன்"எனப் புனைப்பெயர் கொண்டார்.

  • "விடிவெள்ளி "என்பதும் இவரது புனைப்பெயர் ஆகும்.

  • இவர் பாரதிதாசன் பரம்பரையினர்.

  • ஆயிரம் அரங்கம் கண்ட கவியரங்கக் கவிஞர்.

  • அரசு தொலைக்காட்சியில் தமிழ்ச் செய்தி வாசிப்பாளராக இருந்தவர்.

  • "அரிமா நோக்கு "என்ற ஆய்வு இதழ் ஆசிரியர்.

  • "தமிழோவியம்" என்னும் நூலை இயற்றியுள்ளார்.

  • "ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்து கொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை.பாடலும் அப்படித்தான்!" என்று தம் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

  • ஈரோடு தமிழன்பனின் "வணக்கம் வள்ளுவ" என்னும் கவிதை நூலுக்கு 2004 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

  • "தமிழன்பன் கவிதைகள்" தமிழக அரசின் பரிசுபெற்ற நூலாகும்.

  • இவரது கவிதைகள் இந்தி,உருது,மலையாளம்,ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
  • ஈரோடு தமிழன்பன் இயற்றிய நூல்கள்:

    1. தமிழன்பன் கவிதைகள்

    2. சிலிர்ப்புகள்

    3. தோணி வருகிறது

    4. விடியல் விழுதுகள்

    5. தீவுகள் கரையேறுகின்றன

    6. நிலாவரும் நேரும்

    7. சூரியப் பிறை

    8. ஊமை வெயில்

    9. திரும்பி வந்த தேர்வலம்

    10. நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்

    11. காலத்திற்கு ஒருநாள் முந்தி

    12. ஒருவண்டி சென்ரியு

    13. வணக்கம் வள்ளுவ
  • "சிலம்பை உடைத்து என்னபயன் அரியணையிலும் அந்தக் கொல்லன்"என்ற அடிகளை இயற்றியவர் – ஈரோடு தமிழன்பன்

  • "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" என்று கூறியவர் – பாரதியார்.

  • உலகத் தாய்மொழி தினம் – பிப்ரவரி 21

  • தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள் – இலங்கை, சிங்கப்பூர்

  • தமிழ்விடுதூது பற்றியக் குறிப்புகள்

  • சிற்றிலக்கிய வகைகளுள் "தூது" என்பதும் ஒன்று.

  • இது "வாயில் இலக்கியம்", "சந்து இலக்கியம்" என்னும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

  • இது தலைவன் தலைவியர்களுள் காதல் கொண்ட ஒருவர் மற்றொருவர்பால் செலுத்தும் அன்பைப் புலப்படுத்தித் தம்முடைய கருத்திற்கு உடன்பட்டமைக்கு அறிகுறியாக "மாலையை வாங்கிவருமாறு" அன்னம் முதல் வண்டு ஈறாகப் பத்தையும் தூது விடுவதாகக் "கலிவெண்பா"வால் இயற்றப்படுவதாகும்.

  • தமிழ்விடுதூது, மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலைக் கூறிவருமாறு தமிழ்மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது.

  • இந்நூல் 268 கண்ணிகளை உடையது.

  • இந்நூலை 1930-ல் உ.வே..சா முதன் முதலில் பதிப்பித்தார்.

  • இதன் ஆசிரியர் யார் என அறிந்துகொள்ள இயலவில்லை.

  • தமிழ் மொழியின் தொன்மை

    • சங்கஇலக்கியத்தில் "நாவாய்", வங்கம்", "தோணி", "கலம்" போன்ற பலவகையான கடற்கலன்கள் இயக்கப்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன.

    • இதில் தமிழ்ச் சொல்லாகிய "நாவாய்" என்பதே ஆங்கிலத்தில் "நேவி" என ஆகியுள்ளது.

    • உலகின் தொன்மையான மொழியாகவும் செவ்வியல் மொழியாகவும் திகழ்வது கிரேக்க மொழியாகும்.

    • தமிழில் "பா" என்றால் கிரேக்க மொழியின் தொன்மையான காப்பியமாகிய "இலியாத்தில்" "பாய்யியோனா " எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போலோ என்னும் கடவுளுக்குப் பாடப்படுவது "பா" எனக் கிரேக்கத்தில் குறிக்கப்படுகிறது.

    • பா வகைகளுள் ஒன்று வெண்பா. வெண்பாவின் ஓசையானது செப்பலோசைஆகும். கிரேக்கத்தில் வெண்பா வடிவப் பாடல்கள் "சாப்போ" என அழைக்கப்படுகின்றன. இது கிரேக்கத்திலிருந்து இலத்தீன் மொழிக்கு வந்து பின் ஆங்கிலத்தில் "சேப்பிக் ஸ்டேன்சா" என இன்று வழங்கப்படுகிறது.

    • பாவின் சுவைகளில் ஒன்றாக "இளிவரல்" என்ற துன்பச்சுவையினைத் தமிழிலக்கணங்கள் சுட்டுகின்றன. கிரேக்கத்தில்துன்பச்சுவையுடைய பாடல்கள் "இளிகியா" என அழைக்கப்படுகின்றன.

    • கிரேக்கத்தின் தொன்மையான காப்பியம் "இலியாத்" இது கி.மு.8 ஆம் நூற்றாண்டச் சேர்ந்தது.

    • "எறிதிரேசியன் ஆப் த பெரிபுலஸ்" என்னும் நூல் கிரேக்க நூலாகும்."எறிதிரை" என்பது தமிழ்ச் சொல் ஆகும். "கடலைச் சார்ந்த பெரிய புலம் என்பதே "எறிதிரேசியன் ஆப் த பெரிபுலஸ்" என ஆகியுள்ளது.
    "விரிகின்ற நெடுவானில், கடற்பரப்பில்

    விண்ணோங்கு பெருமலையில், பள்ளத் தாக்கில்

    பொழிகின்ற புனலருவிப் பொழிலில், காட்டில்

    புல்வெளியில், நல்வயலில்,விலங்கில் புள்ளில்

    தெரிகின்ற பொருளிலெல்லாம் திகழ்ந்து நெஞ்சில்

    தெவிட்டாத நுண்பாட்டே, தூய்மை ஊற்றே,

    அழகு என்னும் பேரொழுங்கே,மெய்யே, மக்கள்

    அகத்திலும் நீ குடியிருக்க வேண்டுவேனே!"


    என்ற பாடலை எழுதியவர் – ம.இலெ.தங்கப்பா

    நூல்களும் ஆசிரியர்களும்:

  • திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் – ராபர்ட் கால்டுவெல்

  • மொழிபெயர்ப்பும் ஒலிபெயர்ப்பும் – மணவை முஸ்தபா

  • கவிஞர் தமிழ் ஒளி

  • "பட்ட மரம்"என்னும் கவிதையை எழுதியவர் – கவிஞர் தமிழ் ஒளி

  • "மொட்டைக் கிளையொடு
    நின்று தினம்பெரு
    மூச்சு விடும்மரமே!
    வெட்டப் படும்ஒரு
    நாள்வரு மென்று
    விசனம் அடைந்தனையோ?

    குந்தநிழல்தரக்
    கந்தமலர்தரக்
    கூரை விரித்தஇலை!
    வெந்து கருகிட
    இந்தநிறம்வர
    வெம்பிக் குமைந்தனையோ?

    கட்டையெனும்பெயர்
    உற்றுக் கொடுந்துயர்
    பட்டுக் கருகினையே!
    பட்டையெனும்உடை
    இற்றுக் கிழிந்தெழில்
    முற்றும் இழந்தனையே!

    காலம் எனும்புயல்
    சீறி எதிர்க்கக்
    கலங்கும் ஒருமனிதன்
    ஓலமி டக்கரம்
    நீட்டியபோல்இடர்
    எய்தி உழன்றனையே!

    பாடும் பறவைகள்
    கூடி உனக்கொரு
    பாடல் புனைந்ததுவும்
    மூடு பனித்திரை
    யூடு புவிக்கொரு
    மோகங்கொடுத்ததுவும்
    ஆடுங்கிளைமிசை
    ஏறிச் சிறுவர்
    குதிரை விடுத்ததுவும்
    ஏடு தருங்கதை
    யாக முடிந்தன!
    இன்று வெறுங்கனவே! "


    என்ற கவிதையை எழுதியவர் – கவிஞர் தமிழ் ஒளி (பட்ட மரம் என்னும் கவிதை)

    கவிஞர் தமிழ் ஒளி பற்றியக் குறிப்புகள்:

  • கவிஞர் தமிழ் ஒளி புதுவையில் பிறந்தார்.

  • இவரது இயற்பெயர் – விஜயரங்கன்.

  • இவர் சந்தக்கவிதைகளை மிகுதியாக எழுதியுள்ளார்.

  • பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கியவர்.

  • இவரது காலம்: 1924-1965
  • கவிஞர் தமிழ் ஒளி இயற்றிய நூல்கள்:

    • நிலைபெற்ற சிலை

    • வீராயி

    • கவிஞனின் காதல்

    • மே தினமே வருக

    • கண்ணப்பன் கிளிகள்

    • குருவிப்பட்டி

    • தமிழர் சமுதாயம்

    • மாதவி காவியம்

    • விதியோ வினையோ

    • கோசலைக்குமரி

    • திருக்குறளும் கடவுளும்

    • சிலப்பதிகாரம் காவியமா? நாடகமா?

    சேக்கிழார் பற்றியக் குறிப்புகள்

  • சேக்கிழாரின் காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு.

  • சேக்கிழாரின் இயற்பெயர் – அருண்மொழித்தேவர்.

  • சேக்கிழார் பிறந்த ஊர் – குன்றத்தூர்.

  • சேக்கிழார் "உத்தம சோழ பல்லவன் "என்ற பட்டம் பெற்றவர்.

  • இவருக்குத் தொண்டர் சீர் பரவுவார் என்ற பெயரும் உண்டு.

  • இவர் சோழ அரசன் இரண்டாம் குலோத்துங்கன் அவையில் முதன்மை அமைச்சராக இருந்தார்.

  • இவரை "பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ" என்று மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் பாராட்டியுள்ளார்.

  • "வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம்
    கானலின் நீரோ? – வெறுங் காட்சிப் பிழைதானோ?
    போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே
    போனதனால் நனும்ஓர் கனவோ? – இந்த
    ஞாலமும் பொய்தானோ?"


    என்று பாடியவர் – பாரதியார்.

    எழுத்தாளர் கந்தர்வன் பற்றியக் குறிப்புகள்

    • கந்தர்வனின் இயற்பெயர் – நாகலிங்கம்.

    • இவர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

    • தமிழ்நாடு அரசின் கருவூலக் கணக்குத்துறையில் பணியாற்றியவர்.

    • "சாசனம்", "ஒவ்வொரு கல்லாய்", "கொம்பன்" முதலியவை இவரது குறிபிடத்தக்க சிறுகதைத் தொகுப்புகள் ஆகும்.

    • "உணவெனப்படுவது நிலத்தொடு நீரே" என்று கூறும் நூல் – புறநானூறு.

    • "தண்ணீர்" என்னும் சிறுகதையின் ஆசிரியர் – "கந்தர்வன்"
  • "நீரின்றி அமையாது உலகு"என்று கூறியவர் – திருவள்ளுவர்

  • "மாமழை போற்றதும்" என்றவர் – இளங்கோவடிகள்

  • "பூ மொழி "என்னும் கவிதையினை எழுதியவர் – யூமா வாசுகி

  • "கல்லும் மலையும் குதித்துவந்தேன் – பெருங்
    காடும் செடியும் கடந்துவந்தேன்;
    எல்லைவிரிந்தசமவெளி – எங்கும்நான்
    இறங்கித் தவழ்ந்து தவழ்ந்து வந்தேன்.
    ஏறாதமேடுகள் ஏறிவந்தேன்-பல
    ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்;
    ஊறாதஊற்றிலும் உட்புகுந்தேன்-மணல்
    ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன்."


    என்ற பாடலை இயற்றியவர் – "கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை"

    நூல்களும் ஆசிரியர்களும்:

    • அழகின் சிரிப்பு – பாவேந்தர் பாரதிதாசன்

    • தண்ணீர் தண்ணீர் – கோமல் சுவாமிநாதன்

    • தண்ணீர் தேசம் – வைரமுத்து

    • வாய்க்கால் மீன்கள் – வெ.இறையன்பு

    • மழைக்காலமும் குயிலோசையும் – மா.கிருஷ்ணன்

    • "கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும்" என்னும் நூலின் ஆசிரியர் – மா.அமரேசன்

    தமிழர்கள் சிறப்பும் பெருமையும்

    ஏறு தழுவுதல்:

  • சங்க இலக்கியமான கலித்தொகையில், "ஏறு தழுவுதல்" பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • "எழுந்தது துகள், ஏற்றனர் மார்பு, கவிழ்ந்தன மருப்பு, கலங்கினர் பலர்" என்ற "கலித்தொகை"யில் இடம் பெற்றுள்ள முல்லைக்கலியில் ஏறு தழுவுதல் களம் குறித்த அடிகள், காட்சியைநம் கண் முன்னே நிறுத்துகின்றன. காளைகளின் பாய்ச்சல் பற்றியும் "கலித்தொகை" கூறுகிறது.

  • திமில் பெருத்த காளைகள் பல, நிலத்திலிருந்து நீரைக்கொண்டு வருபவை போல நிலத்தை முட்டின; சில நிலத்தை நொறுக்கின; சில தம்முள் முரண்பட்டு ஒன்றோடொன்று எதிர்த்துக் கொண்டன; சில மண்டியிட்டுப் பாய்ந்தன.

  • இ்ந்தக் காளைகள் மிடுக்குடனும் வீரத்துடனும் போருக்குச் செல்லும் மருதநிலத்துப் போர் வீரர்களை நிகர்த்தனவாக இருந்தன. இதனை,

  • "நீறு எடுப்பவை,நிலம் சாடுபவை
    மாறுஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவையாய்
    துளங்கு இமில் நல்ஏற்றினம் பல களம்புகும்
    மள்ளர் வனப்பு ஒத்தன"


    என்று கலித்தொகை விவரிக்கிறது.


  • கலித்தொகை தவிர, சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்களிலும் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.

  • "எருதுகட்டி" என்னும் மாடுதழுவுதல் நிகழ்வை பதிவு செய்துள்ள பள்ளு இலக்கியம் – "கண்ணுடையம்மன் பள்ளு"

  • கருவந்துறை என்னும் ஊரில் எருதோடு போராடி இறந்துபட்டவனாகிய "சங்கன்" என்பவனுக்கு அவனுடைய மகன் பெரிய பயல் எடுத்த நடுகல் சேலம் மாவட்டத்தில் உள்ளது.

  • கூரிய கொம்புகளும் சிலிர்த்த திமில்களும் கொண்ட மூன்று எருதுகளைப் பலர் கூடி விரட்டுவது போன்ற ஓவியம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள "கரிக்கையூரில்" காணப்படுகிறது. திமிலுடன் கூடிய காளையொன்றை ஒருவர் அடக்க முயல்வது போன்ற ஓவியம் மதுரை உசிலம்பட்டி அருகே கல்லூத்து மேட்டுப்பட்டியில் கானப்படுகிறது.

  • தேனி மயிலாடும் பாறை அருகே சித்திரக்கல்புடவில் என்ற திமிலுடன் கூடிய காளை ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது.

  • சிந்துவெளி அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மாடு தழுவும் கல்முத்திரை ஒன்று தமிழர்களின் பண்பாட்டுத் தொல்லியல் அடையாளமான ஏறுதழுவுதலைக் குறிப்பதாக "ஐராவதம் மகாதேவன்" தெரிவித்துள்ளார்.

  • வேளான் உற்பத்தியின் பண்பாட்டு அடையாளம் – "ஏறுதழுவுதல்".
  • ஏறுதழுவுதலின் பல்வேறு பெயர்கள்:

    • மாடு பிடித்தல்

    • மாடு அணைதல்

    • மாடு விடுதல்

    • மஞ்சுவிரட்டு

    • வேலி மஞ்சுவிரட்டு

    • எருது கட்டி

    • காளை விரட்டு

    • ஏறு விடுதல்

    • சல்லிக்கட்டு
  • சல்லிக்கட்டு பேச்சுவழக்கில் திரிபுற்று, "ஜல்லிக்கட்டு" என அழைக்கப்படுகிறது.

  • "சல்லி" என்பது மாட்டின் கழுத்தில்கட்டப்படுகின்ற வளையத்தினைக் குறிக்கும்.

  • மேலைநாடுகளில் குறிப்பாக, தேசிய விளையாட்டாகக் காளைச்சண்டையைக் கொண்டிருக்கும் ஸ்பெயின் நாட்டில், காளையைக் கொன்று அடக்குபவனே வீரனாகக் கருதப்படுவான். அவ்விளையாட்டில், ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் உண்டு.

  • தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாக விளங்கும் "ஏறுதழுவுதல்" இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மையுடையது.

  • தமிழக தொல்லியல் ஆய்வுகள்

  • மதுரை நகருக்கு அருகே "கீழடி" என்ற இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களில் தொன்மையானவை சுமார் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனக் கருதப்படுகின்றன. இதுவரை அகழாய்வு செய்யப்பட்டபெரும்பான்மையான இடங்கள் இறப்பு தொடர்பான தடயங்களை வெளிப்படுத்துவனவாக உள்ளன.ஆனால் கீழடியில் கண்டறியப்பட்டுள்ள முழுமையான வாழ்விடப்பகுதியும் செங்கல் கட்டுமானங்களும் இதரபொருட்களும் தமிழரின் உயரிய நாகரிகத்தை கண்முன் காட்டும் சாட்சிகளாய் அமைந்துள்ளன.

  • 150 ஆண்டுகளுக்கு முன்னால் 1863ஆம் ஆண்டு "இராபர்ட் புரூஸ்புட்" என்னும் தொல்லியல் அறிஞர் சென்னைப் பல்லாவரம் செம்மண் மேட்டுப்பகுதியில் எலும்பையும் கற்கருவியையும் கண்டுபிடித்தார். இந்தக் கற்கருவிதான் இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட முதல் கல்லாயுதம். இந்தக் கல்லாயுதம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே, ரோமானியர்களின் பழங்காசுகள் கோவையில் கண்டெடுக்கப்பட்டது.

  • அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன. அதனால், ரோமானியர்களுக்கும் நமக்கும் இருந்த வணிகத் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டது.

  • 1914ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்டஅகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

  • "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே" என்று கூறும் நூல் – நன்னூல்.

  • நன்னூலை இயற்றியவர் – பவணந்தி முனிவர்.

  • "பட்டிமண்டபம்" என்பதுதான் இலக்கிய வழக்கு. ஆனால் இன்று நடைமுறையில் பலரும் பட்டிமன்றம் என்றே குறிப்பிடுகிறார்கள். சங்க இலக்கியத்திலும் "பட்டி மண்டபம்" என்னும் சொல்லே எடுத்தாளப்பட்டுள்ளது.

  • "மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன், பகைப்புறத்துக்கொடுத்த பட்டிமண்டபம்" என்று கூறும் நூல் – சிலப்பதிகாரம்

  • "பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்" என்று கூறும் நூல் – மணிமேகலை

  • "பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை;எட்டினோடு இரண்டும் அறியனையே" என்று கூறும் நூல் – திருவாசகம்

  • "பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம்" என்று கூறும் நூல் – "கம்பராமாயணம்".

  • தமிழக மாடுகளின் தாய் இனம் என்று கருதப்படுவது – "காங்கேயம் மாடுகள்".

  • கரூர்,அமராவதி ஆற்றுத் துறையில்காங்கேய மாடுகளின் உருவம் பொறித்த கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர் கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • நூல்களும் ஆசிரியர்களும்:

    • தமிழர் நாகரிகமும் பண்பாடும் – அ.தட்சிணாமூர்த்தி

    • தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் – மா.இராசமாணிக்கனார்

    • தமிழ் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள் – க.ரத்னம்

    • தொல்லியல் நோக்கில் சங்க காலம் – கா.ராஜன்

    • தமிழர் சால்பு – சு.வித்யானந்தன்

    • அக்னிச் சிறகுகள் – அப்துல் கலாம்

    • மின்மினி – ஆயிஷா நடராஜன்

    • ஏன்,எதற்கு, எப்படி – சுஜாதா
    "பொங்கியும் பொலிந்தும் நீண்ட புதுப்பிடர் மயிர்சி லிர்க்கும்
    சிங்கமே! வான வீதி திகுதிகு எனஎ ரிக்கும்
    மங்காத தணற்பி ழம்பே! மாணிக்கக் குன்றே! தீர்ந்த
    தங்கத்தின் தட்டே! வானத் தகளியிற் பெருவி ளக்கே!

    கடலிலே கோடி கோடிக் கதிர்க்கைகள் ஊன்று கின்றாய்
    நெடுவானில் கோடி கோடி நிறைசுடர்க் கைகள் நீட்டி
    இடைப்படு மலையோ காடோ இல்லமோ பொய்கை ஆறோ
    அடங்கநின் ஒளிஅ ளாவ அமைந்தனை! பரிதி வாழி!"


    என்ற பாடலை இயற்றியவர் – "பாரதிதாசன்"

    தமிழக பெண்கள்

    சங்ககாலப் பெண்பாற் புலவர்கள்:

    • ஔவையார்

    • ஒக்கூர் மசாத்தியார்

    • ஆதிமந்தியார்

    • வெண்ணிக் குயத்தியார்

    • பொன்முடியார்

    • அள்ளூர் நன்முல்லையார்

    • நக்கண்ணையார்

    • காக்கைப்பாடினியார்

    • வெள்ளிவீதியார்

    • காவற்பெண்டு

    • நப்பசலையார்
  • தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் – டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

  • இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் – டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

  • சென்னை மாநாகராட்சியின் முதல் துணை மேயர் – டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

  • சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி – டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

  • தேவதாசி ஒழிப்புச்சட்டம், இருதார தடைச்சட்டம், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தை திருமண தடைச் சட்டம் ஆகியவை நிறைவேற காரணமாக இருந்தவர் – டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

  • அடையற்றில் 1930-ல் ஔவை இல்லம்,1952-ல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர் – டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

  • 1882-ல் ஹண்டர் குழு முதன்முதலில் பெண் கல்விக்குப் பரிந்துரை செய்தது.அந்த அறிக்கையின் படி மராட்டிய மாநிலத்தில் ஜோதிராவ் பூலே, சாவித்திரிபாய் பூலே இணையர் முதன்முதலாகப் பெண்களுக்கானப் பள்ளியைத் தொடங்கினார்கள்.

  • பெண்கள் மருத்துவராவதை மருத்துவ உலகமே விரும்பாத காலத்தில் மருத்துவராகி,தமிழகத்திற்கு வந்து, வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர் – "ஐடாஸ் சோபியா ஸ்கட்டர்" (1870 – 1960)

  • 2014-ல் நோபல் பரிசு வாங்கிய இந்தியர் – "கைலாஷ் சத்தியார்த்தி"

  • பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி போராடியதற்காக நோபல் பரிசு பெற்றவர் – "மலாலா"

  • பாகிஸ்தானில் பெண்கல்வி வேண்டுமெனப் போராட்டக் களத்தில் இறங்கியபோது மலாலாவின் வயது – இவர் பிறந்த ஆண்டு – 1997

  • "1848"-ல் பெண்களுக்கெனத் தொடங்கப்பட்ட பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர் – "சாவித்திரிபாய் பூலே".

  • நாட்டின் முதல் பெண் ஆசிரியர் – "சாவித்திரிபாய் பூலே"

  • பண்டித ரமாபாய் சமூகத் தனார்வலர்.தடைகளை மீறி கல்வி கற்றுப் பண்டிதராகியவர். பெண்களின் உயர்வுக்குத் துனை நின்றவர். இவரது காலம் – 1858-1922
  • மூவலூர் இராமாமிர்தம் பற்றியக் குறிப்புகள்:

    • தமிழகத்தின் சமூக சீர்திருத்தவாதி.

    • எழுத்தாளர்.

    • திராவிட இயக்க அரசியல் செயல்பாட்டாளர்.

    • தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துனைநின்றவர்.

    • தமிழக அரசு 8 ஆம் வகுப்புவரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகையை இவரின் பெயரில் வழங்குகிறது.

    • இவரது காலம் – 1883 – 1962

    பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டங்கள்:

  • ஈ.வெ.ரா – நாகம்மை இலவசக் கல்வி உதவித் திட்டம் பட்ட மேற்படிப்பிற்கு உரியது.

  • சிவகாமி அம்மையார் கல்வி உதவித் திட்டம்- கல்வி, திருமண உதவித் தொகை ஆகியவற்றுடன் தொடர்புடையது.

  • 1964 ஆம் ஆண்டு "கோத்தாரிக் கல்விக் குழு" தன் பரிந்துரையில் அனைத்து நிலையிலும் மகளிர் கல்வியை வலியுறுத்தியது.

  • பெண்கள் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாய் இருக்கும் குழந்தைத் திருமணத்தைத் தடுக்க 1929 ஆம் ஆண்டு "சாரதா சட்டம்" கொண்டு வரப்பட்டது.
  • நீலாம்பிகை அம்மையார் பற்றியக் குறிப்புகள்:

  • இவர் மறைமலையடிகளின் மகள் ஆவார்

  • தந்தையைப் போலவே தனித்தமிழ்ப் பற்றுடையவர்

  • இவரது படைப்புகள்:

    • தனித்தமிழ்க் கட்டுரை

    • வடசொல் தமிழ் அகரவரிசை

    • முப்பெண்மணிகள் வரலாறு

    • பட்டினத்தார் பாராட்டிய மூவர்
    ஆகிய நூல்கள் தனித்தமிழில் எழுத விரும்புவோர்க்கு மிகவும் பயனுள்ளனவாக விளங்குகின்றன.

    ஈ.த.இராஜேஸ்வரி அம்மையார் பற்றியக் குறிப்புகள்:

  • தமிழ், இலக்கியம், அரிவியல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியவர்.

  • "திருமந்திரம்", "தொல்காப்பியம்", "கைவல்யம்" போன்ற நூல்களில் உள்ள அறிவியல் உண்மைகள் குறித்துச் சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.

  • இராணி மேரி கல்லூரியில் அறிவியல் பேராசிரியாகப் பணியாற்றினார்.

  • "சூரியன்", "பரமாணுப் புராணம்" போன்ற அறிவியல் நூல்களை எழுதியுள்ளார்.

  • புதுமைக் கருத்துக்களை இயம்பும் வகையில் இருபதாம் நூற்றாண்டில் எழுந்தவை – "மறுமலர்ச்சி இலக்கியங்கள்".

  • பாரதிதாசன் பற்றியக் குறிப்புகள்

  • இவரது இயற்பெயர் "கனக.சுப்புரத்தினம்"

  • இவர் பாரதியின் கவிதை மீது கொண்ட ஈர்ப்பினால் பாரதிதாசன் என்று தம்பெயரை மற்றிக் கொண்டார்.

  • இவர் இயற்றிய கவிதைகள் அனைத்தும் "பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்" என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.

  • இவரது "பிசிராந்தையார்" நாடக நூலுக்கு "சாகித்திய அகாதெமி" விருது வழங்கப்பட்டுள்ளது.
  • பாவேந்தர் பாரதிதாசனின் படைப்புகள்:

    • பாண்டியன் பரிசு

    • அழகின் சிரிப்பு

    • இருண்ட வீடு

    • குடும்ப விளக்கு

    • தமிழியக்கம்
    "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
    பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்"
    – என்று பாடியவர் – பாரதியார்

    "மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம்
    செய்திடல் வேண்டுமம்மா…"
    – என்று பாடியவர் – கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

    "பெண்ணில் பேதை என்ற எண்ணம்
    இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்
    உருப்படல் என்பது சரிப்படாது."
    – என்று பாடியவர் – பாவேந்தர் பாரதிதாசன்

    பேரறிஞர் அண்ணா பற்றியக் குறிப்புகள்

  • இவர் தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளர்.

  • "தென்னகத்துப் பெர்னாட்ஷா" என்று அழைக்கப்படுகிறார்.

  • "சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்" முதல் "இன்பஒளி" வரை பல படைப்புகளை தந்தவர்.

  • தம்முடைய சீர்திருத்தக் கருத்துக்களை நாடகங்கள், திரைப்படங்கள் மூலமாக முதன்முதலில் பரப்பியவர் இவரே.

  • இவரது பல படைப்புகள் திரைப்படங்களாயின.

  • 1935-ல் சென்னை, பெத்தநாயக்கன் பேட்டை, கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினார்.

  • "ஹோம்ரூல்", "ஹோம்லேண்ட்", "நம்நாடு", "திராவிடநாடு", "மாலைமணி", "காஞ்சி" போன்ற இதழ்களில் ஆசிரியராகவும் "குடியரசு", "விடுதலை" ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் இருந்தார்.

  • முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் இருமொழிச் சட்டத்தை உருவாக்கினார்.

  • சென்னை மாகானத்தைத் "தமிழ்நாடு" என்று மாற்றித் தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்.
  • பேரறிஞர் அண்ணவின் புகழ்பெற்ற பொன்மொழிகள்:

  • மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு.

  • கத்தியைத் தீட்டாதே உன்றன் புத்தியைத் தீட்டு.

  • வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி ஆகும்.

  • எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.

  • சட்டம் ஒரு இருட்டறை – அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு மக்களின் மதியைக் கெடுக்கும் ஏடுகள் நமக்குத் தேவையில்லை;தமிழரைத் தட்டி எழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை; தன்னம்பிக்கை ஊட்டி மதிப்பைப் பெருக்கும் நூல்கள் தேவை. நல்ல வரலாறுகளைப் படித்தால் தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும்.

  • இளைஞர்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை இளைஞர்கள் உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முனைகள் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

  • "ஓடி விளையாடு பாப்பா, – நீ
    ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
    கூடி விளையாடு பாப்பா, – ஒரு
    குழந்தையை வையாதே பாப்பா

    காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
    கனிவு கொடுக்கும் நல்லபாட்டு
    மாலை முழுதும் விளையாட்டு – என்று
    வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா"


    – என்ற "பாப்பா பாட்டு" பாடியவர் – பாரதியார்.

  • "கறுப்பு மலர்கள்" என்ற கவிதை நூலை இயற்றியவர் – நா.காமராசன்

  • "தண்ணீர் தண்ணீர்" என்ற நாடக நூலை இயற்றியவர் – "கோமல் சுவாமிநாதன்"

  • நோபல் பரிசு பெற்ற எர்னஸ்ட் ஹெமிங்வேவின் குறுநாவல் – "கிழவனும் கடலும்"

  • சிற்பியின் சாகித்திய அகாதெமி பரிசுபெற்ற கவிதை நூல் – "ஒரு கிராமத்து நதி"

  • "சொல்லின் செல்வர்" என்று அழைக்கப்படுபவர் – ரா.பி.சேதுப்பிள்ளை.

  • எஸ். இராமகிருஷ்னனின் சிறார் நாவல் – சாக்ரட்டீஸின் சிவப்பு நூலகம்
  • நூல்களும் ஆசிரியர்களும்:

    • முதல் ஆசிரியர் – சிங்கிஸ் ஐத்மாத்தவ்

    • கல்வியில் நாடகம் – பிரளயன்

    • கரும்பலகை யுத்தம் – மலாலா

    தமிழர் வணிகம்

    • பகலில் செயல்படும் கடைவீதிகள் "நாளங்காடி" எனப்படும்.

    • இரவில் செயல்படும் கடைவீதிகள் "அல்லாங்காடி" எனப்படும்.

    • "தாவணி" என்பதன் பொருள் – சந்தை

    புகழ்பெற்ற சந்தைகளும் அது நடைப்பற்ற ஊர்களும்:

    • மணப்பாறை – மாட்டுச்சந்தை

    • அய்யலூர் – ஆட்டுச்சந்தை

    • ஒட்டன்சத்திரம் – காய்கறிச்சந்தை

    • நாகர்கோவில் தோவாளை – பூச்சந்தை

    • ஈரோடு – ஜவுளிச்சந்தை

    • கடலூர் அருகில் காராமணி குப்பம் – கருவாட்டுச்சந்தை

    • நாகப்பட்டினம் – மீன் சந்தை

    நூல்களும் ஆசிரியர்களும்:

    • நாட்டுப்புறவியல் ஓர் அறிமுகம் – முனைவர் சு.சக்திவேல்

    • தரங்கம்பாடி தங்கப் புதையல் – பெ.தூரன்

    • இருட்டு எனக்குப் பிடிக்கும் (அன்றாட வாழ்வில் அறிவியல்) – ச.தமிழ்ச்செல்வன்

    தமிழர்களின் சிற்பக்கலைகள்

    "ஓவிய விதானத்து, உரைபெறு நித்திலத்து
    மாலைத்தாமம் வளையுடன் நாற்றி
    விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கம்


    -என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல் – சிலப்பதிகாரம்.
    "கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும்
    மண்ணும் சிதையும் தந்தமும் வண்ணமும்
    கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை
    பத்தே சிற்பத் தொழிற்குஉறுப் பாவன"

    – என்ற அடிகளில் கல், உலோகம், செங்கல், மரம், போன்றவற்றைக் கொண்டு கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் உருவங்கள் அமைக்கும் கலையே "சிற்பக்கலை" என்று " திவாகர நிகண்டு" கூறுகிறது.

  • சிற்பங்கள் அவற்றின் உருவ அமைப்பு அடிப்படையில் முழு உருவச் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள் என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது.

  • உருவத்தின் முன்பகுதியும் பின்பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் முழு உருவத்துடன் அமைந்த சிற்பங்கள் முழு உருவச் சிற்பங்கள் எனப்படும்.

  • முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்கள் எனப்படும்.

  • "கற்கவிஞர்கள்" என்று அழைக்கப்படுபவர்கள் – சிற்பங்களைச் செதுக்கும் சிற்பிகள்.

  • பல்லவர் காலத்தில் சுதையினாலும், கருங்கற்களினாலும் சிற்பங்கள் அமைக்கப்பட்டன.

  • கண்ணகிக்குச் சிலை வடித்த செய்தி இடம் பெற்றுள்ள நூல் – சிலப்பதிகாரம்.

  • மாளிகைகளில் பல சுண்ணாம்புக் கலவை (சுதைச் சிற்பங்கள்) இருந்ததை கூறும் நூல் – மணிமேகலை
  • பல்லவர் கால சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டுகள்:

    • மாமல்லபுர கடற்கரைச் சிற்பங்கள்

    • காஞ்சி கைலாசநாதர் கோயில்

    • காஞ்சி வைகுந்த பெருமாள் ஆலயம்
  • பல்லவர் கால குடைவரைக் கோவில்களின் நுழைவு வாயிலின் இருபுறங்களிலும் காவலர்கள் நிற்பது போன்ற சிற்பங்கள் படைக்கப்பட்டுள்ளன.

  • மாமல்லபுரம், காஞ்சிபுரம், திருச்சி மலைக்கோட்டை போன்ற இடங்களில் காணப்படும் பல்லவர் காலச் சிற்பங்கள் சிறந்த கலைநுட்பத்துடன் அமைந்துள்ளன.

  • பாண்டியர் காலத்தில் அமைக்கப்பட்ட குகைக்கோவில்களில் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்துள்ளன.அவற்றைத் திருமயம், பிள்ளையார்ப்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம் முதலிய இடங்களில் உள்ள கோவில்களில் காணலாம்.

  • கோவில்பட்டிக்கு மேற்கே கழுகுமலை வெட்டுவான் கோவிலில் அமைந்துள்ள சிற்பங்களும் பாண்டியர் காலச் சிற்பக்கலைக்கு சான்றுகளாகும்.

  • கற்சிற்பங்கள் அமைக்கும் கலை, சோழர் காலத்தில் விரைவாக வளர்ச்சி பெற்றது.

  • தஞ்சைப் பெரிய கோவில் கட்டியவர் – முதலாம் இராஜராஜ சோழன்

  • கங்கை கொண்ட சோழபுரத்தை நிறுவியவர் – முதலாம் இராசேந்திர சோழன்

  • தாராசுரம் ஐராவதீசுவர்ர் கோவிலைக் கட்டியவர் – இரண்டாம் இரசராசன்

  • திரிபுவன வீரேசுவரம் கோவிலைக் கட்டியவர் – இரண்டாம் குலோத்துங்க சோழன்

  • தஞ்சை பெரிய கோவிலில் காணப்படும் 14 அடி உயரமுள்ள வாயிற்காவலர் உருவங்களும் மிகப்பெரிய நந்தியும் வியப்பூட்டும் வேலைப்படுகள் கொண்ட தூண்களும் சோழற்கால சிற்பத் திறனுக்கு சான்றாக உள்ளன.

  • கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரே கல்லில் அமைந்த நவக்கிரகமும் சிங்கமுகக் கிணறும் அவற்றில் பொறிக்கப்பட்டுள்ள உருவங்களும் குறிப்பிடத்தக்கன.

  • புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலையில் நடன முத்திரைகளுடன் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அம்மாவட்ட்த்தில் உள்ள கொடும்பாளூரில் இரண்டாம் பராந்தகச் சோழனால் கட்டப்பட்ட மூவர் கோவில் சிற்பங்கள் அழகானவை.

  • திருச்சி மாவட்டம் சீனிவாசநல்லூரில் உள்ள குரங்கநாதர் கோவில் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை.

  • சோழர்கால இறுதியில் திருவரங்கக் கோவிலினுள் அமைக்கப்பட்ட சிற்பங்களில் வெளிப்படும் முகபாவனைகள் சோழற்காலச் சிற்பக்கலை நுட்பத்திற்கு மிக்ச் சிறந்த சான்றுகளாகும்.

  • "செப்புத் திருமேனிகளின் பொற்காலம்" என்று அழைக்கப்படுவது – "சோழர்களின் ஆட்சிக் காலம்"

  • விஜய நகர மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கோவில்களில் மிக உயர்ந்த கோபுரங்கள் அமைக்கப்பட்டன. இவர்கள் தெலுங்கு, கன்னடப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இதன் தாக்கம் தமிழக்ச் சிற்பங்களில் காணப்பட்டது.

  • ஆடை அணிகலன்கள் அணிந்த நிலையில் உள்ள உருவங்கள் சிற்பங்களாயின.

  • கோவில் மண்டபங்களில் மிகுதியான சிற்பத்தூண்கள் அமைக்கப்பட்டன.அத்துடன் பல்வேறு ஓசைகளை எழுப்பும் இசைக் கற்றூண்களையும் அவர்கள் அமைத்த்து குறிப்பிட்த்தக்கது.

  • நயக்க மன்னர்கள் பல இடங்களில் ஆயிரங்கால் மண்டபங்களை அமைத்தனர்.

  • மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ராமேசுவரம் பெருங்கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், கிருஷ்ணாபுரம் வேங்கடசலாபதி பெருமாள் கோவில், திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பில் உள்ள பெருமாள் கோவில், பேரூர் சிவன் கோவில் போன்ற இடங்களில் நாயக்க மன்னர்கள் கால கலைநயமிக்க சிற்பங்களைக் காண முடியும்.

  • கோயம்புத்தூருக்கு அன்மையிலுள்ள பேரூர் சிவன் கோவிலில் உள்ள சிற்பங்கள் நாயக்கர் காலச் சிற்பக்கலை நுட்பத்தின் "உச்சநிலை படைப்பு" எனலாம்.

  • விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு அண்மையில் உள்ள திருநாதர்குன்று என்னும் இட்த்தில், ஒரே பாறையில் 24 தீர்த்தங்கரர் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.

  • தமிழக்ச் சிற்பக்கலையில் யோக்க்கலை மற்றும் நாட்டியக்கலைக் கூறுகளும் இடம் பெற்றுள்ளன.

  • தமிழ்நாடு அரசு "மாமல்லபுரத்தில்" சிற்பக்கல்லூரியை நடத்தி வருகிறது.
  • தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்கம் சிற்பக்கலை குறித்த செய்திகளை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் "சிற்பச்செந்நூல்" என்ற நூலை வெளியிட்டுள்ளது.

  • "பைஞ்சுதை" எனப்படுவது – சிமெண்ட்

  • ஆண்டாள் இயற்றிய நாச்சியார் திருமொழி பற்றியக் குறிப்புகள்

  • ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு "நாலாயிர திவ்வியப் பிரபந்தம்" ஆகும்.

  • நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியதாகத் "திருப்பாவை", "நாச்சியார் திருமொழி" என்ற இரு தொகுதிகள் உள்ளன.

  • நாச்சியார் திருமொழி மொத்தம் 143 பாடல்களைக் கொண்டது.

  • ஆண்டாள் பிறந்த ஊர் – ஸ்ரீவில்லிபுத்தூர்.

  • ஆண்டாளின் காலம் – 9 ஆம் நூற்றாண்டு.

  • இவர் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் ஆவார்.

  • இவர் துழாய் (துளசி) வனத்தில் கண்டெடுக்கப்பட்ட பெண் ஆவார்.

  • மாலைக் கட்டிக் கொடுத்ததால் " கோதை" எனப்பட்டார்.

  • " சூடிக்கொடுத்த சுடர்கொடி" என்று அழைக்கப்பட்டவர் – ஆண்டாள்.

  • இறைவனுக்கு மனைவியானதால் நாச்சியார் எனப்பட்டார்.

  • ஆண்டவனையே ஆண்டதால் ஆண்டாள் எனப்பட்டாள்.

  • இறைவனுக்கும் ஆண்டாளுக்கும் திருமனமான இடம் – திருவரங்கம் (ஸ்ரீ ரங்கம்)

  • ஆண்டாள் பாடியவை – திருப்பாவை, திருமொழி.

  • பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டது – திருப்பாவை

  • ஆண்டாள் திருமொழிக்கு நாச்சியார் திருமொழி என்ற பெயரும் உண்டு

  • " திருப்பாவையே வேதம் அனைத்திற்கும் வித்து" என்று கூறியவர் – இராமானுஜர்
  • " மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்நாளால்" என்று பாடியவர் – ஆண்டாள்

  • " மானிடவர்க்கு என்று பேச்சுப் படின்
    வாழகில்லேன் கண்டாய் மன்மதனே"
    – என்று பாடியவர் – ஆண்டாள்

  • " நாராயணனே நமக்கே பறைதருவான் " என்று பாடியவர் – ஆண்டாள்

  • " கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா" என்று பாடியவர் – ஆண்டாள்

  • "கதிரொளி தீபம் கலசம் உடனேந்தி…" எனத் தொடங்கும் பாடலும் "மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத…" எனத் தொடங்கும் பாடலும் ஆறாம் திருமொழியில் இடம் பெற்றுள்ளன.

  • திருமாலை வழிபட்டுச் சிறப்புநிலை எய்திய ஆழ்வார்கள் பன்னிருவர் ஆவர். அவருள் ஆண்டாள் மட்டுமே பெண் ஆவார்.

  • இறைவனுக்குப் பாமாலை சூட்டியதோடு தன் அணிந்து மகிழ்ந்த பூமாலையையும் சூட்டியதால் "சூடிக் கொடுத்த சுடர்க்கொடி" என அழைக்கப்பெற்றார்.

  • ஆண்டாள் "பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள்" என அறியப்படுகிறார்.
  • சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள்:

    • 1970 – அன்பளிப்பு (சிறுகதைகள்) – கு.அழகிரிசாமி

    • 1970 – சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) – தி,,ஜானகிராமன்

    • 1987 – முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) – ஆதவன்

    • 1996 – அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) – அசோகமித்ரன்

    • 2008 – மின்சாரப்பூ (சிறுகதைகள்) – மேலாண்மை பொன்னுசாமி

    • 2010 – சூடிய பூ சூடற்க (சிறிகதைகள்) – நாஞ்சில் நாடன்

    • 2016 – ஒரு சிறு இசை (சிறுகதைகள்) – வண்ணதாசன்
  • "சிறுகதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல்" என்று சிறுகதையைப் பற்றிக் கூறியவர் – "புதுமைப்பித்தன்".

  • "தி.ஜானகிராமன்" அவர்கள், தனது ஜப்பான் பயண அனுபவங்களை "உதயசூரியன்" என்னும் தலைப்பில் "சுதேசமித்திரன்" வார இதழில் எழுதினார். இது 1967-ல் நூலாக வெளியிடப் பெற்றது.

  • "தி.ஜானகிராமன்" அவர்கள் ரோம்,செக்கோஸ்லோவோக்கியா சென்ற அனுபவங்களைக் "கருங்கடலும் கலைக்கடலும்" என்னும் தலைபில் 1974-ல் நூலாக வெளியிட்டார்.

  • "தி.ஜானகிராமன்" அவர்கள் தமது காவிரிக்கரை வழியான பயணத்தை "நடந்தாய் வாழி காவேரி" என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார். இவரது மற்றுமொரு பயணக் கட்டுரை, "அடுத்த வீடு ஐம்பது மைல்" என்பதாகும்.

  • தி.ஜானகிராமன் பற்றியக் குறிப்புகள்

  • தி.ஜானகிராமன் தஞ்சை மண்வாசனையுடன் கதைகளைப் படைத்தவர்.

  • இவர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகவும் வானொலியில் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகவும் பணியாற்றியவர்.

  • வடமொழி அறிவும் சிறந்த இசையறிவும் கொண்ட இவர்தம் கவிதைகள் " மணிக்கொடி", "கிராம ஊழியன்", "கணையாழி", " கலைமகள்", "சுதேசமித்திரன்", "ஆன்ந்த விகடன்", "கல்கி" போன்ற இதழ்களில் வெளிவந்தன.

  • நாடகங்களையும் நாவல்களையும் இவர் படைத்துள்ளார்.

  • "அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை" என்னும் கோட்பாட்டை உடையவர்.

  • தமிழ்க் கதையுலகம் நவீனமயமானதில் இவரது பங்களிப்பு குறிப்பிட்த்தக்கது.

  • இவருடைய "செய்தி" என்னும் சிறுகதை "சிவப்பு ரிக் ஷா" என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. மிகவும் உயர்ந்த இசை சிறந்த கலைஞனால் கையாளப்படும்போது சொற்களின் எல்லையைத் தாண்டி இசையின் மூலமாகவே பொருள் கொடுக்கிறது என்பதை இக்கதை உணர்த்துகிறது.
  • தஞ்சாவூர் தமிழுக்கு அளித்த கொடை:

    • உ.வே.சாமிநாதர்

    • மௌனி

    • தி.ஜானகிராமன்

    • தஞ்சை பிரகாஷ்

    • தஞ்சை இராமையா தாஸ்

    • தஞ்சாவூர்க் கவிராயர்
    "எத்தனைபெரிய வானம்!
    எண்ணிப்பார் உனையும் நீயே;
    இத்தரை, கொய்யாப் பிஞ்சு,
    நீ அதில் சிற்றெறும்பே,
    அத்தனை பேரும் மெய்யாய்
    அப்படித் தானே மானே?
    பித்தேறி மேல்கீழ் என்று
    மக்கள்தாம் பேசல்என்னே!"


    – என்று பாடியவர் – பாவேந்தர் பாரதிதாசன்

    நூல்களும் ஆசிரியர்களும்:

    • நட்புக்காலம் – கவிஞர் அறிவுமதி

    • திருக்குறள் கதைகள் – கிருபான்ந்தவாரியார்.

    கவிஞர் முடியரசன் பற்றியக் குறிப்புகள்

  • முடியரசன் பிறந்த ஆண்டு – 1920

  • இவரது இயற்பெயர் – துரைராசு

  • இவர் திராவிட இயக்கக் கவிஞர்

  • முடியரசன் இயற்றிய நூல்கள்:

  • முடியரசன் கவிதைகள்

  • காப்பியப் பாவை

  • பூங்கொடி
  • முடியரசன் இயற்றிய நாடகம்:

    ஊன்றுகோல் (பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் பற்றியது)

    " வயலுக்கு வரப்பொன்றும் வேண்டாம் என்றால்

    வளக்கரைகள் ஆற்றுக்கு வேண்டாம் என்றால்

    இயல்மொழிக்கு இலக்கணம் வேண்டாம் பெண்ணே"


    – என்று பாடியவர் – முடியரசன்

    " மொழிகாக்கும் வரம்பில்லையேல்

    எம்மொழியும் அழிந்து போகும்"


    – என்றவர் – முடியரசன்

    "மணவினையில் தமிழுண்டா,பயின்றவர் தம்முள்

    வாய்ப்பேச்சில் தமிழுண்டா, மாண்ட பின்னர்

    பிணவினையில் தமிழுண்டா"


    – என்று பாடியவர் – முடியரசன்

    "வயலிடைப் புகுந்தாய் மணிக்கதிர் விளைத்தாய்
    வளைந்துசெல் கால்களால் ஆறே!
    அயலுள ஓடைத் தாமரை கொட்டி
    ஆம்பலின் இதழ்களை விரித்தாய்
    கயலிடைச் செங்கண் கருவரால் வாளை
    கரைவளர் தென்னையில் பாயப்
    பெயரிடைப் பட்ட வானெனத் தோன்றும்
    பெருங்குளம் நிறைந்து விட்டாயே!"


    என்ற பாடலை இயற்றியவர் – "வாணிதாசன்"

    நூல்களும் ஆசிரியர்களும்:

    • தமிழர் உணவு – பக்தவச்சல பாரதி

    • ஆகாயத்து அடுத்த வீடு – மு. மேத்தா

    • தமிழ்ப் பழமொழிகள் – கி.வ.ஜகந்நாதன்

    பெரியார்

    தந்தைப் பெரியாருக்கு வழங்கும் வேறுபெயர்கள்:

    • பகுத்தறிவுப் பகலவன்

    • தெற்காசியாவின் சாக்ரடீசு

    • வைக்கம் வீரர்

    • ஈரோட்டுச் சிங்கம்

    • புத்துலகத் தொலை நோக்காளர்

    • பெண்ணினப் போர்முரசு

    • சுயமரியாதைச் சுடர்

    • வெண்தாடி வேந்தர்
  • "சாதி உணர்வு ஆதிக்க உணர்வை வளர்க்கிறது. மற்றவர்களின் உரிமைகளைப் பற்க்கிறது. மனிதர்களை இழிவுபடுத்துகிறது. அந்தச் சாதி என்ற கட்டமைப்பை உடைத்தெறிய வேண்டும்" என்று கூறியவர் – "தந்தை பெரியார்"

  • "மதங்கள் என்பன மனித சமூகத்தின் வாழ்க்கை நலத்திற்கே ஏற்படுத்தப்பட்டன. ஆனால் இன்று மத்த்தின் நிலை என்ன? நன்கு சிந்தித்துப் பாருங்கள்; மனிதர்களுக்காக மதங்களா? மதங்களுக்காக மனிதர்களா? மதம் என்பது மனிதர்களை ஒற்றுமைப்படுத்துவதற்காகவா? பிரித்து வைப்பதற்காகவா? " எனப் பகுத்தறிவு கேள்விகளை எழுப்பியவர் – "தந்தை பெரியார் "

  • "கற்பிக்கப்படும் கல்வியானது மக்களிடம் பகுத்தறிவையும், சுயமரியாதை உனர்ச்சியையும், நல்லொழுக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும்; மேன்மை வாழ்வு வாழ்வதற்கேற்ற தொழில் செய்யவோ அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்" என்று கூறியவர் – "தந்தை பெரியார் "

  • "அறிவியலுக்குப் புறம்பான செய்திகளையும் மூடப்பழக்கங்களையும் பள்ளிகளில் கற்றுத்தரக் கூடாது. சுயசிந்தனை ஆற்றலையும் தன்னம்பிக்கையையும் வலர்க்கும் கல்வியினைக் கற்றுத்தர வேண்டும்" என்று கூறியவர் – "தந்தை பெரியார் "
  • பெரியார் எதிர்த்தவை…….

    • இந்தித் திணிப்பு

    • குலக்கல்வித் திட்டம்

    • தேவதாசி முறை

    • கள்ளுண்ணல்

    • குழந்தைத் திருமணம்

    • மணக்கொடை
  • "ஒரு மொழியின் தேவை என்பது அதன் பயன்பாட்டு முறையைக் கொண்டே அமைகிறது;ம் இந்தியாவிலேயே பழமையான மொழி தமிழ் மொழியாகும். இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ற நூல்கள் தமிழில் படைக்கப்பட வேண்டும்" என்று கூறியவர் – "தந்தை பெரியார்"

  • "திருக்குறளில் அரசியல், சமூகம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தும் அடங்கியுள்ளன. இதை ஊன்றிப் படிப்பவர்கள் சுயமரியாதை உணர்ச்சிப் பெறுவார்கள்" என்று கூறியவர் – "தந்தை பெரியார்"

  • "மொழி என்பது உலகின் போட்டி, போராட்டத்திற்கு ஒரு கருவியாகும்; அக்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்" என்று கூறியவர் – "தந்தை பெரியார்"

  • பெரியார் உயிர் எழுத்துக்களில் "ஐ" என்பதை "அய்" எனவும் "ஔ" என்பதனை "அவ்" எனவும் சீரமைத்தார். (ஐயா – அய்யா, ஔவை – அவ்வை). அதுபோலவே பெய்யெழுத்துக்களில் சில எழுத்துக்களைக் குறைப்பதன் வாயிலாகத் தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையை குறைக்கலாம் என்றார்; அவ்வாறு குறைப்பதால் தமிழ் மொழி கறபதற்கும் தட்டச்சு செய்வதற்கும் எளிதாகும் எனக் கருதினார். இச்சீரமைப்புக்கான மாற்று எழுத்துருக்களையும் (வரி வடிவம்) உருவாக்கினார்.கால வளர்ச்சிக்கு இத்தகைய மொழிச் சீரமைப்புகள் தேவை என்று கருதினார். பெரியாரின் இக்கருத்தின் சில கூறுகளை 1978 ஆம் ஆண்டு தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது.
  • பெரியார் விதைத்த விதைகள்:

    • கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு

    • பெண்களுக்கான இடஒதுக்கீடு

    • பெண்களுக்கான சொத்துரிமை

    • குடும்ப நலத்திட்டம்

    • கலப்புத் திருமணம், சீர்திருத்தத் திருமணச் சட்டம் ஏற்பு
  • பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் – சுய மரியாதை இயக்கம். இது தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – 1925

  • பெரியார் நடத்திய இதழ்கள் – "குடியரசு", "விடுதலை", "உண்மை", "ரிவோல்ட் (ஆங்கில இதழ்)"

  • "1938 நவம்பர் 13-ல் சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.ரா.வுக்கு "பெரியார் " என்னும் பட்டம் வழங்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  • 06.1970 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ நிறுவனம் தந்தை பெரியாரைத் "தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்" எனப் பாராட்டிப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

  • பெரியாரால் நடத்தப்பட்ட ஆங்கில இதழ் – "ரிவோல்ட்"

  • "தொண்டு செய்து பழுத்த பழம்
    தூயதாடி மார்பில் விழும்
    மண்டைச் சுரப்பை உலகு தொழும்
    மனக்குகையில் சிறுத்தை எழும்
    அவர்தாம் பெரியார் – பார்
    அவர்தாம் பெரியார்"


    என்று பெரியாரை பற்றிக் கூறியவர் – "புரட்சிக்கவி பாரதிதாசன்"

    வல்லிக்கண்ணன்:

  • "இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான தத்துவ உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள்" என்று கூறியவர் – "வல்லிக்கண்ணன்"

  • "புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்" என்ற நூலை இயற்றியவர் – "வல்லிக்கண்ணன்"

  • ந.பிச்சமூர்த்தி பற்றியக் குறிப்புகள்

  • பிறந்த ஆண்டு – 1900

  • இவர் புதுக்கவிதை இயக்கத்தின் முன்னோடி என்று அழைகப்படுகிறார்

  • பாரதியாரின் வசன கவிதையைத் தொடர்ந்து புதுக்கவிதை அமைக்கும் முயற்சியில் "ந.பிச்சமூர்த்தி" ஈடுபட்டார்.

  • ந.பிச்சமூர்த்தி "புதுக்கவிதையின் தந்தை" என்று போற்றப்படுகிறார்.

  • புதுக்கவிதையை "இலகு கவிதை", "கட்டற்ற கவிதை", "விலங்குகள் இலாக் கவிதை", "கட்டுக்குள் அடங்காக் கவிதை" என பல்வேறு பெயர்களில் குறிப்பிடுகின்றனர்.

  • ந.பிச்சமூர்த்தி தொடக்க காலத்தில் வழக்குரைஞராகவும் பின்னர் இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத் துறை அலுவலராகவும் பணியாற்றினார்.

  • "ஹனுமன்", "நவஇந்தியா" ஆகிய இதழ்களின் துனை ஆசிரியராகவும் இருந்தார்.

  • இவர் புதுக்கவிதை, சிறுகதை, ஓரங்க நாடகங்கள், கட்டுரைகள் ஆகிய இலக்கிய வகைமைகளைப் படைத்தவர்.

  • ந.பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை – "ஸயன்ஸூக்கு பலி (விஞ்ஞானத்திற்கு பலி)

  • 1932-ல் "கலைமகள்" பரிசு பெற்றார்.

  • 1932-ல் "காதல்" என்ற இவர்தம் முதல் கவிதை வெளியானது

  • 1962-ல் 35 கவிதைகள் அடங்கிய "காட்டு வாத்து" என்ற கவிதைத் தொகுப்பு வெளியானது.

  • "பிக்ஷூ" "ரேவதி" ஆகிய புனைப்பெயர்களில் படைப்புகளை எழுதினார்.
  • நா.பிச்சமூர்த்தி இயற்றிய நூல்கள்:

    • கிளிக்குஞ்சு

    • பூக்காரி

    • வழித்துணை

    • கிளிக்கூண்டு

    "இருத்தலெனும் சமுத்திரம், அந்தப் பேரிருளிலிருந்து வந்தது,
    மெய்ம்மையெனும் இந்த ரத்தினம், ஊடுருவிப் பார்த்ததில்லை எவரும்;
    அவரவர் இயல்பின்படி சொல்லிச் சென்றார்கள் ஒவ்வொருவரும்,
    எதனுடைய குணத்தையும் விளக்க முடியாது எவராலும்."


    -இந்தப் பாடலை இயற்றியவர் – "உமர்கய்யாம்"

    "திங்கள்முடி சூடுமலை
    தென்றல்விளை யாடுமலை
    தங்குமுகில் சூழுமலை
    தமிழ்முனிவன் வாழுமலை
    அங்கயற்கண் அம்மைதிரு
    அருள்சுரந்து பொழிவதெனப்
    பொங்கருவி தூங்குமலை
    பொதியமலை என்மலையே"


    -என்ற பாடலை இயற்றியவர் – "குமரகுருபர்"

    நூல்களும் ஆசிரியர்களும்:

    • பெரியாரின் சிந்தனைகள் – வே. ஆனைமுத்து

    • அஞ்சல் தலைகளின் கதை – எஸ்.பி.சட்டர்ஜி (மொழிபெயர்ப்பு – வீ.மு.சாம்பசிவன்)

    • "தங்கைக்கு" எழுதிய கடிதம் – மு.வரதராசன்

    • "தம்பிக்கு" எழுதிய கடிதம் – பேரறிஞர் அண்ணா

    சி.சு.செல்லப்பா இயற்றிய நூல்கள்:

    • மாற்று இதயம்

    • நீ இன்று இருந்தால்

    • புதுக்குரல்

    வல்லிக்கண்ணன் (கிருஷ்ணசாமி) இயற்றிய நூல்கள்:

    • அமர வேதனை

    • புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும் (சாகித்திய அகாடமி பரிசு)

    புவியரசு (ஜகன்நாதன்) இயற்றிய நூல்கள்:

    • இதுதான் மீறல்

    • இப்போதே

    • இப்படியே

    சக்திக் கனல் (பழனிசாமி) இயற்றிய நூல்கள்:

    • புழுதிப் புயல்

    • கனகாம்பரமும் டிசம்பர் பூக்களும்

    • நீங்கள் கேட்டவை

    சிற்பி பாலசுப்ரமணியம் இயற்றிய நூல்கள்:

    • நிலவுப் பூ

    • சிரித்த முத்துக்கள்

    • சர்ப்ப யாகம்

    • மௌன மயக்கங்கள்

    • சிற்பி பாலசுப்ரமணியம் இருமுறை சாகித்ய அகாடமி பரிசுப் பெற்றவர்.

    • ஒன்று கவிதைக்கு, மற்றொன்று மொழிபெயர்ப்புக்கு

    ஈரோடு தமிழன்பன் (ஜெகதீசன்) இயற்றிய நூல்கள்:

    • தோணி வருகிறது

    • தீவுகள் கரையேறுகின்றன

    • சூரிய பிறைகள் (ஹைகூ)

    • நிலா வரும் நேரம்

    • ஊமை வெயில்

    • திரும்பி வந்த தேர்வலம்

    இன்குலாப் இயற்றிய நூல்கள்:

    • இன்குலாப் கவிதைகள்

    • வெள்ளை இருட்டு

    • சூரியனைச் சுமப்பவர்கள்

    • கிழக்கும் பின் தொடரும்

    தனிநாயகம் அடிகள் பற்றியக் குறிப்புகள்

    • தமிழுக்குத் தொண்டாற்றிய கிறித்துவப் பெரியார்களுள் தனிநாயகம் அடிகள் குறிப்பிடத்தக்கவர்.

    • இவருடைய சொற்பொழிவுகள் தமிழர் புகழைப் பரப்பும் குறிக்கோளைக் கொண்டவை.

    • இலங்கை யாழ் பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவு ஆற்றியுள்ளார். அகில உலகத் தமிழாய்வு மன்றம் உருவாகவும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உருவாகவும் இவர் காரணமாக இருந்தார்.

    • இவர் தொடங்கிய "தமிழ்ப் பண்பாடு" என்ற இதழ் இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கிறது.

    கல்யாண்ஜி

    "சைக்கிளில் வந்த
    தக்காளிக் கூடை சரிந்து
    முக்கால் சிவப்பில் உருண்டது
    அனைத்துத் திசைகளிலும் பழங்கள்
    தலைக்கு மேலே
    வேலை இருப்பதாய்க்
    கடந்தும் நடந்தும்
    அனைவரும் போயினர்
    பழங்களை விடவும்
    நசுங்கிப் போனது
    அடுத்த மனிதர்கள்
    மீதான அக்கறை"


    என்ற கவிதையை இயற்றியவர் – "கல்யாண்ஜி"

    கல்யாண்ஜி பற்றியக் குறிப்புகள்:

  • கல்யாண்ஜியின் இயற்பெயர் – கல்யாணசுந்தரம்.

  • சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனத் தொடர்ந்து எழுதி வருபவர்.

  • "வண்ணதாசன்" என்ற பெயரிலும் கதை இலக்கியத்திலும் பங்களிப்பு செய்து வருகிறார்.

  • இவரது "அகமும் புறமும்" என்ற கட்டுரைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது.

  • இவரது பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு "சில இறகுகள் சில பறவைகள்" என்ற பெயரில் வெளியானது.

  • "ஒரு சிறு இசை" என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக இவருக்கு 2016 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி பரிசு வழங்கப்பட்டது.
  • கல்யாண்ஜியின் சில கவிதை நூல்கள்:

    • புலரி

    • இன்று ஒன்று நன்று

    • கல்யாண்ஜி கவிதைகள்

    • சின்னுமுதல் சின்னுவரை

    • மூன்றாவது

    • முன்பின்

    • ஆதி

    • அந்நியமற்ற நதி

    • மணல் உள்ள ஆறு

    கல்யாண்ஜியின் சிறுகதை நூல்கள்:

    • கலைக்க முடியாத ஒப்பனைகள்

    • தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்

    • உயரப் பறத்தல்

    • ஒளியிலே தெரிவது

    • சமவெளி

    • பெயர் தெரியாமல் ஒரு பறவை

    • கனிவு

    கல்யாண்ஜி அவர்களின் கவிதைகள்:

    • கனியான பின்னும் நுனியில் பூ

    • பற்பசைக் குழாய்களும் நாவல்பழங்களும்

    • சிநேகிதங்கள்

    • ஒளியிலே தெரிவது

    • அணில்நிறம்

    • கிருஷ்ணன் வைத்த வீடு
    "உன் பாடல்களை நீயே எழுது
    உன் வேஷங்களை நீயே நிர்ணயம் செய்
    மேலே கூடுகளில் சுமக்கின்றவரை
    நீ நத்தையாகத்தான் இருப்பாய்
    கூட்டைக் கழற்றியெறி எறியும்போது
    செத்துப்போனால் போ, பரவாயில்லை
    உன் அடுத்த தலைமுறை
    வேகமாக இந்த புற்களிடையே நடக்க வேண்டும்
    இன்னும் நீதான் எனது நம்பிக்கை"


    என்ற கவிதையை எழுதியவர் – கல்யாண்ஜி

    சு.சமுத்திரம் பற்றியக் குறிப்புகள்

  • சு.சமுத்திரம் திருநெல்வேலி மாவட்டம் திப்பணம்பட்டியைச் சேர்ந்தவர் முந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.

  • "வேரில் பழுத்த நிலா" நாவல் சாகித்திய அகாதெமி விருதையும் "குற்றம் பார்க்கில்" சிறுகதைத் தொகுதி தமிழக அரசின் பரிசினையும் பெற்றுள்ளது.
  • சு.சமுத்திரம் அவர்களின் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்புகள்:

    • வாடாமல்லி

    • பாலைப்புறா

    • மண்சுமை

    • தலைப்பாகை

    • காகித உறவு
    "வெண்பாவிற் புகழேந்தி; பரணிக்குஓர்
    சயங்கொண்டான்; விருத்தம் என்னும்
    ஒண்பாவிற்கு உயர்கம்பன்; கோவைஉலா
    அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன்;
    கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள்;
    வசைபாடக் காள மேகம்;
    பண்பாய பகர்சந்தம் படிக்காசு
    அலாதொருவர் பகர ஒணாதே"


    -என்று புலவர்களை பாராட்டி போற்றி எழுதியவர் – "பலப்பட்டடைச் சொக்கநாதப் புலவர்"

    "எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
    தம்முயிர்போல் எண்ணி உள்ளே
    ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
    யாவர்அவர் உள்ளம்தான் சுத்த
    சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
    இடம் என நான் தெரிந்தேன் அந்த
    வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என்
    சிந்தை மிக விழைந்த தாலே"


    -என்ற பாடலை இயற்றியவர் – இராமலிங்க அடிகளார் (அ) வள்ளலார்.

    நூல்களும் ஆசிரியர்களும்:

    • சிற்பியின் மகள் – பூவண்ணன்

    • அப்பா சிறுவனாக இருந்த போது – அலெக்சாந்தர் ரஸ்கின் (தமிழில் – நா.முகமது செரீபு).

    தமிழர் வணிகம்

  • துறைமுக நகரங்களின் அமைப்புகள், மாட மாளிகைகள் ஆகியன தம்மைக் கவர்ந்ததாக தம் பயணக் குறிப்பில் கூறியுள்ளவர் – "மார்க்கோபோலோ"

  • தமிழகத்தின் துறைமுகங்கள் ஆற்றின் கழிமுகங்களில் அமைந்திருந்தன. வங்காள விரிகுடா,அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் எனக் கடல்களுக்குப் பெயர் சூட்டப்படுவதற்கு முன்பே கடல்களைக் கடந்து கிழக்கு நாடுகளுக்கும், மேற்கு நாடுகளுக்கும் வணிகம் செய்யப் பயணம் மேற்கொண்டவர்கள் – தமிழர்கள்.
  • பண்டைக் காலத்தில் கிழக்குக்கரைப் பகுதியிலிருந்த துறைமுகங்கள்:

    • கொல்லந்துறை

    • எயிற்பட்டினம்

    • அரிக்கமேடு

    • காவிரிப்பூம்பட்டினம்

    • தொண்டி

    • மருங்கை

    • கொற்கை

    பண்டைக் காலத்தில் மேற்குக் கடற்கரைப் பகுதியில் புகழ் பெற்று விளங்கிய துறைமுகங்கள்:

    • மங்களூர்

    • நறவு

    • தொண்டி

    • மாந்தை

    • முசிறி

    • வைக்கரை

    • விழிஞம்
  • தமிழ்நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் சேரர்களின் ஆட்சி எல்லைக்குள் அமைந்த புகழ்பெற்ற துறைமுகம் – முசிறி

  • முசிறி துறைமுகம் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உருவான பேரியாறு கலக்குமிடத்தில் இயற்கையாய் உருவான துறைமுகமாகும். சேரநாட்டின் தலைநகரான "வஞ்சி" பேரியாற்றின் கரையிலுள்ள முசிறித் துறைமுகப் பட்டினத்திற்கு அருகேயே அமைந்திருந்தது.

  • "காந்த ஊசி" பற்றிய செய்தி இடம் பெற்றுள்ள நூல் – மணிமேகலை

  • முசிறித் துறைமுகத்தில் சிறப்புடன் நடைபெற்ற ஏற்றுமதித் தொழில் – "மிளகு ஏற்றுமதி"

  • யவனர் விரும்பி வாங்கியதால் மிளகிற்கு "யவனப்பிரியா" என்ற பெயர் ஏற்பட்டது.

  • யவனக் கப்பல்கள் பொன்னைத் தந்து மிளகை வாங்குவதற்காக முசிறி வந்த செய்தியை கூறும் நூல் – "அகநானூறு"
  • "சுள்ளியம் பேர்யாற்று வெண்ணுரை கலங்க
    யவனர் தந்த வினைமாண் நன்கலம்
    பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
    வளங் கெழு முசிறி"


    -என்று கூறும் நூல் – அகநானூறு

  • அரேபியர் சேரநாடு மிளகைக் கொண்டு போய்ச் செங்கடல் துறை முகங்களிலும் எகிப்தின் நைல் நதி கடலில் கலக்கும் இடத்திலுள்ள அலெக்சாண்டிரியா துறைமுகப் பட்டிணத்திலும் விற்றனர்.

  • முசிறித் துறைமுகத்தில் அரேபியர் வணிகம் செய்த இடத்திற்குப் "பந்தர்" (கடை வீதி) என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது.

  • "முசிறி – அலெக்சாண்டிரியா ஒப்பந்தம்" என்பது முசிறியில் வாழ்ந்த தமிழ் வணிகன் ஒருவனுக்கும் எகிப்தின் நைல் நதிக்கரையிலுள்ள அலெக்சாண்டிரியா நகரில் வாழ்ந்த கிரேக்க வணிகன் ஒருவனுக்கும் கி.பி.150 அளவில் ஏற்படுத்தப்பட்டதாகும்.

  • "நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்" என்ற அடிகள் இடம் பெற்ற நூல் – "பதிற்றுப்பத்து"

  • "பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்" என்ற அடிகள் இடம் பெற்ற நூல் – "பதிற்றுப்பத்து"

  • "பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்" என்ற அடிகள் இடம் பெற்ற நூல் – "பதிற்றுப்பத்து"

  • பண்டைய காலத்தில் எகிப்து நாடு உரோமப் பேரரசின் கீழ் இருந்தது.

  • சோழவள நாட்டில் காவிரியாறு கடலில் கலக்கின்ற இடத்தில் வடகரையின் மேல் காவிரிப்ப்பூம்பட்டினம் என்னும் இயற்கைத் துறைமுகம் அமைந்திருந்தது. காவிரிப்ப்பூம்பட்டினம் "மருவூர்ப்பாக்கம்", "பட்டினப்பாக்கம்" என்ற இரண்டு கூறுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

  • அக்காலத்தில் துறைமுகங்களுக்கு அருகில் ஏற்றுமதி, இறக்குமதிப் பொருள்களைப் பாதுகாப்பாக வைக்க நல்ல அகன்ற கிடங்குகள் அமைக்கப்பட்டிருந்தன என்றும் பொருள்களுக்குச் சுங்கத் தீர்வைகள் அங்கேயே வசூலிக்கப்பட்டன என்றும் "பட்டினப்பாலை" தெரிவிக்கிறது.

  • "புகார் நகரத்தில், காவல் மிகுந்த சுங்கச்சாவடி இருக்கும் சாலையில், சிங்கத் தீர்வையைப் பெற்றுக் கொண்டு, சோழப் பேரரசின் இலட்சினையான புலிச்சின்னத்தை அடையாளமிட்டு வெளியே அனுப்புவதற்காகக் குவித்து வைக்கப்பட்டிருக்கும் பண்டங்கள் மலை போல் தோற்றம் தரும்" என்று கூறும் நூல் – "பட்டினப்பாலை"

  • சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் காப்பியங்களின் தலைமை மாந்தர்களான கோவலன், கண்ணகி,, மாதவி, மணிமேகலை ஆகியோர் இளவரசன் ஆட்சிக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்திருந்தனர்": என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

  • தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் ஆற்றின் மேற்குக்கரையில் அமைந்த இயற்கைத் துறைமுகம் – "கொற்கை".

  • "பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர் துறந்த பின் கொற்கையில் இருந்த பட்டத்து இளவரசன் "வெற்றிவேற் செழியன்" மதுரை வந்து அறியணை ஏறினான் என்னும் செய்தியை, சிலப்பதிகாரத்தின் நீர்ப்படைக் காதையிலுள்ள "கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன்"

  • "மன்பதை காக்கும் முறைமுதல் கட்டிலின்"
    "மாலைத் திங்கள் வழியோன் ஏறினன்"


    ஆகிய அடிகள் குறிப்பிடுகின்றன.

  • பாண்டியர்களின் கப்பற்படைத் தளமாக "கொற்கை" விளங்கியது.

  • கொற்கைக் குடாக்கடல் அக்காலத்தில் நிலத்தின் உள்ளே ஐந்து கல் தொலைவிற்கு ஊடுருவியிருந்தது. இங்கு முத்துச்சிப்பிகளும், சங்குகளும் உண்டாயின. செல்வர் ஏறிவரும் குதிரையின் குளம்புகளுக்குள் மாட்டிக்கொள்ளும் அளவிற்குக் கரையோரங்களில் பொருள்கள்குவிந்திருந்தன.

    இதனை அகநானூறு,

  • திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்
    கவர்நடைப்புரவிக் கால்வடுத் தபுக்கும்
    நற்றேர் வழுதி கொற்கை முன்துறை"
    – என்று கூறுகிறது.


  • முத்துக்குளிப்பது மட்டுமன்றி அங்குள்ள ஆடவர் கடலில் மூழ்குவர் என்னும் செய்தியை, "வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர்" என அகநானூற்றின் 350 ஆம் பாடல் சுட்டுகிறது.

  • பாண்டிய மன்னர்களின் குதிரைப் படைகளுக்காக ஆண்டுதோறும் கொற்கைத் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான பாய்மரக் கப்பல்களில் 16,000 அரேபியக் குதிரைகள் வந்து இறங்கின என்கிற செய்தியையும் வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்.

  • கொற்கைப் பட்டிணத்தில் பாண்டிய நாட்டு நாணயங்களை அச்சிடுவதற்கான பட்டறைகள் நிறைந்த ஒரு தெரு இருந்திருக்கிறது. அந்தத் தெருவிற்கு "அஃகசாலை" என்று பெயரிடப்பட்டிருந்தது.

  • இராமநாதபுரம் அழகன் குளத்தில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள கீறல் கோட்டோவியம் வணிகக் கப்பலைக் குறிக்கிறது.

  • சங்க காலத் தமிழர்களின் துறைமுகமாகக் கருதப்படும் "அழகன் குளத்திலிருந்து" ரோம் நகரத்திற்குக் கடல் பயணம் மேற்கொண்ட கப்பலின் மாதிரியாக இது குறிப்பிடப்படுகிறது. சங்ககாலத் தமிழர்களின் துறைமுகம் – ‘அழகன் குளம்"
  • பண்டை கால வணிகம்

    • வெளிநாடுகளில் இருந்து கடல்வழி வந்தவை – குதிரைகள்

    • உள்நாட்டில் இருந்து தரைவழியில் வந்தவை – கறி(மிளகு)

    • வடமலையில் இருந்து வந்தவை – மெருகிடப்பட்ட பொன், மணிக்கற்கள்

    • மேற்குமலையில் இருந்து வந்தவை – சந்தனம், ஆரம்

    • தென் கடலில் இருந்து கிடைத்தவை – முத்து

    • கீழ்க்கடலில் விளைந்தவை – பவளம்
  • கி.பி.முதல் நூற்றாண்டில் "ஹிப்பல்ஸ்" என்னும் பெயர் கொண்ட கிரேக்க மாலுமி, பருவக்காற்றின் உதவியினால் முசிறித் துறைமுகத்துக்கு நேரே நடிக்கடல் வழியாக விரைவில் பயணம் செய்யும் புதிய கடல் வழியைக் கண்டுப்பிடித்தார்.

  • அஃகசாலை என்பது நாணயங்கள் அச்சடிக்கும் இடத்தைக் குறிக்கும்.

  • "யவனப்பிரியா" என்று அழைக்கப்படுவது – மிளகு

  • ஏற்றுமதி, இறக்குமதி குறித்து கூறும் சங்க நூல்கள் – "மதுரைக்காஞ்சி", "பட்டினப்பாலை"

  • "கூலம்" என்பதன் பொருள் – தானியம்

  • சோழநாட்டின் தலைநகராக விளங்கிய காவிரிப்பூம்பட்டினத்திலும், பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரையிலும் "கூலங்குவித்த கூல வீதிகள்" இருந்தன என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது.

  • "விறகுநான்; வண்டமிழே! உன்னருள் வாய்த்த
    பிறகுநான் வீணையாய்ப் போனேன்; – சிறகுநான்
    சின்னதாய்க் கொண்டதொரு சிற்றீசல்; செந்தமிழே!
    நின்னால் விமானமானேன் நான்!

    தருவாய் நிழல்தான் தருவாய்; நிதம்என்
    வருவாய் எனநீ வருவாய்; – ஒருவாய்
    உணவாய் உளதமிழே! ஓர்ந்தேன்; நீ பாட்டுக்
    கணவாய் வழிவரும் காற்று!"


    – என்று தமிழை போற்றியவர் – "கவிஞர் வாலி"

    நீரின்றி அமையாது உலகு

  • "அகழி","ஆழிக்கிணறு", "உறைக்கிணறு", "அணை", "ஏரி", "குளம்", "ஊருணி", "கண்மாய்", "கேணி" எனப் பல்வேறு பெயர்களில் நீர் நிலைகள் உள்ளன.

  • "மாமழை போற்றதும் மாமழை போற்றதும்" என பாடியவர் – "இளங்கோவடிகள்"

  • உலக சுற்றுச்சூழல் நாள் – "ஜூன் 5"

  • "மழை உழவுக்கு உதவுகிறது.விதைத்த விதை ஆயிரமாகப் பெருகுகிறது. நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் என்னும் நோக்கில் வளர்கின்றன" என்று கூறியவர் – "மாங்குடி மருதனார் "

  • பாண்டிய மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியைக் "கண்மாய்" என்று அழைப்பர். "கம்மாய்" என்பது வட்டார வழக்குச் சொல்லாகும்.

  • மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணற்றுக்கு "உறைகிணறு" என்றும் மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலைக்கு "ஊருணி" என்றும் பெயர்.

    • கல்லணையின் நீளம் – 1080 அடி

    • கல்லணையின் அகலம் – 40 – 60 அடி

    • கல்லணையின் உயரம் – 15 முதல் 18 அடி
  • இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை எனப்படுபவர் – "சர் ஆர்தர் காட்டன்"

  • 1829 ல் காவிரிப் பாசனப் பகுதிக்குத் தனிப் பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் "சர் ஆர்தர் காட்டன்" நியமிக்கப்பட்டார்.

  • கல்லணைக்கு "கிராண்ட் அணைக்கட்" என்ற பெயரைச் சூட்டியவர் – "சர் ஆர்தர் காட்டன்"

  • கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டு "1873" ஆம் ஆண்டு "கோதாவரி ஆற்றின் குறுக்கே தௌலீஸ்வரம் அணை"யைக் கட்டியவர் – "சர் ஆர்தர் காட்டன்"

  • தமிழ்நாடு வெப்பமண்டலப் பகுதியில் உள்ளது.

  • நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்கிகின்றன என்று கூறியவர் – "பேராசிரியர் தொ.பரமசிவன்.

  • "குளித்தல்" என்ற சொல்லுக்கு "குளிர வைத்தல்" என்பது பொருள்.

  • "குள்ளக் குளிரக் குடைந்து நீராடி" என்று கூறியவர் – ஆண்டாள்.

  • தெய்வச்சிலைகளை குளி(ர்)க்க வைப்பதை "திருமஞ்சனம் ஆடல்" என்று கூறுவர்.

  • சிற்றிலக்கியமாகிய பிள்ளைத்தமிழில் "நீராடல் பருவம்" என்று ஒரு பருவம் உண்டு.

  • "சனி நீராடு" என்று கூறியவர் – ஔவையார்.
  • தமிழகத்தின் நீர்நிலைப் பெயர்களும் விளக்கமும்:

    • அகழி – கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.

    • அருவி – மலைமுகட்டுத் தேக்கநீர் குத்திட்டுக் குதிப்பது.

    • ஆழிக்கிணறு – கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு.

    • ஆறு – பெருகி ஓடும் நதி.

    • இலஞ்சி – பலவகைக்கும் பயன்படுன் நீர்த்தேக்கம்.

    • உறைக்கினறு – மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வலையமிட்ட கிணறு.

    • ஊருணி – மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலை.

    • ஊற்று – அடியிலிருந்து நீர் ஊற்றுவது.

    • ஏரி – வேளாண்மைப் பாசன நீர்த்தேக்கம்.

    • கட்டுக் கிணறு – சரளை நிலத்தில் தோண்டி கல், செங்கற்களால் அகச்சுவர் கட்டிய கிணறு.

    • கடல் – சமுத்திரம்.

    • கண்மாய் – பாண்டி மண்டலத்தில் ஏரிக்கு வழங்கப்படும் பெயர்.

    • குண்டம் – சிறிதாய் அமைந்த குளிக்கும் நீர்நிலை.

    • குண்டு – குளிப்பதற்கேற்ற சிறுகுளம்.

    • குமிழிஊற்று – அடிநிலத்து நீர், ந்லமட்டத்திற்குக் கொப்புளித்து வரும் ஊற்று.

    • கூவல் – உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை.

    • கேணி – அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு.

    • சிறை – தேக்கி வைக்கப்பட்ட பெரிய நீர்நிலை.

    • புணற்குளம் – நீர்வரத்து மடையின்றி மழைநீரையே கொண்டுள்ள நீர்நிலை.

    • பூட்டைக் கிணறு – கமலை நீர்பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு.

    • முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் – "ஜான் பென்னி குவிக்"

    முல்லைப் பெரியாறு அணையால் பயன்பெறும் மாவட்டங்கள்:

    • தேனி

    • சிவகங்கை

    • திண்டுக்கல்

    • மதுரை

    • இராமநாதபுரம்

    இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும்:

  • கிரேக்க மொழியில் "சீரோகிராஃபி" என்றால் "உலர் எழுத்துமுறை" என்று பொருள்.

  • "ஜெராக்ஸ்" இயந்திரம் "செஸ்டர் கர்ல்சன்" என்பவரால் 1959 ல் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

  • வையக விரிவு வலை வழங்கியை(www server ) 1990-ல் உருவாக்கியவர் -" டிம் பெர்னெஸ் லீ". "இணையத்தில் இது இல்லையெனில் உலகத்தில் அது நடைபெறவேயில்லை" என்பது இவரின் புகழ்பெற்ற வாசகம் ஆகும்.

  • கவிஞர் வைரமுத்து

    ஓ, என் சமகாலத் தோழர்களே!

    "கிளிக்கு றெக்கை இருக்கும் வரைக்கும்
    கிழக்கு வானம் தூரமில்லை
    முளைக்கும் விதைகள் முளைக்கத் துடித்தால்
    பூமி ஒன்றும் பாரமில்லை

    பழையவை எல்லாம் பழமை அல்ல
    பண்பும் அன்பும் பழையவைதாம்
    இளையவர் கூட்டம் ஏந்தி நடக்க
    இனமும் மொழியும் புதியவைதாம்

    ஏவும் திசையில் அம்பைப் போல
    இருந்த இனத்தை மற்றங்கள்
    ஏவு கணையிலும் தமிழை எழுதி
    எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்"


    என்ற பாடலை இயற்றியவர் – "வைரமுத்து"

    கவிஞர் வைரமுத்து பற்றியக் குறிப்புகள்:

  • இவர் தேனி மாவட்டத்திலுள்ள மெட்டூர் என்னும் ஊரில் பிறந்தவர்.

  • "பத்மபூஷண்" விருதைப் பெற்றுள்ளார்.

  • "கள்ளிக்காட்டு இதிகாசம்" என்னும் புதினத்துக்காக 2003 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.

  • இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை ஏழு முறையும் மாநில அரசின் விருதினை ஆறு முறையும் பெற்றவர்.

  • விண்ணையும் சாடுவோம்

    • இஸ்ரோவின் ஒன்பதாவது தலைவர், இந்தப் பதவியைஏற்றிருக்கும் முதல் தமிழர் என்னும் சிறப்புகளுக்கு உரியவர் – சிவன். இவரது சொந்த ஊர் நாகர்கோவில் அருகில் வல்லங்குமாரவிளை என்ற கிராமம்.

    • 1983 ஆம் ஆண்டு முதன்முதலில், பி.எஸ்.எல்.வி (polar satellite launch vehicle) திட்டத்தைத் தொடங்க அரசாங்கம் இசைவு தந்தது.

    • "இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை" என்று அழைக்கப்படுபவர் – "விக்ரம் சாராபாய்"

    • இந்தியா செலுத்திய முதல் செயற்கைக்கோள் – ஆர்யப்பட்டா. இதற்குக் காரணமனவர் விக்ரம் சாராபாய்

    • "விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்" திருவனந்தபுரத்தில் உள்ளது.

    • விக்ரம் சாராபாய் முயற்சியால் தொடங்கப்பட்ட நிறுவனம் – "இஸ்ரோ"

    • "சித்தாரா" என்னும் செயலியை உருவாக்கியவர் – சிவன்.
  • சித்தாரா என்னும் செயலியானது செயற்கைக்கோள் ஏவு ஊர்தி பற்றிய முழு விவரங்களையும் மின்னிலக்க முறையில் சேகரிக்கும். அதைப் பயன்படுத்தி, வாகனத்தின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்கலாம். எளிதாகச் சொல்வதானால், ஒரு கல்லைத் தூக்கி வீசும்போது, அந்தக் கல் எந்தத் திசையில், எவ்வளவு கோணத்தில், எவ்வளவு நேரத்தில், எந்த இடத்தில், எவ்வளவு அழுத்தத்தில் விழும் என்று சொல்வதுதான் ‘சித்தாரா’வின் பணி. ஏதாவது தவறு நடந்திருந்தால், உடனே கண்டுபிடித்துச் சரி செய்து விடலாம். இதைப் பயன்படுத்தித்தான் பி.எஸ்.எல்.வி. ஏவப்பட்டது. இப்போதுவரை நம்முடைய நாட்டிலிருந்து ஏவப்படும் அனைத்துச் செயற்கைக்கோள் ஏவு ஊர்திகளும் ‘சித்தாரா’ செயலியைப் பயன்படுத்தித்தான் விண்ணில் ஏவப்படுகின்றன.

  • இந்தியாவின் 11 ஆவது குடியரசுத் தலைவர் – அப்துல் கலாம்.இவர் தமிழ்நாட்டின் இராமேசுவரத்தைச் சேர்ந்தவர்.

  • "இந்திய ஏவுகணை நாயகன்" என்று போற்றப்படுபவர் – அப்துல் கலாம். இந்தியாவின் உயரிய விருதான "பாரத ரத்னா" விருது பெற்றவர். இவர் தம் பள்ளிக் கல்வியை தமிழில் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 2015 ல் தமிழ்நாடு அரசின் அப்துல் கலாம் விருதைப் பெற்ற முதல் அறிவியல் அறிஞர் – வளர்மதி

  • இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட இயக்குனராகப் பணியாற்றிய இரண்டாவது பெண் அறிவியல் அறிஞர் – வளர்மதி

  • கடல்பயணத்தின் போது மீனவர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட செயலி – "நேவிக்"

  • விண்வெளித் துறையில் மூன்று வகையான தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. செயற்கைக்கோளை ஏவுவதற்கான தொழில்நுட்பம், செயற்கைக்கோளை ஏற்றிச்செல்லும் ஏவு ஊர்தி, அந்த ஏவு ஊர்தியிலிருந்து விடுபட்ட செயற்கைக்கோள் தரும் செய்திகளைப் பெற்று அதைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவருதல்.

  • 2013-ல் மங்கள்யான் செயற்கைக்கோளை உருவாக்கிய இந்தியாவின் செவ்வாய் திட்டஇயக்குநராக இருப்ப்பவர் – அருணன் சுப்பையா. இவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

  • இன்னும் சில தகவல்கள்:

    • "இளைய கலாம்" என்று அழைக்கப்படுபவர் – மயில்சாமி அண்ணாதுரை.

    • "சந்திராயன் – 1" திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர் – மயில்சாமி அண்ணாதுரை.

    • தமது அறிவியல் அனுபவங்களை "கையருகே நிலா" என்னும் நூலாக எழுதியுள்ளவர் – மயில்சாமி அண்ணாதுரை.
  • 10 வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும். பாடவும் ஆற்றல் பெற்றவர் வள்ளலார்.

  • 11 ஆவது வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி "பாரதி" என்னும் பட்டம் பெற்றவர் – பாரதியார்

  • 15 ஆவது வயதிலேயே பிரெஞ்சு இலக்கியக் கழகத்துக்குத் தமது கவிதைகளை எழுதியனுப்பியவர் – "விக்டர் ஹுயூகோ"

  • 16 ஆவது வயதிலேயே தமது தந்தையின் போர்ப் படையில் தளபதியானவர் – "மாவீரன் அலெக்சாண்டர்"

  • 17 ஆவது வயதிலேயே பைசா நகரச் சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து ஆராய்ந்தவர் – "கலீலியோ"

  • நூலகம் பற்றிய சில தகவல்கள்

  • ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் – தஞ்சை சரசுவதி மகால் நூலகம். இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச்சுவடிகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.

  • உலகலவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம் – கன்னிமாரா நூலகம். இது சென்னை எழும்பூரில் உள்ளது.

  • இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் – திருவனந்தபுரம் நடுவண் நூலகம்

  • கல்கத்தாவில் 1836 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு,1953 ல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட தேசிய நூலகமே இந்தியாவின் மிகப், பெரும் நூலகம் ஆகும். இது ஆவனக் காப்பாக நூலகமாகவும் திகழ்கிறது.

  • உலகின் மிகப் பெரிய நூலகம் என்ற பெருமையைத் தாங்கி நிற்பது அமெரிக்கவிலுள்ள " லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்"

  • "உலகில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும்!" என்று கூறியவர் – அறிஞர் அண்ணா

  • "உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே! " என்று கூறியவர் – "கதே"

  • 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இசைநூல் – "சங்கீத இரத்னாகரம்"
  • வீட்டிற்கோர் புத்தக சாலை:

  • "நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கிவந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்" என்று கூறியவர் – ஆபிரகாம் லிங்கன்

  • "2009" ஆம் ஆண்டு நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது.

  • 2010 ஆம் ஆண்டுஅண்ண நூற்றாண்டு நிறைவடைந்ததை நினைவுபடுத்தும் வண்ணம் தமிழ்நாடு அரசு அண்ண நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது.

  • நாகசுரம் பற்றியக் குறிப்புகள்

  • இந்திய இசையின் அழகான நுட்பங்களைத் தெளிவாக வாசித்துக் காட்டக்கூடிய இசைக் கருவிகளில் நாகசுரமும் ஒன்று.

  • மங்கலகரமான பல நிகழ்வுகளில் இக்கருவி இசைக்கப்படுகிறது. இந்தச் சிறப்பான கருவி 600 ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழகத்தில் வாசிக்கப்பட்டது.

  • 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "சங்கீத இரத்னாகரம்" என்னும் நூலில் இந்தக் கருவி கூறப்படவில்லை.

  • 13 ஆம் நூற்றாண்டு வரையிலுள்ள எந்தப் பதிவுகளிலும் இந்தக் கருவிப் பற்றிக் குறிப்பிடவில்லை.

  • தமிழகப் பழைமை வாய்ந்த சிற்பங்களிலும் இந்தக் கருவி காணப்படவில்லை. ஆகவே இந்தக் கருவி இடைக்காலத்திற்குப் பின் ஏற்பட்டிருக்கலாம் என்று அறிய முடிகிறது.

  • "நாகசுரம்" என்ற பெயரே சரியானது.. நாகசுரக் கருவி ஆச்சா மரத்தில் செய்யாப்படுகிறது.

  • வெட்டப்பட்ட ஆச்சா மரத்துண்டுகளை நீண்ட நாள்கள் வைத்திருந்த பிறகே இக்கருவி உருவாக்கப்படுகிறது.

  • நாகசுரத்தின் மேல்பகுதியில் "சீவாளி" என்ற கருவி பொருத்தப்படுகிறது. சீவாளி, நாணல் என்ற புல் வகையைக் கொண்டு செய்யப்படுகிறது.

  • " பொதுவர்கள் பொலிஉறப் போர் அடித்திடும்" நிலப்பகுதி – முல்லை

  • திருநாதர் குன்றில் ஒரு பாறையில் புடைப்புச்சிற்பங்களாக உள்ளவை – தீர்த்தங்கரர் உருவங்கள்

  • பழந்தமிழர் சமூக வாழ்க்கை:

    திணை நிலத் தெய்வங்கள்:

    • குறிஞ்சி – முருகன்

    • முல்லை – திருமால்

    • மருதம் – இந்திரன்

    • நெய்தல் – வருணன்

    • பாலை – கொற்றவை
  • சங்க காலத்தில் வெற்றியைக் கொண்டாட "கொற்றவை" என்னும் பெண் தெய்வத்தை வணங்கும் மரபு இருந்தது.

  • சங்க காலத்தில் வீரத்தை உணர்த்த வீர்ர்களுக்கு "நடுகல் வழிபாடு" செய்வதும் வழக்கத்தில் இருந்தது.
  • "நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்
    பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
    பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்"


    – என்று நடுகல் பற்றிக் கூறும் நூல் – "அகநானூறு"

    "அறுமீன் சேரும் அகலிரு நடுநாள்
    மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி"

    என்ற பாடலில் சங்க காலத்தில் "கார்த்திகை திருநாள்" கொண்டாடப்பட்ட செய்தியை "அகநானூறு" கூறுகிறது.

    "வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
    வெறியாட்டு அயர்ந்த காந்தளும்"

    என்ற பாடலில் சங்க காலத்தில் "வேலன் வெறியாட்டு விழா" கொண்டாடப்பட்ட செய்தியை "தொல்காப்பியம்" கூறுகிறது.

  • சங்ககால மக்கள் அணிந்திருந்த மேற்சட்டை "கஞ்சுகம்" எனப்பட்டது.

  • சங்க காலத்தில் துணி தைப்பவர் "துன்னக்காரர்" எனப்பட்டனர்.

  • சங்க காலத்தில் சிறுவர் "ஐம்படைத்தாலி" என்னும் கழுத்தணி அணிந்திருந்தனர்.

  • "புகைவிரிந்தன்ன பொங்கு துகில் உடீஇ
    ஆவியன்ன அவிர் நூற் கலிங்கம்"

    – என்ற அடிகள் "புறநானூற்றிலும்", "பெரும்பாணாற்றுப்படையிலும்" உள்ளது.

  • முல்லை நிலத்தின் "ஏறு தழுவுதல்" ஆண்மகனின் வீரத்தைப் புலப்படுத்துவதாக இருந்தது. மற்றொரு சீறந்த வீரவிளையாட்டு "மற்போரிடல்"

  • "அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு
    கவைத்தாள் அலவன் கலவையோடு பெறுகுவீர்"

    – என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல் – "சிறுபாணாற்றுப்படை"

  • பழந்தமிழர் வாழ்வு அகம், புறம் என இருதிறப்பட்டதாக இருந்தது. அகவாழ்வைப் பாடுவது "அன்பின் ஐந்திணை" எனப்பட்டது.

  • சங்க கால இசை நூல்கள்:

  • முதுநாரை

  • முதுகுருகு

  • பெருநாரை

  • பெருங்குருகு

  • பஞ்சபாரதீயம்

  • இசை நுணுக்கம்

  • பஞ்சமரபு
  • "சிறுவளை விலையெனப் பெருந்தேர் பண்ணிஎம்
    முன்கடை நிறீஇச் சென்றிசி னோனே"

    – என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல் – "நற்றிணை"
  • இல்லறத்தார்க்கு விருந்தோம்பல், சுற்றம் தழுவல், வறியோர் துயர் துடைத்தல் ஆகியவை தலையாய கடமைகளாக இருந்தன. இதனை

  • "இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
    அசையுடன் இருந்தோர்க்கு
    அரும்புணர்வு இன்மென"

    – என்று கூறும் நூல் "நற்றிணை"

    சங்ககால கல்வி மற்றும் ஆசிரியர் பற்றி,
    "பல்கேள்வித் துறை போகிய
    தொல்லாணை நல்லாசிரியர்
    உறழ் குறித் தெடுத்த உருகெழுகொடியும்"


    – என்று "பட்டினப்பாலை" அடிகள் கூறுகிறது.

  • சங்க காலத்தில் உப்பு வணிகம் செய்தவர்கள் "உமணர்" என்றழைக்கப்பட்டனர்.

  • சங்க காலத்தில் "பாணன்", "பாடினி" முதலான இசைக்கலைஞர்கள் சிறப்புற்றிருந்தனர்.

  • சங்க காலத்தில் கூத்துக் கலையும் போற்றி வளர்க்கப்பட்டது. "கூத்தர்", "விறலியர்" போன்ற கலஞர்கள் இருந்தனர்.

  • மன்னர்க்குரிய கூத்து "வேத்தியல்" என்றும் மற்றவர்க்குரியவை "பொதுவியல்" என்றும் அழைக்கப்பட்டன.

  • இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

  • இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலப் படைகள் ஜப்பானிடம் சரணடைந்தன. இப்படையில் இருந்த இந்திய வீரர்களைக் கொண்டு ஜப்பானியர்கள், "மோகன்சிங்" என்பவரின் தலைமையில் இந்திய தேசிய இராணுவம் (ஐ.அன்.ஏ) என்ற படையை உருவாக்கினர்.

  • நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய இராணுவத்தின் பொறுப்பை ஏற்க, 91 நாள்கள் நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து ஜெர்மனியிலிருந்து சிங்கப்பூர் வந்தடைந்தார். 1943 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் தேதி பதவியேற்றார். அவர் உரையாற்றிய மாபெரும் கூட்டத்தில் "டெல்லி நோக்கிச் செல்லுங்கள் (டெல்லி சலோ) எனப் போர்முழக்கம் செய்தார்.

  • தமிழகத்திலிருந்து பெரும்படையைத் திரட்டி இந்திய தேசிய ராணுவத்திற்கு வலு சேர்த்த பெருமைக்குரியவர் – "பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்"

  • "இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள் தான்" என்று கூறியவர் – இந்திய தேசிய இராணுவப்படையின் தலைவராக இருந்த "தில்லான்"

  • நேதாஜியின் 45 பேர் கொண்ட வான்படை பயிற்சிப் பிரிவின் பெயர் – "டோக்கியோ கேட்ட்ஸ்"

  • இந்திய தேசிய இராணுவத்தில் ஜான்சிராணி பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் "டாக்டர் லட்சுமி"

  • இப்படையில் தமிழ்ப் பெண்கள் பெருமளவில் பங்கேற்றார்கள். இதில் தலைசிறந்த தலைவர்களாக ஜானகி, ராஜாமணி போன்றோர் விளங்கினர்.

  • நேதாஜி அமைத்த தற்காலிக அரசில் கேப்டன் லட்சுமி, சிதம்பரம் லோகநாதன் முதலான தமிழர்கள் அமைச்சர்களாக இருந்தார்கள். சிறந்த தலைவர்களை உருவாக்க நேதாஜி 45 இளைஞர்களை டோக்கியோ அனுப்பினார். அவர்களில் பெரும்பாலோனோர் தமிழர்கள். அதில் பயிற்சி பெற்றவர்களுள் குறிப்பிடத்தக்கவர் "கேப்டன் தாசன்" ஆவார். அவர் பின்பு சுதந்திர இந்தியாவில் செசல்ஸ் நாட்டுத் தூதுவராகப் பணியாற்றினார்.

  • "மலேயாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது." என்று கூறியவர் – ஆங்கிலேயப் பிரதமர் "சர்ச்சில்"

  • "தமிழனம்தான் ஆங்கிலேயர்களை அழிக்கும்" என்று கூறியவர் – "நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்"
  • நேதாஜியின் பொன்மொழிகள்:

  • "அநீதிகளுக்கும் தவறான செயல்களுக்கும் மனம் ஒப்ப இடம் தருதல் மிகப்பெரிய குற்றமாகும்.

  • நீங்கள் நல்வாழ்வைத் தந்தேஆக வேண்டும் என்பதுதான் காலத்தால் மறையாத சட்டமாகும்.

  • எந்தவிலை கொடுத்தாவது சமத்துவத்திற்குப் போராடுவதே மிகச்சிறந்த நற்குணமாகும்.

  • மனதை மலரவைக்கும் இளங்கதிரவனின் வைகறைப் பொழுது வேண்டுமா? அப்படியானால் இரவில் இருண்ட நேரங்களில் வாழக் கற்றுக்கொள்."

  • "விடுதலையினால் உண்டாகும் மகிழ்ச்சியும் சுதந்திரத்தினால் உண்டாகும் மனதிருப்தியும் வேண்டுமா? அப்படியானால் அதற்கு விலையுண்டு. அவற்றுக்கான விலை துன்பமும் தியாகமும் தான்." என்று கூறியவர் – "நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்"

  • இந்திய தேசிய இராணுவம் 1944 ஆம் ஆண்டு மார்ச் 18 அன்று ஆங்கிலேயரை வென்று இந்தியாவிற்குள் மணிப்பூர்ப் பகுதியில் "மொய்ராங்" என்ற இடத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றியது.

  • "நான் என் உயிரைக் கொடுப்பதற்கு கொஞ்சமும் கவலைப்படவில்லை. ஏனெனில் நான் கடவுளுக்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை" என்று கூறியவர் – இராமு என்ற சுதந்திரப் போராட்ட தியாகி

  • "வாழ்வின் பொருள் தெரிந்தால்தான் மனிதன் மேல்நிலை அடைவான். நாட்டிற்காக உயிர்நீத்த முழுநிலவினைப் போன்ற தியாகிகள் முன்பு நாங்கள் மெழுகுவர்த்திதான்" என்று கூறியவர் – "அப்துல்காதர்"

  • "இந்திய தேசிய இராணுவம் – தமிழர் பங்கு" என்ற நூலை இயற்றியவர் – "பேராசிரியர் மா.சு.அண்ணாமலை". இந்நூல் தமிழக அரசின் பரிசு பெற்றது. இவர் தலைமையில் எடுக்கப்பட்ட குறும்படங்கள் சர்வதேச அளவில் பரிசு பெற்றன.

  • " வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே" இவ்வடி உணர்த்தும் பொருள் – மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்

  • அகில இந்தியகாங்கிரசுக் கட்சியின் தமிழ் மாநிலத்தின் முதல் பெண் சார்பாளராகத் (பிரதிநிதியாக) பங்குப் பெற்றவர் – நாகம்மையார் (பெரியாரின் மனைவி)

  • "தாகூர்", "நேரு", "டி.கே.சி", "வல்லிக்கண்ணன்", "பேரறிஞர் அண்ணா", "மு.வரதராசனார்", "கு.அழகிரிசாமி", "கி.இராஜநாராயணன்" முதலானோர் கடித வடிவில் இலக்கியங்கள் படைத்துள்ளனர்.

  • விரிவாகும் ஆளுமை

  • பேராசிரியர் தனிநாயகம் அவர்கள் இதழ்கள், கருத்தரங்குகள், மாநாடுகள், நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் தமிழியலை உலக்ச் செயலாடாக ஆக்கினார்.

  • "யாதும் ஊரே யாவருங் கேளிர்" என்று கூறியவர் – "கணியன் பூங்குன்றனார்"

  • "நான் மனிதன்; மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்குப் புறமன்று" என்று கூறியவர் – "இலத்தீன் புலவர் தெறென்ஸ்"

  • "முதலாவதாக மனிதன், தன் ஈடுபாடுகளை விரிவாக வளர்ப்பவனாக இருத்தல் வேண்டும்.பிறருடைய நலத்திற்கும் இன்பத்திற்கும் பாடிபடக்கூடிய வகையில் தன் ஆளுமையை விரிவடையச் செய்து செழுமைப்படுத்த வேண்டும்.

  • இரண்டாவதாக ஒருவன் பிறரால் எவ்வாறு கணிக்கப்படுகிறானோ அதை அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவனாக இருத்தல் வேண்டும்.

  • மூன்றாவதாக அவனது வாழ்க்கைக்குச் சுய ஓர்மையைத் தரும் வாழ்க்கைத் தத்துவத்தைக் கடப் பிடித்து நடத்தல் வேண்டும்" என்ற மூன்று இலக்கணங்கள் முதிர்ந்த ஆளுமைக்கு இன்றியமையாதவை என்று கூறுபவர் – "கோர்டன் ஆல்போர்ட்" என்ற உளவியல் வல்லுநர்.

  • குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப்பிண்டம் என்பதைப் "பூட்கையில்லோன் யாக்கை போல" என்று புறநானூற்றுப் பாடலில் "ஆலந்தூர்கிழார்" கூறுகிறார்.

  • சீன நாட்டில் கி.மு.604 ல் பிறந்த "லாவோட்சும்" அவருக்குப் பின்பு "கம்பூசியசும்(551 – 4790" தம் காலத்திலேயே "பிறர் நலவியல் (பிறர் நலத்திற்கு பாடுபடுதல்)" என்ற கொள்கையை தெளிவாகக் கற்பித்துள்ளனர்.

  • "இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்டு செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பது அரிது" என்று திருக்குறளைப் பற்றிக் கூறியவர் – "ஆல்பர்ட் சுவைட்சர்"

  • ஒழுக்கவியலை நன்கறிந்து எழுதிய உலகமேதை – "ஆல்பர்ட் சுவைட்சர் "

  • தமிழர்கள் பிறநாடுகளைக் குறிப்பிடும் போது வேற்றுநாடு, பிறநாடு என்று குறிக்காது மொழிமாறும் நாடு – மொழிபெயர் தேயம் – என்றே வரையறுத்துக் கூறியவர்கள் – தமிழர்கள்.

  • "படுதிரை வையம் பாத்திய பண்பே" என்று கூறும் நூல் – "தொல்காப்பியம்"

  • "இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும்
    அறவிலை வணிகன் ஆய் அலன்" என்று கூறும் நூல் – "புறநானூறு"

  • பிறருக்காக வாழும் மக்கள் இவ்வுலகில் இல்லையென்றால், நாம் வாழ்வது அரிது. பிறர்க்காக வாழ்வதே உயர்ந்த பண்பும் பண்பாடும் ஆகும். இதனை "உண்டாலம்ம இவ்வுலகம்" என்ற புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.
  • உலகத்தமிழ் மாநாடுகள் நடைப்பெற்ற இடங்களும் ஆண்டுகளும்:

    • 1966 – கோலாலம்பூர் (மலேசியா)

    • 1968 – சென்னை (இந்தியா)

    • 1970 – பாரீசு (பிரான்சு)

    • 1974 – யாழ்ப்பாணம் (இலங்கை)

    • 1981 – மதுரை (இந்தியா)

    • 1987 – கோலாலம்பூர் (மலேசியா)

    • 1989 – மொரீசியசு (மொரீசியசு)

    • 1995 – தஞ்சாவூர் (இந்தியா)

    • 2010 – கோவை (இந்தியா)
  • "பண்புடைமையாவது யாவர்மாட்டும் அவரோடு அன்பினராய்க் கலந்து ஒழுகுதலும், அவரவர் வருத்தத்திற்குப் பரிதலும் பகுத்து உண்டலும் பழிநாணலும் முதலான நற்குணங்கள் பலவும் உடைமை" என்று கூறியவர் – "பரிப்பெருமாள்".

  • "இமயத்துக் கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டுத்
    தீது இல் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே" என்று கூறும் நூல் – புறநானூறு.

  • புலவர்கள்குமரி ஆறு, காவிரி ஆறு போன்ற மணல் நிறைந்த இடங்களை நீண்ட வாழ்க்கைக்கும் பன்மைக்கும் உவமையாகக் கூறுகிறார்கள். அத்துடன் கங்கையையும் இமயத்தில் பெய்யும் மழையையும் உவமையாகச் சேர்த்துக் கொள்கிறார்கள்.

  • "இமயந்தீண்டி இன்குரல் பயிற்றிக்
    கொண்டல் மாமழை பொழிந்த
    நுண்பஃறுளியினும் வாழிய பலவே"


    – என்று கூறும் நூல் – "புறநானூறு"

  • தமிழ் மக்கள் "சான்றோன்" எனப்படும் குறிக்கோள் மாந்தனைப் பாராட்டிய காலத்தில் இத்தாலிய நாட்டில் உரோமையர் "sapens"(அறிவுடையோன்) எனப்படும் இலட்சிய புருஷனைப் போற்றி வந்தனர்.

  • உரோமையருடைய "சாப்பியன்ஸ்" அல்லது சான்றோன் என்பவன் சமுதாயத்திலிருந்து விலகி, தன் சொந்தப் பண்புகளையே வளர்க்க வேண்டும். உரோமையருடைய சான்றோர் அரிதாகவே சமுதாயத்தில் தோன்றுவர்.

  • பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனுக்குக் கூறியது போலத் தமிழ்ச் சான்றோர் பலர் வாழும் ஊரே வாழ்க்கைக்கு இன்பத்தைத் தரும்.

  • "எல்லாருடைய நாடுகளும் நமக்குத் தாய் நாடு என்றும், நம் நாடு எல்லா மக்களுக்கும் தாய் நாடு என்றும் நாம் கருதுதல் வேண்டும்." என்று கூறியவர் – "செனக்கா" என்னும் தத்துவ ஞானி.

  • "நான் பகுத்தறிவும் கூட்டுறவும் உடையவன்;நான் அண்டோநீனஸ் ஆதலால் உரோமுக்கு உரியவன்; நான் மனிதன் என்பதால் உலகிற்கு உரியவன்" என்று கூறியவர் – "மார்க்ஸ் அரேலியஸ்" என்னும் பேரரசர்.

  • திருவள்ளுவரை "உலகப் புலவர்" என்று போற்றியவர் – "ஜி.யு.போப்"

  • "உள்ளற்க உள்ளம் சிறுகுவ" என்று கூறும் நூல் – திருக்குறள்

  • "உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்" என்று கூறியவர் – "திருவள்ளுவர்"

  • "வளத்தம்மா" என்ற கதையை எழுதியவர் – "சு.சமுத்திரம்" என் கதைகளின் கதைகள்" என்ற நூலை இயற்றியவர் – "சு.சமுத்திரம்"


  • Scroll to Top