7th Std Tamil book Read Onlone TN School books

7 ஆம் வகுப்பு

பாடம் 1 : அமுதத்தமிழ்

எங்கள் தமிழ்

உலக மொழிகளில் தொன்மையானது தமிழ்மொழி.

"அருள்நெறி அறிவைத் தரலாகும்
அதுவே தமிழன் குரலாகும்
பொருள்பெற யாரையும் புகழாது
போற்றா தாரையும் இகழாது

கொல்லா விரதம் குறியாகக்
கொள்கை பொய்யா நெறியாக
எல்லா மனிதரும் இன்புறவே
என்றும் இசைந்திடும் அன்பறமே

அன்பும் அறமும் ஊக்கிவிடும்
அச்சம் என்பதைப் போக்கிவிடும்
இன்பம் பொழிகிற வானொலியாம்
எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்"


என்ற பாடலை இயற்றியவர் – நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்.

பாடலின் பொருள் :

  • நம் தாய்மொழியாம் தமிழ்மொழி, அருள் நெறிகள் நிரம்பிய அறிவைத் தருகிறது.அதுவே தமிழ்மக்களின் குரலாகவும் விளங்குகிறது.

  • தமிழ் மொழியைக் கற்றோர் பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார்.

  • தம்மைப் போற்றாதவர்களையும் இகழ்ந்து பேசமாட்டார்.

  • கொல்லாமையைக் குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.

  • நம் தமிழ்மொழி அனைவரிடத்தும் அன்பையும் அறத்தையும் தூண்டும்; அஃது அச்சத்தைப் போக்கி இன்பம் தரும்; எங்கள் தமிழ்மொழி தேன் போன்ற மொழி ஆகும்.

சொல்லும் பொருளும்:

  • ஊக்கிவிடும் – ஊக்கப்படுத்தும்

  • குறி – குறிக்கோள்

  • விரதம் – நோன்பு

  • பொழிகிற – தருகின்ற

நாமக்கல் கவிஞர் பற்றியக் குறிப்புகள்:

  • இவர் தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மைக் கொண்டவர்.

  • நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் அவர்கள் காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்படுகிறார்.

  • இவர் தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர்.

நாமக்கல் கவிஞர் இயற்றிய நூல்களுள் சில:

  • மலைக்கள்ளன்

  • நாமக்கல் கவிஞர் பாடல்கள்

  • என்கதை

  • சங்கொலி
"கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தி யத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்!….

கண்ட தில்லை கேட்ட தில்லை
சண்டை யிந்த மாதிரி
பண்டு செய்த புண்ணி யந்தான்
பலித்த தேநாம் பார்த்திட!…."


என்று பாடியவர் – நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்.

  • நெறி என்னும் சொல்லின் பொருள் – வழி

  • குரலாகும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது குரல் + ஆகும்.

  • வான் + ஒலி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது வானொலி.

ஒன்றல்ல இரண்டல்ல

"ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல
ஒப்புமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்

தென்றல் தரும் இனிய தேன்மண மும்கமழும்
செங்கனியும் பொன்கதிரும் தந்துதவும் நன்செய்வளம்

பகைவென்ற திறம்பாடும் பரணிவகை – செழும்
பரிபாடல் கலம்பகங்கள் எட்டுத்தொகை – வான்
புகழ்கொண்ட குறளோடு அகம்புறமும் – செம்
பொருள்கண்ட தமிழ்ச்சங்க இலக்கியப் பெருஞ்செல்வம்

முல்லைக்குத் தேர்கொடுத்தான் வேள்பாரி – வான்
முகிலினும் புகழ்படைத்த உபகாரி – கவிச்
சொல்லுக்குத் தலைகொடுத்தான் அருள்மீறி – இந்த
வள்ளலாம் குமணன்போல் வாழ்ந்தவர் வரலாறு"


என்று பாடியவர் உடுமலை நாராயணகவி.

பாடலின் பொருள்:

  • தமிழ்நாட்டின் பெருமைகளைக் கூறினால் அவை ஒன்றிரண்டல்ல பலவாகும். அவை எவற்றோடும் இணைசொல்ல முடியாத விந்தைகளாகும்.

  • இண்டு வீசும் தென்றலில் தேன்மணம் கமழும். சுவைமிகு கனிகளும் பொன் போன்ற தானியக் கதிர்களும் விளையும். தமிழ்நாட்டின் நன்செய் நில வளம் ஒன்றிரண்டல்ல பலவாகும்.

  • பகைவரை வென்றதைப் பாடுவது பரணி இலக்கியமாகும். அத்தோடு இசைப்பாடலான பரிபாடலும் கலம்பக நூல்களும் எட்டுத்தொகையும் வான் புகழ் கொண்ட திருக்குறளும் அகம், புறம் ஆகியவற்றை மெய்ப்பொருளாகக் கொண்டு பாடப்பட்ட சங்க இலக்கியங்களும் எனத் தமிழின் இலக்கிய வளங்கள் ஒன்றிரண்டல்ல பலவாகும்.

  • முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விடப் புகழ் பெற்றான் வள்ளல் வேள்பாரி. புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தான் குமண வள்ளல்.இவர்கள் போல் புகழ் பெற்று வாழ்ந்த வள்லல்களின் வரலாறு ஒன்றிரண்டல்ல பலவாகும்.

சொல்லும் பொருளும்:

  • ஒப்புமை – இணை

  • அற்புதம் – விந்தை

  • முகில் – மேகம்

  • உபகாரி – வள்ளல்

உடுமலை நாராயணகவி பற்றியக் குறிப்புகள்:

  • இவர் பகுத்தறிவுக் கவிராயர் என்று அழைக்கப்படுகிறார்.

  • திரைப்படப் பாடல் ஆசிரியராகவும்,நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றார்.

  • தமது பாடல்களின் மூலம் பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்பியவர்.

  • நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர்.

  • பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் – பரணி
  • இரண்டல்ல என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – இரண்டு + அல்ல

  • தந்துதவும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – தந்து + உதவும்

  • ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – ஒப்புமையில்லாத

  • பேச்சு மொழியும் எழுத்து மொழியும்

    • தமிழ் மொழியானது பேச்சு மொழி, எழுத்து மொழி என இரு கூறுகளைக் கொண்டது.

    • தனது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டதே மொழியாகும்.

    • வாயினால் பேசப்பட்டு பிறரால் கேட்டு உணரப்படுவது பேச்சு மொழியாகும்.

    • பேசுவதும் கேட்பதும் மொழியின் முதல் நிலையாகும்.

    • கண்ணால் கண்டு உணருமாறு வரிவடிவமாக எழுதப்பட்டுப் படிக்கப்படுவது எழுத்து மொழியாகும்.

    • எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் மொழியின் இரண்டாம் நிலை ஆகும்.

    • மனிதர்களின் சிந்தனைகள் காலம் கடந்து வாழ்வதற்கு காரணமானது – எழுத்து மொழி

    • மொழியின் உயிர்நாடியாக விளங்குவது – பேச்சுமொழி

    • "பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி;எழுதப்படுவதும் படிக்கப்படுவதுமே அடுத்த நிலையில் வைத்து கருதப்படும் மொழியாகும்.இவையே அன்றி வேறுவகை மொழிநிலைகளும் உண்டு.எண்ணப்படுவது,நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும்." என்று மொழியைப் பற்றிக் கூறியவர் – மு.வரதராசனார்.

    • "எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில்

    • திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்" என்ற நன்னூல் அடிகள் சொல்லை ஒலிப்பதில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தால், பொருள் வேறுபடும் என்பதை உணர்த்துகிறது.
    • இடத்திற்கு இடம், மனிதனின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் மாறுபடும் ஒரு மொழியின் வெவ்வேறு வடிவங்களை வட்டார மொழி என்பர்.

    • கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலிய திராவிட மொழிகள் தமிழிலிருந்து பிரிந்து சென்ற கிளைமொழிகள் ஆகும்.

    • பேச்சு மொழிக்கு நாம் தந்த வரி வடிவம் – எழுத்து மொழி

    • உலக வழக்கு என்று அழைக்கப்படுவது – பேச்சு மொழி

    • இலக்கிய வழக்கு என்று அழைக்கப்படுவது – எழுத்து மொழி

    • பேச்சு மொழியை விட எழுத்து மொழியில் உணர்ச்சிக் கூறுகள் குறைவு.

    • பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அஃது இரட்டை வழக்கு மொழி எனப்படும். தமிழ்ல் பழங்காலம் முதலே பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாடு இருந்துள்ளது. தொல்காப்பியர் இவற்றை உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்று கூறியுள்ளார்.

    • தொல்காப்பியர் உலக வழக்கு என்று கூறுவது – பேச்சு மொழி

    • தொல்காப்பியர் செய்யுள் வழக்கு என்று கூறுவது – எழுத்து மொழி

    • திருத்தமான இலக்கிய நடையில் அமைவது – எழுத்து மொழி

    • கேட்டல், பேசுதல் என்னும் முதல் நிலையிலேயே குழந்தைகளுக்குத் தாய்மொழி அறிமுகமாகிறது. படித்தல், எழுதுதல் என்னும் இரண்டாம் நிலையில் பிற மொழிகள் அறிமுகமாகின்றன.

    • பேச்சு மொழியில் பிறமொழிச்சொற்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன.

    • இரட்டை வழக்கு மொழி என்று அழைக்கப்படுவது – தமிழ் மொழி

    • இக்காலத்தில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் சான்றோர்களின் உரைகள் ஒலிப்பதிவு மற்றும் ஒளிப்பதிவு செய்யப்படுகின்றன. இதன் காரணமாகப் பேச்சு மொழியும் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    "எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்
    இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்
    வெளியுலகில்,சிந்தனையில் புதிதுபுதிதாக
    விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்கள் எல்லாம் கண்டு
    தெளிவுறுத்தும் படங்களோடு சுவடிஎலாம் செய்து
    செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்"


    என்று பாடியவர் – பாவேந்தர் பாரதிதாசன்

  • சொலவடைகள் என்று அழைக்கப்படுவது – பழமொழிகள்.

  • இலக்கணம்

    குற்றியலுகரம், குற்றியலிகரம்

    • தமிழெழுத்து முதலெழுத்து, சார்பெழுத்து என இருவகைப்படும்.

    • முதலெழுத்துக்கள் 30 வகைப்படும்
    சார்பெழுத்துக்கள் 10 வகைப்படும்.
    1. உயிர்மெய்

    2. ஆய்தம்

    3. உயிரளபடை

    4. ஒற்றளபடை

    5. குற்றியலுகரம்

    6. குற்றியலிகரம்

    7. ஐகாரக்குறுக்கம்

    8. ஔகாரக்குறுக்கம்

    9. மகரக்குறுக்கம்

    10. ஆய்தக்குறுக்கம்

    குற்றியலுகரம்:

  • கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும்போது ஒரு மாத்திரைக்குப் பதிலாக அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இவ்வாறு தனக்குரிய ஓசையில் இருந்து குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும்.

  • குறுமை + இயல் + உகரம் = குற்றியலுகரம்

  • (எ.கா) காசு, எஃகு, பயறு, பாட்டு, பந்து, சால்பு

    முற்றியலுகரம்:

  • தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் ஒரு மாத்திரை அளவுக்கு முழுமையாக ஒலிக்கும்.வல்லினம் அல்லாத உகரங்கள் எப்போதும் முழுமையாகவே ஒலிக்கும். இவ்வாறு ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை முற்றியலுகரம் எனபர்.

  • (எ.கா) பசு, புகு, விடு, அது, வறு, மாவு, ஏழு

  • தமிழில் எழுத்துக்களைக் குறிப்பிடுவதற்கு கரம், கான், காரம், கேனம் ஆகிய அசைச் சொற்களைப் பயன்படுத்துகிறோம்.
    • குறில் எழுத்துக்களைக் குறிக்க "கரம்" (எ.கா) அகரம்,இகரம்,உகரம், ககரம்,மகரம்

    • நெடில் எழுத்துக்களைக் குறிக்க "கான்" (எ.கா) ஐகான், ஔகான்

    • குறில், நெடில் எழுத்துக்களைக் குறிக்க "காரம்" (எ.கா) மகாரம், ஏகாரம், ஐகாரம்,ஔகாரம்

    • ஆய்த எழுத்தைக் குறிக்க "கேனம்" (எ.கா) அஃகோனம்

    குற்றியலுகரத்தின் வகைகள்:

    குற்றியலுகரம் 6 வகைப்படும்.
    1. நெடில் தொடர் குற்றியலுகரம்

    2. வன்தொடர் குற்றியலுகரம்

    3. மென்தொடர் குற்றியலுகரம்

    4. ஆய்தத்தொடர் குற்றியலுகரம்

    5. உயிர்த்தொடர் குற்றியலுகரம்

    6. இடைத்தொடர் குற்றியலுகரம்

    நெடில்தொடர்க் குற்றியலுகரம்:

  • தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் "நெடில் தொடர்க் குற்றியலுகரம்" எனப்படும். இவைஈரெழுத்துச் சொற்களாக மட்டும் அமையும்.

  • (எ.கா.) பாகு, மாசு, பாடு, காது, ஆறு.

    ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்:

  • ஆய்த எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் "ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்" எனப்படும்.

  • (எ.கா.) எஃகு, அஃது

    உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்:

  • தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் "உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்" எனப்படும்.

  • (எ.கா.)

    அரசு (ர = ர்+ அ)

    கயிறு (யி = ய் + இ)

    ஒன்பது ( ப= ப்+ அ)

    வரலாறு (லா= ல் + ஆ)

    வன்தொடர்க் குற்றியலுகரம்:

  • வல்லின (க், ச், ட், த், ப், ற்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் "வன்தொடர்க் குற்றியலுகரம்" எனப்படும்.

  • (எ.கா) பாக்கு, பேச்சு, பாட்டு, பத்து, உப்பு, பற்று

    மென்தொடர்க் குற்றியலுகரம்:

  • மெல்லின (ங், ஞ், ண், ந், ம், ன்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் "மென்தொடர்க் குற்றியலுகரம்" எனப்படும்.

  • (எ.கா.) பங்கு, மஞ்சு, பண்பு, பந்து, அம்பு, கன்று

    இடைத்தொடர்க் குற்றியலுகரம்:

  • இடையின (ய், ர், ல், வ், ழ், ள்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் "இடைத்தொடர்க் குற்றியலுகரம்" எனப்படும்.

  • (எ.கா.) எய்து, மார்பு, சால்பு, மூழ்கு

  • "வ்" என்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.

  • மேலும் சு,டு,று ஆகியவை இறுதியாக அமையும் இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்களும் இல்லை.

  • குற்றியலிகரம்:

    • தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறுகி ஒலிக்கும் இகரம் குற்றியலிகரம் எனப்படும்.

      (எ.கா) வரகு + யாது = வரகியாது.

    • குற்றியலிகரம் 2 இடங்களில் மட்டும் வரும்.

    • குற்றியலுகரச் சொற்களைத் தொடர்ந்து யகரத்தை முதல் எழுத்தாகக் கொண்ட சொற்கள் வரும்போது குற்றியலுகரத்தில் உள்ள உகரம் இகரமாகத் திரியும். அந்த இகரம் தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும்.
    (எ.கா)

    கொக்கு + யாது = கொக்கியாது

    தோப்பு + யாது = தோப்பியாது

    நாடு +யாது = நாடியாது

    எனப்படுவது + யாது = எனப்படுவதியாது

    மியா என்னும் அசைச்சொல் சொற்களில் இடம்பெறும்போது தனக்குரிய மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும்.

    (எ.கா)

    கேள் + மியா = கேண்மியா

    செல் + மியா = சென்மியா

    குற்றியலிகரம் தற்போது உரைநடை வழக்கில் இல்லை.இலக்கியங்களில் மட்டுமே உள்ளது.

    பாடம் 2: அணிநிழல் காடு

    காடு

    • காட்டின் வளமே நாட்டின் வளம் என்று அரிஞர்கள் கூறுகின்றனர்.

    • காடு என்னும் கவிதையின் ஆசிரியர் – சுரதா
    "கார்த்திகைத் தீபமெனக்
    காடெல்லாம் பூத்திருக்கும்
    பார்த்திட வேண்டுமடீ – கிளியே
    பார்வை குளிருமடீ!

    காடு பொருள்கொடுக்கும்
    காய்கனி ஈன்றெடுக்கும்
    கூடிக் களித்திடவே – கிளியே
    குளிர்ந்த நிழல்கொடுக்கும்

    குரங்கு குடியிருக்கும்
    கொம்பில் கனிபறிக்கும்
    மரங்கள் வெயில்மறைக்கும் – கிளியே
    வழியில் தடையிருக்கும்

    பச்சை மயில்நடிக்கும்
    பன்றி கிழங்கெடுக்கும்
    நச்சர வங்கலங்கும் – கிளியே
    நரியெலாம் ஊளையிடும்

    அதிமது ரத்தழையை
    யானைகள் நின்றபடி
    புதுநடை போடுமடீ – கிளியே
    பூங்குயில் கூவுமடீ!

    சிங்கம் புலிகரடி
    சிறுத்தை விலங்கினங்கள்
    எங்கும் திரியுமடீ – கிளியே
    இயற்கை விடுதியிலே!"


    என்று காட்டினைப் பற்றி கவிதை எழுதியவர் – சுரதா.

    பாடலின் பொருள்:

    • கார்த்திகை விளக்குகள் போலக்காடு முழுவதும் மலர்கள் மலர்ந்திருக்கும்.அவற்றைக் காணும் கண்கள் குளிர்ச்சி பெறும்.

    • காடு பல வகையான பொருள்களைத் தரும்.எல்லாரும் கூடி மகிழ்ந்திட நிழல் தரும்.அங்கே வசிக்கும் குரங்குகள் மரக்கிளைகளில் உள்ள கனிகளைப் பறித்து உண்ணும்.

    • மரங்கள் வெயிலை மறைத்து நிழல் தரும்.அடர்ந்த காடு வழிச்செல்வோருக்கு தடையாய் இருக்கும்.

    • பச்சை நிறம் உடைய மயில்கள் நடனமடும்.பன்றிகள் காட்டில் உள்ளக் கிழங்குகளைத் தோண்டி உண்ணும்.

    • அதனைக் கண்டு நஞ்சினை உடைய பாம்புகள் கலக்கமடையும்.நரிக் கூட்டம் ஊளையிடும்.

    • மிகுந்த சுவையுடைய தழையை யானைகள் தின்றபடி புதிய நடை போடும்.பூக்கள் பூத்துக் குலுங்கும் மரங்களில் குயில்கள் கூவும்.

    • இயற்கைத் தங்குமிடமாகிய காட்டில் சிங்கம், புலி, கரடி,சிறுத்தை போன்ற விலங்கினங்கள் எங்கும் அலைந்து திரியும்.

    சொல்லும் பொருளும்:

    • ஈன்று – பெற்று

    • கொம்பு – கிளை

    • அதிமதுரம் – மிகுந்த சுவை

    • களித்திட – மகிழ்ந்திட

    • நச்சரவம் – விடமுள்ள பாம்பு

    • விடுதி – தங்கும் இடம்

    கவிஞர் சுரதா பற்றியக் குறிப்புகள்:

    • இவரது இயற்பெயர் – இராசகோபாலன்.

    • பாரதிதாசன் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரை சுப்புரத்தின தாசன் என மாற்றிக் கொண்டார். இதன் சுருக்கமே சுரதா என்பதாகும்.

    • உவமைகளைப் பயன்படுத்தி கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதால் இவர் உவமைக் கவிஞர் என்று அழைக்கப்படுகிறார்.

    சுரதா இயற்றிய நூல்கள்:

    • அமுதும் தேனும்

    • தேன்மழை

    • துறை முகம்

    • சுரதா கவிதைகள்

    கிளிக்கண்ணி:

    கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கிக் கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் பாடல் வகை "கிளிக்கண்ணி" ஆகும்.

    காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள்:

    • கா

    • கால்

    • கான்

    • கானகம்

    • அடவி

    • அரண்

    • ஆரணி

    • புரவு

    • பொற்றை

    • பொழில்

    • தில்லம்

    • அழுவம்

    • இயவு

    • பழவம்

    • முளரி

    • வல்லை

    • விடர்

    • வியல்

    • வனம்

    • முதை

    • மிளை

    • இறும்பு

    • சுரம்

    • பொச்சை

    • பொதி

    • முளி

    • அரில்

    • அறல்

    • பதுக்கை

    • கணையம்
    "நெஞ்சில் உரமுமின்றி
    நேர்மைத் திறமுமின்றி
    வஞ்சனை சொல்வாரடீ! – கிளியே
    வாய்ச்சொல்லில் வீரரடி
    கூட்டத்தில் கூடிநின்று
    கூவிப் பிதற்றலின்றி
    நாட்டத்தில் கொள்ளாரடீ! – கிளியே
    நாளில் மறப்பாரடீ"


    என்று பாடியவர் – பாரதியார்.

    • காடெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – காடு + எல்லாம்

    • கிழங்கு + எடுக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – கிழங்கெடுக்கும்

    அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

    "ஊரின் வடகோடியில் அந்த மரம்
    ஐந்து வயதில் பார்த்தபோதும்
    இப்படியேதானிருந்தது
    ஐம்பதைத் தாண்டி இன்றும்
    அப்படியேத்தான்

    தாத்தாவின் தாத்தா காலத்தில்
    நட்டு வளர்த்த மரமாம்
    அப்பா சொல்லக் கேட்டுருக்கிறேன்

    பச்சைக்காய்கள் நிறம் மாறிச்
    செங்காய்த் தோற்றம் கொண்டதுமே
    சிறுவர் மனங்களில் பரவசம் பொங்கும்

    பளபளக்கும் பச்சை இலைகளூடே
    கருநீலக் கோலிக்குண்டுகளாய்
    நாவற்பழங்கள் கிளைகளில் தொங்கும்
    பார்க்கும் போதே நாவில் நீரூறும்

    காக்கை குருவி மைனா கிளிகள்
    இன்னும் பெயரறியாப் பறவைகளுடன்
    அணில்களும் காற்றும் உதிர்த்திடும்
    சுட்ட பழங்கள் பொறுக்க
    சிறுவர் கூட்டம் அலைமோதும்

    வயதுவந்த அக்காக்களுக்காய்
    கையில் பெட்டியுடன் ஓடிஓடிப்
    பழம் பொறுக்கும் தங்கச்சிகள்

    இரவில் மெல்லிய நிலவொளியில்
    படையெடுத்து வரும்
    பழந்தின்னி வௌவால் கூட்டம்

    தோப்பு முழுக்கப் பரவிக் கிடக்கும்
    மரத்தின் குளிர்ந்த நிழலிலே
    கிளியாந்தட்டின் சுவாரசியம்
    புளியமிளாறுடன் அப்பா வரும் வரை

    நேற்று மதியம் நண்பர்களுடன்
    என் மகன் விளையாடியதும்
    அந்த மரத்தின் நிழலில்தானே

    பெருவாழ்வு வாழ்ந்த மரம்
    நேற்றிரவுப் பேய்க்காற்றில்
    வேரோடு சாய்ந்துவிட்டதாமே
    விடிந்ததும் விடியாததுமாய்
    துஷ்டி கேட்கும் பதற்றத்தில்
    விரைந்து செல்கிறார் ஊர்மக்கள்
    குஞ்சு குளுவான்களோடு

    எனக்குப் போக மனமில்லை
    என்றும் என்மன விளியில்
    அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
    குன்றுகளின் நடுவே மாமலைபோல"


    என்று மரத்தைப் பற்றியக் கவிதை எழுதியவர் – ராஜமார்த்தாண்டன்

    சொல்லும் பொருளும்:

    • பரவசம் – மகிழ்ச்சிப்பெருக்கு

    • துஷ்டிகேட்டல் – துக்கம் விசாரித்தல்

    எழுத்தாளர் ராஜமார்த்தாண்டன் பற்றியக் குறிப்புகள்:

    • இவர் கவிஞர், இதழாளர்,கவிதைத் திறனாய்வாளர் எனப் பன்முகத் திறன்கள் பெற்றவர்.

    • இவர் நடத்திய சிற்றிதழ் – கொல்லிப்பாவை

    • ராஜமார்த்தாண்டன் கவிதைகள் என்னும் நூலிக்காகத் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றவர்.

    • சிறந்த தமிழ்க் கவிதைகளைத் தொகுத்து கொங்குதேர் வாழ்க்கை என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளார்.

    • அப்படியே நிற்கட்டும் அந்த மரம் என்னும் நூலை இயற்றியுள்ளார்.

    பிரித்து எழுதுக:

    • பெயரறியா என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – பெயர் + அறியா

    • மனமில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – மனம் + இல்லை

    • நேற்று + இரவு என்அதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – நேற்றிரவு

    விலங்குகள் உலகம்

    • தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய காப்பகம் – முண்டந்துறை புலிகள் கப்பகம் (895 சதுர கிலோமீட்டர் பரப்பளவு)

    • உலகில் இரண்டு வகையான யானைகள் உள்ளன. ஒன்று ஆசிய யானை, மற்றொன்று ஆப்ரிக்க யானை

    • ஆசிய யானைகளில் ஆண் யானக்குத் தந்தம் உண்டு.பெண் யானைக்குத் தந்தம் இல்லை.ஆனால் ஆப்பிரிக்க யானைகளில் இரண்டுக்குமே தந்த உண்டு.

    • யானைகள் எப்பொழுதும் கூட்டமாகத்தான் வாழும். இந்தக் கூட்டத்திற்கு பென்யானைத்தான் தலைமைத் தாங்கும்.

    • தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் – மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்)

    • கரடி ஓர் அனைத்துண்ணி

    • புலி இரவில் மட்டுமே வேட்டையாடும் தன்மையுடையது. அது தனித்து வாழும் தன்மையுடையது.

    • கருவுற்ற புலி 90 நாட்களில் 2 அல்லது 3 குட்டிகள் ஈனும்.

    • புலி தான் ஒரு காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு. புலி தனக்கான உணவை வேட்டையாடிய பின்பு வேறு எந்த விலங்கையும் வேட்டையாடுவதில்லை. எனவே, அதனைப் பண்புள்ள விலங்கு என்பர்.

    • உலகில் ஆசியச்சிங்கம் அப்பிரிக்கச் சிங்கம் என இரண்டு வகைச் சிங்கங்கள் வாழ்கின்றன. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் கிர் சரணாலயத்தில் மட்டுமே ஆசியச் சிங்கங்கள் உள்ளன.

    • நீளம், உயரம், பருமன், எடை, பலம், வேட்டைத்திறன் ஆகிய அனைத்திலும் சிங்கத்தை விட புலியே உயர்ந்தது. எனவே இயற்கை விஞ்ஞானிகள் புலியையே காட்டுக்கு அரசன் என்கிறார்கள்.

    • இந்தியாவில் சருகுமான், மிளாமான், வெளிமான் எனப் பல வகையான மான்கள் உள்ளன. எல்லாவகை மான்களிலும் நம் நாட்டுப் புள்ளி மான்களே சிறந்தவை என்பர்.

    • ஆசிய யானைகளில் ஆண் – பெண் யானைகளை வேறுபடுத்துவது – தந்தம்

    • தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் – முண்டந்துறை

    • காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு என்று அழைக்கப்படும் விலங்கு – புலி

    • யானைக் கூட்டத்திற்கு ஒரு பெண் யானைத்தான் தலைமை தாங்கும்.
    காட்டாறு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – காடு + ஆறு

    அனைத்துண்ணி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – அனைத்து + உண்ணி

    நேரம் + ஆகி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – நேரமாகி

    வேட்டை + ஆடிய என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – வேட்டையாடிய

    இந்திய வனமகன்

    • இந்தியாவின் வனமகன் என்று அழைக்கப்படுபவர் – அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்விராட் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாதவ்பயேங்.

    • ஜாதவ்பயேங் அவர்களுக்கு 2012 ல் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்திய வனமகன் என்னும் பட்டத்தை வழங்கியது.

    • ஜாதவ்பயேங் அவர்களுக்கு இந்திய அரசு 2015 ல் பத்மஸ்ரீ விருதை வழங்கியுள்ளது.

    • ஜாதவ்பயேங் அவர்களுக்கு கௌகாத்தி பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது.

    • காட்டின் வளம் என்று அழைக்கப்படுவது – புலிகள்

    இலக்கணம்

    நால்வகைக் குறுக்கங்கள்


    சில எழுத்துக்கள் சில இடங்களில் தமக்குரிய கால அளவைவிடக் குறைவாக ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிக்கும் எழுத்துக்களைக் குறுக்கங்கள் என்கிறோம்.

    ஐகாரக்குறுக்கம்:

    • ஐ, கை, பைஎன ஐகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.

    • வையம், சமையல், பறவைஎன சொற்களின் முதல், இடை, இறுதி ஆகிய இடங்களில் வரும் போது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கிறது. இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஐகாரம் ஐகாரக்குறுக்கம் எனப்படும்.

    • ஐகாரம் சொல்லின் முதலில் வரும் போது ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கும்.

    • ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கும்.

    ஔகாரக்குறுக்கம்:

    • ஔ, வௌ என ஔகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.

    • ஔவையார், வௌவால் எனச் சொற்களின் முதலில் வரும்போது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கிறது. இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஔகாரம் ஔகாரக் குறுக்கம் எனப்படும்.

    • ஔகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராது.

    மகரக்குறுக்கம்:

    • அம்மா, பாடம் படித்தான் ஆகிய சொற்களில் மகர மெய்யெழுத்து தனக்குரிய அரை மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.

    • வலம் வந்தான் என்பதில் மகர மெய்யெழுத்தை அடுத்து வகர எழுத்து வருவதால் மகரமெய்யானது தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கிறது.

    • போலும் என்னும் சொல்லைப் போன்ம் என்றும், மருளும் என்னும் சொல்லை மருண்ம் என்றும் செய்யுளில் ஓசைச் சீர்மைக்காகப் பயன்படுத்தினர்.

    • இச்சொற்களில் மகர மெய்யானது ன், ண்ஆகிய எழுத்துகளை அடுத்து வருவதால் தனக்குரிய அரைமாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரைஅளவில் ஒலிக்கிறது. இவ்வாறு குறைந்து ஒலிக்கும் மகரம் மகரக்குறுக்கம் எனப்படும்.

    ஆய்தக்குறுக்கம்:

    • அஃது, எஃகு ஆகிய சொற்களில் ஆய்தஎழுத்து, தனக்குரிய அரைமாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.

    • முள் + தீது என்பது முஃடீது எனவும், கல் + தீது என்பது கஃறீது எனவும் சேரும். இச்சொற்களில் உள்ள ஆய்தஎழுத்து, தனக்குரிய அரைமாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கிறது. இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஆய்தம் ஆய்தக்குறுக்கம் எனப்படும்.

    • வேட்கை என்னும் சொல்லில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை – ஒன்று

    • சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது – ஔகாரக்குறுக்கம்

    • பால் ஐந்து வகைப்படும். அவை ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகியனவாகும்.
    உயர்திணையில்,

    1. ஓர் ஆணைக் குறிப்பது ஆண்பால். (எ.கா.) மாணவன், செல்வன்.

    2. ஒரு பெண்ணைக் குறிப்பது பெண்பால். (எ.கா) ஆதினி, மாணவி.

    3. ஒன்றுக்கு மேற்பட்டவர்களைக் குறிப்பது பலர்பால். (எ.கா.) மாணவர்கள், மக்கள்.

    அஃறிணையில்,

    4. ஒன்றைக் குறிப்பது ஒன்றன்பால்.
    (எ.கா.) கல், பசு.

    5. ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பலவின்பால்.
    (எ.கா.) மண்புழுக்கள், பசுக்கள்.

    திருக்குறள்

    "அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்
    குறுகத் தரித்த குறள்" என்று திருக்குறளின் பெருமையை ஔவையார் போற்றுகிறார்.

    திருக்குறள் பற்றியக் குறிப்புகள்:

    • திருக்குறளை இயற்றியவர் – திருவள்ளுவர்.

    • இவர் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவர்

    • முதற்பாவலர், பொய்யில் புலவர், செந்நாதாப்போதார் என்ற சிறப்புப் பெயர்களால் குறிக்கப்படுகிறார்.

    • தமிழ்நூல்களில் "திரு" என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் திருக்குறள் ஆகும்.

    • திருக்குறள் அறம், பொருள், இன்பம் என மூன்று பகுப்புகளைக் கொண்டது.

    • அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை – 38

    • பொருட்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை – 70

    • இன்பத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை – 25

    • மொத்தமாக 133 அதிகாரங்களையும் 1330 குறள்பாக்களையும் கொண்டது.

    • திருக்குறளுக்கு முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி போன்ற பிற பெயர்களும் உள்ளன.

    • வாய்மை எனப்படுவது – தீங்கு தராத சொற்களைப் பேசுதல்

    • யாருடைய செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்? – பொறாமை உள்ளவன் செல்வம்
    பொருட்செல்வம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – பொருள் + செல்வம்

    யாதெனின் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – யாது + எனின்

    தன் + நெஞ்சு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – தன்நெஞ்சு

    தீது + உண்டோ என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – தீதுண்டோ

    பாடம் 3: நாடு அதை நாடு

    புலி தங்கிய குகை


    "சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
    யாண்டு உளனோ எனவினவுதி என்மகன்
    யாண்டுஉளன் ஆயினும் அறியேன் ஓரும்
    புலிசேர்ந்து போகிய கல்அளை போல
    ஈன்ற வயிறோ இதுவே
    தோன்றுவன் மாதோ போர்க்கலத் தானே"


    என்ற பாடலை இயற்றியவர் – காவற்பெண்டு.
    இப்பாடல் இடம்பெற்ற நூல் – புறநானூறு.

    பாடலின் பொருள்:

    (சால்புடைய பெண் ஒருத்தி புலவரின் வீட்டிற்குச் சென்று, "அன்னையே! உன் மகன் எங்கு உள்ளான்?" என்று கேட்டாள்.)

    "சிறு அளவிலான எம் வீட்டின் தூனைப் பற்றிக் கொண்டு , ஏதும் அறியாதவள் போலநீ "உம் மகன் எங்கே?" என என்னைக் கேட்கிறாய். அவன் எங்குள்ளான் என்று அனக்குத் தெரியவில்லை.

    ஆயினும் புலி தங்கிச் சென்ற குகை போல அவனைப் பெற்றெடுத்த வயிறு என்னிடம் உள்ளது. அவன் இங்கில்லை எனில் போர்க்களத்தில் இருக்கக்கூடும்.போய்க் காண்பாயாக" என்று புலவர் பதிலளித்தார்.

    சொல்லும் பொருளும்:

    • சிற்றில் – சிறு வீடு

    • யாண்டு – எங்கே

    • கல் அளை – கற்குகை

    • ஈன்ற வயிறு – பெற்றெடுத்த வயிறு

    நூற்குறிப்பு:

    • காவற்பெண்டு சங்ககாலப் பெண்புலவர்களுள் ஒருவர்.சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர் என்பர். கல்வியில் தேர்ச்சியும், கவிபாடும் ஆற்றலும் மிக்க இவர் புறநானூற்றில் ஒரே ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

    • புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூல் பண்டைக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, நாகரிகம், பண்பாடு, வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூலாக விளங்குகிறது.

    • யாண்டு என்னும் சொல்லின் பொருள் – எங்கே

    பாஞ்சை வளம்

    சுத்தவீர சூரன் கட்ட பொம்முதுரை
    துலங்கும் பாஞ்சை வளங்கள் சொல்வேன்

    நாட்டு வளங்களைச் சொல்லுகிறேன் – பாஞ்சைக்
    கோட்டை வலங்கலைக் கேளுமையா
    கோட்டைகளாம் சுத்துக் கோட்டைகளாம் – மதில்
    கோட்டைகள்தான் கெட்டி வேலைகளாம்

    வீட்டிலுயர் மணிமேடைகளாம் – மெத்தை
    வீடுகளா மதிலோடை களாம்
    பூட்டுங்கதவுகள் நேர்த்திகளாம் – பணப்
    பொக்கிஷ வீடும்பார் சாஸ்திகளாம்

    ஆசார வாசல் அலங்காரம் – துரை
    ராசன் கட்ட பொம்மு சிங்காரம்
    ராசாதி ராசன் அரண்மனையில் – பாஞ்சை
    நாட்டரசன் கொலுவீற்றிருந்தான்

    விந்தையாகத் தெருவீதிகளும் – வெகு
    விஸ்தாரமாய்க் கடை வாசல்களும்
    நந்தவனங்களும் சந்தனச் சோலையும் – அங்கே
    நதியும் செந்நெல் கமுகுகளும்,
    வாரணச் சாலை ஒருபுறமாம் – பரி
    வளரும் சாலை ஒருபுறமாம்
    தோரண மேடை ஒருபுறமாம் – தெருச்
    சொக்கட்டான் சாரியல்ஓர் புறமாம்

    சோலையில் மாங்கியில் கூப்பிடுமாம் – வளம்
    சொல்லி மயில் விளையாடிடுமாம்
    அன்பு வளர்ந்தேறும் பாஞ்சாலநாட்டில் – சில
    அதிசயம் சொல்கிறேன் கேளுமையா

    முயலும் நாயை விரட்டிடுமாம் – நல்ல
    முனையுள்ள பாஞ்சால நாட்டினிலே
    பசுவும் புலியும் ஒரு துறையில் – வந்து
    பால்குடிக்குந் தண்ணீர் தான் குடிக்கும்

    கறந்த பாலையுங் காகங் குடியாது – எங்கள்
    கட்டபொம்மு துரை பேரு சொன்னால்
    வரந்தருவாளே சக்க தேவி – திரு
    வாக்கருள் செய்வாளே சக்க தேவி

    பாடலின் பொருள்:

    • குறையில்லாத வீரனாகிய கட்டபொம்மன் இருந்து ஆட்சி செய்யும் பாஞ்சாலங்குறிச்சியின் வளங்களைக் கூறுகின்றேன்.

    • அந்தாட்டின் வலத்தையும் பாஞ்சாலங்குறிச்சியின் வளத்தையும் கேளுங்கள்.அந்நகரில் பல சுற்றுகளாக கோட்டைகள் இருக்கும். அவை மதில்களால் சூழப்பட்டவையாக மிகவும் வலிமையாகக் கட்டப்பட்டிருக்கும்.

    • வீடுகள் தோறும் மணிகளால் அழகுசெய்யப்பட்ட மேடைகள் இருக்கும்.வீடுகள் எல்லாம் மதில்களால் சூழப்பட்ட மாடிவீடுகளாக இருக்கும்.வீட்டுக்கதவுகள் மிகவும் நேர்த்தியாகவும் வீடுகள் செல்வம் நிறைந்தவையாகவும் இருக்கும்.

    • அரண்மனை வாயில் முறைப்படி அழகுபடுத்தப்பட்டு இருக்கும்.அழகு நிறைந்த அரசனாகிய கட்டபொம்மன் அரசவையில் வீற்றிருப்பான்.

    • புதுமையான தெருவீதிகளும் பெரும்பரப்பில் அமைந்த கடைகளும் இருக்கும். பூஞ்சோலைகளும் சந்தன மரச் சோலைகளும் ஆறுகளும் நெல்வயல்களும் பாக்குத் தோப்புகளும் அந்நாட்டிற்கு அழகு சேர்க்கும்.

    • யானைக் கூடமும் குதிரைக் கொட்டிலும் ஒருபுறம் இருக்கும்.தோரணங்கள் கட்டப்பட்ட மேடையும் தாயம் ஆடுவதற்கான இடமும் ஒருபுறம் இருக்கும்.

    • சோலைகளில் குயில்கள் கூவும். மயில்கள் நாட்டின் வளத்தைக் கூறி விளையாடும்.

    • வீரம் மிகுந்த பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள முயலானது தன்னைப் பிடிக்க வரும் வேட்டை நாயை எதிர்த்து விரட்டிவிடும்.

    • பசுவும் புலியும் நீர்நிலையின் ஒரே துறையில் நின்று பால்போன்ற தண்ணீரைக் குடிக்கும்.

    • மன்னன் கட்டபொம்மனின் பெயரைச் சொன்னால் கறந்து வைத்த பாலைக்கூடக் காகம் குடிக்காது.

    • சங்கமாதேவி பாஞ்சாலங்குறிச்சிக்குத் திருவாக்கு அருள்வாள்.

    சொல்லும் பொருளும்:

    • சூரன் – வீரன்

    • பொக்கிஷம் – செல்வம்

    • சாஸ்தி – மிகுதி

    • விஸ்தாரம் – பெரும்பரப்பு

    • வாரணம் – யானை

    • பரி – குதிரை

    • சிங்காரம் – அழகு

    • கமுகு – பாக்கு
  • வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் என்னும் நூலைத் தொகுத்து வெளியிட்டவர் – நா.வானமாமலை

  • பூட்டுங்கதவுகள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – பூட்டும் + கதவுகள்

  • தோரணமேடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – தோரணம் + மேடை

  • வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – வாசலலங்காரம்

  • தேசியம் காத்த செம்மல் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

    • தேசியம் உடல், தெய்வீகம் உயிர் எனகக் கருதி மக்கள் தொண்டு செய்தவர் – பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

    • "வீரப்பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் அறிவாளிகளையும் உண்டாக்கியவர்;உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித்துணிச்சல் பெற்றவர்;சுத்தத் தியாகி" என்று முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர் – தந்தைப் பெரியார்.

    • பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பிறந்த ஆண்டு – 1908 அக்டோபர் 30

    • பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பிறந்த ஊர் – இராமநாதபுர மாவட்டத்தில் பசும்பொன் என்னும் ஊர்

    • பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் பெற்றோர் – உக்கிரபாண்டியனார் – இந்திராணி அம்மையார்.

    • பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் புலமைப் பெற்ற மொழிகள் – தமிழ், ஆங்கிலம்

    • பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கிச்சுடுதல், சோதிடம், மருத்துவம் போன்ற பல துறைகளிலும் ஆற்றல் உடையவராக விளங்கினார்.

    • 1936 ல் நடைபெற்ற தேர்தலில் விருதுநகரில் போட்டியிடப் பெருந்தலைவர் காமராசர் முன் வந்தார். நகராட்சிக்கு வரி செலுத்தியவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்னும் நிலை இருந்தது. எனவே,முத்துராமலிங்கர் ஓஎ ஆட்டுக்குட்டியை வாங்கிக் காமராசர் பெயரில் வரி கட்டி அவரைத் தேர்தலில் போட்டியிட வைத்தார்.

    • விடுதலைப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேய அரசு வட இந்தியாவில் திலகருக்கும் தமிழ்நாட்டில் முத்துராமலிங்கருக்கும் மேடையில் பேசக்கூடாது என்று வாய்ப்பூட்டுச்சட்டம் போட்டது.

    • பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை தேசியம் காத்த செம்மல் என்று பாராட்டியவர் – திரு.வி.க

    • வங்கச் சிங்கம் என்று அழைக்கப்பட்டவர் – நேதாஜி சுபாஷ் சந்திர போஷ்

    • பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் அரசியல் குரு – நேதாஜி சுபாஷ் சந்திர போஷ்

    • பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் வேண்டுகோளுக்கிணங்க நேதாஜி சுபாஷ் சந்திர போஷ் மதுரைக்கு வருகை தந்த தினம் – 6.9.1939

    • விடுதலைக்குப் பின் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நடத்திய வார இதழ் – நேதாஜி

    • பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் முதன் முதலில் சாயல்குடி என்னும் ஊரில் விவேகானந்தரின் பெருமை என்னும் தலைப்பில் மூன்று மணி நேரம் உரையாற்றினார்.

    • "இது போன்ற ஒரு பேச்சை இதுவரை நான் கேட்டதில்லை; முத்துராமலிங்கத்தேவரின் வீரமிக்கப் பேச்சு விடுதலைப் போருக்கு மிகவும் உதவும்" என்று கூறியவர் – காமராசர்.

    • தென்னாட்டுச் சிங்கம் என்று அழைக்கப்படுபவர் – பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

    • "தென்னாட்டுச் சிங்கம் என்று தேவரைச் சொல்லுகிறார்களே, அது சாலப் பொருந்தும் என அவரது தோற்றத்தைப் பார்த்த உடனேயே நினைத்தேன். அவர் பேசத் தொடங்கியதும் சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்தது" என்று பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரைப் புகழ்ந்தவர் – அறிஞர் அண்ணா

    • "முத்துராமலிங்கத்தேவர் பேச்சு உள்ளத்தில் இருந்து வெளிவருகிறது; உதடுகளிலிருந்து அல்ல. உள்ளத்தால் எதிலும் பற்றற்று உண்மையெனப்பட்டதை மறைக்காமல் அப்படியே பேசிவிடுவது அவர்வழக்கம்" என்று பாராட்டியவர் – இராஜாஜி

    • முத்துராமலிங்கத்தேவர் ஆங்கிலத்தில் பேசிய பேச்சு வெள்ளையர் காலத்தில் விட்டல் பாய், வல்லபாய் பட்டேல் போன்றமேதைகள் பேசிய பேச்சைப் போல் இருந்ததாக வடஇந்திய இதழ்கள் பாராட்டின.

    • 1934 ஆம் ஆண்டு மே12, 13 ஆகிய தேதிகளில் கமுதியில் குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டைநடத்தினார். அவரது தொடர்போராட்டத்தால் 1948 ஆம் ஆண்டு அச்சட்டம் நீக்கப்பட்டது.

    • அக்காலத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் செல்ல ஒரு சாராருக்கு தடை இருந்தது.அத்தடையை எதிர்த்து 1939 ஜூலை 8ல் மதுரை வைத்தியநாத ஐயர் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டார். அதனை எதிர்த்து அர்ச்சகர்களாலயப்பணியைப் புறக்கணித்தனர்.

    • தேவர் திருச்சுழியில் இருந்து அர்ச்சகர்களை இருவரை அழைத்து வந்து ஆலய நுழைவு போராட்டத்தை வெற்றி பெறச் செய்தார்.

    • ஜாமீன் விவசாயிகள் சங்கம் ஏற்படுத்தி விவசாயிகள் துயர்துடைக்கப் பாடுபட்டார்.

    • பாரதமாதா கூட்டுறவு பண்டகசாலையை ஏற்படுத்தி விவசாயிகளின் விலைபொருள்களுக்குச் சரியான விலை கிடைக்கச் செய்தார்.

    • மதுரையிலிருந்த நூற்பு ஆலை ஒன்றில் வேலை செய்த தொழிலாளர்களின் உரிமைக்காக தோழர் ப.ஜீவானந்தத்துடன் இணைந்து 1938 ல் போராட்டம் நடத்தினார்.

    • இரண்டாம் உலகப் போர் சமயத்தில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள தாமோ என்னும் நகரில் உள்ள ராணுவச்சிறையில் அடைக்கப்பட்டு போர் முடிந்த பிறகுதான் விடுதலை செய்யப்பட்டார்.

    • முத்துராமலிங்கத்தேவர் மறைந்த ஆண்டு – 1963 அக்டோபர் 30

    • முத்துராமலிங்கத்தேவரின் அஞ்சல் தலை வெளியிடப்பட்ட ஆண்டு – 1995

    முத்துராமலிங்கத்தேவரின் சிறப்புப் பெயர்கள் :

    • தேசியம் காத்த செம்மல்

    • வித்யா பாஸ்கர்

    • பிரவசன கேசரி

    • சன்மார்க்க சண்டமாருதம்

    • இந்து புத்த சமய மேதை
  • முத்துராமலிங்கத்தேவர் முதன் முதலில் உரையாற்றிய இடம் – சாயல்குடி

  • முத்துராமலிம்கத்தேவர் நடத்திய இதழின் பெயர் – நேதாஜி

  • தேசியம் காத்த செம்மல் என முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர் – திரு.வி.க

  • கப்பலோட்டிய தமிழர்

    • வசையொழிய வாழ்வாரே வாழ்வார் என்று கூறியவர் – திருவள்ளுவர்

    • மதுரையில் தமிழ்ச்சங்கம் அமைத்தவர் – பாண்டித்துரையார்.

    • சுதந்திரம் எனது பிறப்புரிமை;அதை அடைந்தே தீருவேன் என்று கூறியவர் – பால கங்காதர திலகர்

    • "வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்" என்று பாடியவர் – மகாகவி பாரதியார்.

    • "சிதம்பரனாரின் பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்பெற்று எழும். புரட்சி ஓங்கும்.அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்" என்று கூறியவர் – சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதி பின்ஹே

    • ஆங்கில மொழியில் ஆலன் என்பவர் இயற்றிய அறிவு நூல்களில் ஒன்றை மனம் போல் வாழ்வு என்று மொழிபெயர்த்தவர் – சிதம்பரனார்

    • மெய்யறிவு, மெய்யறம் என்னும் நூல்களை இயற்றியவர் – சிதம்பரனார்.

    இரா.பி.சேதுப்பிள்ளை பற்றியக் குறிப்புகள்

    • இரா.பி.சேதுப்பிள்ளை தமிழறிஞர்,எழுத்தாளர்,வழக்குரைஞர்,மேடைப்பேச்சாளர் எனப் பன்முகத் திறன் பெற்றவர்.

    • சொல்லின் செல்வர் என்று போற்றப்படுகிறார்.

    • செய்யுளுக்கே உரிய எதுகை, மோனை, என்பவற்றை உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே என்பர்.

    • இவரது தமிழின்பம் என்னும் நூல் இந்திய அரசின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் நூல் ஆகும்.

    இரா.பி.சேதுப்பிள்ளை இயற்றிய நூல்கள்:

    • ஆற்றங்கரையினிலே

    • கடற்கரையினிலே

    • தமிழ் விருந்து

    • தமிழகம் – ஊரும் பேரும்

    • மேடைப்பேச்சு

    இலக்கணம்

    வழக்கு

    எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை வழக்கு எனப்படும். நம் முன்னோர் எந்தெந்தச் சொற்களை என்னென்ன பொருளில் பயன்படுத்தினார்களோ அச்சொற்களை அவ்வாறே பயன்படுத்துவதை வழக்கு என்பர்.

    வழக்கு இருவகைப்படும்.

    • இயல்பு வழக்கு

    • தகுதி வழக்கு

    இயல்பு வழக்கு:

    ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது இயல்பு வழக்கு ஆகும். இயல்பு வழக்கு 3 வகைப்படும்.
    • இலக்கணமுடையது

    • இலக்கணப்போலி

    • மரூஉ

    இலக்கணமுடையது:

  • நிலம், வான், மரம், எழுது ஆகிய சொற்கள் தமக்குரிய பொருளை எவ்வகை மாறுபாடும் இல்லாமல் இயல்பாகத் தருகின்றன. இவ்வாறு இலக்கண நெறி மாறாமல் முறையாக அமைந்த சொல் இலக்கணமுடையது ஆகும்.
  • இலக்கணப்போலி:

  • இலக்கணமுறைப்படி அமையாவிடினும், இலக்கணமுடையவை போலவே ஏற்றுக்கொள்ளப்படும் சொற்கள் இலக்கணப்போலி எனப்படும்.

  • இலக்கணப்போலி என்பது பெரும்பாலும் சொற்களின் முன்பின் பகுதிகள் இடம்மாறி வருவதையே குறிக்கும்.எனவே,இலக்கணப் போலியை முன்பின்னாகத் தொக்க போலி எனவும் குறிப்பிடுவர்.

  • (எ.கா) புறநகர், கால்வாய்,தசை, கடைக்கண்

    மரூஉ:

  • இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து,சிதைந்து வழங்கும் சொற்கள் மரூஉ எனப்படும்.

  • (எ.கா) தஞ்சாவூர் என்பதை தஞ்சை என்றும் திருநெல்வேலி என்பதை நெல்லை எனவும் வழங்குகிறோம்.
  • தகுதி வழக்கு:

    பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லத் தகாத சொற்களைத் தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது தகுதிவழக்கு ஆகும்.

    தகுதி வழக்கு 3 வகைப்படும்.

    • இடக்கரடக்கல்

    • மங்கலம்

    • குழூஉக்குறி

    இடக்கரடக்கல்:

  • பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லத் தகாத சொற்களைத் தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது இடக்கரடக்கல் ஆகும்.

  • (எ.கா.)

    கால் கழுவி வந்தான்.

    குழந்தை வெளியே போய் விட்டது.

    ஒன்றுக்குப் போய் வந்தேன்.

    மங்கலம்:

  • செத்தார் என்பது மங்கலமில்லாத சொல் என நம் முன்னோர் கருதினர். எனவே, செத்தார் எனக் குறிப்பிடாமல் துஞ்சினார் எனக் குறிப்பட்டனர். நாம் இக்காலத்தில் இயற்கை எய்தினார் என்று குறிப்பிடுகிறோம். இவ்வாறு மங்கலமில்லாத சொற்களை மங்கலமான வேறு சொற்களால் குறிப்பதை மங்கலம் என்பர்.

  • (எ.கா.)

    ஓலை- திருமுகம்

    கறுப்பு ஆடு – வெள்ளாடு

    விளக்கைஅணை- விளக்கைக் குளிரவை

    சுடுகாடு – நன்காடு

    குழூக்குறி:

  • பலர் கூடியிருக்கும் இடத்தில் சிலர் மட்டும் தமக்குள் சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்பினால் மற்றவர்கள் புரிந்து கொள்ள இயலாத வகையில் சொற்களைப் பயன்படுத்துவர். இவ்வாறு ஒரு குழுவினார்ஒரு பொருள் அல்லது செயலைக் குறிக்கத் தமக்குள் பயன்படுத்திக் கொள்ளும் சொற்கள் குழூஉக்குறி எனப்படும்.

  • (எ.கா.)

    பொன்னைப்பறி எனல் (பொற்கொல்லர் பயன்படுத்துவது)

    ஆடையைக் காரை எனல் (யானைப்பாகர் பயன்படுத்துவது)
    • இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி மூன்றும் ஒரு சொல்லுக்கு மாற்றாக வேறு சொல்லைப் பயன்படுத்தும் முறைகளாகும்.

    • நாகரிகம் கருதி மறைமுகமாகக் குறிப்பிடுதல் இடக்கரடக்கல்.

    • மங்கலமற்ற சொற்களை மாற்றிமங்கலச் சொற்களால் குறிப்பிடுதல் மங்கலம்.

    • பிறர் அறியாமல் ஒரு குழுவுக்கு மட்டும் புரியும் வகையில் குறிப்பிடுதல் குழூஉக்குறி

    போலி:

  • சொல்லின் முதலிலோ, இடையிலோ, இறுதியிலோ இயல்பாக இருக்க வேண்டிய ஓரெழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து இடம்பெற்று அதே பொருள் தருவது போலி எனப்படும்.

  • போலி என்னும் சொல் போல இருத்தல் என்பதிலிருந்து தோன்றியது.
  • போலி 3 வகைப்படும்.

    • முதற்போலி

    • இடைப்போலி

    • கடைப்போலி

    முதற்போலி:

  • சொல்லின் முதலில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது முதற்போலியாகும்.

  • (எ.கா) மஞ்சு – மைஞ்சு

    இடைப்போலி:

  • சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது இடைப்போலியாகும்.

  • (எ.கா) அமச்சு – அமைச்சு

    கடைப்போலி:

  • சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது இறுதிப்போலியாகும்.

  • (எ.கா) அகம் – அகன்

  • அஃறிணைப் பெயர்களின் இறுதியில் நிற்கும் மகர எழுத்திற்குப்பதிலாக னகரம் கடைப்போலியாக வரும். லகர எழுத்திற்குப்பதிலாக ரகரம் கடைப்போலியாக வரும்.
  • முற்றுப்போலி:

  • ஒரு சொல்லில் இயல்பாக அமைந்த எழுத்துக்களுக்குப் பதிலாக எழுத்துக்கள் அனைத்தும் வேறுபட்டாலும் பொருள் மாறாமல் இருப்பது முற்றுப்போலி எனப்படும்.

  • (எ.கா) ஐந்து – அஞ்சு

    பாடம் 4: அறிவியல் ஆக்கம்

    கலங்கரை விளக்கம்


    "வானம் ஊன்றிய மதலை போல
    ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி
    விண்பொர நிவந்த வேயா மாடத்து
    இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி
    உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும்
    துறை….."


    இப்பாடலை இயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

    இப்பாடல் இடம்பெற்ற நூல் – பெரும்பாணாற்றுப்படை

    பாடலின் பொருள்:

    கலங்கரை விளக்கமானது வானம் கீழே விழுந்துவிடாமல் தாங்கிக்கொண்டிருக்கும் தூண் போல தோற்றமளிக்கிறது. ஏணி கொண்டு ஏற முடியாத உயரத்தைக் கொண்டிருக்கிறது; வேயப்படாமல் சாந்து பூசப்பட்ட விண்ணை முட்டும் மாடத்தை உடையது;அம்மாடத்தில் இரவில் ஏற்றப்பட்ட எரியும் விளக்கு, கடலில் துறை அறியாமல் கலங்கும் மரக்கலங்களைத் தன் துறை நோக்கி அழைக்கிறது.

    சொல்லும் பொருளும்:

    • மதலை – தூண்

    • ஞெகிழி – தீச்சுடர்

    • அழுவம் – கடல்

    • சென்னி – உச்சி

    • உரவுநீர் – பெருநீர்ப் பரப்பு

    • கரையும் – அழைக்கும்

    நூற்குறிப்பு:

    • கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககாலப் புலவர். இவர் கடியலூர் என்னும் ஊரில் வாழ்ந்தவர்.இவர் பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

    • பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் தொண்டைமான் இளந்திரையன்.

    • வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற,பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும்.

    பத்துப்பாட்டு நூல்கள்:

    1. திருமுருகாற்றுப்படை

    2. பொருநராற்றுப்படை

    3. பெரும்பாணாற்றுப்படை

    4. சிறுபாணாற்றுப்படை

    5. முல்லைப்பாட்டு

    6. மதுரைக்காஞ்சி

    7. நெடுநல்வாடை

    8. குறிஞ்சிப்பாட்டு

    9. பட்டினப்பாலை

    10. மலைபடுகடாம்
  • வேயாமாடம் எனப்படுவது – வைக்கோலால் வேயப்படுவது

  • அழுவம் என்னும் சொல்லின் பொருள் – கடல்

  • தூண் என்னும் பொருள் தரும் சொல் – மதலை

  • கவின்மிகு கப்பல்


    "உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்
    புலவுத்திரைப் பெருங்கடல் நீர்இடைப் போழ
    இரவும் எல்லையும் அசைவுஇன்று ஆகி
    விரைவுசெலல் இயற்கை வங்கூழ் ஆட்ட
    கோடுஉயர் திணிமணல் அகன்துறை நீகான்
    மாட ஒள்எரி மருங்குஅறிந்து ஒய்ய"


    என்ற பாடலை இயற்றியவர் – மருதன் இளநாகனார்.

    இப்பாடல் இடம்பெற்ற நூல் – அகநானூறு

    பாடலின் பொருள்:

    உலகம் புடைபெயர்ந்தது போன்ற அழகு பொருந்திய தோற்றத்தை உடையது நாவாய்.அது புலால் நாற்றமுடைய அலைவீசும் கடலின் நீரைப் பிளந்து கொண்டு செல்லும். இரவும் பகலும் ஓரிடத்தும் தங்காமல் வீசுகின்ற காற்றானது நாவாயை அசைத்துச் செலுத்தும்.உயர்ந்த கரையை உடைய மணல் நிறைந்த துறைமுகத்தில் கலங்கரை விளக்கத்தின் ஒளியால் திசை அறிந்து நாவாய் ஓட்டுபவன் நாவாயைச் செலுத்துவான்.

    சொல்லும் பொருளும்:

    • உரு – அழகு

    • போழ – பிளக்க

    • வங்கூழ் – காற்று

    • நீகான் – நாவாய் ஓட்டுபவன்

    • வங்கம் – கப்பல்

    • எல் – பகல்

    • கோடு உயர் – கரை உயர்ந்த

    • மாட ஒள்ளெரி – கலங்கரை விளக்கம்

    நூல் குறிப்பு:

  • மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்.

  • கலித்தொகையின் மருதத்தினையில் உள்ள 35 பாடல்களையும் பாடியவர் இவரே.

  • மருதத்திணை பாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார் அழைக்கப்படுகிறார்.

  • அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.

  • புலவர் பலரால் பாடப்பட்ட 400 பாடல்களைக் கொண்டது.

  • இந்நூலை நெடுந்தொகை என்றும் அழைப்பர்.
  • எட்டுத்தொகை நூல்கள்:

    1. நற்றிணை

    2. குறுந்தொகை

    3. ஐங்குறுநூறு

    4. பதிற்றுப்பத்து

    5. பரிபாடல்

    6. கலித்தொகை

    7. அகநானூறு

    8. புறநானூறு
  • வங்கூழ் என்னும் சொல்லின் பொருள் – காற்று

  • புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது – கடல் அலை

  • பெருங்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – பெரிய + கடல்

  • இன்று + ஆகி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – இன்றாகி

  • தமிழரின் கப்பற்கலை

    • பயணம் தரை வழிப் பயணம், நீர் வழைப் பயணம், வான்வழிப் பயணம் என 3 வகைப்படும்.

    • நீர்வழிப் பயணத்தை உள்நாட்டு நீர்வழிப்பயணம், கடல்வழிப் பயணம் என 2 வகைப்படுத்தலாம்.

    • நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகவும் பழமையானது – தொல்காப்பியம்.

    • தொல்காப்பியம் கடற்பயணத்தை முந்நீர் வழக்கம் என்று குறிப்பிடுகிறது.எனவே தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே தமிழர்கள் கடல் பயணம் செய்துள்ளனர் என்பதை அறியலாம்.
    "கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
    நாவாயும் ஓடா நிலத்து" என்று கூறும் நூல் – திருக்குறள்.

    • பூம்புகார் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் பொருள்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டன என்பதை பட்டினப்பாலை விரிவாக விளக்குகிறது.

    • "உலகு கிளிர்ந்தன்ன உருகெழு வங்கம்" என்று பெரிய கப்பலை அகநானூறு குறிப்பிடுகிறது.

    • "அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும்
      பெருங்கலி வங்கம்" என்று கூறும் நூல் – பதிற்றுப்பத்து

    • சேந்தன் திவாகரம் என்னும் நூலில் பலவகையான கப்பல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.இதன் மூலம் தமிழர்கள் கப்பல் கட்டும் தொழிலில் பரந்துப்பட்ட அறிவு பெற்றிருந்தார்கள் என்பதை அறியலாம்.

    • தமிழர்கள் தோணி,ஓடம்,படகு,புணை,மிதவை,தெப்பம் போன்றவற்றைச் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தினர்.

    • கலம்,வங்கம், நாவாய் முதலியவை அளவில் பெரியவை.இவற்றைக் கொண்டு தமிழர்கள் கடல் பயணம் மேற்கொண்டனர்.

    • தமிழர்கள் முற்காலத்திலேயே கப்பல் கட்டும் கலையை நன்கு அறிந்திருந்தனர்.கப்பல் கட்டும் கலைஞர்கள் கம்மியர் என்று அழைக்கப்பட்டனர். இதனைக் "கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஇய்" என்னும் மணிமேகலை அடிகளால் அறியலாம்.

    • கண்ணடை என்பது இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் ஆகும்.

    • நீளம், அகலம், உயரம் ஆகியவற்றைச் சரியான முறையில் கணக்கிட்டுக் கப்பல்களை உருவாக்கினர். இவற்றைத் தச்சுமுழம் என்னும் நீட்டலளவையால் கணக்கிட்டனர்.

    • கப்பல்களில் இரும்பு ஆணிகள் துருபிடித்துவிடும் என்பதால் மரத்தினாலான ஆணிகளையே பயன்படுத்தினர்.இந்த ஆணிகளைத் தொகுதி என்பர்.

    • காற்றின் உதவியால் செலுத்தப்படும் கப்பல்கள் பாய்மரக்கப்பல்கள் எனப்பட்டன.பெரிய பாய்மரம்,திருக்கைத்திப் பாய்மரம்,காணப் பாய்மரம், கோசுப் பாய்மரம் போன்ற பலவகையான பாய்மரங்களைத் தமிழர் பயன்படுத்தினர்.

    • "ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களைப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பழுது பார்க்க வேண்டும். ஆனால் தமிழர்கள்கட்டிய கப்பல்களை ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை" என்று கூறியவர் – வார்க்கர் என்னும் ஆங்கிலேயர்.

    • கப்பல் பல்வேறு வகையான உறுப்புகள் கொண்டது.எரா,பருமல்,வங்கு,கூம்பு,பாய்மரம்,சுக்கான்,நங்கூரம் போன்றவை கப்பலின் உறுப்புகளுள் சிலவாகும்.

    • கப்பலின் முதன்மை உறுப்பாகிய அடிமரம் எரா எனப்படும்.

    • கப்பலைச் செலுத்துவதற்கும் உரிய திசையில் திருப்புவதற்கும் பயன்படும் முதன்மையான கருவி சுக்கான் எனப்படும்.

    • சமுக்கு என்னும் ஒரு கருவியையும் கப்பல்களில் பயன்படுத்தினர் என்று கப்பல் சாத்திரம் என்னும் நூல் குறிப்பிடுகிறது.

    • கப்பல் செலுத்துபவரை மாலுமி,மீகாமன்,நீகான்,கப்பலோட்டி என பல பெயகளால் அழைப்பர்.

    • காற்றின் திசையை அறிந்து கப்பல்களைச் செலுத்தும் முறையைத் தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர் இவ்வுண்மையை,
      "நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
      வளி தொழில் ஆண்ட உரவோன் மருக" என்ற புறநானூற்றுப் பாடலடியில் வெண்ணிக்குயத்தியார் குறிப்பிடுகிறார்.

    • கலம் என்றால் கப்பல், கரை என்றால் அழைத்தல் என்பது பொருல்.கப்பலை அழைக்கும் விளக்கு என்னும் பொருளில் கலங்கரை விளக்கம் எனப்பட்டது.

    • பெரிய கப்பல்கள் துறைமுகத்தில் கரைக்கு அருகில் வர இயலாது.எனவே கப்பலில் வரும் பொருள்களைத் தோணிகள் மூலம் கரைக்குக் கொண்டு வந்தனர்.இச்செய்தியை,
      "கலம் தந்த பொற்பரிசம்
      கழித்தோணியால் கரை சேர்க்குந்து" என்று புறநானூறு கூறுகிறது.

    • தொல்காப்பியம் கடற்பயனத்தை முந்நீர் வழக்கம் என்று கூறுகிறது.

    • கப்பலை உரிய திசையில் திருப்புவதற்கு பயன்படும் கருவி – சுக்கான்

    • கப்பல்கள் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது – நங்கூரம்.

    ஆழ்கடலின் அடியில்

    அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் – ஜூல்ஸ் வெர்ன். இவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர்.

    ஜூல்ஸ் வெர்ன் அவர்களின் புதினங்கள்:

    • எண்பது நாளில் உலகத்தைச் சுற்றி

    • பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம்

    • ஆழ்கடலின் அடியில்

    இலக்கணம்

    இலக்கிய வகைச் சொற்கள்

    • ஓர் எழுத்து தனித்தும் ஒன்றிற்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்தும் வந்து பொருள் தருவது சொல் எனப்படும். மொழி, பதம், கிளவி என்பன சொல் என்னும் பொருள் தரும் வேறு சொற்களாகும்.

    • இலக்கண முறைப்படி பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் எனச் சொற்கள் நான்கு வகைப்படும்.

    • இலக்கிய வகையில் சொற்களை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நான்கு வகையாகப்பிரிக்கலாம்.

    இயற்சொல்:

  • எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும். இயற்சொல் பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகையிலும் வரும்.

  • (எ.கா)

    மண், பொன் – பெயர் இயற்சொல்

    நடந்தான், வந்தான் – வினை இயற்சொல்

    அவனை, அவனால் – இடை இயற்சொல்

    மாநகர் – உரி இயற்சொல்

    திரிசொல்:

  • கற்றோர்க்கு மட்டுமே விளங்குவதாகவும் இலக்கியங்களில் மட்டுமே பயின்று வருபவையாகவும் அமையும் சொற்கள் திரிசொற்கள் எனப்படும்.

  • திரிசொல் பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகையிலும் வரும்.

  • (எ.கா)
    • ஆழுவம், வங்கம் – பெயர் திரிச்சொல்

    • இயம்பினான், பயின்றாள் – வினைத் திரிசொல்

    • அன்ன, மான் – இடைத் திரிசொல்

    • கூர், கழி – உரித் திரிசொல்
  • திரிசொற்களை ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள் எனவும், பல பொருள் குறித்த ஒரு திரிசொல் எனவும் இருவகைப்படுத்தலாம்.

  • வங்கம், அம்பி, நாவாய் – என்பன கப்பல் என்னும் ஒரே பொருளைத் தருவதால் ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள் என்பர்.

  • இதழ் என்னும் சொல் பூவின் இதழ், உதடு, கண்ணிமை, பனையேடு, நாளிதழ்ஆகிய பல பொருள்களைத் தருவதால் பல பொருள் குறித்த ஒரு திரிசொல் என்பர்.
  • திசைச் சொல்:

    • சாவி, சன்னல், பண்டிகை, இரயில் முதலிய சொற்கள் தமிழில் வழக்கில் இருந்தாலும் இவை தமிழ்ச் சொற்கள் அல்ல.

    • பிற மொழிகளில் இருந்து வந்து தமிழில் வழங்கி வருபவையாகும். இவ்வாறு வடமொழி தவிர, பிற மொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் திசைச்சொற்கள் எனப்படும்.

    • முற்காலத்தில் பாண்டிநாட்டைத் தவிர, தமிழ்நாட்டின்பிற பகுதிகளில் வழங்கிய கேணி(கிணறு), பெற்றம் (பசு) போன்ற சொற்களையும் திசைச்சொற்கள் என்றேவழங்கினர்.

    வட சொல்:

    • வருடம், மாதம், கமலம், விடம், சக்கரம் முதலிய சொற்கள் தமிழில் வழக்கில் இருந்தாலும் இவை தமிழ்ச்சொற்கள் அல்ல. இவை வடமொழி எனப்படும் சமஸ்கிருதமொழிச் சொற்கள் ஆகும். இவ்வாறு வடமொழியிலிருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் வடசொற்கள் எனப்படும்.

    • வடசொற்களைத் தற்சமம், தற்பவம் என இருவகையாகப் பிரிப்பர்.

    • கமலம், அலங்காரம் என வடமொழியில் இருப்பது போன்றே தமிழில் எழுதுவதைத் தற்சமம் என்பர்.

    • லக்ஷ்மி என்பதை இலக்குமி என்றும், விஷம் என்பதை விடம் என்றும் தமிழ் எழுத்துகளால் மாற்றி எழுதுவதைச் தற்பவம் என்பர்.

    • எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல் – இயற்சொல்

    பாடம் 5: ஓதுவது ஒழியேல்

    இன்பத்தமிழ்க் கல்வி


    "ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட
    என்னை எழுதென்று சொன்னது வான்
    ஓடையும் தாமரைப் பூக்களும் தங்களின்
    ஓவியந் தீட்டுக என்றுரைக்கும்
    காடும் கழனியும் கார்முகிலும் வந்து
    கண்ணைக் கவர்ந்திட எத்தணிக்கும்
    ஆடும் மயில் நிகர் பெண்களெல்லாம் உயிர்
    அன்பின்ழிச் சித்திரம் செய்க என்றார்

    சோலைக் குளிர்தரு தென்றல் வரும்பசுந்
    தோகை மயில்வரும் அன்னம் வரும்
    மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்
    மாணிக்கப் பரிதி காட்சி தரும்
    வேலைச் சுமந்திடும் வீரரின் தோள் உயர்
    வெற்பென்று சொல்லி வரைக என்னும்
    கோலங்கள் யாவும் மலை மலையாய் வந்து
    கூவின என்னை – இவற்றிடையே

    இன்னலிலே தமிழ் நாட்டினிலேயுள்ள
    எந்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்
    அன்னதோர் காட்சி இரக்கமுண்டாக்கியென்
    ஆவியில் வந்து கலந்ததுவே
    இன்பத் தமிழ்க் கல்வி யாவரும்கற்றவர்
    என்றுரைக்கும் நிலை எய்தி விட்டால்
    துன்பங்கள் நீங்கும் சுகம் வரும் நெஞ்சினில்
    தூய்மை உண்டாகிவிடும் வீரம் வரும்!"


    என்ற கவிதை எழுதியவர் – பாரதிதாசன்

    பாடலின் பொருள்:

  • கவிதை எழுத ஏடு ஒன்று எடுத்தேன்.என்னைக் கவிதையாக எழுதுக என்று வானம் கூறியது. நீரோடையும் தாமரை மலர்களும் எங்கலைக் கவி ஓவியமாகத் தீட்டுக என்றன.

  • காடும் வயல்களும் கருநிற மேகங்களும் என் கண்களைக் கவர்ந்து, கவிதையில் இடம்பெற முயன்றன.ஆடும் மயில் போன்ற பெண்கள் அன்பினைக் கவிதையாக எழுதுக என்றனர்.

  • சோலையின் குளிர்ந்த தென்றல் வந்தது.பசுமையான தோகையுடய மயில் வந்தது.அன்னம் வந்தது.மாணிக்கம் போல் ஒளி வீசி மாலையில் மேற்குத் திசையில் மறைகின்ற கதிரவனும் வந்தான்.

  • வேல் ஏந்திய வீரர்கள், மாலை போன்ற எங்களது தோள்களின் அழகினை எழுதுங்கள் என்றனர்.இவ்வாறு அழகிய காட்சிகள் எல்லாம் பெருந்திரளாக வந்து கவிதையாக எழுதுமாறு கூறின.

  • ஆனால் துன்பத்தில் கிடக்கும் என் தமிழ்நாட்டு மக்கள் அறியாமையில் தூங்கிக் கிடக்கிறார்கள்.அந்தக் காட்சி என் மனத்தில் இரக்கத்தை உண்டாக்கி என் உயிரில் வந்து கலந்து விட்டது.

  • இத்துன்பம் நீங்க அனைவரும் இன்பத்தமிழ்க் கல்வியைக் கற்றவர்கள் என்னும் நிலை ஏற்பட வேண்டும். அந்நிலை ஏற்பட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கிவிடும். நெஞ்சில் தூய்மை உண்டாகிவிடும் வீரம் வரும்.
  • சொல்லும் பொருளும்:

    • எத்தனிக்கும் – முயலும்

    • வெற்பு – மலை

    • கழனி – வயல்

    • நிகர் – சமம்

    • பரிதி – கதிரவன்

    • அன்னதோர் – அப்படி ஒரு

    • கார்முகில் – மழைமேகம்

    பாரதிதாசன் பற்றிய சில குறிப்புகள்:

    • கவிஞர், இதழாளர்,தமிழாசிரியர்,எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் பாரதிதாசன்.

    • இவர் கவிதை,கதை,கட்டுரை,நாடகம் ஆகியவற்றைப் படைப்பதில் வல்லவர்.

    • பாரதிதாசன் எழுதிய பிசிராந்தையார் என்னும் நாடக நூலுக்குச் சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.

    பாரதிதாசன் இயற்றிய நூல்கள்:

    1. பாண்டியன் பரிசு

    2. அழகின் சிரிப்பு

    3. இசையமுது

    4. இருண்ட வீடு

    5. குடும்ப விளக்கு

    6. கண்னகி புரட்சிக் காப்பியம்
  • பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது – மயில்

  • வெற்பு என்பதன் பொருள் – மலை

  • ஏடெடுத்தேன் நென்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – ஏடு + எடுத்தேன்

  • என்று + உரைக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – என்றுரைக்கும்

  • அழியாச் செல்வம்

    "வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை
    மிக சிறப்பின் அரசர் செறின்வல்வார்
    எச்சம் எனவொருவன் மக்கட் செய்வன
    விச்சைமற்று அல்ல பிற"


    என்ற பாடல் இடம்பெற்ற நூல் – நாலடியார்.

    இப்பாடலை இயற்றியவர் – சமண முனிவர்.

    பாடலின் பொருள்:

  • கல்வியைப் பொருள் போல வைத்திருப்பினும் அது பிறரால் கொள்ளப்பாடாது.ஒருவற்கு வாய்க்கும்படி கொடுத்தாலும் குறைவுபடாது.

  • மிக்க சிறப்பினை உடைய அரசராலும் கவர முடியாது.ஆதலால் ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் கல்வியேயாகும்.மற்றவை செல்வம் ஆகாது.
  • சொல்லும் பொருளும்:

    • வைப்புழி – பொருள் சேமித்து வைக்கும் இடம்

    • கோட்படா – ஒருவரால் கொள்ளப்படாது

    • வாய்த்து ஈயில் – வாய்க்கும்படி கொடுத்தலும்

    • விச்சை – கல்வி

    நாலடியார் பற்றியக் குறிப்புகள்:

    • நாலடியார் சமண முனிவர் பலரால் இயற்றப்பட்ட நூலாகும்.

    • இது பதிணென் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று.

    • இது 400 வெண்பாக்களால் ஆனது.

    • இந்நூலை நாலடி நானூறு என்றும் வேளான் வேதம் என்றும் அழைப்பர்.

    • திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது.

    • இந்நூல் திருக்குறளுக்கு இனையாக வைத்துப் போற்றப்படுவதை நாளும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் தொடர் மூலம் அறியலாம்.

    "வெள்ளத்தால் அழியாது வெந்தணலால்
    வேகாது வேந்த ராலும்
    கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும்
    நிறைவன்றிக் குறைவு றாது
    கள்ளர்க்கோ பயமில்லை காவலுக்கு
    மிகஎளிது கல்வி யென்னும்
    உள்ளபொருள் உள்ளிருக்கப் புறத்தேயார்
    பொருள்தேடி உழல்கின் றீரே"


    என்ற பாடல் இடம்பெற்ற நூல் – தனிப்பாடல் திரட்டு
    • ஒருவர் தம் குழந்தைகளுக்கு சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் – கல்வி

    • கேடில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – கேடு + இல்லை

    • எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – எவனொருவன்

    வாழ்விக்கும் கல்வி

    • "கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
      மாடல்ல மற்றை யவை" என்று கூறியவர் – திருவள்ளுவர்.

    • கல்வியறிவு இல்லாதவர்களைத் திருவள்ளுவர் போல் குறை கூறியவர் யாரும் இல்லை

    • "விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
      கற்றாரோடு ஏனை யவர்" என்று கூறியவர் – திருவள்ளுவர். இக்குறளில் கல்வியறிவு இல்லாதவனை விலங்கு என்கிறார்.

    • நன்றின்பால் உய்ப்பது அறிவு என்று கூறியவர் – திருவள்ளுவர்

    • "பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்;எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்"என்றவர் – பாரதியார்.

    • நம் எதிர்காலத்தை உருவாக்கும் பள்ளிக்கு கோவில் என்று பெயர் வைத்தார் பாரதியார்.

    • "கற்க கசடற கற்பவை" என்று கூறியவர் – திருவள்ளுவர்.

    • திருக்குறள் வகுப்புகள் நடத்தியும் தொடர் சொற்பொழிவுகள் நடத்தியும் திருக்குறளைப் பரப்பும் பணி செய்தவர் – திருக்குறளார் வீ.முனிசாமி

    திருக்குறளார் வீ.முனிசாமி இயற்றிய நூல்கள்:

    • வள்ளுவர் உள்ளம்

    • வள்ளுவர் காட்டிய வழி

    • திருக்குறளில் நகைச்சுவை

    • உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம்

    • சிந்தனைக் களஞ்சியம்
  • காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம் – காலமறிதல்

  • பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்று கூறியவர் – பாரதியார்.

  • உயர்வடைவோம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – உயர்வு + அடைவோம்

  • இவை + எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – இவையெல்லாம்

  • பள்ளி மறுதிறப்பு

    • "இளமையில் கல்" என்று கூறியவர் – ஔவையார்

    • பள்ளி மறுதிறப்பு என்னும் கதையை எழுதியவர் – சுப்ரபாரதிமணியன். இவர் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு,இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துகளை வலியுறுத்திச் சிறுகதை, புதினம், கட்டுரை முதலியவற்றை எழுதினார்.

    • கனவு என்னும் இலக்கிய இதழை நடத்தி வருபவர் – சுப்ரபாரதிமணியன்

    சுப்ரபாரதி மணியன் எழுதிய நூல்கள்:

    • பின்னல்

    • வேட்டை

    • தண்ணீர் யுத்தம்

    • புத்து மண்

    • கதை சொல்லும் கலை

    இலக்கணம்

    ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

    • ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாக அமைவதை ஓரெழுத்து ஒருமொழி எனப்படும்
      (எ.கா) ஈ,பூ,கை

    • தமிழில் 42 ஓரெழுத்து ஒருமொழிகள் உள்ளன என கூறியவர் – நன்னூலை இயற்றிய பவணந்தி முனிவர். இவற்றில் நொ, து ஆகிய இரண்டு எழுத்துக்களைத் தவிர ஏனைய 40 சொற்களும் நெடில் எழுத்துக்களாக அமைந்தவை.

    ஓரெழுத்து ஒருமொழிகளும் அவற்றின் பொருளும்:

    • ஆ- பசு

    • ஈ – கொடு

    • ஊ – இறைச்சி

    • ஏ – அம்பு

    • ஐ – தலைவன்

    • ஓ – மதகுநீர் தாங்கும் பலகை

    • கா – சோலை

    • கூ – பூமி

    • கை – ஒழுக்கம்

    • கோ – அரசன்

    • சா – இறந்து போ

    • சீ – இகழ்ச்சி

    • சே – உயர்வு

    • சோ – மதில்

    • தா – கொடு

    • தீ – நெருப்பு

    • தூ – தூய்மை

    • தே – கடவுள்

    • தை – தைத்தல்

    • நா – நாவு

    • நீ – முன்னிலை ஒருமை

    • நே – அன்பு

    • நை – இழிவு

    • நோ – வறுமை

    • பா – பாடல்

    • பூ – மலர்

    • பே – மேகம்

    • பை – இளமை

    • போ – செல்

    • மா – மாமரம்

    • மீ – வான்

    • மூ – மூப்பு

    • மே – அன்பு

    • மை – அஞ்சனம்

    • மோ – முகத்தல்

    • யா – அகலம்

    • வா – அழைத்தல்

    • வீ – மலர்

    • வை – புல்

    • வௌ – கவர்

    • நொ – நோய்

    • து – உண்

    பகுபதம்:

  • சிறுசிறு உறுப்புகளாகப் பிரிக்கும் வகையில் அமையும் சொற்களைப் பகுபதங்கள் என்பர்.பிரிக்கப்படும் உறுப்புகளைப் பகுபத உறுப்புகள் என்பர்.
  • பெயர்ப்பகுபதம்:

  • பகுபதமாக அமையும் பெயர்ச்சொல் பெயர்ப்பகுபதம் ஆகும். இதனை, பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் என ஆறு வகைப்படுத்துவர்.

  • (எ.கா.)

    1. பொருள் – பொன்னன்(பொன் + அன்)

    2. இடம் – நாடன்(நாடு + அன்)

    3. காலம் – சித்திரையான்(சித்திரை + ஆன்)

    4. சினை- கண்ணன்(கண் + அன்)

    5. பண்பு – இனியன்(இனிமை + அன்)

    6. தொழில் – உழவன்(உழவு + அன்)

    வினைப்பகுபதம்:

  • பகுபதமாக அமையும் வினைச்சொல் வினைப்பகுபதம் ஆகும்.

  • (எ.கா.) உண்கின்றான் – உண்+ கின்று + ஆன்.

    பகுபத உறுப்புகள்:

    • பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும். அவை பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் ஆகியவையாகும்.

    • பகுபதத்தின் முதலில் அமைந்து முதன்மையான பொருளைத் தருவது பகுதி ஆகும். இது கட்டளையாகவே அமையும்.

    • பகுபதத்தின் இறுதியில் அமைந்து திணை, பால் ஆகியவற்றையோ, முற்று, எச்சம் ஆகியவற்றையோ காட்டுவது விகுதி ஆகும்.

    • பகுபதத்தின் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது இடைநிலைஆகும்.

    • பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்து சந்தி எனப்படும்.

    • பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் சாரியைஎனப்படும்.

    • பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் விகாரம் எனப்படும்.
    (எ.கா.)

    வந்தனன்- வா(வ) + த்(ந்) + த் + அன்+ அன்

    வா- பகுதி. இது வ எனக் குறுகி இருப்பது விகாரம்

    த் – சந்தி. இது ந்எனத் திரிந்து இருப்பது விகாரம்

    த் – இறந்தகால இடைநிலை

    அன்- சாரியை

    அன்- ஆண்பால் வினைமுற்று விகுதி.

    பகாப்பதம்:

  • உறுப்புகளாகப் பிரிக்க முடியாதல்லவா? இவ்வாறு பகுபத உறுப்புகளாகப் பிரிக்க முடியாத சொல் பகாப்பதம் எனப்படும். இவை அடிச்சொல் அல்லது வேர்ச்சொல்லாக இருக்கும்.

  • பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகைச் சொற்களிலும் பகாப்பதங்கள் உண்டு.

  • (எ.கா.)
    1. பெயர்ப்பகாப்பதம் – நிலம், நீர், நெருப்பு, காற்று.

    2. வினைப்பகாப்பதம் – நட, வா, படி, வாழ்.

    3. இடைப்பகாப்பதம் – மன், கொல், தில், போல்.

    4. உரிப்பகாப்பதம் – உறு, தவ, நனி, கழி.
    • நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை – 42

    • எழுதினான் என்பது – வினைப்பகுபதம்

    • பெயர்ப்பகுபதம் 6 வகைப்படும்.

    • காலம் காட்டும் பகுபத உறுப்பு – இடைநிலை

    மூவிடம்:

  • இடம் மூன்று வகைப்படும். அவை:

    1. தன்மை 2. முன்னிலை 3. படர்க்கை.

  • தன்னைக் குறிப்பது தன்மை.
    (எ.கா.) நான், நாம், நாங்கள், என், எம், எங்கள்.

    முன்னால் இருப்பவரைக் குறிப்பது முன்னிலை.
    (எ.கா.) நீ, நீங்கள், நீர், நீவிர், உன், உங்கள்.

    தன்னையும், முன்னால் இருப்பவரையும் அல்லாமல் மூன்றாமவரைக் குறிப்பது படர்க்கை.
    (எ.கா.) அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை, இவன், இவள், இவை.

    பாடம் 6: கலை வண்ணம்

    ஒரு வேண்டுகோள்

    "கலையுலகப் பிரும்மாக்களே
    மண்ணீன் வனப்புக்குப்
    புதிய அழகுகள் சேர்ப்பவர்களே
    ஒரு மானுடத்தின் வேண்டுகோள்

    நீங்கள் சிற்பிகளாகப்
    பாறை உடைப்பவனின்
    சிலை வடித்தால்
    வியர்வை நெடி வீசட்டும் அதில்

    வயல்வெளி உழவனின்
    உருவ வார்ப்பெனில்
    ஈரமண் வாசம்
    இருக்க வேண்டும் அதில்

    ஓவியர்களாகத்
    தாய்மையின் பூரிப்பைச் சித்திரமாக்கினால்
    அவள் முகப்பொலிவில்
    வழித்தெடுக்குமாறு இருக்கட்டும்
    கரிசன பாச உணர்வுகள்

    ஒரு சின்ன மழலைச் சித்திரமா
    பால் மணம் கமழ வேண்டும்
    அதன் பளிங்கு மேனியில்

    ஆல்ப்ஸ் மலைச் சிகரங்களா
    அட்லாண்டிக் சமுத்திர அலைகளா
    அமேசான் காடுகளா
    பனிபடர் பள்ளத்தாக்குகளா
    தொங்கும் அதிசயத் தோட்டங்களா
    இயற்கையின் பிரமிப்பு எதுவும்
    கலைவடிவு கொள்ளலாம்

    ஏதாயினும் இதை நினைவில் கொள்ளுங்கள்
    மானுட அடையாளம் ஒன்று
    இருக்கவேண்டும் அதில் கட்டாயம்
    மனிதன் இல்லாத – இணையாத
    எந்த வனப்பும் வனப்பில்லை
    அவன் கலவாத எதிலும் ஜீவ உயிர்ப்பில்லை…."


    என்ற கவிதையை எழுதியவர் – தேனரசன்

    பாடலின் பொருள்:

  • கலையுலகப் படைப்பாளர்களே! மண்ணின் அழகுக்கு அழகு சேர்ப்பவர்களே! உங்களுக்கு ஒரு மனித சமுதாயத்தின் வேண்டுகோள்!

  • நீங்கள் பாறை உடைப்பவரின் சிலையைச் செதுக்கினால், அதில் வியர்வை நாற்றம் வீச வேண்டும்.உழவரின் உருவ வார்ப்பாக இருந்தால், அதில் ஈரமண்ணின் வாசம் வீச வேண்டும்.

  • தாயின் மகிழ்ச்சியான உருவத்தை செதுக்கினால் அதில் அன்பும் பாசமும் நிறைந்திருக்க வேண்டும்.சிறு குழந்தையின் சித்திரத்தைத் தீட்டினால் அதன் உடலில் பால் மணம் கமழ வேண்டும்.

  • ஆல்ப்ஸ் மலைச் சிகரங்கள், அட்லாண்டிக் பெருங்கடல் அலைகள், அமேசான் காடுகள், பனிபடர் பள்ளத்தாக்குகள், தொங்கும் தோட்டங்கள்,என இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் எவையும் கலைவடிவம் பெறலாம். ஆனால் அதில் மானுடப் பண்பு கட்டாயமாக இருக்க வேண்டும்.மானுடம் இல்லாத எந்த அழகும் அழகன்று.மனிதன் கலக்காத எதிலும் உயிர்ப்பில்லை.
  • சொல்லும் பொருளும்:

    • பிரும்மாக்கள் – படைப்பாளர்கள்

    • வனப்பு – அழகு

    • நெடி – நாற்றம்

    • பூரிப்பு – மகிழ்ச்சி

    • மேனி – உடல்

    தேனரசன் இயற்றிய நூல்கள்:

    1. மண்வாசல்

    2. வெள்ளை ரோஜா

    3. பெய்து பழகிய மேகம்
  • வானம்பாடி, குயில், தென்றல் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியவர் – தேனரசன்

  • தேனரசனின் கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்படும்.

  • வனப்பில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – வனப்பு + இல்லை

  • வார்ப்பு + எனில் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – வார்ப்பெனில்

  • கீரைப்பாத்தியும் குதிரையும் (இரட்டுற மொழிதல்)


  • ஒரே பாடலில் இரண்டு பொருள் தன்றும்படி பாடப்படுவது – இரட்டுறமொழிதல். இது சிலேடை என்றும் அழைக்கப்படும்.

  • "கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால்
    வெட்டி மறிக்கின்ற மேன்மையால் – முட்டப்போய்
    மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன்
    ஏறப் பரியாகு மே"


    என்ற இருபொருள் படும் கவிதையை எழுதியவர் – காளமேகப்புலவர்.

    பாடலின் பொருள்:

    கீரைப்பாத்தியில்

  • மண் கட்டிகளை அடித்துத் தூளாக்குவர்.மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்திகளாக்கி வைத்திருப்பர்.வாய்க்காலில் மாறி மாறி நீர் பாய்ச்சுவர்.நீர் கடைமடையின் இறுதி வரை சென்று மாற்றி விடத் திரும்பும்.
  • குதிரை

  • வண்டிகளில் கட்டி, அடித்து ஓட்டப்படும்.கால் மாறி மாறிப் பாய்ந்து செல்லும்.எதிரிகளை மறித்துத் தாக்கும்;போக வேண்டிய இடம் முழுவதும் சென்று மீண்டும் திரும்பி வரும்.

  • இக்காரணங்களால் கீரைப் பாத்தியும் ஏறிப்பயணம் செய்யும் குதிரையும் ஒன்றாகக் கருதப்படும்.
  • சொல்லும் பொருளும்:

    • வண்கீரை – வளமான கீரை

    • பரி – குதிரை

    • முட்டப்போய் – முழுதாகச் சென்று

    • கால் – வாய்க்கால், குதிரையின் கால்

    • மறித்தல் – தடுத்தல் (மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்திக் கட்டுதல்), எதிரிகளைத் தடுத்துத் தாக்குதல்

    காளமேகப் புலவர் பற்றியக் குறிப்புகள்:

    • இவரின் இயற்பெயர் வரதன்

    • மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் காளமேகப் புலவர் என்று அழைக்கப்பட்டார்.

    • இவரது தனிப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன.

    காளமேகப் புலவர் இயற்றிய நூல்கள்:

    • திருவானைக்கா உலா

    • சரசுவதி மாலை

    • பரபிரம்ம விளக்கம்

    • சித்திர மடல்
  • பரி என்னும் பொருள் – குதிரை

  • கட்டி + அடித்தல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – கட்டியடித்தல்

  • பேசும் ஓவியங்கள்

    • ஆயகலைகள் எண்ணிக்கை – 64

    • பழங்கால மனிதர்கள் குகைகளில் வாழ்ந்தனர். அங்குதான் அவர்கள் முதலில் ஓவியங்களை வரைந்தனர். செய்திகலை மற்றவருக்கு தெரிவிப்பதற்காக ஓவியங்களை வரைந்தனர்.இவை பெரும்பாலுல் கோட்டோவியங்களாகவே இருந்தன.

    • மனிதர்கள் வீடு கட்டி வாழத்தொடங்கிய காலம் முதல் சுவரில் ஓவியங்கள் வரையத் தொடங்கினர்.

    • அரண்மனைகள், கோவில்கள், மண்டபங்கள் போன்றவற்றின் சுவர்களிலும் மேற்கூரைகளிலும் சுவரோவியங்களைக் காண முடியும்.

    • தஞ்சைப் பெரிய கோவிலில் ஏராளமான சுவரோவியங்களைக் காணமுடியும்.இங்கு நாயன்மார்களில் ஒருவரான சுந்தரரின் வாழ்க்கை நிகழ்வுகளை சுவரோவியங்களாக வரைந்துள்ளனர்.

    • துணிகளில் ஓவியம் வரையும் முறை பழங்காலம் முதலே இருந்து வந்துள்ளது.

    • ஓவியம் வரையப் பயன்படும் துணியை எழினி, திரைச்சீலை,கிழி,படாம் எனப் பல பெயர்களில் அழைப்பர்.

    • சீவக சிந்தாமணிக் காப்பியத்தில் குணமாலை என்னும் தலைவி யானையைக் கொண்டு அஞ்சிய காட்சியைச் சீவகன் துனியில் வரைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

    • தற்காலத்தில் துணி ஓவியங்கள் "கலம்காரி ஓவியங்கள்" என்னும் பெயரில் தமிழகத்திலும் ஆந்திராவிலும் ஓவியர்கள் வரைந்து வருகின்றனர்.

    • "புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்" என்று கூறும் நூல் – நெடுநல்வாடை

    • "புனையா ஓவியம் புறம் போந்தன்ன" என்று கூறும் நூல் – மணிமேகலை

    • ஓலைச்சுவடிகள் மீது எழுத்தாணிகளைக் கொண்டு கோட்டோவியமாகவும் வண்ணப்பூச்சு ஓவியமாகவும் வரைந்தனர்.

    • தஞ்சை சரஸ்வதி மஹாலில் ஓலைச்சுவடி ஓவியங்களைக் காணலாம்.

    • முற்காலத்தில் மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும் செப்பேடுகளில் பொறிப்பது வழக்கம்.அதைப்போல் உளி கொண்டு ஓவியங்களையும் அவற்றில் வரைந்தனர்.

    • ஓவிய மண்டபத்தில் பல வகை ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. ஓவியங்கள் குறித்து அறிந்தோர் அறியாதவர்களுக்கு விளக்கிக் கூறினர் என்ற செய்தி பரிபாடலில் இடம் பெற்றுள்ளது.

    • "இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம்
      துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும்" என்று கூறும் நூல் – பரிபாடல்

    • யானைத் தந்தத்தின் மீது வரையப்பட்ட ஓவியங்களை கேரள மாநிலத்தில் அதிகமாகக் காண முடியும்.

    • கண்ணாடியில் ஓவியங்களை உருவாக்கும் ஓவியர்கள் தஞ்சாவூரில் மிகுதியாக உள்ளனர்.

    • தாளில் வரையப்பட்ட ஓவியங்களே தற்காலத்தில் மிகுதியாக உள்ளன. கோட்டோவியங்கள், வண்ண ஓவியங்கள்,நவீன ஓவியங்கள், எனப் பலவகையான வடிவங்களில் இவை காணப்படுகின்றன. கரிக்கோல், நீர்வண்ணம், எண்ணெய் வண்ணம் ஆகியவற்றை பயன்படுத்தி இவற்றை வரைகின்றனர்.

    • பாரதியார் இந்தியா என்ற இதழில் முதன்முதலில் கருத்துப்படத்தினை தமிழில் அறிமுகப்படுத்தினார்.

    ஓவியத்தின் வேறு பெயர்கள்:

    • ஓவு

    • ஓவியம்

    • ஓவம்

    • சித்திரம்

    • படம்

    • படாம்

    • வட்டிகைச்செய்தி

    ஓவியரின் வேறு பெயர்கள்:

    • கண்ணுள் வினைஞர்

    • ஓவியப் புலவர்

    • ஓவ மாக்கள்

    • கிளவி வல்லோன்

    • சித்திரக்காரர்

    • வித்தகர்

    ஓவியக்கூடத்தின் வேறுபெயர்கள்:

    1. எழுதொழில் அம்பலம்

    2. எழுத்துநிலை மண்டபம்

    3. சித்திர அம்பலம்

    4. சித்திரக்கூடம்

    5. சித்திர மாடம்

    6. சித்திர மண்டபம்

    7. சித்திர சபை
    • ஓவியத்தின் மற்றொரு வடிவம் – கேலிச்சித்திரம்

    • ஐரோப்பியக் கலை நுணுக்கத்துடன் இந்தியக் கதை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளைப் புகுத்தியவர் "இராஜா இரவிவர்மா" இவரது பாணி ஓவியங்கள் பிற்காலத்தில் நாட்காட்டிகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டன.

    • நாட்காட்டி ஓவியம் வரையும் முறையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுபவர் கொண்டையராஜூ. நாட்காட்டி ஓவியங்களைப் பாசர் பெயிண்டிங் என்றும் அழைப்பர்.

    • நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம் – கேலிச்சித்திரம்.

    • கருத்துப் படங்களை தமிழில் அறிமுகப்படுத்தியவர் – பாரதியார்.

    • கலம்காரி ஓவியம் என்று அழைக்கப்படுவது – துணி ஓவியங்கள்

    • மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவனங்களையும் செப்பேடுகளில் பொறித்து பாதுகாத்தனர்.

    தமிழ் ஒளிர் இடங்கள்

    • இந்தியாவில் உள்ள தொன்மையான நூலகங்களுள் ஒன்று தஞ்சை சரசுவதி மஹால் நூலகம். இந்நூலகம் கி.பி.1122 முதல் இயங்கி வருவதாக கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.

    • தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழக அரசால் 1981-ல் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ்நாடு என்று தெரியும் வகையில் இதன் கட்டிட அமைப்பு உள்ளது.

    • இந்திய நாகரிகத்தின் பண்பாட்டுக் கூறுகள் அனைத்தையும் விரிவாகவும் ஆழமாகவும் ஆராய வேண்டும் என்பதே இந்தப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்.இந்திய ஆட்சிப் பணியாளர்களுக்கு தமிழ்ப் பயிற்சியை இப்பல்கலைக்கழகமே வழங்கி வருகிறது.

    • உ.வே.சா நூல் நிலையம் 1942 ல் தொடங்கப்பட்டது. இங்கு 2128 ஓலைச்சுவடிகளும் 2941 தமிழ் நூல்களும் உள்ளன.

    • சென்னை கீழ்திசைச் சுவடிகள் நூலகம் கி.பி.1869 ல் தொடங்கப்பட்டது.இந்து பல்வேறு துறை நூல்களும் பல்வேறு மொழிகளின் ஓலைச்சுவடிகளும் உள்ளன. இது தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாம் தளத்தில் இயங்கி வருகிறது.

    கன்னிமாரா நூலகம் – சென்னை:

    • சென்னை கன்னிமாரா நூலகம் 1896 ல் தொடங்கப்பட்டது. இது தமிழ்நாட்டில் மைய நூலகம் ஆகும்.

    • இந்நூலகத்தின் மூன்றாம் தளத்தில் மறைமலையடிகள் நூலகமும் செயல்பட்டு வருகிறது.

    வள்ளுவர் கோட்டம் – சென்னை:

    • திருவள்ளுவரின் புகழை உலகறியச் செய்யும் வகையில் சென்னை கோடம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் என்னும் கலைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பணிகள் 1973 ல் தொடங்கி 1976 ல் முடிக்கப்பட்டன.

    • இது திருவாரூர்த் தேர் போல் அமைக்கப்பட்டு அதனை இரண்டு யானைகள் இழுத்துச் செல்வது போன்று கருங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. தேரின் மொத்த உயரம் 128 அடி.

    • வள்ளுவர் கோட்டத்தில் 1330 குறட்பாக்களும் செதுக்கப்பட்டுள்ளன. அறத்துப்பால் கருநிறப் பளிங்கு கல்லிலும், பொருட்பால் வெண்ணிறப் பளிங்குக் கல்லிலும், இன்பத்துப்பால் செந்நிறப் பளிங்குக் கல்லிலும் அழகாகப் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் திருக்குறளின் கருத்துக்களை விளக்கும் ஓவியங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

    திருவள்ளுவர் சிலை – கன்னியாகுமரி:

    • இந்தியாவின் தெற்கெல்லையாகிய கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டு இப்பணிகள் தொடங்கியது.

    • பொதுமக்களின் பார்வைக்காக 2000 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் முதல் நாள் திறந்து வைக்கப்பட்டது. பாறையிலிருந்து சிலையின் உயரம் 133 அடி. இது திருக்குறளின் மொத்த அதிகாரங்களைக் குறிக்கிறது.

    • அறத்துப்பாலின் அதிகாரங்களை உணர்த்துவது போல பீடம் 38 அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

    • பொருட்பால் இன்பத்துப்பால் ஆகியவற்றின் மொத்த அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் சிலை 95 அடி உயரம் உடையதாக அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு 3 டன் முதல் 8 டன் வரையுள்ள 3681 கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டன.

    உலகத் தமிழ்ச் சங்கம் – மதுரை:

    • மதுரை மாநகரின் தல்லாகுளம் பகுதியில் காந்தி அருங்காட்சியகம் அருகில் உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டுள்ளது. இது 87,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

    • 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    • இக்கட்டிடம் 2016 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இதன் வெளிப்புறச்சுவர்களில் 1330 குறட்பாக்கள் இடம்பெற்றுள்ளன.

    • உலகத் தமிழ்ச் சங்கத்தின் மற்றோர் அமைப்பான சங்கத்தமிழ்க் காட்சிக்கூடம் தனிக்கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தருமிக்குப் பாண்டிய மன்னன் பொற்கிழி வழங்கிய திருவிளையாடல் புராணக்காட்சி இதன் நுழைவாயிலில் இடம்பெற்றுள்ளது.

    • தொல்காப்பியர், ஔவையார்,கைலர் ஆகியோரின் முழு உருவ வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

    • மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைந்த மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கக் கட்டிடமும் சங்கத்தமிழ்க் காட்சிக்கூடமும் தமிழின் பெருமையைப் பறைசாற்றி நிற்கின்றன.

    சிற்ப கலைக்கூடம் – பூம்புகார்:

    • இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்களின் தலைநகரமாகவும் துறைமுக நகரமாகவும் விளங்கியது பூம்புகார். இந்நகரைப் பற்றிய செய்திகள் சிலப்பதிகாரத்திலும் பட்டினப்பாலையிலும் இடம்பெற்றுள்ளன.

    • இங்கு மருவூர்ப்பாக்கம் என்னும் கடல் பகுதியும் பட்டினப்பாக்கம் என்னும் நகரப் பகுதியும் அமைந்திருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. இந்நகரின் பெருமையை உலகறியச் செய்ய 1973 ஆம் ஆண்டு பூம்புகார் கடற்கரையில் சிற்பக் கலைக்கூடம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.

    • இக்கூடம் ஏழுநிலை மாடங்களைக் கொண்டது.கண்ணகியின் வரலாற்றை விளக்கும் 49 சிற்பத்தொகுதிகள் இங்கு இடம்பெற்றுள்ளன.

    • மாதவிக்கும் ஒரு நெடிய சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது. கலைக்கூடத்திற்கு அருகில் இலஞ்சிமன்றம், பாவைமன்றம், நெடுங்கல்மன்றம் ஆகியன அமைந்துள்ளன.

    • இலஞ்சிமன்றத்திலும் பாவைமன்றத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ள பெண்களின் உருவங்கள் நம் கண்ணையும் கருத்தையும் கவருகின்றன.

    • நெடுங்கல் மன்றத்தில் நெடிய கற்றூண் ஒன்றும் அதனைச் சுற்றி எட்டுச் சிறிய கற்றூண்களும் எட்டு மனித உருவங்களும் தற்காலச் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டுகளாய் நிற்கின்றன.

    இலக்கணம்

    தொழிற்பெயர்

    • ஒரு செயலின் அல்லது வினையின் பெயராக அமைவது தொழிற்பெயர் ஆகும். தொழிற்பெயர் எண், இடம்,காலம்,பால் ஆகியவற்றைக் காட்டாது. படர்க்கை இடத்தில் மட்டும் வரும்.
      (எ.கா) படித்தல், ஆடல் ,நடிப்பு, எழுதுதல், பொறுத்தல்

    • தொழிற்பெயரை விகுதி பெற்ற தொழிற்பெயர், முதனிலைத் தொழிற்பெயர், முதனிலை திரிந்த தொழிற்பெயர் என வகைப்படுத்துவர்.

    விகுதி பெற்ற தொழிற்பெயர்:

    • நடத்தல், உண்ணல், வாழ்வு, வாழ்க்கை ஆகிய பெயர்களைக் கவனியுங்கள். இவற்றில் நட, உண், வாழ் ஆகிய வினைப் பகுதிகள் தல், அல், வு, கை ஆகிய விகுதிகளோடு சேர்ந்து தொழிற்பெயர்களாக அமைகின்றன.

    • இவ்வாறு வினைப்பகுதியுடன் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து வருவது விகுதி பெற்ற தொழிற்பெயராகும்.

    • தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, வு, தி, சி, வி, மை போன்றவை தொழிற்பெயர் விகுதிகளாக வரும்.
    (எ.கா.)
    • தருதல் – தல்

    • நட்பு- பு

    • கூறல் – அல்

    • மறைவு – வு

    • ஆட்டம் – அம்

    • மறதி- தி

    • விலை- ஐ

    • உணர்ச்சி- சி

    • வருகை- கை

    • கல்வி- வி

    • பார்வை- வை

    • செய்யாமை- மை

    முதனிலைத் தொழிற்பெயர்:

    • வானில் இடி இடித்தது

    • சோறு கொதி வந்தது

    • இடி, கொதி என்னும் சொற்கள் இடித்தல், கொதித்தல் என்னும் சொற்களின் பகுதிகளாகும். இவ்வாறு ஏவல் ஒருமை வினையாக அமையும் வினைச் சொற்களின் பகுதியை முதனிலை என்பர்.

    • முதனிலை எவ்வகை மாற்றமும் பெறாமல் தொழிற்பெயராக அமைவது முதனிலைத் தொழிற்பெயர் எனப்படும்.
    (எ.கா.)
    • செல்லமாக ஓர் அடி அடித்தான்.

    • அறிஞர் அண்ணா தம் பேச்சால் புகழ் பெற்றார்.
    இவற்றில் அடிக்கோடிட்ட சொற்கள் விகுதி பெறாமல் தம்பொருளை உணர்த்துகின்றன.

    முதனிலை திரிந்த தொழிற்பெயர்:

    • தமிழ் படிக்கும் பேறு பெற்றேன்.
  • உணவின் சூடு குறையவில்லை.
  • இத்தொடர்களில் பேறு, சூடு ஆகிய சொற்களைக் கவனியுங்கள். பெறு, சுடு என்னும் பகுதிகளின் முதலெழுத்து நீண்டு, பேறு, சூடு எனத் திரிந்து தொழிற்பெயர்களாக மாறி உள்ளன. இவ்வாறு முதனிலை திரிவதால் உருவாகும் தொழிற்பெயர் முதனிலை திரிந்த தொழிற்பெயர் எனப்படும்.

    (எ.கா.)
    விடு – வீடு, மின் – மீன், கொள் – கோள், உடன்படு – உடன்பாடு


    • செய்யத்தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால் தீமை உண்டாகும்

    • தன்குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புபவரிடம் சோம்பல் இருக்கக் கூடாது.

    • எழுத்தென்ப என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – எழுத்து + என்ப

    • கரைந்துண்ணும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – கரைந்து + உண்ணும்

    • கற்றனைத்து + ஊறும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – கற்றனைத்தூறும்

    பாடம் 7 : நயத்தகு நாகரிகம்

    விருந்தோம்பல்

    தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் முதன்மையானது – விருந்தோம்பல்

    "மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும்
    பாரி மடமகள் பாண்மகற்கு – நீர்உலையுள்
    பொன்திறந்து கொண்டு புகாவா நல்கினாள்
    ஒன்றாகு முன்றிலோ இல்"


    என்ற பாடல் இடம்பெற்ற நூல் – பழமொழி நானூறு.

    இப்பாடலை இயற்றியவர் – முன்றுரை அரையனார்

    பாடலின் பொருள்:

  • மழையின்றி வறட்சி நிலவிய காலத்தில், பாரி மகளிரான அங்கவை, சங்கவை ஆகியோரிடம் பாணர்கள் இரந்து நின்றனர்.

  • பாரிமகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர்.அதனால் பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம்.

  • இப்பாடலில் இடம் பெற்றுள்ள பழமொழி "ஒன்றாகு முன்றிலோ இல்" என்பதாகும். ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை என்பது இதன் பொருளாகும்.
  • சொல்லும் பொருளும்:

    • மாரி – மழை

    • மடமகள் – இளமகள்

    • வறந்திருந்த – வறண்டிருந்த

    • புகவா – உணவாக

    • நல்கினாள் – கொடுத்தாள்

    • முன்றில் – வீட்டின் முன் இடம் (திண்னை) இங்கு வீட்டைக் குறிக்கிறது.

    நூல்வெளி:

    • பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுரை அரையனார். இவர் கி.பி 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர்.

    • பழமொழி நானூறு கடவுள் வாழ்த்துப் பாடலின் மூலம் இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என அறிய முடிகிறது.

    • பழமொழி நானூறு பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று.இது 400 பாடல்களைக் கொண்டது.

    • ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம்பெற்றுள்ளதால் இது பழமொழி நானூறு என பெயர் பெற்றது.
  • நீருலையில் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – நீர் + உலையில்

  • மாரி + ஒன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – மாரியொன்று

  • வயலும் வாழ்வும்

    "ஓடை எல்லாம் தாண்டிப்போயி – ஏலேலங்கிடி ஏலேலோ
    ஒண்ணரைக்குழி நிலமும் பார்த்து – ஏலேலங்குடி ஏலேலோ
    சீலையெல்லாம் வரிஞ்சுகட்டி – ஏலேலங்கிடி ஏலேலோ
    சேத்துக்குள்ளே இறங்குறாங்க – ஏலேலங்குடி ஏலேலோ

    நாத்தெல்லாம் பிடுங்கையிலே – ஏலேலங்குடி ஏலேலோ
    நண்டும் சேர்த்துப் பிடிக்கிறங்க – ஏலேலங்குடி ஏலேலோ
    ஒருசாணுக்கு ஒரு நாற்றுத்தூண் – ஏலேலங்குடி ஏலேலோ
    ஓடியாடி நட்டோமையா – ஏலேலங்குடி ஏலேலோ"


    – தொகுப்பாசிரியர் கி.வா.ஜகந்நாதன்

    பாடலின் பொருள்:

    • உழவு செய்யும் மக்கள் ஓடையைக் கடந்து சென்று ஒன்றரைக் குழி நிலத்தைத் தேர்ந்தெடுத்தனர்.

    • பெண்கள் புடவையை இறுக்கக்கட்டி நடவு செய்ய வயலில் இறங்கினர்.நாற்றுப் பறிக்கும் போது ஆண்களும் பெண்களும் வயல் பரப்பில் உள்ள நண்டுகளையும் பிடித்தனர்.

    • ஒரு சாணுக்கு ஒரு நாற்று வீதம் சுறுசுறுப்பாக நட்டனர்.நடவு நட்ட வயலின் மண்குளிருமாறு மடைவழியே பாய்ச்சினர்.நட்ட நெற்பயிர்கள் வரிசையாக வளர்ந்து செழித்தன.

    • பால் பிடித்து முற்றிய நெல்மணிகள் மணம் மயங்குமாறு விளைந்தன.அறுவடை செய்யும் ஆட்களுக்குப் பணம் கொடுத்தனர். அறுவடை செய்த நெல்தாள்களைக் கட்டுகளாகக் கட்டித் தலைக்குச் சும்மாடு வைத்துத் தூக்கிச் சென்று களத்தில் சேர்த்தனர்.

    • கதிரடித்த நெல்தாள்களைக் கழக்கத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்தனர்.மாடுகள் மிதித்த நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்ந்தன.

    • அறுவடை செய்த நெற்கதிர்களைக் களத்தில் அடித்து நெல்லைப் பிரிப்பர்.நெல்தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வர். இதற்குப் போரடித்தல் என்று பெயர்.
    "மாடுகட்டிப் போரடித்தால் மாளாது
    செந்நெல்லென்று
    ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான
    தென்மதுரை"


    இப்பாடல் நாட்டுப்புறப்பாடல் ஆகும்.

    சொல்லும் பொருளும்:

    • குழி – நில அளவைப் பெயர்

    • சாண் – நீட்டல் அளவைப் பெயர்

    • மணி – முற்றிய நெல்

    • சும்மாடு – பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக் கொள்ளும் துணிச்சுருள்

    • சீலை – புடவை

    • மடை – வயலுக்கு வரும் நீர்வழி

    • கழலுதல் – உதிர்தல்
  • வாய்மொழி இலக்கியம் என்று அழைக்கப்படுவது – நாட்டுப்புறப்பாடல்

  • பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புறப்பாடல்களை மலை அருவி என்னும் நூலில் கி.வா.ஜகந்நாதன் தொகுத்துள்ளார்.

  • தேர்ந்தெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – தேர்ந்து + எடுத்து

  • ஓடை + எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – ஓடையெல்லாம்

  • திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

    • திருநெல்வேலி தமிழகத்தின் பழமையான நகரங்களுள் ஒன்று.

    • பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரமாக திருநெல்வேலி விளங்கியது.

    • இந்நகரைச் சுற்றி நெல் வயல்கள் அமைந்திருந்ததால் திருநெல்வேலி எனப் பெயர் பெற்றது.

    • திருநெல்வேலி தற்போது நெல்லை என மருவி வழங்கப்படுகிறது.

    • "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி" என்று திருநெல்வேலியின் சிறப்பைப் போற்றியவர் – திருஞானசம்பந்தர்

    • "தன்பொருநைப் புனல் நாடு" என்ற் திருநெல்வேலியின் சிறப்பைப் போற்றியவர் – சேக்கிழார்

    • முற்காலத்தில் திருநெல்வேலிக்கு வேணுவனம் என்னும் பெயரும் இருந்துள்ளது.மூங்கில் காடு என்பது அதன் பொருளாகும்.

    • மூங்கில் நெல் மிகுதியாக விளைந்தமையால் அப்பகுதிக்கு நெல்வேலி என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கருதுவர்.

    • திருநெல்வேலி மாவட்டம் மலைவளம் மிகுந்த பகுதியாகும். இப்பகுதியின் சிறப்புமிக்க பொதிகை மலை இலக்கியங்களில் பாராட்டப்பட்டு உள்ளது.

    • "பொதியி லாயினும் இமய மாயினும்
      பதியெழு அறியாப் பழங்குடி" என்று இளங்கோவடிகள் பொதிகை மலையைப் பற்றி பாடுகிறார்.

    • இலக்கியங்களில் திரிகூடமலை என வழங்கப்படும் குற்றாலமலை புகழ் பெற்ற சுற்றுலா இடமாக திகழ்கிறது.

    • "வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
      மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்" என்று குற்றால மலை வளத்தைத் திரிகூட ராசப்பக் கவிராயர் தம் குற்றாலக் கூறவஞ்சி நூலில் பாடியுள்ளார்.

    • திருநெல்வேலிப் பகுதியை வளம் செழிக்கச் செய்யும் ஆறு தாமிரபரணி ஆகும்.இதனைத் தண்பொருநை, சேர்வலாறு, கடனாநதி என்று பல கிளை ஆறுகளாகப் பிரிந்து திருநெல்வேலியை நீர்வளம் மிக்க மாவட்டமாகச் செய்கிறது.

    • திருநெல்வேலி மாவட்டப் பொருளாதரத்தில் முதன்மையான பங்கு வகிப்பது – உழவுத்தொழில்

    • தாமிரபரணி ஆற்றின் மூலம் உழவுத்தொழில் நடைபெறுகின்றது.இங்குக் குளத்துப் பாசனமும் கிணற்றுப் பாசனமும் கூடப் பயன்பாட்டில் உள்ளன.இருபருவங்களில் நெல் பயிரிடப்படுகிறது.

    • மானாவாரிப் பயிர்களாகச் சிறுதானியங்கள், எண்ணெய்வித்துக்கள், காய்கனிகள்,பருத்தி, பயறுவகைகள் போன்றவை பயிரிடப்படுகின்றன.

    • இராதாபுரம்,நாங்குநேரி,அம்பாசமுத்திரம்,தென்காசி போன்ற பகுதிகளில் வழை பெருமளவில் பயிரிடப்படுகின்றது. இங்கு விளையும் வாழைத்தார்கள் தமிழ்நாடு மட்டுமன்றிக் கர்நாடகம், கேரளம் போன்ற பிற மாநிலங்களுக்கும் பயிரிடப்படுகின்றன.

    • நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் நெல்லை மாவட்டமே முதலிடம் வகிக்கின்றது.

    • கடலோர மற்றும் உள்நாட்டு மீன்பிடித் தொழிலும் இம்மாவட்டத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.

    • தாமிரபரணிக்கு அருகிலுள்ள ஆதிச்சநல்லூர் என்னும் இடத்தில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வில் இறந்தவர்களின் உடல்களைப் புதைக்கப் பழந்தமிழர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழரின் தொன்மைக்கும் நாகரிகச் சிறப்புக்க்கும் சான்றாக விளங்கும் தொல்பொருள்கள் இங்குக் கிடைத்துள்ளன. இவ்வூர் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது.

    • ஆதிச்சநல்லூர் அமைந்துள்ள மாவட்டம் – தூத்துக்குடி

    • தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் கொற்கை என்னும் துறைமுகம் இருந்தது. இங்கு முத்துக்குளித்தல் சிறப்பாக நடைபெற்றதாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.

    • கொற்கையில் விளைந்த பாண்டி நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றதாக விளங்கியது.

    • "முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை" என்று கொற்கை முத்தை சிறப்பித்துக் கூறும் நூல் – நற்றிணை

    • "கொற்கையில் பெருந்துறை முத்து" என்று கூறும் நூல் – அகநானூறு

    • கிரேக்க, உரோமாபுரி நாடுகளைச் சேர்ந்தவர்களான யவனர்கள் இந்த முத்துகளை விரும்பி வாங்கிச் சென்றனர்.

    • நெல்லை நகரின் நடுவே நெல்லையப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது.கோவிலைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் மாட வீதிகள் அமைந்துள்ளன.அவற்றைச் சுற்றித் தேரோடும் வீதிகள் அழகுற அமைந்துள்ளன. இங்குத் திங்கள் தோறும் திருவிழா நடைபெறும் என்பதை,
      "திங்கள் நாள்விழா மல்கு திருநெல்
      வேலியுறை செல்வர் தாமே" என்று திருஞானசம்பந்தர் பாடல் அடிகளால் அறியலாம்.

    • நெல்லை மாநகரில் உள்ள தெருக்கள் பல அதன் பழமைக்குச் சான்றாக உள்ளன. காவற்புரைத் தெரு என்று ஒரு தெரு உள்ளது.

    • காவற்புரை என்றால் சிறைச்சாலை எனபது பொருள். அரசரால் தண்டிக்கப்பட்டவர்கள் இங்கு சிறை வைக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது.

    • கூலம் என்பது தானியத்தைக் குறிக்கும் சொல் ஆகும். கூலக்கடைத்தெரு என்பதே மருவிக் கூழைக்கடைத் தெரு என வழங்கப்படுகிறது.

    • அக்கசாலை என்பது அணிகலன்களும் பொற்காசுகளும் உருவாக்கும் இடம்.முற்காலத்தில் பொன் நாணயங்கள் உருவாக்கும் பணியாளர்கள் வாழ்ந்த பகுதி அக்கசாலைத் தெரு என்னும் பெயரில் அமைந்துள்ளது.

    • தாமிரபரணி ஆற்றின் மேற்குக் கரையில் திருநெல்வேலியும் கிழக்குக் கரையில் பாளையங்கோட்டையும் அமைந்துள்ளன. இவ்விரு நகரங்களும் இரட்டை நகரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. பாளையங்கோட்டையில் அதிக அளவில் கல்வி நிலையங்கள் இருப்பதால் அந்நகரைத் தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்பர்.

    • வணிகம் நடைபெறும் பகுதியை பேட்டை என்று கூறுதல் பண்டைய மரபு.

    • பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனை நெல்லை நகர மக்கள் எதிர்கொண்டு வரவேற்ற இடம் பாண்டியபுரம் எனவும் அவன் தேவியாகிய மங்கையர்க்கரசியை மகளிர் எதிர்கொண்டு வரவேற்ற இடம் திருமங்கை நகர் என்றும் வழங்கப்படுகின்றன.

    • நாயக்க மன்னரின் தளவாயாக விளங்கிய அரியநாயகரின் வழித் தோன்றல் வீரராகவர்.அவரது பெயரில் அமைந்த ஊர் வீரராகவபுரம் எனவும், அவரது துணைவியார் மீனாட்சி அம்மையார் பெயரில் உள்ள ஊர் மீனாட்சிபுரம் எனவும் வழங்கப்பட்டு வருகின்றன.

    • பாளையங்கோட்டை, உக்கிரன் கோட்டை, செங்கோட்டை என்னும் பெயர்கள் இம்மாவட்டத்தில் கோட்டைகள் பல இருந்தமைக்கு சான்றாக விளங்கின்றன.

    • அகத்தியர் பொதிகை மலையில் வாழ்ந்தவர் என்பர். சங்கப்புலவரான மாறோக்கத்து நப்பசலையார், நம்மாழ்வார், பெரியாழ்வார், குமரகுருபரர், திரிகூடராசப்பக் கவிராயர், கவிராசப் பண்டிதர் ஆகியோர் திருநெல்வேலிச் சீமையில் பிறந்து தமிழுக்குச் செழுமை சேர்த்துள்ளனர். அயல்நாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், கால்டுவெல், வீரமாமுனிவர் போன்றோரையும் தமிழின்பால் ஈர்த்த பெருமக்கு உரியது திருநெல்வேலி.

    • திருநெல்வேலி பாண்டிய மன்னர்களோடு தொடர்புடையது.

    • இளங்கோவடிகள் பொதிகை மலைக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடினார்.

    • திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது.

    திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்

    • பாரதியார் பிறந்து வளர்ந்த இடம் எட்டையபுரம்

    • தேசிகவிநாயகனார் கன்னியாகுமரிப் பக்கம் – அதாவது நாஞ்சில் நாட்டில் பிறந்து வளர்ந்தவராய் இருந்தாலும் அவர் தமிழை அழுத்தமாக ஆர்வத்தோடு கற்ற இடம் – திருநெல்வேலி.

    • கடிகை முத்துப் புலவர் எட்டையபுரத்தைச் சேர்ந்தவர்.இவர் வெங்கடேசுர எட்டப்ப ராஜாவைப் பற்றிப் பல பாடல்கள் பாடியிருக்கிறார்.

    • மணியாச்சியிலிருந்து ஏழெட்டு மைல் தூரத்தில் தாமிரபரணி நதியும் சிற்றாறும் கலக்கிற இடம்தான் சீவலப்பேரி என்கிற முக்கூடல். முக்கூடல் பள்ளு என்னும் பிரபந்தம் முக்கூடலைப் பற்றியதுதான்.

    • "ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்று தேகுறி – மலை

    • யாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே!" என்ற அடிகள் இடம்பெற்ற நூல் – முக்கூடற்பள்ளு
    • நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி தாயத் தரிசித்து உரிமை பாராட்டி சுவாமியிடம் சிபாரிசு செய்ய வேண்டும் என்றவர் – பலப்பட்டடைச் சொக்கநாதப்புலவர்.

    • சீவைகுண்டத்துப் பெருமாளைப் பாடியுள்ளவர் – பிள்ளை பெருமாள்

    • நம்மாழ்வார் பிறந்த இடம் – திருக்குருகூர். இவ்வூர் தற்பொழுது ஆழ்வார்திருநகரி என்று அழைக்கப்படுகிறது.

    • திருப்புகழ் பாடியவர் – அருணகிரிநாதர்

    • கழுகுமலையில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமானைப் பற்றிக் காவடிச்சிந்து பாடியவர் – அண்ணாமலையார்.

    • "வாடா என அழைத்து வாழ்வித்தால் அம்ம உனைக்
      கூடாதென் றார் தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே!" என்று பாடியவர் – அழகிய சொக்கநாதப் புலவர்.
    • "நுண் துளி தூங்கும் குற்றாலம்" என்று பாடியவர் – திருஞான சம்பந்தர்
    "உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
    கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனி அமையும்
    குற்றாலத் துறைகின்ற கூத்தாஉன் குரைகழற்கே
    கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே!
    "

    என்று பாடியவர் – மாணிக்கவாசகர்

    "கயிலை எனும் வடமலைக்குத் தெற்குமலை அம்மே!
    கனகமகா மேருவென நிற்கும்மலை அம்மே!
    துயிலும் அவர் விழிப்பாகி அகிலம் எங்கும் தேடும்
    துங்கர்திரி கூடமலை எங்கள்மலை அம்மே!"


    என்ற பாடல் இடம்பெற்ற நூல் குற்றாலக் குறவஞ்சி

    குற்றாலக் குறவஞ்சியை இயற்றியவர் – திரிகூடராசப்பக் கவிராயர்

    திருநெல்வேலிச் சீமை என்று குறிப்பிடப்படுவது இன்றைய திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் இணைந்த பகுதியாகும்.

    டி.கே.சிதம்பரனார் பற்றியக் குறிப்புகள்:

    • டி.கே.சி என அழைக்கப்படும் டி.கே.சிதம்பரனார் வழக்கறிஞர் தொழில் செய்தவர்.

    • தமிழ் எழுத்தாளராகவும் திறனாய்வளராகவும் புகழ் பெற்றார்.

    • இராசிகமணி என சிறப்பிக்கப்படார்.

    • இவர் தமது வீட்டில் வட்டத்தொட்டி என்னும் பெயரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தார்.

    • இதய ஒலி என்னும் நூலை எழுதியுள்ளார்.

    டி.கே.சி யின் பட்டப்பெயர்கள்:

    • கடித இலக்கியத்தின் முன்னோடி

    • தமிழிசைக் காவலர்

    • வளர்தமிழ் ஆர்வலர்

    • குற்றால முனிவர்

    இலக்கணம்

    அணி இலக்கணம்

    • அணி என்பதற்கு அழகு என்பது பொருள்.

    • ஒரு செய்யுளைச் சொல்லாலும், பொருளாலும் அழகு பெறச் செய்தலை அணி என்பர்.

    உவமை அணி:

    மயில் போல ஆடினாள்.

    மீன்போன்ற கண்.


    இத்தொடர்களைப் படியுங்கள். இத்தொடர்களில் நடனம் ஆடும் பெண்ணோடு மயிலையும், கண்ணுடன் மீனையும் ஒப்பிட்டுள்ளனர்.

    இவ்வாறு ஒப்பிட்டுக் கூறப்படும் பொருளை(மயில், கண்) உவமை அல்லது உவமானம் என்பர். உவமையால் விளக்கப்படும் பொருளை உவமேயம் என்பர். இத்தொடர்களில் வந்துள்ள"போல", "போன்ற" என்பவை உவம உருபுகளாகும்.

    "அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
    இகழ்வார்ப் பொறுத்தல் தலை"

    பூமி தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக் கொள்வது போல நாம் நம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பது இக்குறளின் பொருள்.

    இதில் பூமி தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக் கொள்ளுதல் என்பது உவமை. நாம் நம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பது ஒப்பிடப்படும் பொருள் (உவமேயம்). "போல" என்பத உவம உருபு.

    ஒரு பாடலில் உவமையும், உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது உவமை அணி எனப்படும். போல, புரைய, அன்ன, இன்ன, அற்று, இற்று, மான, கடுப்ப, ஒப்ப, உறழ போன்றவை உவம உருபுகளாக வரும்.

    எடுத்துக்காட்டு உவமையணி:

    "தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
    கற்றனைத்து ஊறும் அறிவு"


    மணற்கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும். மனிதர்கள் கற்கும் அளவிற்கு ஏற்ப அறிவு பெருகும் என்பதே இக்குறளின் கருத்தாகும்.

    இதில் தொட்டனைத்து ஊறும் மணற்கேணி என்பது உவமை.
    மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு என்பது உவமேயம்.

    இடையில் “அதுபோல்” என்னும் உவமஉருபு மறைந்து வந்துள்ளது.

    இவ்வாறு உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அஃது எடுத்துக்காட்டு உவமைஅணி எனப்படும்.

    இல்பொருள் உவமையணி:

    • மாலை வெயிலில் மழைத்தூறல் பொன்மழை பொழிந்தது போல் தோன்றியது.

    • காளை கொம்பு முளைத்த குதிரை போலப் பாய்ந்து வந்தது.

    • இத்தொடர்களில் "பொன்மழை பொழிந்தது போல்", "கொம்பு முளைத்த குதிரைபோல" என்னும் உவமைகள் வந்துள்ளன.

    • உலகில் பொன்மழையாகப் பொழிவதும் இல்லை. கொம்பு முளைத்த குதிரையும் இல்லை. இவ்வாறு உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவதை இல்பொருள் உவமை அணி என்பர்.

    பாடம் 8: ஒப்புரவு ஒழுகு

    புதுமை விளக்கு

    "வையம் தகளியா வார்கடலே நெய்யாக
    வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
    சுடர்ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
    இடர்ஆழி நீங்குகவே என்று"


    என்று பாடியவர் – பொய்கையாழ்வார்

    பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருவெஃகா என்னும் ஊரில் பிறந்தவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதி இவர் பாடியதாகும்.

    பாடலின் பொருள்:

    பூமியை அகல்விளக்காகவும், ஒலிக்கின்ற கடலை நெய்யாகவும், வெப்பக்கதிர் வீசும் கதிரவனைச் சுடராகவும் கொண்டவன் திருமால். சிவந்த ஒளிவீசும் சக்கரத்தை உடைய அவனது திருவடிகளுக்கு என் துன்பக்கடல் நீங்க வேண்டிப் பாடலால் மாலை சூட்டினேன்.

    சொல்லும் பொருளும்:

    • வையம் – உலகம்

    • வெய்ய – வெப்பக் கதிர்வீசும்

    • சுடர் அழியான் – ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்

    • இடர்ஆழி – துன்பக்கடல்

    • சொல் மாலை – பாமாலை
    "அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
    இன்புரு சிந்தை இடுதிரியா – நன்புஉருகி
    ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
    ஞானத்தமிழ் புரிந்த நான்"


    என்று பாடியவர் – பூதத்தாழ்வார்

    பூதத்தாழ்வார் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பிறந்தவர். இவர் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியை இயற்றியுள்ளார்.

    பாடலின் பொருள்:

    ஞானத்தமிழ் பயின்ற நான் அன்பையே அகல்விளக்காகவும், ஆர்வத்தையே நெய்யாகவும், இனிமையால் உருகும் மனத்தையே இடுகின்ற திரியாகவும் கொண்டு, ஞான ஒளியாகிய சுடர் விளக்கை மனம் உருக திருமாலுக்கு ஏற்றினேன்.

    சொல்லும் பொருளும்:

    • தகளி – அகல்விளக்கு

    • ஞானம் – அறிவு

    • நாரணன் – திருமால்
  • இடர் என்பதன் பொருள் – துன்பம்

  • ஞானச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – ஞானம் + சுடர்

  • இன்பு + உருகு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – இன்புருகு

  • திருமாலைப் போற்றிப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். அவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் ஆகும். இதனைத் தொகுத்தவர் நாதமுனி ஆவார்.

    பன்னிரு ஆழ்வார்களில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும் முதலாழ்வார்கள் என்பர்.

    ஒரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவதை அந்தாதி என்பர். (ஆந்தம் – முடிவு, ஆதி – தொடக்கம்)

    இவ்வாறு அந்தாதியாக அமையும் பாடல்களைக் கொண்டு அமைவது அந்தாதி என்னும் சிற்றிலக்கிய வகையாகும்.

    அறம் என்னும் கதிர்

    "இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக
    வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி
    அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர்
    பைங்கூழ் சிறுகாலைச் செய்"


    என்று பாடியவர் – முனைப்படியார்.

    இப்பாடல் இடபெற்ற நூல் – அறநெறிச்சாரம்.

    பாடலின் பொருள்:

    இனிய சொல்லையே விளைநிலமாகக் கொள்ள வேண்டும்.அதில் ஈகை என்னும் பண்பை விதையாக விதைக்க வேண்டும்.வன்சொல் என்னும் களையை நீக்க வேண்டும். உண்மை பேசுதல் என்னும் எருவினை இட வேண்டும்.அன்பாகிய நீரைப் பாய்ச்ச வேண்டும்.அப்போதுதான் கதிரைப் பயனாகப் பெற முடியும். இளம் வயதிலேயே இச்செயல்களைச் செய்ய வேண்டும்.

    சொல்லும் பொருளும்:

    • வித்து – விதை

    • ஈன – பெற

    • நிலன் – நிலம்

    • களை – வேண்டாத செடி

    • பைங்கூழ் – பசுமையான பயிர்

    • வன்சொல் – கடுஞ்சொல்

    நூற்குறிப்பு:

    • முனைப்பாடியார் திருமுனைப்பாடி என்னும் என்னும் ஊரைச் சேர்ந்தவர்.

    • இவரது காலம் 13 ஆம் நூற்றாண்டு.

    • இவர் இயற்றிய அறநெறிச்சாரம் 225 பாடல்களைக் கொண்டது.

    • அறநெறிகளைத் தொகுத்துக் கூறுவதால் இந்நூல் அறநெறிச்சாரம் எனப் பெயர் பெற்றது.
  • இன்சொல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – இனிமை + சொல்

  • அறம் + கதிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – அறக்கதிர்

  • இளமை என்னும் சொல்லின் எதிர்ச்சொல் – முதுமை

  • ஒப்புரவு நெறி

  • "ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவும்" என்னும் பொதுவுடமை நெறியே திருவள்ளுவரின் வாழும் நெறி.

  • "உலகம் உண்ண உண். உடுத்த உடுப்பாய்" என்று பாடியவர் – பாவேந்தர் பாரதிதாசன்

  • வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை மருந்து என்றும் கூறுவது தமிழர் மரபு.

  • "செல்வத்துப் பயனே ஈதல்
    துய்ப்பேம் எனினே தப்புந பலவே" என்ற அடிகள் இடம்பெற்ற நூல் – புறநானூறு.

  • "ஊருணி நீர்நிறைந்து அற்றே உலகவாம்
    பேரறி வாளன் திரு"

  • உலகினர் விரும்புமாறு உதவி செய்து வாழ்பவரது செல்வமானது ஊருணியில் நிரம்பிய நீர்போலப் பலருக்கும் பயன்படும்.

  • "பயன்மரம் உள்ளூர்ப் பழுத்துஅற்றல் செல்வம்
    நயனுடை யான்கண் படின்"

  • நற்பண்பு உடையவரிடம் செல்வம் சேர்வது ஊருக்குள் பழமரத்தில் பழங்கள் பழுத்திருப்பதைப் போன்றது.
  • குன்றக்குடி அடிகளார் பற்றியக் குறிப்புகள்:

    • மக்கள் பணியையே இறைப் பணியாக எண்ணித்தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

    • குன்றக்குடி திருமடத்தின் தலைவராக விளங்கிய இவர் தம் பேச்சாலும் எழுத்தாலும் இறைத்தொண்டும் சமூகத் தொண்டும் இலக்கியத் தொண்டும் ஆற்றியவர்.

    • திருக்குறள் நெறியைப் பரப்புவதை தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர்.

    குன்றக்குடி அடிகளார் இயற்றிய நூல்கள்:

    • நாயன்மார் அடிச்சுவட்டில்

    • குறட்செல்வம்

    • ஆலயங்கள் சமுதாய மையங்கள்

    குன்றக்குடி அடிகளார் நடத்திய இதழ்கள்:

    • அருளோசை

    • அறிக அறிவியல்

    உண்மை ஒளி

    • ஜென் என்னும் ஜப்பானிய மொழிச் சொல்லுக்கு தியானம் செய் என்பது பொருள்.

    • புத்த மதத்தைச் சார்ந்த துறவியரில் ஒரு பிரிவினரே ஜென் சிந்தனையாளர்கள். இவர்கள் பெரும்பாலும் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்தனர்.

    இலக்கணம்

    அணி இலக்கணம்

    அணி என்பதற்கு அழகு என்பது பொருள்.

    உருவக அணி:

    • ஒரு பொருளை விளக்க மற்றொரு பொருளை உவமையாகக் கூறுவது உவமை அணி எனப்படும்.

    • உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணியாகும். இதில் உவமிக்கப்படும் பொருள் முன்னும் உவமை பின்னுமாக அமையும்.

    • "தேன் போன்ற தமிழ்" என்று கூறுவது உவமைஆகும். தமிழாகிய தேன் என்னும் பொருளில் "தமிழ்த்தேன்" என்று கூறுவது உருவகம் ஆகும். வெள்ளம் போன்ற இன்பத்தை "இன்பவெள்ளம்" என்று கூறுவதும் கடல் போன்ற துன்பத்தைத் "துன்பக்கடல்" என்று கூறுவதும் உருவகம் ஆகும்.
    வையம் தகளியா வார்கடலேநெய்யாக
    வெய்யகதிரோன் விளக்காகச் – செய்ய
    சுடர்ஆழியான் அடிக்கேசூட்டினேன் சொல்மாலை
    இடர்ஆழி நீங்குகவே என்று

    இப்பாடலில் பூமி அகல்விளக்காகவும், கடல் நெய்யாகவும், கதிரவன் சுடராகவும் உருவகப்படுத்தப்பட்டு உள்ளன. எனவே, இப்பாடல் உருவக அணி அமைந்ததாகும்.

    ஏகதேச உருவக அணி:

  • அறிவு என்னும் விளக்கைக் கொண்டு அறியாமையை நீக்க வேண்டும்.

  • இத்தொடரில் அறிவு விளக்காக உருவகப்படுத்தப்பட்டு உள்ளது. அறியாமை இருளாக உருவகப்படுத்தப்படவில்லை.

  • இவ்வாறு கூறப்படும் இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி ஆகும். (ஏகதேசம் – ஒரு பகுதி)

  • "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
    கருமமே கட்டளைக் கல்.
    " (திருக்குறள்)

    விளக்கம்:

  • வள்ளுவர் மக்களின் செயல்களைப் பொன்னின் தரத்தை அறிய உதவும் உரைகல்லாக உருவகம் செய்துவிட்டு, மக்களது உயர்வையும் தாழ்வையும் பொன்னாக உருவகம் செய்யவில்லை. எனவே இக்குறளில் இடம்பெற்றிருப்பது ஏகதேச உருவக அணியாகும்.

  • ஏதேனும் ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவப்படுவது வினாவாகும். வினா கேட்கப் பயன்படுத்தும் சொற்கள் வினாச்சொற்கள் எனப்படும்.

  • "எது, என்ன, எங்கு, எப்படி, எத்தனை, எப்பொழுது, எவற்றை, எதற்கு, ஏன், யார், யாது, யாவை" போன்றன வினாச்சொற்கள் ஆகும்.

  • திருக்குறள்

    "வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
    யானையால் யானையாத் தற்று."

    பொருள்:

    ஒரு யானையைக் கொண்டு மற்றொரு யானையைப் பிடிப்பர்.அது போல ஒரு செயலைச் செய்யும் போதே அச்செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல் வேண்டும்.

    இக்குறட்பாவில் உவமை அணி பயின்று வந்துள்ளது.

  • மக்கள் அனைவரும் பிறப்பால் ஒத்த இயல்புடையவர்கள் என்று வள்ளுவர் கூறுகிறார்.

  • நாடென்ப என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – நாடு + என்ப

  • கண் + இல்லது என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – கண்ணில்லது.

  • பாடம் 9: மானுடம் வெல்லும்

    மலைப்பொழிவு

    "சாந்தம் உடையோர் பேற்பெற்றோர் எனத்
    தத்துவமும் சொன்னார் – இந்தத்
    தாரணி முழுவதும் அவர்களுக்கு உரியது
    தலைவர்கள் அவர் என்றார்!

    மாந்தரின் வாழ்வில் தேவைப் படுவது
    சாந்தம் தான்என்றார் – அது
    மண்ணையும் ஆளும் விண்ணையும் ஆளும்
    மகத்துவம் பார்என்றார்!

    சாதிகளாலும் பேதங்களாலும்
    தள்ளாடும் உலகம் – அது
    தர்மம் ஒன்றை நம்பியே பிறகே
    அடங்கிவிடும் கலகம்!

    ஓதும் பொருளாதாரம் தனினும்
    உன்னத அறம் வேண்டும் – புவி
    உயர்வும் தாழ்வும் இல்லா தான
    வாழ்வினைப் பெற வேண்டும்

    இரக்கம் உடையோர் பேறுபெற்றோர் என
    இயேசுபிரான் சொன்னார் – அவர்
    இரக்கம் காட்டி இரக்கத்தைப் பெறுவார்
    இதுதான் பரிசு என்றார்

    வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால்
    வாழ்க்கை பாலைவனம் – அவர்
    தூய மனத்தில் வாழ நினைத்தால்
    எல்லாம் சோலைவனம்!

    தமையும் வாட்டிப் பிறரையும் வாட்டும்
    சண்டை சச்சரவு – தினம்
    தன்னோடு என்றும் பிறர்நாடு என்றும்
    பேசும் பொய்யுறவு!

    இமைக்கும் போதில் ஆயிரம் போட்டி
    எத்தனை வீண்கனவு – தினம்
    இவை இல்லாது அமைதிகள் செய்தால்
    இதயம் மலையளவு!"


    மேற்கண்ட கவிதையினை எழுதியவர் – கண்ணதாசன்.

    இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் – இயேசு காவியம்

    பாடலின் பொருள்:

    (தம் சீடர்களுக்கு அறிவுரை கூற எண்ணிய இயேசுநாதர் ஒரு குன்றின் மீது ஏறி நின்று பேசத் தொடங்கினார்)

  • சாந்தம் என்னும் அமைதியான பண்பு கொண்டவர்கள் பேறு பெற்றவர்கள். இந்த உலகம் முழுவதும் அவர்களுக்கே உரியது. அவர்களே தலைவர்கள் ஆவர் என்ற உண்மையை இயேசுநாதர் கூறினார்.மனித வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை. அது மண்ணையும் விண்ணையும் ஆட்சி செய்யும் பெருமையுடையது என்றார்.

  • இவ்வுலகம் சாதிகளாலும் கருத்து வேறுபாடுகளாலும் நிலைதடுமாறுகிறது.அறம் என்கிற ஒன்றனை நம்பிய பிறகு சண்டைகள் நீங்கி உலகம் அமைதியாகி விடும். பொருள் ஈட்டுவதிலும் அறவழியைப் பின்பற்ற வேண்டும்.இவ்வுலகம் ஏற்றத்தாழ்வு இல்லா வாழ்வைப் பெற வேண்டும்.

  • இரக்கம் உடையோரே பேறுபெற்றவர் ஆவர்.அவர்கள் பிற உயிர்களின் மீது இரக்கம் காட்டி இறைவனின் இரக்கத்தைப் பெறுவர்.

  • இதுதான் அவர்களுக்கான பரிசு.மனிதன் ஆசையில் விழுந்துவிட்டால் அவனது வாழ்வு பாலைவனம் போல் பயனற்றதாகி விடும்.அவன் நல்ல உள்ளத்தோடு வாழ்ந்தால் அவன் வாழ்க்கை மலர்ச்சோலையாக மாறிவிடும்.

  • மனிதர்கள் சண்டை சச்சரவுகளால் தாமும் துன்புற்றுப் பிறரையும் துன்புறுத்துகின்றனர்.மேலும் அவர்கள் தன்னோடு என்றும்,பிறர்நாடு என்றும் பேசி உண்மையில்லா உறவுகளாக வாழ்கின்றனர்.

  • கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நடக்கும் ஆயிரம் போட்டிகளால் பயனற்ற கனவுகள் தாம் தோன்றுகின்றன. இவை இல்லாமல் அமைதியாக வாழ்ந்தால் இதயம் மலையளவு உயர்ந்ததாக மாறும்.
  • சொல்லும் பொருளும்:

    • சாந்தம் – அமைதி

    • மகத்துவம் – சிறப்பு

    • பேதங்கள் – வேறுபாடுகள்

    • தாரணி – உலகம்

    • தத்துவம் – உண்மை

    • இரக்கம் – கருணை

    கண்ணதாசன் பற்றியக் குறிப்புகள்:

    • இயற்பெயர் – முத்தையா

    • பிறந்த ஆண்டு – 1927

    • பிறந்த இடம் – சிறுகூடல்பட்டி

    • பெற்றோர் – சாத்தப்பன் – விசாலாட்சி

    • சிறப்பு – தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்துள்ளார்.

    • இவர் இயற்றிய நூல்கள் – கள்ளக்குடி மகாகாவியம், இயேசு காவியம்
  • மலையளவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – மலை + அளவு

  • தன்னாடு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – தன் + நாடு

  • இவை + இல்லாது என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – இவையில்லாது.

  • தன்னை அறிதல்

    "அன்றைக்குத்தான் அம்மா காக்காவிற்கு
    அது குயில் குஞ்சு என்று தெரிந்தது
    தெரிந்த பிறகு
    இனிமேல் நாம் சேர்ந்து வாழ முடியாது.
    போய்விடு என்றது.

    பாவம் குயில் குஞ்சு!
    அது எங்கேப் போகும்?
    அதுக்கு என்ன தெரியும்?
    அது எப்படி வாழும்?

    குயில் குஞ்சும்
    எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தது
    அம்ம காக்கை கேட்கவில்லை
    கிளம்பிப் போகச் சொல்லி விட்டது

    குயில் குஞ்சால் அம்மா காக்கையைப்
    பிரியமுடியவில்லை
    அதுவும் அந்த மரத்திலேயே
    வாழ ஆரம்பித்தது

    அம்மா காக்கையை போல "கா" என்று
    அழைக்க முயற்சி செய்தது
    ஆனால் அதற்குச் சரியாக வரவில்லை

    அதற்குக் கூடு கட்டத் தெரியாது
    பாவம் சிறிய பறவைதானே!
    கூடு கட்ட அதற்கு யாரும்
    சொல்லித் தரவும் இல்லை
    அம்மா அப்பா இல்லை
    தோழர்களும் இல்லை

    குளிரில் நடுங்கியது
    மழையில் ஒடுங்கியது
    வெயிலில் காய்ந்தது
    அதற்குப் பசித்தது
    தானே இரை தேடத் தொடங்கியது

    வாழ்க்கை எப்படியும்
    அதை வாழப் பழக்கிவிட்டது

    ஒரு விடியலில் குயில் குஞ்சு
    "கூ" என்று கூவியது
    அந்து தானொரு
    குயில் என்று கண்டு கொண்டது."


    மேற்கண்ட கவிதையை எழுதியவர் – சே.பிருந்தா.

    செ.பிருந்தா புகழ்பெற்ற பெண் கவிஞர்களுள் ஒருவர்.

    கவிதையின் உட்பொருள்:

    • குயில் ஒன்று காக்கையின் கூட்டில் முட்டையிடுகிறது.முட்டையிலிருந்து வெளிவந்த குயில்குஞ்சு தன்னைக் காக்கைக் குஞ்சாக எண்ணிக் காக்கையைப் போலவே கரைய முயல்கிறது.

    • தனியே சென்று வாழ அஞ்சுகிறது.தான் குயில் என்பதையும் தன் குரல் இனிமையானது என்பதனையும் உணர்ந்த பிறகு தன்னம்பிக்கையுடன் வாழத் தொடங்குகிறது.

    • நாமும் நமது ஆற்றலை உணர்ந்து கொண்டால் வாழ்வில் சாதனைகளைப் புரியலாம் என்பது இக்கவிதையின் உட்பொருள் ஆகும்.

    செ.பிருந்தா இயற்றிய நூல்கள்:

    • மழை பற்றிய பகிர்தல்கள்

    • வீடு முழுக்க வானம்

    • மகளுக்குச் சொன்ன கதை

    • கூடு கட்டத் தெரியாத பறவை – குயில்

    கண்ணியமிகு தலைவர்

    • கண்ணியமிகு என்னும் அடைமொழியால் குறிப்பிடப்படுபவர் – காயிதே மில்லத்

    • காயிதே மில்லத்தின் இயற்பெயர் – முகம்மது இசுமாயில்

    • காயிதே மில்லத் என்னும் சொல்லுக்கு சமுதாய வழிகாட்டி என்பது பொருள்.

    • "மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன்" என்று வெளிப்படையாக அறிவித்தவர் – காயிதே மில்லத்

    • "பழமையான மொழிகளிலே ஒன்றைத்தான் ஆட்சிமொழி ஆக்க வேண்டுமென்றால், அது தமிழ்மொழிதான் என்று நான் உறுதியாகச் சொல்வேன். இன்னமும் விரிவாகச் சொல்ல வேண்டுமென்றால் திராவிட மொழிகள் தாம் இந்த முதன்முதலாகப் பேசப்பட்ட மொழிகள். அவற்றுள் மிகவும் இலக்கியச் செறிவு கொண்ட தமிழ்மொழிதான் மிகப் பழமையான மொழி. எனவே, தமிழ்மொழியை நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்" என்று கூறியவர் – காயிதே மில்லத்.

    • திருச்சியில் ஜமால் முகம்மது கல்லூரி,கேரளாவில் ஃபரூக் கல்லூரி ஆகியவற்றை தொடங்க காரணமாக இருந்தவர் – காயிதே மில்லத்

    • "தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார்" என்று புகழ்ந்து கூறியவர் – அறிஞர் அண்ணா

    • "இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது.அவர் நல்ல உத்தமமான மனிதர்" காயிதே மில்லைத்தைப் பற்றி புகழ்ந்து கூறியவர் – தந்தை பெரியார்

    • காயிதே மில்லத் என்னும் அரபுச் சொல்லுக்கு சமுதாய வழிகாட்டி என்பது பொருள்.

    • விதலைப் போராட்டத்தின் போது காயிதே மில்லத் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார்.

    • காயிதே மில்லத் தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம் – நாடாளுமன்றம்.
  • எதிரொலித்தது என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – எதிர் + ஒலித்தது.

  • முதுமை + மொழி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – முதுமொழி.

  • பயணம்

  • பாவண்ணன் சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல்வேறு வகையான இலக்கிய வடிவங்களிலும் எழுதி வருகிறார்.

  • கன்னட மொழியிலிருந்து பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
  • பாவண்ணன் இயற்றிய நூல்கள்:

    • வேர்கள் தொலைவில் இருக்கின்றன

    • நேற்று வாழ்ந்தவர்கள்

    • கடலோர வீடு

    • பாய்மரக்கப்பல்

    • மீசைக்கார பூனை

    • பிரயாணம்

    இலக்கணம்

    ஆகுபெயர்

    தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு.

    இத்தொடரில் வெள்ளை என்னும் சொல் வெண்மை என்னும் நிறப் பொருளைத் தருகிறது. இஃது இயல்பான பெயர்ச்சொல் ஆகும்.

    வீட்டுக்கு வெள்ளை அடித்தான்.

    இத்தொடரில் வெள்ளை என்பது வெண்மை நிறத்தைக் குறிக்காமல் வெண்மை நிறமுடைய சுண்ணாம்பைக் குறிக்கிறது. இவ்வாறு ஒன்றன் பெயர் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும்.

    பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் ஆகிய ஆறு வகையான பெயர்ச்சொற்களிலும் ஆகுபெயர்கள் உண்டு.

    பொருளாகுபெயர்:

    மல்லிகை சூடினாள்.

    மல்லிகை என்னும் ஒரு முழுப்பொருளின் பெயர் அதன் ஓர் உறுப்பாகிய மலரைக் குறிக்கிறது. இவ்வாறு பொருளின் பெயர் அதன் சினையாகிய உறுப்புக்கு ஆகிவருவது பொருளாகு பெயர் எனப்படும். இதனை முதலாகு பெயர் எனவும் கூறுவர்.

    இடவாகு பெயர்:

    சடுகுடு போட்டியில் தமிழ்நாடு வெற்றி பெற்றது.

    தமிழ்நாடு என்னும் பெயர் அவ்விடத்தைச் சேர்ந்த விளையாட்டு அணியைக் குறிப்பதால் இஃது இடவாகு பெயர் ஆகும்.

    காலவாகு பெயர்:

    திசம்பர் சூடினாள்.

    இத்தொடரில் திசம்பர் என்னும் காலப்பெயர் அக்காலத்தில் மலரும் பூவைக் குறிப்பதால், இது காலவாகு பெயர் ஆயிற்று.

    சினையாகு பெயர்:

    தலைக்கு ஒரு பழம் கொடு.

    இத்தொடருக்கு ஆளுக்கு ஒரு பழம் கொடு என்பது பொருளாகும். இவ்வாறு சினையின்(உறுப்பின்) பெயர் முதலாகிய பொருளுக்கு ஆகி வருவது சினையாகு பெயர் எனப்படும்.

    பண்பாகுபெயர்:

    இனிப்பு தின்றான்.

    இத்தொடரில் இனிப்பு என்னும் பண்புப்பெயர் தின்பண்டத்தைக் குறிப்பதால் இது பண்பாகுபெயர் ஆயிற்று.

    தொழிலாகு பெயர்:

    பொங்கல் உண்டான்.

    இத்தொடரில் பொங்கல் (பொங்குதல்) என்னும் தொழிற்பெயர் அத்தொழிலால் உருவான உணவினைக் குறிப்பதால் இது தொழிலாகு பெயர் ஆகும்.

    இரட்டைக்கிளவி:

    தங்கை விறுவிறுவென நடந்து சென்று தோட்டத்தில் மலர்ந்த மலர்களைக் கலகலவெனச் சிரித்தபடியே மளமளவெனக் கொய்யத் தொடங்கினாள்.

    இத்தொடரிலுள்ள விறுவிறு, கலகல, மளமள ஆகிய சொற்களைக் கவனியுங்கள். இவை ஒவ்வொன்றிலும் அசைச்சொற்கள் இரண்டிரண்டாக இணைந்து வந்துள்ளன. அவற்றைப் பிரித்துப்பார்த்தால் பொருள் தரவில்லை. இவ்வாறு இரட்டையாக இணைந்து வந்து, பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்களை இரட்டைக்கிளவி என்பர்.

    அடுக்குத்தொடர்:

    சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அமுதன் திடீரென, பாம்பு பாம்பு பாம்பு என்று கத்தினான். எங்கே எங்கே? என்று கேட்டபடியே மற்ற சிறுவர்கள் அவனருகே ஓடிவந்தனர். "இல்லைஇல்லை. சும்மாதான் சொன்னேன்" என்று சொல்லிச் சிரித்தபடியே ஓடினான் அமுதன். "அவனைப்பிடி பிடி பிடி பிடி" என்று கத்திக்கொண்டே மற்றவர்கள் துரத்தினார்கள்.

    இப்பகுதியில் சில சொற்கள் இரண்டு, மூன்று, நான்கு முறை இடம்பெற்றுள்ளன. இவ்வாறு அச்சம், விரைவு, சினம் போன்ற காரணங்களால் ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தொடர்ந்து வருவதை அடுக்குத்தொடர் என்பர். அடுக்குத் தொடரில் பலமுறை இடம்பெறும் ஒவ்வொரு சொல்லும் பொருளுடையது.

    அடுக்குத்தொடர் இரட்டைக்கிளவி – ஒப்பீடு:

    • அடுக்குத்தொடரில் உள்ள சொற்களைத் தனித்தனியே பிரித்துப் பார்த்தாலும் அவற்றுக்குப் பொருள் உண்டு.

    • இரட்டைக் கிளவியைப் பிரித்தால் அது பொருள் தருவதில்லை.

    • அடுக்குத் தொடரில் ஒரே சொல் இரண்டு முதல் நான்கு முறை வரை வரும். இரட்டைக்கிளவியில் ஒரு சொல் இரண்டு முறை மட்டுமே வரும்.

    • அடுக்குத் தொடரில் சொற்கள் தனித்தனியே நிற்கும். இரட்டைக் கிளவியின் சொற்கள் இணைந்தே நிற்கும்.

    • அடுக்குத் தொடர் விரைவு, வெகுளி, உவகை, அச்சம், அவலம் ஆகிய பொருள்கள் காரணமாக வரும்.

    • இரட்டைக்கிளவி வினைக்கு அடைமொழியாகக் குறிப்புப் பொருளில் வரும்.
  • பொருளின் பெயர் அதன் உறுப்பு ஆகி வருவது – சினையாகு பெயர்

  • இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது – தொழிலாகு பெயர்

  • மழை சடசடவெனப் பெய்தது. இத்தொடரில் அமைந்துள்ளது – இரட்டைக்கிளவி

  • அடுக்குத்தொடரில் ஒரே சொல் நான்கு முறை அடுக்கி வரும்.


  • Scroll to Top