10th Tamil book Read online mode

10 ஆம் வகுப்பு தமிழ்

பாடம் 1 – அமுத ஊற்று

அன்னை மொழியே

"அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!

செந்தமிழே! உள்ளுயிரே செப்பரிய நின்பெருமை
எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரைவிரிக்கும்?
முந்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும்
விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும்

உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல்மூளச்
செந்தா மரைத்தேனைக் குடித்துச் சிறகார்ந்த
அந்தும்பி பாடும் அதுபோல யாம்பாடி
முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே!"

என்று தமிழ் மொழியை போற்றியவர் – பாவலரேறு பெருஞ்சித்திரனார். இப்பாடல் இடம்பெற்ற நூல் – கனிச்சாறு

பாடலின் பொருள்:

  • அன்னை மொழியே! அழகாய் அமைந்த செழுந்தமிழே! பழமைக்குப் பழமையாய் தோன்றிய நறுங்கனியே! கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் நிலைத்து அரசாண்ட மண்ணுலகப் பேரரசே! பாண்டிய மன்னனின் மகளே! திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவளே! பத்துப்பாட்டே! எட்டுத்தொகையே! பதினெண் கீழ்கணக்கே! நிலைத்த சிலப்பதிகாரமே! அழகான மணிமேகலையே! பொங்கியெழும் நினைவுகளால் தலைபணிந்து வாழ்த்துகின்றோம்.

  • செழுமை மிக்க தமிழே! எமக்குயிரே! சொல்லுதற்கரிய நின் பெருமைதனை என்னுடைய தமிழ் நாக்கு எவ்வாறு விரித்துரைக்கும்? பழம்பெருமையும் தனக்கெனத் தனிச்சிறப்பும் இலக்கிய வளமும் கொண்ட தமிழே! வியக்கத்தக்க உன் நீண்ட நிலைத்த தன்மையும் வேற்று மொழியார் உன்னைப் பற்றி உரைத்த புகழுரையும் எமக்குள் பற்றுணர்வை எழுப்புகின்றன. எம் தனித்தமிழே! வண்டானது செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடுவது போன்று நாங்கள் உன்னைச் சுவைத்து உள்ளத்தில் கனல் மூள, உன் பெருமையை எங்கும் முழங்குகின்றோம்.

  • "சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன்
    சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்" என்று பாடியவர் – க.சச்சிதானந்தன்

    பாவலரேறு பெருஞ்சித்திரனார் பற்றியக் குறிப்புகள்:

    இவரது இயற்பெயர் – துரை.மாணிக்கம்

    பாவலரேறு பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள்:

    • தென்மொழி

    • தமிழ்ச்சிட்டு

    • தமிழ்நிலம்

    பாவலரேறு பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல்கள்:

    • உலகியல் நூறு

    • பாவியக்கொத்து

    • நூறாசிரியம்

    • கனிச்சாறு

    • எண்சுவை எண்பது

    • மகபுகுவஞ்சி

    • பள்ளிப்பறவைகள்

    எட்டுத்தொகை நூல்கள்:

    • நற்றிணை

    • குறுந்தொகை

    • ஐங்குறு நூறு

    • பதிற்றுப்பத்து

    • பரிபாடல்

    • கலித்தொகை

    • அகநானூறு

    • புறநானூறு

    தமிழ்ச்சொல் வளம்

  • "நாடும் மொழியும் நமதிரு கண்கள்" என்றவர் – பாரதியார்

  • "தமிழல்லாத திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது, தமிழிலுள்ள ஒருபொருட் பலசொல் வரிசைகள் அவற்றில் இல்லாக்குறை எந்தத் தமிழறிஞர்க்கும் மிகத்தெளிவாகத் தோன்றும். தமிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டுத் தமிழுக்கே சிறப்பாக உரியனவாகக் கருதப்படும் சொற்கள் மட்டுமன்றித் தெலுங்கு, கன்னடம் முதலிய பிற திராவிட மொழிகளுக்கு உரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில் உள" என்று கூறியவர் – கால்டுவெல் (திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில்)
  • ஒரு தாவரத்தின் அடிப்பகுதியை குறிப்பதற்கான தமிழ்ச்சொற்கள்:

    • தாள்: நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி

    • தண்டு: கீரை, வாழை முதலியவற்றின் அடி

    • கோல்: நெட்டி, மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி

    • தூறு: குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி

    • தட்டு அல்லது தட்டை: கம்பு, சோளம் முதலியவற்றின் அடி

    • கழி: கரும்பின் அடி

    • கழை: மூங்கிலின் அடி

    • அடி: புளி, வேம்பு முதலியவற்றின் அடி

    ஒரு தாவரத்தின் கிளைப்பிரிவுகளுக்கு வழங்கும் சொற்கள்:

    • கவை: அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை

    • கொம்பு அல்லது கொப்பு: கவையின் பிரிவு

    • கிளை: கொம்பின் பிரிவு

    • சினை: கிளையின் பிரிவு

    • போத்து: சினையின் பிரிவு

    • குச்சு: போத்தின் பிரிவு

    • இணுக்கு: குச்சியின் பிரிவு

    காய்ந்த தாவரத்தின் பகுதிகளுக்கு வழங்கும் சொற்கள்:

    • சுள்ளி: காய்ந்த குச்சு (குச்சி)

    • விறகு: காய்ந்த சிறுகிளை

    • வெங்கழி: காய்ந்த கழி

    • கட்டை: காய்ந்த கொம்பும் கவையும் அடியும்

    தாவரத்தின் இலை வகைகளைக் குறிக்கும் தமிழ் சொற்கள்:

    • இலை: புளி, வேம்பு முதலியவற்றின் இலை

    • தாள்: நெல், புல் முதலியவற்றின் இலை

    • தோகை: சோளம், கரும்பு முதலியவற்றின் இலை

    • ஓலை: தென்னை, பனை முதலியவற்றின் இலை

    • சண்டு: காய்ந்த தாளும் தோகையும்

    • சருகு: காய்ந்த இலை

    தாவரத்தின் நுனிப்பகுதியை வழங்கும் தமிழ்ச் சொற்கள்:

    • துளிர் அல்லது தளிர்: நெல், புல் முதலியவற்றின் கொழுந்து

    • முறி அல்லது கொழுந்து: புளி, வேம்பு முதலியவற்றின் கொழுந்து

    • குருத்து: சோளம், கரும்பு, தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து

    • கொழுந்தாடை: கரும்பின் நுனிப்பகுதி

    பூவின் நிலைகளைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள்:

    • அரும்பு: பூவின் தோற்றநிலை

    • போது: பூ விரியத் தொடங்கும் நிலை

    • மலர் (அலர்): பூவின் மலர்ந்த நிலை

    • வீ: மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலை

    • செம்மல்: பூ வாடின நிலை

    தாவரத்தின் பிஞ்சு வகைகளுக்கு வழங்கும் தமிழ்ச்சொற்கள்:

    • பூம்பிஞ்சு: பூவோடு கூடிய இளம்பிஞ்சு

    • பிஞ்சு: இளம் காய்

    • வடு: மாம்பிஞ்சு

    • மூசு: பலாப்பிஞ்சு

    • கவ்வை: எள்பிஞ்சு

    • குரும்பை: தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு

    • முட்டுக் குரும்பை: சிறு குரும்பை

    • இளநீர்: முற்றாத தேங்காய்

    • நுழாய்: இளம்பாக்கு

    • கருக்கல்: இளநெல்

    • கச்சல்: வாழைப்பிஞ்சு

    தாவரத்தின் குலை வகைகளைக் (காய்களையோ கனிகளையோ) குறிப்பதற்கான தமிழ்ச் சொற்கள்:

    • கொத்து: அவரை, துவரை முதலியவற்றின் குலை

    • குலை: கொடி முந்திரி போன்றவற்றின் குலை

    • தாறு: வாழைக் குலை

    • கதிர்: கேழ்வரகு, சோளம் முதலியவற்றின் கதிர்

    • அலகு அல்லது குரல்: நெல், தினை முதலியவற்றின் கதிர்

    • சீப்பு: வாழைத் தாற்றின் பகுதி

    தாவரத்தில் கெட்டுப்போன காய்களையும் கனிகளையும் வழங்கும் தமிழ்ச்சொற்கள்:

    • சூம்பல்: நுனியில் சுருங்கிய காய்

    • சிவியல்: சுருங்கிய பழம்

    • சொத்தை: புழுபூச்சி அரித்த காய் அல்லது கனி

    • வெம்பல்: சூட்டினால் பழுத்த பிஞ்சு

    • அளியல்: குளுகுளுத்த பழம்

    • அழுகல்: குளுகுளுத்து நாறிய பழம்

    • சொண்டு: பதராய்ப் போன மிளகாய்

    • கோட்டான் காய் அல்லது கூகைக்காய்: கோட்டான் உட்கார்ந்ததினால் கெட்டுப்போன காய்

    • தேரைக்காய்: தேரை அமர்ந்ததினால் கெட்டுப்போன காய்

    • அல்லிக்காய்: தேரை அமர்ந்ததினால் கெட்டுப்போன தேங்காய்

    • ஒல்லிக்காய்: தென்னையில் கெட்ட காய்

    பழங்களின் மேற்பகுதியை வழங்கும் தமிழ்ச்சொற்கள்:

    • தொலி: மிக மெல்லியது

    • தோல்: திண்ணமானது

    • தோடு: வன்மையானது

    • ஓடு: மிக வன்மையானது

    • குடுக்கை: சுரையின் ஓடு

    • மட்டை: தேங்காய் நெற்றின் மேற்பகுதி

    • உமி: நெல், கம்பு முதலியவற்றின் மூடி

    • கொம்மை: வரகு, கேழ்வரகு முதலியவற்றின் உமி

    தாவரங்களின் இளம்பருவத்திற்கான தமிழ்ச்சொற்கள்:

    • நாற்று: நெல், கத்தரி முதலியவற்றின் இளநிலை

    • கன்று: மா, புளி, வாழை முதலியவற்றின் இளநிலை

    • குருத்து: வாழையின் இளநிலை

    • பிள்ளை: தென்னையின் இளநிலை

    • குட்டி: விளாவின் இளநிலை

    • மடலி அல்லது வடலி: பனையின் இளநிலை

    • பைங்கூழ்: நெல், சோளம் முதலியவற்றின் பசும் பயிர்

  • கோதுமையை எடுத்துக்கொண்டால் அதில் சம்பாக்கோதுமை, குண்டுக்கோதுமை, வாற்கோதுமை முதலிய சிலவகைகளே உண்டு.

  • ஆனால் தமிழ்நாட்டு நெல்லிலோ செந்நெல், வெண்னெல், கார்நெல் என்றும் சம்பா, மட்டை, கார் என்றும் அவற்றில் சம்பாவில் மட்டும் ஆவிரம்பூச் சம்பா, ஆனைக்கொம்பன் சம்பா, குண்டுச் சம்பா, குதிரைவாலிச் சம்பா, சிறுமணிச் சம்பா, சீரகச் சம்பா முதலிய அறுபது உள்வகைகள் உள்ளன.

  • வரகு, குதிரைவாலி, காடைக்கண்ணி முதலிய சிறுகூலங்கள் தமிழ்நாட்டிலன்றி வேறெங்கும் விளைவதில்லை.
  • தமிழ்த்திரு.இரா.இளங்குமரனார் பற்றியக் குறிப்புகள்:

    • சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார்.

    • திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில் "திருவள்ளுவர் தவச்சாலை" ஒன்றை அமைத்திருப்பவர்.

    • பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

    • தமிழகம் முழுவதும் திருக்குறள் சொற்பொழிவுகளை வழங்கி வருபவர்.

    • தமிழ்வழித் திருமணங்களை நடத்தி வருபவர்.

  • விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக்கூடாது என்று எண்ணியவர். அதற்காக தமிழ்த்தென்றல் திரு.வி.க போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டார். இன்றளவும் அவ்வாறே எழுதித் தமிழுக்குத் தனிப்பெரும் புகழை நல்கி வருபவர்.
  • இவர் எழுதிய நூல்கள்:

    • இலக்கண வரலாறு

    • தமிழிசை இயக்கம்

    • தனித்தமிழ் இயக்கம்

    • பாவாணர் வரலாறு

    • குண்டலகேசி உரை

    • யாப்பருங்கலம் உரை

    • புறத்திரட்டு உரை

    • திருக்குறள் தமிழ் மரபுரை

    • காக்கைப் பாடினிய உரை

    • தேவநேயம்
  • "உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியாவே. மாநாட்டுக்குரிய முதல் மொழியும் தமிழே." என்றவர் – பன்மொழிப்புலவர் க.அப்பாத்துரையார்

  • பாவானர் தமிழ்ச்சொல்வளம் கட்டுரையில் வித்துவகை, வேர்வகை, அரித்தாள் வகை, காய்ந்த இலை வகை, இலைக்காம்பு வகை, பூமடல் வகை, அரும்பு வகை, பூக்காம்பு வகை, இதழ் வகை, காய்வகை, கனிவகை, உள்ளீட்டு வகை, உள்ளீட்டு வகை, தாவரக் கழிவு வகை, விதை வகை, விதைத் தோல் வகை, பதர் வகை, பயிர் வகை, கொடி வகை, மர வகை, கரும்பு வகை, காய்ந்த பயிர் வகை, வெட்டிய விறகுத்துண்டு வகை, மரப்பட்டை வகை, பயிர்ச்செரிவு வகை, நிலத்தின் தொகுப்பு வகை, செய் வகை, நில வகை, நன்செய் வகை, வேலி வகை, காட்டு வகை ஆகியவற்றில் சொல்வளங்களையும் விளக்கியுள்ளார்.
  • தேவநேயப் பாவாணர் பற்றியக் குறிப்புகள்:

    • மொழிஞாயிறு என்று அழைக்கப்படுகிறார்.

    • சொல்லாய்வுக் கட்டுரைகள் என்னும் நூலை எழுதியுள்ளார்.

    • தமிழ்ச்சொல் வளம் என்னும் கட்டுரையை எழுதியுள்ளார்.

    • பல்வேறு இலக்கணக் கட்டுரைகளையும் மொழியாராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதிய பாவாணர், தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர்.

    • செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர்.

    • உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்.
  • போர்ச்சுக்கீசு நாட்டின் தலைநகர் லிசுபனில் 1554 ல் கார்டிலா என்னும் நூல் முதன் முதலாகத் தமிழ் மொழியில் தான் மொழிபெயர்க்கப்பட்டது. இந்நூல் ரோமன் வடிவில் அச்சிடப்பட்டுள்ளது.

  • இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறியது தமிழ்தான்.
  • இரட்டுற மொழிதல்

    "முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்
    மெத்த வணிகலமும் மேவலால் – நித்தம்
    அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு
    இணைகிடந்த தேதமிழ் ஈண்டு"

    என்ற பாடல் இடம்பெற்ற நூல் – தனிப்பாடல் திரட்டு. இப்பாடலை இயற்றியவர் – சந்தக்கவிமணி தமிழழகனார்.

    பாடலின் பொருள்:

    தமிழ்:

    தமிழ், இயல் இசை நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது; முதல், இடை, கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது; ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது; சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப் புலவர்களால் காக்கப்பட்டது.

    கடல்:

    கடல், முத்தினையும் அமிழ்தினையும் தருகிறது; வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகளைத் தருகிறது; மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது; தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது.

    சொல்லும் பொருளும்:

    • துய்ப்பது – கற்பது, தருதல்

    • மேவலால் – பொருந்துதல், பெறுதல்

    இரட்டுற மொழிதல்:

  • ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுற மொழிதல் அணி எனப்படும். இதனைச் சிலேடை அணி என்றும் கூறுவர். செய்யுளிலும் உரைநடையிலும் மேடைப்பேச்சுகளிலும் சிலேடைகள் பயன்படுத்தப்படுகின்றன.

  • புலவர் பாடிய பாடல்களின் தொகுப்பு தனிப்பாடல் திரட்டு என்னும் நூலாக தொகுக்கப்பட்டுள்ளது.

  • சந்தக்கவிமணி என்று அழைக்கப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் சண்முகசுந்தரம். இவர் 12 சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.
  • உரைநடையின் அணிநலன்கள்:

  • "திருப்பரங்குன்றத்தின் அழகைப் பார்ப்பதற்கென்றே இயற்கை பதித்து வைத்த இரண்டு பெரிய பெரிய நிலைக்கண்ணாடிகளைப் போல வடபுறமும் தென்புறமும் நீர்நிறைந்த கண்மாய்கள்" என்று குறிஞ்சிமலர் என்னும் நூலில் நா.பார்த்தசாரதி உவமையைப் பயன்படுத்தியுள்ளார்.

  • "உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்" என்று எழுதியவர் – தண்டி

  • "களம்புகத் துடித்து நின்ற உனக்கு, வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது. உண்டு மகிழ்ந்தாய்; உன் புன்னகைத்தான் அதற்குச் சான்று" என்று எழுதியவர் – அறிஞர் அண்ணா

  • எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்தும்போது "இணைஒப்பு" எனப்படும்.

  • "ஊர் கூடிச் செக்குத் தள்ள முடியுமா? என்று கேட்கிறார்கள் ஊர் கூடின பிறகுதான் செக்குத் தள்ள வேண்டும் என்று காத்திருப்பவர்களின் காரியம் கைகூடாது. புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை" என்று "மழையும் புயலும்" என்னும் நூலில் வ.ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.

  • "ஞாயிறு, திங்கள், நெஞ்சம் போன்ற அஃறிணைப் பொருள்கள், சொல்லுந போலவும் சொல்லியாங்கு அமையும்"என்று குறிப்பிட்டவர் – தொல்காப்பியர்

  • "சோலையில் புகுவேன்; மரங்கள் கூப்பிடும்; விருந்து வைக்கும், ஆலமர நிழலில் அமர்வேன்; ஆல், என் விழுதைப் பார். அந்த அரசுக்கு இஃது உண்டா? என்னும். அரசு கண்ணிற்படும். யான் விழுதின்றி வானுற ஓங்கி நிற்கிறேன். என்னை மக்கள் சுற்றிச் செல்கிறார்கள், காண் என்னும் வேம்பு, என் நிழல் நலஞ்செய்யும். என் பூவின் குனங்களைச் சொல்கிறேன் வா என்னும். அத்தி, நாகை விளா, மா, வில்வம், முதலிய மரங்கள் விளியாமலிருக்குமோ? சிந்தனையில் அவைகளின் நுட்பங்கள் விளங்கும். மலை என்னை அடிக்கடி அழைக்கும். மலை மீது அமர்வேன்; ஓரிடத்தில் அமர்வேன்; மேலும் கீழும் பார்ப்பேன்; சுற்றுமுற்றும் பார்ப்பேன்; மனம் அமைதி எய்தும்" என்றவர் – திரு.வி.கல்யாண சுந்தரனார்

  • "தென்றல் அசைந்துவரும் தெந்தமிழ் நாட்டில் அமைந்த திருக்குற்றாலம். மலைவளம் படைத்த பழம்பதியாகும். அம்மலையிலே, கோங்கும் வேங்கையும் ஓங்கி வளரும்; குரவமும் முல்லையும் நறுமணக் கமழும்; கோலமாமயில் தோகை விரித்தாடும்! தேனுண்ட வண்டுகள் தமிழ்ப் பாட்டிசைக்கும்; இத்தகைய மலையினின்று விரைந்து வழிந்திறங்கும் வெள்ளருவி வட்டச் சுனையிலே வீழ்ந்து பொங்கும் பொழுது சிதறும் நீர்த் திவலைகள் பாலாவிபோற் பரந்தெழுந்து மஞ்சினொடு சேர்ந்து கொஞ்சிக் குலாவும்" என்று சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப்பிள்ளை "தமிழின்பம்" என்னும் நூலில் எழுதியுள்ளார்.

  • "வாழ்க்கை நடத்துவதற்குப் பொருள்கள் பல வேண்டும்; அரிசி, காய், கனி முதலியவை வேண்டும். உடை, வீடு முதலியவை வேண்டும். காசும், காகித நோட்டும் வேண்டும். இன்னும் பல வேண்டும். இவற்றை ஆளும் அறிவும் வேண்டும்" என்று மு.வரதராசனார் தம் "நாட்டுப்பற்று" என்னும் கட்டுரையில் எழுதியுள்ளார்.

  • எதிரும் புதிருமான முரண்படும் கருத்துக்களை அமைத்து எழுதுதலை எதிரிணை இசைவு என்கிறோம்.

  • "குடிசைகள் ஒருபக்கம்; கோபுரங்கள் மறுபக்கம்; பசித்த வயிறுகள் ஒரு பக்கம்; புளிச்சேப்பக்காரர்கள் மறுபக்கம்; மெலிந்த எலும்புக்கூடுகள் ஒருபக்கம்; பருத்த தொந்திகள் மறுபக்கம்; கேடுகெட்ட இந்தச் சமுதாயத்திற்கு என்றைக்கு விமோசனம்? தோழர்களே, சிந்தியுங்கள்!" என்றவர் – ப.ஜீவானந்தம்

  • "அவர் (பெரியார் ஈ.வெ.ரா) பேசாத நாள் உண்டோ? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத பழமை உண்டா? எதைக் கண்டு அவர் திகைத்தார்? எந்தம் புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது? …… எனவேதான், பெரியாருடைய பெரும்பணியை நான் ஒரு தனிமனிதனின் வரலாறு என்றல்ல ஒரு சகாப்தம் – ஒரு கால கட்டம் – ஒரு திருப்பம் – என்று கூறுகிறேன்" என்று பெரியாரைப் பற்றிக் கூறியவர் – அறிஞர் அண்ணா

  • "இந்தியாதான் என்னுடைய மோட்சம்; இந்தியாவின் நன்மைதான் என் நன்மை; இந்தியாதான் என் இளமையின் மெத்தை; என் யெளவனத்தின் நந்தவனம்; என் கிழக்காலத்தின் காசி" என்றவர் – பாரதியார்.
  • எழுத்தாளர் எழில்முதல்வன் பற்றியக் குறிப்புகள்:

    • இவரது இயற்பெயர் – மா.இராமலிங்கம்

    • "புதிய உரைநடை" என்னும் நூலை எழுதியுள்ளார்.

    • உரைநடையின் அணிநலன்கள் என்னும் கட்டுரையை எழுதியவர் – எழில் முதல்வன்

    • இவர் மாநிலக் கல்லூரியில் பயின்று அங்கேயே பேராசிரியர் பணியைத் தொடர்ந்தவர்.

    • குடந்தை அரசுக் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணிபுரிந்தார்.

    • இவருடைய "புதிய உரைநடை" என்னும் நூல் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றுள்ளது.

    இவருடைய நூல்கள்:

    • இனிக்கும் நினைவுகள்

    • எங்கெங்கு காணினும்

    • யாதுமாகி நின்றாய்

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள சிறுமலையைப் பற்றி,

    "வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும்
    மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கி
    தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்"

    என்று கூறும் நூல் – சிலப்பதிகாரம்

    இலக்கணம்

    எழுத்து, சொல்

    எழுத்து:

    முதலெழுத்துக்கள் எண்ணிக்கை – 30
    சார்பெழுத்துக்கள் 10 வகைப்படும்.
    1. உயிர்மெய்

    2. ஆய்தம்

    3. உயிரளபடை

    4. ஒற்றளபடை

    5. குற்றியலுகரம்

    6. குற்றியலிகரம்

    7. ஐகாரக்குறுக்கம்

    8. ஔகாரக்குறுக்கம்

    9. மகரக்குறுக்கம்

    10. ஆய்தக்குறுக்கம்
  • அளபடை என்பதற்கு நீண்டு ஒலித்தல் என்பது பொருள்.

  • பேச்சு வழக்கில் சொற்களை நீட்டி ஒலித்துப் பேசுவோம். அவ்வாறு பேசும்போது உணர்வுக்கும் இனிய ஓசைக்கும் அளபெடுத்தல் பயன்படுகிறது.

  • (எ.கா) தம்பீஇ

    உயிரளபடை:

    செய்யுளில் ஓசை குறையும்போது, அதனை நிறைவு செய்ய, மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கிற உயிர் நெட்டெழுத்துகள் ஏழும் தத்தம் அளவில் நீண்டு ஒலிக்கும். அதைக் குறிக்க நெட்டெழுத்துகளின் இனமான குற்றெழுத்துகள் அவற்றின் பின்னால் வரும். இவ்வாறு வருவது உயிரளபெடை எனப்படும்.

    உயிரளபெடை மூன்று வகைப்படும்

    செய்யுளிசை அளபடை:

    செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய, நெட்டெழுத்துகள் அளபெடுத்தலைச் செய்யுளிசை அளபெடை என்போம். இதனை இசைநிறை அளபடை என்றும் கூறுவர்.
    (எ.கா)
    ஓஒதல் வேண்டும் – மொழி முதல்
    உறாஅர்க்கு உறுநோய் – மொழியிடை
    நல்லபடாஅ பறை – மொழியிறுதி

    இன்னிசை அளபடை:

    செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும்.

    (எ.கா)
    கெடுப்பதூஉம் கெட்டார்க்குச்சார்வாய் மற்றாங்கே
    எடுப்பதூஉம் எல்லாம் மழை.

    சொல்லிசை அளபடை:

    செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச்சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது சொல்லிசை அளபெடை ஆகும்.

    (எ.கா)
    உரனசைஇ உள்ளம் துணையாகச்சென்றார்
    வரனசைஇ இன்னும் உளேன்.

    நசை – விருப்பம்; விரும்பி என்னும் பொருள் தருவதற்காக நசைஇ என அளபெடுத்தது. பெயர்ச்சொல், வினைஅடையாக மாறியது.

    ஒற்றளபடை :

    செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துகளான ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள் ஆகிய பத்தும், ஃ என்னும் ஆய்த எழுத்தும் அளபெடுப்பது ஒற்றளபடை ஆகும்.
    (எ.கா)
    எஃஃ கிலங்கிய கையராய் இன்னுயிர்
    வெஃஃ குவார்க்கில்லைவீடு.

    சொல்:

    ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துகள் சேர்ந்தோ பொருள் தரும் வகையில் அமைவது சொல் ஆகும். அது,

  • அ) இரு திணைகளையும் ஐந்து பால்களையும் குறிக்கும்.

  • ஆ) மூவகை இடங்களிலும் வரும்.

  • இ) உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் வரும்.

  • ஈ) வெளிப்படையாகவும் குறிப்பாகவும் விளங்கும்.
  • மொழி 3 வகைப்படும்

  • தனிமொழி

  • தொடர்மொழி

  • பொதுமொழி

  • "ஒருமொழி ஒருபொரு ளனவாம் தொடர்மொழி
    பலபொரு ளனபொது இருமையும் ஏற்பன"

    என்று கூறும் நூல் – நன்னூல்

    தனிமொழி:

    ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது தனிமொழி எனப்படும்.
    (எ.கா) கண், படி – பகாப்பதம்
    கண்னன், படித்தான் – பகுபதம்

    தொடர்மொழி:

    இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது தொடர்மொழி எனப்படும்

    (எ.கா) கண்ணன் வந்தான்
    மலர் வீட்டுக்குச் சென்றாள்

    பொதுமொழி:

  • ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து தனிமொழிக்கும் தொடர் மொழிக்கும் பொதுவாய் அமைவது பொதுமொழி எனப்படும்

  • (எ.கா) எட்டு – எட்டு என்ற எண்னைக் குறிக்கும்.
    வேங்கை – வேங்கை என்னும் மரத்தைக் குறிக்கும்.

  • இவையே எள் + து எனவும் வேம் + கை எனவும் தொடர்மொழிகளாகப் பிரிந்து நின்று எள்ளை உண், வேகின்ற கை எனவும் பொருள் தரும்.

  • இவை இருபொருள்களுக்கும் பொதுவாய் அமைவதால் பொது மொழியாகவும் இருக்கிறது.
  • தொழிற்பெயர்:

    ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது தொழிற்பெயர் எனப்படும்.

    எ.கா. ஈதல், நடத்தல்

    விகுதி பெற்ற தொழிற்பெயர்கள்:

    வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் விகுதி பெற்ற தொழிற்பெயர் ஆகும்.

  • வினையடி – நட

  • விகுதி – தல்

  • தொழிற்பெயர் – நடத்தல்


  • வினையடி – வாழ்

  • விகுதி – கை

  • தொழிற்பெயர் – வாழ்க்கை


  • வினையடி – ஆள்

  • விகுதி – அல்

  • தொழிற்பெயர் – ஆளல்

  • ஒரே வினையடி பல விகுதிகளையும் ஏற்கும்

    (எ.கா) நட என்பது வினையடி
    நடை, நடத்தை, நடத்தல்

    எதிர்மறைத் தொழிற்பெயர்:

    எதிர்மறைப் பொருளில் வருவது எதிர்மறைத் தொழிற்பெபயர் ஆகும்.

    (எ.கா) நடவாமை, கொல்லாமை

    முதனிலைத் தொழிற்பெயர்:

  • விகுதி பெறாமல் வினைப் பகுதியே தொழிற்பெயராதல் முதனிலைத் தொழிற்பெயராகும்.

  • எ.கா. தட்டு, உரை, அடி

  • இச்சொற்கள் முறையே தட்டுதல், உரைத்தல், அடித்தல் என்று பொருள்படும்போது முதனிலைத் தொழிற் பெயர்களாகின்றன.
  • முதனிலை திரிந்த தொழிற்பெயர்:

    இவை விகுதி பெறாமல் முதனிலை திரிந்து வரும் தொழிற்பெயர்களாகும்.

    (எ.கா)
  • தொழிற்பெயர் – கெடுதல்

  • முதனிலைத் தொழிற்பெயர் – கெடு

  • முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் – கேடு

  • தொழிற்பெயர் – சுடுதல்

  • முதனிலைத் தொழிற்பெயர் – சுடு

  • முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் – சூடு
  • வினையாலணையும் பெயர்:

  • ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் எனப்படும்.

  • அது தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்று இடங்களிலும் மூன்று காலங்களிலும் வரும்.

  • எ.கா. வந்தவர் அவர்தான்.

    பொறுத்தார் பூமியாள்வார்.

    தொழிற்பெயர்:

    வினை, பெயர்த் தன்மையாகி வினையையே உணர்த்தி நிற்கும் காலம் காட்டாது. படர்க்கைக்கே உரியது.

    (எ.கா) பாடுதல், படித்தல்

    வினையாலணையும் பெயர்:

    தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிக்கும் காலம் காட்டும் மூவிடத்திற்கும் உரியது

    எ.கா)பாடியவள், படித்தவர்

  • "மெத்த வணிகலன்" என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது – வணிகக்கப்பல்களும் ஐம்பெருங்காப்பியங்களும்

  • காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் என்பது குறிப்பிடுவது – சருகும் சண்டும்

  • எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் எம் + தமிழ் + நா என வரும்.

  • வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை – மணிவகை

  • "தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை
    தேரும் சிலப்பதி காறமதை
    ஊனிலே எம்முயிர் உல்லலவும் – நிதம்
    ஓதி யுணர்ந்தின் திருவோமே"

    என்று பாடியவர் – கவிமணி தேசிக விநாயகனார்

    "தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே
    தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே
    ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே
    உனர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே
    வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே
    மாந்தருக் கிருகணா வயங்குநன் மொழியே
    தானனி சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே
    தழைத்தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே"

    என்று தமிழ்மொழியை வாழ்த்தியவர் – கா.நமச்சிவாயர்

    நூல்களும் ஆசிரியர்களும்:

    • நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும் – முனைவர் சேதுமணி மணியன்

    • தவறின்றித் தமிழ் எழுதுவோம்

    • பச்சை நிழல் – உதயசங்கர்


    பாடம் 2 – உயிரின் ஓசை

    கேட்கிறதா என் குரல்!

  • மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று திருமந்திரத்தில் திருமூலர் கூறியுள்ளார்.

  • "வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்"

    என்று ஔவையார் வாயுதாரணை என்னும் அதிகாரத்தில் காற்றினைச் சிறப்பித்துள்ளார்.
    கிழக்கு என்பதற்கு குனக்கு என்னும் பெயரும் உண்டு
    கிழக்கிலிருந்து வீசும் காற்று கொண்டல் எனப்படுகிறது.
    மேற்கு என்பதற்கு குடக்கு என்னும் பெயரும் உண்டு.
    மேற்கிலிருந்து வீசும் காற்று கோடை எனப்படுகிறது.
    வடக்கு என்பதற்கு வாடை என்னும் பெயரும் உண்டு.
    வடக்கிலிருந்து வீசும் காற்று வாடைக்காற்று எனப்படுகிறது.
    தெற்கிலிருந்து வீசும் காற்று தென்றல் எனப்படுகிறது.
    "வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்"

    என்ற சிலப்பதிகார அடிகளில் காற்றினைத் தென்றல் என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

    "நந்தமிழும் தன்பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற்
    செந்தமிழின் பின்னுதித்த தென்றலே"

    என்ற அடிகள் இடம்பெற்ற நூல் – பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது.

    பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது என்னும் நூலை இயற்றியவர் – பலப்பட்டடைச் சொக்கநாதப் புலவர்

    பழங்காலத்தில் கடல்பயணங்களில் கப்பல்கள் காற்றால் இயக்கப்பட்டதை,

    "நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி
    வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
    களிஇயல் யானைக் கரிகால் வளவ!"

    என்ற புறநானூற்று அடிகள் கூறுகின்றன.

  • பருவக்காற்றின் பயனை உலகிற்கு உனர்த்தியவர் – கிரேக்க அறிஞர் ஹிப்பாலஸ்

  • தென்மேற்குப் பருவக்காற்று – ஜூன் முதல் செப்டம்பர்

  • வடகிழக்குப் பருவக்காற்று – அக்டோபர் முதல் டிசம்பர்

  • இந்தியாவின் முதுகெலும்பு என்று அழைக்கப்படுவது – வேளாண்மை

  • "வளி மிகும் வலி இல்லை" என்ற புறநானூற்றுப் பாடலில் காற்றின் ஆற்றலைச் சிறப்பித்துள்ளவர் – ஐயூர் முடவனார்

  • மனிதன் உணவின்றி 5 வாரம் உயிர்வாழ முடியும்.

  • மனிதன் நீரின்றி 5 நாள்கள் உயிர் வாழ முடியும்.

  • வளிமண்டலத்தைப் பாதிக்கும் வாயு – குளிர்பதனியிலிருந்து வெளிவரும் ஹைட்ரோ கார்பன்

  • உலகக் காற்று தினம் – ஜூன் 15

  • குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு, ஒரு இலட்சம் ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைத்து விடும்
  • ஹிப்பாலஸ் பருவக்காற்று:

  • கி.பி.முதல் நூற்றாண்டில் ஹிப்பாலஸ் எனும் பெயர் கொண்ட கிரேக்க மாலுமி பருவக் காற்றின் உதவியினால் நடுக்கடல் வழியாக முசிறித் துறைமுகத்திற்கு நேரே விரைவில் பயணம் செய்யும் புதிய வழியைக் கண்டுபிடித்தார்.

  • அது முதல், யவனக் கப்பல்கள் விரைவாகவும் அதிகமாகவும் சேரநாட்டு முசிறித் துறைமுகத்துக்கு வந்துசென்றன. அந்தப் பருவக் காற்றுக்கு யவனர், அதைக் கண்டுபிடித்தவர் பெயராகிய ஹிப்பாலஸ் என்பதையே சூட்டினார்கள்.

  • ஹிப்பாலஸ் பருவக்காற்றின் வழியில் யவனக் கடல் வணிகம் பெருகிற்று.

  • "தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை, திருப்பாவை பாடல்கலைத் தாய்மொழியில் எழுதிவைத்துப் பாடிகின்றனர்" என்று கூறியவர் – தனிநாயக அடிகள் (ஒன்றே உலகம் என்னும் நூலில்)


  • காற்றே வா!

    "காற்றே வா,
    மகரந்தத் தூளைச் சுமந்து கொண்டு , மனத்தை
    மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன் வா;
    இலைகளின் மீதும், நீரலைகளின் மீதும் உராய்ந்து , மிகுந்த
    ப்ராண – ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு.

    காற்றே வா,
    எமது உயிர் – நெருப்பை நீடித்து நின்று நல்லொளி தருமாறு
    நன்றாக வீசு.

    சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே
    பேய்போல வீசி அதனை மடித்துவிடாதே
    மெதுவாக , நல்ல லயத்துடன் , நெடுங்காலம்
    நின்று வீசிக் கொண்டிரு
    உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்

    உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்
    உன்னை வழிபடுகின்றோம்"

    என்று காற்றைப் போற்றி வணங்கியவர் – பாரதியார். இப்பாடல் பாரதியார் கவிதைகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

    சொல்லும் பொருளும்:

    • மயலுறுத்து – மயங்கச்செய்

    • ப்ராண – ரஸம் – உயிர்வளி

    • லயத்துடன் – சீராக

    பாரதியார் பற்றியக் குறிப்புகள்

  • "நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா", "சிந்துக்குத் தந்தை" என்றெல்லாம் பாராட்டப்பட்டவர். எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர். – பாரதியார்.

  • கேலிச்சித்திரம் – கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்.

  • சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும் பெண் அடிமைத்தனத்தையும் தன் பாடல்களில் எதிர்த்து எழுதியவர்.

  • குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய காவியங்களையும் கண்ணன் பாட்டு, பாப்பாப் பாட்டு, புதிய ஆத்திச்சூடி என குழந்தைகளுக்கான நீதிகளையும் பாடல்களில் தந்தவர்.

  • இந்தியா, சுதேசமித்திரன் முதலிய இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

  • பாட்டுக்கொருப் புலவன் எனப் பாராட்டப்பட்டவர்.

  • காற்று என்னும் தலைப்பிலான வசனகவிதையை எழுதியவர் – பாரதியார்

  • உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசனகவிதை எனப்படுகிறது. தமிழில் இவ்வடிவம் பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

  • உனர்ச்சி பொங்கக் கவிதைப் படைக்கும் இடங்களில் யாப்பு, தடையாக இருப்பதை உனர்ந்த பாரதியார் இவ்வடிவத்தை இலகுவாகக் கையாண்டுள்ளார். இவ்வசன கவிதையே புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று.

  • "திக்குகள் எட்டும் சிதறி – தக்கத்
    தீம்தரீகிட தீம்தரீகிட தீம்தரீகிட தீம்தரீகிட
    பக்க மலைகள் உடைந்து வெள்ளம்
    பாயுது பாயுது பாயுது – தாம்தரிகிட
    தக்கத் ததிங்கிட தித்தோம் – அண்டம்
    சாயுது சாயுது சாயுது – பேய்கொண்டு
    தக்கை யடிக்குது காற்று – தக்கத்
    தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட"

    என்ற பாடலை இயற்றியவர் – பாரதியார்.

    முல்லைப்பாட்டு

    "நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
    வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
    நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல
    பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
    கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி
    பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை
    அருங்கடி மூதூர் மருங்கில் போகி
    யாழ்இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு
    நாழி கொண்ட, நறுவீ முல்லை

    அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது,
    பெருமுது பெண்டிர், விரிச்சி நிற்ப
    சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
    உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
    நடுங்கு சுவல் அசைத்த கையள், "கைய
    கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர
    இன்னே வருகுவர், தாயர்" என்போள்
    நன்னர் நன்மொழி கேட்டனம்"

    என்ற பாடல் இடம்பெற்ற நூல் – முல்லைப்பாட்டு. இதனை இயற்றியவர் – நப்பூதனார்

    பாடலின் பொருள்:

  • அகன்ற உலகத்தை வலைத்துப் பெருமழை பொழிகிறது. வலம்புரிச்சங்கு பொறித்த கைகளையுடைய திருமால், குறுகிய வடிவம் கொண்டு மாவலி மன்னன் நீர் வார்த்துத் தரும்போது மண்ணுக்கும் விண்ணுக்குமாகப் பேருருவம் எடுத்து உயர்ந்து நிற்பது போன்றுள்ளது மழைமேகம். அம்மேகம், ஒலிக்கும் கடலின் குளிர்நீரைப் பருகிப் பெருந்தோற்றம் கொண்டு வலமாய் எழுந்து, மலையைச் சூழ்ந்து, விரைந்த வேகத்துடன் பெருமழையைப் பொழிகிறது.

  • துன்பத்தைச் செய்கின்ற அம்மாலைப் பொழுதில் முதிய பெண்கள் மிகுந்த கவலையுடைய ஊர்ப்பக்கம் சென்றனர். யாழிசை போன்று ஒலிக்கும் வண்டுகள் சூழ்ந்து ஆரவாரிக்கும் நறுமணம் கொண்ட அரும்புகள்; அந்த மலர்ந்த முல்லைப் பூக்களோடு நாழியில் கொண்டு வந்த நெல்லையும் சேர்த்துத் தெய்வத்தின் முன் தூவினர். பிறகு தெய்வத்தைத் தொழுது, தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர்.

  • அங்கு சிறுதாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று பசியால் வாடிக்கொண்டிருந்தது. அதன் வருத்தத்தை ஓர் இடைமகள் கண்டாள். குளிர்தாங்காமல் கைகளைக் கட்டியபடி நின்ற அவள், "புல்லை மேய்ந்து உன் தாய்மார் வளைந்த கத்தியை உடைய கம்பைக் கொண்ட எம் இடையர் ஓட்டிவர இப்போது வந்துவிடுவர், வருந்தாதே" என்றாள். இது நல்ல சொல் எனக்கொண்டு முதுபெண்கள் தலைவியிடம் நற்சொல்லை நாங்கள் கேட்டோம் என்று கூறினர். இவ்வாறு தலைவன் வருகை குறித்து முதுபெண்டிர் விரிச்சி கேட்டு நின்றனர்.

  • நின் தலைவன் பகைவரை வென்று திரைப்பொருளோடு வருவது உறுதி. தலைவியே! மனத்தடுமாற்றம் கொள்ளாதே! என ஆற்றுப்படுத்தினர் முதுபெண்டிர்.
  • சொல்லும் பொருளும்:

    • நனந்தலை உலகம் – அகன்ற உலகம்

    • நேமி – வலம்புரிச்சங்கு

    • கோடு – மலை

    • கொடுஞ்செலவு – விரைவாகச் செல்லுதல்

    • நறுவீ – நறுமணமுடைய மலர்கள்

    • தூஉய் – தூவி

    • விரிச்சி – நற்சொல்

    • சுவல் – தோள்

    இலக்கணக்குறிப்பு:

    • மூதூர் – பண்புத்தொகை

    • உறுதுயர் – வினைத்தொகை

    • கைதொழுது – மூன்றாம் வேற்றுமைத் தொகை

    • தடக்கை – உரிச்சொற்றொடர்

    பகுபத உறுப்பிலக்கணம்:

    பொறித்த – பொறி + த் + த் + அ

    பொறி – பகுதி

    த் – சந்தி

    த் – இறந்தகால இடைநிலை

    அ – பெயரெச்ச விகுதி

    விரிச்சி:

  • ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ? முடியாதோ? என ஐயம் கொண்ட பெண்கள், மக்கள் நடமாட்டம் குறைவான ஊர்ப்பக்கத்தில் போய் தெய்வத்தைத் தொழுது நின்று அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கேட்பர்; அவர்கள் நல்ல சொல்லைக் கூறின் தம் செயல் நன்மையில் முடியும் என்றும் தீய மொழியைக் கூறின் தீதாய் முடியும் என்றும் கொள்வர்.

  • முல்லைத் திணைக்குரிய கருப்பொருள்கள்:

    • முல்லை – காடும் காடு சார்ந்த இடமும்

    • பெரும்பொழுது – கார்காலம் (ஆவணி, புரட்டாசி)

    • சிறுபொழுது – மாலை

    • நீர் – குறுஞ்சுனை நீர், காட்டாறு

    • மரம் – கொன்றை, காயா, குருத்தம்

    • பூ – முல்லை, பிடவம், தோன்றிப்பூ

    முல்லைத்திணைக்குரிய உரிப்பொருள் – இருத்தலும் இருத்தல் நிமித்தமும் (காத்திருத்தல்):

    முல்லைப்பாட்டு பற்றியக் குறிப்புகள்:

    • முல்லைப்பாட்டு, பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.

    • இது 103 அடிகளைக் கொண்டது.

    • முல்லைப்பாட்டு ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது.

    • இது முல்லை நிலத்தைப் பற்றிப் பாடப்பட்டது.

    • பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல்.

    • இதைப் படைத்தவர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்.

    புயலிலே ஒரு தோணி

  • வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை 2000 ஆம் ஆண்டில் தொடங்கியது.

  • புதுடில்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டது.

  • சார்க் அமைப்பில் இருக்கும் வங்கதேசம், இந்தியா, மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன.

  • இந்தியா கொடுத்து ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பெயர்கள் அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள்) கடைசியாக லெஹர் (அலை) இன்னும் வரவிருப்பவை மேக், சாஹர், வாயு.

  • கஜா புயலின் பெயர் இலங்கை தந்தது. அடுத்து வந்த பெய்ட்டி புயலின் பெயர் தாய்லாந்து தந்தது.
  • இடம்புரிப் புயலும் வலம்புரிப் புயலும்:

  • மேட்டிலிருந்து தாழ்வுக்குப் பாயும் தண்ணீர் போல காற்றழுத்தம் அதிகமான இடத்திலிருந்து குறைவான இடத்துக்குக் காற்று வீசும். இப்படி வீசும் காற்றின் போக்கை புவி தனது அச்சில் மேற்கிலிருந்து கிழக்காக சுழல்கையில் மாற்றும். நிலநடுக்கோட்டின் வடக்குப் பகுதியில் வீசும் காற்றை வலப்புறமாகத் திருப்பும். தெற்குப் பகுதியீல் வீசும் காற்றை இடப்புறமாகத் திருப்பும். காற்றின் வேகம் கூடினால் இந்த விலக்கமும் கூடும். வங்கக் கடலில் வீசும் புயலும் அமெரிக்காவை ஜப்பானை, சீனாவை தாக்கும் புயல்களும் இடம்புரிப் புயல்கள். ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரை, ஹவாய் தீவுகளைத் தாக்கும் புயல்கள் வலம்புரிப் புயல்கள்.

  • பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கணித வல்லுநர் காஸ்பார்ட் குஸ்டாவ் கொரியாலிஸ் இந்த விளைவை 1835 ல் கண்டுபிடித்தார். புயலின் இந்த இருவகைச் சுழற்சிக்குக் கொரியாலிஸ் விளைவு என்று பெயர்.

  • புலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம் – புயலிலே ஒரு தோணி. இதன் ஆசிரியர் ப.சிங்காரம். இவர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்தவர். இவர் அன்றைய சூழலில் அவருடைய சேமிப்பான ஏழரை இலட்சம் ரூபாயை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கினார்.

  • நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லி மலையைப் பற்றி "பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி" என்று கூறிய நூல் – அகநானூறு

  • இலக்கணம்

    தொகைநிலைத் தொடர்கள்

    சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது "சொற்றொடர்" அல்லது "தொடர்" எனப்படும்.

    தொகைநிலைத் தொடர்:

  • பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும் பெயர்ச்சொல்லும் சேரும் தொடரின் இடையில், வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி (மறைந்து) இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்குமானால் அதனைத் தொகைநிலைத் தொடர் என்று கூறுவர்.

  • எ.கா. கரும்பு தின்றான்.

  • மேற்காண்ட தொடர் கரும்பைத் தின்றான் என்னும் பொருளை உணர்த்துகிறது. இத்தொடரில் உள்ள இரண்டு சொற்களுக்கு நடுவில் ஐ என்னும் உருபு மறைந்து நின்று, அப்பொருளைத் தருகிறது. எனவே, இது தொகைநிலைத் தொடர் எனப்படும்.
  • தொகைநிலைத்தொடர் 6 வகைப்படும்

    1. வேற்றுமைத்தொகை

    2. வினைத்தொகை

    3. பண்புத்தொகை

    4. உவமைத்தொகை

    5. உம்மைத்தொகை

    6. அன்மொழித்தொகை

    வேற்றுமைத் தொகை:

    எ.கா. மதுரை சென்றார்

  • இத்தொடர் மதுரைக்குச் சென்றார் என விரிந்து நின்று பொருள் தருகிறது. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களுக்கு இடையில் "கு" என்னும் வேற்றுமை உருபு இல்லை. அது தொக்கி நின்று பொருளை உணர்த்துகிறது.

  • இவ்வாறு ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள்(ஐ, ஆல், கு, இன், அது, கண்) ஆகியவற்றுள் ஒன்று மறைந்து வந்து பொருள் உணர்த்துவது வேற்றுமைத்தொகை எனப்படும்.
  • உருபும் பயனும் உடன்தொக்க தொகை:

    எ.கா. தேர்ப்பாகன்

  • இத்தொடர் "தேரைஓட்டும் பாகன்" என விரிந்து பொருளை உணர்த்துகிறது. கொடுக்கப்பட்டுள்ள தேர், பாகன் என்னும் சொற்களுக்கிடையில் "ஐ" என்னும் வேற்றுமை உருபும் "ஓட்டும்" என்னும் பொருளை விளக்கும் பயனும் மறைந்து வந்துள்ளன.

  • இவ்வாறு ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது உருபும் பயனும் உடன்தொக்க தொகை எனப்படும். இதுவும் வேற்றுமைத் தொகையே ஆகும்.

  • தமிழ்த்தொண்டு (தமிழுக்குச் செய்யும் தொண்டு) – நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை.
  • வினைத்தொகை:

  • காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்சவிகுதியும் மறைந்து நிற்க, வினைப் பகுதியைத் தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லைப் போல் நடப்பது "வினைத்தொகை" எனப்படும். காலம் கரந்த பெயரெச்சமே வினைத்தொகையாகும்.

  • எ.கா. வீசுதென்றல், கொல்களிறு

  • வீசு, கொல் என்பவை வினைப்பகுதிகள். இவை முறையே தென்றல், புனல் என்னும் பெயர்ச்சொற்களோடு சேர்ந்து காலத்தை வெளிப்படுத்தாத பெயரெச்சங்களாயின.

  • மேலும் இவை வீசிய காற்று, வீசுகின்றகாற்று, வீசும் காற்று எனவும் கொன்ற களிறு, கொல்கின்ற களிறு, கொல்லும் களிறு எனவும் முக்காலத்திற்கும் பொருந்தும்படி விரிந்து பொருள்தருகின்றன. காலம் காட்டும் இடைநிலைகள் இப்பெயரெச்சங்களில் தொக்கி இருக்கின்றன.

  • வினைப்பகுதியும் அடுத்துப் பெயர்ச்சொல்லும் அமைந்த சொற்றொடர்களிலேயே வினைத்தொகை அமையும்.
  • பண்புத்தொகை:

  • வீ, வீநிறம், வடிவம், சுவை, அளவு முதலானவற்றை உணர்த்தும் பண்புப்பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் "மை" என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.

  • வீசெங்காந்தள்- செம்மையாகிய காந்தள், வட்டத்தொட்டி – வட்டமானதொட்டி, இன்மொழி – இனிமையானமொழி
  • இருபெயரொட்டுப் பண்புத்தொகை:

  • சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் 'ஆகிய' என்னும் பண்பு உருபு தொக்கி வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகும்.

  • எ.கா. மார்கழித் திங்கள், சாரைப்பாம்பு.

  • திங்கள், பாம்பு ஆகிய பொதுப் பெயர்களுக்கு முன் மார்கழி, சாரை எனும் சிறப்புப் பெயர்கள் வந்து மார்கழி ஆகிய திங்கள் என்றும் சாரை ஆகிய பாம்பு என்றும் இருபெயரொட்டாக வந்துள்ளன.
  • உவமைத்தொகை:

  • உவமைக்கும் பொருளுக்கும் (உவமேயம்) இடையில் உவமஉருபு மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.

  • எ.கா. மலர்க்கை (மலர் போன்ற கை)

  • மலர் – உவமை, கை – உவமேயம் (பொருள்) இடையே 'போன்ற' என்னும் உவமஉருபு மறைந்து வந்துள்ளது.
  • உம்மைத்தொகை:

  • இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் 'உம்' என்னும் இடைச்சொல் மறைந்து வருவது உம்மைத் தொகையாகும். உம்மைத்தொகை எண்ணல், எடுத்தல், முகத்தல் , நீட்டல் என்னும் நான்கு அளவுப் பெயர்களைத் தொடர்ந்து வரும்.

  • எ.கா. அண்ணன் தம்பி, தாய்சேய்

  • அண்ணனும் தம்பியும், தாயும் சேயும் என விரிந்து பொருளை உணர்த்துகின்றன.
  • அன்மொழித்தொகை:

  • வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்கள் அவை அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள்தருவது அன்மொழித் தொகை ஆகும்.

  • எ.கா. சிவப்புச் சட்டைபேசினார்

    முறுக்கு மீசைவந்தார்

  • இவற்றில் சிவப்புச் சட்டை அணிந்தவர் பேசினார், முறுக்கு மீசையை உடையவர் வந்தார் எனத் தொகைநிலைத் தொடர் அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருகின்றன.

  • "பாடுஇமிழ் பனிக்கடல் பருகி" என்னும் முல்லைப்பாட்டு அடி உனர்த்தும் அறிவியல் செய்தி – கடல் நீர் ஒலித்தல்

  • பெரிய மீசை சிரித்தார் என்ற சொற்றொடருக்கான தொகை – அன்மொழித்தொகை

  • உலகளவில் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா 5 ஆம் இடம் வகிக்கிறது.

  • இந்திய அளவில் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

  • "மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
    வளரும் விழி வண்ணமே – வந்து
    விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
    விளைந்த கலை அன்னமே
    நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
    நடந்த இளந் தென்றலே – வளர்
    பொதிகை மலைதோன்றி மதுரை மதுரை நகர் கண்டு
    பொலிந்த தமிழ் மன்றமே"


    என்ற பாடலை எழுதியவர் – கண்ணதாசன்

    "அந்த இடம்
    காற்றே வா!
    உன்னைப் பாடாமல்
    இருக்க முடியாது
    ஏனெனில்
    பாட்டின் மூல ஊற்றே
    நீதான்
    ……………..
    ………….
    பொய்கையிடம் போனால்
    குளிர்ந்து போகிறாய்
    பூக்களைத் தொட்டால்
    நறுமணத்தோடு வருகிறாய்
    புல்லாங்குழலில் புகுந்தால்
    இசையாகிவிடுகிறாய்
    எங்களிடம்
    வந்தால் மட்டுமே
    அழுக்காகி விடுகிறாய்
    மரங்களின்
    ஊமை நாவுகள்
    உன்னிடம் மட்டுமே
    பேசுகின்றன.

    கடல் அலைகள்
    உன்னோடு மட்டுமே
    குதித்துக் கும்மாளமிடுகின்றன
    வயலின் பச்சைப் பயிர்கள்
    நீ வந்தால் மட்டுமே
    ஆனந்த நடனம்
    ஆடுகின்றன
    நீ என்ன குதூகலமா?
    கொண்டாட்டமா?
    கோலாகலமா?

    நெடுநாட்களாகவே
    எனக்கொரு சந்தேகம்
    விளக்குகளிலிருந்து
    பறிக்கும் சுடர்களை
    பூக்களிலிருந்து
    திருடும் நறுமணத்தை
    வீணையிலிருந்து
    கவர்ந்த இசையை

    எங்கே கொண்டு போய்
    ஒளித்து வைக்கிறாய்?"

    என்று காற்றைப் பற்றிப் பாடியவர் – அப்துல் ரகுமான்

  • பூக்களைப் பற்றிய அரிய இலக்கியச் செய்திகள் (வழங்கியவர்: கோவை இளஞ்சேரன்)

  • பூ உண்டு. ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் காண்பதற்கு அரியனவாய் இருக்கும் மலர்கள் – ஆல மலர், பலா மலர்

  • மலர் உண்டு; பெயரும் உண்டு; ஆனால் இதுதான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள் – சுள்ளி மலர், பாங்கர் மலர்

  • அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப் படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள் – அத்தி, ஆலம், கொழிஞ்சி, பலா

  • பயன்பாடு, நாற்றம் மக்களது விருப்பில் இடம் பெறாமை, பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவையாவன: நெருஞ்சி, எருக்கு, பூளை, குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை

  • இலுப்பைப் பூக்கள் இனிப்பானவ. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும். மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒருவகை அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும்.

  • "சிறுதானியம் போன்ற மூக்கு; சின்னக்கண்கள்; சின்னத்தலை; வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல் வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப்போர்த்த முதுகு;சிறிய தோகை; துளித்துளிக் கால்கள்; இத்தனையும் சேர்த்து ஒரு பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே பிடித்து விடலாம். இவ்விதமான உடலைச் சுமந்து கொண்டு என் வீட்டிலே இரண்டு உயிர்கள் வாழ்கின்றன. அவற்றில் ஒன்று ஆண் மற்றொன்று பெண்" என்ற சிட்டுக்குருவியைப் பற்றிய வசன நடையை எழுதியவர் – பாரதியார்
  • நூல்களும் ஆசிரியர்களும்:

    • குயில் பாட்டு – பாரதியார்

    • அதோ அந்தப் பறவை போல – ச.முகமது அலி

    • உலகின் மிகச்சிறிய தவளை – எஸ்.ராமகிருஷ்ணன்

    பாடம் 3 – கூட்டாஞ்சோறு

    விருந்து போற்றதும்

  • திருவள்ளுவர் இல்லறவியலில் 'விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே' அமைத்திருக்கிறார்; இல்லறம் புரிவது விருந்தோம்பல் செய்யும் பொருட்டே என்கிறார்; முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை "மோப்பக் குழையும் அனிச்சம்" என்ற குறளில் எடுத்துரைக்கிறார்.

  • கோவலனைப் பிரிந்து வாழும் கண்ணகி அவனைப் பிரிந்ததைவிட விருந்தினரைப் போற்ற முடியாத நிலையை எண்ணி வருந்துவதாக,

  • "………தொல்லோர் சிறப்பின்
    விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை"

    என்ற சிலப்பதிகார அடிகள் உணர்த்துகிறது.

  • கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார் இதனை,


  • "பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
    வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
    விருந்தும் அன்றி விளைவன யாவையே"


    – என்ற கம்பராமாயண அடிகள் உணர்த்துகிறது.

  • கலிங்கத்துப்பரணியில் செயங்கொண்டார் விருந்தினர்க்கு உணவிடுவோரின் முகமலர்ச்சியை உவமையாக்கியுள்ளார் இதனை,


  • "விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண
    மேன்மேலும் முகமலரும் மேலோர் போல"

    என்ற கலிங்கத்துப்பரணி அடிகள் உணர்த்துகிறது.

  • தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை. அமிழ்தமே கிடைத்தாலும் தாமே உண்ணாது பிறருக்கும் கொடுப்பர் நல்லோர்; அத்தகையோரால் தான் உலகம் நிலைத்திருக்கிறது என்பதை,


  • "உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர்
    அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
    தமியர் உணடலும் இலரே….."

    என்ற புறநானூற்றுப் பாடலில் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி குறிப்பிட்டுள்ளார்.

  • விருந்தோம்பல் என்பது பெண்களின் சிறந்த பண்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உனவிடும் நல்லியல்பு குடும்பத் தலைவிக்கு உண்டு என்பதனை,


  • "அல்லில் ஆயினும் விருந்து வரின்
    உவக்கும்"

    என்ற நற்றிணைப் பாடல் விளக்குகிறது.

  • பண்டைத் தமிழர்கள் வீட்டிற்கு வந்த விருந்தினர் திரும்பிச் செல்லும் போது, அவர்களைப் பிரிய மனமின்றி வருந்தினர். மேலும், வழியனுப்பும் பொழுது அவர்கள் செல்லவிருக்கிற நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேர் வரை ஏழு அடி நடந்து சென்று வழியனுப்பினர் என்பதனை,

  • "காலின் ஏழடிப் பின் சென்று"

    என்ற பொருநராற்றுப்படை அடிகள் விளக்குகிறது.

  • வீட்டிற்கு வந்தவருக்கு வறிய நிலையிலும் எவ்வழியிலேயேனும் முயன்று விருந்தளித்து மகிழ்ந்தனர் நம் முன்னோர். தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி. இதனை,

  • "குரல்உணங்கு விதைத் தினை உரல்வாய்ப் பெய்து
    சிறிது புறப்பட்டன்றோ இலள்"

    என்ற புறநானூற்று அடிகள் காட்சிப்படுத்துகிறது.

  • நேற்று வந்த விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் இரும்பினால் செய்த பழைய வாளை அடகு வைத்தான் தலைவன்; இன்றும் விருந்தினர் வந்ததால் தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு. இச்செய்தி,

  • "நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன்
    இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்றுஇக்
    கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்….."

    என்ற புறநானூற்றுப் பாடலடிகளில் இடம்பெறுகிறது.

  • இளையான்குடி மாறநாயனாரின் வீட்டுக்கு வந்த சிவனடியார்க்கு விருந்தளிக்க அவரிடம் தானியமில்லை; எனவே, அன்று விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து, பின் சமைத்து விருந்து படைத்த திறம் பெரியபுராணத்தில் காட்டப்படுகிறது.

  • நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என்று கூறும் நூல் – சிறுபாணாற்றுப்படை

  • இல்லத்தில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர், உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா? என்று கேட்கும் வழக்கம் இருந்ததை,

  • "பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
    வருவீர் உளீரோ"

    என்ற குறுந்தொகை அடிகள் புலப்படுத்துகின்றன.

  • "மருந்தே ஆயினும் விருந்தொடு உண்" என்று கொன்றை வேந்தனில் ஔவையார் பாடியுள்ளார்.

  • "வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
    முரமுரெனவே புளித்த மோரும் – திறமுடனே
    புள்வேளூர்ப் பூதன் புரிந்துவிருந்து இட்டான்ஈ(து)
    எல்லா உலகும் பெறும்"

    என்ற தனிப்பாடலை இயற்றியவர் – ஔவையார்

    "இலையை மடிப்பதற்கு முந்தைய
    வினாடிக்கு முன்பாக
    மறுக்க மறுக்க
    பரிமாறப்பட்ட கூடுதல் இட்லியில்
    நீண்டு கொண்டிருந்தது
    பிரியங்களின் நீள் சரடு"

    என்று எழுதியவர் – அம்சப்பிரியா

  • அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கம் "வாழையிலை விருந்து விழா" வை ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.

  • "இட்டதோர் தாமரைப்பூ
    இதழ்விரித் திருத்தல் போலே
    வட்டமாய்ப் புறாக்கள்கூடி
    இரையுண்ணும்….."

    என்ற கவிதையை எழுதியவர் – பாரதிதாசன்

    காசிக்காண்டம்

    காசிக்காண்டம் இயற்றியவர் – அதிவீரராம பாண்டியர்

    "விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
    வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
    திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
    எழுதல் முன் மகிழ்வன செப்பல்
    பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்
    போமெனில் பின் செல்வதாதல்
    பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்
    ஒழுக்கமும் வழிபடும் பண்பே"

    என்ற பாடல் காசிக்காண்டத்தில் இல்லொழுக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

    பாடலின் பொருள்:

    விருந்தினராக ஒருவர் வந்தால், அவரை வியந்து உரைத்தல், நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல், முகமலர்ச்சியுடன் அவரை நோக்குதல், 'வீட்டிற்குள் வருக' என்று வரவேற்றல், அவர் எதிரில் நிற்றல், அவர் முன் மனம் மகிழும்படி பேசுதல், அவர் அருகிலேயே அமர்ந்து கொள்ளுதல், அவர் விடைபெற்றுச் செல்லும்போது வாயில்வரை பின்தொடர்ந்து செல்லல், அவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல் ஆகிய ஒன்பதும் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாகும்.

    சொல்லும் பொருளும்:

  • அருகுற – அருகில்

  • முகமன் – ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்
  • இலக்கணக்குறிப்பு:

  • நன்மொழி – பண்புத்தொகை

  • வியத்தல், நோக்கல், எழுதுதல், உரைத்தல், செப்பல், இருத்தல், வழங்கல் – தொழிற்பெயர்கள்
  • பகுபத உறுப்பிலக்கணம்:

  • உரைத்த – உரை + த் + த் + அ

  • உரை – பகுதி

    த் – சந்தி

    த் – இறந்தகால இடைநிலை

    அ – பெயரெச்ச விகுதி

  • வருக – வா(வரு) + க

  • வா – பகுதி (வரு எனக் குறுகியது விகாரம்)

    க – வியங்கோள் வினைமுற்று
    "ஒப்புடன் முகம் மலர்ந்தே
    உபசரித்து உண்மை பேசி
    உப்பிலாக் கூழ் இட்டாலும்
    உண்பதே அமிர்தம் ஆகும்
    முப்பழமொடு பால் அன்னம்
    முகம் கடுத்து இடுவாராயின்
    கப்பிய பசியி நோடு
    கடும்பசி ஆகும் தானே"

    என்ற விருந்தோம்பலைப் பற்றிய பாடல் இடம்பெற்ற நூல் – விவேக சிந்தாமணி

    காசிக்காண்டம் பற்றியக் குறிப்புகள்

    • இந்நூலின் ஆசிரியர் – அதிவீரராம பாண்டியர்

    • காசி நகரத்தின் பெருமைகளைக் கூறும் நூல் – காசிக்காண்டம்

    • இந்நூல் இல்லறம், துறவு, பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள் ஆகியவற்றைப் பாடுவதாக அமைந்துள்ளது.

    • "விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்" என்ற பாடல் காசிக்காண்டத்தின் "இல்லொழுக்கங் கூறிய" பகுதியில் 17 வது பாடலாக இடம்பெற்றுள்ளது.

    அதிவீரராம பாண்டியர் பற்றியக் குறிப்புகள்:

    • முத்துக்குளிக்கும் கொற்கையின் அரசர் அதிவீரராம பாண்டியர்.

    • தமிழ்ப் புலவராகவும் திகழ்ந்த இவர் இயற்றிய நூலே காசிக்காண்டம்.

    • இவரின் மற்றொரு நூலான "வெற்றி வேற்கை" என்றழைக்கப்படும் "நறுந்தொகை" சிறந்த அறக்கருத்துக்களை எடுத்துரைக்கிறது.

    • சீவலமாறன் என்ற பட்டப்பெயரும் இவருக்கு உண்டு.

    அதிவீரராம பாண்டியர் இயற்றிய நூல்கள்:

    • நைடதம்

    • லிங்கபுராணம்

    • வாயு சம்கிதை

    • திருக்கோவை அந்தாதி

    • கூர்ம புராணம்

    மலைபடுகடாம்

    "அன்று அவண் அசைஇ , அல்சேர்ந்து அல்கி,
    கன்று எரி ஒள்இணர் கடும்பொடு மலைந்து
    சேந்த செயலைச் செப்பம் போகி,

    அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர்ச்
    சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி
    நோனாச் செருவின் வலம்படு நோன்தாள்
    மான விறல்வேள் வயிரியம் எனினே,

    நும்இல் போல நில்லாது புக்கு,
    கிழவிர் போலக் கேளாது கெழீஇ
    சேட் புலம்பு அகல இனிய கூறி
    பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு
    குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவீர்"

    பாடலின் பொருள்:

  • நன்னனைப் புகழ்ந்துப் பாடிப் பரிசில் பெற்ற கூத்தர், பரிசில் பெறப்போகும் கூத்தரைக் கானவர்களின் வளம் நிறைந்த புதுவருவாயை உடைய சிறிய ஊர்களில் தங்கி உணவு பெறுவதற்கு வழிப்படுத்துதல்.

  • "பகலில் இளைப்பாறிச் செல்லுங்கள்; இரவில் சேர்ந்து தங்குங்கள்; எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு அணிந்து கொள்ளுங்கள்; சிவந்த பூக்கள் கொண்ட அசோக மரங்களை உடைய பொருத்தமான பாதையில் செல்லுங்கள்; அசையும் மூங்கில்கள் ஓசை எழுப்பும் கடினப்பாதையில் சென்று மலைச்சரிவில் உள்ள சிற்றூரை அடையுங்கள். அங்குள்ளவர்களிடம், பகைவரைப் பெறாமல் போர் செய்யும் வலிய முயற்சியும் மானமும் உடைய நன்னனின் கூத்தர்கள் என்று சொல்லுங்கள்.

  • அதன்பிறகு நீங்கள் உங்கள் வீட்டிற்குள் போவது போலவே அவர்களுடைய வீட்டுக்குள் உரிமையுடன் நுழையுங்கள். உறவினர் போலவே அவர்கள் உங்களுடன் பழகுவர். நீண்ட வழியைக் கடந்து வந்த உங்களின் துன்பம் தீர இனிய சொற்களைக் கூறுவர்.அங்கே, நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் தினைச் சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள்".
  • ஆற்றுப்படை:

    ஆற்றுப்படுத்தும் கூத்தன், வள்ளலை நாடி எதிர்வரும் கூத்தனை அழைத்து, யாம் இவ்விடத்தே சென்று இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம். நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம்பெற்று வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை.

    மலைபடுகடாம் பற்றியக் குறிப்புகள்:

    • மலைபடுகடாம், பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.

    • இது 583 அடிகளைக் கொண்டது.

    • இந்நூல் கூத்தரற்றுப்படை எனவும் அழைக்கப்படுகிறது.

    • மலையை யானையாக உருவகம் செய்து மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் இதற்கு மலைபடுகடாம் என கற்பனை நயம் வாய்ந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    • நன்னன் என்னும் குறுநில மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது மலைபடுகடாம்.

    கோபல்லபுரத்து மக்கள்

    கரிசல் இலக்கியம்:

  • கோவில்பட்டியைச் சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம் கரிசல் இலக்கியம். காய்ந்தும் கெடுக்கிற, பெய்தும் கெடுக்கிற மழையைச் சார்ந்து வாழ்கிற மானாவாரி மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் இலக்கியங்கள் இவை.

  • கரிசல் மண்ணின் படைப்பாளி கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணனுக்கு முன் எழுதத் தொடங்கியவர். கரிசல் களத்தையும் அங்குள்ள மக்களையும் மையப்படுத்திக் கரிசல் இலக்கியத்தை நிலைநிறுத்தியவர் கி.ராஜநாராயணன்.

  • அந்தக் கரிசல் இலக்கியப் பரம்பரை இன்றளவும் தொடர்கிறது பா.செயப்பிரகாசம், பூமணி, வீரவேலுசாமி, சோ.தர்மன், வேல ராமமூர்த்தி, இன்னும் பலரின் மூலமாக….

  • கோபல்ல கிராமம் என்னும் புதினத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட கதையே கோபல்லபுரத்து மக்கள்.

  • இந்நூலின் ஆசிரியர் கி.இராஜநாராயணன்.

  • ஆசிரியர் தன் சொந்த ஊரான இடைசெவல் மக்களின் வாழ்வியல் காட்சிகளுடன் கற்பனையையும் புகுத்தி இந்நூலினைப் படைத்துள்ளார்.

  • இந்திய விடுதலைப் போராட்டத்தினை பின்னணியாகக் கொண்டது இந்நூல்.

  • இது 1991 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி பரிசினைப் பெற்றது.
  • கி.இராஜநாராயணன் பற்றியக் குறிப்புகள்:

    • கோபல்லபுரத்து மக்கள் என்னும் கதையின் ஆசிரியர் – கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.

    • இருபதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ள இவரின் கதைகள் ஒரு கதைசொல்லியின் கதைப்போக்கில் அமைந்திருக்கும்.

    • இவரின் கதைகள் அனைத்தும் கி.ராஜநாராயணன் கதைகள் என்னும் தலைப்பில் தொகுப்பாக வெளிவந்துள்ளன.

    • இவர் கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றை உருவாக்கியுள்ளார்.

    • இவர் தொடங்கிய வட்டார மரபு வாய்மொழிப் புனைகதைகள் "கரிசல் இலக்கியம்" என்று அழைக்கப்படுகின்றன.

    • எழுத்துலகில் இவர் கி.ரா என்று குறிப்பிடப்படுகிறார்.

    • திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் பற்றி "கறங்கு இசை விழவின் உறந்தை…" என்ற அகநானூற்றின் அடிகள் கூறுகிறது.

    இலக்கணம்

    தொகாநிலைத் தொடர்கள்

    தொகாநிலைத்தொடர்:

  • ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே, பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும்.

  • எ.கா காற்று வீசியது குயில் கூவியது

  • முதல் தொடரில் "காற்று" என்னும் எழுவாயும் "வீசியது" என்னும் பயனிலையும் தொடர்ந்து நின்று வேறுசொல் வேண்டாது பொருளை உணர்த்துகின்றது.

  • அதேபோன்று இரண்டாவது தொடரிலும் எழுவாயும் பயனிலையும் தொடர்ந்து நின்று குயில் கூவியது என்னும் பொருளைத் தருகின்றது.
  • தொகநிலைத் தொடர்கள் 9 வகைப்படும்.

    1. எழுவாய்த் தொடர்

    2. விளித்தொடர்

    3. வினைமுற்றுத்தொடர்

    4. பெயரெச்சத் தொடர்

    5. வினையெச்சத்தொடர்

    6. வேற்றுமைத்தொடர்

    7. இடைச்சொல் தொடர்

    8. உரிச்சொல் தொடர்

    9. அடுக்குத் தொடர்

    எழுவாய்த்தொடர்:

    எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது எழுவாய்த்தொடர் ஆகும்.

  • இனியன் கவிஞர் – பெயர்

  • காவிரி பாய்ந்தது – வினை

  • பேருந்து வருமா? – வினா

  • மேற்கண்ட மூன்று தொடர்களிலும் பெயர், வினை, வினா ஆகியவற்றுக்கான பயனிலைகள் வந்து எழுவாய்த் தொடர்கள் அமைந்துள்ளன.

    விளித்தொடர்:

  • விளியுடன் வினை தொடர்வது விளித்தொடர் ஆகும்.

  • நண்பாஎழுது! – "நண்பா" என்னும் விளிப்பெயர் "எழுது" என்னும் பயனிலையைக்கொண்டு முடிந்துள்ளது.
  • வினைமுற்றுத்தொடர்:

  • வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது வினைமுற்றுத்தொடர் ஆகும்.

  • பாடினாள் கண்ணகி

  • "பாடினாள்" என்னும் வினைமுற்று முதலில் நின்று ஒரு பெயரைக் கொண்டு முடிந்துள்ளது.
  • பெயரெச்சத் தொடர்:

  • முற்றுப்பெறாத வினை, பெயர்ச்சொல்லைத் தொடர்வது பெயரெச்சத்தொடர் எனப்படும்.

  • கேட்ட பாடல் – "கேட்ட" என்னும் எச்சவினை "பாடல்" என்னும் பெயரைக் கொண்டு முடிந்துள்ளது.
  • வினையெச்சத் தொடர்:

  • முற்றுப் பெறாத வினை, வினைச்சொல்லைத் தொடர்வது வினையெச்சத் தொடர் ஆகும்.

  • பாடி மகிழ்ந்தனர் – "பாடி" என்னும் எச்சவினை "மகிழ்ந்தனர்" என்னும் வினையைக் கொண்டு முடிந்துள்ளது.
  • வேற்றுமைத் தொடர்:

  • வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்கள் ஆகும்.

  • கட்டுரையைப் படித்தாள்.

  • இத்தொடரில் ஐ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துகிறது.

  • அன்பால் கட்டினார் – (ஆல்) மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

    அறிஞருக்குப் பொன்னாடை- (கு) நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்

    இடைச்சொல் தொடர்:

  • இடைச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது இடைச்சொல் தொடர் ஆகும்.

  • மற்றொன்று – மற்று + ஒன்று

  • "மற்று" என்னும் இடைச்சொல்லை அடுத்து "ஒன்று" என்னும் சொல் நின்று பொருள் தருகிறது.
  • உரிச்சொல்தொடர்:

  • உரிச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது உரிச்சொல் தொடர் ஆகும்.

  • சாலச்சிறந்தது – "சால" என்பது உரிச்சொல். அதனைத் தொடர்ந்து "சிறந்தது" என்ற சொல்நின்று மிகச் சிறந்தது என்ற பொருளைத் தருகிறது.

    அடுக்குத்தொடர்:

  • ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது அடுக்குத் தொடர் ஆகும்.

  • வருக! வருக! வருக! – ஒரே சொல் உவகையின் காரணமாக மீண்டும் மீண்டும் அடுக்கி வந்துள்ளது.

  • ஒன்றிற்கும் மேற்பட்ட வினையெச்சங்கள் சேர்ந்து பெயரைக் கொண்டு முடியும் கூட்டுநிலைப் பெயரெச்சங்களை இக்காலத்தில் பெருமளவில் பயன்படுத்துகிறோம். வேண்டிய, கூடிய, தக்க, வல்ல முதலான பெயரெச்சங்களை, செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்துடன் சேர்ப்பதன் மூலம் கூட்டுநிலைப் பெயரெச்சங்கள் உருவாகின்றன.

  • (எ.கா)
    கேட்க வேண்டிய பாடல், சொல்லத்தக்க செய்தி

  • "சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி" என்னும் அடியில் பாக்கம் என்பது – பேரூர்

  • அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது – வேற்றுமை உருபு

  • காசிக்காண்டம் என்பது – காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

  • "விருந்தினரைப் பேணுவதற்கு பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு" இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை – இன்மையிலும் விருந்து

  • "கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
    அத்தமிக்கும் போது அரிசிவரும் – குத்தி
    உலையிலிட ஊரடங்கும் ஓர்அகப்பை அன்னம்
    இலையிலிட வெள்ளி எழும்"

    என்ற பாடலை இயற்றியவர் – காளமேகப் புலவர்

    நூல்களும் ஆசிரியர்களும்:

    • திருக்குறள் தெளிவுரை – வ.உ.சிதம்பரனார்

    • சிறுவர் நாடோடிக் கதைகள் – கி.ராஜநாராயணன்

    • ஆறாம் திணை – மருத்துவர் கு.சிவராமன்

    திருக்குறள்

    வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
    கோலொடு நின்றான் இரவு

    பொருள்:

    ஆட்சியதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு வரிவிதிப்பது, வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வதற்கு நிகரானதாகும். இக்குறட்பாவில் உவமையணி பயின்று வந்துள்ளது.

    பண்என்னாம் பாடற் கியைபின்றேல்; கண்என்னாம்
    கண்ணோட்டம் இல்லாத கண்

    பொருள்:

    பாடலோடு பொருந்தவில்லையெனில் இசையால் என்ன பயன்? அது போலவே இரக்கம் இல்லாவிட்டால் கண்களால் என்ன பயன்? இக்குறட்பாவில் எடுத்துக்காட்டு உவமையணி பயின்று வந்துள்ளது.

    நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
    நச்சு மரம்பழுத் தற்று

    பொருள்:

    பிறருக்கு உதவி செய்யாததால் ஒருவராலும் விரும்பப்படாதவர் பெற்ற செல்வம், ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றதாகும் இக்குறட்பாவில் உவமையணி பயின்று வந்துள்ளது.
    "உரை(றை) ஊற்றி ஊற்றிப்
    பார்த்தாலும்
    புளிக்காத பால்!
    தந்தை தந்த
    தாய்ப்பால்
    முப்பால்!"

    என்ற திருக்குறள் பற்றியக் கவிதையை எழுதியவர் – அறிவுமதி

    பாடம் 4 – நான்காம் தமிழ்

    செயற்கை நுண்ணறிவு

  • 2016 ல் ஐ.பி.எம் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுக் கணினியான வாட்சன், சில நிமிடங்களில் இரண்டு கோடித் தரவுகளை அலசி, நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது.

  • சீனாவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், இயந்திர மனிதர்களைப் பணிக்கு அமர்த்தியுள்ளன. அவை அங்கு வரும் நோயாளிகளின் குரலையும் முகத்தையும் அடையாளம் கண்டு அவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்கின்றன. சீன மொழியின் வெவ்வேறு வட்டார வழக்குகளையும் கூட அவை புரிந்து கொண்டு பதில் அளிக்கின்றன.

  • "இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்" என்றவர் – பாரதியார்.

  • இந்தியாவின் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, 'இலா' என்னும் உரையாடு மென்பொருளை உருவாக்கியிருக்கிறது.

  • ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனே பெப்பர். இது உலக அளவில் விற்பனையாகும் ஒரு ரோபோ. வீட்டுக்கு, வணிகத்துக்கு, படிப்புக்கு என்று மூன்று வகை ரோபோக்கள் கிடைக்கின்றன.
  • சீன நாட்டில் தமிழ்க் கல்வெட்டு!

  • சீன நாட்டில் 'காண்டன்' நகருக்கு 500 கல் வடக்கே சூவன்சௌ என்னும் துறைமுக நகரம் உள்ளது.

  • பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். அதன் காரணமாக சீனாவில் சிவன் கோவில் ஒன்று கட்டப்பட்டது.

  • அது சீனப் பேரரசரான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் தமிழ்க் கல்வெட்டு இன்றும் இக்கோயிலில் உள்ளது. இக்கோயிலில் சோழர் காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  • பெருமாள் திருமொழி

    "வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
    மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
    மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ
    ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே"

    பாடலின்பொருள்:

  • மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார்.

  • வித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கும் அன்னையே! அது போன்று நீ உனது விளையாட்டால் நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அடியவனாகிய நான் உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கின்றேன்.
  • சொல்லும் பொருளும்:

    • சுடினும் – சுட்டாலும்

    • மாளாத – தீராத

    • மாயம் – விளையாட்டு
  • வித்துவக்கோடு என்னும் ஊர், கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது. குலசேகரஆழ்வார் அங்குள்ள இறைவனை உய்யவந்த பெருமாளை அன்னையாக உருவகித்துப் பாடுகிறார்.

  • "வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்" என்ற பாடல் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 691 ஆவது பாசுரம் ஆகும்.

  • பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது.

  • பெருமாள் திருமொழியில் 105 பாடல்கள் உள்ளன.

  • பெருமாள் திருமொழியை இயற்றியவர் – குலசேகராழ்வார்.

  • இவரது காலம் எட்டாம் நூற்றாண்டு.

  • பரிபாடல்

    "விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
    கரு வளர் வானத்து இசையில் தோன்றி,
    உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
    உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்

    செந்தீச் சுடரிய ஊழியும்; பணியொடு
    தண்பெயல் தலைஇய ஊழியும்;அவையிற்று
    உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு,
    மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்
    உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்…."

    என்ற பாடலை எழுதியவர் – கீரந்தையார். இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் – பரிபாடல்.

    பாடலின் பொருள்:

  • எதுவுமே இல்லாத பெருவளியில் அண்டத் தோற்றத்துக்குக் காரணமான கரு (பரமாணு) பேரொலியுடன் தோன்றியது. உருவம் இல்லாத காற்று முதலான பூதங்களின் அணுக்களுடன் வளர்கின்ற வானம் என்னும் முதல் பூதத்தின் ஊழி அது.

  • அந்த அணுக்களின் ஆற்றல் கிளர்ந்து பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக் காலங்கள் கடந்து சென்றன. பிறகு நெருப்புப் பந்து போலப் புவி உருவாகி விளங்கிய ஊழிக்காலம் தொடர்ந்தது.

  • பின்னர் பூமி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது.

  • மீண்டும் நிறை வெள்ளத்தில் மூழ்குதல் நடந்த இப்பெரிய உலகத்தில், உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றியது. அச்சூழலில் உயிர்கள் தோன்றி நிலைபெறும் படியான ஊழிக்காலம் வந்தது.
  • சொல்லும்பொருளும்:

    • விசும்பு – வானம்

    • ஊழி – யுகம்

    • ஊழ் – முறை

    • தண்பெயல் – குளிர்ந்த மழை

    • ஆர்தருபு – வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த

    • பீடு – சிறப்பு

    • ஈண்டி – செறிந்து திரண்டு

    இலக்கணக்குறிப்பு:

    • ஊழ்ஊழ் – அடுக்குத்தொடர்

    • வளர்வானம் – வினைத்தொகை

    • செந்தீ – பண்புத்தொகை

    • வாரா (ஒன்றன்) – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

    பகுபதஉறுப்பிலக்கணம்:

    கிளர்ந்த – கிளர் + த்(ந்) + த் + அ

    கிளர் – பகுதி

    த் – சந்தி

    த்(ந்) – த் 'ந்' ஆனது விகாரம்

    த் – இறந்தகால இடைநிலை

    அ – பெயரெச்ச விகுதி

  • அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் 1924ல் நம் பால்வீதி போன்று பல பால்வீதிகள் உள்ளன என்று நிரூபித்தார். ஆனால், 1300 ஆண்டுகளுக்கு முன்பே மாணிக்கவாசகர் திருஅண்டப் பகுதியில்,

  • "அண்டப் பகுதியின் உணடைப் பிறக்கம்
    …………………………………………………………….
    சிறிய ஆகப் பெரியோன் தெரியின்"

    என்று திருவாசகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

  • அண்டப் பகுதிகளின் உருண்டை வடிவம், ஒப்பற்ற வளமையான காட்சியும் ஒன்றுக்கு ஒன்று ஈர்ப்புடன் நின்ற அழகினைச் சொல்வது எனின், அவை நூறுகோடிக்கும் மேல் விரிந்து நின்றன. இல்லத்துள் நுழையும் கதிரவனின் ஒளிக் கற்றையில் தெரியும் தூசுத் துகள் போல அவை நுண்மையாக இருக்கின்றன.

  • பரிபாடல் பற்றியக் குறிப்புகள்

  • பரிபாடல், எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.

  • இந்நூல் "ஓங்கு பரிபாடல்" என்னும் புகழுடையது.

  • இது சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல்.

  • உரையாசிரியர்கள் இதில் 70 பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர். இன்று 24 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

  • ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, சமூக உறவு, அறிவாற்றல், இயற்கையைப் புரிந்துகொள்ளும் திறன் போன்றவற்றைச் சங்க இலக்கியம் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம்.

  • விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

  • பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் 1988-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

  • "மாற்றத்திற்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ளும் திறனே புத்திக் கூர்மை"என்றவர் – ஸ்டீபன்ஹாக்கிங்

  • "அறியாமை அறிவாற்றலின் மிகப்பெரிய எதிரியல்ல. அது அறிவின் மாயையே"என்றவர் – ஸ்டீபன்ஹாக்கிங்

  • "தற்காலத்தின் ஐன்ஸ்டைன்" என்று புகழப்படுபவர் – ஸ்டீபன்ஹாக்கிங்

  • பேரண்டப் பெருவெடிப்பு, கருந்துளைகள் பற்றிய ஸ்டீபன் ஹாக்கிங் ஆராய்ச்சிகள் முக்கியமானவை. இப்பேரண்டம் பெருவெடிப்பினால் உருவானதே என்பதற்கான சான்றுகளைக் கணிதவியல் அடிப்படையில் விளக்கினார். இப்புவியின் படைப்பில் கடவுள் போன்ற ஒருவர் பின்னணியில் இருந்தார் என்பதை மறுத்தார். பிரபஞ்சத்தை இயக்கும் ஆற்றலாகக் கடவுள் என்ற ஒருவரைக் கட்டமைக்க வேண்டியதில்லை என்று ஸ்டீபன்ஹாக்கிங் கூறினார்.

  • "சில நேரங்களில் உண்மை புனைவை விடவும் வியப்பூட்டுவதாக அமைந்துவிடுகிறது. அப்படி ஓர் உண்மைதான் கருந்துளைகள் பற்றியதும். புனைவு இலக்கியம் படைப்பவர்களது கற்பனைகளையெல்லாம் மிஞ்சுவதாகவே கருந்துளைகள் பற்றிய உண்மைகள் உள்ளன. அதனை அறிவியல் உலகம் மிக மெதுவாகவே புரிந்து கொள்ள முயல்கிறது" என்று கூறியவர் – ஸ்டீபன்ஹாக்கிங்

  • அமெரிக்க அறிவியலாளர் ஜான் வீலர் என்பவர்தாம் கருந்துளை என்ற சொல்லையும் கோட்பாட்டையும் முதலில் குறிப்பிட்டார். சுருங்கிய விண்மீனின் ஈர்ப்பெல்லைக்குள் செல்கிற எதுவும், ஏன் ஒளியும் கூடத் தப்ப முடியாது. உள்ளே ஈர்க்கப்படும். இவ்வாறு உள்சென்ற யாவையும் வெளிவரமுடியாததால் இதனைக் கருந்துளை எனலாம் என்று ஜான்வீலர் கருதினார்.
  • ஸ்டீபன்ஹாக்கிங் பெற்ற விருதுகள்:

    • அமெரிக்காவின் உயரிய விருதான அதிபர் விருது

    • ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விருது

    • உல்ஃப் விருது

    • காப்ளி பதக்கம்

    • அடிப்படை இயற்பியல் பரிசு
  • ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்த தினம் – கலீலியோவின் நினைவு தினம்

  • ஸ்டீபன் ஹாக்கிங் இறந்த தினம் – ஐன்ஸ்டைன் பிறந்த தினம்

  • "தலைவிதிதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என நம்புவர்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புதான் வருகிறது. விதிதான் தீர்மானிக்கிறது என்றால் சாலையைக் கடக்கும்போது ஏன் இருபுறமும் பார்த்துக் கடக்கிறார்கள்?" என்றவர் – ஸ்டீபன்ஹாக்கிங்
  • ஸ்டீபன்ஹாக்கிங் வாழ்க்கைப் பயணத்தில் மகிழ்ச்சியான தருணங்கள்:

  • 2012ல் நடைபெற்ற பாராஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் "தொடக்கவிழாநாயகர்" என்ற சிறப்பைப் பெற்றார்.

  • "அடுத்ததலைமுறை", "பெருவெடிப்புக்கோட்பாடு" உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களில் பங்கேற்றார்.

  • சூடான காற்று நிரம்பிய பலூனில் வானில் பறந்து தனது 60ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

  • போயிங் 727 என்ற விமானத்தில் பூஜ்ஜிய ஈர்ப்பு விசைப் பயணத்தை மேற்கொண்டு எடையற்ற தன்மையை உணர்ந்தார்.

  • ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய நூல்களுள் "காலத்தின் சுருக்கமான வரலாறு" என்ற நூல் நாற்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

  • 1988ஆம் ஆண்டு வெளிவந்த இந்நூல் பெருவெடிப்பு, கருந்துளை ஆகியவை பற்றிய அரிய உன்மைகளைப் பொதுமக்களிடையே பரப்பி, ஒரு கோடிப் படிகளுக்கு மேல் விற்பனையானது.

  • கருவூரைப் பற்றி (இன்றைய கரூர் மாவட்டம்),

  • "கடும் பகட்டு யானை நெடுந்தேர் கோதை
    திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை"

    – என்று அகநானூறு கூறுகிறது.

  • "அறிவை விட மிகவும் முக்கியமானது கற்பனைத் திறன். ஏனெனில் அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பவற்றோடு முடிந்துவிடுகிறது. கற்பனைத் திறனோ இந்த ஒட்டுமொத்தப் பேரண்டத்தையும் அளப்பது. இன்று நாம் அறிந்திருப்பதை மட்டுமன்று; இனி நாம் அறிந்துகொள்ளப் போவதையும் உள்லடக்கியது" என்று கூறியவர் – ஐன்ஸ்டைன்

  • "வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது. நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வேன். அதன் மூலம் மனித இனம் தொடர வழிவகுப்பேன்" என்றவர் – ஸ்டீபன்ஹாக்கிங்

  • இலக்கணம்

    இருதிணை:

    ஆறறிவுடைய மக்களை உயர்திணை என்றும் மற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் அஃறிணை(அல்திணை) என்றும் வழங்குவர்.

    ஐம்பால்:

  • பால் என்பது திணையின் உட்பிரிவு ஆகும் (பால்-பகுப்பு, பிரிவு). இஃது ஐந்து வகைப்படும்.

  • உயர்திணை ஆண்பால், பெண்பால், பலர்பால் என மூன்று பிரிவுகளை உடையது. அஃறிணை ஒன்றன்பால், பலவின்பால் என இருபிரிவுகளை உடையது.
  • உயர்திணைக்குரிய பால் வகுப்புகள்:

  • வீரன், அண்ணன், மருதன் – ஆண்பால்

  • மகள், அரசி, தலைவி – பெண்பால்

  • மக்கள், பெண்கள், ஆடவர் – பலர்பால்
  • அஃறிணைக்குரிய பால் வகுப்புகள்:

  • அஃறிணையில் ஒன்றனைக் குறிப்பது ஒன்றன்பால் ஆகும்.

  • எ.கா. யானை, புறா, மலை

  • அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால் ஆகும்.

  • எ.கா. பசுக்கள், மலைகள்

    மூவிடம்:

    தன்மை, முன்னிலை, படர்க்கை என இடம் மூவகைப்படும்.

  • தன்மைப் பெயர்கள் – நான், யான், நாம், யாம்,……….

  • தன்மை வினைகள் – வந்தேன், வந்தோம்,….

  • முன்னிலைப் பெயர்கள் – நீ, நீர், நீவிர்,நீங்கள்

  • முன்னிலை வினைகள் – நடந்தாய்,வந்தீர்,சென்றீர்கள்,….

  • படர்க்கைப் பெயர்கள் – அவன், அவள், அவர், அது, அவை,….

  • படர்க்கை வினைகள் – வந்தான், சென்றான், படித்தனர், பேசினார்கள், பறந்தது, பறந்தன,…
  • வழு-வழாநிலை-வழுவமைதி:

  • இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும்.

  • இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்.

  • இரு திணையும் ஐம்பாலும் மூவிடமும் காலமும் வினாவும் விடையும் பலவகை மரபுகளும் ஆகிய ஏழும் தொடர்களில் இலக்கணப் பிழைகளுடன் வந்தால் அவையும் வழு எனப்படும். அவ்வாறு இலக்கணப்பிழைகள் இல்லாதிருப்பின் அவை வழாநிலை எனப்படும்.
  • திணை:

  • வழு – செழியன் வந்தது

  • வழாநிலை – செழியன் வந்தான்
  • பால்:

  • வழு – கண்ணகி உண்டான்

  • வழாநிலை – கண்ணகி உண்டாள்
  • இடம்:

  • வழு – நீ வந்தேன்

  • வழாநிலை – நீ வந்தாய்
  • காலம்:

  • வழு – நேற்று வருவான்

  • வழாநிலை – நேற்று வந்தான்
  • வினா:

  • வழு – ஒரு விரலைக் காட்டிச் சிறியதோ? பெரியதோ? என்று கேட்டல்

  • வழாநிலை – இரு விரல்களைக் காட்டி எது சிறியது? எது பெரியது? என்று கேட்டல்
  • விடை:

  • வழு – கண்ணன் எங்கே இருக்கிறார்? என்ற வினாவிற்குக் கண்னாடி பைக்குள் இருக்கிறது என்று விடையளித்தல்

  • வழாநிலை – கண்னன் எங்கே இருக்கிறார்? என்ற வினாவிற்குக் கண்னன் வீட்டிற்குள் இருக்கிறார என்று விடையளித்தல்
  • மரபு:

  • வழு – தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோட்டம் என்று கூறுதல்

  • வழாநிலை – தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோப்பு என்று கூறுதல்
  • வழுவமைதி:

    இலக்கணமுறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக் கொள்ளப்படுவது வழுவமைதியாகும்.

    திணை வழுவமைதி:

    "என் அம்மை வந்தாள்" என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது திணை வழுவமைதி ஆகும்.இங்கு உவப்பின் காரணமாக அஃறிணை உயர்திணையாகக் கொள்ளப்பட்டது.

    பால் வழுவமைதி:

    "வாடா இராசா, வாடா கண்ணா" என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது பால் வழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாக, பெண்பால் ஆண்பாலாகக் கொள்ளப்பட்டது.

    இட வழுவமைதி:

    மாறன் என்பான் தன்னைப் பற்றிப் பிறரிடம் கூறும் போது, "இந்த மாறன் ஒரு நாளும் பொய் கூறமாட்டான்" என, தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது இட வழுவமைதி ஆகும்.

    கால வழுவமைதி:

  • குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்.

  • இத்தொடர், குடியரசுத் தலைவர் நாளை வருவார் என அமைதல் வேண்டும். அவ்வாறு அமையவில்லை என்றாலும் நாம் பிழையாகக் கருதுவதில்லை. ஏனெனில் அவரது வருகையின் உறுதித்தன்மை நோக்கிக் கால வழுவமைதியாக ஏற்றுக் கொள்கிறோம்.
  • மரபுவழுவமைதி:

    "கத்துங் குயிலோசை – சற்றேவந்து
    காதிற்பட வேணும்" – பாரதியார்.

  • குயில் கூவும் என்பதே மரபு, குயில் கத்தும் என்பது மரபு வழு ஆகும். இங்குக் கவிதையில் இடம் பெற்றிருப்பதால் இது மரபு வழுவமைதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

  • "உனதருளே பார்ப்பன் அடியேனே" என்ற அடிகள் இறைவனிடம் குலசேகராழ்வாரிடம் கூறியது.

  • பரிபாடல் இசையில் "விசும்பும் இசையும்" என்பது குறிப்பது – வானமும் பூமியும்

  • பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் – இலா

  • "நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
    நேர்ப்ப்பட வைத்தாங்கே
    குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு
    கோல வெற்படைத்தோம்;
    உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்
    ஓட்டி மகிழ்ந்திடுவோம்;
    பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு
    பாடுவதும் வியப்போ?"என்ற பாடலை இயற்றியவர் – பாரதியார்.

    நூல்களும் ஆசிரியர்களும்:

  • பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள் – நீலமணி

  • அன்றாட வாழ்வில் அறிவியல் – ச.தமிழ்ச்செல்வன்

  • காலம் – ஸ்டீபன் ஹாக்கிங்

  • பாடம் 5 – மணற்கேணி

    மொழிபெயர்ப்புக் கல்வி:

  • மொழிகளுக்கு இடையேயான வேற்றுமைகளை வேற்றுமைகளாகவே நீடிக்க விடாமல் ஒற்றுமைப்படுத்த உதவுவது – மொழிபெயர்ப்பு.

  • 'ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு' என்று கூறியவர் – மணவை முஸ்தபா

  • 'ஒரு மொழி வளம் பெறவும் உலகத்துடன் உறவுகொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாததாகும்; உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியம் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காராணமாகும்.' என்றவர் – மு.கு.ஜகந்நாதராஜா

  • 'மொழிபெயர்த்தல்' என்ற தொடரைத் தொல்காப்பியர் மரபியலில் குறிப்பிட்டுள்ளார்.

  • 'மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்' என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக்குறிப்பு, சங்ககாலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதைப் புலப்படுத்துகிறது.

  • பிறமொழி இலக்கியங்களை அறிந்து கொள்ளவும் அவை போன்ற புதிய படைப்புகள் உருவாகவும் மொழிபெயர்ப்பு உதவுகிறது.

  • ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகம் ஆன ஷேக்ஸ்பியர் அந்நாட்டுப் படைப்பாளர் போலவே கொண்டாடப்பட்டார்.

  • 18 ஆம் நூற்றாண்டு வரை வடமொழி நூல்கள் பல தமிழில் ஆக்கப்பட்டன.

  • இரவீந்திரநாத் தாகூர் வங்கமொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் அவரே மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.

  • ஒரு நாடு எவ்வளவு மின்னாற்றலைப் பயன்படுத்துகிறது என்பதைக் கொண்டு அதன் தொழில் வளர்ச்சியை மதிப்பிடுவார்கள். அதுபோல, ஒரு நாட்டின் மொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கையைக் கொண்டு அந்நாட்டின் பண்பாட்டையும் அறிவையும் மதிப்பிடுவார்கள்.

  • ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிற மொழிகளிலிருந்து 5000 நூல்கள் வரை மொழிபெயர்க்கப்படுகின்றன. புள்ளிவிவரப்படி அதிகமான தமிழ்நூல்கள் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவ்வரிசையில் முதலிடம் ஆங்கிலம்; இரண்டாமிடம் மலையாளம்; அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த நிலைகளில் முறையே தெலுங்கு, இந்தி, கன்னடம் வடமொழி, ரஷ்ய மொழி,வங்கமொழி, மராத்தி மொழி போன்றவை இடம்பெறுகின்றன.

  • 'காசினியில் இன்று வரை அறிவின் மன்னர்
    கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணி
    பேசி மகிழ் நிலை வேண்டும்.'

    என்றவர் – குலோத்துங்கன்

    'சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச்
    செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்'

    என்று கூறியவர் பாரதியார்.

    'தேமதுரத் த் தமிழோசை உலகமெலாம்
    பரவும் வகை செய்தல் வேண்டும்'
    என்றவர் – பாரதியார்.

    பாரதியின் மொழிபெயர்ப்பு:

    • காட்சி, பொருட்காட்சி – Exhibition

    • இருப்புப் பாதை – east indian Railways

    • புரட்சி – Revolution

    • தொழில் நிறுத்தி இருத்தல், தொழில் நிறுத்தம், வேலை நிறுத்தம் – strike

  • 'ராகுல் சாங்கிருத்யாயன்' 1942 ஆம் ஆண்டு ஹஜிராபாக் மத்திய சிறையிலிருந்த போது 'வால்காவிலிருந்து கங்கைவரை' என்ற நூலை இந்தி மொழியில் எழுதினார். 1949 ஆம் ஆண்டு இந்நூலை 'கணமுத்தையா' என்பவர் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இன்று வரையில் 'வால்காவிலிருந்து கங்கைவரை' ஒவ்வொரு தமிழரும் விரும்பிப் படிக்கும் நூலாக இருக்கிறது.
  • வால்காவிலிருந்து கங்கைவரை என்ற நூலை இதுவரை மொழிபெயர்த்தவர்கள்:

    • 1949 – கணமுத்தையா மொழிபெயர்ப்பு

    • 2016 – டாக்டர் என்.ஸ்ரீதர் மொழிபெயர்ப்பு

    • 2016 – முத்து மீனாட்சி மொழிபெயர்ப்பு

    • 2018 – யூமா வாசுகி மொழிபெயர்ப்பு

    பிரான்சு தேசிய நூலகத்தில் தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் பற்றி தனிநாயகம் அடிகள்:

    • பிரான்சு தேசிய நூற்கூடத்தில் ஏறக்குறைய ஆயிரம் பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் உள.

    • இவற்றுள் சில இந்தியாவிலேயே கிடைக்காத படிகளும் ஏடுகளுமாம். பண்டைக் காலத்தில் முதன்முதலாக ஐரோப்பியர் யாத்த இலக்கணங்களும் கையெழுத்துப் பிரதிகளும் இந்நூற்கூடத்தில் இருக்கின்றன.

    • அங்கிருக்கும் தமிழ் நூல்களின் பட்டியலைப் படித்த பொழுது இன்றும் அச்சிடப்பெறாத நூல்கள் சிலவற்றின் தலைப்பைக் கண்டேன். ' மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ், சரளிப்புத்தகம், புதுச்சேரி அம்மன் பிள்ளைத்தமிழ்' முதலிய நூல்களும் அங்கு உள.

    நீதி வெண்பா

    'அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
    மருளை அகற்றி மதிக்கும் தெருளை
    அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்
    பொருத்துவதும் கல்வியென்றே போற்று.'

    என்ற பாடல் இடம்பெற்ற நூல் – நீதிவெண்பா.

    இயற்றியவர் – கா.ப.செய்குதம்பிப்பாவலர்

    பாடலின் பொருள்:

    அருளினைப் பெருக்கி, அறிவைச் சீராக்கி, மயக்கம் அகற்றி அறிவுக்குத் தெளிவு தந்து, உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது கல்வியே ஆகும். எனவே அதைப் போற்றிக் கற்க வேண்டும்.

    சதாவதானம்:

    'சதம்' என்றால் நூறு என்பது பொருள். ஒருவரது புலமையையும் நினைவாற்றலையும் நுண்அறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தலே சதாவதானம்.

    செய்குத்தம்பிப்பாவலர் பற்றியக் குறிப்புகள்:

    • செய்குத்தம்பிப்பாவலர் பிறந்த ஆண்டு – 1874

    • 'சதாவதானம்' என்னும் கலையில் சிறந்து விளங்கிய செய்குத்தம்பிப்பாவலர் கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்.

    • பதினைந்து வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்.

    • சீறாப்புராணத்திற்கு உரை எழுதியுள்ளார்.

    • 1907 மார்ச் 10 ஆம் நாளில் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்துகாட்டி 'சதாவதானி' என்ற பாராட்டுப் பெற்றார்.

    • இவர் நினைவைப் போற்றும் வகையில் இடலாக்குடியில் மணிமண்டபமும் பள்ளியும் உள்ளன.

    • இவரது அனைத்து நூல்களும் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.

    திருவிளையாடற் புராணம்

    திருவிளையாடற் புராணத்தின் ஆசிரியர் – பரஞ்சோதி முனிவர்

    சொல்லும் பொருளும்:

    • கேள்வியினான் – நூல் வல்லான்

    • கேண்மையினான் – நட்பினான்

    • தார் – மாலை

    • முடி – தலை

    • முனிவு – சினம்

    • அகத்து உவகை – மனமகிழ்ச்சி

    • தமர் – உறவினர்

    • நீபவனம் – கடம்பவனம்

    • மீனவன் – பாண்டிய மன்னன்

    • கவரி – சாமரை (கவரிமானின் முடியில் செய்த விசிறியாகிய அரசச் சினம்)

    • நுவன்ற – சொல்லிய

    • என்னா – அசைச்சொல்

    இலக்கணக்குறிப்பு:

    • கேள்வியினான் – வினையாலணையும் பெயர்

    • காடனுக்கும் கபிலனுக்கும் – எண்ணும்மை

  • புலவர் மோசிகீரனார் அரசுக்குரிய முரசுக் கட்டிலில் உறங்கிய போது கவரி வீசிய மன்னர் – கோப்பெருஞ் சேரல்இரும்பொறை. கண் விழித்த புலவர் மன்னரின் செயலை கண்டு வியந்து

  • 'மாசற விசித்த வார்புறு வள்பின்…'

    என்ற பாடலை புறநானூற்றில் பாடியுள்ளார்.

    திருவிளையாடற்புராணம் பற்றியக் குறிப்புகள்:

    • திருவிளையாடற் புராணத்தை இயற்றியவர் – பரஞ்சோதி முனிவர்.

    • இந்நூல் மதுரைக் காண்டம், கூடற் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என மூன்று காண்டங்களை உடையது.

    • இந்நூல் 64 படலங்களை உடையது.

    • பரஞ்சோதி முனிவர் திருமறைக்காட்டில் (வேதாரண்யம்) பிறந்தவர்.

    • பரஞ்சோதி முனிவரின் காலம் – கி.பி.பதினேழாம் நூற்றாண்டு

    பரஞ்சோதி முனிவர் இயற்றிய வேறுநூல்கள்:

    • வேதாரண்ய புராணம்

    • திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா

    • மதுரை பதிற்றுப்பத்தந்தாதி

    புதிய நம்பிக்கை:

  • புதிய நம்பிக்கை என்னும் சிறுகதையின் ஆசிரியர் – கமலாலயன்

  • 'மேரி மெக்லியோட் பெத்யூன்' என்ற மாபெரும் கல்வியாளரின் வாழ்க்கையை 'உனக்குப் படிக்கத் தெரியாது' என்ற தலைப்பில் நூலாகப் படைத்துள்ளவர் – கமலாலயன்.

  • கமலாலயன் அவர்களின் இயற்பெயர் – வே.குணசேகரன். வயதுவந்தோர் கல்வித்திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

  • தூத்துக்குடி மாவட்டத்தின் கொற்கை பற்றி 'கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை' என்று கூறும் நூல் – ஐங்குறுநூறு

  • இலக்கணம்

    வினா, விடை வகைகள், பொருள்கோள்கள்

    வினா வகை:

    வினா ஆறு வகைப்படும்.
    • அறி வினா

    • அறியா வினா

    • ஐய வினா

    • கொளல் வினா

    • கொடை வினா

    • ஏவல் வினா

    அறி வினா:

    தான் விடை அறிந்திருந்தும் அவ்விடை பிறருக்குத் தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது.

    (எ.கா)
    மாணவரிடம் 'இந்தக் கவிதையின் பொருள் யாது?' என்று ஆசிரியர் கேட்டல்

    அறியா வினா:

    தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது

    (எ.கா)
    ஆசிரியரிடம், இந்தக் கவிதையின் பொருள் யாது? என்று மாணவர் கேட்டல்

    ஐய வினா:

    ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்காகக் கேட்கப்படுவது

    (எ.கா)
    ' இச்செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையா?' என வினவுதல்

    கொளல் வினா:

    தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது

    (எ.கா)
    ' ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா?' என்று நூலகரிடம் வினவுதல்

    கொடை வினா:

    பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது

    (எ.கா)
    'என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா?' என்று கொடுப்பதற்காக வினவுதல்.

    ஏவல் வினா:

    ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதற் பொருட்டு வினவுவது

    (எ.கா)
    'வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா?' என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச் சொல்லுதல்.

    'அறிவு அறியாமை ஐயுறல் கொளல் கொடை
    ஏவல் தரும் வினா ஆறும் இழுக்கார்'

    என்று கூறும் நூல் – நன்னூல்

    விடை வகை:

    விடை என்பதற்கு பதில், செப்பு, இறை என வேறு பெயரும் உண்டு. விடை எட்டு வகைப்படும்.
    1. சுட்டு விடை

    2. மறை விடை

    3. நேர் விடை

    4. ஏவல் விடை

    5. வினா எதிர் வினாதல் விடை

    6. உற்றது உரைத்தல் விடை

    7. உறுவது கூறல் விடை

    8. இனமொழி விடை

  • இவற்றில், முதல் மூன்றும் நேரடி விடைகளாக இருப்பதால் 'வெளிப்படை விடைகள்' எனவும் அடுத்த ஐந்து விடைகளும் குறிப்பாக இருப்பதால்' குறிப்பு விடைகள்' எனவும் கொள்ளலாம்.
  • சுட்டுவிடை:

    சுட்டிக் கூறும் விடை

    (எ.கா)
    ' கடைத்தெரு எங்குள்ளது?' என்ற வினாவிற்கு , 'வலப்பக்கத்தில் உள்ளது' எனக் கூறல்.

    மறைவிடை:

    மறுத்துக் கூறும் விடை

    (எ.கா)
    ' கடைக்குப் போவாயா? ' என்ற கேள்விக்குப் 'போக மாட்டேன்' என மறுத்துக் கூறுதல்

    நேர்விடை:

    உடன்பட்டுக் கூறும் விடை

    (எ.கா)
    ' கடைக்குப் போவாயா?' என்ற கேள்விக்குப் 'போவேன்' என்று உடன்பட்டுக் கூறுதல்

    ஏவல்விடை:

    மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை

    (எ.கா)
    இது செய்வாயா? என்று வினவிய போது 'நீயே செய்' என்று ஏவிக் கூறுவது.

    வினா எதிர்வினாதல் விடை:

    வினாவிற்கு விடையாக இன்னொரு வினாவைக் கேட்பது

    (எ.கா)
    ' என்னுடன் ஊருக்கு வருவாயா?' என்ற வினாவிற்கு 'வராமல் இருப்பேனா?' என்று கூறுவது.

    உற்றது உரைத்தல் விடை:

    வினாவிற்கு விடையாக ஏற்கனவே நேர்ந்ததைக் கூறல்.

    (எ.கா)
    ' நீ விளையாடவில்லையா?' என்ற வினாவிற்குக் 'கால் வலிக்கிறது' என்று உற்றதை உரைப்பது.

    உறுவது கூறல் விடை:

    வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதைக் கூறல்

    (எ.கா)
    'நீ விளையாடவில்லையா?' என்ற வினவிற்குக் 'கால் வலிக்கும்' என்று உரைப்பது.

    இனமொழி விடை:

    வினாவிற்கு விடையாக இனமான மற்றொன்றை விடையாகக் கூறல்

    (எ.கா)
    'உனக்குக் கதை எழுதத் தெரியுமா?' என்ற வினாவிற்குக் 'கட்டுரை எழுதத் தெரியும்' என்று கூறுவது.
    'சுட்டு மறைநேர் ஏவல் வினாதல்
    உற்ற(து) உரைத்தல் உறுவது கூறல்
    இனமொழி எனும்எண் இறையுள் இறுதி
    நிலவிய ஐந்தும்அப் பொருண்மையின் நேர்ப'

    என்று கூறும் நூல் – நன்னூல்.

    பொருள்கோள்

    செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்குப் 'பொருள்கோள்' என்று பெயர். பொருள்கோள் எட்டு வகைப்படும்.
    1. ஆற்றுநீர்ப் பொருள்கோள்

    2. மொழிமாற்றுப் பொருள்கோள்

    3. நிரல்நிறைப் பொருள்கோள்

    4. விற்பூட்டுப் பொருள்கோள்

    5. தாப்பிசைப் பொருள்கோள்

    6. அளைமறிப்பாப்புப் பொருள்கோள்

    7. கொண்டு கூட்டுப் பொருள்கோள்

    8. அடிமறிமாற்றுப் பொருள்கோள்

    ஆற்றுநீர்ப்பொருள்கோள்:

    பாடலின் தொடக்கம் முதல் முடிவுவரை ஆற்றுநீரின் போக்கைப்போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைந்தால் அது 'ஆற்றுநீர்ப்பொருள்கோள்' ஆகும்.

    (எ.கா)
    "சொல்லரும் சூல்பசும் பாம்பின் தோற்றம் போல்
    மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார்
    செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்த நூல்
    கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே'

    என்ற பாடல் இடம் பெற்ற நூல் – சீவகசிந்தாமணி

    பாடலின்பொருள்:

  • நெற்பயிர், கருவுற்ற பச்சைப் பாம்பின் வடிவம் போல் கருக்கொண்டு, பின்பு கதிர்விட்டு செல்வம் சேர்ந்தவுடன் பண்பற்ற மக்கள் பணிவின்றித் தலை நிமிர்ந்து நிற்பது போல் குத்திட்டு நின்று, முடிவில் கதிர் முற்றியவுடன் கற்றவர்கள் வணங்குதல் போல் வளைந்து காய்ந்தன.

  • நெல் என்னும் எழுவாய் அதன் தொழில்களான இருந்து, ஈன்று, நிறுவி, இறைஞ்சி என்னும் வினையெச்சங்களைப் பெற்றுக் 'காய்த்தவே' என்னும் பயனிலையைக் கொண்டு முடிந்தது.

  • பாடலின் தொடக்கம் முதல் முடிவுவரை ஆற்றுநீரின் போக்கைப் போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைந்ததால் இது 'ஆற்றுநீர்ப்பொருள்கோள்'ஆகும்.

  • 'மற்றைய நோக்காது அடிதொறும் வான்பொருள்
    அற்று அற்று ஒழுகும் அஃது யாற்றுப் புனலே'

    என்று ஆற்றுநீர்ப் பொருள்கோளைப் பற்றிக் கூறும் நூல் – நன்னூல்

    நிரல்நிறைப் பொருள்கோள்:

  • ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிரல்நிறையாக (வரியையாக) அமைந்து வருவது 'நிரல்நிறைப்பொருள்கோள்' ஆகும்.

  • இது 'முறை நிரல்நிறைப் பொருள்கோள்', 'எதிர்நிரல் நிறைப் பொருள்கோள்' என இருவகைப்படும்.
  • முறை நிரல்நிறைப் பொருள்கோள்:

    செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்ச்சொற்களை அல்லது வினைச்சொற்களை வரிசையாக நிறுத்தி, அவை ஏற்கும் பயனிலைகளையும் அவ்வரிசைப்படியே நிறுத்திப் பொருள் கொள்வது 'முறை நிரல்நிறைப் பொருள்கோள்' ஆகும்.

    (எ.கா)
    'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது'

  • இக்குறளில் பண்பு, பயன் என்ற இரு சொற்களை வரிசைப்படுத்தி அவற்றிற்குரிய விளைவுகளாக அன்பு, அறன் என்று வரிசைப்படுத்தி உள்ளார்.

  • அவற்றை இல்வாழ்க்கையின் பண்பு, அன்பு என்றும் அதன் பயன், அறன் என்றும் பொருள் கொள்ள வேண்டும். எனவே அன்புக்குப் பண்பும் அறத்துக்குப் பயனும் பயனிலைகளாக – நிரல் நிறையாக – நிறுத்திப் பொருள்கொள்வதால் இப்பாடல் 'முறை நிரல்நிறைப் பொருள்கோள்' எனப்படும்.
  • எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்:

    செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராகக் கொண்டு பொருள் கொள்ளுதல் ' எதிர் நிரல் நிறைப் பொருள்கோள்' ஆகும்.

    (எ.கா)
    'விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
    கற்றாரோடு ஏனை யவர்'

  • இக்குறளில் முதல் அடியில் விலங்கு, மக்கள் என்று எழுவாய்களை வரிசைப்படுத்திவிட்டு அடுத்த அடியில் பயனிலைகளாகக் கற்றார், கல்லாதார் (ஏனையவர்) என வரிசைப்படுத்தியுள்ளனர்.

  • அவற்றைக் கற்றார் மக்கள் என்றும் , கல்லாத ஏனையவர் விலங்குகள் என்றும் எதிர் எதிராகக் கொண்டு பொருள் கொள்ள வேண்டும். எனவே இக்குறள் 'எதிர் நிரல் நிறைப் பொருள்கோள்' ஆகும்.
  • கொண்டு கூட்டுப் பொருள்கோள்:

    ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள் கொள்வது கொண்டு கூட்டுப் பொருள்கோளாகும்.

    (எ.கா)
    'ஆலத்து மேல குவளை குளத்துள
    வாலின் நெடிய குரங்கு' ————— மயிலை நாதர் உரை

  • மேற்கண்ட பாடலில் ஆலத்து மேல் குவளை என்றும் குளத்தில் வாலின் நெடிய குரங்கு என்றும் பொருள் கொண்டால் பொருத்தமற்றதாகிவிடும்.

  • இதில் ஆலத்து மேல குரங்கு, குலத்துள குவளை – என்று கருத்தைக் கொண்டு அங்குமிங்கும் கொண்டு பொருள்கோள் அமைந்திருப்பதால் இது கொண்டுகூட்டுப் பொருள்கோள் எனப்படும்.

  • 'யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை
    ஏற்புழி இசைப்பது கொண்டு கூட்டே'

    என்று கொண்டுகூட்டுப் பொருள்கோள் பற்றிக் கூறும் நூல் – நன்னூல்

  • 'மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச்சங்கம் வைத்தும்' என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி – சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

  • 'அருந்துணை' என்பதைப் பிரித்தால் 'அருமை+துணை' எனப் பிரியும்.

  • 'இங்கு நகரப் பேருந்து நிற்குமா?' என்று வழிப்போக்கர் கேட்பது 'அறியா வினா'.

  • 'அதோ, அங்கே நிற்கும். 'என்று மற்றொருவர் கூறியது 'சுட்டுவிடை'

  • 'அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
    மருளை அகற்றி மதிக்கும் தெருளை'

    என்ற நீதி வெண்பா பாடலடிகளில் குறிப்பிடப்படுவது – கல்வி

    'வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து
    வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – நெஞ்சை
    அள்ளும் சிலப்பதி காரமென்றோர் – மணி
    யாரம் படைத்த தமிழ்நாடு'

    என்ற பாடலை எழுதியவர் – பாரதியார்

    'அறைக்குள் யாழிசை
    ஏதென்று சென்று
    எட்டிப் பார்த்தேன்;
    பேத்தி,
    நெட்டுருப் பண்ணினாள்
    நீதிநூல் திரட்டையே.'

    என்ற கவிதையை எழுதியவர் – பாரதிதாசன்

    நூல்களும்ஆசிரியர்களும்:

  • சிறந்த சிறுகதைகள் பதின்மூன்று – தமிழில் வல்லிக்கண்ணன்

  • குட்டி இளவரசன் – தமிழில் வெ.ஸ்ரீராம்

  • ஆசிரியரின் டைரி – தமிழில் எம்.பி.அகிலா

  • பாடம் 6 – நிலா முற்றம்

    நிகழ்கலை

  • பன்னெடுங்காலமாக மக்களால் விரும்பப்படும் மரபார்ந்த கலைலளில் ஒன்று கரக்காட்டம். இந்த நடனம் 'கரகம்', 'கும்பாட்டம்'என்றும் அழைக்கப்படுகிறது.

  • 'நீரற வறியாக் கரகத்து' என்ற புறநானூற்றுப் பாடலடியில் கரகம் என்ற சொல் இடம் பெறுகிறது.

  • சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களில் 'குடக்கூத்து' என்ற ஆடலும் குறிப்பிடப்படுகிறது.

  • இதுவே கரகாட்டத்திற்கு அடிப்படை என்றும் கருதப்படுகிறது.

  • இது தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருநெல்வேலி முதலிய மாவட்டங்களில் நிகழ்த்தப்படுகிறது.

  • மயில் வடிவுள்ள கூட்டுக்குள் ஒருவர் தன் உருவத்தை மறைத்துக்கொண்டு, நையாண்டி மேளத்திக்கேற்ப ஆடும் ஆட்டமே மயிலாட்டமாகும்.

  • கா-என்பதற்குப் பாரந்தாங்கும் கோல் என்று பொருள். இருமுனைகளிலும் சம எடைகளைக் கட்டிய தண்டினைத் தோளில் சுமந்து ஆடுவது காவடியாட்டம். காவடியின் அமைப்புக்கேற்ப மச்சக்காவடி, சர்ப்பக்காவடி, பூக்காவடி, தேர்க்காவடி, பறவைக்காவடி என்று அவற்றை அழைக்கின்றனர்.

  • இலங்கை, மலேசியா உட்பட புலம்பெயர் தமிழர் வாழும் பிற நாடுகளிலும் காவடியாட்டம் ஆடப்படுகிறது.

  • ஓரே நிறத் துணியை முண்டாசுபோலக் கட்டியும் காலில் சலங்கை அணிந்தும் கையில் வைத்துள்ள சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஒயிலாக ஆடும் குழு ஆட்டமே ஒயிலாட்டம் ஆகும்.

  • தேவராட்டம், வானத்துத் தேவர்கள் ஆடிய ஆட்டம் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. இது ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டம். உறுமி என பொதுவாக அழைக்கப்படும் 'தேவதுந்துபி' தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி ஆகும்.

  • இவ்வாட்டத்தில் பெரும்பாண்மையாக 08 முதல் 13 கலைஞர்கள் கலந்து கொள்ள வேண்டுமென்பது பொது மரபாக உள்ளது.

  • 'போலச்செய்தல்' பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக்காட்டும் கலைகளில் பொய்க்கால் குதிரையாட்டமும் ஒன்று. மரத்தாலான பொய்க்காலில் நின்றுகொண்டும் குதிரை வடிவுள்ள கூட்டை உடம்பில் சுமந்து கொண்டும் ஆடும் ஆட்டமே பொய்க்கால் குதிரையாட்டம். அரசன், அரசி வேடமிட்டு ஆடப்படும் இவ்வாட்டம் புரவி ஆட்டம், புரவி நாட்டியம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

  • இது மராட்டியர் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

  • பொய்க்கால் குதிரையாட்டம் இராஜஸ்தானில் 'கச்சிகொடி' என்றும் கேரளத்தில் 'குதிரைக்களி' என்றும் அழைக்கப்படுகிறது.

  • 'தப்பு' என்ற தோற்கருவியை இசைத்துக்கொண்டே, அதன் இசைக்கு ஏற்ப ஆடுகின்ற நிகழ்கலையே தப்பாட்டமாகும். ஆண்கள் மட்டுமே ஆடிவந்த இந்த ஆட்டம் தற்போது பெண்களாலும் ஆடப்படுகிறது.

  • இவ்வாட்டம் தப்பாட்டம், தப்பட்டை, தப்பு என்றும் அழைக்கப்படுகிறது. தப்பு என்பது வட்ட வடிவமாக அமைந்துள்ள அகன்ற தோற்கருவி ஆகும். இதனைப் பறை என்றும் அழைப்பர். தொல்காப்பியம் குறிப்பிடும் கருப்பொருள்களில் ஒன்றாக 'பறை' இடம் பெறுகிறது.

  • 'தகக தகதகக தந்தத்த தந்தகக
    என்று தாளம்
    பதலை திமிலைதுடி தம்பட்ட மும் பெருக'

    என்று தப்பாட்ட இசை குறித்து அருணகிரிநாதர் திருப்புகழில் பதிவு செய்துள்ளார்.

  • தமிழக மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது புலி ஆட்டமாகும். பாட்டும் வசனமும் இல்லாத ஆட்டங்களில் புலி ஆட்டமும் ஒன்று.

  • நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலையே தெருக்கூத்து. இப்பெயர், அது நிகழ்த்தப்பட்ட இடத்தை அடிப்படியாகக் கொண்டு அமைந்தது. திரௌபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாகவும் இது இருக்கிறது.

  • தெருக்கூத்து, வேளாண்மை செய்வோரின் கலையாக இருந்தது. 'அருச்சுனன்தபசு' என்பது மழை வேண்டி நிகழ்த்தப்படுவதாக இருக்கிறது.

  • தோலில் செய்த வெட்டு வரைபடங்களை, விளக்கின் ஒளி ஊடுருவும் திரைச்சீலையில் பொருத்தி, கதைக்கேற்ப மேலும் கீழும் பக்கவாட்டிலும் அசைத்துக்காட்டி, உரையாடியும் பாடியும் காட்டுவது தோற்பாவைக் கூத்து.

  • தோலால் ஆன பாவையைக் கொண்டு நிகழ்த்தும் கலையாதலால் தோற்பாவை என்னும் பெயர் பெற்றது.

  • திருக்குறளில் மரப்பாவையைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • திருவாசகத்திலும் பட்டினத்தார் பாடலிலும் தோற்பாவைக்கூத்து பற்றிய செய்திகளைக் காண முடிகிறது.

  • ஊர் ஊராகச் சென்று நிகழ்த்துகிற கூட்டுக்குடும்பக் கலையாகத் தோற்பாவைக்கூத்து விளங்குகிறது.

  • தோற்பாவைக் கூத்து கையுறைப் பாவைக்கூத்து, பொம்மலாட்டம் என்பனவாகவும் மாற்றம் பெற்றுள்ளது.

  • மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் புகழ்மிக்க பகுதியில், 'இராச சோழன் தெரு' என்பது இன்றும் உள்ளது. இது மாமன்னன் இராசராச சோழன் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட சிறப்பினை உணர்த்துகின்றது.

  • தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர் – கூத்துப்பட்டறை ந.முத்துசாமி என்ற கலைஞாயிறு

  • 'நாடகக் கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்' என்றவர் – கூத்துப்பட்டறை ந.முத்துசாமி என்ற கலைஞாயிறு

  • தமிழ்நாட்டின் வழிவழி நாடக முறையான கூத்துக்கலையின் ஒப்பனை முறை, கதை சொல்லும் முறைகளையும் எடுத்துக்கொண்டு புதுவிதமான நாடகங்களை உருவாக்கியவர் – கூத்துப்பட்டறை ந.முத்துசாமி என்ற கலைஞாயிறு

  • நாடகத்தில் பயன்படுத்தும் நேரடி இசை முறையை அறிமுகம் செய்து இசையிலும் மாற்றங்களை நிகழ்த்தியவர் – கூத்துப்பட்டறை ந.முத்துசாமி என்ற கலைஞாயிறு. இவரின் நாடகங்கள் பெரும்பாலும் சமூக அரசியல் மாற்றங்களைப் பேசின.

  • கூத்துப்பட்டறை ந.முத்துசாமி என்ற கலைஞாயிறு அவர்கள் இந்திய அரசின் 'தாமரைத்திரு' விருதினையும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றார்.

  • பூத்தொடுத்தல்

    'இந்தப் பூவைத் தொடுப்பது எப்படி?
    சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச்
    சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள்
    இறுக்கி முடிச்சிட்டால்
    காம்புகளின் கழுத்து முறியும்
    தளரப் பிணைத்தால்
    மலர்கள் தரையில் நழுவும்
    வாசலில் மரணம் நிற்பதறிந்தும்
    வருந்தாமல் சிரிக்கும்
    இந்தப் பூவை
    எப்படித் தொடுக்க நான் –
    ஒருவேளை,
    என் மனமே நூலாகும்
    நுன்மையுற்றாலொழிய'

    என்ற கவிதையை எழுதியவர் – கவிஞர் உமா மகேஸ்வரி

  • கவிஞர் உமா மகேஸ்வரி மதுரை மாவட்டத்தில் பிறந்தவர். தற்போது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் வாழ்ந்து வருகிறார். இவர் 'நட்சத்திரங்களின் நடுவே', 'வெறும்பொழுது', 'கற்பாவை'உள்ளிட்ட கவிதைத் தொகுதிகளைப் படைத்துள்ளார்; கவிதை, புதினம், சிறுகதை என்று பல தளங்களில் படைத்து வருகிறார்.

  • முத்துக்குமாரசாமிப் பிள்ளைத்தமிழ்

  • முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழை இயற்றியவர் – குமரகுருபரர்

  • ஏற்றம் இறைத்தலுக்கு ஏற்ற சந்தத்தை கொண்டிருப்பது – நாட்டுப்புறத்தமிழ்

  • குழந்தையின் தலை அசைத்தலுக்கும் சந்தம் அமைத்துத் தருவது – பிள்ளைத்தமிழ்

  • 'செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத்
    திருவரை யரைஞா ணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப்
    பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்
    பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்
    கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்
    கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட
    வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை
    ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை'

    இந்தப் பாடல் முத்துக்குமாரசாமிப் பிள்ளைத்தமிழில் செங்கீரைப்பருவத்தில் இடம்பெற்றுள்ளது.

    பாடலின் பொருள்:

  • திருவடியில் அணிந்த சிறு செம்பொன் கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடட்டும். இடையில் அரைஞாண் மணியோடு ஒளிவீசுகின்ற அரைவடங்கள் ஆடட்டும். பசும்பொன் என ஒளிரும் தொந்தியுடன் சிறுவயிறு சரிந்தாடட்டும்.

  • பட்டம் கட்டிய நெற்றியில் விளங்குகின்ற பொட்டுடன் வட்ட வடிவான சுட்டி பதிந்தாடட்டும். கம்பிகளால் உருவான குண்டலங்களும் காதின் குழைகளும் அசைந்தாடட்டும்.

  • உச்சிக் கொண்டையும் அதில் சுற்றிக் கட்டப்பட்டுள்ள ஒளியுள்ள முத்துகளோடு ஆடட்டும். தொன்மையான வைத்தியநாதபுரியில் எழுந்தருளிய முருகனே! இவற்றுடன் அழகிய பவளம் போன்ற திருமேனியும் ஆட, செங்கீரை ஆடுக.
  • சொல்லும் பொருளும்:

  • பண்டி – வயிறு

  • அசும்பிய – ஒளிவீசுகிற

  • முச்சி – தலையுச்சிக் கொண்டை
  • இலக்கணக்குறிப்பு:

  • குண்டலமும் குழைகாதும் – எண்ணும்மை

  • ஆடுக – வியங்கோள் வினைமுற்று.
  • செங்கீரைப்பருவம்:

  • செங்கீரைச் செடி காற்றில் ஆடுவது போன்று குழந்தையின் தலை 5-6 ஆம் மாதங்களில் மென்மையாக அசையும். இப்பருவத்தைச் செங்கீரைப் பருவம் என்பர்.

  • இப்பருவத்தில் குழந்தை தன் இருகை ஊன்றி, ஒரு காலினை மடக்கி, மற்றொரு காலை நீட்டி தலைநிமிர்ந்தும் முகமசைந்தும் ஆடும்.

  • அணிகலன்கள்

  • சிலம்பு, கிண்கிணி – காலில் அணிவது

  • அரைநாண் – இடையில் அணிவது

  • சுட்டி – நெற்றியில் அணிவது

  • குண்டலம், குழை – காதில் அணிவது

  • சூழி – தலையில் அணிவது
  • பிள்ளைத்தமிழ் பற்றியக் குறிப்புகள்:

    • முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழை இயற்றியவர் – குமரகுருபரர்.

    • பிள்ளைத்தமிழ் 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.

    • இதில் இறைவனையோ, தலைவரையோ, அரசனையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடுவர்.

    • பாட்டுடைத் தலைவரின் செயற்கரிய செயல்களை எடுத்தியம்புவது பிள்ளைத்தமிழ்.

    • பத்துப்பருவங்கள் அமைத்து பருவத்திற்குப் பத்துப் பாடல் என நூறு பாடல்களால் இது பாடப்பெறும்.

    • இதுஆண்பாற்பிள்ளைத்தமிழ், பெண்பாற்பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும்.

    ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்குரிய பத்துப் பருவங்கள்:

    1. காப்பு

    2. செங்கீரை

    3. தால்

    4. சப்பாணி

    5. முத்தம்

    6. வருகை

    7. அம்புலி

    8. சிற்றில்

    9. சிறுபறை

    10. சிறுதேர்

    பெண்பாற் பிள்ளைத் தமிழுக்குரிய பத்துப் பருவங்கள்:

    1. காப்பு

    2. செங்கீரை

    3. தால்

    4. சப்பாணி

    5. முத்தம்

    6. வருகை

    7. அம்புலி

    8. கழங்கு

    9. அம்மானை

    10. ஊசல்
  • இவற்றில் முதல் ஏழு பருவங்கள் ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்கும், பெண்பாற் பிள்ளைத்தமிழுக்கும் பொதுவானவை.

  • குமரகுருபரரின் காலம் கி.பி. 17ஆம் நூற்றாண்டு

  • குமரகுருபரர் தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்.
  • குமரகுருபரர் இயற்றிய நூல்கள்:

    • கந்தர் கலிவெண்பா

    • மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்

    • மதுரைக் கலம்பகம்

    • சகலகலாவல்லிமாலை

    • நீதிநெறி விளக்கம்

    • திருவாரூர் மும்மணிக் கோவை

    கம்பராமாயணம்

  • "கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்" என்று பெருமைப்படுபவர் – பாரதியார்.

  • கம்பராமாயணத்தை இயற்றியவர் – கம்பர்

  • 'தாதுகு சோலைதோறுஞ் சண்பகக் காடுதோறும்
    போதவிழ் பொய்கைதோறும் புது மணற் றடங்கடோறும்
    மாதவி வேலிப்பூக வனம்தோறும் வயல்கடோறு
    மோதிய வுடம்புதோறு முயிரென வுலாயதன்றே'

    என்ற பாடல் கம்பராமாயணத்தில் பாலகாண்டம் – ஆற்றுப்படலத்தில் இடம்பெற்றுள்ளது.

    பாடலின் பொருள்:

    மகரந்தம் சிந்துகின்ற சோலைகள் , மரம் செறிந்த செண்பகக் காடுகள், அரும்புகள் அவிழ்ந்து மலரும் பொய்கைகள், புதுமணல் தடாகங்கள், குருக்கத்தி, கொடி வேலியுடைய கமுகந்தோட்டங்கள், நெல் வயல்கள் இவை அனைத்திலும் பரவிப் பாய்கிறது சரயு ஆறு. அது, ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல பல இடங்களில் பாய்கிறது.

    'தண்டலை மயில்களாட தாமரை விளக்கந் தாங்க,
    கொண்டல்கள் முழவினேங்க குவளைகண்
    விழித்து நோக்கத்,
    தெண்டிரை யெழினி காட்ட தேம்பிழி மகரயாழின்
    வண்டுகளி னிதுபாட மருதம்வீற்றி ருக்கும்மாதோ'

    என்ற பாடல் கம்பராமாயணத்தில் பாலகாண்டம் – நாட்டுப்படலத்தில் இடம்பெற்றுள்ளது.

    பாடலின்பொருள்:

    குளிர்ந்த சோலைகளில் மயில்கள் அழகுற ஆட விரிதாமரை மலர்கள் விளக்குகள் ஏற்றியது போல் தோன்ற, சூழும் மேகங்கள் மத்தள ஒலியாய் எழ, மலரும் குவளை மலர்கள் கண்கள் விழித்துப் பார்ப்பதுப் போல் காண, நீர் நிலைகள் எழுப்பும் அலைகள் திரைச்சீலைகளாய் விரிய, மகர யாழின் தேன் ஒத்த இசை போல் வண்டுகள் ரீங்காரம் பாட மருதம் வீற்றிருக்கிறது.

    'வண்மையில்லை யோர்வறுமை யின்மையால்
    திண்மயில்லை நேர்செறுந ரின்மையால்
    உண்மையில்லை பொய்யுரை யிலாமையால்
    வெண்மையில்லை பல்கேள்வி மேவலால்'

    என்ற பாடல் கம்பராமாயணத்தில் பாலகாண்டம்-நாட்டுபடலத்தில் இடம்பெற்றுள்ளது.

    பாடலின்பொருள்:

    கோசல நாட்டில் வறுமை சிறிதும் இல்லாததால், கொடைக்கு அங்கே இடமில்லை; நேருக்கு நேர் போர் புரிபவர் இல்லாததால், உடல் வலிமையை எடுத்துக்காட்ட வாய்ப்பில்லை; பொய்மொழி இல்லாமையால், மெய்மை தனித்து விளங்கவில்லை; பல வகை கேள்விச் செல்வம் மிகுந்து விளங்குவதால் அங்கு அறியாமை சிறிதும் இல்லை.

    'வெய்யோன் ஒளி தன் மேனியில் விரி சோதியில் மறையப்
    பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்;
    மையோ? மரகதமோ? மறிகடலோ? மழை முகிலோ?
    ஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான்'

    என்ற பாடல் கம்பராமாயணத்தில் அயோத்தியாகாண்டம் – கங்கைப்படலத்தில் இடம்பெற்றுள்ளது.

    பாடலின்பொருள்:

    பகலவன் பட்டொளி இராமனின் நீலமேனி ஒளியில் பட்டு இல்லையெனும்படி மறைந்துவிட, இடையே இல்லையெனும்படியான நுண்ணிய இடையாள் சீதையொடும், இளையவன் இலக்குவனொடும் போனான். அவன் நிறம் மையோ? பச்சை நிற மரகதமோ? மறிக்கின்ற நீலக் கடலோ? கார்மேகமோ? ஐயோ! ஒப்பற்ற அழியாத அழகினை உடைய வடிவு கொண்டவன் இராமன்.

    'ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவாரோ?
    வேழ நெடும் படை கண்டு விலங்கிடும் வில் ஆளோ?
    தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ?
    ' ஏழைமை வேடன் இறந்திலன் ' என்று எனை ஏசாரோ ?'

    பாடலின்பொருள்:

    ஆழமும் பெரிய அலைகளையும் உடைய கங்கை ஆற்றைக் கடந்து செல்வார்களா? யானைகள் கொண்ட சேனையைக் கண்டு, புறமுதுகு காட்டி விலகிச் செல்கின்ற வில்வீரனோ நான்! தோழமை என்று இராமர் சொன்ன சொல், ஒப்பற்ற சொல் அல்லவா? தோழமையை எண்ணாமல் இவர்களைக் கடந்து போகவிட்டால் அற்பனாகிய இந்த வேடன் இறந்திருக்கலாமே என உலகத்தார் என்னைப் பழி சொல்ல மாட்டார்களா?

    "உறங்கிகின்ற கும்பகன்ன ! உங்கள் மாய வாழ்வெ லாம்
    இறங்குகின்றது! இன்று காண் ; எழுந்திராய்! எழுந்திராய்!
    கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே,
    உறங்குவாய், உறங்குவாய் ! இனிக் கடந்து உறங்குவாய் !"

    பாடலின்பொருள்:

    உறங்குகின்ற கும்பகுருணனே! உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்குவதற்குத் தொடங்கிவிட்டது. அதனைக் காண்பதற்காக எழுந்திடுவாய்! எழுந்திடுவாய்! காற்றாடி போல எல்லா இடங்களிலும் திரிகின்ற வில்லைப் பிடித்த காலனுக்குத் தூதரானவர் கையில் இனிப் படுத்து உறங்குவாயாக!

    கம்பராமாயணம் பற்றியக் குறிப்புகள்:

    • கம்பர் இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி 'இராமாவதாரம்' எனப் பெயரிட்டார். இது கம்பராமாயணம் என வழங்கப்படுகிறது.

    • கம்பராமாயணம் ஆறு காண்டங்களை உடையது.

    • 'கல்வியில் பெரியவர் கம்பர்', 'கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்' போன்ற முதுமொழிகளுக்கு உரியவர் – கம்பர்.

    • கம்பர் சோழநாட்டுத் திருவெழுந்தூரில் பிறந்தார்.

    • கம்பரை ஆதரித்தவர் – திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல்

    • 'விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர்கம்பன்' என்று புகழப்பெற்றவர் – கம்பர்

    கம்பர் இயற்றிய நூல்கள்:

    • கம்பராமாயணம்

    • சரசுவதி அந்தாதி

    • சடகோபர் அந்தாதி

    • திருக்கை வழக்கம்

    • ஏரெழுபது

    • சிலைஎழுபது

    பாய்ச்சல்

  • 'பாய்ச்சல்' என்ற சிறுகதையின் ஆசிரியர் – சா.கந்தசாமி

  • 'பாய்ச்சல்' என்னும் சிறுகதை இடம்பெற்றுள்ள சிறுகதைத் தொகுப்பு – 'தக்கையின் மீது நான்கு கண்கள்'

  • 'சா. கந்தசாமி' அவர்கள் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையைச் சார்ந்தவர்.

  • 'சா. கந்தசாமி' அவர்கள் தாம் எழுதிய 'சாயாவனம்' எனும் புதினத்தால் எழுத்துலகில் புகழ்பெற்றார்.

  • 'விசாரணைக்கமிஷன்' என்னும் புதினத்திற்கு சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றவர் – 'சா.கந்தசாமி'

  • 'சுடுமண்சிலைகள்' என்ற குறும்படத்திற்கு அனைத்துலக விருதைப் பெற்றவர் – 'சா.கந்தசாமி'
  • சா.கந்தசாமி அவர்கள் எழுதிய புதினங்கள்:

    • தொலைந்து போனவர்கள்

    • சூர்யவம்சம்

    • சாந்தகுமாரி
    இராமநாதபுரத்தில் உள்ள தொண்டிஎன்னும் இடத்தைப் பற்றி,

    'ஓங்கு இரும் பரப்பின்
    வங்க ஈட்டத்து தொண்டியோர் '

    என்று சிலப்பதிகாரத்தில், ஊர்காண்காதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இலக்கணம்

    அகப்பொருள் இலக்கணம்:

  • பொருள் என்பது ஒழுக்க முறை.

  • தமிழர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்வியலை அகம், புறம் என வகுத்தார்கள். இதனைப் பொருள் இலக்கணம் விளக்குகிறது.

  • அன்புடைய தலைவன், தலைவி இடையிலான உறவுநிலைகளைக் கூறுவது – அகத்திணை

  • குற்ஞ்சி, முல்லை, மருத, நெய்தல், பாலை என்பன அன்பின் ஐந்திணைகளாகும்.

  • முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியன ஐந்திணைகளுக்கு உரியன.

  • நிலமும் பொழுதும் முதற்பொருள் எனப்படும்.
  • ஐவகை நிலங்கள்:

    • குறிஞ்சி- மலையும் மலை சார்ந்த இடமும்

    • முல்லை- காடும் காடு சார்ந்த இடமும்

    • மருதம்- வயலும் வயல் சார்ந்த இடமும்

    • நெய்தல்- கடலும் கடல் சார்ந்த இடமும்

    • பாலை- சுரமும் சுரம் சார்ந்த இடமும்

  • பொழுது பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும்.

  • ஓராண்டின் ஆறு கூறுகளைப் பெரும்பொழுது என்று நம் முன்னோர் பிரித்துள்ளனர்.
  • பெரும்பொழுது (ஓராண்டின் ஆறு கூறுகள்):

    • கார்காலம் – ஆவணி, புரட்டாசி

    • குளிர் காலம் – ஐப்பசி, கார்த்திகை

    • முன்பனிக் காலம் – மார்கழி, தை

    • பின்பனிக் காலம் – மாசி, பங்குனி

    • இளவேனிற் காலம் – சித்திரை, வைகாசி

    • முதுவேனிற் காலம் – ஆனி, ஆடி
    ஒரு நாளின் ஆறு கூறுகளைச் சிறுபொழுது என்று பிரித்துள்ளனர்.
    • காலை – காலை 6 மணி முதல் 10 மணி வரை

    • நண்பகல் – காலை 10 மணி முதல் 2 மணி வரை

    • எற்பாடு – பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை

    • மாலை – மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை

    • யாமம் – இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை

    • வைகறை – இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
  • ' எல் ' என்றால் ஞாயிறு. ' பாடு ' என்றால் மறையும் நேரம்.

  • எல் + பாடு = எற்பாடு. அதாவது சூரியன் மறையும் நேரம்.
  • திணையும் பொழுதும்:

    திணை – குறிஞ்சி
    பெரும்பொழுது – குளிர்காலம், முன்பனிக்காலம்
    சிறுபொழுது – யாமம்

    திணை – முல்லை
    பெரும்பொழுது- கார்காலம்
    சிறுபொழுது – மாலை

    திணை – மருதம்
    பெரும்பொழுது – ஆறு பெரும்பொழுதுகள்
    சிறுபொழுது – வைகறை

    திணை – நெய்தல்
    பெரும்பொழுது- ஆறு பெரும்பொழுதுகள்
    சிறுபொழுது – எற்பாடு

    திணை – பாலை
    பெரும்பொழுது- இளவேனில், முதுவேனில், பின்பனி
    சிறுபொழுது- நண்பகல்

    கருப்பொருள்கள்:

    ஓரு நிலத்திற்குரிய தெய்வம், மக்கள், தொழில், விலங்கு இவையெல்லாம் கருப்பொருள்கள் ஆகும்.

    குறிஞ்சித் திணைக்குரியக் கருப்பொருள்கள்:

    • தெய்வம் – சேயோன்

    • மக்கள் – பொருப்பன், வெற்பன், சிலம்பன், கொடிச்சி, குறவர், குறத்தியர், கானவர்

    • புள் (அ) பறவை – கிளி, மயில்

    • விலங்கு- சிங்கம், புலி, கரடி, யானை

    • ஊர் – சிறுகுடி

    • நீர் – அருவி நீர், சுனை நீர்

    • பூ – வங்கை, காந்தள், குறிஞ்சி

    • மரம் – சந்தனம், தேக்கு, அகில், மூங்கில்

    • உணவு – மலைநெல், தினை, மூங்கிலரிசி

    • பறை – தொண்டகப் பறை

    • யாழ் – குறிஞ்சி யாழ்

    • பண் – குறிஞ்சிப் பண்

    • தொழில் – வெறியாடல், மலை நெல் விதைத்தல், தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல்

    முல்லைத் திணைக்குரியக் கருப்பொருள்கள்:

    • தெய்வம் – மாயோன்

    • மக்கள் – குறும்பொறை, நாடன், தோன்றல், கிழத்தி, இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்

    • புள் (அ) பறவை – காட்டுக்கோழி

    • விலங்கு – மான், முயல்

    • ஊர் – பாடி

    • நீர் – குறுஞ்சுனை, கானறு

    • பூ – முல்லை, பிடவம், தோன்றி

    • மரம் – கொன்றை, காயா, குருந்தம்

    • உணவு – வரகு, சாமை, முதிரை

    • பறை – ஏறுகோட்பறை

    • யாழ் – முல்லை யாழ்

    • பண் – முல்லைப் பண்

    • தொழில் – சாமை, வரகு விதைத்தல், களைகட்டல், அரிதல்.

    மருதத் திணைக்குரியக் கருப்பொருள்கள்:

    • தெய்வம் – வேந்தன் (இந்திரன்)

    • மக்கள் – ஊரன், மகிழ்நன், மனைவி, உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்

    • புள் (அ) பறவை – நாரை, மகன்றில், அன்னம்

    • விலங்கு – எருமை, நீர்நாய்

    • ஊர் – பேரூர், மூதூர்

    • நீர் – ஆற்று நீர், கிணற்று நீர், குளத்து நீர்

    • பூ – தாமரை, குவளை

    • மரம் – மருதம், வஞ்சி, காஞ்சி

    • உணவு – செந்நெல், வெண்ணெல்

    • பறை – நெல்லரிகிணை, மணமுழவு

    • யாழ் – மருத யாழ்

    • பண் – மருதப் பண்

    • தொழில் – வயலில் களைகட்டல், நெல்லரிதல்

    நெய்தல் திணைக்குரியக் கருப்பொருள்கள்:

    • தெய்வம் – வருணன்

    • மக்கள் – சேர்ப்பன் , புலம்பன், நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர்

    • புள் (அ) பறவை – கடற்காகம்

    • விலங்கு – சுறாமீன்

    • ஊர் – பாக்கம், பட்டினம்

    • நீ – உவர் நீர்க் கேணி, சுவர் நீர்க் கேணி

    • பூ – நெய்தல், தாழை

    • மரம் – புன்னை, ஞாழல்

    • உணவு – உப்பும் மீனும் விற்றுப் பெற்ற பொருள்

    • பறை – மீன்கோட்பறை, நாவாய்ப் பம்பை

    • யாழ் – விளரியாழ்

    • பண் – செவ்வழிப் பண்

    • தொழில் – உப்பு உண்டாக்கல், விற்றல், மீன் பிடித்தல்

    பாலைத் திணைக்குரியக் கருப்பொருள்கள்:

    • தெய்வம் – கொற்றவை

    • மக்கள் – விடலை, மீளி, எயிற்றி, எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர்

    • புள் (அ) பறவை – புறா, பருந்து, கழுகு

    • விலங்கு – செந்நாய்

    • ஊர் – குறும்பு

    • நீர் – நீரில்லாக் குழி, கிணறு

    • பூ – குராஅம்பூ , மராம்பூ

    • மரம் – பாலை, உழிஞை, ஓமை

    • உணவு – வழியிற் பறித்த பொருள்

    • பறை – துடி

    • யாழ் – பாலையாழ்

    • பண் – பஞ்சுரப் பண்

    • தொழில் – போர் செய்தல், சூறையாடல்.
  • குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் – குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்

  • கோசல நாட்டில் கொடை இல்லாததன் காரணம் – அங்கு வறுமை இல்லாமை

  • கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா – கரக்கட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

  • 'அழைப்பு மணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார்.' என்ற தனிச்சொற்றொடர்களைக் கலவைச் சொற்றொடராக மாற்றும் போது 'அழைப்புமணி ஒலித்ததால் கயல்விழி கதவைத் திறந்தார்' என மாறும்.

  • 'கோல்டு பிஸ்கட்' என்பதன் தமிழ்மொழிச் சொல் – 'தங்கக் கட்டி'
  • நூல்களும் ஆசிரியர்களும்:

    • தேன்மழை – சுரதா

    • திருக்குறள் நீதி இலக்கியம் – க.த.திருநாவுக்கரசு

    • நாட்டார் கலைகள் – அ.கா.பெருமாள்

    திருக்குறள்

    'பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
    பொருளல்ல தில்லை பொருள்'

    பொருள்:

    ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வது செல்வம். அஃது இல்லாமல் உலகில் சிறந்த பொருள் வேறு இல்லை.
    இக்குறட்பாவில் 'சொற்பொருள் பின்வருநிலை அணி' பயின்று வந்துள்ளது.

    'குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தான்
    றுண்டாகச் செய்வான் வினை'

    பொருள்:

    தன் கைப்பொருளைக் கொண்டு ஒருவர் ஒரு செயலைச் செய்வது மலைமேல் பாதுகாப்பாக நின்று கொண்டு யானைப் போரைக் காண்பது போன்றது.
    இக்குறட்பாவில் 'உவமை அணி' பயின்று வந்துள்ளது.
    'இனிமையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
    இன்மையே இன்னா தது'

    பொருள்:

    ஒருவருக்கு வறுமையைப் போன்று துன்பம் தருவது எதுவென்றால் அது வறுமையே ஆகும்.
    இக்குறட்பாவில் 'சொற்பொருள் பின்வருநிலை அணி' இடம்பெற்றுள்ளது.

    'மக்களே போல்வர் கயவர்; அவரன்ன
    ஒப்பாரி யாம்கண்ட தில்'

    பொருள்:

    கயவர் மக்களைப் போலவே இருப்பர்; கயவர்க்கும் மக்களுக்கும் உள்ள தோற்ற ஒப்புமையை வேறெதிலும் நாம் கண்டதில்லை. இக்க்குறட்பாவில் 'உவமையணி' இடம்பெற்றுள்ளது.
    'தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
    மேவன செதொழுக லான்'

    பொருள்:

    தேவரும் கயவரும் ஒரு தம்மையர்; எவ்வாறு எனில் தேவர்களைப் போலக் கயவர்களும் தாம் விரும்புவனவற்றைச் செய்து ஒழுகுவர்.
    இக்குறட்பாவில் 'வஞ்சப்புகழ்ச்சி அணி' இடம் பெற்றுள்ளது.
    ' சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல்
    கொல்லப் பயன்படும் கீழ்'

    பொருள்:

    ஒருவர் தம் குறையைச் சொல்வதைக் கேட்டவுடனேயே உதவிசெய்வர் சான்றோர்; கரும்பைப் பிழிவது போல நெருக்கிப் பிழிந்தால்தான் பயன்படுவர் கயவர்.
    இக்குறட்பாவில்'உவமைஅணி' பயின்று வந்துள்ளது.

    புதுக்கவிதைக்கு ஏற்ற திருக்குறள்:

    'தக்காளியையும் வெண்டைக்காயையும்
    தள்ளுவண்டிக்காரர் தராசில் நிறுக்கையில்,
    தள்ளி நிற்கும் பிள்ளை,
    அவசியமாகக் கேட்கும் ஆயிரம் ரூபாயை
    எப்படிக் கொடுக்க என்றே அவர் மனம் யோசிக்கும்….
    ' அத்தனைக் காய்களையும் விற்றால்தான்
    மீதி ஐந்நூறாவது மிஞ்சும் ; என்ன செய்ய
    காய்கறி வாங்கியவர்
    கவனக் குறைவாகக் கொடுத்த
    இரண்டாயிரம் ரூபாயைக்
    கூப்பிட்டுத் தந்துவிட்டுப்
    பிள்ளைக்கு உதவ யாரிடம் கேட்கலாம்
    என்பதை அடுத்தபடி யோசிக்கும் அவே மனம் !'

    என்ற புதுக்கவிதைக்கு ஏற்ற திருக்குறள்
    'அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல்'

    பாடம் 7 – விதை நெல்

    சிற்றகல் ஒளி

  • இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1906 ஆம் ஆண்டு மிகவும் சிறப்புடைய ஆண்டாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டில்தான் காந்தியடிகள் சத்தியாக்கிரகம் என்ற அறப்போர் முறையை தென்னாப்பிரிக்காவில் தொடங்கி வைத்தார்.

  • வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கிய ஆண்டு – 1906

  • ம.பொ.சிவஞானம் அவர்கள் 1906 ஜூன் 26 ஆம் நாள் சென்னை ஆயிரம் விளக்கில் சால்வன் குப்பம் என்னும் பகுதியில் பிறந்தார்.

  • ம.பொ.சிவஞானம் அவர்களின் தந்தையார் பெயர்-பொன்னுசாமி. தாயார் பெயர்-சிவகாமி. பெற்றோர் இவருக்கு இட்டப்பெயர் 'ஞானப்பிரகாசம்'

  • 'சரபையர்' என்ற முதியவர் ஒருவர் இவருடைய பெயரை மாற்றி 'சிவஞானி' என்றே அழைத்தார். பின்னாளில் அவர் அழைத்த சிவஞானி என்னும் பெயரே சிறிது திருத்தத்துடன் 'சிவஞானம்' என்று நிலைபெற்றது.

  • ம.பொ.சிவஞானம் அவர்களது கேள்வி ஞானத்தைப் பெருக்கியதில் திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகளுக்கு மிகுந்த பங்குண்டு.

  • காந்தி-இர்வின்ஒப்பந்தம்நடைபெற்ற ஆண்டு – 1931

  • 1942 ஆகஸ்டு 8 ஆம் நாள், இந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்க புனித நாளாகும். அன்றுதான் 'இந்தியாவை விட்டு வெளியேறு' என்ற தீர்மானத்தைப் பம்பாயில் கூடிய அகில இந்திய பேராயக்கட்சி ஒரு மனதாக நிறைவேற்றியது.

  • இந்தியா விடுதலை அடைந்து மாநிலங்களை மொழிவாரியாகப் பிரிக்கும் போது ஆந்திரத் தலைவர்கள் சித்தூர் மாவட்டம் முழுவதையும் புதிதாக அமையவிருக்கும் ஆந்திர மாநிலத்துடன் இணைக்க விரும்பினார். அச்சூழலில் வடக்கெல்லைத் தமிழ் மக்களை ஒருங்கிணைத்துத் தமிழுணர்வு கொள்ளச் செய்தவர் – தமிழாசான் மங்கலங்கிழார்

  • சர்தார் கே.எம்.பணிக்கர் தலைமையில் மத்திய அரசால் அமைக்கப்பட்ட மொழிவாரி ஆணையம், சித்தூர் மாவட்டம் முழுவதையும் ஆந்திராவிற்கு கொடுத்துவிட்டது. இதனால் போராட்டம் வெடித்தது. 'மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது வேண்டும்.' என்று முழங்கினர். அதன் விளைவாக 'படாஸ்கர்ஆணையம்' அமைக்கப்பட்டு திருத்தணி வரையுள்ள தமிழ்நிலங்கள் மீட்கப்பட்டன. இப்போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் – 'ம.பொ.சிவஞானம்'

  • சென்னை மாகணத்திலிருந்து பிரிந்து ஆந்திரம் அமைவதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த ஒரு நபர் ஆணையம் – நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஆணையம்.

  • சென்னையை தமிழகத்திற்குத்தான் தர வேண்டும் என்று மாநகராட்சியின் சிறப்புக் கூட்டமொன்றை அப்போதைய மாநகரத் தந்தை 'செங்கல்வராயன்' தலைமையில் கூட்டி, சென்னை பற்றிய தீர்மானமொன்றை முன்மொழிந்து, 'தலையைக் கொடுத்தேனும், தலைநகரைக் காப்போம்' என்று முழங்கியவர் – ம.பொ.சிவஞானம் அவர்கள்

  • 25.03.1953 அன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரு நடுவணரசின் சார்பில் அதிகாரப்பூர்வமான உறுதிமொழியொன்றை வெளியிட்டார். அதன்படி ஆந்திர அரசின் தலைநகரம் ஆந்திர நாட்டின் எல்லைக்குள்ளேயே அமையும் என்று உறுதியளிக்கப்பட்டது. சென்னை தமிழருக்கே என்பதும் உறுதியானது.

  • ம.பொ.சிவஞானம் அவர்கள் முதன்முதலில் ஈடுபட்டது தெற்கெல்லை கிளர்ச்சியில் தான். இவர் தெற்கெல்லைப் பகுதிகளை கேரள (திருவிதாங்கூர்) முடியாட்சியிலிருந்து மீட்க போராடினார்.

  • தெற்கெல்லை கிளர்ச்சியில் திருவிதாங்கூர் ஆட்சி நடத்திய துப்பாக்கிச்சூடு காரணமாக உயிர் நீத்தவர்கள் – தேவசகாயம், செல்லையா

  • 'நேசமணி ' என்பவர் தென் திருவிதாங்கூரில் மிகுந்த செல்வாக்குடையவர். இவருடைய வருகைக்குப் பிறகு தெற்கெல்லைப் போராட்டம் வலுப்பெற்றது.

  • திருவிதாங்கூர் ஆட்சி அகன்று கேரள மாநிலம் உருவானது. அப்போது தமிழர்கள் மிகுதியாக வாழக்கூடிய தேவிக்குளம், பீர்மேடு, தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு, நாகர்கோவில் ஆகிய பகுதிகள் தமிழகத்தோடு சேர வேண்டும் என்று தமிழரசுக் கழகம் போராட்டத்தைத் தொடங்கியது.

  • ஆனால் மேற்சொன்ன பகுதிகளோடு தமிழகத்திலிருந்த கோவை மாவட்டத்தின் மேற்குப்பகுதி, நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகமண்டலம், கூடலூர் ஆகியவற்றையும் பிரித்தெடுத்து கேரளத்துடன் இணைக்க வேண்டுமன்று கேரளத்தவர், பசல் அலி ஆணையத்திடம் விண்ணப்பித்தனர்.

  • பசல் அலி ஆணையம் நடுவன் அரசுக்குத் தந்த பரிந்துரை 1955 அக்டோபர் 10 ஆம் நாள் வெளியானது.

  • அந்தப் பரிந்துரையில் மாநிலங்களை மொழிவாரியாகப் பிரித்து அமைக்கும் கொள்கை ஒப்புக்கொள்ளப்பட்டதோடு சென்னை மாநிலத்தில் உள்ள மலபார் மாவட்டத்தைக் கேரளத்தோடும், திருவிதாங்கூர் – கொச்சி இராஜ்யத்திலிருந்த கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகத்தீசுவரம், செங்கோட்டை ஆகிய பகுதிகள் தமிழ்நாட்டோடும் இணைய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. தேவிகுளம், பீர்மேடு நம் கைவிட்டுப் போனது.

  • 'நான் சிலப்பதிகாரக் காப்பியத்தை மக்களிடம் கொண்டுசெல்ல விரும்பியதற்குக் காரணமுண்டு; திருக்குறளையோ, கம்பராமாயணத்தையோ, விரும்பாதவனல்லன்; ஆயினும் இந்திய தேசிய ஒருமைப்பட்டிற்குக் கேடில்லாத வகையில், தமிழினத்தை ஒன்றுபடுத்த எடுத்துக்கொண்ட முயற்சிக்குப் பயன்படக்கூடிய ஓர் இலக்கியம் தமிழில் உண்டென்றால், அது சிலப்பதிகாரத்தைத் தவிர வேறில்லையென்று உறுதியாகக் கூறுவேன். இளங்கோ தந்த சிலம்பு, தமிழினத்தின் பொதுச்சொத்து. எனவேதான் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் சிலப்பதிகார மாநாடுகள் நடத்தினோம்.'என்று கூறியவர் – 'சிலம்புச்செல்வர் ம.பொ.சி'
  • மார்ஷல் ஏ.நேசமணி பற்றியக் குறிப்புகள்:

  • இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடியவர்; வழக்கறிஞர்.

  • நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.

  • குமரி மாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்; இதனால் 'மார்ஷல் நேசமணி' என்று அழைக்கப்பட்டார்.

  • 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்து தமிழகத்தின் தென் எல்லையாக மாறியது.

  • இவருடைய நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு இவருக்கு நாகர்கோவிலில் சிலையோடு மணிமண்டபமும் அமைத்துள்ளது.
  • கடல் கடந்த தமிழ்வணிகம்:

  • ஆஸ்டிரியா நாட்டுத் தலைநகரமான வியன்னாவில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் பேபிரஸ் தாளில் எழுதப்பட்ட அரிய கையெழுத்துச் சுவடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  • இச்சுவடி சேரநாட்டுத் துறைமுகமான முசிறியில் வாழ்ந்த தமிழ் வணிகருக்கும் எகிப்து நாட்டின் அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் வாழ்ந்த கிரேக்க வணிகருக்கும் இடையிலான வணிக ஒப்பந்தம். இது கி.பி.2 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.
  • ம.பொ.சிவஞானம் பற்றிய சில தகவல்கள்:

  • ம.பொ.சிவஞானம் பிறந்த ஆண்டு – 1906

  • பிறந்த இடம்-சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் சால்வன் குப்பம் எனும் பகுதி.

  • 'சிலம்புச்செல்வர்' என்றுப் போற்றப்படுகிறார்.

  • இவர் விடுதலைப் போராட்ட வீரர்.

  • 'எனதுபோராட்டம்' என்ற தன் வரலாற்று நூலை எழுதியுள்ளார்.

  • 1952 முதல் 1954 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் 1972 முதல் 1978 வரை சட்டமன்ற மேலவைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

  • தமிழரசுக் கழகத்தை தொடங்கியவர் – ம.பொ.சிவஞானம்.

  • 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு'என்னும் இவருடைய நூலுக்காக 1966 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருதுப் பெற்றார்.

  • தமிழக அரசு திருத்தணியிலும் சென்னை தியாகராயநகரிலும் இவருக்குச் சிலை அமைத்துள்ளது.

  • ஏர் புதிதா?

  • சங்ககாலத் தமிழரின் திணைவாழ்வு வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டது.

  • 'முதல்மழை விழுந்ததும்
    மேல்மண் பதமாகிவிட்டது
    வெள்ளி முளைத்திடுது,விரைந்துபோ நண்பா!
    காளைகளை ஓட்டிக் கடுகிச்செல், முன்பு!

    பொன் ஏர் தொழுது, புலன் வழிபட்டு
    மாட்டைப் பூட்டி
    காட்டைக் கீறுவோம்
    ஏர் புதிதன்று, ஏறும் நுகத்தடி கண்டது,

    காடு புதிதன்று, கரையும் பிடித்ததுதான்
    கை புதிதா, கார் புதிதா? இல்லை.
    நாள்தான் புதிது,நட்சத்திரம் புதிது!
    ஊக்கம் புதிது, உரம் புதிது!

    மாட்டைத் தூண்டி,கொழுவை அமுத்து
    மண்புரளும் , மழை பொழியும்,
    நிலம் சிலிர்க்கும் , பிறகு நாற்று நிமிரும்
    எல்லைத் தெய்வம் எல்லாம் காக்கும்;

    கவலையில்லை!
    கிழக்கு வெளுக்குது
    பொழுதேறப் பொன்புரவும் ஏரடியில்
    நல்லவேளையில் நாட்டுவோம் கொழுவை'

    என்ற கவிதையை எழுதியவர் – 'கு.ப.ராஜகோபாலன்'

  • வேளாண்மை செழிக்கவும் மானுடம் தழைக்கவும் சித்திரைத் திங்களில் நடத்தப்படும் பொன் ஏர் பூட்டுதல் தமிழர் பண்பாட்டின் மகுடம் ஆகும்.

  • 'ஏர்புதிதா?' என்னும் கவிதையை எழுதியவர் – கு.ப.ராஜகோபாலன்

  • ' ஏர் புதிதா?' என்னும் கவிதை 'கு.ப.ரா.படைப்புகள்' என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

  • 1902 ல் கும்பகோணத்தில்பிறந்த கு.ப.ராஜகோபாலன் மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், மறுமலர்ச்சி எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர்.

  • இவரின் மறைவுக்குப் பின் இவரது படைப்புகளுள் 'அகலிகை', 'ஆத்மசிந்தனை'ஆகியன நூல்களாகத் தொகுக்கப்பட்டன.
  • கு.ப.ராஜகோபாலன் ஆசிரியராகப் பணிபுரிந்த இதழ்கள்:

    • தமிழ்நாடு

    • பாரதமணி

    • பாரததேவி

    • கிராம ஊழியன்

    மெய்கீர்த்தி

  • அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைக்க விரும்பினார்கள்; அழியாத வகையில் அதனைக் கல்லில் செதுக்கினார்கள்.

  • சங்க இலக்கியமான பதிற்றுப்பத்துப் பாடல்களின் இறுதியிலுள்ள பதிகங்கள் இதற்கு முன்னோடி! பல்லவர் கல்வெட்டுகளிலும் பாண்டியர் செப்பேடுகளிலும் முளைவிட்ட இவ்வழக்கம், சோழர் காலத்தில் 'மெய்கீர்த்தி ' எனப் பெயர் பெற்றது; செப்பமான வடிவம் பெற்றது; கல் இலக்கியமாய் அமைந்தது.

  • 'இந்தி ரன்முதற் திசாபாலர் எண் மரும்ஒரு வடிவாகி
    வந்தபடி யென நின்று மனுவாணை தனி நடாத்திய
    படியானையே பிணிப்புண்பன
    வடிமணிச்சிலம்பே யரற்றுவன
    செல்லோடையே கலக்குண்பன
    வருபுனலே சிறைப்படுவன
    மாவே வடுப்படுவன
    மாமலரே கடியவாயின
    காவுகளே கொடியவாயின
    கள்ளுண்பன வண்டுகளே
    பொய்யுடையன வரைவேயே
    போர்மலைவன எழுகழனியே
    மையுடையன நெடுவரையே
    மருளுடையன இளமான்களே
    கயற்குலமே பிறழ்ந்தொழுகும்
    கைத்தாயரே கடிந்தொறுப்பார்
    இயற்புலவரே பொருள்வைப்பார்
    இசைப்பாணரே கூடஞ்செய்வார்
    என்று கூறி இவன்காக்கும் திருநாட்டி னியல்இதுவென
    நின்றுகாவல் நெறிபூண்டு நெறியல்லது நினையாது
    தந்தையில்லோர் தந்தையாகியுந் தாயரில்லோர் தாயராகியும்
    மைந்தரில்லொரு மைந்தராகியும் மன்னுயிர்கட்குயிராகியும்
    விழிபெற்ற பயனென்னவும் மெய்பெற்ற அருளென்னவும்
    மொழிபெற்ற பொருளென்னவும் முகம் பெற்ற பனுவலென்னவும்
    எத்துறைக்கும் இறைவனென்னவும் யாஞ்செய்…..'

    என்ற பாடல் இரண்டாம் இராசராசசோழன் மெய்க்கீர்த்தியில் இடம்பெற்றுள்ளது.

    பாடலின்பொருள்:

  • இந்திரன் முதலாக திசைபாலகர் எட்டுப் பேரும் ஓருருவம் பெற்றது போல் ஆட்சி செலுத்தினான் சோழன்.

  • அவன் நாட்டில் யானைகள் மட்டுமே பிணிக்கப்படுவன (மக்கள் பிணிக்கப்படுவதில்லை). சிலம்புகள் மட்டுமே புலம்புகின்றன (மக்கள் புலம்புவதில்லை). ஓடைகள் மட்டுமே கலக்கமடைகின்றன (மக்கள் கலக்கமடைவதில்லை). புனல் மட்டுமே அடைக்கப்படுகின்றது (மக்கள் அடைக்கப்படுவதில்லை)

  • மாங்காய்கள் மட்டுமே வடுப்படுகின்றன (மக்கள் வடுப்படுவதில்லை). மலர்கள் மட்டுமே பறிக்கப்படுகின்றன (மக்களது உரிமைகள் பறிக்கப்படுவதில்லை). காடுகள் மட்டுமே கொடியவனாய் இருக்கின்றன – அதாவது கொடி உடையனவாக உள்ளன (மக்கள் கொடியவராய் இல்லை) வண்டுகள் மட்டுமே கள் – அதாவது தேன் உண்ணுகின்றன (மக்கள் கள் உண்பதில்லை).

  • மலை மூங்கில் மட்டுமே உள்ளீடு இன்றி வெறுமையாய் இருக்கின்றன (மக்கள் வெறுமையாய் இருப்பதில்லை). வயலில் நெற்கதிர்கள் மட்டுமே போராக எழுகின்றன (வேறு போர் இல்லை). நீண்ட மலைகளே இருள் சூழ்ந்திருக்கின்றன (நாட்டில் வறுமை இருள் இல்லை).

  • இளமான்களின் கண்களே மருள்கின்றன (மக்கள் கண்களில் மருட்சியில்லை). குளத்து மீன்களே பிறழ்ந்து செல்கின்றன (மக்கள் நிலை பிறழ்வதில்லை). செவிலித் தாயரே சினங் காட்டுவர் (வேறு யாரும் சினம் கொள்வதில்லை). புலவர் பாட்டில் மட்டுமே பொருள் பொதிந்து (மறைந்து) இருக்கும் (வேறு யாரும் பொருளை மறைப்பதில்லை). இசைப்பாணரே தெருவில் கூடி ஆடிப் பாடுவர் (தேவையற்று வேறு யாரும் அதை செய்வதில்லை). இராசராசன் காக்கும் திரு நாட்டின் இயல்பு இது.

  • அவன் நெறியோடு நின்று காவல் காக்கின்றான். தந்தை இல்லாதோருக்குத் தந்தையாய் இருக்கிறான். தாயில்லாதோருக்குத் தாயாக இருக்கின்றான். மகனில்லாதோருக்கு மகனாக இருக்கிறான். உலகில் உயிர்களுக்கு எல்லாம் உயிராக இருக்கிறான். விழிபெற்ற பயனாகவும் மெய் பெற்ற அருளாகவும் மொழி பெற்ற பொருளாகவும் புகழ் பெற்ற நூல் போலவும் திகழ்கிறான். புகழ் அனைத்திற்கும் தலைவனாகி யாதும் புரிகின்றான்.

  • 'கோப்பரகேசரி', 'திருபுவனச்சக்கரவர்த்தி' என்ற பட்டங்கள் கொண்டவர் – இரண்டாம் இராசராசசோழன்

  • இரண்டாம் இராசராச சோழனின் மெய்க்கீர்த்திகள் இரண்டு. அதில் ஒன்று 91 வரிகளைக் கொண்டது.

  • முதலாம் இராராசன் காலந்தொட்டு மெய்க்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன.

  • மெய்க்கீர்த்திகளே கல்வெட்டின் முதல்பகுதியில் மன்னரைப் பற்றிப் புகழ்ந்து இலக்கிய நயம்பட எழுதப்படும் வரிகள்.

  • மெய்க்கீர்த்திகள் புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை.
  • சிலப்பதிகாரம்

    'வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்
    பூவும் புகையும் மேவிய விரையும்
    பகர்வணர் திரிதரு நகர வீதியும்;
    பட்டினும் பயிரினும் பருத்தி நூலினும்
    கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;

    தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
    மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்
    அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா
    வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;

    பல்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
    கூலம் குவித்த கூல வீதியும்;

    காழியர், கூவியர்,கள்நொடை ஆட்டியர்,
    மீன்விலைப் பரதவர் , வெள் உப்புப் பகருநர்,
    பாசவர், வாசவர், பல்நிண விலைஞரோடு
    ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்;

    கஞ்ச காரரும் செம்புசெய் குநரும்
    மரம்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்

    மண்ணுள் வினைஞரும் மண்ணீட்டு ஆளரும்
    பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்
    துன்ன காரரும் தோலின் துன்னரும்
    கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்

    பழுதுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும்;
    குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும்
    வழுவின்றி இசைத்து வழித்திறம் காட்டும்
    அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்;

    சிறுகுருங் கைவினைப் பிறர்வினை யாளரொடு
    மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்'

    என்ற பாடல்கள் சிலப்பதிகாரத்தில் இந்திரவிழா ஊரெடுத்த காதையில் இடம்பெற்றுள்ளது.

    பாடலின் பொருள்:

  • புகார் நகர மருவூர்ப் பாக்கத்தின் வணிக வீதிகளில் வண்ணக்குழம்பு, சுண்ணப்பொடி, குளிர்ந்த மணச்சாந்து, பூ, நறுமணப் புகைப்பொருள்கள், அகில் முதலான மணப்பொருள்கள் விற்பவர்கள் வீதிகளில் வணிகம் செய்து கொண்டிருக்கின்றனர்.

  • இங்குப் பட்டு, பருத்தி நூல், முடி இவற்றினைக் கொண்டு அழகாகப் பின்னிக் கட்டும் கைத்தொழில் வல்லுநரான நெசவாளர் வாழும் வீதிகள் உள்ளன. இங்குப் பட்டும் பவளமும், சந்தனமும் அகிலும், முத்தும் மணியும் பொன்னும் அளக்க முடியாத அளவிற்குக் குவிந்து கிடக்கும் வளம் நிறைந்த அகன்ற வணிக வீதிகளும் உள்ளன.

  • மேலும் இவ்வீதிகளில் வேறு பலப்பல பண்டங்களின் விற்பனை நடைபெறுகின்றது. எட்டுவகைத் தானியங்களும் குவிந்து கிடக்கும் கூலக்கடைத் தெருக்களும் உள்ளன.

  • மருவூர்ப்பாக்கத்தின் தெருக்களில் பிட்டு வணிகம் செய்பவரும் அப்பம் சுடுபவரும் கள் விற்கும் வலைச்சியரும் மீன் விற்கும் பரதவரும் உள்ளனர். மேலும் வெண்மையான உப்பு விற்கும் உமணரும் வெற்றிலை விற்பவரும் ஏலம் முதலான ஐந்து நறுமணப் பொருள் விற்பவரும் பல வகையான இறைச்சிகள் விற்பவரும் எண்ணெய் வணிகரும் இங்கு வணிகம் செய்கின்றனர்.

  • இவற்றுடன் அத்தெருக்களில் பல்வகைப் பொருள்களை விற்கின்ற கடைகளும் உள்ளன. வெண்கலம், செம்புப் பாத்திரங்கள் செய்வோர், மரத்தச்சர், இரும்புக்கொல்லர், ஓவியர், மண் பொம்மைகள் செய்பவர், சிற்பிகள் ஆகியோர் உள்ளனர். பொற்கொல்லர், இரத்தின வேலை செய்பவர்,தையற்காரர், தோல் பொருள் தைப்பவர், துணியாலும் கட்டைகளாலும் பொம்மைகள் செய்பவர் ஆகியோர் உள்ளனர்.

  • இவ்வாறாகப் பழுதின்றிக் கைத்தொழில் பல செய்யும் மக்கள் வாழும் பகுதிகள் இங்கு நிறைந்துள்ளன. குழலிலும் யாழிலும் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம், என்னும் ஏழு இசைகளைக் (ச,ரி,க,ம,ப,த,நி என்னும் ஏழு சுரங்களை) குற்றமில்லாமல் இசைத்துச் சிறந்த திறமையைக் காட்டும் பெரும்பாணர்களின் இருப்பிடங்களும் உள்ளன.

  • இவர்களுடன் மருவூர்ப்பாக்கத்தின் தெருக்களில் சிறுசிறு கைத்தொழில் செய்வோர், பிறருக்கு ஏவல் செய்வோர் வாழும் இடங்களும் உள்ளன. இவை அனைத்தும் குற்றமின்றிச் சிறப்புடன் அமைந்து விளங்கப் பரந்து கிடந்தன.
  • சொல்லும் பொருளும்:

  • சுண்ணம் – நறுமணப்பொடி

  • காருகர் – நெய்பவர் (சாலியர்)

  • தூசு – பட்டு

  • துகிர் – பவளம்

  • வெறுக்கை – செல்வம்

  • நொடை – விலை

  • பாசவர் – வெற்றிலை விற்போர்

  • ஓசுநர் – எண்ணெய் விற்போர்

  • மண்ணுள் வினைஞர் – ஓவியர்

  • மண்ணீட்டாளர் – சிற்பி

  • கிழி – துணி
  • இலக்கணக்குறிப்பு:

  • வண்ணமும் சுண்ணமும் – எண்ணும்மை

  • பயில்தொழில் – வினைத்தொகை
  • ஐம்பெருங்காப்பிய முறைவைப்பு:

    'சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான்
    கந்தா மணிமே கலைபுனைந்தான் – நந்தா
    வளையா பதிதருவான் வாசவனுக் கீந்தான்
    திளையாத குண்டலகே சிக்கும்'

    என்று கூறும் நூல் – 'திருத்தணிகையுலா'

    பெருங்குணத்துக் காதலாள் நடந்த பெருவழி:

  • காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து கண்ணகியும் கோவலனும் உறையூர் மற்றும் திருவரங்கம் வழியாகக் கொடும்பாளூர் என்னும் இடத்தை அடைந்தனர். தென்னவன் சிறுமலையின் வலப்பக்கம் வழியாகச் சென்றால் மதுரையை அடையலாம்.

  • சிறுமலையின் இடப்பக்கம் வழியாகச் சென்றால் திருமால்குன்றம் (அழகர் மலை) வழியாக மதுரையை அடையலாம். இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வழியில், சோலைகள் மிகுந்த ஊர்களும், காடுகளும் உள்ளன. அவ்வழியாகச் சென்றால் மூன்று வழிகளும் சந்திக்கும் மதுரைப் பெருவழியை அடைந்து, மதுரை செல்லலாம்.

  • கோவலனையும் கண்ணகியையும் கவுந்தியடிகள் இடைப்பட்ட வழியிலேயே அழைத்துச் சென்றார்.

  • மதுரையில் கணவனை இழந்த கண்ணகி, மதுரையிலிருந்து வைகையின் தென்கரை வழியாக நெடுவேள் குன்றம் (சுருளி மலை) சென்று வேங்கைக் கானல் என்னும் இடத்தை அடைந்தாள்.
  • உரைப்பாட்டு மடை (உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்):

  • உரைப்பாட்டு மடை என்பது சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ்நடை. இது உரைநடைப்பாங்கில் அமைந்திருக்கும் பாட்டு.

  • வாய்க்காலில் பாயும் நீரை வயலுக்குத் திருப்பி விடுவது மடை. உரை என்பது பேசும் மொழியின் ஓட்டம். இதனைச் செய்யுளாகிய வயலில் பாய்ச்சுவது உரைப்பாட்டு மடை.
  • சிலப்பதிகாரம் பற்றியக் குறிப்புகள்:

  • சிலப்பதிகாரம் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.

  • இது 'முத்தமிழ்க் காப்பியம்', 'குடிமக்கள் காப்பியம்' என்று சிறப்பிக்கப்படுகிறது.

  • இது மூவேந்தர்களைப் பற்றிய செய்திகளைக் கூறுகிறது.

  • இது புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம்என 3 காண்டங்களையும் 30 காதைகளையும் உடையது.

  • இது மணிமேகலைக் காப்பியத்துடன் கதைத்தொடர்பு கொண்டிருப்பதால் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் 'இரட்டைக்காப்பியங்கள்' என்று அழைக்கப்படுகின்றன.

  • சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் – இளங்கோவடிகள். சேர மரபைச் சேர்ந்தவர்.

  • மணிமேகலையின் ஆசிரியரான சீத்தலைச்சாத்தனார் கோவலன் கண்ணகி கதையைக் கூறி, 'அடிகள்நீரேஅருளுக' என்றதால் இளங்கோவடிகளும் 'நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச்செய்யுள்' என சிலப்பதிகாரம் படைத்தார் என்பர்.


  • மங்கையராய்ப் பிறப்பதற்கே

  • தமிழரின் பெருமையை உலக அரங்கான ஐ.நா அவையில் பரப்பும் வகையில் அங்குத் தமிழ்நாட்டின் செவ்வியல் இசையை பாடியவர் – எம்.எஸ்.சுப்புலட்சுமி

  • 'இசைப்பேரரசி' என்று ஜவஹர்லால் நேருவால் அழைக்கப்பட்டவர் – எம்.எஸ்.சுப்புலட்சுமி

  • எம்.எஸ் சுப்புலட்சுமி என்பதன் விரிவாக்கம் – மதுரை சண்முக வடிவு சுப்புலட்சுமி

  • எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்கள் பத்து வயதில் இசைத்தட்டுக்காகப் பாடலைப் பாடி பதிவு செய்தார்.

  • 17 வயதில் சென்னை மியூசிக் அகாதெமியில் மேதைகள் பலர் முன்பு கச்சேரி செய்து பாராட்டைப் பெற்றார் எம்.எஸ் சுப்புலட்சுமி

  • எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்த திரைப்படம் – மீரா. அதுவே அவரது கடைசி திரைப்படமும் ஆகும்.

  • எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்களின் 'காற்றினிலேவரும்கீதம்', 'பிருந்தாவனத்தில் கண்ணன்' முதலிய பாடல்களுக்கு மிகப்பெரிய வரவேற்புக் கிடைத்தது.

  • எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்கள் ஒருமுறை காந்தியை தில்லியில் சந்தித்தபோது 'இரகுப இராகவ இராஜாராம் ' என்ற பாடலைப் பாடினார். அவரைப் பாராட்டிய காந்தியடிகள் மீரா எழுதிய பாடல் ஒன்றைக் குறிப்பிட்டுப் பாடச் சொன்னார். பின் சிறிது நாள்களில் முனைந்து அந்தப் பாடலைக் கற்றுப் பயிற்சி செய்தார் எம்.எஸ் சுப்புலட்சுமி . சென்னை வானொலி, 1947ல் காந்தியடிகளின் பிறந்த நாளன்று அப்பாடலை ஒலிபரப்பியது. அப்பாடல் 'ஹரி தும் ஹரோ' என்னும் மீரா பஜன்.

  • எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்கள் 1954 ல் தாமரையனி விருது பெற்றபோது, அவரைப் பாராட்டியவர் – ஹெலன் கெல்லர்

  • எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்கள் 1963 ல் இங்கிலாந்திலும் 1966 ல் ஐ.நா.அவையிலும் பாடினார்.

  • 1966 ஆம் ஆண்டு இவரது குரலில் பதிவு செய்யப்பட்ட வெங்கடேச சுப்ரபாதம் திருப்பதியில் ஒலிக்கத்தொடங்கியது.

  • 1974 ல் நோபல் பரிசுக்கு இணையான 'மகசேசே விருது' இவரது இசைக்குக் கிடைத்த மகுடம் ஆகும். இவ்விருது பெறும் முதல் இசைக்கலைஞரும் எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்களே ஆகும்.

  • இந்தியாவின் மிக உயரிய விருதான 'இந்திய மாமணி' விருதினை எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்கள் பெற்றுள்ளார்.

  • எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், மலையாளம், இந்தி, குஜராத்தி, ஆகிய இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் கூடப் பாடியுள்ளார்.

  • 'குறையொன்று மில்லை மறைமூர்த்தி கண்ணா
    குறையொன்று மில்லை கோவிந்தா…'என்று இசைத்தவர்
    எம்.எஸ் சுப்புலட்சுமி

  • பொதுவெளியில் ஆடுவது தண்டனைக்குரிய குற்றம் எனும் சட்டம் இயற்றப்பட்டிருந்த காலத்தில் நடன வாழ்வைத் தொடங்கியவர் – பாலசரசுவதி.

  • இந்திய அரசின் தாமரைச் செவ்வணி விருது பெற்றவர் – பாலசரசுவதி. காஞ்சிபுரத்தில் பரதநாட்டிய அரங்கேற்றத்திற்காக முதன்முதலில் மேடை ஏறிய போது இவருக்கு வயது – ஏழு

  • கல்கத்தாவிலும் காசியில் நடந்த அனைத்திந்திய இசை மாநாட்டிலும் சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கண்காட்சியிலும் நம் நாட்டுப்பண்ணாகிய 'ஜனகணமன' பாடலுக்கு மெய்ப்பாடுகளோடு ஆடியவர் – பாலசரசுவதி. நாட்டுப்பண்ணுக்கு நடனமாடியது அதுவே முதலும் இறுதியுமாகும்.

  • டோக்கியோவில் உள்ள 'கிழக்கு மேற்குச் சந்திப்பு ' நிகழ்வில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டு சிறப்பாக நடனம் ஆடியவர் – பாலசரசுவதி

  • தமிழில் எழுதிய பெண்களில் முதன்முதலில் களத்திற்குச் சென்று மக்களிடம் செய்திகளைத் திரட்டிக் கதைகள் எழுதியவர் – ராஜம் கிருஷ்ணன்

  • 'வேருக்கு நீர்' என்னும் புதினத்திற்காக 'சாகித்தியஅகாதெமி' விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் – ராஜம்கிருஷ்ணன்

  • 'பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி' என்னும் பாரதியின் வரலாற்றுப் புதினத்தை எழுதியவர் – ராஜம்கிருஷ்ணன்

  • தூத்துக்குடியில் பல மாதம் தங்கியிருந்து உப்பளத் தொழிலாளர்களின் உவர்ப்பு வாழ்க்கையைக் 'கரிப்புமணிகள்' என்ற புதினமாக எழுதியவர்- ராஜம்கிருஷ்ணன்

  • படுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்களைக் குறித்து 'குறிஞ்சித்தேன்' என்ற புதினத்தை எழுதியவர் – ராஜம்கிருஷ்ணன்

  • கடலோர மீனவர் வாழ்வின் சிக்கல்களைப் பேசும் 'அலைவாய்க்கரையில்' என்ற புதினத்தை எழுதியவர் – ராஜம்கிருஷ்ணன்

  • அமைப்புசாரா வேளான் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதைச் சுட்டிக்காட்டி 'சேற்றில்மனிதர்கள்', 'வேருக்குநீர்'என்ற புதினங்களை எழுதியவர் – ராஜம்கிருஷ்ணன்

  • குழந்தைகளைத் தீப்பெட்டித் தொழிலில் முடக்கி, தீகுச்சிகளை அந்தப் பெட்டியில் அடைப்பதைப் போன்று, குழந்தைகளின் உடலையும் மனத்தையும் நொறுக்கும் அவல உலகைக் 'கூட்டுக்குஞ்சுகள்' என்ற புதினமாக எழுதியவர் – ராஜம்கிருஷ்ணன்

  • பெண்குழந்தைக் கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து 'மண்ணகத்துப் பூந்துளிகள்' என்ற புதினத்தை எழுதியவர் – ராஜம்கிருஷ்ணன்

  • மதுரையின் முதல் பட்டதாரிப் பெண் – கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

  • இந்திய அரசின் தாமரைத்திரு விருது, சுவீடன் அரசின் வாழ்வுரிமை விருது, சுவிட்சர்லாந்து அரசின் காந்தி அமைதி விருது எனப் பல உயரிய விருதுகளைப் பெற்று பெண்குலத்திற்குப் பெருமை சேர்த்தவர் – கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

  • நாட்டின் விடுதலைக்குப் பின் கணவருடன் இணைந்து ' பூதான ' இயக்கத்தில் பணிபுரிந்தவர் – கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

  • 'உழுபவருக்கே நில உரிமை இயக்கம்' என்ற இயக்கம் தொடங்கி வேளாண்மை இல்லாத காலத்திலும் உழவருக்கு வேறுபணிகள் மூல வருமானம் வர ஏற்பாடு செய்தவர் – கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

  • ' உங்கள் ஆற்றலை நீங்கள் உணருங்கள்.
    உங்களால் எதையும் சாதிக்க இயலும்' என்றவர்
    கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

  • 'களஞ்சியம்' என்ற மகளிர் குழுவை அமைத்தவர் – மதுரை சின்னப்பிள்ளை

  • நம் இந்திய நாட்டு நடுவண் முதன்மை அமைச்சராக இருந்த மாண்புமிகு. வாஜ்பாய் அவர்களின் கைகளால் பெண் ஆற்றல் விருது (ஸ்திரீ சக்தி புரஸ்கார்) பெற்றதோடு, தமிழக அரசின் 'ஔவை விருதையும்', தூர்தர்ஷனின்' பொதிகை விருதையும்' பெற்றுள்ளார். அன்மையில் ' தாமரைத்திரு விருதையும்' பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர் – மதுரை சின்னப்பிள்ளை

  • இலக்கணம்

    புறப்பொருள் இலக்கணம்

    அன்பின் ஐந்திணை பற்றியது அகப்பொருள் ஆகும்.

    புறத்திணைகள்:

    • வெட்சி

    • கரந்தை

    • வஞ்சி

    • காஞ்சி

    • நொச்சி

    • உழிஞை

    • தும்பை

    • வாகை

    • பாடாண்

    • பொதுவியல்

    • கைக்கிளை

    • பெருந்திணை

    வெட்சித்திணை:

  • மக்கள் சிறுகுழுக்களாக வாழ்ந்த காலத்தில், ஆநிரைகளைச் (மாடுகளை) சொத்தாகக் கருதினர். ஒரு குழுவினரிடமிருந்து மற்றொரு குழுவினர் ஆநிரைகளைக் கவர்தல் வழக்கமாக இருந்தது. ஆநிரைகளைக் கவர்ந்துவர வெட்சிப் பூவினைச் சூடிக்கொண்டு செல்வர். எனவே ஆநிரை கவர்தல் 'வெட்சித்திணை'எனப்பட்டது.

  • அழகுச்செடியாக வீட்டுத்தோட்டங்களிலும் பூங்காக்களிலும் வளர்க்கப்படுகிற சிவந்த நிறமுடைய வெட்சிப்பூ, இட்லிப்பூ என்று அழைக்கப்படுகிறது.
  • கரந்தைத்திணை:

  • கவர்ந்து செல்லப்பட்ட தம் ஆநிரைகளை மீட்கச் செல்வர். அப்போது கரந்தைப் பூவை சூடிக் கொள்வர். அதனால் கரந்தைத் திணை என்று பெயர் பெற்றது.

  • சிறிய முட்டை வடிவில் கொத்தாகப் பூக்கக் கூடிய கரந்தை ஒரு சிறிய செடி. நறுமணம் மிக்க இது செம்மை, நீலம், இளஞ்சிவப்பு, நீலம் கலந்த சிவப்பு ஆகிய நிறங்களில் பூக்கின்றது. இதனைக் 'கொட்டைக் கரந்தை ' என்றும் கூறுவர்.
  • வஞ்சித்திணை:

  • மண் (நாடு) சொத்தாகிய மாறிய காலத்தில் மண்ணைக் கவர்தல் போராயிற்று. மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி வஞ்சிப்பூவைச் சூடிப் போருக்கு செல்வது வஞ்சித்திணை.

  • பளபளப்பான, மெல்லிய பூவின் இதழ்களில் வெள்ளிய பஞ்சு போன்ற நுண்மயிர் அடர்ந்துள்ளது வஞ்சி.
  • காஞ்சித்திணை:

  • தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு, காஞ்சிப்பூவைச் சூடி எதிர்த்துப் போரிடல் காஞ்சித்திணை.

  • கொத்துக் கொத்தாகப் பூக்கும் நீலநிற மலர்கள் கொண்ட அழகான மணமுள்ள காஞ்சி என்பது ஒருவகைக் குறுமரம்.
  • நொச்சித்திணை:

  • மண்ணைக் காக்கக் கோட்டைகள் கட்டப்பட்டன. கோட்டையைக் காத்தல் வேண்டி, உள்ளிருந்தே முற்றுகையிட்ட பகையரசனோடு நொச்சிப்பூவைச் சூடி உள்ளிருந்தே போரிடுவது நொச்சித் திணை.

  • மருத நிலத்துக்குரிய நொச்சி, கொத்துக் கொத்தான நீலநிறப் பூக்கள் கொண்டது. இதில் மணிநொச்சி, கருநொச்சி, மலைநொச்சி, வெண்ணொச்சி எனப் பலவகைகள் உள்ளன.
  • உழிஞைத்திணை:

  • மாற்றரசனின் கோட்டையைக் கைப்பற்ற உழிஞைப் பூவைச் சூடிய தன் வீரர்களுடன் அதனைச் சுற்றி வளைத்தல் உழிஞைத்திணை ஆகும்.

  • வேலிகளில் ஏறிப்படரும் நீண்ட கொடியே உழிஞைக் கொடி. இதன் கூட்டிலைகளும் மலர்களும் சிறியவை; மலர்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும், இதனை முடக்கத்தன் (முடக்கற்றான்) எனக் கூறுகின்றனர்.
  • தும்பைத்திணை:

  • பகைவேந்தர் இருவரும் வலிமையே பெரிது என்பதை நிலைநாட்ட, தம் வீரர்களுடன் தும்பைப் பூவைச் சூடிப் போர்க்களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடுவது தும்பைத் திணை. போரிடுகின்ற அரசர்கள் இருவரும் தும்பைப் பூ மாலையையே சூடியிருப்பார்கள். போர்த்திணைகள் படிப்படியாக வளர்ந்த நிலையில், போரைத் தொடங்கும் நிகழ்வாக ஆநிரைக் கவர்தல் மேற்கொள்ளப்பட்டது.

  • எல்லா இடங்களிலும் வளரக் கூடிய தூய வெண்ணிற மலர்களைக் கொண்ட சிறிய செடி தும்பை.
  • வாகைத்திணை:

  • போரிலே வெற்றி பெற்ற மன்னன் வாகைப்பூச் சூடி மகிழ்வது வாகைத்திணை ஆகும். வாகை என்றால் வெற்றி என்பது பொருள்.

  • மங்கிய வெண்ணிற நறுமணம் கொண்ட கொத்துக் கொத்தாக மலரும் வாகை பூ.
  • பாடாண்திணை:

  • பாடுவதற்குத் தகுதியுடைய ஓர் ஆளுமையாளரின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது, பாடாண் திணை ஆகும்.

  • (பாடு + ஆண் + திணை = பாடாண்திணை). போரை மட்டும் சொல்லாது பிற மாண்புகளையும் பாடுவது பாடாண் திணையாகும்.
  • கைக்கிளை:

    கைக்கிளை என்பது ஒருதலைக் காமம்

    பெருந்திணை:

  • பெருந்திணை என்பது பொருந்தாக் காமத்தைக் குறிக்கிறது.

  • 'மாலவந் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்' என்பதில் மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே – திருப்பதியும் திருத்தணியும்

  • &#39 தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்' என்னும் மெய்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள் – பண்பட்ட மனிதநேயம் கொண்டவர்.

  • இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம் – வலிமையை நிலைநாட்டல்

  • தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி கருதியது – சிலப்பதிகாரம்

  • ' ஏர் பிடிக்கும் கைகளுக்கே
    வாழ்த்துக் கூறுவோம் – வறுமை
    ஏகும்வரை செய்பவர்க்கே
    வாழ்த்துக் கூறுவோம்! – என்றும்
    ஊர்செழிக்கத் தொழில்செய்யும்
    உழைப்பாளிகள் – வாழ்வு
    உயரும்வகை செய்பவர்க்கே
    வாழ்த்துக் கூறுவோம்! '

    என்ற கவிதையை எழுதியவர் – கவி கா.மு.ஷெரீப்

    பாரதிதாசன் கவிதை

    மகள் சொல்லுகிறாள்

    அம்மா என் காதுக்கொரு தோடு – நீ
    அவசியம் வாங்கி வந்து போடு!
    சும்மா இருக்க முடியாது – நான்
    சொல்லி விட்டேன் உனக்கு இப்போது!

    தாய் சொல்லுகிறாள்

    காதுக்குக் கம்மல் அழகன்று – நான்
    கழறுவதைக் கவனி நன்று
    நீதர் மொழியை வெகுபணிவாய் – நிதம்
    நீ கேட்டு வந்து காதில் அணிவாய்!

    மகள் மேலும் சொல்லுகிறாள்

    கைக்கிரண்டு வலையல் வீதம் – நீ
    கடன்பட்டுப் போட்டிடினும் போதும்!
    பக்கியென் றென்னை யெல்லோரும் – என்
    பாடசாலையிற் சொல்ல நேரும் !

    தாய் சொல்லும் சமாதானம்

    வாரா விருந்து வந்த களையில் – அவர்
    மகிழ உபசரித்தல் வளையல்!
    ஆராவமுதே மதி துலங்கு – பெண்னே
    அவர்சொல்வ துன்கைகட்கு விலங்கு!

    பின்னும்மகள்

    ஆபர ணங்கள் இல்லை யானால் – என்னை
    யார் மதிப்பார் தெருவில் போனால்?
    கோபமோ அம்மா இதைச் சொன்னால் – என்
    குறைதவிர்க்க முடியும்

    அதற்குத்தாய்

    கற்பது பெண்களுக்கா பரணம் – கெம்புக்
    கல்வைத்த,நகைதீராத ரணம்!
    கற்ற பெண்களை இந்த நாடு – தன்
    கண்ணில் ஒற்றிக் கொள்ளுமென் போடு!

    நூல்களும் ஆசிரியர்களும்:

  • என் கதை – நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்

  • வேருக்கு நீர் – ராஜம் கிருஷ்ணன்

  • நாற்காலிக்காரர் – ந.முத்துசாமி


  • பாடம் 8 – பெருவழி

    சங்க இலக்கியத்தில் அறம்

  • சங்க காலத்திற்குப் பிந்தைய அற இலக்கியங்களின் காலத்தை 'அறநெறிக்காலம்' என்பர்.

  • ' கவிதை வாழ்க்கையின் திறனாய்வு ' என்று கூறியவர் – திறனாய்வாளர் ஆர்னால்டு

  • அறம் செய்வதில் வணிக நோக்கம் இருக்கக்கூடாது என்பது சங்ககால மக்களின் கருத்தாக இருந்தது. இப்பிறப்பில் அறம் செய்தால் அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்ற வணிக நோக்குக் கூடாது எனக் கூறப்பட்டது.

  • 'இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
    அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்'

    என்ற புறநானூற்றுப் பாடலில் சங்ககால வள்ளல்களில் ஒருவரான 'ஆய்'பற்றி'ஏணிச்சேரி முடமோசியார்'குறிப்பிட்டுள்ளார். நோக்கமின்றி அறம் செய்வதே மேன்மை தருவது என்பது இதில் உணர்த்தப்பட்டுள்ளது.

  • சங்கப் பாடல்களில் அறம் பற்றிய அறிவுரைகள் பெரும்பாலும் அரசர்களை முதன்மைப்படுத்தியே கூறப்பட்டுள்ளன.

  • குற்றங்களை அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்கிறார் 'ஊன் பொதிப்பசுங்குடையார்'

  • அரசன் அறநெறியில் ஆட்சி செய்வதற்கு அமைச்சரும் உதவினர். இதனை, 'நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை' என்கிறது 'மதுரைக்காஞ்சி'

  • ' செம்மை சான்ற காவிதி மாக்கள் ' என்று அமைச்சர்களை' மாங்குடிமருதனார்' போற்றுகிறார்.

  • அறம் கூறும் மன்றங்கள் அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தன. அறம் கூறும் அவையம் பற்றி 'அறம் அறக் கண்ட நெறிமான் அவையம் ' என்கிறது புறநானூறு.

  • உறையூரிலிருந்த அறஅவையம் தனிச்சிறப்புப் பெற்றது என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

  • மதுரையில் இருந்த அவையம் பற்றி 'மதுரைக்காஞ்சி' குறிப்பிடுகின்றது; அங்குள்ள அவையம் துலாக்கோல் போல நடுநிலை மிக்கது என்கிறது.

  • தமிழர் போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர், ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது. போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது.

  • 'எறியார் எறிதல் யாவணது எறிந்தார்
    எதிர்சென்று எறிதலும் செல்லான்'

    என்ற புறநானூற்றுப்பாடலில் தம்மை விட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை 'ஆவூர்மூலங்கிழார்' குறிப்பிட்டிருக்கிறார்.

    'செல்வத்துப் பயனே ஈதல்
    துய்ப்பேம் எனினே தப்புந பலவே'

    என்ற புறநானூற்று அடிகளை இயற்றியவர் – 'மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்'

  • கொடையின் சிறப்பால் வள்ளல் எழுவர் போற்றப்படுவது, பழந்தமிழர் கொடை மாட்சியைப் புலப்படுத்துகிறது. எழுவரின் கொடைப்பெருமை சிறுபாணாற்றுப்படையிலும், பெருஞ்சித்தரனார் பாடலிலும் கூறப்பட்டிருக்கிறது.

  • ஆற்றுப்படை இலக்கியங்கள் கொடை இலக்கியங்களாகவே உள்ளன.

  • பதிற்றுப்பத்து சேர அரசர்களின் கொடைப் பதிவாகாவே உள்ளது.

  • புறநானூற்றின் கொடைப்பதிவும் குறிப்பிடத்தக்கது.

  • அரியன என்று கருதாது, தயங்காது கொடுத்தலும் ஈதலால் வரும் இழப்புக்கு வருந்தாமையும் நாள்தோறும் கொடுத்தலும் கொடைப் பெருமைகளாக பேசப்படுகின்றன.

  • வள்ளல்கள் 'இல்லோர் ஒக்கல் தலைவன்', ' பசிப்பிணி மருத்துவன்' என்றெல்லாம் போற்றப்பட்டனர்.

  • வழங்குவதற்குப் பொருள் உள்ளதா? என்று கூடப் பார்க்காமல் கொடுக்கும் பிடவூர்க்கிழார் மகன் பெருஞ்சாத்தனை நக்கீரர் பாராட்டுகிறார்.

  • 'வள்ளலின் பொருள் இரவலனின் பொருள்; வள்ளலின் வறுமை இரவலனின் வறுமை'என்று குறிப்பிடுபவர் – பெரும்பதுமனார்

  • 'உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன்' என்று கூறுபவர் – ஔவையார்

  • இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்தல் ஆடிகோட்பாட்டுச் சேரலாதனின் இயல்பு என்கிறார் நச்செள்ளையார்

  • பேகன் மறுமை நோக்கிக் கொடுக்காதவன் என்கிறார் பரணர்.

  • தன்னை நாடி வந்த பரிசிலன், பொருள் பெறாமல் திரும்புவது, தன் நாட்டை இழந்த துன்பத்தைவிடப் பெருந்துன்பம் எனக் குமணன் வருந்தியதாகப் பெருந்தலைச்சாத்தனார் குறிப்பிட்டுள்ளார்.

  • எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று மலையமான் திருமுடிக்காரியைக் கபிலர் பாராட்டுகிறார்.

  • புற இலக்கியங்களில் மட்டுமன்றி அக இலக்கியங்களிலும் ஈதல் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.

  • ஈயாமை இழிவு, இரப்போர்க்கு ஈயாது வாழ்தலைவிட உயிரை விட்டுவிடுதல் மேலானது என்றெல்லாம் கலித்தொகையில் கூறப்பட்டுள்ளது.

  • வள்ளல்கள் மட்டுமன்றி புலவர்களும் ஈந்து மகிழ்ந்ததை இலக்கியம் பதிவு செய்துள்ளது. தான் பெற்றதைப் பிறருக்கு வழங்கும் பெருஞ்சித்திரனாரின் பேருள்ளம் புறநானூற்றில் புலப்படுத்தப்பட்டிருக்கிறது.

  • பிறருக்கு உதவுதல் என்பதை சங்க இலக்கியங்கள் சிறந்த அறமாகக் காட்டுகின்றன.

  • உதவி செய்தலை 'உதவியாண்மை' என்று குறிப்பிடுபவர் – 'ஈழத்துப் பூதந்தேவனார்'

  • 'பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன்அறிதல்
    சான்றவர்க்கு எல்லாம் கடன்'

    என்ற கலித்தொகை பாடலில் பிறர் துன்பத்தை தம் துன்பமாக கருதி உதவுதல் பற்றி நல்லந்துவனார் குறிப்பிடுகிறார்.

    ' சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
    புன்கண் அஞ்சும் பண்பின்
    மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே '

    என்ற நற்றிணைப் பாடலில் உறவினர் கெட, வாழ்பவனின் பொலிவு அழியும் என்று 'பெருங்கடுங்கோ' குறிப்பிடுகிறார்.

  • 'செல்வம் என்பது சிந்தனையின் அறிவு' என்று கூறுவது – தமிழ் இலக்கியம்

  • 'நிறைவடைகிறவனே செல்வன்' என்று கூறுவது – சீனநாட்டுத் தாவோவியம்

  • 'பிழையா நன்மொழி' என்று வாய்மையினைக் குறிப்பிடும் நூல் – நற்றிணை

  • 'பொய்மொழிக் கடுஞ்சொல்' என்று பொய்யைக் குறிப்பிடும் நூல் – நற்றிணை
  • போதிதர்மர் பற்றியக் குறிப்புகள்:

  • கி.பி. ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஞ்சி மாநகரத்துச் சிற்றரசர் ஒருவர் போதிதர்மர் என்னும் சமயப்பெயர்பூண்டு சீனாவுக்குச் சென்றார். பௌத்த சமயத் தத்துவத்தின் ஒரு பிரிவைப் போதித்தார்.

  • அதிலிருந்து உருவானதே 'ஜென் தத்துவம்'. இது, பின்னர் ஜப்பான் முதலிய நாடுகளுக்கும் பரவிச் செழித்து விளங்கியது. போதி தருமருக்குச் சீனர்கள் கோவில் கட்டி சிலை வைத்து இன்றளவும் வணங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

  • ஞானம்

    'சாளரத்தின் கதவுகள், சட்டம்;
    காற்றுடைக்கும்,
    தெருப்புழுதி வந்தொட்டும்
    கரையான் மண் வீடு கட்டும்
    அன்று துடைத்தேன்,
    சாயம் அடித்தேன்,
    புதுக்கொக்கி பொருத்தினேன்
    காலக்கழுதை
    கட்டெறும்பான
    இன்றும்
    கையிலே
    வாளித்தண்ணீர், சாயக்குவளை,
    கந்தைத்துணி,கட்டைத் தூரிகை,
    அறப்பணி ஓய்வதில்லை
    ஓய்ந்திடில் உலகமில்லை!'

    என்ற கவிதையை எழுதியவர் – தி. சொ.வேணுகோபால்

  • 'ஞானம்' என்னும் கவிதையினை எழுதியவர் – தி.சொ.வேணுகோபால். இவர் திருவையாற்றில் பிறந்தவர்; மணிப்பால் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

  • ' எழுத்து' காலப் புதுக்கவிஞர்களுள் ஒருவர். இவரின் மற்றொரு கவிதைத் தொகுப்பு – 'மீட்சிவிண்ணப்பம்'

  • 'ஞானம்' என்னும் கவிதை 'கோடைவயல்' என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இதன் ஆசிரியர் – தி.சொ.வேணுகோபால்

  • காலக்கணிதம்

    'கவிஞன் யானோர் காலக் கணிதம்
    கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
    புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
    பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!
    இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்
    இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!
    ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்
    அவனும் யானுமே அறிந்தவை; அறிக!
    செல்வர்தங் கையில் சிறைப்பட மாட்டேன்
    பாசம் மிகுத்தேன்;பற்றுதல் மிகுத்தேன்!
    ஆசை தருவன அனைத்தும் பற்றுவேன்!
    உண்டா யின்பிறர் உண்னத் தருவேன்;
    இல்லா யின்மர் இல்லம் தட்டுவேன்
    வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்
    வாய்ப்புறத் தேனை ஊர்ப்புறந் தருவேன்!
    பண்டோர் கம்பன், பாரதி, தாசன்
    சொல்லா தனசில சொல்லிட முனைவேன்!

    புகழ்ந்தாடல் என்னுடல் புல்லரிக் காது
    இகழ்ந்தால் என்மணம் இறந்து விடாது!
    வளமார் கவிகள் வாக்குமூ லங்கள்
    இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு !
    கல்லாய் மரமாய்க் காடுமே டாக
    மாறா திருக்கயான் வனவிலங் கல்லன்!
    மாற்றம் எனது மானிடத் தத்துவம்;
    மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!
    எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
    என்ப தறிந்து ஏகுமென் சாலை!
    தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;
    தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!
    கொள்வோர் கொள்க ; குரைப்போர் குரைக்க !
    உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;
    நானே தொடக்கம் ; நானே முடிவு;
    நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம் ! '

    என்ற கவிதையை எழுதியவர் – கண்ணதாசன்

    கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள்:

    • கண்ணதாசனின் இயற்பெயர் – முத்தையா

    • பிறந்த ஊர் – சிவகங்கை மாவட்டத்தின் சிற்றூரான சிறுகூடல்பட்டி

    • பெற்றோர் – சாத்தப்பன்-விசாலாட்சி

    • 1949 ஆம் ஆண்டு 'கலங்காதிருமனமே' என்ற பாடலை எழுதி, திரைப்படப் பாடலாசிரியனார்.

    • திரையுலகிலும், இலக்கிய உலகிலும் சிறந்து விளங்கியவர் கண்ணதாசன்.

    • சிறந்த கவியரங்கக் கவிஞராகவும் பேச்சாளராகவும் இவர் திகழ்ந்தார்.

    • தன் திரைப்பட பாடல்கள் வழியாக எளிய முறையில் 'மெய்யியலை' மக்களிடையே கொண்டு சேர்த்தார்.

    • 'சேரமான்காதலி' என்னும் புதினத்திற்காக 'சாகித்தியஅகாதெமி விருது' பெற்றுள்ளார்.

    • இவர் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்.

    • 'காலக்கணிதம்' என்னும் கவிதை கண்னதாசன் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

    'நதியின் பிழ்ழையன்று
    நறும்புனலின்மை அன்றே
    பதியின் பிழையன்று
    பயந்த நம்மைப் புரந்தான்
    மதியின் பிழையன்று
    மகன் பிழையன்று மைந்த
    விதியின் பிழை நீ
    இதற்கென்னை வெகுண்டதென்றன்'

    என்ற பாடலை இயற்றியவர் – கம்பர்
    'நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
    நதிசெய்த குற்றம் இல்லை
    விதிசெய்த குற்றம் இன்றி
    வேறு – யாரம்மா !'

    என்ற பாடலை எழுதியவர் – கண்ணதாசன்
    சிவகங்கை மாவட்டத்திலுள்ளபிரான்மலை(பறம்புமலை)குறித்து,
    'கூர்வேல் குவைஇய மொய்ம்பின்
    தேர்வண் பாரிதண் பறம்பு நாடே !'
    என்று புறநானூறு கூறுகிறது.

    இலக்கணம்

    பா – வகை அலகிடுதல்

    யாப்பின் உறுப்புகள் ஆறு வகைப்படும்.

    1. எழுத்து

    2. சீர்

    3. அசை

    4. தளை

    5. அடி

    6. தொடை

    பா நான்கு வகைப்படும்:

    1. வெண்பா

    2. ஆசிரியப்பா

    3. கலிப்பா

    4. வஞ்சிப்பா
    பாக்களை ஓசைகளைக் கொண்டே அறியலாம். ஒவ்வொரு பாவும் ஓசையால் வேறுபட்டது.

    ஓசை நான்கு வகைப்படும்:

    1. செப்பல் ஓசை

    2. அகவல் ஓசை

    3. துள்ளல் ஓசை

    4. தூங்கல் ஓசை

    செப்பல்ஓசை:

    செப்பலோசை வெண்பாவிற்குரியது. அற நூல்களான திருக்குறளும், நாலடியாரும் வெண்பாவில் அமைந்துள்ளன.

    அகவல்ஓசை:

    அகவல் ஓசை ஆசிரியப்பாவுக்கு உரியது. இலக்கணக் கட்டுக்கோப்புக் குறைவாகவும் கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது அகவற்பா என்னும் ஆசிரியப்பா. சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை ஆகியக் காப்பியங்களும் அகவற்பாவில் அமைந்தவை.

    துள்ளல்ஓசை:

    செய்யுளில் இடையிடையே உயர்ந்து வருவது துள்ளல்ஓசை. இது கலிப்பாவுக்கு உரியது.

    தூங்கல்ஓசை:

    தூங்கல் ஓசை வஞ்சிப்பாவுக்கு உரியது.

    வெண்பா ஐந்து வகைப்படும்:

    1. குறள் வெண்பா

    2. சிந்தியல் வெண்பா

    3. நேரிசை வெண்பா

    4. இன்னிசை வெண்பா

    5. பஃறொடை வெண்பா

    ஆசிரியப்பா நான்கு வகைப்படும்:

    1. நேரிசை ஆசிரியப்பா

    2. இணைக்குறள் ஆசிரியப்பா

    3. நிலைமண்டில ஆசிரியப்பா

    4. அடிமறி மண்டில ஆசிரியப்பா
    குறள் வெண்பா என்பது வெண்பாவின் பொது இலக்கணம் அமையப்பெற்று இரண்டு அடிகளாய் வரும். முதலடி நான்கு சீராகவும் (அளவடி) இரண்டாம் அடி மூன்று சீராகவும் (சிந்தடி) பெற்று வரும்.

    ஓரசைசீர்:

    • நேர் – நாள்

    • நிரை – மலர்

    • நேர்பு -காசு

    • நிரைபு – பிறப்பு

    ஈரசைச்சீர்:

    • நேர் நேர் – தேமா

    • நிரை நேர் – புளிமா

    • நிரை நிரை – கருவிளம்

    • நேர் நிரை – கூவிளம்

    மூவசைச்சீர்:

    • நேர் நேர் நேர் – தேமாங்காய்

    • நிரை நேர் நேர் – புளிமாங்காய்

    • நிரை நிரை நேர் – கருவிளங்காய்

    • நேர் நிரை நேர் – கூவிளங்காய்

    • நேர் நேர் நிரை – தேமாங்கனி

    • நிரை நேர் நிரை – புளிமாங்கனி

    • நிரை நிரை நிரை – கருவிளங்கனி

    • நேர் நிரை நிரை – கூவிளங்கனி

    வெண்பா, ஆசிரியப்பா ஆகியவற்றின் பொது இலக்கணம்:

    ஓசை:

    வெண்பா செப்பலோசை பெற்று வரும். ஆசிரியப்பா அகவல் ஓசை பெற்று வரும்.

    சீர்:

  • வெண்பாவில் ஈற்றடி முச்சீராகவும் ஏனைய அடிகள் நாற்சீராகவும் வரும். இயற்சீர், வெண்சீர் மட்டுமே பயின்று வரும்.

  • ஆசிரியப்பாவில் ஈரசைச் சீர் மிகுதியாகவும், காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும்.
  • தளை:

  • வெண்பாவில் இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டும் பயின்று வரும்.

  • ஆசிரியப்பாவில் ஆசிரியத்தளை மிகுதியாகவும் வெண்டளை, கலித்தளை ஆகியவை விரவியும் வரும்.
  • அடி:

  • வெண்பாவில் 2 அடி முதல் 12 அடி வரை அமையும். (கலிவெண்பா 13 அடிக்கு மேற்பட்டு வரும்)

  • ஆசிரியப்பாவில் 3 அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமையும்.
  • முடிப்பு:

  • வெண்பாவில் ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்ப்பாட்டில் முடியும்.

  • ஆசிரியப்பா ஏகாரத்தில் முடிவது சிறப்பு.
  • யாப்போசை தரும் பாவோசை:

  • செப்பலோசை – இருவர் உரையாடுவது போன்ற ஓசை

  • அகவலோசை – ஒருவர் பேசுதல் போன்ற, சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை

  • துள்ளலோசை – கன்று துள்ளினாற்போலச் சீர்தோறுந் துள்ளி வரும் ஓசை. அதாவது தாழ்ந்து உயர்ந்து வருவது.
  • தூங்கலோசை:

  • சீர்தோறும் துள்ளாது தூங்கி வரும் ஓசை. தாழ்ந்தே வருவது.

  • 'யாப்பதிகாரம்' என்னும் நூலின் ஆசிரியர் – 'புலவர்குழந்தை'

  • மேன்மை தரும் அறம் என்பது – கைம்மாறு கருதாமல் அறம் செய்வது

  • உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டபடுவேர் – அதியன்; பெருஞ்சாத்தன்

  • 'இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது' என்ற தொடர் இடம்பெற்ற கவிதை – காலக்கணிதம்

  • சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் – அகவற்பா (ஆசிரியப்பா)

  • 'மரம் தேடிய களைப்பு
    மின் கம்பியில்
    இளைப்பாறும் குருவி.'

    என்ற கவிதையை எழுதியவர் – நாணற்காடன்
    ' விற்பனையில்
    காற்றுப் பொட்டலம்
    சிக்கனமாய் மூச்சு விடமும்….'

    என்ற கவிதையை எழுதியவர் – 'புதுவைத் தமிழ்நெஞ்சன்'
    'கோடயிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
    குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
    ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
    உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
    மேடையிலே வீசுகிகின்ற மெல்லியப்பூங் காற்றே
    மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
    ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
    ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே'

    என்ற பாடலை இயற்றியவர் – வள்ளலார்

    நூல்களும்ஆசிரியர்களும்:

  • அறமும் அரசியலும் – மு.வரதராசனார்

  • அபி கதைகள் – அபி

  • எண்ணங்கள் – எம்.எஸ்.உதயமூர்த்தி

  • பாடம் 9 – அன்பின் மொழி

    ஜெயகாந்தம்

  • எழுத்தாளர் ஜெயகாந்தன் பிறந்த ஆண்டு – 24.04.1934
  • எழுத்தாளர் ஜெயகாந்தன் பெற்ற விருதுகள்:

  • குடியரசுத் தலைவர் விருது ('உன்னைப்போல் ஒருவன்' என்னும் திரைப்படத்திற்காக)

  • சாகித்திய அகாதெமி விருது ('சில நேரங்களில் சில மனிதர்கள்' என்னும் புதினத்திற்காக)

  • சோவியத் நாட்டு விருது ('இமயத்துக்கு அப்பால்' என்னும் நூலுக்காக)

  • ஞானபீட விருது

  • தாமரைத்திரு விருது

  • 'நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் உண்டு. அதற்குரிய ஒரு காரணமும் உண்டு. என் எழுத்துக்கு ஒரு இலட்சியமும் உண்டு. நான் எழுதுவது, முழுக்க முழுக்க வாழ்க்கையிலிருந்து நான் பெறும் கல்வியின் விளைவும் எனது தனிமுயற்சியின் பயனுமாகும்.' என்று கூறியவர் – ஜெயகாந்தன்

  • பாரதத்தை எழுதியவர் – வியாசர்

  • 'ஜெயகாந்தன், எத்தகைய பாத்திரங்களைப் படைத்தாலும் அந்தப் பாத்திரங்களின் சிறந்த அம்சங்களைக் குறிப்பிடத் தவறுவதில்லை. துவேஷத்தைப் பரப்புவது, அவருடைய இயல்புக்கு சற்றும் ஒவ்வாதது. அவர் அரசியலில் தொடர்ந்து பங்கு பெறாமல் போனதற்கு இது கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம்' என்று ஜெயகாந்தனைப் பற்றிக் கூறியயவர் – அசோகமித்திரன்

  • 'நேர்கொண்ட ஆனால் வித்தியாசமான பார்வை. நிலத்தில் யார்க்கும் அஞ்சாத, த்ஹிமிர்ந்த ஞானச்செருக்கு, கம்பீரமான குரல், வளமான, புதுமையான வாழ்க்கைச் சித்தரிப்புகள் – இவைகள் தாம் ஜெயகாந்தன் என்ற செம்மாந்த தமிழனின் சிறப்பான அடையாளங்கள். 'படிக்காத மேதை' என்று குறிப்பிடப்படும் அவர், முறையாகக் கல்லூரிகளில் படிக்கவில்லையே தவிர, தமிழ், இந்திய இலக்கியங்கள் மட்டுமின்றி சோவியத் பிரெஞ்சு இலக்கியங்களைத் தானே படித்து உணர்ந்தது மட்டுமன்றி , வாழ்க்கையையும் ஆழமாகப் படித்தவர் பிறகு அவற்றை வார்த்தைகளில் அழகுறப்படைத்தவர்.' என்று ஜெயகாந்தனைப் பற்றிக் கூறியவர் – கா.செல்லப்பன்
  • ஜெயகாந்தனின் சிறுகதைத் தொகுப்புகள்:

  • குருபீடம்

  • யுகசந்தி

  • ஒரு பிடி சோறு

  • உண்மை சுடும்

  • இனிப்பும் கரிப்பும்

  • தேவன் வருவாரா

  • புதிய வார்ப்புகள்
  • ஜெயகாந்தனின் குறும்புதினங்கள்:

  • பிரளயம்

  • கைவிலங்கு

  • ரிஷிமூலம்

  • பிரம்ம உபதேசம்

  • யாருக்காக அழுதான்?

  • கருணையினால் அல்ல

  • சினிமாவுக்குப் போன சித்தாளு
  • ஜெயகாந்தனின் புதினங்கள்:

  • பாரீசுக்குப் போ!

  • சுந்தர காண்டம்

  • உன்னைப் போல் ஒருவன்

  • கங்கை எங்கே போகிறாள்?

  • ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்

  • இன்னும் ஒரு பெண்ணின் கதை

  • ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
  • ஜெயகாந்தனின் மொழிபெயர்ப்புகள்:

  • வாழ்விக்க வந்த காந்தி (பிரெஞ்சு மொழியில் வந்த காந்தி வாழ்க்கை வரலாற்றின் தமிழாக்கம்)

  • ஒரு கதாசிரியனின் கதை (முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு)
  • ஜெயகாந்தனின் திரைப்படமான படைப்புகள்:

  • சில நேரங்களில் சில மனிதர்கள்

  • ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்

  • ஊருக்கு நூறுபேர்

  • உன்னைப் போல் ஒருவன்

  • யாருக்காக அழுதன்?

  • 'பாரீசுக்குப் போ!' என்ற புதினத்தை எழுதியவர் – ஜெயகாந்தன்

  • 'எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் – ஏழை
    கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும்
    பண்ணொடு சந்தமும் பாய்ந்து வரும் – பழைய
    மண்ணின் வாடையும் சேர்ந்து வரும்'

    என்ற கவிதையை எழுதியவர் – ஜெயகாந்தன். இக்கவிதை 'பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்' பற்றியது.

  • 'என்னைப் பொறுத்த வரையில் எழுத்தாளனுக்கு அவனுடைய படைப்புகளுக்கு அடிப்படையாக அமைய வேண்டியது மனித வாழ்வின் பிரச்சினைகளே' என்று கூறியவர் – ஜெயகாந்தன்

  • 'மகத்தான சாதனை – பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தது. மிகப் பெரிய சவாலும் அதுவே'என்றவர் – ஜெயகாந்தன்

  • 'காலம்தோறும் நாம் மாற்றங்களைப் பார்க்கிறோம். நாமும் மாறிக்கொண்டே இருக்கிறோம்.' என்றவர் – ஜெயகாந்தன்.

  • 'தர்க்கத்திற்கு அப்பால்' என்ற சிறுகதையின் ஆசிரியர் – ஜெயகாந்தன்

  • 'சிறுகதை மன்னன்' என்ற பட்டம் பெற்றவர் – ஜெயகாந்தன்

  • சாகித்திய அகாதெமி விருதையும் ஞானபீட விருதையும் பெற்ற ஜெயகாந்தனின் கதைகள் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

  • ஜெயகாந்தன் பேசி, தொகுக்கப்பட்ட கட்டுரை – 'எதற்காக எழுதுகிறேன்?'

  • சித்தாளு

    'பொற்காலமாக இருந்தாலும்
    இவள் தலையில் எழுதியதோ
    கற்காலம்தான் எப்போதும்
    தொலைந்ததே வாழ்வு என
    தலையில் கைவைத்து
    புலம்புவார் பூமியிலே
    தன் வாழ்வு தொலைக்காமல்
    தற்காத்து வைப்பதற்காய்
    தலையில் கைவைக்கிறாள் இவள்
    வாழ்வில் தலைக்கனம்
    பிடித்தவர் உண்டு
    தலைக்கனமே வாழ்வாக
    ஆகிப்போனது இவளுக்கு

    அடுக்குமாடி அலுவலகம்
    எதுவாயினும்
    அடுத்தவர் கனவுக்காக
    அலுக்காமல் இவள் சுமக்கும்
    கற்களெல்லாம்
    அடுத்தவேளை உணவுக்காக
    செத்தாலும் சிறிதளவே
    சலனங்கள் ஏற்படுத்தும்
    சித்தாளின் மனச்சுமைகள்
    செங்கற்கள் அறியாது'

    என்ற கவிதையில் சித்தாளின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டியவர் – நாகூர்ரூமி எதற்காக எழுதுகிறேன்

  • 'முகம்மதுரஃபி' என்னும் இயற்பெயர் கொண்ட 'நாகூர்ரூமி' தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர்; இவர் எண்பதுகளில்'கணையாழி' இதழில் எழுதத் தொடங்கியவர்.
  • நாகூர்ரூமி அவர்களின் படைப்புகள் வெளியாகியுள்ள இதழ்கள்:

  • மீட்சி

  • சுபமங்களா

  • புதிய பார்வை

  • குங்குமம்

  • கொல்லிப்பாவை

  • இலக்கிய வெளிவட்டம்

  • குமுதம்
  • நாகூர்ரூமி அவர்களின் கவிதைத் தொகுதிகள்:

  • நதியின் கால்கள்

  • ஏழாவது சுவை

  • சொல்லாத சொல்

  • 'கப்பலுக்குப் போன மச்சான்'என்னும் நாவலை எழுதியவர் – 'முகம்மதுரஃபி' என்னும் இயற்பெயர் கொண்ட'நாகூர்ரூமி'

  • தேம்பாவணி

  • கிறித்துவிற்கு முன் தோன்றியவர் 'திருமுழுக்குயோவான்'. இவரை 'அருளப்பன்' என்றும் குறிப்பிடுவர். இவரே கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி. வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இவருக்குக் 'கருணையன்' என்று பெயரிட்டுள்ளார்.

  • 'தேம்பாவணி' இயற்றியவர் – வீரமாமுனிவர்
  • சொல்லும்பொருளும்:

    • சேக்கை – படுக்கை

    • யாக்கை – உடல்

    • பிணித்து – கட்டி

    • வாய்ந்த – பயனுள்ள

    • இளங்கூழ் – இளம்பயிர்

    • தயங்கி – அசைந்து

    • காய்ந்தேன் – வருந்தினேன்

    • கொம்பு – கிளை

    • புழை – துளை

    • கான் – காடு

    • தேம்ப – வாட

    • அசும்பு – நிலம்

    • உய்முறை – வாழும் வழி

    • ஓர்ந்து – நினைத்து

    • கடிந்து – விலக்கி

    • உவமணி – மணமலர்

    • படலை – மாலை

    • துணர் – மலர்கள்

    இலக்கணக்குறிப்பு:

  • காக்கென்று – காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்

  • கணீர் – கண்ணீர் என்பதன் இடைக்குறை

  • காய்மனி, உய்முறை, செய்முறை – வினைத்தொகை

  • மெய்முறை – வேற்றுமைத்தொகை

  • கைமுறை – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
  • இஸ்மத் சன்னியாசி – தூய துறவி:

  • வீரமாமுனிவர் திருச்சியை ஆண்ட 'சந்தாசாகிப்' என்னும் மன்னரைச் சந்தித்து உரையாடுவதற்காக இரண்டே மாதங்களில் உருது மொழியை கற்றுக்கொண்டார்.

  • இவருடைய எளிமையையும், துறவையும் கண்டு வியந்த சந்தாசாகிப் 'இஸ்மத்சன்னியாசி' என்னும் பட்டத்தை வீரமாமுனிவருக்கு வழங்கினார். இந்தப் பாரசீகச் சொல்லுக்கு 'தூயதுறவி' என்பது பொருள்.
  • தேம்பாவணி பற்றியக் குறிப்புகள்:

  • 'தேம்பா+அணி' எனப் பிரித்து வாடாத மாலை என்றும், (தேன்+பா+அணி) எனப் பிரித்து தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு என்றும் இந்நூலுக்குப் பொருள் கொள்ளப்படுகிறது.

  • கிறித்துவின் வளர்ப்புத் தந்தையாகிய 'சூசையப்பர்' என்னும்யோசேப்பினைப் (வளனை) பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்ட நூல் இது.

  • தேம்பாவணி 3 காண்டங்களையும் 36 படலங்களையும் 3615 பாடல்களையும் கொண்டது.

  • 17 ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்டது தேம்பாவணி.

  • தேம்பாவணியை இயற்றியவர் வீரமாமுனிவர். இவரது இயர்பெயர் 'கான்சுடான்சுசோசப்பெசுகி'

  • இவரே தமிழின் முதல் அகராதியான சதுரகராதியை இயற்றியுள்ளார்.
  • வீரமாமுனிவரின் படைப்புகள்:

  • தேம்பாவணி

  • சதுரகராதி (தமிழின் முதல் அகராதி)

  • தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்)

  • சிற்றிலக்கியங்கள்

  • உரைநடை நூல்கள்

  • பரமார்த்த குருகதைகள்

  • மொழிபெயர்ப்பு நூல்கள்
  • ஒருவன் இருக்கிறான்

  • 'ஒருவன்இருக்கிறான்' என்னும் சிறுகதையை எழுதியவர் – கு.அழகிரிசாமி

  • திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 'ஆலங்கானம்' என்ற இடத்தைப் பற்றி,
    'ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து
    அரசு பட அமர் உழக்கி'

    என்று கூறும் நூல் – 'மதுரைக்காஞ்சி'

  • 'ஒருவன் இருக்கிறான்' என்னும் கதை' கு.அழகிரிசாமி சிறுகதைகள் ' என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

  • கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர் – கு.அழகிரிசாமி

  • கி.ரா. வுக்கு கு.அழகிரிசாமி எழுதிய கடிதங்கள் இலக்கியத்தரம் வாய்ந்தவை.

  • இலக்கணம்

    அணி

  • 'அணி' என்பதன் பொருள் – அழகு

  • செய்யுளுக்கு அழகு செய்து சுவையை உண்டாக்குவன – அணிகள்
  • தற்குறிப்பேற்ற அணி:

    இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது ' தற்குறிப்பேற்ற அணி ' எனப்படும்.

    (எ.கா)
    'போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
    'வாரல்' என்பனபோல் மறித்துக்கை காட்ட'

    பாடலின்பொருள்:

    கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது வரவேண்டாம் எனத் தடுப்பது போல, கை காட்டியது என்பது பொருள்.

    அணிப் பொருத்தம்:

    கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகருக்குள் சென்ற போது மதிலின் மேலிருந்த கொடிகள் காற்றில் இயற்கையாக அசைந்தன. ஆனால், இளங்கோவடிகள் கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுவான் எனக்கருதி அக்கொடிகள் கையை அசைத்து, 'இம்மதுரைக்குள் வரவேண்டா' என்று தெரிவிப்பது போலக் காற்றில் அசைவதாகத் தம் குறிப்பைக் கொடியின் மீது ஏற்றிக் கூறுகிறார். இவ்வாறு இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது 'தற்குறிப்பேற்றஅணி' எனப்படும்.

    தீவக அணி:

  • தீவகம் என்னும் சொல்லுக்கு 'விளக்கு' என்று பொருள். ஓர் அறையில் ஓர் இடத்தில் வைக்கப்பட்ட விளக்கானது அவ்வறையில் பல இடங்களிலும் உள்ள பொருள்களுக்கு வெளிச்சம் தந்து விளக்குதல் போல செய்யுளின் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவதால் இவ்வணி தீவக அணி எனப்படும்.

  • இது முதல் நிலைத்தீவகம், இடைநிலைத் தீவகம், கடைநிலைத் தீவகம் என்னும் மூன்று வகையாக வரும்.

  • (எ.கா)
    சேந்தன வேந்தன் திருநெடுங்கண், தெவ்வேந்தர்
    ஏந்து தடந்தோள்,இழிகுருதி – பாய்ந்து
    திசைஅனைத்தும், வீரச் சிலைபொழிந்த அம்பும்,
    மிசைஅனைத்தும் புள்குலமும் வீழ்ந்து'
    மிசைஅனைத்தும் புள்குலமும் வீழ்ந்து'

    பொருள் தருக:

    • சேந்தன – சிவந்தன

    • தெவ் – பகைமை

    • சிலை – வில்

    • மிசை – மேலே

    • புள் – பறவை

    பாடலின் பொருள்:

    அரசனுடைய கண்கள் கோபத்தால் சிவந்தன; அவை சிவந்த அளவில் பகை மன்னர்களுடைய பெரிய தோள்கள் சிவந்தன; குருதி பாய்ந்து திசைகள் அனைத்தும் சிவந்தன; வலிய வில்லால் எய்யபட்ட அம்புகளும் சிவந்தன; குருதி மேலே வீழ்தலால் பறவைக் கூட்டங்கள் யாவும் சிவந்தன.

    அணிப் பொருத்தம்:

    வேந்தன் கண் சேந்தன
    தெவ்வேந்தர் தோள் சேந்தன
    குருதி பாய்ந்து திசை அனைத்தும் சேந்தன
    அம்பும் சேந்தன
    புள் குலம் வீழ்ந்து
    மிசைஅனைத்தும் சேந்தன

    இவ்வாறாக முதலில் நிற்கும் 'சேந்தன' (சிவந்தன) என்ற சொல் பாடலில் வருகின்ற கண்கள், தோள்கள், திசைகள், அம்புகள், பறவைகள் ஆகிய அனைத்தோடும் பொருந்திப் பொருள் தருகிறது. அதனால் இது தீவக அணி ஆயிற்று.

    நிரல்நிறை அணி:

    நிரல் – வரிசை, நிறை – நிறுத்துதல்

    சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள்கொள்வது நிரல்நிறை அணி ஆகும்.

    (எ.கா)
    "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது"

    பாடலின்பொருள்:

    இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

    அணிப்பொருத்தம்:

    இக்குறளில் அன்பும் அறனும் என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பும் பயனும் என்ற சொற்களை முறைபடக் கூறியுள்ளமையால் இது நிரல் நிறை அணி ஆகும்.

    தன்மையணி:

    எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத் தன்மையினை கேட்பவர்களின் மனம் மகிழுமாறு உரிய சொற்களை அமைத்துப் பாடுவது தன்மை அணி ஆகும். இதனைத் 'தன்மை நவிற்சி அணி' என்றும் கூறுவர்.

    இந்த அணி நான்கு வகைப்படும்.

    1. பொருள் தன்மையணி

    2. குணத் தன்மையணி

    3. சாதித் தன்மையணி

    4. தொழிற் தன்மையணி

    (எ.கா)
    'மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
    கையில் தனிச்சிலம்பும் கண்னீரும் – வையைக் கோன்
    கண்டளவே தோற்றான்,அக்காரிகைதான் சொற்செவியில்
    உண்டளவே தோற்றான் உயிர்.'

    என்ற பாடல் சிலப்பதிகாரத்தில் வழக்குறைக் காதையில் இடம் பெற்றுள்ளது.

    பாடலின் பொருள்:

    உடம்பு முழுக்கத் தூசியும் விரிந்த கருமையான தலைமுடியும் கையில் ஒற்றச் சிலம்போடு வந்தன் தோற்றமும் அவளது கண்ணீரும் கண்ட அளவிலேயே வைகை நதி பாயும் கூடல் நகரத்து அரசனான பாண்டியன் தோற்றான். அவளது சொல், தன் செவியில் கேட்டவுடன் உயிர் நீத்தான்.

    அணிப்பொருத்தம்:

    கண்ணகியின் துயர் நிறைந்த தோற்றத்தினை இயல்பாக உரிய சொற்களின் மூலம் கூறியமையால் இது தன்மை நவிற்சியணி எனப்படும்.

    'எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ்
    சொன்முறை தொடுப்பது தன்மை யாகும்'

    என்று தன்மை அணியை (தன்மைநவிற்சிஅணி) பற்றிக் கூறும் நூல் – தண்டியலங்காரம்

    'இவள் தலையில் எழுதியதோ
    கற்காலம்தான் எப்போதும்'

    இவ்வடியில் 'கற்காலம்' என்பது – தலையில் கல் சுமப்பது

  • சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது – 'பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்'

  • 'வாய்மையே மழைநீராகி' இத்தொடரில் வெளிப்படும் அணி – தற்குறிப்பேற்றஅணி

  • சேரர்களின் பட்டப் பெயர்களில் 'கொல்லிவெற்பன்', 'மலையமான்' போன்றவை குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவன், 'கொல்லி வெற்பன்' எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் 'மலையமான்' எனவும் பெயர் சூட்டிக்கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.

  • 'நல்ல' என்னும் அடைமொழி கொண்ட தொகை நூல் – குறுந்தொகை (நல்ல குறுந்தொகை)

  • 'கழை' என்பதன் பொருள் – மூங்கில்

  • 'மருந்தே ஆயினும் விருந்தொடு உண்' என்றவர் – ஔவையார்

  • 'மதிமுகம்' என்பது உவமை. 'முகமதி' என்பது உருவகம்

  • வீரமாமுனிவர் இயற்றிய நூல் – தேம்பாவணி

  • பிள்ளைத்தமிழின் இரண்டாம் பருவம் – செங்கீரை

  • மன்னனது உண்மையான புகழை எடுத்துக் கூறுவது – பாடாண்திணை

  • 'செய்தவம்' என்பதன் இலக்கணக்குறிப்பு – வினைத்தொகை
  • நூல்களும் ஆசிரியர்களும்:

  • யானை சவாரி – பாவண்ணன்

  • கல்மரம் – திலகவதி

  • அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் – ந.முருகேசபாண்டியன்


  • Scroll to Top